வலைச்சரப் பள்ளி,
வலைப்பூக்களூர்.
வலைச்சரத் தேர்வு - 2015.
காலம் : உங்களின் நேரம் மதிப்பெண்கள் : உங்களின் தேர்வு.
குறிப்பு : 1. எல்லா வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.
2. விடைகள் தெரியவில்லை எனில் அதனுடன் தொடர்புடைய விடைக்குறிப்பின் சுட்டியைச் சுட்டினால் விடை
கிடைக்கும்.
கிடைக்கும்.
பிரிவு -1
1. “மாவா நீதா தாநீ வாமா
வாயா வாமே மேவா யாவா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா”
இச்சித்திரக்கவியை எழுதியவர் யார்? இதன் விளக்கம் தருக.\
2. “ வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது
என்பதற்கான எடுத்துக்காட்டுகள். எப்படியெல்லாம் வாழக்கூடாதோ,
அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்”,
இக்கூற்று யாருடையது ? அவரைப்பற்றிச் சுருக்கமாக உரைக்க.
3. சமையற்கலையில் அறிவியல்தொழில்நுட்பத்தைப் புகுத்திய
பெண்களின் சாதனைகளுக்குச் சான்று தருக.
4. இருள் பரவிய மனதில்
வெளிச்சம்
விரைந்தோடுகிறது….
இருளை விரட்டி வருகிறது..
வெளிச்சம்
விரைந்தோடுகிறது….
இருளை விரட்டி வருகிறது..
இக்கவிதை சுமந்துவரும் வலைப்பூ எது ?
5. ” உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் பெண்ணை
அதிகாரம் செய்யும் முறைமையிலேயே அமைந்துள்ளது. காலம்
அதிகாரம் செய்யும் முறைமையிலேயே அமைந்துள்ளது. காலம்
காலமாகப் பெண்களைப் பெண்களாகப் பார்க்கும் பார்வை
சமூகத்தில் இல்லாமல் போயிற்று, அவர்களை அடிமைகளாகப்
பார்க்கும் பார்வை ஏற்பட்டுவிட்டது ” -
இவ்வாய்வுக்கூற்றின் களம் பற்றி விவாதிக்க.
இவ்வாய்வுக்கூற்றின் களம் பற்றி விவாதிக்க.
6. இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு
தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக
அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. -
அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. -
எனத் தொடங்கும் சிறுகதையைப் பதிவிட்ட வலைப்பூவானது
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் பாராட்டிற்கு உரியதாக
விளங்குகிறது. அவ்வலைப்பூ பற்றி நீவிர் அறிந்துள்ளீரா?
7. உயர்ந்த பரம்பரையில் பிறந்தவர்களுடைய கம்பீரமும் உதார
குணமும் எக்காலத்தும் அழியாதவை. "கெட்டாலும் மேன்மக்கள்
மேன்மக்களே" என்ற அருமையான வாக்கியத்திற்கு இந்த
வரலாற்றை விட வேறு சிறந்த உதாரணம் கிடைக்குமோ? -
உ.வே.சா. பற்றிப் பதிவேற்றியிருக்கும் இவ்வலைப்பூ தேன் என்ற
தலைப்பில் திகட்டாத நற்றமிழ் கருத்துகளை வழங்கி வருகிறது .
இவ்வலைப்பூ பற்றித் தங்களது கருத்துகளைப் பதிவு செய்க.
8.
இந்நூலை எழுதியவர் யார்? இவரைப் பற்றிய குறிப்புகளைப்
பதிவு செய்த பேராசிரியர் யார்? அவரின் இலகியப்பயணப்
பதிவுகள் பற்றி விவாதிக்க.
பதிவு செய்த பேராசிரியர் யார்? அவரின் இலகியப்பயணப்
பதிவுகள் பற்றி விவாதிக்க.
9. முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே -
புறப்பாட்டு பட்டினப்பாலை பற்றிய செய்திகளைத் தொகுக்க.
10. சீனப் பெருஞ்சுவர் பற்றிய செய்திகளைத் தொகுத்த
ஃப்ரான்ஸ்ஃகாப்காவின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
அவரது கட்டுரை காணப்படும் வலைப்பூ எது ?
விடைக்குறிப்பு
வினாஎண் 1 : சுவாமிநாதன்
வினாஎண் 2 : திருவள்ளுவன்
வினாஎண் 3 : பிரேமலதாஜவஹர்
வினாஎண் 4 : தூரிகை கபிலன்
வினாஎண் 5 : முனைவர்பட்ட ஆய்வாளர் அருள்ஜோதி
வினாஎண் 6 : அழியாச்சுடர்கள்
வினாஎண் 7 : தமிழ்க்கொங்கு
வினாஎண் 8 : முனைவர் மு. இளங்கோவன்
வினாஎண் 9 : வணக்கம் தமிழ்.
வினாஎண்10 : உலக இலக்கியம்
( குறிப்பு : வலைப்பூ நண்பர்கள் யாரும் தேர்வு கண்டு பயப்படவேண்டாம். ஏனெனில் மதிப்பீடு செய்யப்போவது நீங்கள் நீங்கள் மட்டும் தான். மதிப்பெண்களை யாரும் தயவு செய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம் (!) ) தேர்விற்குப் பொறுத்தருள்க.)
நன்றியுடனும் ,
நான்காம்நாள் வணக்கங்களுடனும்,
சி.குருநாதசுந்தரம்,
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteகிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
தமிழ் மணம் இணைப்புடன் 1
மிக்க நன்றி.
Deleteகலக்கலான அறிமுகம்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி. இனிய கிறித்துமசு வாழ்த்துகள்.
Deleteகேள்வி பதில் முலமாக அறிமுகங்களா. சூப்பர்.
ReplyDeleteகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
Deleteதேர்வுத்தாள் வழியாகவே இலக்கியப் பதிவர்களைத் தெரியவைத்த உத்தி அருமை! யாரும் தோல்வியடையாமலே அனைவரும் வெற்றிபெறும் வகையில் உங்கள் தேர்வு “சமச்சீர்க்கல்வி“யாக இருந்தது. பாராட்டுகள் தொடர வாழ்த்துகள்.
ReplyDelete(நீங்கள் ஆசிரியர் மட்டுமா? படைப்பாளியும் கூட என்பதற்கு இதுவே சான்று! பிடியுங்கள் மதிப்பெண்... நீங்களே போட்டுக்கொள்ளலாம்) (நாங்க எப்புடீ?)
மிக்க நன்றி ஐயா, தங்களின் ஆலோசனைகளும், ஊட்டமும் எனக்குக் கிடைத்த பெரும் பேறு. மிக்க நன்றி ஐயா.
Deleteத.ம.(2)
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteஒரு வித்தியாசமான அறிமுகம் சிறப்பாக உள்ளது அறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தோழர். தங்களுக்கும் இனிய கிறித்துமசு நாள் வாழ்த்துகள்
Deleteஅட...! அறிமுகம் செய்த விதம் உங்களுக்கே உரித்தானது...!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கும் வருகைக்கும்.
Deleteத ம மூன்று
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
Deleteதனித்துவமான முறையில் இன்றைய தொகுப்பு!..
ReplyDeleteவாழ்க நலம்!..
மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கும் வருகைக்கும்.
Deleteஅறிமுகம் செய்யபட்ட நபர்களில் தெரிகிறது உங்கள் கடும் உழைப்பும், செய் நேர்த்தியும் !!! அட்டகாசம் சார்!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
Deleteபாலசந்தருக்கு இரங்கற்பா எழுதியதன் விளைவு இப்பதிவா? வித்தியாசமாக சிந்தித்ததுபோல் உள்ளது. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://ponnibuddha.blogspot.com/
http://drbjambulingam.blogspot.com/
மிக்க நன்றி ஐயா.
Deleteவித்தியாசமான முறையில் வலைப்பதிவர்கள் அறிமுகம் சிறப்பு! நன்ரி!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா,
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். தொடரட்டும் பணி வாழ்த்துக்கள் ஐயா.
மிக்க நன்றி ஐயா,வாழ்த்துக்கும் வருகைக்கும்.
DeleteArimuka nadai. Attakaasam. Nanri शुक्रिया ,
ReplyDelete