Sunday, November 30, 2014

வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்

விடுமுறை நாளின்... அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே....



உதவி செய்ய சந்தர்ப்பம் இருந்து அந்த உதவி செய்தோம் என்றால் செய்த உதவியின் பலன் நம்மை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.... நமக்கு அவசியமான நேரத்தில் சரியாக நாம் செய்த உதவியின் நற்பலன் நமக்கு உதவியாக திரும்ப கிடைக்கும்..  என் அனுபவத்திலே இது பலமுறை நடந்திருக்கிறது. உதவி என்று கேட்டு வரும்போது அவர் நம் நட்பா விரோதியா உறவா, பதிலுக்கு வேறு ஏதாவது திரும்ப கிடைக்குமா இந்த உதவியால்  என்று பாராமல், உதவி செய்ய முற்படுவது தான் ஆத்மார்த்த உதவி. 

இன்னைக்கு இன்னும் சுருக்க எழுதிட்டேன் பார்த்தீங்களா?? படிக்க பொறுமை இருக்கனும்ல உங்களுக்கும்.. அதான் குட்டி குட்டியாவே எழுதிடறேன்...

இன்னைக்கு வெற்றிகரமான ஏழாம் நாள்... எனக்கு கொடுத்த பொறுப்பை நான் சரிவர செய்தேனா என்பதை வலைச்சர ஆசிரியர் குழு தான் சொல்லவேண்டும். 

மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்
1.  கானகம்
இவர் வலைதளத்துக்கு இந்த பெயர் வைத்ததற்கான காரணத்தை மிக அருமையாக எழுதி இருக்கிறார். விவசாயத்தை பாடமாக படித்ததாலும், காடுகளின் மீது கொண்ட தீராக்காதலும் தான் இந்த பெயர் வைக்க காரணமாக இருந்தது என்றும், ஆனால் இவருடைய எழுத்துகள் எல்லாவற்றையும் சுற்றி வந்து எழுதும் எழுத்துகள் என்று சொல்லி இருக்கிறார்.
ஆதிக்காலத்து ஒரிஜினல் நாகப்பட்டிணம் நெய் மிட்டாய்க்கடை

2.  என் ராஜப்பாட்டை
ஜனரஞ்சகமான எழுத்துக்கு சொந்தக்காரர். குடந்தையூர் சரவணன் எடுத்த குறும் படம் பற்றிய அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறார்.
சில நொடி சிநேகம் குறும்பட விமர்சனம்

3.  வெங்கட் நாகராஜ்
ஊர் ஊராய் சுற்றிய பயணங்களை சுவாரஸ்யமாக எழுத்தில் படமாக்கி கொண்டு வந்து பகிர்ந்து, சிந்தித்தவை எல்லாம் பதிவாக்கி, போன வாரமும் அதற்கு முன் வாரமும் வலைச்சர ஆசிரியர் களத்தில் சிறப்பாய் எழுதிய வித்தகர் இவர்.
ஃப்ரூட் சாலட் 

4.  கவிச்சோலை
களைப்பை போக்கி இளைப்பாரவைக்கும் கவிச்சோலை இவருடைய வலைதளம்..
மீண்டு வருமோ

5.  மூங்கில்வனம்
மூங்கில்வனம் மிரட்டவில்லை... மாறாய் அனுபவங்களை சொல்லி செல்கிறது.
பயணம்

6.  குரல்
இவருடைய குரல் இவர் விரும்பி ஏற்ற தொழில் பேச்சு... இவருடைய எழுத்து இவர் நேசித்த ஊற்று...
அபி உலகம்

7.  புதியவன் பக்கம்
நெஞ்சுரமும் நேர்மையும் பாரதியின் வரிகளை தன் வலைதளத்தில் முகப்பாக வைத்திருக்கும் கம்பீர எழுத்தாளர். மனதில் பட்டதை தைரியமாக எழுதும் திண்மையான எழுத்தாளர்.
கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் சிந்திக்க

8.  எனது கவிதைகள்
இவருடைய எழுத்துகள் யாவுமே கவிதைகளின் காதலனாகவும் குழந்தையின் ரசிகனாகவும் சொல்லி செல்கிறது... வாசிக்கும் நமக்கும் பிரமிப்பு ஏற்படுவது உண்மை.
கோடிக்கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் குழந்தைகள்

9.  வித்யாசாகரின் எழுத்துப்பயணம்
கால ஏட்டில் கண்ணீராகவேனும் கரையத்துடிக்கும் ஒரு இதயத்துடிப்பு இவருடைய எழுத்துகள் என்று சொல்லும் இந்த வித்தகரின் ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதிய சந்தோஷம் எனக்குமுண்டு.. நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அழகிய கவிதைகள், மனம் கவரும் பகிர்வுகள் என்று ஏராளம் உண்டு.
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

10. கடற்கரை
இவருடைய எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை என்று சொல்லும் இந்த எழுத்தாளரின் கைவண்ணத்தில் தீபாவளி என்ற சிறுகதை மிக அருமை.
நாளைக்கு தீபாவளி ( தீபாவளி சிறப்பு சிறுகதை)

11. சிலிர்க்கும் சிந்தனை
நேர்க்கொண்ட சிந்தனை, எழுத்துகளில் தெறிப்பதுண்டு... சமூக அவலங்களை சாட்டையடியாக தன் எழுத்தில் கொண்டு வந்ததும் உண்டு. இதை தவிர இன்னும் மூன்று வலைதளமும் இவருக்கு உண்டு.
எந்தமிழே

12. கணிணி மென்பொருட்களின் கூடம்
இவருடைய எழுத்துகள், இவருடைய தீராக்காதல் எல்லாமே கணிணியை சார்ந்ததாகவே இருக்கும்.. நிறைய கணிணி சம்மந்தப்பட்ட விவரங்களை வலைதளத்தில் அசத்துகிறார் இவர்.
பெண்டா ஷோ - ஆபிசு 2013 இலவசமாக

13. நாஞ்சில் மனோ
இவருடைய பகிர்வை படித்துவிட்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது. அத்தனை தத்ரூபமாய் நகைச்சுவை இருக்கும் இவர் எழுத்தில்.. சுவாரஸ்யத்தை கூட்டி எழுதும் வித்தகர் இவர்.
கத்தி திரைப்படம் நாஞ்சில் மனோ விமர்சனம்

14. நிலவோடு ஒரு நெடும் பயணம்
நிலவோடு பயணிக்கும்போது உலகத்தையே மறக்கிறேன் என்று சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்... இவருடைய பகிர்வை வாசிக்கும் நமக்கோ இவருடைய வலைதளத்தை விட்டு நகரமுடியாதபடி விஸ்தரிக்கிறார். அருமையான எழுத்தாளர்.
என் பள்ளி ஆசிரியர்கள்

15. KASU SOBANA
எல்லோருக்கும் பயனுள்ள நல்ல விஷயங்களை பகிரும் வலைதளத்துக்கு சொந்தக்காரர்.
எறும்பு

16. DR. PRAKASH
நிறைய நல்ல நல்ல விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
இந்தியாவின் பட்டினியை போக்கியவர்

17. அண்ணாமலையின் கவிதைகள்
காதலைப்பற்றி எழுதி சோர்ந்து போகாத எழுத்துக்கு சொந்தக்காரர்.
காதல் கற்றவன்

18. இளையநிலா ஜான் சுந்தர்
மெல்லிசை கலைஞரான இவர் எழுதியவை எல்லாம் மெல்லிசை கலைஞனின் நினைவு குறிப்புகளும், வற்றாத கவிதை பிரவாகமான எழுத்துகளும்...
தெருவில் அலையும் தேவதைகள்

19. STUDENTS TALENTS
இந்த வலைதளத்தில் எல்லா குட்டீசுடைய வரையும் திறனை வெளிக்கொணர்ந்து அதை உற்சாகப்படுத்தி வரவேற்கிறார்கள். இந்த வலைதளத்தில் என் மகன் இபானுக்கும் ஒரு முறை அவனுடைய வரைதல் திறமைக்கு முதன்மையாக வந்தான். இதோ சசிகாந்த் என்ற  ஒரு குழந்தை சாதித்ததை கொடுத்திருக்கிறேன் பாருங்கள்
SASIGANTH'S BEN 10

20. காணாமல் போன கனவுகள்
நம்ம ராஜியோட வலைதளத்தை குறிப்பிடாமல் நான் வலைச்சரத்தை முடித்துவிட்டால் சாமி வந்து என் கண்ணை குத்திவிடும்.. அட்டகாசமான பேசும்போதே டைமிங் கௌண்டர் கொடுத்து அசரவைக்கும் இவருடைய எழுத்துகள் மிக மிக வீரியம் பெற்றவை.. அது சுவையான சமையலானாலும் சரி, அனுபவ பகிர்வு கோப்பானாலும் சரி, கோயிலுக்கு சென்று ஒவ்வொரு கோயில் பற்றிய தொகுப்பானாலும் சரி. ஐஞ்சுவை அவியலானாலும் சரி. அனாயசமாக எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
கோதுமை வடை - கிச்சன் கார்னர்


என் மனம் கவர் கவிதைகள் நிறைய முகநூலில் பார்த்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அவர்களும் ப்ளாக் தொடங்கி எழுதவேண்டும் என்பது என்னுடைய  பேராசை பேரன்பு மிக்க பேராசை. ஏனெனில் முகநூலில் மூழ்கி இருக்கும் இவர்களுடைய தொகுப்புகள் அப்படியே போய்விடாமல் ப்ளாக் தொடங்கி அதில் பதிந்தால் தன் சொந்தவீட்டில் பதிந்தது போன்றதொரு மனதிருப்தியை தரும்.  நிறைய பேருடைய பகிர்வுகள் வாசித்திருந்தாலும் என்னால் அத்தனையும் பகிர இந்த ஒரு நாள் போறாது. நேரமும் இல்லை. அதனால் ஒரு சிலருடைய பகிர்வை மட்டும் பகிர்கிறேன்.

(முகநூலில் இருந்து)

யதார்த்த வரிகளில் அழகிய கவிதை பூத்துவிடும் இவர் எழுத்தில்....


தேவதைகள் புடைசூழ
ஆடுகளத்திற்கு வந்தார்
கடவுள்
போட்டியின் துவக்கத்திலிருந்து
சாத்தானின் கையே ஓங்கியிருந்தது
அவரின் சாதுர்ய வியூகத்திற்கு
ஈடு கொடுக்க முடியா
கடவுள்
நடுவருடன் ஒப்பந்தித்தார்
இந்தமுறை
கடவுள்
வெற்றிப் பெற்றதாய்
அறிவிக்கப்பட்டது
சாத்தான் வசம்
அதிகமாகிக்கொண்டிருந்தது
தேவதைகளின் எண்ணிக்கை.
யாழி

நிகழ்வுகள் கவிதையாகிவிடும் அற்புதம் இவர் எழுத்துகள்....


வடை கதைகளை 
தனியே 
புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் 
பாட்டிகள். 
ச்சோட்டா பீமின் 
லட்டுகளை கவனித்துக்கொண்டிருக்கின்றன
காக்கைகள்.
ஊர் புகுந்து
வடை கடைகளை
துவங்கிவிட்டன
நரிகள்.

மனம் நெகிழவைக்கும், உருகவைக்கும், சிரிக்கவும் வைக்கும் இத்தனை ஜனரஞ்சகமான எழுத்துக்கு சொந்தக்காரர்..




அழுக்கு அன்னப்பூரணி

புன்னகையுடன் 

மீன்களுக்கு உணவிட்டவள்
யாருமறியாமல்
தவளைகளுக்கும் உணவிடுகிறாள்.

உணவுண்டு கிளிகள் பறந்தபின்
காகங்களுக்கென 
தண்ணீர் வைக்கிறாள்

அச்சமின்றி 
தெருநாய்களுக்கு 
முத்தம் கொடுக்கிறாள்

வெகு கவனமாக
தளும்பாமல் தண்ணீர் கொண்டு
பேப்பர் பொறுக்குபவருக்கு
தருகிறாள்

நாட்டி கேர்ள் 
அல்லது
டர்ட்டி கேர்ள் என்கிறார்கள்
எல்லோரும்

நானோ லோக நாயகி 
அன்னபூரணி என்கிறேன்.!


4.  கனிமொழி.ஜி
கனிய கனிய மழலை மொழியும் குரல்... ஆனால் எழுத்திலோ ஆணித்தரமான கருத்துகளுடன், இனிமையான மென்மையான கவிதைகளுடன் இவருடைய எழுத்துகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது..

மெல்லிய கயிரால் பிணைக்கப்பட்டு
உறங்கிக் கொண்டிருக்கிறது
உள்ளே என் மிருகம் ....
உறுதியான கொம்புகளோ
வளைந்த கூர்நகங்களோ 
நீண்டு குதறும் பற்களோ
கொலைக் குரூரமோ இல்லவே இல்லை....
ஆனாலும்
முட்டிபிராண்டிகவ்வி
மூர்க்கம் செய்யும் அதை
மிருகம் என்கிறான் வருடிக்கொடுத்தவாறு.....

எழுத்துகளில் சில சமயம் மென்மையும், சில சுமயம் சூறாவளியும் காணலாம் இவர் தொகுப்பில்.


தாயாக உனை மடியேந்தவில்லை
தந்தையாகத் தோள் சுமக்கவில்லை
முன்பிறந்து வழி நடத்தவில்லை
பின்பிறந்து பின் நடக்கவில்லை
கரம் பற்றித் துணை ஆகவில்லை
உன் சேயாய் உலகு புகவில்லை
இத்தனை வாய்ப்புகள் மறுதலிப்பு
இறைவனின் அகம் என்னவோ...
தாயாய் பாசம் காட்டிட
தந்தையாய்த் தவறு களைந்திட
முன் பின்னாக வேண்டிய
இடம் நின்று இணை நடந்து
துணையாய் கரம் வலுவாக்கிட
சேயாய் செல்லம் கொஞ்சிட
அனைத்துமாய் தனித்துவமாய்
கலம் வைத்த நீராய்...
இமை மூடும் நாள் வரைக்கும்
நெஞ்சில் உனை சுமந்திருக்க
அன்பில் உனைத் திளைத்திருக்க
உறக்கத்திலும் நினைத்திருக்க
உனக்காகத் துடித்திருக்க
தேவையெனில் உயிர் கொடுக்க
இறையளித்த அனுமதிப் பத்திரம்
நட்பெனும் அட்சயப் பாத்திரம்..!!
தினா.


இவருடைய பக்கம் போய் பார்த்தால் அத்தனை சுவாரஸ்யம் இவருடைய எழுத்துகள்.. சுவாரஸ்யம் மட்டுமில்லை... மனசுக்கே றெக்கை கட்டி பறக்க வெச்சிரும்.. அத்தனை உற்சாக வரிகள் இவருடைய எழுத்துகள்.

அழகான காலைப்பொழுது


இன்று உழவர் சந்தையிலே நடந்த சுவாரஸ்யமான விஷயம்...
கீரைக்காரப் பாட்டியிடம் மணத்தக்காளிக்கீரை கேட்க,
"எல்லாம் தீந்துடுச்சு கண்ணு.. இந்த உதிரிக் கீரைதான் இருக்கு....அஞ்சு ரூபா குடு சாமி.... "
என்று இரண்டு கைப்பிடி கீரையைக் காட்ட,
நான் .. "குடுங்க பாட்டி, அது ஒரு துவையலுக்கு ஆகும்ல .." என்று வாங்கிப் பையில் வைத்தேன்.

பக்கத்துக் கடை அம்மிணி வாழைப்பூ, தண்டு எல்லாம் விற்பவர்..அதைக் கேட்டதும்,
"என்னது....? இந்தக் கீரைலே துவையலா ?? அது எப்படி....?? கசக்காது ...? "
என்று கேட்கவும்....
"ஆஹா.... !!! சிக்கீட்டாண்ய்யா சேகரு" என்று.... நான் கையிலே வைத்திருந்த காய்கறிக்கூடையைக் கீழே வைத்து விட்டு,
சுற்றிலும் நான்கைந்து பேர் நின்று ஆவலோடு கேட்டுக் கொண்டிருக்க..
"உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ,மல்லி விதை, வர மிளகாய் வறுத்து, சின்ன வெங்காயம் வதக்கி, கூட இந்தக் கீரையையும் நல்லா வதக்கிட்டு, கொஞ்சம் தேங்காய் , உப்பு புளி வச்சு அரைச்சா .... துவையல் ரெடி..." என்று சொல்லி, இதே போல கரிசலாங்கண்ணி , பொன்னாங்கண்ணி , முருங்கைக்கீரை.. முசுமுசுக்கை என்று
என்னென்ன கீரையில் துவையல் அரைக்கலாம்... எப்படி சமைக்கலாம் என
வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டேன்.
அங்கிருந்த பிரண்டைக்கட்டைக் காட்டி ஒரு இளம் தம்பதி..
"இதை என்ன செய்ய...?" என்று கேட்க ..
"அதே போலத் துவையல் செய்யலாம்ங்க.. கீரைக்குப் பதிலா ..பிரண்டையை நல்லா சுத்தம் செஞ்சு, நல்லெண்ணை விட்டு நல்லா பொன்னிறமா வதக்கி... அதே பொருட்களோட சேர்த்து அரைங்க.
ஆனா, இதை சுத்தம் பண்ணறது கொஞ்சம் கவனமா செய்யணும். கைய்யிலே எதாவது எண்ணெயைப் பூசிட்டு, இல்லன்னா மெலிசான கையுறை போட்டுட்டு தோல் எடுக்கணும் இல்லேன்னா கையெல்லாம் அரிக்கும் " என்று தொடர்ந்தது என் வகுப்பு.
ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்திற்கு மேல்... அங்கே ஒரு அருமையான கலந்துரையாடல்...!
"கண்டிப்பா நாமளும் பிரண்டை சட்னி செய்யணும்.. " என்றபடி ஒரு கட்டுப் பிரண்டையை வாங்கிக் கொண்டு தம்பதியர் நகர,
"அக்கா இனிமே கையிலே கிடைக்கற கீரையை வதக்கித் துவயலா அரைச்சிட வேண்டியதுதான் ... " என்று வாழைப்பூக் கடைத் தங்கை சந்தோஷிக்க ....
பை நிறையக் காய்கறிகளும் மனம் நிறைய திருப்தியுமாய்.....
புன்முறுவலோடு வீடு திரும்பினேன் . அழகானது என் காலைப் பொழுது.. 


இந்த ஏழு நாட்களும் ஊர் ஊராக சென்று ஒவ்வொருடைய பதிவுகள் வாசித்து அதை வலைச்சரத்தில் பகிர எனக்கு மூன்றாம் முறையாக வாய்ப்பு கொடுத்த சீனா அண்ணாவுக்கும் பொறுமையாக நான் எழுதிய முன்னுரை, பகிர்ந்த வலை முகவரிகள், அறிமுகப்படுத்திய பதிவர்கள் சென்று வாசித்து, வாசித்தற்கு கருத்தும் ஊக்கமும் உற்சாகமும் தரும் பின்னூட்டங்களும் கொடுத்து உடன் பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

ஒரு சிலரிடம் பணம் இருக்கும் ஒரு சிலரிடம் பணம் இருக்காது, ஒரு சிலரிடம் பணம் அதிகமாக இருக்கும், பொருள் இருக்கும், வசதிகள் இருக்கும், ஒரு சிலர் அன்றாட தேவைகளுக்கே தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பார்கள். இப்படி இயந்திரமயமாகிவிட்ட உலகில் ஒருவருக்கொருவர் பகிரக்கூடிய அன்பு மனதில் பெருகி இருக்கும்போது அதை பகிர தவறாதீர்கள்... வாழ்க்கை இனிமையானது... ஒவ்வொரு நாளும் அற்புதமாவது அன்பின் புன்னகையை தவறாமல் முகத்தில் ஒட்டிக்கொள்வது...அன்பை பகிர்வது...

டிசம்பர் 1 முதல் அடுத்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்க வரும் அடுத்த வலைச்சர ஆசிரியருக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் !!!

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் !!







28 comments:

  1. எழுதுவதே அரிதாகிவிட்ட சமயத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி மீண்டும் எழுத தூண்டியுள்ளீர்கள்.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கார்த்தி :)

      Delete
  2. //உதவி செய்ய சந்தர்ப்பம் இருந்து அந்த உதவி செய்தோம் என்றால் செய்த உதவியின் பலன் நம்மை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.//

    இனிமை.. அருமை!...

    சிறப்பாக பணியினை நிறைவு செய்தீர்கள்.. வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் துரை செல்வராஜ் :)

      Delete
  3. என் வலைப்பூ அறிமுகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி மஞ்சு பாஷிணி மேடம்!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஷோபனா :)

      Delete
  4. முகநூல் நட்புகளையும் தொடர்கிறேன்... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார் :)

      Delete
  5. ஆஹா! அக்கா அட்டகாசமான தொகுப்பு!! நந்தன் ஸ்ரீதர் சார் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் வலைபூவில் இருக்கிறாரே.இதோ அவர் இணைப்புhttp://asistantdiraktar.blogspot.in/2014/03/blog-post_1929.html#comment-form

    ReplyDelete
    Replies
    1. இப்போதே பார்த்து இணைத்து கொள்கிறேன்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மைதிலி :)

      Delete
  6. இந்த வாரம் முழுமையும் சிறப்பான பதிவர்களை தொகுத்து கொடுத்து அசத்தி விட்டீர்கள்! இன்றைய அறிமுகபதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! முகநூல் நண்பர்களையும் அறிமுகம் செய்தமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சுரேஷ் :)

      Delete
  7. ஒருவருக்கொருவர் பகிரக்கூடிய அன்பு மனதில் பெருகி இருக்கும்போது அதை பகிர தவறாதீர்கள்... வாழ்க்கை இனிமையானது... ஒவ்வொரு நாளும் அற்புதமாவது அன்பின் புன்னகையை தவறாமல் முகத்தில் ஒட்டிக்கொள்வது...அன்பை பகிர்வது...//
    ஆம், மஞ்சு நீங்கள் சொல்வது சரி.
    அன்பை பகிர்வோம், அன்பை பெறுவோம்.
    கொடுத்து பார் பார் உன் அன்பை அதனால் கிடைக்கும் தெம்பு, தெம்பு.

    இன்று அறிமுக படுத்தியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் அடிக்கடி போய் படிக்கும் பதிவுகளும் இருக்கிறது. நன்றி.

    முலநூல் சண்முக வடிவு அவர்களின் அழகான காலை பொழுது படித்து இருக்கிறேன்.
    அருமையாக ஆசிரியர் பணியை நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

      Delete
  8. அடியேனுக்கும் ஒரு அறிமுகம் - உங்கள் மூலம். மனம் நிறைந்த நன்றி.

    மற்ற பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வெங்கட் :)

      Delete
  9. இந்த வார அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சொக்கன் சுப்பிரமணியன் :)

      Delete
  10. ஏழு நாட்கள் ஓடியதே தெரியவில்லை. இன்றைய அறிமுகத்தில். வெங்கட் நாகராஜ , நாஞ்சில் மனோ , காணாமல் போன கனவுகள் ராஜி ( இப்போழுது இவர் ஏனோ வலைப்பக்கம் காணோம்) ஆகியோரது வாசகர்களில் நானும் ஒருவன். நாகப்பட்டினம் அல்வா சென்று பார்த்தேன். மற்ற பதிவுகளையும் பார்க்க வேண்டும்.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் :)

      Delete
  11. இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு எமது (வா ழ் த் து க ள்) இந்த வாரத்தை அமர்க்களப்படுத்திய மஞ்சுபாஷிணி அவர்களுக்கு நன்றியும். தொடர்ந்து அடுத்த வாரமும் தாங்களே, பொருப்பேற்றால் தேவலாம்.


    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
    தமிழ் மணம் - 5

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ :)

      Delete
  12. சுவையான பதிவுகளின் தொகுப்புகள் கொடுத்தமைக்கு நன்றி!

    தமிழ்மணம் 6.

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். இனிதே இவ்வாரம் சென்றது அக்காச்சியின் பணி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ஒரு வாரம் அருமையாக சுவைபட தொகுத்து தந்ததிற்கு நன்றி. அதிலும் உங்கள் முகவுரை அருமை.மழையுடன் கூடிய காலை வணக்கம் மஞ்சு

    ReplyDelete
  15. எனது வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றிகளும் அன்பும். அவ்வப்போது ஏதேனும் எழுத உங்களது அறிமுகம் ஊக்குவிக்கிறது.

    ReplyDelete
  16. அறிந்த மற்றும் அறியாத பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...! அழகாக தொகுத்து அறிமுகப்படுத்திய உங்களுக்கும்...!

    ReplyDelete
  17. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...

    என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி மேடம்...

    ReplyDelete