தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
நேற்று என்னமோவுல, சொன்னேன்... ஆங் எனக்கு குழப்பமாகவே
இருந்தது...
நான் மனுஷனா ? ஆட்டுக்குட்டியா ? இது எனக்கு குழப்பத்தை உண்டு பண்ண, அம்மாவிடம் சென்றேன்... (குறிப்பு-நீங்க நினைக்கிற ஆளில்லை அப்படி நினைச்சீங்க ? நான் டென்ஷன் ஆயிடுவேன் சொல்லிட்டேன்.. புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்,
என்னை பத்து மாதம் சுமந்து உயிர் கொடுத்து பெற்றெடுத்த எனது நடமாடும் தெய்வம்
திருமதி. மீனாம்பாள் கணபதி அவர்கள்) ’’அம்மா’’
என்றேன், என்னப்பா ? அப்பா
என்னை அடிச்சிட்டாருமா... யேம்பா ? நடந்ததை ஒன்று விடாமல் சொன்னேன்.. அப்பாவை
எப்படிக்கூப்பிட்டே ? பெரியப்பா’’னு என்னைப்பார்த்து சொல்லு பெரியப்பா’’னு
என் கண்ணைப்பார்த்து சொல்லு பெரியப்பா’’னு சொன்னதுதான் தாமதம் ’’சட்டீர்’’ எனஒரு சப்தம் எனது செவிட்டில் ஒரு அறை
விழுந்தது (நண்பர்களே... ’’அருள்’’ திரைப்படத்தின் கதை எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது தெரிகிறதா ? எங்கள் குடும்பத்திலிருந்துதான் ஹும் எல்லாம் காலத்தின் கோலம் சுட்டவர்கள்
வாழ்க வளமுடன் காரணம் எதிரி எமனாக இருந்தாலும் எலிகறி அடிச்சு விருந்து வைக்கனும்
இது ஞானி ஸ்ரீபூவு சொன்னது) பொறி கலங்கி விட்டது என்னடா ? வாழ்க்கை எனக்கு குழப்பத்தை தீர்க்க, முருகனிடம் (எனது, பெரியப்பா) சென்றேன் கலப்பை
அடிப்பதற்க்காக மரத்தை செதுக்கிக்கொண்டு இருந்தார் அருகில் சென்றேன் வாத்தியார்
சொன்னது ஞாபகம் வந்தது, முருகனை, சித்தப்பா, என்றோ, பெரியப்பா என்றோ சொல்லக்கூடாது...
தொடரும்....
வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி.
எனக்கு கார் ஓட்டப்பிடிக்கும் அதில்
வேகமாக ஓட்டப்பிடிக்கும் அதிலும்
இன்னொன்று
பிடிக்கும் அதை
பிறகு சொல்கிறேன் வாழ்வில் மிக
அதிகமான வேகத்தில் கார் ஓட்டியது
ஜெர்மனியில் 220. KM வேகம் மீண்டும்
அப்படியொரு வாய்ப்பு கிட்டுமா ?
காரணம் U.A.E யில், கிடைக்காதே....
காணொளி.
லாபிங் சியாம்
நடந்ததை மறந்துவிடு, நடப்பதை நினைத்துதொடு
இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. நமது அன்றாட நடைமுறை வாழ்வில் நடைபெறும்
விசயங்களை உடனுக்குடன் தனக்கே உரிதான பாணியில் நகைச்சுவையுடன் கலந்து கொடுக்கும்
இவர் பாலக்காட்டில் வாழும் தமிழாளி இவர் சாதாரண ஆளில்லை கடவுளுக்கே ஃப்ளாஷ் பேக்
போட்டவர் குறும்பட இயக்குனரும்கூட என்னைக்கூட நகைக்கடை உரிமையாளர் வேடத்தில்
நடிக்கச்சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்தார், கையில்துட்டு கொடுக்காததால் நானும் கால்ஷீட்டு கொடுக்க முடியாமல் போய்விட்டது, இவரின் பேச்சில்கூட துளசியின் வாசம்
வரும் கூட்டாக பதிவிடும் எமது இனிய நண்பர் திரு. துளசிதரன் தில்லைஅகத்து
மற்றும் திருமதி. கீதா அவர்களின் பதிவில் என்னை மிகவும் கவர்ந்தவை
கீழே சொடுக்குக.
(குறிப்பு – Actually இவங்க
மேலே நான் கோபத்துல இருக்கேன் இரண்டு வாரத்துக்கு முன்பு தில்லை அகத்திலிருந்து.... வந்த தொல்(லை)பேசியில் இவர்கள் என்னிடம் பேசியமுறை
சரியில்லை எனக்கு சரியான கோபம் அவர்களின் நல்லநேரம் நான் இந்தியாவில் இல்லை
கோடரிக்கு வேலையில்லாமல் போயிருச்சு நண்பர் சொக்கனிடம் தொலைபேசியில் அழைத்தபோது
அவர்தான் விடுங்கள் நண்பரே... மறப்போம், மன்னிப்போம் அவர்கள் செய்த மிமிக்ரி
வேலையைத்தான் ஊரே பார்த்து சிரித்து விட்டதே மேலும் அவர்கள் குறும்படத்தில் நான்
நடிக்க போவதில்லை ஆகவே அடுத்த வருடம் புதுக்கோட்டைக்கு வருவார்கள் அங்கே வைத்து
அணைகட்டி விடுவோம் என்றதால் தற்போது சமாதானமாகி விட்டேன்)
டலவாம்பு
பொருமையாக பேசிப்பார் பெருமைப்படும்
பேரெடுப்பாய் இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. பருப்பு
இல்லாமல் சாம்பாரா ? இது பழமொழி இவரின் கருத்துரை இல்லாத பதிவா ? இது
புதுமொழி ஆம் நண்பர்களே... தெரியாத விசயங்களை செல்பேசியில்கூட அழகாக சொல்பவர் எந்த
ஒரு கத்துக்குட்டி பதிவரையும் கன்றுக்குட்டிக்கு பசு பால் கொடுப்பதுபோல் அழகாக
கற்றுக்கொடுக்கும் தாயுள்ளம் கொண்டவர் பழகுவதற்க்கு அற்புதமான நண்பர் இவரின்
பதிவுகள் பெரும்பாலும் தேனும், பாலும் கலந்து இருக்கும் தேன்பாவைபோல் இனிக்கும்
அழகான பாடல்களுடன் விசயங்களை விளக்குவார் பலபேருடைய நெஞ்சங்களை பிடித்தவர் ஆம்
நண்பர்களே... அவர்தான் எமது இனிய
நண்பர் வலைச்சித்தர் திரு. திண்டுக்கல் தனபாலன்
அவர்களின் கேள்வி – பதில் என்னை மிகவும் கவர்ந்தவை கீழே சொடுக்குக.
டலவாம்புங் இஷா
கனவுல வந்த சுந்தரிக்கும், எந்திரிப்பான்
மந்திரி. இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. வாய்விட்டு சிரித்தால்
நோய் விட்டுப்போகும் (வாயை
விட்டு புட்டா ? எப்படி ? சிரிக்கிறது) காலையில் எழுந்தவுடன் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக வேலைகளை தொடங்குங்கள்...
அன்றைய பொழுது நல்ல விதமாகவே போகும் இதற்க்கு நான் கியாரண்டி, (மனைவி
உசுப்பும் போதே கையில் கரண்டியோடு... பின்னே எப்படி ?) காலை எழுந்தவுடன் சிரிப்பு வரவேண்டும்
அதற்க்குத்தான் வழி சொல்கிறேன், எந்திரிச்சவுடன் கணினியை திறக்கவும் இந்த
வலைப்பூக்கு செல்லுங்கள் தினம் ஒரு திருக்குறள் என்பது போல தினம் மூன்று நகை+சுவை மதுரை
மல்லிகைப்பூ இட்லி மாதிரி இது எந்நாளும் தயார். இதைப்படித்தவுடன் பிறகு காலைக்கடன்
கழிக்கச்செல்லலாம் அன்றைய பொழுது கல கலனு போகும், அதுதான் மதுரை வீரன், மதுரை
சூரன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், எனது இனிய நண்பர் நகையை வித்தவர் SORRY நகைச்சுவை வித்தகர் திரு. பகவான்ஜி அவர்களின் அ6றுசுவை பதிவுகளை காண கீழே
சொடுக்குக.
எல்லாம் சரி கணினி இல்லாதவங்க ? அவுங்களெல்லாம் SAMSUNG – S 3 யில் பார்த்து
கொள்ளுங்கள் தற்போது இல்லையெனில் உடன் கடையில் வாங்கி விட்டு பில்லை திரு. பகவான்ஜி
அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் உடன் அவர் உங்கள் முகவரிக்கு பணம் அனுப்பி
விடுவார்.
டலவாம்புங் டலவா
நான் கனவும்
கமலாவும்.... என்று பெங்களூருவிலிருந்து... சொல்லும்
சகோதரி இவரின் அற்புதமான கதை கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் மனம் நிறைவாக இருந்தது
காரணம் அத்தனை கணம் என்ன ? எவளோ ஒருத்தி கணவனைப்பற்றி
சொல்கிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள் ? அப்படி நினைத்துதான் நானும் போனேன், போனேன், போயிக்கிட்டே
இருந்தேன் பெங்களூரு வந்துடுத்து கடைசியில பார்த்தால் ? அது இல்லை வேறென்ன ? பெங்களூரு சகோதரி கமலா ஹரிஹரன் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்கி
பாருங்களேன்...
இவர் ஹைக்கூ கவிதையிலும் சில தத்துவங்களை சொன்னதை கண்டு சிலிர்த்துப்போனேன்.
உங்களுக்கும் சிலிர்க்கும் கீழே சொடுக்கி பாருங்களேன்...
டலவாம்புங் தட்லோ
குழந்தையை பெற்றோம் வளர்கிறது என நினைத்துக்
கொள்கிறோம் கேட்டால் ? மரத்தை வச்சவன் தண்ணி ஊற்றுவான் என்ற வாய்ச்வடால் வேறு
எந்தப்பருவம் தொட்டு அவர்களையும், அவர்களது நண்பர்களையும் கவனித்து வ(ள)ர
வேண்டுமென அழகாக நமக்கு தொகுத்து அளிக்கிறார் ஆசிரியரான எமது
இனிய தோழர் திரு. மது கஸ்தூரி அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக
டலவாம்புங் அபாட்
காஞ்சவன்
பிள்ளை நோஞ்சானாய் இருக்கும் இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. சகோதரி செல்லம்மா புருஷன், ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்றான், விஞ்ஞானம் வளர்ச்சிதான் இதனால்
குழந்தைகளின் வளர்ச்சி பாதித்து ஓடி விளையாடாமல் நோஞ்சானாக இருக்கின்றனர்...
திறந்த வெளியில் ஆடிப்பாட முடியாமல் அவர்களின் சுதந்திரம் பறிபோய் விட்டதென குமுறி
இவர்களின் செயலால் நெஞ்சு
பொறுக்குதில்லையே
என்கிறார், இந்த சகோதரி இவர் கவிதை வடிப்பதிலும் வல்லவி வார்த்தைகள் தேனாய்
இனிக்கும் (பின்னே
தேன் கசக்கவா ? செய்யும்) அப்படியென்ன ? சுதந்திரம் போய்விட்டது பாருங்களேன் எனது இனிய நண்பி திருமதி. தேன் மதுரத் தமிழ் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
டலவாம்புங் லிமா
தமிழன் எனச்சொல்லு, தலை
குனியாமல் நில்லு இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. இல்லறம் விட்டு பொருள்தேடி ஈபிள் கோபுரத்தைவிட எத்தனை
உயரமான இடத்திற்க்கு போனாலும் தமிழில் பேசுடா என்று கோபமாக பேசுகிறார் இவர்
சாமானியர் அல்ல ! எழுதுகோலை எடுத்தால் ? உழுது கொண்டே இருப்பார்
ஒன்று மசி தீரவேண்டும் அல்லது எழுதுகோலின் முனை முறியவேண்டும் அப்பொழுதுதான்
நிறுத்துவார். மற்றவர் பதிவுக்கு கருத்துரை வழங்குவதிலும் பாரிவள்ளல் கருத்து
கருப்புசாமி என்றே இவரை இணையத்தில் அழைப்பார்கள் அவர்தான் ஃப்ரான்சு ஈபிள் டவரின்
மேலிருக்கும் எனது இனிய
நண்பர் திரு. சாமானியன்
அவர்களின் பதிவை படிக்க கீழே சொடுக்குக.
டலவாம்புங் அனிம்
எங்கிருந்தாலும் பிறந்த மண்ணின் மணம் விடுமா ? விடாது அதுதான் தமிழ்
உணர்வு தனது நாட்டில் தனது சகோதரனுக்கு துயரமென்றால் ? நம் மனம் இல்லை இல்லை
தமிழ் மனம் கேட்டுகுமா ? கேட்காதே... அதுதான் தமிழின் உணர்வு அந்த உணர்வை தனது
கவியின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் எமது தோழி ஆம் இலங்கையில் பிறந்து
ஜெர்மனியில் வாழ்ந்தாலும் சொந்த மண்ணின் வாசம் விட்டு விடுமா ? தன்னை இளையநிலா என்று
சொல்லிக்கொள்ளும் எமது இனிய நண்பி திருமதி. கவிஞர். இளமதி அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
டலவாம்புங் பிதோங்
நண்பர்களே... உங்களுக்கு டாக்டர் பட்டம் வேண்டுமா ? இதோ நமது நண்பருவர் அழகான யோசனைகளை அள்ளி
வீசியிருக்கிறார் இதன் வழியே போனால் ? கிடைப்பது சாத்தியமே
என்கிறார் இது மட்டுமல்ல கணினியைக்குறித்து மணி மணியான தகவல்களை மணிக்கணக்காக
படிக்கத் தருகிறார் திரு. ராஜபாட்டை - ராஜா
அவர்கள் எப்படி ? இதோ இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக
இன்றைய கொசுறு
நண்பர் Jayadev
Das அவர்களுக்கு முந்தைய புகைப்படத்தில் மீசை குறைவாக
இருக்கிறது அங்கு வைக்கவிடுகிறார்களா ? எனக்கேட்டிருந்தீர்கள்
கடந்த நவம்பர் 25-ம்
தேதி நண்பரொருவரை காண N.M.C
Hospital போயிருந்த போழுது கீழே நின்று எடுத்தது
மீசையைப்பற்றி விரிவாக எழுத நான்கு பதிவுகள் போடவேண்டும் போடுகிறேன் நான் வேலை
செய்வதே சுமார் 100 அரேபிய
ஆண்-பெண் Staff களுடன்தான் இந்த நாட்டில்
மீசை பெரிதாக வைக்ககூடாது இருப்பினும் வைத்திருக்கிறேன் அதுதான் கில்லர்ஜி 18 ஆண்டுகளாக போராடிக்
கொண்டுதான் வாழ்கிறேன் பண ஆசைக்காகவும், பரம்பரை மீசைக்காகவும்
நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி
தேவகோட்டையான்)
அன்பு இதயங்களுக்கு ஒரு ’’ப்ளாஷ் நியூஸ்’’ எனது வலைப்பு கில்லர்ஜியில் ப்ளாஷ் நியூஸ்
தொடங்கப்பட்டு இருக்கிறது ஒருநாள் ஐயன் வள்ளுவனின் திருக்குறளும், மறுநாள் பையன் கில்லர்ஜியின் தெருக்குரலும் ஒலிக்கும் 80தை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்
வாழ்க ! தமிழ்.
* * * * * * * * * * * * * * * * * *
அறிமுகங்களுக்கு நன்றி ...
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி
த மவில் இணைத்து வாக்கு ஒன்று ...
அறியத் தந்தமைக்கு உளமார்ந்த
Deleteநன்றி சகோதரரே!
வருக, தோழர் மது அவர்கள் ...இணைப்பில் வந்து இணைத்தமைக்கு(ம்) நன்றி.
Deleteநண்பரே...
ReplyDeleteஎதிரி எமனாக இருந்தாலும் எலிகறி அடிச்சு விருந்து வைக்கனும்...
பதிவின் ஆரம்பத்தை படித்து கண்களில் நீர்வர சிரித்தேன் !!!
காணொளி கண்டேன்...
கீல்லர்ஜீ... நீங்க உண்மையிலேயே தல ஜீ !
இன்றைய அறிமுகங்களுக்கு அன்பான வாழ்த்துகள்.
இந்த " கிறுக்கு " சாமானியனையும் கெளரவப்படுத்தியதில் பெருமை ! அதுசரி ஜீ... கருத்து கந்தசாமி என்றுதான் இருக்க வேண்டும்...
ஒரு முறை ஊர் சென்றிருந்த போது பல வருடங்களாக சந்திக்காத பள்ளி தோழன் ஒருவனை சந்தித்தேன்...
"டேய் கருப்பசாமி... பிரான்ஸ் போயி இத்தனை வருசமாகியும் நீ வெளுக்கலையேடா ! " என்றான் !
எனது நிறம் எப்படி உங்களுக்கு...
கலக்குங்க ஜீ ! கலக்குங்க ஜீ !
நன்றி
சாமானியன்
வருக நண்பரே... தங்களின் கண்களில் நீர் வந்தமை கண்டு எமக்கு மகிழ்ச்சியே ஆம் நண்பரே இதுவல்லவோ எமது வெற்றி நன்றி.
Deleteஅடுத்து ‘’ஹெட்’’ என்று சொன்னமை கண்டு வருத்தமே நண்பா, ஒரு எழுத்தாளனின் எழுதுகோல் சரித்திரைத்தையே மாற்றி அமைக்கும் அந்தஜாதி மனிதர்கள் நாம் கூத்தாடிகளோடு நாம் சேர்ந்தோமையானால் நாளை நல்ல இந்தியாவை யார் அமைப்பது ? தாங்கள் நினைக்கலாம் இரண்டு எழுத்துக்களால் என்ன வந்து விடப்போகிறது இதுதான் தொடக்கம் நண்பா அதற்கென்று //வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்// கூட்டம் இருக்கிறது நாம் மாறுபட்டவர்கள் அதனால்தானே ஃப்ரான்ஸ் தமிழனும், அபுதாபி தமிழனும் முகம் காணாவிடினும் அன்பை பரிமாறிக்கொள்கிறோம் இனி நமது கூட்டத்தினர் யாரையும் அப்படிச்சொல்லாதீர்கள் அன்பின் மிகுதியால் சகோதரன் என்ற உரிமைகூடி தங்களிடம் சொல்கிறேன். தவறெனில் மன்னிக்க.
அடுத்து, சாமானியனை கௌரவப்படுத்தினேனா ? பெயரில் மட்டும்தானே சாமானியன் மற்றபடி அசாத்தியன் 80 உலகறிந்த விசயமே..
கருத்து கந்தசாமி நான் பிறர் பாதையில் போவதில்லை 80 தங்களுக்கு தெரியாதா ? நண்பா..
அடுத்து, ‘’கருப்பசாமி’’ அதுசரி உண்மையான பேரே அதுதானா ? ஃப்ரான்ஸ் ஓபேரா ஏரியாவுல ஒருவீட்டு வாசல்ல இந்தபேருதான் எழுதியிருந்தது அடுத்து வரும்போது நேரே அதே வீட்டுக்கு வந்து விடுகிறேன்.
அடுத்... அய்யய்யோ என்னஇது எழுதுகோலை எடுத்தால் உழுதுகொண்டே இருப்பார்னு உங்களைச்சொல்லிப்புட்டு.. ஆத்தாடி போதும்..... உங்க இடத்தை நான் பிடிக்க முடியாது.
Please Contact to me, I.D. you come tomorrow this site thank you.
வணக்கம் சகோதரர் கில்லர்ஜி!
ReplyDeleteஇவ்வார வலைச்சர ஆசிரியப் பணி மிக அமோகமாக
நடைபெறுவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி!
தொடரந்திட முடியாமல் சிறு தடங்கலாகி
மீண்டு(ம்) வந்துவிட்டேன்! அதனாலேயே
இங்கு கருத்திடத் தொடர்ந்து வர முடியாமற் போயிற்று!..
சிறக்கட்டும் உங்கள் பணி வாழ்த்துகின்றேன்!
இன்றைய அறிமுகத்தில் என் தளமும் இணைக்கப்பட்டதை
சகோதரர் மலர்த்தரு - மது எனக்கு அறியத்தந்தார்.
அறிமுகம் செய்த உங்களுக்கும் அறிவிப்பைச் செய்த சகோ மதுவுக்கும்
என் நன்றியும் அன்பு வாழ்த்துக்களும்!
இன்று என்னுடன் அறிமுகமாகியிருக்கும் அத்தனை பதிவர்களுக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள்!
வாங்க, வாங்க, விருந்தாளியாக வந்து வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு (கில்லர்ஜி வலைப்பூ) திரும்ப போறேன் இப்ப வர்றீங்க,,,, ம்...ம்....ம்ஹும்
Deleteஜெர்மனியில் ஓட்டுனதெல்லாம் இங்கே கணக்கில் இல்லை. எங்கே நம்ம சிங்காரச் சென்னையில் அதுவும் தில்லக்கேணி, திநகர் பாண்டிபஸார்லே அதே 220.... வேணாம்... போகட்டும் ஒரு 150 கிமீ வேகத்தில் ஓட்டுனால்தான் கணக்கு:-)
ReplyDeleteஇந்த இடுகையில் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பேரும் நமக்கும் தெரிஞ்சவங்கதான். அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்
வாங்க, மேடம் மதுரையை கலக்கியது யாரு ? பதிவுல உங்களோட பெயரை மாற்றி எழுதி விட்டேன் தப்புத்தான் ஏதோ சின்னப்புள்ள விபரம் பத்தாமல் எழுதிட்டேன் அதற்க்குத்தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே... திருவல்லிக்கேணி, தி.நகர் பாண்டி பஜார்ல 150 கிமீ வேகத்துல, ம் எப்படிப்பார்த்தாலும் ஒரு 1500 பேரு செத்துருவானே... ஏதோ கொஞ்சக்கானு மூளையை வச்சுக்கிட்டு பொழைக்கிறேன் மொத்தமா உள்ளே தள்ளிடலாம்னு பார்க்கிறீங்களே.... நியாயமா ? வேணும்னா புதுக்கோட்டை விழாவுக்கு வாங்க, நானும் ஹெல்மெட் போட்டு வர்றேன் நாலு கொட்டு கொட்டிக்கங்க போதுமா ?
Deleteஅட! என்னயா இது காலைல 6 மணிக்கு மேலதான் வலைச்சரம் தொடுக்கப்படும்...பேய் தூங்கற டைம்ல எல்லாம் பதிவு போட்டுருக்கீங்க!! ஹஹ்ஹ் நாங்கள் பேய்ங்கல்லா அதான் ராத்திரி முழிச்சு இருந்து படுக்க போன டைம்ல உங்க இடுகையா......நண்பர் மது கொடுத்துருந்தாரு மெசேஜ் .....உங்களயும் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தியிருக்காருன்னு.....
ReplyDeleteநம்ம அறிவு ஜீவி நண்பர்கள் எல்லாரையும் போட்ட கூட்டத்துல நாங்களுமா.....மிக்க நன்றி ஜி! னண்பர் மதுவுக்கும் மிக்க நன்றி! அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
பாலக்காட்டுக்கு ஃபோன் போட்டுடுடு மீண்டும் வர்ரோம்....
யாரது ? வாங்க உங்களுக்கு 6 மணிக்குத்தான் விடியுதா ? 12.01 ஆயிட்டாளே மறுநாள் தெரியாதா ? தோழர் மது சொன்னாரா ? பரவாயில்லை இன்னைக்கு பூராம் எனக்காக தகவல் தொலை தொடர்பு அமைச்சர் வேலையை செய்யிறாரு ரொம்ப நல்லவரு...... நான் நன்றி சொல்லிட்டேன் நீங்களும் ஒரு... 1 ½ கிலோ நன்றியை அனுப்பிச்சு வையிங்க..
Deleteபாலக்காட்டுக்கு போண் போட்டுட்டு வர்றீங்களா ? அவரு வந்து என்ன ? பாலை காய்ச்சப்போறாரோ... (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ)
நன்றி... நன்றி... நன்றி ஜி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்!
Deleteவண்ணமிகு வலைச் சரத்தில்
இன்று!
வாசமிகு பூ வானீர்!
அருந்தேன் அமுதமென அற்புத
படைப்பினை படைத்தமைக்கு!
வாழ்த்தும் நெஞ்சம்;
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
வாங்க ஜி நலமா ஜி ?
Deleteகலக்கல் அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள் நண்பரே
வருக நண்பரே முடிந்த அளவு தொடருங்கள்.
Deleteதம +1
ReplyDeleteநன்றி.
Deleteஇன்றைய அறிமுகத்தில் மூவரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! மீசைக்காகபோராடி வெற்றி பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருக நண்பரே... இன்னும் வெற்றி பெறவில்லை கேன்ஷலில் வரும்வரை போராட்டம்தான் ஆனால் ? முடிவுவரை முடியை (மீசையை) எடுப்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை அது உறுதி அதேநேரம் டிஸைனிங் மாறிக்கொன்டே............ இருக்கும் நன்றி.
Deleteஇன்றைய பதிவில் பெரும்பாலானவர்கள் அறிந்தவர்கள். பதிவர்களை அறிமுகப்படுத்தும் தங்களின் பாணி நன்றாக உள்ளது. தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
Deleteவண்ணமிகு வலைச் சரத்தில்
வாசமிகு பூ வானீர்!
அருந்தேன் அமுதமென அற்புத
படைப்பினை படைத்தமைக்கு!
வாழ்த்தும் நெஞ்சம்;
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
நன்றி இதற்க்கு முனைவரின் பாராட்டுகளும் ஒரு காரணமே...
Deleteஎன்ன சொல்லிப் பாராட்டுவது!..
ReplyDeleteஇப்படி ஒரு களம் யாரும் அமைத்ததில்லை!..
அன்பின் பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
வாருங்கள் நண்பரே.... இந்த வார்த்தைகளுக்காகத்தான் காத்திருந்தேன் அதற்க்காகத்தான் இந்த கடின உழைப்பு நன்றி தொடர் வருகைக்கு.
Deleteभगवानजी
ReplyDeleteబగవాన్ జీ
ഭഗവാൻജി
بجوان جي
புரியாத மொழியிலும் என் பெயரை எழுதி அழகு பார்க்கும் உங்கள் அன்பிற்கு நன்றி ...அது சரி ,என் பெயருக்கு கீழே இருக்கும் 'டலவாம்புங் இஷா'யாரு ,எத்தனை நாளா பழக்கம் என்று வீட்டிலே ஒரே புகைச்சல் ..அதற்கு என்ன அர்த்தமென்று சீக்கிரம் சொல்லிடுங்க :)
த ம 6
பகவான் ஜி அது வேற ஒண்ணும் இல்ல...நம்பர்...அச்சச்சோ...நம்பர் நடிகை இல்லங்க....நம்பர் 21
Deleteபகாவான்ஜிக்கு, கில்லர்ஜியும், கில்லர்ஜிக்கு பகவான்ஜியும் எப்பொழுதும் செய்யும் உபகாரம்தானே இது
Delete''டலவாம்புங் இஷா'' யாரு ? வீட்டுல கரண்டியை எடுத்துட்டாங்களோ ? அதற்கான உபத்திரவம்தானே இது.
பகவான்ஜி உங்களோட செல்லுல அவளோட போண் நம்பர் இருந்தால் உடனே அழிச்சிடுங்க...
எனக்கென்னமோ சைனீஸ் பாஷையில உங்களைத் திட்டறாரோன்னு மைல்டா ஒரு டவுட்டு பகவான்ஜி... ஹா.. ஹா.. ஹா... இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் என் நட்புகள் இன்று உங்களால் தட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி கில்லர்ஜி.
ReplyDeleteவாத்தியாரின் தொடர் வருகைக்கு நன்றி குருவே, சிஷ்யனை போட்டுக்கொடுத்தால் ? நாளைய சரித்திரம் என்ன ? எழுதும் வாத்தியாரே.... மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
Deleteபுரியாத பாஷை எல்லாம் சரத்தில் தொடுத்து அழகு சேர்க்கும் சகோவின் பதிவைக் காண வந்து இன்றைய அறிமுகப்பதிவர்கள் சங்கமத்தில் மகிழ்ந்தேன்.
ReplyDeleteவருக, புரியாத பாஷை யாருக்கு ? மகிழத்தானே வலைச்சரம் நன்றி.
Deleteபாலக்காட்டிலிருந்து ஒரு அப்பாவி ராஜா...அது என்ன லாபிங்க் ஸ்யாம் நம்மள ஏதாவது பேரு வைச்சு கூப்டறாருன்னு துளசி - அப்பாவி ராஜா கேட்க, கீதா "அது நம்பருப்பா...19" இங்க பாரு ஒரு புள்ளைங்க நம்பர் பாட்டு இருக்கு பாரு நம்ம எல்லாரும் நம்பறதுக்கு நு சொல்லி அந்த லிங்க் இங்க பாருங்க...
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=b8NA-hUdlAg நம்பர்ல கூட கரெக்டா எங்க நம்பர் வரைக்கும் தான் பிள்ளைங்க சொல்லுது.....
யப்பா சாமியோவ் இது அடுக்குமா...உங்கள ஏப்ரல் மாசம் வாங்க படத்துல போட்டுறலாம்னு சொல்ல சொல்ல....நீங்க என்ன சொன்னீங்க "வேஷம்" எல்லாம் நான் போட மாட்டேன். நான் எப்பவுமே கில்லர்ஜிதான்......தேவகோட்டை ஆளு....
இந்த கொடுவா மீசையையும், தொப்பியையும் எடுக்கறதா இருந்தா நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிப்புட்டு...கதைய பாருங்க டோய்.." ஹாஹ்ஹ்...ஹலோ நீங்க கொடுவா மீசை வைச்சுகிட்டு நீங்க அப்பாவினா......நாங்க டபுள் அப்பாவிங்க......
பாலக்காட்டிலிருந்து " அச்சா" வியா ? இந்த லாபிங்க் சியாம் இதெல்லாம் கடைசியில்தான் சொல்லப்படும்னு ஏற்கனவே அறைகூவல் விட்டாச்சு.
Deleteஅப்பாவிங்களா ? அதுனாலதான் கையில துட்டு கொடுக்காமல் கால்ஷீட்டு கேட்டீங்களோ.... வாங்க, வாங்க..
ஆஹா மூன்றாம் நாள் அம்மாக்கிட்ட அறையா? :) பாவம் பிள்ளை...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் அட்டகாசமான முறையில் எழுதி இருக்கீங்க ஜீ.
பகவான் ஜீ பெயரை எல்லா மொழியிலும் எழுதி இருப்பது சிறப்பு...
துளசிதரன் சாரை இந்த புரட்டு புரட்டி எடுக்கிறீங்களே முன் ஜென்மத்துல ஏதாவது விட்டக்குறை தொட்டக்குறையா? :)
வண்டி வேகமா ஓட்டுவதில் நீங்க கில்லர் தான் ஜீ...
இன்றைய வலைச்சர அறிமுகமும் அழகாய் தொகுத்து இருக்கிறீர்கள்...
அறிமுகப்படுத்தப்பட்ட நட்புள்ளங்களுக்கும் ஜீ அவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !!
அருவா மீசையும் அப்பாவி முகமும் அப்டின்னு படம் எடுத்தால் கண்டிப்பா அதுக்கு நீங்க தான் ஹீரோ ஜீ...
என்ன தான் அப்பாவியா முகத்தை வெச்சுக்கிட்டாலும் அருவா மீசை எல்லோரையும் பத்தடி தூரம் தள்ளி தான் நிக்க வைக்கிறது :)
த.ம.9
வாங்கியது அறை இதென்ன ? ஆஹா புரியுது புரியுது எப்படி ஆளுகனு புரியுது அது கால்ஷீட்டுக்கு நோட்ட, விட்டா ஏன் ? குறை வருது
Delete//அருவா மீசையும் அப்பாவி முகமும்// ஆஹா தலைப்பு கிடைச்சுருச்சே...... நன்றி.
புதுவைத்தமிழன் வந்து
ReplyDeleteபுலவர் மொழிபோல
புதுமையான வாழ்த்தினால்
புத்துணர்சி பெற்றதுபோல்
புணந்துணர்ந்தேன்
வாழ்த்துகளை...நன்றி.
சிறப்பான பதிவர்களின் சிறப்பான மற்றும் சிரிப்பான அறிமுகத்திற்கு நன்றி அண்ணா !!!
ReplyDeleteவாங்க நண்பா சிரிங்க,சிரிங்க பெண்டு கழண்டு போகுது இங்கே,,,
Deleteஅனைத்து அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஆ ஜேர்மனியில் கார் ஓட்டமா???எப்படியிருந்தது எங்க ஊர் ஹைவே.அதுவும் பென்ஸ். ஆனால் பார்த்து ஓடனும் கமரா இருக்கும்.
வித்தியாசமாக தலைப்புகள் வைத்து அசத்துறீங்க. அது என்ன ஒவ்வொருநாளும் விரதம்??? என்னவோ எல்லாமே சஸ்பென்ஸ்.வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
தங்களின் வருகைக்கு நன்றி ஜெர்மனி அருமையாக இருந்ததே... கேமரா இருப்பது தெரியும் அதாவது வண்டி எடுத்த ½ மணி நேரத்திலேயே புரிந்து கொண்டேன் 70 கி.மீ என்றால் அதிலேயே போகவேண்டும், 100 என்றால் 100 போகவேண்டும் 200 என்றால் 200 போகவேண்டும் ஒரு பாய்ண்ட்கூடுதல் போனாலும் கேமரா அடிக்கும் அதே நேரம் அன் லிமிட் என்றால் யுவர் ஸோய்ஸ் முடிந்த அளவு வண்டியில் இருந்தவர்கள் பயந்து விட்டார்கள் ஆகவே 220ரில் போனேன் மேலும் பென்ஸ் கார் ஸ்பீட் லிமிட் செட்டிங் ஸிஸ்டம் சரி செய்து வைத்து விட்டு சம்மணம் கூட்டி உட்கார்ந்து கொள்ளலாம் நான் அபுதாபியிலேயே இப்படித்தான் ஆனால் 140 க்கு மேல் போகமுடியாது போகலாம் இரண்டு கேமரா அடித்தால் வண்டியை விற்று கட்டுவதற்க்கு சரியாக வரும்
Deleteப்ரியசகி அவர்களுக்கு தங்களது கேள்வி எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது காரணம் தலைப்பு விசயம் யாருமே இதுவரை அதைப்பற்றி சொல்லவில்லையே என வருந்திக்கொண்டு இருந்தேன் தாங்கள் அதனைக்குறித்து கேட்கவும் மனதுக்கு மிவும் சந்சோஷம் விரைவில் ஜென்டில்மேன் இனி ஜெர்மனி என்ற தலைப்பில் பயணக்கட்டுரை எழுதுவேன் கண்டிப்பாகபடிக்கவும் தொடர் வருகைக்கு நன்றி
Deleteஆஹா...அம்மா கிட்ட அடியா...அடி வாரமா...இது..
ReplyDeleteகார் பிரியர் போலும் தாங்கள்...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பகவான்ஜி...இல்லையா அவர். அதனல் தான் இத்தனை மொழிகளிலும்.....அவர் ஒருவரே...அப்படிங்குறீங்க சரிதான்.
தொடர்ந்து அசத்துங்கள்.
தம 11
என்ன செய்வது அம்மாதானே...லேசாக அடித்தாலும் பரவாயில் சட்டீர் அதுதான் வலிக்கிறது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.என் தோழி இனியா,சகோ மது ஆகியோருக்கும் வாழ்த்துகள்....இப்படிதான் இருக்கும்னு நினச்சேன் அப்பவே....அருமை சகோ..தொடருங்கள்...
ReplyDeleteஇப்படி இருக்கும்னு எப்ப நினைச்சீங்க ?
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteஇன்றும் புதிருக்கு தீர்வான பதிலில்லையா?
அடக்கடவுளே! மறுபடியும் அடி வாங்கும் படலமா? என்னதான் பெற்றவர்களும், பாடம் சொல்லித்தரும் குருவுந்தானே, அடிக்கிறார்கள் என்றாலும், அரைமணிக்கு ஓர்தரம் அடிவாங்கும் அந்த சிறுவன் உண்மையிலேயே பாவந்தான்!
நாளையாவது யாரிடமும்,அடி வாங்காமல், கணபதி, முருகனை எப்படி அழைப்பதென்று, உலகத்திற்கு உணர்த்தி விடுங்கள்.
அதிர்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியவில்லை! ஆனாலும், "என்னையும்" சிறந்த பதிவர்களுடன் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஒவ்வொருவரையும். அறிமுகப்படுத்திய பாங்கை ரசித்தேன்.
என்னுடன் அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். (என்னை விட அனைவரும் சிறந்தவர்கள் ஆகையால், வணக்கம் என்பதுதான் சிறந்தது.)
என் வலைதளம் வந்து என் வலைச்சர அறிமுகத்தை அறியச் செய்த சகோதரர் மது கஸ்தூரி அவர்களுக்கு என் நன்றிகள்.
கருத்துரையை இத்தனை நீளமா? என எண்ண வேண்டாம். படித்துக்கொண்டே பயணச்செலவின்றி தாங்கள் ஒரு முறை பெங்களுரு வந்து விடலாம்! " போகும்போது எப்படி என்ற ஐயம் வேண்டாம்." என் தளத்திலிருந்து மற்றொரு கதையை கையில் எடுத்தால், அந்த செலவையும் இல்லாமல் செய்யும்.!
எப்படி ஐடியா? (விளையாட்டுத்தான் சொன்னேன். தவறெனின் மன்னிக்க.!)
மீண்டும் என்னை அறிமுகபடுத்தியமைக்கு
நன்றிகளுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமா இன்னும்தான் அடி வாங்கி கொண்டு இருக்கிறேன் என்ன செய்வது ? மன்னிப்பு தமிழ், மலையாளம். ஹிந்தி. தெலுகு, கன்னடம், அரபு, ஆங்கிலம் அனைத்து மொழிகளிலும் எனக்கு பிடிக்காத விசயம்
Deleteஇந்த மாதிரி நீண்ட கருத்துரை எனக்கு எப்பவுமே பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு எழுத்துக்காரருக்கும் கண்டிப்பாக இருக்கும், காரணம் பாராட்டும் பொழுதுதான் மேலும் நல்ல சிந்தனைகள் தோன்றும் கண்டிப்பாக உங்களுக்கும் கூடத்தான் இதை தாங்கள் மறுக்க முடியாது அப்படி மறுத்தாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்,
எனக்கும் துளசி தரன் சாருக்கும், சொக்கன் சாருக்கும் உள்ள கருத்துரைகளை கவனித்தீர்களா ? எதுகையும் மோனையும்தான் நான் கோப்ப்பட்டு கோடரியை எடுத்தாலும் கோபப்பட மாட்டார்கள் நான் இன்னும் எழுதுவேன் எனக்கு நேரமில்லை நாளை கில்லர்ஜியிலும் பதிவு போட வேண்டும் ஓகே பை.
உங்களுடைய நியாயமான மகிழ்ச்சிமீது அக்கறைகொண்டு செய்கிறீர்கள் ! வாழ்த்துகள் சகோதரர்
ReplyDeleteஇந்த வாழ்த்தும் கருத்துரைகளும்தான் என்னை இப்படி எழுத வைக்கிறது அதற்க்கு நன்றி
Deleteஆசிரியர் துளசிதரன் தில்லைஅகத்து மற்றும் திருமதி. கீதா,
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன், ஜோக்காளி பகவான்ஜி, தேன்மதுரத் தமிழ் கிரேஸ், கவிஞர் இளமதி – ஆகியோரது வலைப்பதிவுகளை அடிக்கடி படிப்பவன் நான்.
சாமானியன், பெங்களூரு சகோதரி கமலா ஹரிஹரன், ராஜபாட்டை ராஜா – ஆகியோர் தளங்களை சென்று பார்க்கிறேன். நன்றி!
த.ம.12
வருக சென்று வாருங்கள் நண்பரே....
Deleteகலக்கல் பதிவர்கள் அறிமுகம்...
ReplyDeleteதொடருங்கள் அண்ணா..
வருக நண்பரே தொடருங்கள்.நன்றி
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருக நண்பரே...
Deleteஎதிரிக்கு எலிக்கறியா? பாவம் அந்த எதிரி
ReplyDeleteஞானி ஸ்ரீபூவு என்ன அருமையா சொல்றாரு!! :)
ரசனையோடு அருமையாகக் கோர்க்கிறீர்கள் வலைச்சரம். என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ..
வாங்க வேறென்ன ? இன்றைக்கு இருக்கிற விலைவாசியில புலி(ளி)க்கறியா ? போடமுடியும் ? இன்னும் சொல்வாரு வாங்க.... நன்றி.
Deleteமூன்று முடிச்சு - நான் கூட அந்த படத்தை பற்றி எழுதப்போறீங்களோன்னு நினைச்சு வந்து பார்த்தா, இப்படி ஏமாத்திட்டீங்களே. ஆனாலும் ஒரு சின்ன சந்தோஷம். போன பதிவுல தான் சொல்லியிருந்தேன், ரெண்டு கன்னத்திலேயும் அடி வாங்கியிருப்பிங்கன்னு, எப்படி என் வாக்கு பலிச்சிடுச்சு பார்த்தீங்களா!
ReplyDeleteஇன்றைக்கு அறிமுகம் ஆனா நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஹலோ, சினிமாவைப்பற்றி நான் ஏன் ? எழுதணும் இன்னொரு தடவை என்னைப்பார்த்து, சொல்லுங்க ? என்கண்ணைப்பார்த்து சொல்லுங்க ?
Deleteஎன்னை போல சின்ன "புள்ளையை"யும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே... சின்னப்புள்ளையா பார்த்து பூச்சாண்டி புடிச்சுட்டு போயிடாமே....
Deleteடலவாம்புங் இஷா>டலவாம்புங் லிமா...இது எந்தவூர் பாஷைன்னு சொன்னா...புரிந்து கொல்வதற்கு வசதியாக இருக்கும்.
ReplyDeleteபொறுங்க பாஸூ ரெண்டு நாள்தானே கெடக்கு,,,,,
Deleteகமலா ஹரிஹரன் தளம் புதியது! மற்றவர்கள் என்னுடைய தோழமையர்கள்தான்! சிறப்பித்தமைக்கு நன்றி!
ReplyDeleteவருக நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களே.....
Deleteஇன்று அறிமுகமாகியுள்ள தோழி கிரேஸ் மற்றும் ராஜா தவிர மற்றவர்கள் எனக்குப் புதுமுகங்கள்... தொடர ஆரம்பிக்கிறேன்.... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete220 கிலோ மீட்டர் வேகத்தில்..... இந்தியாவில் இது என்று சாத்தியமாகப் போகிறதோ?
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
ஆம் நண்பரே அது நமது மாற்றுச்சிந்தனையில் இருக்கிறது நன்றி
Deleteதொடர்கதை க்கு பேசாமல் தொடர் அறை என்று பேர் வைத்திருக்கலாம்!!
ReplyDelete\\கார் ஓட்டியது ஜெர்மனியில் 220. KM \\ ரோட்டில் வளைவு நெளிவு, ஸ்பீடு பிரேக்கர் எதுவும் இருக்காதா? இது பத்தி பதிவு போடுங்க கிள்ளர்ஜி!! கற்பனை பண்ண கூட கஷ்டமா இருக்கு!!
மீசை சவுதியில்!! மிக சாமர்த்தியம் வேண்டும்!!
ஆஹா, இந்த தலைப்பு எனக்கு தோன்ற வில்லையே... அவுட் ஸைடில் ஸ்பீட் பிரேக்கர் கிடையாது
Deleteசவுதி அல்ல எமிரேட்ஸ் மீசை வளர்பதற்க்கும் சாமர்த்தியம் வேண்டும்.