பயணம்
செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதை எனது பதிவுகளைத் தொடர்ந்து
படித்து வரும் நண்பர்களுக்குத் தெரியும். தொடர்ந்து எனது வலைப்பூவில் பயணக்
கட்டுரைகளை படித்து வருகிறார்களே! வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பினை ஏற்ற இந்த
இரண்டு வாரமும், நான் பயணித்த சில இடங்களில் சந்தித்த விஷயங்களை உங்களுடன்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
முதல்
வாரத்தில் குஜராத் பயணத்தில் கிடைத்த சில அனுபவங்களும், இரண்டாம் வாரத்தில் விருந்தாவன்,
கோவர்த்தன் ஆகிய இடங்களில் கிடைத்த சில அனுபவங்களும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு
மகிழ்ச்சி. குஜராத் பற்றிய சில குறிப்புகள் மட்டுமே இங்கே பகிர்ந்து
கொண்டிருக்கிறேன். விரிவான
பயணக்கட்டுரைகள் விரைவில் எனது பக்கத்தில் வெளிவரலாம்! தற்போதைய வைஷ்ணவ தேவி
கட்டுரை முடிந்த பிற்கு சற்றே இடைவெளி – பிறகு ஒரு கோடைவாசஸ்தலம் – அதன் பிறகு
குஜ்ராத் – பஞ்சத்வாரகா என வெளியிட எண்ணம்.
இந்த
இரண்டு வாரமும் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த
வாய்ப்பினை அளித்த வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா ஐயா அவர்களுக்கு எனது
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குத் தெரிந்த அளவில் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறேன். உங்களது எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி
செய்யாமல் இருந்திருந்தால் அது எனது தவறு மட்டுமே! வாய்ப்பளித்த உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றி சீனா ஐயா.
தொடர்ந்து
பயணிப்போம்..... நல்லனுபவங்களைப்
பெறுவோம்!
ஆதலினால்
பயணம் செய்வோம்!
சரி
வலைச்சர வாரத்தின் கடைசி நாளான இன்றைய அறிமுகங்களைக் காண்போமா?
61. வலைப்பூ: இதயத்துடிப்பின்
கவிதைத் துடிப்பு
வலைப்பதிவரின் பெயர் பிரசாந்த். வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது மார்ச் 2012.
அறிமுகப் பதிவு: காதல் முன் கடவுள் பின்
பிடித்தவரை
நேசிக்க ஒரு ஆயுள் போதாது
நேசித்த
ஒருவரை வெறுக்க நிமிடம் போதும்
நேசித்தல்
நேசிக்க படுதல் இலகுவில் கிட்டாது
இலகுவில்
கிடைத்தால் இறுதிவரை வராது
கலைதயாத
காதல் இருந்தால் நகராது நிமிடம்
பொறாமையின்
அர்த்தம் கடவுளுக்கும் புரியும்.
62. வலைப்பூ: என் கனவுகள்
மனதில் தோன்றிய சின்னச் சின்னக் கனவுகளும் நினைவுகளும்
கவிதையாய்... என்று சொல்லும் இவரது பக்கத்தில் நிறைய கவிதைகள் காணக் கிடைக்கின்றன.
இவரது பெயர் லாக்ரின் ஷர்மா.
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர். 2010-ல் எழுத ஆரம்பித்திருந்தாலும்,
ஃபிப்ரவரி 2013-க்குப் பிறகு பதிவுகள் ஏதும் இல்லை.
அறிமுகப் பதிவு: முதல் சந்திப்பு
அவளின் ஓர பார்வை
சொல்லிடும்
பல பதில்கள்...
என்னை கண்டதும்---
சற்றே மறைந்து கொள்கிறாள்..
63. வலைப்பூ: தமிழ்ப்பூ
”தமிழ்ப்பூ வாசம்
தரணியெலாம் வீசும்” என தனது முகப்பில் சொல்லும் வலைப்பூ “தமிழ்ப்பூ”. இதன் உரிமையாளர் முனைவர் அ. கோவிந்தராஜூ.
பதிவுகள் எழுத ஆரம்பித்தது சென்ற மாதம் தான்! என்றாலும் இது வரை 16 பதிவுகள்
வெளியிட்டு இருக்கிறார். வலையுலகிற்குப் புதியவரான இவரை வாழ்த்தி வரவேற்போம்.
அறிமுகப் பதிவு: ஹைக்கூ கவிதைகள்
”வெண்பா இலக்கணம், ஆசிரியப்பா இலக்கணம் படித்த எனக்கு ஹைக்கூ இலக்கணம் தெரியவில்லை. சிலரிடம்
கேட்டேன். தெளிவு கிடைக்கவில்லை. பிறகு அது தொடர்பான நூல்களை- ஹைக்கூ எழுதுவது
எப்படி போன்ற நூல்களைப் படித்தேன். இவைதான் நான் புரிந்து கொண்டது” என ஹைக்கூ பற்றிச் சொல்கிறார். அதில் பிடித்த ஒரு ஹைக்கூ!
மடியில்
தொடக்கம்
மண்ணில்
அடக்கம்
மனித
வாழ்வு!
எத்தனை பெரிய உண்மை மூன்றே வரிகளில் – ஆறே சொற்களில்!
64. வலைப்பூ: இப்படிக்கு இளங்கோ
”மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்பது இவரது முகப்பு வாசகம். தன்னைப் பற்றிச்
சொல்லுகையில் ”விழுகின்ற மழைத்துளிகளில் ஒரு துளியையேனும்
உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்” என்று சொல்கிறார் பதிவர் இளங்கோ. எழுத ஆரம்பித்தது டிசம்பர் 2008.
அறிமுகப்
பதிவு: 600
ரூபாய்
இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்...
மாடங்களில் இருந்து பாருங்கள்...
ஊரே செழிப்பாக இருக்கும்
அவை ஆறுகள் அல்ல
சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை..
சொன்னதே சொன்னீர்கள்,
அந்த அறுநூறு ரூபாயில்
எப்படி ஒரு மாதத்தை தள்ளுவது என்று
பாவப்பட்ட எங்களுக்குச்
சொல்லிக் கொடுங்கள்....
65. வலைப்பூ: தினேஷ்
மாயா
தினேஷ் மாயா – ”இது தாங்க நான்” என்று சொல்வது - பொறியியல்
படிப்பை முடித்துவிட்டு, இரண்டு வருடங்கள் வங்கியில் பணியாற்றினேன், தற்போது மத்திய அரசு வருவாய்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன். என்
மனதில் இருக்கும் கருத்துக்களை எனக்கான வலையில் பதிவு செய்கிறேன். வருகைத்தரும்
அனைவர்க்கும் நன்றி. ஆதரவு தரும் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
அறிமுகப் பதிவு: மழை
நீ குடைப்பிடித்து நடந்து வருகிறாய்..
உன் மேல் தன் ஒளியை வீசமுடியாமல்
ஏக்கத்தில் வானம் வடிக்கும் கண்ணீர்தானோ -
மழை !
என்ன நண்பர்களே இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா? கடந்த
இரண்டு வாரமாக [10-11-2014 முதல் 23-11-2014 வரை] வலைச்சரத்தில் நான் எழுதிய
பதிவுகளை நீங்கள் படித்து, ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்குத் தெரிந்த வரை சில விஷயங்களை இங்கே
சொல்லி இருக்கிறேன். அதில் ஏதேனும் தவறுகளோ, குறைகளோ இருந்தால் மன்னிக்க
வேண்டுகிறேன்.
தொடர்ந்து எனது பக்கத்தில் வரும் பதிவுகளையும் படித்து
உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவினால் இது வரை எழுதி
வந்திருக்கிறேன். அது மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!
வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும், தொடர்ந்து படித்து கருத்துரை சொன்ன அனைத்து
நட்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நாளை முதல் எனது தளத்தில் சந்திப்போம்...
சிந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இனிய பதிவுகளை அருமையாக அழகாகத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. வாழ்க நலம்..
ReplyDeleteதங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
Deleteபல அறியாத தளங்களை அறிமுகம் செய்து சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteபல புதியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். எங்களால் குறை எதுவும் காணமுடியவில்லை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
Deleteசுவையான குறிப்புகளுடன் புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தினீர்கள் வெங்கட். கலக்கலாக முடித்து விட்டீர்கள் என்று அவசரப்பட்டுச் சொல்லத் தயக்கமாகத்தான் இருக்கிறது. மூன்றாவது வாரமும் தொடர்வீர்களோ! :))))
ReplyDeleteஅடுத்த வாரம் மஞ்சுபாஷிணி... அதனால் தைரியமாகச் சொல்லலாம்!
Deleteதங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அருமையான பதிவர்களை
ReplyDeleteஅவர்களது அருமையான பதிவுகள் மூலம்
மிகச் சிறப்பாக அறிமுகம் செய்த விதம் அருமை
வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
Deleteஎன்னுடைய வலைப்பூக்களில் ஒரு பூவை எடுத்து உங்கள் வலைச்சரத்தில் தொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteதொடுத்த விதம் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.
Deleteதங்களை இங்கே அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
கலக்கல் பதிவுகள்! அருமையான புதிய அறிமுகங்கள்! மிகவும் பயனுள்ளத் தகவல்கள் என்று மிகவும் அருமையாக வலைச்சரம் தொடுத்தீர்கள். வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஆதலால், பயணம் செய்வோம்!
இரண்டு வாரங்களில் பல பதிவர்களை அறிமுகப்படுத்தியதோடு தங்களோடு குஜராத் மற்றும் மேற்கு உத்திரபிரதேசத்திற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி!
ReplyDeleteசிறப்பான பணி நிறைவு!
ReplyDeleteவாழ்த்துகள்!
உங்கள் வலைப்பூவில் சந்திப்போம்.
அருமையாக நிறைய புது பதிவர்களை அறிமுக படுத்தி ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயணம் மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரும் ஆதலினால் பயணம் செய்வோம்.