சரம் – மூன்று! மலர் - ஒன்று!
பட உதவி - கூகிள்
பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். உங்களை எல்லாம் வலைச்சரத்தின் மூலம் மூன்றாம் முறையாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஐந்து வருடங்களாக ”கோவை2தில்லி” என்ற பெயரில் மனதில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது பகிர்வுகளாக தந்து கொண்டு வருகிறேன். என் வலைப்பூவில் சூறாவளி போல் வரிசையாக பதிவுகள் வெளிவருவதும், திடீரென்று பதிவுலகை விட்டு மாதக்கணக்கில் விலகி இருப்பதும் தான் தற்போது எனக்கு வழக்கமாயிருக்கிறது!
எனது பக்கத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்கள், செய்த பயணங்கள், படித்ததில் பிடித்தது போன்ற சில தலைப்புகளில் அவ்வப்போது எழுதி வருவது என்னைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். எனது சில பதிவுகள் கீழே:
நாங்கள் ஒரு பதிவர் குடும்பம் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்கு மிக்க பெருமை உண்டு. என்னை வலையுலகுக்கு அறிமுகப்படுத்திய என்னவர் திரு. வெங்கட் நாகராஜ்அவர்கள், மகளுக்கும் வெளிச்சக் கீற்றுகள் என்ற பெயரில் ஒரு வலைத்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலாக வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் எழுதிய பதிவுகள் இதோ….
கடந்த ஆண்டான 2014ல் இதே மார்கழி மாதத்தில் தான் இரண்டாம் முறையாக ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் எழுதிய பதிவுகள் இதோ….
இம்முறை சீனா ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் வந்த போது என்னால் உடனே ஏற்றுக் கொள்ளமுடியாத சூழல். காரணம் மகளின் தேர்வு நேரம். நாமும் அவர்களோடு சேர்ந்து படிக்கத் தான் வேண்டியுள்ளதே. அதனால் விடுமுறையில் பணியாற்றுகிறேன் என்று பதில் அனுப்பியதும், உடனே ஏற்றுக் கொண்டார்….:)
சென்ற இருமுறைகளும் சமுதாய விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பகிர்வுகளாகவும், கதை, கவிதைகள், பற்றிய அறிமுகங்களாகவும் தொகுத்திருந்தேன். இம்முறை என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டுக் குழப்பி கொண்டதில், உங்களையெல்லாம் வட மாநிலச் சுற்றுலா அழைத்துச் செல்லலாம் என்று தோன்றியது….:) சுற்றுலா செல்வது மனதுக்கு சந்தோஷத்தை தரவல்லது அல்லவா! அதனால் நாளை முதல் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் செய்ய தயாரா இருங்க…. சரியா…:)
இது என்ன இடம்? எந்த ஊர்? கண்டுபிடிங்க நட்புகளே?
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
அண்மைக்காலமாக தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். தாங்கள் இரண்டாம் முறையாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றமை அறிந்து மகிழ்ச்சி. தங்களது அறிமுகம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து தங்களது பதிவுகளைக் காண ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். முத்தான உங்கள் முதல் வணக்கத்திற்கு எனது முதல் வாழ்த்து. நன்றி.
ReplyDeleteதங்களின் வாழ்த்துகளுக்கும், என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதும் குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா. இது எனக்கு கிடைத்த மூன்றாம் வாய்ப்பு...:)
Deleteவருக வருக சகோதரி... வலைச்சர ஆசிரியர் பொருப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க சரவணன்.
Deleteபயணத்திற்கு நாங்கள் தயார்...! தொடருங்கள் சகோதரி...
ReplyDeleteஉற்சாகமூட்டும் தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்.
Delete
ReplyDeleteஇவ்வாரம் எங்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல இருப்பதற்கு நன்றி! அந்த ஊர், ‘இளஞ்சிவப்பு நகரம்’ என அழைக்கப்படும் ஜெய்ப்பூர் தானே.
மிகச் சரியான பதில். அது ஜெய்ப்பூர் தான்....:)
Deleteசுற்றுலா செல்ல தயாராய் காத்திருப்பதற்கு மிக்க நன்றி நடனசபாபதி சார்.
அன்பின் ஆதி வெங்கட்
ReplyDeleteவட இந்திய சுற்றுலா நன்று - நானும் வருகிறேன். கண்டு மகிழ்கிறேன் - படித்து மகிழ்கிறேன்.
தொடங்குக - தூள் கிளப்புக
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தாங்களும் என்னுடன் சுற்றுலா வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாய்ப்பளித்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.
DeleteIm coming aft.....
ReplyDeleteபொறுமையாக வாருங்கள் கில்லர்ஜி சார்.
Deleteவருக.. வருக..
ReplyDeleteதங்களுக்கு நல்வரவு!..
இது ஹாவா மஹால்!. இளஞ்சிவப்பு நகர் எனப்படும் ஜெய்ப்பூரில் உள்ளது!..
சுற்றுலா மலர்களின் வழியே அறிந்ததே தவிர நேரில் கண்டதில்லை.
ஆமாம் மிகச் சரியான பதில். இது ஹவா மஹால் தான்....:)
Deleteநாளை முதல் நாம் ஜெய்ப்பூரை நோக்கியே பயணிக்கப் போகிறோம்.
நல்வரவுக்கு மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.
ஆசிரியர் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மது ஸ்ரீதரன் சார்.
Deleteவலைச்சர ஆசிரியராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்பதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete(இதற்கு முன் நான் போட்ட கருத்துரை எங்கே என்று தெரியவில்லையே!)
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
Deleteஎனக்கும் இப்படித் தான் கருத்துரை காணாமல் ஆகிறது. கூகுளில் ஏற்படும் மாற்றங்களால் இருக்கலாம்....:)
வருக!
ReplyDeleteவருக!
நெஞ்சில்
நிறைக!
நிறைக!
நன்றியுடன்,
புதுவை வேலு
வரவேற்புக்கு மிக்க நன்றிங்க புதுவை வேலு.
Deleteகாசில்லாமல் சுற்றளவிற்கு அழைத்துச் செல்லப்போகிறீர்கள். காத்திருக்கிறோம்.
ReplyDeleteபதிவர் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள். நாளைக் காலையில் சுற்றுலா செல்ல தவறாமல் வந்து விடுங்கள்...:)
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சொக்கன் சகோ.
ஆதி, வடமாநில சுற்றுலாவா? குளிருமே! பரவாயில்லை, குளிருக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன், உங்களுடன் பயணிக்க.
ReplyDeleteகவலை கொள்ளாதீர்கள் அம்மா. இந்த சுற்றுலாவில் வெயில் தான் அடிக்கப் போகிறது....:)
Deleteபயணிக்க காத்திருப்பதற்கு மிக்க நன்றி கோமதிம்மா.
வலைச்சர ஆசிரியப் பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடன் நானும் ராஜஸ்தான் வருகிறேன். நீங்கள் படம் போட்டிருப்பது ஜெய்ப்பூர் அரண்மனை என்று நினைக்கிறேன் சரியா?
ReplyDeleteபிங்க் சிடி நானும் பார்த்ததில்லை. உங்களுடன் வந்து இந்த வாரம் பார்த்து விடுகிறேன்.
ராஜஸ்தான் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி ராஜலஷ்மி அம்மா. அரண்மனையும் பார்க்கத் தான் போகிறோம். இது ஹவா மஹால்!
Deleteவருக! வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteசுற்றுலாவுக்கு தாங்கள் வரவில்லையா?
அழகானதோர் படத்துடன் அற்புதமான சுயஅறிமுகம்.
ReplyDeleteதங்களின் இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி வெற்றிகரமாக அமைய என் இனிய நல்வாழ்த்துகள்.
நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வை.கோ சார்.
Deleteஹாட்ரிக்காம்மா ஆதி... கிரேட்! எல்லாரையும் டூர் கூட்டிட்டுப் போறதுங்கறது ரொம்பவே ஜாலியான விஷயம்.. நான் உற்சாகமா தயாராயிட்டேன். வாரம் முழுவதும் அசத்தப் போகும் உங்களுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கணேஷ் சார்.
Deleteசுற்றுலாவிற்கு வர தயாராய் காத்திருப்பது கண்டு மகிழ்ச்சி.
தங்கள் பணிசிறப்புற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வர்மா சார்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் மூன்றாம் பயணம் இனிதே ஆரம்பம் ஆகட்டும்! உடன் பயணிக்க காத்திருக்கிறோம்! நன்றி!
ReplyDeleteவாழ்த்துகளுக்கும், பயணத்தில் கலந்து கொள்வதற்கும் நன்றிகள் சுரேஷ் சார்.
Deleteவணக்கம் !
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி மூன்றாம் முறையாக நீங்கள் ஆற்றவிருக்கும்
இப் பணி வெகு சிறப்பாகத் தொடரட்டும் !
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ.
Deleteவெயில்தான் அடிக்கப் போகிறது என்றவுடன் நானும் உடன் வருகிறேன் என்று எழுதினால் இன்டர்நெட்
ReplyDeleteதகரார் செய்கிறது. எப்படியானாலும் நானும் வருகிறேன்,கண்டு ரஸிக்க. டெல்லியில் பிள்ளை வீடும் இருக்கிரது.. அருமையான சுற்றுலாவாக இருக்கும். நான் கோட்டை கட்டிவிட்ட்ன். அன்புடன்
வாருங்கள் காமாட்சி அம்மா. நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்.
Deleteகட்டி விட்டேன். பிழை முன்பு. அன்புடன்
ReplyDeleteபரவாயில்லை அம்மா.
DeleteWelcome!
ReplyDeleteRajasthan...... a great state to visit!
வரவேற்புக்கு நன்றி டீச்சர். பயணம் என்றாலே தங்களை நினைக்காமல் இருக்க முடிவதில்லை...:)
Deleteவாங்க ஆதி!மணக்கும் சரம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteவாங்க சென்னை பித்தன் ஐயா. தங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன்....:)
Deleteமூன்றாவது முறையாக வலைச்சரத்தை அலங்கரிக்க வந்திருக்கும் சதேவகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துகளோடு.... ஓசி பயணத்திற்க்கு நானும் தயார் 80தை அறிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteஜெய்ப்பூர் 80 எனக்குத்தெரியும் இருப்பினும் மற்றவர்களுக்கு தெரிகிறதா ? 80தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
இத்துன் தமிழ் மணம் 5
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
சாரி சகோதரி தவறுதலாக வந்து விட்டது
ReplyDeleteபரவாயில்லை...:) தங்களின் வாழ்த்துக்கும், பயணத்தில் கலந்து கொள்வதற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
Delete3ம் முறை முதலமைச்சர் ஆன மாதிரி சந்தோஷமாய் இருக்கு !
ReplyDeleteமிக்க நன்றி ரிஷபன் சார்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றிங்க குமார்.
Deleteதொடர்ந்து அசத்துங்க ஆதி. நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க ஆசியா உமர்.
Deleteஅன்பின் ஆதி வெங்கட்
ReplyDeleteபதிவு அருமை - நல்லதொரு துவக்கம் - மூன்றாம் முறை ஆசிரியப் பொறுப்பு - பாராட்டுக்குரியது .
நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனா
நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனா ஐயா.
Deleteத.ம : 6 :
ReplyDeleteதமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஆதி,
ReplyDeleteமூன்றாவது முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பா, வாழ்த்துக்கள் ! இன்னூட்டங்களின் மூல ஜெய்பூர் என்பதை அறிந்துகொண்டேன். வட இந்திய சுற்றுலாவுக்கு நானும் ரெடியாயிட்டேன்.
வாழ்த்துகளுக்கும், சுற்றுலா வருவது குறித்தும் மிக்க மகிழ்ச்சிங்க சித்ரா.
Deleteஇனிய வாழ்த்துக்கள் ஆதி...
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க எழில்.
Delete