சிலு சிலு சாரல் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே...
நம்மால் முடியாததை வேறு யாராவது சாதித்தால் மனம் நிறைந்து பாராட்டும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோமா? அல்லது அவர் சாதித்ததை நம்மால் சாதிக்க முடியவில்லையே என்று மனம் வெதும்புகிறோமா? எங்க ஆபிசுல இதைப்பற்றி ஒரு சர்ச்சையே நடந்தது. நமக்கில்லாததை நம்மால் முடியாததை இவரால் நடத்தி காட்ட முடிந்ததே என்று மனம் நிறைந்து பாராட்டும் மனப்பாங்கு நம்மில் எத்தனைப்பேருக்கு இருக்கிறது. நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் நம்மில் இப்படி ஒரு எண்ணம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது.
நம்மைக்கண்டு கற்று வளரும் குழந்தைகள் முன்பே நாம் ஒரு ரோல் மாடலாக திகழ வேண்டாமா? பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நல்லவை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்ப்போமா? தம்பி நீ செய்யாததை அந்த குழந்தை செய்து காட்டிடுத்து பார்.. நீயும் அதைப்போல் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை அந்த குழந்தை உனக்கு உதாரணமாய் காட்டி இருக்கான் பார் என்று பாசிட்டிவாகவே சொல்லி வளர்ப்போம். அவன் ஜெயிச்சிட்டான்.. பாரு என்று குத்தி குத்தி பிள்ளையை குதறும்போது பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது.
அந்த பிள்ளை வளர்ந்தப்பின்னரும் ஜெயிப்பவரை பார்த்து மனதில் பொறாமை உணர்வை வளர்த்துக்கொண்டு சாதித்தவரை மனம் நிறைந்து பாராட்டும் குணத்தை வளர்த்துக்கொள்ள தவறிவிடுகிறது. இந்த மனப்பான்மை நம்மில் வராமல் இருக்க, நாமும் நல்லவை காணும்போதும் திறமைகளை பிறர் சாதித்து காட்டும்போது பாராட்டும் நற்குணத்தை நம்முள் வளர்த்து கொள்வோமாக.
என்ன இன்னைக்கு ரொம்ப இழுக்காம சுருக்க முடிச்சிட்டேனா முன்னுரையை ?
மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்
1. மனவிழி
கண்ணால் பார்ப்பதெல்லாம் பார்க்கும் பார்வையில் இல்லை, எப்படி பார்க்கிறோம் மனம் கொண்டா அல்லது கண் கொண்டா என்று சொல்லி செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். மனதுக்கு விழி இருந்தால் அது கண்டிப்பாக எப்படி செயல்படும், மனசாட்சி ஒருபோதும் தன் நிலை மாறி தவறு பாதையில் செல்லாது என்பதை அடித்துச்சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். இவர் எழுதும் எளிய கவிதையி அர்த்தங்கள் ஆழ்ந்து இருக்கும்.
நதிமூலம்
2. ஷீநிசி கவிதைகள்
மதத்தின் பெயரைச்சொல்லி அடித்துக்கொள்ளும் மனிதரிடையே மதங்களை மறந்து மனிதத்தை நேசிக்கும் நாள் தான் மனிதம் பிறந்த நாள் என்று அழுத்தமாய் சொல்லி செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். குட்டி குட்டி நாலு வரி கவிதையில் கூட நம்மை இழுத்து நிற்கவைத்துவிடும் வலிமையான கவிதைகளின் சொந்தக்காரர். பல வருடங்களுக்கு முன்பே இவருடைய நான்கு வரிகளின் கவிதைகளில் சாராம்சத்தை நச் என்று சொல்லிவிடும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம்.
உதிராத நினைவுகள்
3. செல்வா ஸ்பீக்கிங்
ஹலோ மைக் டெஸ்டிங் செல்வா ஸ்பீக்கிங்... ஒன்... டூ... த்ரீ... நான் ஜஸ்ட் பகிர்கிறேன் அவ்வளவே என்று சொல்லி எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்..
போலாம் ரைட்டு கடவுள் நேரில் வர வேண்டாம்
4. அவர்கள் உண்மைகள்
இந்த மதுரை தமிழனின் எழுத்துகள் அரசியல் சமூகம் தொழில்நுட்பம் நகைச்சுவை எல்லாமே சுவாரஸ்யமாக எழுதி படிக்கவும் ரசிக்கவும் வைப்பவை.
கவலைகளும் கண்ணீர் துளிகளும்
5. எளியவை
எளியவை என்று வலைதளத்துக்கு பெயர் வைத்திருந்தாலும் இவருடைய எழுத்துகள் நேர் சிந்தனைக்கோட்டில் சென்று சிந்திக்க வைக்கிறது.
காசிருந்தால் இங்கிருக்கவும்
6. ஷண்முகப்ரியனின் படித்துறை
மனம் என்ற நதி ஓடிக்கொண்டே இருக்கிறது அதன் படித்துறையில் என்ற வாசகத்துடன் இவருடைய வலைதளம் மிளிர்கிறது. சிறுகதைகள் சொல்லும் பாடம் மிக அற்புதம்.
ஒரு நாயும் ஒரு சன்னியாசியும்
7. மனசு
சிறகை விரிக்கும் சிந்தனைகள் ரெக்கை கட்டி பறக்கும் மனம் போல் எழுத்துகள் எல்லோரையுமே சென்று அடையும் வகையில் மிக அருமையாக எழுதுகிறார்.
பந்தயம்
8. மன அலைகள்
ரிட்டையர்மெண்ட் வாழ்க்கையை மிக பயனுள்ளதாக பிறருக்கு பயன்படும் வகையாக எழுத்து பூஞ்சோலை ஒன்றை அமைத்து அதை எல்லோருக்கும் பகிர்கிறார். எழுத்துகள் ஒவ்வொன்றும் நேர்மை சொல்லும் உச்சம்...
இயேசுவின் கடைசி யாத்திரை
9. கரை சேரா அலை...
எண்ணத்தூறல்களின் சங்கமம் எப்படி இருக்கும்?? இவருடைய எழுத்தின் அலைகள் ஓய்வதே இல்லை.. கரை சேர்வதும் இல்லை. ஆனால் வாசிப்போர் மனதில் அழகாய் சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொள்கிறது இவருடைய பகிர்வுகள்.
வேரோடும் வேரடி மண்ணோடும்
10. ஆறாவது பூதம்
சின்னக்குழந்தைகள் சாப்பிடலன்னா உடனே அம்மாக்கள் பயன்படுத்தும் ஆயுதம் பூதம் கிட்ட புடிச்சு கொடுத்துருவேன். ஆனால் இந்த ஆறாவது பூதம் இருக்கே.. இதை கூப்பிட்டிருந்தால் குழந்தையை பயமுறுத்தி இருந்திருக்காது. அதற்கு பதில் அழகிய சுவாரஸ்யமான பகிர்வுகளை கதைப்போல் சொல்லி வாசிப்போரை ரசிக்கவும் வைக்கும்.
ஒரு இனிய அனுபவம்
11. பேரண்ட்ஸ் கிளப்
குழந்தை வளர்ப்பும் குழந்தை கல்வியையும் எத்தனையோ பேர் சொல்லி வைத்தாலும் இந்த வலைதளம் பெற்றோர்களுக்காகவென்றே உருவாக்கி, குழந்தை வளர்ப்பு பற்றி மிக அருமையாக தன் எழுத்தில் சொல்லி இருக்கிறார்.
புரிந்துக்கொள்வோம் வாருங்கள்... குழந்தையை !!
12. மகிழ்நிறை
இவர் குரலில் இருக்கும் அன்பும் உற்சாகமும் துளி கூட குறையாமல் எழுத்து பிரவாகத்தில் கொண்டு வரும் வித்தகர் இந்த இனியவர். இவர் பகிர்ந்த கத்தரி கைகள் ஆங்கில படம் நானும் முன்பு பார்த்து வியந்திருக்கிறேன். அதே படத்தை பற்றி இவர் கண்ணோட்டத்தில் எழுதிய பகிர்வை கண்டிப்பாக வாசித்து பாருங்கள்.
கத்தரி கைகள்
13. உண்மையானவன்
உண்மையானவன் என்று தனது தளத்துக்கு பெயர் வைத்து தனது எழுத்துகள் சத்தியம் உரைப்பவை என்ற எழுத்துக்கு சொந்தக்காரர்.
சைவ சித்தாந்த செல்வர் சொக்கலிங்க ஐயா (1856 - 1931)
14. நிகழ்காலம்
செல்லும் இடமெல்லாம் கேமராவை கொண்டு செல்வோம் புகைப்படம் எடுத்துக்கொள்ள, இவரோ தான் பார்த்துவிட்டு வந்ததை எல்லாம் எழுத்துப்படம் எடுத்துக்கொண்டு வந்து கோர்வையாக படத்துடன் பகிர்ந்துவிடுகிறார்ள் தன் தளத்தில்.
நம்பிக்கை மனுஷிகள்
15. சேம்புலியன்
ஒருவரின் அனுமதியில்லாது அவரது வீட்டுக்குள் செல்லக்கூடாது. ஆனால் இவரின் அனுமதிக்காக வேண்டியிராமல் இவர் தளத்துள் சென்று இவர் பதிவுகளை படிக்க சுவாரஸ்ய தேன் மிட்டாய்களை அழகாய் அடுக்கி வைத்திருக்கிறார். படித்து பாருங்களேன். உத்தரவுக்காக காத்திருக்காமல் உள்ளே வா என்ற சொல்லுடன் இவர் எழுத்துகள் தொடர்கிறது.
தி.நகர் ஆடி ஸ்பெஷல்
16. துளசிதளம்
துளசி இல்லாத வீடே இல்லை அப்போதெல்லாம். இப்போதோ துளசிதளத்தில் பகிர்ந்தவை வாசிக்காதவரே இருக்கமுடியாது. இவர் எழுத்தை அறியாதவர் இருந்திருக்கவே முடியாது.
கொடுமையில் இருந்து தப்பிப்பிழைச்ச பிள்ளையார்
17. குடந்தையூர்
வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்பவரின் எழுத்துகள் வீரியம் மிக்கவை. எழுத்துகளோடு நின்றுவிடாமல் குறும்படமும் இயக்கிவிட்டார் இந்த எழுத்தர்.
திருமண ஒத்திகை - 5
18. மனத் தோட்டம்
இவருடைய மனத்தோட்டத்தில் பூக்கும் எழுத்து பூக்கள் எல்லாமே அன்பின் மை தோய்த்து எழுதியவை போலும். ஏனெனில் அருமையான கவிதைகள் எல்லாமே அன்பின் வாசத்துடன் இவருடைய வலைதளத்தில் மிக அருமையான எழுத்துகளில் எழுதி இருக்கிறார்.
ஆயிரம் தவறுகள் செய்தாலும்
19. பாண்டியனின் பக்கங்கள்
ஜனரஞ்சக கவிதைகள், சிறுகதைகள் என்று நிறைந்திருக்கும் அருமையான வலைதளம் இவருடையது.
பேசுதலின் நிமித்தம்
20. காரிகன்
இசையும் எண்ணங்களும் இவருடைய விருப்பங்களும் என்று எழுதிய எழுத்துகள் பழைய இனிமையான பாடல்களைப்பற்றி இவருடைய எழுத்தில் வாசிப்பது சுகம்.
இசை விரும்பிகள் - எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி
இனிமையான புன்னகையும், அன்பையும் நிரப்பிய அக்ஷய பாத்திரமாய் இன்றைய நாள் எல்லோருக்கும் நலம் தரும் நன்னாளாய் அமைய வேண்டுகிறேன்.
நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு வருகிறேன் நண்பர்களே
அன்பு வணக்கங்கள் !!

இன்றும் நிறைய என் நட்புகளையும் உறவுகளையும் பார்த்ததுடன் புதிய சில அறிமுகங்களும் கிட்டின. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நம்மால முடியாததை இவர் சாதிச்சுட்டாரேன்னு மகிழ்ந்து பாராட்டணும்னா அதுக்கு நம்மை/நம் திறமையைப் பற்றிய சரியான மதிப்பீடும் தன்னம்பிக்கையும் நம்மள்ட்ட இருக்கணும். அது இருக்கறவங்க நிச்சயம் மனசுவிட்டுப் பாராட்டுவாங்க மன்ச்சூ.
ReplyDeleteவாத்தியாரே... முந்திட்டீங்களே....
Deleteஎக்ஸாக்ட்லி கணேஷா !!! கரெக்டா சொல்லி ஹாட் ட்ரிக் அடிச்சிட்டீங்க :)
Deleteஇன்றைய அறிமுகங்கள் எனது நண்பர்கள் திரு.சொக்கன் சுப்பிரமணியன், திரு. குமார், திரு. அரசன், திருமதி. மைதிலி கஸ்தூரி ரங்கன், திருமதி. எழில், திரு. மதுரைத்தமிழன், திரு. குடந்தையார், மற்றும் திருமதி. துளசிதளம் கோபால், அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் எமது வா ழ் த் து க ள். அறிமுகப்படுத்திய திருமதி. மஞ்சு பாஷிணி அவர்களுக்கு ந ன் றி க ள்.
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி,
தமிழ் மணம் 1
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ... :)
Deleteஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.
ReplyDeleteஅறிமுகம் ஆன மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சொக்கன் சுப்பிரமண்யன்... :)
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் உமையாள் காயத்ரி... :)
Delete//..நாமும் நல்லவை காணும்போதும் -
ReplyDeleteதிறமைகளை பிறர் சாதித்து காட்டும்போதும் -
பாராட்டும் நற்குணத்தை நம்முள் வளர்த்து கொள்வோமாக!..//
அருமை!..
இன்றைய அறிமுகங்களில் அன்பிற்குரிய நம்மவர்கள் இருக்கக் கண்டேன்..
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் துரை செல்வராஜு... :)
Deleteசிறப்பான அறிமுகங்கள். என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலரும் இதில் இடம்பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி. அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஆதி வெங்கட்... :)
Deleteஇன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் ஆன மதுரைத் தமிழன் (அவர்கள் உண்மைகள்). பரிவை சே.குமார் (மனசு), அய்யா பழனி கந்தசாமி (மன அலைகள்), அரசன்.சே (கரை சேரா அலைகள்), மைதிலி கஸ்தூரிரங்கன்(மகிழ்நிறை), கவிஞர் எழில் (நிகழ்காலம்), ரூபக் ராம்(சேம்புலியன்), துளசி டீச்சர் (துளசிதளம்), குடந்தையூர் ஆர்.வி.சரவணன், காரிகன் (வார்த்தை விருப்பம்) என்று பெரும்பாலும் எல்லோரும் எனக்கு அறிமுகம் ஆனவர்கள் எல்லோருமே சிறந்த பதிவர்கள். மற்றவர்கள் பதிவை நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். ரொம்பநாள் வலைப்பக்கம் எழுதாமல் இருந்த சகோதரிக்கு வெற்றிகரமான ஆறாம்நாள். வாழ்த்துக்கள்! நன்றி.
ReplyDeleteத.ம.3
ஆஹா சார் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்... :)
Deleteவெற்றிகரமான ஆறாம்நாள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா... :)
Deleteமிக்க நன்றி மஞ்சு பாஷிணி அவர்களே,
ReplyDeleteஎனது வார்த்தை விருப்பம் தளத்தை அறிமுகம் செய்ததற்கு. இரண்டே வரிகளில் ஒரு சிறகடிக்கும் உணர்வை எனக்குத் தந்து விட்டீர்கள். நன்றி.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் நண்பரே... :)
Deleteஇன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! சிறப்பான தொகுப்பு! நன்றி!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சுரேஷ்... :)
Deleteமுதலில் மீண்டும் ஒரு முறை என்னைத் தாங்கள் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அக்கா.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில்...
அவர்கள் உண்மைகள்
மனவிழி
மன அலைகள்
கரை சேரா அலை
மகிழ்நிறை
நிகழ்காலம்
துளசிதளம்
குடந்தையூர்
என நான் விரும்பி வாசிக்கும் உறவுகளுடன் புதிய உறவுகளையும் அறிமுகம் செய்து அதில் என்னையும் சேர்த்தமைக்கு மீண்டும் நன்றி.
புதியவர்களை வாசிக்கிறேன்...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் குமார்... :)
Deleteமனம் திறந்து பாராட்டுவோம் என்ற தத்துவம் அருமை பின் பற்றினால் சிறப்பே!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் நண்பரே... :)
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரூபன்... :)
Deleteஅப்ப்ப்ப்ப்ப்பா... எவ்ளோ அறிமுகம். ஒவ்வொன்றாக படிக்கனும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் விச்சு... :)
Deleteஅனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார்... :)
Deleteபலரது வலைத்தளங்கள் எனக்கு புதிதாக அறிமுகமாகி இருக்கிறது.
ReplyDeleteஎன்னையும் பலரது கவனத்திற்குக் கொண்டு சென்றமைக்கு நன்றிங்க, மஞ்சு.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சத்ரியன்... :)
Deleteநல்லவை காணும்போதும் திறமைகளை பிறர் சாதித்து காட்டும்போது பாராட்டும் நற்குணத்தை நம்முள் வளர்த்து கொள்வோமாக.//
ReplyDeleteநன்றி ச்ப்ல்லவும், பாரட்டவும் சொல்லிக் கொடுத்து விட்டால் குழந்தைகள் நன்மக்களாக இருப்பார்கள் உண்மை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமையாக தொகுத்து கொடுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் மஞ்சு
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.. :)
Deleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஆஹா! அக்கா இப்போ தான் இதை பார்க்கிறேன்:) மிக்க நன்றி அக்கா! உங்களால் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன்:))
ReplyDelete