இந்த வாரத்தில் விருந்தாவன், கோவர்த்தன், சௌராசி கோஸ்
என நிறைய விஷயங்களைப் பார்த்தோம். ஒரு சிலருக்கு ரொம்பவே கடுப்பாக
இருந்திருக்கலாம் – “என்னடா இவன் ஒரேடியா பக்தி மார்க்கத்தில் உலாத்துகிறானே” என்று! இன்றும் நாம் கோகுலத்தில் தான் சுற்றப் போகிறோம். ஆனால் பக்தி
மார்க்கத்தில் அல்ல.
மதுரா, விருந்தாவன், கோவர்த்தன், கோகுலம் என்று
இப்பகுதிகளில் எங்கே சென்றாலும், “[DH]தூத்[dh] பேடா[da]” என்ற ஒரு தின்பண்டம் கிடைக்கும். நிறைய கடைகள்
இவற்றை விற்றாலும், ஒரு சில கடைகளில் கிடைப்பவை தான் சுத்தமாகவும், புதியதாகவும்
இருக்கும். இந்தப் பேடாவினைத் தான் ஆண்டவனுக்கும்
படைப்பார்கள். இந்தப் பேடாவினைச் செய்வது
கொஞ்சம் கடினமான வேலை தான்.
நான்கு கப் பால், ஒரு கப் சர்க்கரை, கொஞ்சம் ஏலக்காய்
பொடி, நெய் இவை இருந்தால் போதுமானது. கொஞ்சமே கொஞ்சம் தான் பொருட்கள் தேவை
என்றாலும், இதை உங்கள் வீட்டில் தயாரிக்க நிறைய பொறுமையும், நேரமும் தேவை. சுமார்
நான்கு மணி நேரம் மிதமான சூட்டில் பாலைக் காய்த்து, தொடர்ந்து கரண்டியால் கிளறிக்
கொண்டே இருக்க வேண்டும். பொறுமை இல்லா விட்டால் இதனைச் செய்வது கடினம். போலவே,
தொடர்ந்து கிளறிக் கொண்டே இருப்பதும் அவசியம்.
இத்தனை பொறுமை எனக்கில்லை என்று நினைப்பவர்கள் கடையில்
வாங்கிச் சாப்பிடுவது மேல்! விருந்தாவன், கோவர்த்தன், மதுரா போன்ற அனைத்து
இடங்களிலும் “[b]ப்ரஜ்வாசி” எனும் நல்லதொரு
நிறுவனம் இருக்கிறது. இவர்களது பால்
பேடாக்கள் மிகவும் நன்றாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விருந்தாவன் செல்லும்போது
இவர்களிடம் இருந்து ஒரு கிலோவாது பால் பேடா வாங்காது வந்ததில்லை.
கொழுப்பு நீக்காத பாலில் செய்வதால் இப்பேடாக்கள்
மிகவும் நன்றாக இருக்கின்றன. ஒரு கிலோ பேடாவும் ஒன்றிரண்டு நாட்களில்
தனியொருவனாகவே காலி செய்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருந்தாலும்
அது தான் உண்மை!
உங்களுக்காக பால் பேடாவின் படம் மட்டுமாவது தந்தேனே
என்று மகிழ்ச்சி அடையுங்கள்!
சரி நண்பர்களே இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாமா?
56. வலைப்பூ: அன்பின்றி அமையாது உலகு
”எழுத்துகளை
வாசிப்போம்.... இதயங்களை நேசிப்போம்...” என்று தனது வலைப்பூவின் முகப்பில் எழுதி
வைத்திருக்கும் சேவியர் வெற்றிமணி. ஜெர்மனி நகரில் இருக்கிறார். நிறைய பதிவுகள்
இவரது பக்கத்தில் காணக் கிடைக்கிறது.
அறிமுகப் பதிவு: புகை:
குடும்பத்துக்குப் பகை
புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும்
ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள்
ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.
57. வலைப்பூ: பாலா கவிதைகள்
2007-ஆம் ஆண்டு முதலே இப்பக்கத்தில் எழுதி வருகிறார் பாலசுப்ரமணியன் முனிசாமி.
அறிமுகப்
பதிவு: உடல் தானம்
செயலிழந்த உடலுக்குள்
சாகாத உறுப்புகளை
இயலாத மாந்தருக்கு
எடுத்து வைத்தல் நலந்தானே?
செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரரிவார்
புத்தியுடன் உடல்கொடை
பூமிக்கே பெருங்கொடை
58. வலைப்பூ: மனிதம்
PALANIMVEL என்ற பெயர்
கொண்ட இப்பதிவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த்து அக்டோபர் 2010. இது வரை எழுதிய பதிவுகள் 84. ஒவ்வொரு பதிவிற்கும் பொருத்தமாய் மிகத்
துல்லியமான அழகான படங்கள் சேர்த்திருக்கிறார் இவர்.
அறிமுகப் பதிவு: அம்மா
என் உதை நீ தாங்கி
அந்த எமனையும் வென்றவளே
இறுதியாய் என்னை ஈன்றாலும்
இன்றுவரை ஈரம் குறையல்லையே
உன் உதிரம் உருக்கி
என் பசி போக்கியவளே......
59. வலைப்பூ: தமிழ்த்துளி
பொதுவன்
செங்கை – முனைவர் பட்டம் பெற்ற இவர் பக்கத்தில், குறுந்தொகை, புறநானூறு, பழங்காலக்
காசுகள் என நிறைய விஷயங்களை எழுதுகிறார்.
தமிழ் விக்கிப்பீடியாவிலும் தனது பங்களிப்பைத் தருகிறார். எழுத
ஆரம்பித்த்து இவ்வருடம் தான் எனினும் இது வரை 825 பதிவுகள் எழுதி விட்டார். இவரது
பக்கத்திலிருந்து ஒரு பதிவினைப் பார்க்கலாம்!
அறிமுகப்
பதிவு: நற்றிணை
#001
நற்றிணை
முதல் பாடலின் பொருளாக அவர் தந்திருப்பது இது தான்.
அவன் தான் சொன்னபடி செயலாற்றி நிற்பவர். திரும்பி வரக் காலம் நீட்டித்தாலும் இனியவர். என் தோளை பிரிந்து அறியாதவர். தாமரையில் எடுத்த தேனை சந்தனமரம் தேன்கூட்டில் சேர்த்து வைத்திருக்கும் தேன் போல உயர்ந்தவர். உயர்ந்தவர் நட்பு உயர்ந்ததுதான். நீர் இல்லாமல் உலகம் இயங்காது. அதுபோல அவர் இல்லாமல் நம்மால் வாழமுடியாது. அப்படிப்பட்ட நம்மை நயந்து வந்து அருளியிருக்கிறார். அப்படிப்பட்டவர் நம் நெற்றி பசந்து ஊர விட்டுச் சிறுமைப்படுத்துவாரா? அப்படிச் செய்வதற்கு அவருக்குத் தெரியாது.
60 வலைப்பூ: சிரிப்பூக்கள்
முஹம்மது அபுபக்கர் ஹாரூஸ் என்பவரின் வலைப்பூ
“சிரிப்பூக்கள்” – சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை –
கவலையை மறக்க கற்றுக் கொண்டவர்கள்” என்று சொல்லும் இவர் பக்கத்தில் நிறைய பதிவுகள்
உண்டு. ஒன்றரை வருடமாக பதிவுகள் ஏதும்
புதிதாக இடவில்லை. கடைசி பதிவு ஃபிப்ரவரி
2013.
அறிமுகப் பதிவு: காதல்
இத்தனை
பொண்ணுங்களுக்கு
மத்தியில் என்னை எப்படி
காதலித்தாய்
என அப்பாவியாகக்
கேட்கிறாய்… எப்படிச்
சொல்லுவேன்..
உன்னைத்
தவிர
மற்ற
ஃபிகர் எல்லாம் என்னை
கல்லைக்
கொண்டு அடிக்காத குறையாக
விரட்டி விட்டதை….:-)
என்ன
நண்பர்களே, இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா? பதிவு பற்றிய கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
நாளை மீண்டும் சந்திப்போம்..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
தெரியாத பதிவர்கள் அனைவரையும் அறிய வைத்தமைக்கு நன்றி வெங்கட் ஸார் போய்ப்பார்க்கிறேன்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
ReplyDeleteபால்பேடாவைப் போலவே -
ReplyDeleteஇன்றைய தளங்களின் தொகுப்பும் அருமை..
வாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
Deleteபேடாவைப் பார்த்துட்டு ஓடி வந்தேன். சுவையான பேடா. ராஜஸ்தானில் இந்தப் பால் பேடாவையே இன்னும் கொஞ்சம் சர்க்கரை போட்டு சாக்லேட் என்னும் பெயரில் விற்பார்கள். அதுவும் நல்லா இருக்கும். :))) அறிமுகப் பதிவுகளைப் போய்ப் பார்க்கவே ஒரு நாள் தனியாக ஒதுக்கணும்.
ReplyDeleteபால் பேடா உங்களையும் இழுத்து விட்டது போலும்! :)
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
பால்பேடாவை ருசித்ததுடன், அறிமுகப்பதிவர்களைப் பற்றி அறிந்தேன். நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
Deleteபால் பேடாவின் சுவையே தனி தான்..நினைவு படுத்தி விட்டீர்கள்...வாங்கி சாப்பிடக்கூட முடியாது....ஹஹஹா....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தேடி நிறைய புதியவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றி சகோ.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
Delete“[b]ப்ரஜ்வாசி” யின் பால் பேடாவைப்பற்றிய தகவலைப் படிக்கும்போது கர்நாடக மாநிலம் தார்வாரில் (Dharwar) லைன் பஜார் என்ற இடத்தில் உள்ள உபாத்யாயா பேடா என்ற மிகவும் பிரபலமான பேடா நினைவுக்கு வருகிறது. அந்த பேடா கடைக்கு வந்த சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிடும்.
ReplyDeleteஇன்றைக்கு அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
Deleteதூத் பேடா செய்வது போலவே, செய்வதற்கு நிறைய பொறுமை தேவைப்படும் நம்மூர்ப்பண்டம் திரட்டுப்பால். கிட்டத்ஹ்ட இரண்டும் ஒன்றுதானே!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ReplyDeleteகொஞ்சம் வேறுபட்டது இது.....
புதிய தளங்கள் பல அறிமுகம் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா நாக்குல தண்ணீர் ஊறுது! பால் பேடா...ஆம் நார்த்தில் அதுவும் மதுராவில் இந்த தூத் பேடா படு சூப்பராக இருக்கும். அதே போன்று பால் கடைகளில் பால் பெரிய அகலமான உருளியில் காய்ச்சிக் கொண்டு நாம் வாங்கும் போது அதை அவர்கள் ஆற்றும் விதம் - மிகவு உயரே கையைச் தூக்கி ஆற்றும் விதம் பார்க்க அருமையாக, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதை சிறிய சிறிய மண் பானைகளில் ஊற்றித் தருவார்கள்...மிக ருசியாக இருக்கும். கிருஷ்ணர் வாழ்ந்த இடம் என்றதாலோ...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! எல்லாமே புதிது. மிக்க நன்றி!
ஆஹா அங்கு கிடைக்கும் பாலின் சுவை நிச்சயம் மறக்க முடியாத ஒன்று தான்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
அருமையான பால்பேடா குறிப்புக்கு நன்றி.
ReplyDeleteநாங்களும் வாங்கி வந்தோம் மதுராவில்.
பால, தயிர், லஸ்ஸி எல்லாம் மிக அருமையாக இருக்கும்.
இன்று இடம்பெற்ற பதிவர்களின் பதிவுகளும் படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது . அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
Deleteஇன்றும் பல நல்ல பயன் தரக்கூடிய தளங்களை சிறப்பாய் அறிமுகம் செய்தீர்கள் - நன்றி!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.
Deleteசிறப்பான தமிழ்த்துளி தளம் உட்பட 3 தளங்கள் புதியவை... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteபுதுப் புது பதிவர்களைத் தேடிப் பிடித்து பகிர்ந்திருக்கிறீர்கள்.. நன்றி
ReplyDeleteதங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
Delete