சரம் – மூன்று! மலர் - இரண்டு!
ராஜஸ்தான் என்றதும் பாலைவனம் தான் முதலில் நினைவுக்கு வருகிறது அல்லவா! நாம் இப்போ செல்லப் போவது ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு. ”PINK CITY”என்று சொல்லப்படுகிற இங்கு, எங்கெங்கு காணினும் சிவப்பு நிற கட்டிடங்கள் தான்.
தில்லியிலிருந்து ஜெய்ப்பூர் நான்கு முதல் ஐந்து மணிநேரத்தில் சென்று விடலாம் என்பதால், நண்பர் குடும்பத்துடன் இணைந்து அவருடைய காரிலேயே நாங்களும் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு சனிக்கிழமை அதிகாலையில் தில்லியிலிருந்து கிளம்பினோம். அதிகாலைப் பயணம் சுகமான அனுபவம்.
”கண்ணை மூடித் திறந்தால் செல்ல வேண்டிய இடம் வந்திராதா!” என்று நினைப்பவள் நான்….:)) என்னவருக்கோ பல மணி நேரங்கள் தொடர்ந்து பயணம் செய்வது மிகவும் பிடித்தமானது…..:)) யாருங்க அது “ஆஹா என்ன பொருத்தம்!”னு பாட்டு பாடறது! சனி ஞாயிறு என விடுமுறை நாட்களான இரண்டு நாளையும் ஜெய்ப்பூரில் கழிக்கலாம் என்று திட்டம்.
பொதுவாக வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள் செப்டம்பர், அக்டோபர் தான். காரணம் நவம்பர் முதல் பனிக்காலம் துவங்கி விடும். ஆகஸ்டுக்கு முன் என்றால் கடும்வெயில். அதனால் இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த இரண்டு மாதங்களை தேர்ந்தெடுத்தால் நிம்மதியாக சுற்றிப் பார்க்கலாம். ஆனால் நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டது 2009 ஏப்ரல் மாதத்தில் – கோடை அதிகம் ஆரம்பிக்காத ஒரு சமயம். எங்களது இளஞ்சிவப்பு நகரத்தை நோக்கிய பயணம் துவங்கியது.
வலைச்சர வாரத்தில் நாங்கள் பயணித்த ஜெய்ப்பூரின் சில காட்சிகளை உங்களுக்கும் சொல்லியபடியே அறிமுகம் செய்ய இருக்கிறேன் – சரியா? நாளை உங்களை எல்லாம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற கோட்டைக்கு அழைத்து செல்கிறேன். அதுவரைக்கும் இன்றைய அறிமுகங்களின் வலைப்பூக்களுக்குச் சென்று அவர்களின் பதிவுகளையும் படிக்கணும் ஓகே! ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள் மட்டுமே! அதிகமில்லை!
1) மகிழ்நிறை தளத்தில் எழுதி வரும் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் கலக்கலான பதிவுகளுக்கு நான் ஒரு ரசிகை. இவங்க ஒரு அன்பான ஆசிரியர். மார்கழி மாதம் ஆயிற்றே. அதனால் கோலங்கள் பற்றிய மைதிலி அவர்களின் பதிவொன்று இன்றைய அறிமுகப் பதிவாக இதோ... கோலங்கள்
2) தாத்தா என்று தைரியமாகச் சொல்லிக் கொள்ளும் சுப்புத் தாத்தாவின் ”சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்”தளம். பாடல்களின் சங்கமமாக ஒரு பதிவு இதோ இன்றைய அறிமுகமாக - 11 11 64 ???
3) நண்பர்கள் இணைந்து வாசிப்பனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பித்தது தான் வாசகர் கூடம்எனும் தளம். உங்களது வாசிப்பனுபவத்தினை நீங்களும் இங்கே பங்களிப்பாக அளிக்கலாம். வாத்யார் என்று அழைக்கப்படும் பதிவர் சகோதரர் மின்னல் வரிகள் வலைப்பூவில் எழுதும் திரு. பால கணேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவம் இதோ இன்றைய அறிமுகப் பதிவாக - எம்.ஜி.ஆர்.
4) ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சார் அவர்களின் தளத்தில், கதைகளும், கவிதைகளும் கொட்டிக் கிடக்கும். சமீபத்தில் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான “ஆரண்யநிவாஸ்” வெளியிடப்பட்டது. அவரது பதிவுகளில் ஒரு பதிவான ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ..... இன்றைய அறிமுகமாக!
5) அருணா செல்வம் அவர்களின் கதைகளும் கவிதைகளும் ரசிக்கத் தக்கவை. இன்றைய அறிமுகப் பதிவாக இல்லாததும் இன்பம் தான்!! தந்திருக்கிறேன். படித்துப் பாருங்களேன்!
என்ன நண்பர்களே! இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா? நாளை வேறு சில பதிவர்களைப் பார்க்கலாம்!
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
பயணம் என்றாலே நினைவுக்கு வருவது வெங்கட் நாகராஜ் அவர்களின் பயணக் கட்டுரைகள்தான்.உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கத் தயார். எந்த ஊருக்கு சென்றாலும் புறப்படுமுன் அந்த ஊரைப் பற்றிய கட்டுரை உங்கள் தளங்களில் இருக்கிறதா என்று பார்த்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். வலைசரம் சிறக்கட்டும். வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்
ReplyDeleteதங்களின் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் முரளிதரன் சார்.
Deleteஅருமையான தொடக்கம். பயணிக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி நடனசபாபதி சார்.
Deleteஜெய்ப்பூர் சுற்றுலாவுக்கு நாங்களுமா!.. மிக்க மகிழ்ச்சி!..
ReplyDeleteஇனிய தளங்களுடன் இன்றைய வலைச்சர தொகுப்பு அருமை!..
மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.
Deleteசிறப்பான தொடக்கம்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் சார்.
Deleteநாங்களும் உங்களுடன் ஜெய்ப்பூர்க்கு பயணிக்கிறோம்.
ReplyDeleteஇன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சொக்கன் சகோ.
Deleteஇன்றைய வலைச்சர தொக்குப்பு அருமை. உங்கள் பயண அனுபவம் அருமை.இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி கோமதிம்மா.
Deleteஜெய்ப்பூர் - படங்கள் அழகு.
ReplyDeleteசரத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteஅறிமுகமான பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிக்க நன்றி ராஜலஷ்மி அம்மா.
Deleteஜெய்ப்பூர் நான் பார்த்ததில்லை. அதனால குஷியா உங்களோட பயணிக்கத் தயார். நாங்கள் ரசித்த, ரசிக்காத புத்தகங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமான ‘வாசகர்கூடம்’ நம் அனைவருக்குமானது. (இந்தவார வலைச்சர ஆசிரியரான நீங்கள்கூட தன் பங்களிப்பைக் கொடுத்திருக்கீங்க பலமுறை). அதற்கு இங்கே கிடைத்த நல்லறிமுகம் மகிழ்வைத் தருகிறது. மிகமிகமிக மகிழ்வான நன்றிம்மா.
ReplyDeleteமிக்க நன்றி கணேஷ் சார்.
Deleteவலைசரம் சிறக்கட்டும்.
ReplyDeleteபாராட்டுகளும்
.வாழ்த்துகளும்,
அனனைத்து அன்பர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றிங்க புதுவை வேலு சார்.
Deleteஇதுவரை வெங்கட் அண்ணா தான் பயணத்தொடர் எழுதிட்டு இருந்தார். இப்போ அண்ணி டப் பைட் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்களே!!! கலர்புல் தொடர் ...கலர்புல் கட்டுரை ...அத்தோடு என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அண்ணி...மற்ற எல்லாருக்கும் என் வாழ்த்துகள்..ஸ்பெஷலி to பாலா அண்ணா, அண்ட் சுப்பு தாத்தா:)
ReplyDeleteமிக்க நன்றிங்க மைதிலி.
Deleteஇன்றைய வலைச்சரம் பதிவர்கள் அறிமுகம் வாசித்தேன். எல்லோரும் சிறந்த பதிவாளர்கள். சுவாரஸ்யமாக எழுதுகிறவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteத.ம.7
மிக்க நன்றி தமிழ் இளங்கோ சார்.
Deleteஜெய்ப்பூர் காட்சிகளைப் படமாக்கித் தந்துள்ளது மிகவும் அழகாக உள்ளது. அதுவும் அந்தக்கடைசி படம் சூப்பர் ! :)
ReplyDeleteமிக்க நன்றி வை.கோ சார்.
Deleteஉங்களுடனேயே வருவதால் அழகாகப் பார்த்து ரஸிக்க முடிகிறது. மிக்க அழகான கட்டிடம். நீங்கள் அறிமுகம் செய்த எல்லா ப்ளாகிற்கும் ஒரு அவஸர விஜயமும் செய்தேன். ரஸிக்கவும் செய்தேன். வாழ்த்துகள். படங்களெல்லாம் வெகு அழகு. அன்புடன்
ReplyDeleteமிக்க நன்றி காமாட்சிம்மா.
Deleteவணக்கம் சகோ காலையிலேயே படித்து விட்டேன் கருத்துரை இடமுடியாத நிலைப்பாடு இன்றைய அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துகள் ஜெய்ப்பூர் புகைப்படங்கள் அருமை.
ReplyDeleteகில்லர்ஜி
மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
Deleteஜெய்ப்பூர் படங்கள் அழகு.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிங்க குமார்.
Deleteசூப்பர் , என் மகனை காலேஜ் சேர்க்க அலகாபாத் போகும் போது ஜெய்பூர் போனோம் அருமையாக இருந்தது.
ReplyDeleteகோட்டை முழுவதும் சுற்றி பார்த்தோம் அதை நினைவூற்றி வீட்டீஙக்ள்,
மிக்க நன்றிங்க ஜலீலாக்கா.
Deleteஎன்னை அறிமுகம் செய்து அந்த ஹவா மஹல் கோட்டையின் உச்சிக்கே கொண்டு போய் வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteஅங்கேயே இந்த வாரம் முழுவதும் இருக்க ஒரு சின்ன ஆசை.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
இருந்துட்டா போச்சு....:)) மிக்க நன்றி சுப்பு தாத்தா.
Deleteஆதி,
ReplyDeleteஜெய்பூர் கட்டிடங்களின் நிறம் மனதைக் கவர்கிறது.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றீங்க சித்ரா.
Deleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய்ப்பூர் அழைத்துச்சென்றமைக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.
Deleteஒரு பைசா கூட செலவு செய்யாமல் சூப்பராய் ஜெய்ப்பூரை அழகாக காட்டி விட்டீர்கள். இந்த மாதிரி பயண கட்டுரை எழுதப் பயந்து கொண்டு ஸ்கூல், காலேஜ் காலத்தில் நிறைய பயணங்களை மிஸ் பண்ணியது ஞாபகம் வந்தது.
ReplyDeleteமேலும் வலைச்சர அறிமுகத்திறகு நன்றியுடன்.....
மிக்க நன்றீ ஆர்.ஆர்.ஆர் சார்.
Deleteசிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ் சார்.
Deleteநன்றி டீச்சர்.
ReplyDeleteநீங்களும் உங்களவரைப் போலவே பயணக் கட்டுரை எழுதுவதில் வல்லவர் என்று நிருபித்திருக்கிறீர்கள், ஆதி! தொடர்ந்து பயணம் செய்கிறேன் உங்களுடன்.
ReplyDeleteபாராட்டுக்கள்!
மிக்க நன்றி ரஞ்சனிம்மா. அவர் அளவு இல்லை என்பது தான் என் எண்ணம்...:)
Deleteஅலுவலக வேலையாய் போய்விட்டு ஜெய்ப்பூர் பார்க்க நேரமில்லாமல் திரும்பிவிட்டேன்.. குறை நீங்கியது பதிவால்
ReplyDeleteகுறை நீங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி ரிஷபன் சார்....
Delete