தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
நேற்று என்ன ? சொன்னேன்... ஆங் எனக்கு குழப்பமாகவே இருந்தது...
(காரணம், வீட்டில் நான் கணபதியை அப்பா என்றும், முருகனை
பெரியப்பா என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்) வாத்தியார், சொன்னதால் நானும் யோசித்துக்கொண்டே... வீட்டிற்கு
வந்தேன் அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தார் எனது அப்பா, வாசலைக்கடந்து
விட்டார் வேகமாக சென்று பெரியப்பா என்று கூப்பிட்டேன் சுற்றும் முற்றும்
பார்த்தார் வானத்தை நோக்கி இருந்த மீசையை முறுக்கி கொண்டே யாருமில்லையே..
யாரைக்கூப்பிட்டே... ? உங்களைத்தான் பெரியப்பா சொன்னதுதான் தாமதம் ’’சட்டீர்’’
எனஒரு சப்தம் எனது செவிட்டில் ஒரு அறை விழுந்தது ராஸ்கல் வெளியே போயிட்டு வந்து தோலை
உறிக்கிறேன் உன்னை... கண்ணத்தை தடவிப்பார்த்தேன் அமுல் பேபி போலிருந்த கண்ணம் ராஜஸ்தான் பூரிபோல உப்பிக்கொண்டு
இருந்தது. அப்பா ஏன் ? அடிச்சாரு ? வந்து தோலை உறிப்பேன்னு வேற சொல்லிட்டு போறாரு...
அப்படியென்றால் நான் மனுஷன் இல்லையா ? ஆட்டுக்குட்டியா ? இதுவும் எனக்கு குழப்பமாகவே இருந்தது காரணம்...
தொடரும்....
வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி.
நினைத்த படியே எல்லாம் நடந்து விடுகிறதா ?
எப்படி ? நடக்கும், அப்படி நடந்தால் ?
எல்லாரும் ஆசைப்படுவது எதுவாகும் ?
வேறென்ன ? ஜனாதிபதிதான் அவர்தானே முதல் மனிதர்.
இங்கே நினைத்ததென்ன ? நடந்ததென்ன ?
காணொளி.
ஷாம்பு
சரித்திரம் தெரியாதவனை தரித்திரம் பிடிக்கும்
இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு.
பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம். இது என்ன ? வாழ்க்கை அப்படியானால் ? மனிதனுக்கும்
மிருகங்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா ? வாழுவரை தெரிந்து வாழ் வாழ்ந்ததும் தெரியவாழ் மனிதனுக்கு இறைவன் பேசும் சக்தியை கொடுத்தது எதனால் ? பேசத்தானே...
எப்படிப்பேசுவாய் ? எதை பேசுவாய் ? தெரிந்தால்தானே ? எதையுமே பேசமுடியும், உமக்கு
சரித்திரம் தெரியவேண்டுமா ? வா நண்பா... கரந்தை மண்ணில் பிறந்த ஆசிரியர் மறப்போம், மன்னிப்போம். என்ற சித்தாந்தம் எனக்கு
தெரிந்திருந்தாலும் அதை என்னுள் புகுத்தி நடைமுறை வாழ்வில் உணர வைத்தவர்
பழகுவதற்க்கு மென்மையானவர் எமது இனிய நண்பர் திரு.கரந்தை
ஜெயக்குமார் அவர்களின் பதிவில் என்னை மிகவும் கவர்ந்தவை
கீழே சொடுக்குக.
லாபிங் இஷா
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ஆம் நாம் வாழப்பிறந்து
விட்ட நாம் வாழும் சூழலுக்கு ஏதாவது ஒரு பணியை மேற்கொண்டே தீரவேண்டும் சிலருக்கு
ஆன்மீகப்பணி, சிலருக்கு ஆராய்ச்சிப்பணி, அதிலும் வரலாற்று விசயங்களை ஆராய்வது
பெருமைக்குறிய விசயமே ஆம் அந்தப் பெருமைக்குறிய பணியை செய்து நமது கண்களுக்கும்
விருந்து படைக்கும் எமது
இனிய நண்பர் திரு. முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்கள்
இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக
லாபிங் டலவா
நல்லதைச் சொன்னால் தவறா ? எனகோபப்படும் இவர் எனக்கு
பணியில் தான் ஓய்வே தவிற எனது எண்ணங்களில் அல்ல ! என கொந்தளிக்கிறார்
யார்மீது கோபம் ? சமூகத்தின் மீதுதான் காரணம் தவறை சுட்டிக்காட்டிய தன்னையே
குற்றவாளி என்றால் ? யாருக்குத்தான் கோபம் வராது அப்படி என்னதான் நடந்தது ? இதோ சொல்கிறார், எனது
எண்ணங்கள் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
லாபிங் தாட்லோ
சுவையை கொடுத்த நாக்குக்கு
சுதந்திரத்தை கொடு அதன் போக்குக்கு இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு இன்றைய அவசர வாழ்க்கையில் உணவு ஒன்றுதான் மனித மனங்களுக்கு
6தலை தந்து கொண்டு இருக்கிறது, பணம் நிறைய பேரிடம்
இருக்கிறது ஆனால் ? அதில் எல்லோருக்கும் நல்ல உணவு கிடைக்கிறதா ? அதற்க்கும் கொடுப்பினை வேண்டும், சுவையான உணவு செய்யும்
பழக்கம் எல்லோருக்குமே வராது அதுவும் கைவந்த கலை இவரின் பலவகையான உணவுகளை நானும்
அபுதாபியில் குடும்பசகிதம் வாழும் எனது நண்பர்கள் வீட்டில் செய்து பார்க்கச்
சொல்லி பலரும் செய்து பார்த்து உண்டு களித்து சந்தோஷப்பட்டு இருக்கிறார்கள் (உண்மையான காரணம் எனக்கும் இரண்டு ஓசி கிடைத்து விடும்) இவர்
கவிதை எழுதுவதிலும் வல்லவி இவரின் கவிதையை படித்ததும் இவர்மீது மரியாதை கூடிக்கூடி
போனது உண்மையே.... எஜிப்த் நாட்டில் வாழும் நமது சகோதரி தி கிரேட் தேவகோட்டை தந்த
தெய்வமகள் எமது இனிய நண்பி திருமதி. ஆர்.
உமையாள் காயத்ரி அவர்கள் கவிதைப்போட்டிக்கு
அனுப்பிய இவரது கவிதைகளை காண கீழே சொடுக்குக.
லாபிங் அபாட்
நம்மளை மொட்டையடிக்க
வர்றவனை சொட்டையில அடி இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. மனுஷனை மனுஷன் எப்படியெல்லாம் ஏமாத்துறான் உங்களுக்குத்
தெரியும் ஆனால் ? இப்படியெல்லாம் ஏமாத்துன ஆளுகளை தெரியுமா ? நான்
திருப்பதிக்கு போறேன் உங்கள் வேண்டுதல் இருந்தால், கொடுங்கள் அதை உங்கள் சார்பில்
ஏழுமலையானிடம் சேர்த்து விடுகிறேன் என்று உங்களிடம் யாராவது சொன்னால் ? நீங்கள்
என்ன சொல்வீர்கள் ? ஏமாற்றுவதும் ஒரு கலைதானே... நண்பரின் மாமா என்ன சொன்னார் ? என்பதை
நினைத்துப் பார்க்கிறேன் நானாக இருந்தால் ? கையில உள்ளதையெல்லாம்
கொடுத்து விட்டு தேமேனு நிற்பேன், நீங்களும் நினைத்து பார்க்க வேண்டுமா ? இவரின்
எழுத்தில் வார்த்தைகள் நடனமாடும் ஆம் எனது இனிய நண்பர் திரு. நடனசபாபதி
அவர்களின் பதிவை படிக்க கீழே சொடுக்குக.
லாபிங் லிமா
வாத்தியாருடைய சுத்தியலடி,
புத்தி படிக்க சாத்தியமடி இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு தீபாவளி என்றாலே
குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான் காரணம் நிறைய பலகாரங்கள், புதிய உடை கிடைக்கும்,
முக்கிய காரணம் வெடி வெடிப்பது இப்படி வாழும் சூழலில் வெடிப்போடக்கூடாது
எனச்சொன்னால் ? குழந்தைகளுக்கு
எப்படியிருக்கும் ? இப்படிச்சொன்னது ? யார் ? தெரியவேண்டுமா ? வாருங்கள் வாத்தியார்
அவர்களின் தளத்திற்க்கு எமது இனிய வாத்தியார் திரு. பாலகணேஷ் அவர்கள் பதிவில்
கிடைக்கும் விடை கீழே சொடுக்குவீராக...
லாபிங் அனிம்
பொறாமைப்படாதே போட்டிபோடு
என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு போட்டி மகள் என்றால் ? பொறாமை அம்மையாவாள், இது
ஞானி ஸ்ரீபூவு வாக்கு. மனிதனுக்கு
பொறாமை என்ற குணமில்லை என்றால் ? வாழ்வில் உயரவேண்டும் என்ற சிந்தை வராது என்றே கருதுகின்றேன்... நானும்
பொறாமைப்பட்டேன் பெருந்தகை ஐயா திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மீது ஆனால் ?
வடிவேலு பாணியில் சொன்னால் ?
காரணம் அதற்க்கு பெரிய்ய்ய்ய்ய படிப்பெல்லாம்
படிக்க வேண்டுமாமே... நம்மலோட படிப்புக்கு ? ? ? என்னத்தச்சொல்ல... இருந்தாலும்
பொறாமை பட்டது பட்டோம் பெரிய மனுஷனோடு பொறாமைப்பட்டோமே... அதனால்தானே இந்த
நிலையிலாவது உயர்ந்திருக்கிறோம் இதுவே எனக்கு பொறாமையை பெருமை படுத்தியது சரி நமது
பதிவர் யாரைப்பார்த்து பொறாமை பட்டார் தெரியுமா ?
இதைப்படித்து விட்டு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது
இப்படியும்கூட பொறாமை படலாமா ? என... அன்றோடு நான் கடையில் டீ குடிப்பதை நிறுத்தி விட்டேன், நீங்களும்
ஆச்சர்யப்பட்டு பொறாமைப்பட்டாலும் படுவீர்கள். ஆனாலும் இதை படித்தபோது... மனதுக்கு
மகிழ்வாக நிறைவாகவே இருக்கிறது என்பதும் 100க்கு100
உண்மையே அவர்தான் சகோதரி இனிய
நண்பி திருமதி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களின் பதிவை படிக்க கீழே சொடுக்குக.
லாபிங் பிதோ
தமிழில் பேசு அதில் தமிழ் மணம் வீசு இது ஞானி ஸ்ரீபூவு
வாக்கு. எல்லோரும் தமிழ்
எழுதுகிறார்கள், தமிழில் பேசுகிறார்கள் எல்லாமே சரியா ? சரி
பேசியது பேசியதாக இருக்கட்டும், எழுதியது எழுதியதாக இருக்கட்டும் தவறை இனியெனும்
திருத்திக்கொள்ள வேண்டியவர்கள் இவரின் வலைத்தளத்தை தொடருங்கள் அழகான தமிழில்
அற்புதமான தமிழ் வார்த்தைகளில் எழுதுகிறார், கேட்ட உதவியை உடன் செய்து கொடுப்பார்
அதற்காக ஆயிரம், ஐநூறு கேட்டு விடாதீர்கள் சிங்களம் தட்டச்சு எனக்கு தெரியாது ஒரு
வார்த்தை தேவைப்பட்டது கேட்ட அடுத்த நிமிடமே அனுப்பி விட்டார் அவ்வளவு நல்லவரு....
அவர்தான் இலங்கை வேந்தர் எனது இனிய
நண்பர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
அவர்கள் இவரின் கவிதையொன்றை காண கீழே சொடுக்குக.
லாபிங் வாலோ
ரோஜாவைப்பற்றி எவ்வளவோ
கவிதைகள் படித்திருப்போம், எழுதியிருப்போம் இந்தக்கவிஞர் ரோசாவைப்பற்றி
எழுதியிருக்கிறார் நல்ல ஹைக்கூ கவிதைகள் குயில் போல கூவுகிறார் புதியவரே இவரை
ஊக்குவிப்போமே இவரின் ரசனை பசுமையாகவே இருக்கிறது வாருங்கள் நண்பர்களே இவரின்
தளத்திற்க்கு எமது நண்பர் திரு. தர்மலிங்கம் ராஜகோபாலன் அவர்களின் பதிவைக்காண
கீழே சொடுக்குக
இன்றைய கொசுறு
வாங்க சகோதரி ஜலீலா நேற்று கேட்டீங்களே.... அபுதாபி ஷேக்கா ? இதோ கேக்கு கடந்த வருடம் எனது அலுவலகத்தில் கில்லர்ஜி
02.12.2013
யுனிடெட் அரப் எமிரேட்ஸின் 42 வது தேசியதின விழாவில்.
நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி
தேவகோட்டையான்)
வாழ்க ! தமிழ்.
* * * * * * * * * * * * * * * * * *
வித்தியாசமான வகையில் இடுகைகளைப் போட்டுக் கலக்கிட்டு இருக்கீங்களே!!!
ReplyDeleteஇனிய பாராட்டுகளும் மனம்நிறைந்த வாழ்த்துகளும், கில்லர்ஜீ!
வாங்க மேடம் தங்களின் வருகையும் கருத்தும் கண்டு தேன் குடித்த வண்டு போல சிறகின்றி பறக்கிறது.. என்மனம் நன்றி.
Deleteபெரியப்பூ ரகசியத்தை இப்படி இழுக்கறீங்களே... உங்க ஞானி ஸ்ரீபூவு கூட இவ்வளவு இழுக்கமாட்டார் போலிருக்கே...
ReplyDelete" எதிர்பார்ப்பு இல்லையெனில் ஏமாற்றம் கிடையாது ! "
பகவத்கீதை தொடங்கி, ஜென், சூபி என அனைத்து மார்க்கங்களின் செய்தியை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள் !
இனறைய வலைப்பூ அறிமுகங்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுதல்களும் !
தொடருங்கள் ஜீ !
நன்றி
சாமானியன்
வாங்க நண்பரே.. பூவின் வாசம் இழுக்கத்தானே செய்யும் விஸ்தாரமான கருத்துரை தங்களின் விஸ்தாரமான மனதை எக்ஸ்ரே எடுத்து காண்பிக்கிறேதே...
Deleteநன்றி நண்பரே நன்றி
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே
என்றும் வேண்டும் இந்த அன்பு
வருக நண்பரே... நன்றியா ? நான்தானே, சொல்லவேண்டும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு...
Deleteதமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் நண்பரே
ReplyDeleteதம 1
இரட்டை நன்றிகள் நண்பரே..
Deleteஎனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்கின்றேன். இவ்வாறான அறிமுகப்படுத்தல் மென்மேலும் என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போது இதற்கு முன்னர் நான்கு ஆண்டுகளுக்குத் தொடங்கிநான் எழுதிவரும் சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவினை http://ponnibuddha.blogspot.com/ என்ற இணைப்பில் காண உங்களை அன்போடு அழைக்கிறேன். இன்றைய அறிமுகங்களில் பெரும்பாலோனோர் அறிமுகமானவர்களே. நன்றி.
ReplyDeleteமுனைவரே... வருக..
Delete//இவ்வாறான அறிமுகப்படுத்தல் மென்மேலும் என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு//
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நியாயமா ? என்னால் தாங்கள் எழுதுகிறீர்கள் என்று தங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தால்தானே நானே எழுதுகிறேன் சொன்னது சரிதான் ஆனால் உல்டாவாக சொல்லி விட்டீர்கள், வருகைக்கு நன்றி நிச்சயம் தளம் செல்கிறேன் எனது வேலைப்பளு குறையட்டும்...
அன்று பேசும் போது இப்படி அசத்துவீர்கள் என்று எதிர்ப்பார்க்கவேயில்லை...
ReplyDeleteஞானி ஸ்ரீபூவு வாக்குகளுடன் அறிமுகங்கள் அட்டகாசம் ஜி... பாராட்டுக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க, ஜி... எதிர்பாராததெல்லாம் நடப்பதுதானே வாழ்க்கை நன்றி தொடர் வருகைக்கு, எனது எழுத்து சிறப்பாக இருந்தால் ? அது தங்களைப் போற்றவர்களின் வரவே காரணம்.
Deleteஎன்னையும் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!
ReplyDeleteவருக நண்பரே... தொடர்ந்தால் சந்தோஷமே... வலைச்சரத்தை மட்டுமல்ல கில்லர்ஜியையும்....
Deleteவாழ்த்துக்கள்!
Deleteவண்ணமிகு வலைச் சரத்தில்
இன்று!
வாசமிகு பூ வானீர்!
அருந்தேன் அமுதமென அற்புத
படைப்பினை படைத்தமைக்கு!
வாழ்த்தும் நெஞ்சம்;
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteமுதலில் ஆரம்பித்த புதிருக்கு விடை காணலாமென்று விரைவாக வந்தேன். ஏமாற்றந்தான்!. சரி! பொறுமை காக்கிறேன். (நாளையாவது விடைதெரியுமா?)
அனைத்து அறிமுகங்களும் தங்களின் தெளிவான நடையில் அருமை. பாராட்டுடன் வாழ்த்துக்கள்.
தினமும் (வித்தியாசமான) வெற்றியோடு உலா வர வாழ்த்துகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருக, சகோதரி புதிருக்கான விடை காண வந்தேன் அப்படியானால் ? எனது பதிவுகளைக் காணவரவில்லை அப்படித்தானே அர்த்தம்.
Deleteதினமும் (வித்தியாசமான) வெற்றியோடு உலா வர....
இப்படிச்சொல்லி சொல்லித்தானே... நான் இப்படியாயிட்டேன். பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி,
என்னுடைய டாஸ்போர்ட்டில் வலைச்சரதின் பதிவு வரவில்லை. சரி இன்று இன்னும் இடுகை இடவில்லை என நினைத்தேன்.
ReplyDeleteஆனால் டா.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் என்னையும் அறிமுகம் செய்து இருப்பதாய் அறிவித்து இருந்ததை பார்த்து இப்பக்கம் வந்தேன். தெரியப் படுத்திய ஐயாவுக்கு நன்றி.
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.
நாளை தான் தெரியுமா....காத்திருக்கிறோம்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தம 3
தங்கள் பாணியில் ஆசிரியப்பணி அசத்தலாய் தினமும்..வாழ்த்துக்கள்.
வருக, வருக, இன்று இன்னும் இடுகை இடவில்லை என நினைத்தீர்களா ? நானா ? Punctuality இதை இந்திய மண்ணில் தவழத்தொடங்திய ஆறு மாதத்திலிருந்தே.... கடைப்பிடிப்பவன் நான், சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டுமென நினைப்பவன் ஒவ்வொரு தினமும் கண்டிப்பாக என்இனிய இந்திய நேரப்படி சரியாக அதிகாலை 12.01 க்கு வெளியாகி விடும் தொடர் வருகைக்கு நன்றி. தங்களுக்கு தகவல் கொடுத்த முனைவர் அவர்களுக்கும் நன்றி.
Deleteமன்னிக்க, என்னால் தகவல் கொடுக்க நேரமில்லை நண்பர்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ளவும்...
நாளைதான் தெரியுமா ? அப்படியானால் ? வருவது அதற்க்குத்தானோ....
வணக்கம்!
ReplyDeleteவலைச்சரத்தில் இன்று
ஆசையுடன் கில்லரிஜியின் மீசையை
தொட்டவர்களுக்கும் நாளை தொட இருப்பவர்களுக்கும்,
அனது இனிய வாழ்த்துக்கள்!
நன்றி!
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
வருக யாதவன் நம்பியே... தங்களை நம்பியே கோடரியின் உதவியோடு வலைச்சரத்தில் வலையை வீசுகிறேன் என்மீசையை தொட்டவர்களை மட்டுமல்ல, கண்டவர்களையும் வெட்டுகி.... Sorry பறிக்கிறேன்.
Delete
ReplyDeleteஎனது இனிய வாழ்த்துக்கள்!
நன்றி!
புதுவை வேலு
வாழ்த்தியமைக்கு நன்றி நண்பா....
Deleteஜனரஞ்சகமான முறையில் இதோ இன்றைய வலைச்சரம் மிக அழகாய் ஜொலிக்கிறது ஜீ.
ReplyDeleteகணபதியை அப்பா என்றும் முருகனை பெரியப்பா என்றும் அழைத்து பழக்கப்பட்ட பிள்ளையை என்ன இருந்தாலும் வாத்தியார் இந்த அளவுக்கு குழப்பி இருந்திருக்கவேண்டாம்.. அடித்துமிருந்திருக்கவேண்டாம். பிள்ளை குழம்பாமல் ஸ்ட்ரெயிக்டாக போய் கணபதியை பெரியப்பா என்று அழைத்ததும் பொறி கலங்கும் அளவுக்கு அடித்துவிட்டாரே.. அப்பாவை பெரியப்பா என்று அழைத்தால் அடிக்காமல் என்ன செய்வாராம். இவ்ளவுக்கும் காரணமான அந்த வாத்தியாரை என்ன செய்யலாம்?? தோப்புக்கரணம் போட வெச்சுரலாமா :)
ஒவ்வொரு அறிமுகங்களையும் அறிமுகப்படுத்தும்போது அவர்களின் எழுத்துகளை சிலாகித்து எழுதிய நடை மிகவும் ரசிக்க வைத்தது ஜீ.
இன்றைய அறிமுகங்கள் பெரும்பாலோர் நான் அறிந்த என் நட்பு உள்ளங்களே என்பதால் எனக்கு மிக மிக சந்தோஷம்பா..
உண்மையே.. எதிர்ப்பார்ப்புகள் இல்லா இடத்தில் ஏமாற்றங்கள் இருப்பதில்லை.. எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இடத்திலோ ஏமாற்றத்தை தவிர்க்க இயலுவதில்லை...
அருமையான ரசனையான இரண்டாம் நாள் ஞானி அவர்களின் வாக்குகளோடு இன்றைய அறிமுகப்படலம் மிக அட்டகாசம் ஜீ.
இன்னமும் சஸ்பென்ஸ் தொடர்கிறதே... எப்படியும் வார ஏழாவது நாள் சொல்லித்தானே ஆகணும்.. அதுவரை தானே காத்திருப்பு.. ஓகே ஓகே.. :)
ரசனையான இரண்டாம் நாளில் எல்லோருக்கும் கேக் விருந்தா.. அசத்துங்கள்...
தம 4
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் நண்பர் ஜீ அவர்களுக்கும்...
ஆஹா, ஆஹா.. இதுவல்லவோ... கருத்துரை.. ஆமாவுல, ‘’அப்பா’’வியை இப்படியா ? அறைவது அதுவும் ‘’சட்டீர்’’ என,,, மனம் நிறைந்த பாராட்டிற்க்கு நன்றிகள்.
Delete//இன்னமும் சஸ்பென்ஸ் தொடர்கிறதே... எப்படியும் வார ஏழாவது நாள் சொல்லித்தானே//
அதுசரி ஏன் ? கதையை தொடரும் போட்டு.... இப்படியே... வலைச்சர நண்பரைகளை வலையில் கட்டி அப்படியே... கில்லர்ஜிக்கு கொண்டு போய் ஒரு அஞ்சு வருசத்தை ஓட்ட முடியாதா ? டி.வியில சீரியல்ல அழவைக்கிறான் அதை மட்டும் 15 வருசம் ஓட்டுனாலும் கிச்சன்ல உள்ளியை உறிச்சுக்கிட்டே அழுவுறீங்க நான் ஏதோ.. லைட்டா நாகர்கோயில் சுடலைமுத்து மகன் கிருஷ்ணன் மாதிரி சிரிக்கவைக்க முயற்சிக்கிறேன் இதுக்கு மட்டும் பொறுமை இல்லையோ... ஆத்தாடி பயமா இருக்கு ரொம்ப எழுதுனா சண்டைக்கு வந்துருவீங்க.....
தங்கச்சி மைதிலிக்கு ஒரு படம் வெச்சீங்களே... அடாடா... அவளைப் போலவே அழகு! இங்க வந்து நான் என் தளத்தைப் பத்தி உங்கள் வரிகள்ல படிச்சு சந்தோஷப்படறதுக்கு முந்தியே ஜம்புலிங்கம் ஐயா கருத்திட்டு அதை இரட்டிப்பாக்கிட்டார். அவருக்கு ஸ்பெஷல் நன்றி. என்னையும் மனசுல வெச்சிருக்கற உமக்கு அழுத்தமான கை குலுக்கல். அதென்ன... ஏதோ கெடா வெட்டறவரு மாதிரி கத்தியப் புடிச்சிட்டிருக்கீரு,,,? அது கேக்கு தானய்யா... ஹி... ஹி.. ஹி...
ReplyDeleteவாங்க, வாத்தியாரே... மனசுல வச்சுருக்கேனா ? பின்னே, //குருவை மறந்த குசும்பனுக்கு குஷ்பு போல மனைவி கிடைப்பாள்// அப்படினு ஞானி ஸ்ரீபூவு சொல்லியிருக்காரே எனக்கு அப்படி நிலை வந்துடக்கூடாதே,,, அதனாலதான் தங்களை எனது இதயச்சிறையில் வைத்துருக்கிறேன். ஏன்னா, நாமெல்லாம் கண்ணகி வம்சத்துல வந்தவுங்கள்ல... வாத்தியாரே... தகவல்துறை அமைச்சராக பணிசெய்த முனைவர் அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி. வெட்டறவரு மாதிரி கத்தியப் புடிச்சிருக்கேனா ? நம்மதான் கோடரி புடிக்கிற பார்ட்டியாச்சே வாத்தியாரே..
Deleteஅசத்தலான அறிமுங்கள். கேக் எங்களுக்கா ? படம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ... வந்தோர்க்கு உபசரிப்பதுதானே தமிழரின் பெருமை இருக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள்.
Deleteவெகு சுவையான எழுத்து நடை.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு என் வாழ்த்துகள்; உங்களுக்கு... வாழ்த்துடன் பாராட்டுகளும்.
வருக, வருக, எனது ''பசி''யறிந்து வந்து உணவளித்த (வாழ்த்தும், பாராட்டும்) பரமசிவமே உமக்கும் நன்றி.
Deleteஅறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் முதலில்.
ReplyDeleteஇன்னும் சஸ்பென்ஸாஆஆ.7ம்நாளில் என்றாலும் சொல்வீங்கதானே.காணொளி அருமை.எதிர்பார்ப்பு இருப்பதால்தான் ஏமாற்றம். உண்மைதான். ஞானிஸ்ரீபு அவர்களின் வார்த்தைகள் அருமை. வித்தியானமாக உங்கள் ஆசிரியப்பணி வாழ்த்துக்கள் சகோ.
வருக, சகோ எமது பதிவையும் பிரியப்பட்டு சகித்துக்கொண்டு வாழ்த்தியமைக்கு நன்றி 7-ஆம்நாளில்..... இதற்கான பதிலை தயவு செய்து மேலே மஞ்சுபாஷிணி அவர்களுக்கு கொடுத்துள்ளேன் படித்துக்கொள்ளவும்
DeleteSuper Anna !
ReplyDelete’’செல்’’போண் மூலம் ஸூப்பர் அண்ணா எனச்’’சொல்’’லிய தங்களுக்கு நன்றி.
Deleteவாழ்க நற்றமிழ்...வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteவருக, சகோதரரே நன்றி.
Deleteநண்பரே ! ஸ்ரீ பூவுக்கும் சொல்லிடுங்க! லேட் அட்டெண்டன்ஸ் க்கு உள்ளே விடமாட்டேன்னு சொல்லிடாதீங்க....ரோட்டுல ட்ராஃபிக் ஜாம்னு சொல்றது மாதிரி.....காலைலருந்து கமென்ட் போட்டு போட்டு....ஃப்ளாகர் ஜாம் ஆகி,உள்ள விடமாட்டேன்னிடுச்சு......இப்ப போகும்னு நினைக்கறோம்...போகலைனா...என்ன செய்ய...ம்ம்
ReplyDeleteபொறாமைப்படலைனா அது நல்ல பொறாமையா இருந்தா நல்லதுதானே ஜி.
சரி சரி...நம்ம நண்பர்கள் எல்லாரையும் சூப்பரா அறிமுகப்படுத்திட்டீங்க! என்ன கேக்குதானே அது....என்னப்பா இது கேக் வெட்டற மாதிரில்லாம பயமுறுத்தரீங்களே நண்பரே! பதிவுகளை மிகவும் ரசிக்கின்றோம் ஜி!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! கலக்கும் உங்களுக்கும்தான். பாராட்டுக்கள்! ஜி!
வாங்க, வாங்க, ஏதோ சொல்றீக... பொய் சொல்லமாட்டீக.. அப்படீனு நம்பச்சொல்றீக...
Deleteகேக் வெட்டி உங்களுக்கு கொடுக்கத்தானே... வருகை, தந்து வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே.
உங்கள் அறிமுக நடை அருமை நண்பரே! பதிவர் நண்பர்களை வர்ணித்தமைக்கு...
ReplyDeleteஎன்னோட நடை அருமையா ? நான் நடக்கும்போது நீங்க எப்ப, பார்த்தீக ? எப்பூடி ? நாங்களும் கேள்வி கேட்போம்ல...
Deleteயப்பா உண்மையத்தான் சொல்லுறோம்....ம்ம்ம் என்ன செய்ய உலகம் கலி காலம்னு தெரியுது...உண்மைய சொன்னா கூட நம்பமாட்டேன்றாய்ங்க....பாருங்க அப்ப அந்த முதல் வீடியோ கிடைக்கல...இப்ப்த்தான் கிடைச்சுச்சு....கோச்சுக்கு பதிலா லாரிய கோச்சாக்கிட்டய்ங்க போல...ஒரு வேள லாரியவும் ட்ரான்ஸ்போர்ட் பண்ணினா மாதிரி இருக்கும் அதுல மக்கள ஏறி ட்ராவல் பண்ணா மாதிரியும் இருக்கும்னு நினைச்சு ஒரு வெள்ளோட்டமா....
Deleteஹை நண்பரே நீங்க நடப்பீங்களா...பறப்பீங்கனுல நினைச்சோம்....
Deleteஅப்பாவி மாட்டினால் லொள்ளு பண்ண ஆரம்பிச்சுடுவீங்களே... ?
Deleteஅருமையாக தொகுப்பினை வழங்குகின்றீர்கள்..
ReplyDeleteஅன்பின் பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
காலையில் இருந்து இணையதள இணைப்பு சரியாக இல்லை.. அது தான் தாமதம்!..
உண்மையில் உங்களுக்குத் தான் கேக் தரவேண்டும்!..
அதுசரி.. கோடாலியும் கையுமாக இருப்பீர்கள் என்று நினைத்தால் - !?
( கேக் வெட்டத்தானே அது!...)
அன்பின் நண்பரே... வருக, தங்களைக் காணவில்லையே என கணினியில் கண்ணை வைத்திருந்தேன் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ‘’கேக்’’ விருந்தோமலுக்காக வைத்திருந்தேன்
Delete‘’கேக்’’ வெட்ட கத்தி எடுப்பதே வழக்கம், பூவைப்பறிக்கவே கோடரி.
நீங்களே..சொல்லிவிட்டீர்கள் எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றம் இருக்காது என்று அதனால.... பெரியப்பு..சித்தப்பு பற்றி சட்டுபுட்டுன்னு சொல்லிடுங்க...
ReplyDeleteதோழர் சொல்ல சொல்றீக,,,,,, சரி சொல்லிடுறேன். சட்டு புட்டு போதுமா ?
Deleteஇன்று அறிமுகமாகியுள்ளப் பதிவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். நான் படிக்கும் பதிவர்கள் பற்றி வலைச்சரத்தில் படிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் சஸ்பென்ஸ் விடுபடவடுவதாயில்லை. நானும் யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் தோன்றவில்லை. என்றைக்குத் தான் விடை தெரியுமோ.
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
வாருங்கள் அம்மா தங்களின் வருகைக்கு நன்றி. நேற்றைய கேள்விக்கு பதில் கொடுத்து இருந்தேனே.... படித்தீர்களா ? சஸ்பென்ஸ்...... ப்ளீஸ் ஜஸ்ட் வெயிட்.
Deleteநானோ சின்னப்பொடியன்
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தீர்
நன்று
படைப்பாளர்களுக்கு உதவுவதும்
தமிழ் பேணுவோருக்கு
வலைத்தளம் பேண உதவுவதும்
என்பணி
அறிமுகம் செய்த தங்களால்
பலர் நன்மை அடைய உதவுவேன்
மிக்க நன்றி!
சின்னப்பொடியனாயிட்டீங்களா ? அடடே... நான் கைக்குழந்தை தானே ஹி ஹி ஹி வருகைக்கு நன்றி நண்பரே,,,,
Deleteகேக் சாப்பிட கிடைக்காட்டியும் பார்க்க அருமை ,நம்ம நாட்டில் இப்படி கேக் செய்தால் தேசியக் கோடியை அவமதித்து விட்டதாக கொந்தளித்து விடுவார்கள் :)
ReplyDeleteத ம 9
வருக பகவான்ஜி உண்மைதானே தேசியக்கொடிக்கென்று ஒரரு மரியாதை வேண்டுமே... இவங்கே... முட்டாப்பயல்க....
Deleteஎன்னடா ரொம்ப நாள் கழிச்சு நிறையபேர் தேநீர் குடித்திருக்கிறார்களே என்று பார்த்தேன். இப்போ தான் விஷயம் தெரிந்தது. அந்த லாபிங் அனிம் யாருன்னு google ல தேடுனேன். புள்ளைக்க கெக்கே பிக்கேன்னு என்னை மாதிரியே சிரிச்ச்கிகிட்டு இருந்துச்சுக:)))) அறிமுகத்திற்கு நன்றி அண்ணா!
ReplyDeleteவாங்க, வாங்க அவரு யாரு ? லாபிங் அனிம் K.K. P.K. னு சிரிச்சாங்களா ?
Deleteஎதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றம் இருக்காது----காட்சி அற்புதம்! நல்லவர்கள் அறிமுகம் அவர்களின் அழகோடு....வாழ்த்துகள் சகோதரர். என் மகள் மைதிலியின் அறிமுகம் பெருமிதம்.
ReplyDeleteவாங்க, வாங்க, என்னை ஏமாற்றாம தினம் வாங்க, வாங்க,
Deleteஅப்பா பேரு கணபதி
ReplyDeleteபெரியப்பா பேரு முருகன்...
அப்பாவை பெரியப்பான்னு கூப்பிட்டதும் 'சட்டீர்'ன்னு அடிக்காம கொஞ்சுவாங்களா அண்ணா...
அறிமுகங்கள் எல்லாருமே நான் தொடரும் மரியாதைக்குரிய மனிதர்கள்...
தொடரட்டும் தங்கள் பாணி...
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..
வாங்க, நண்பரே... அறியாத வயசு தெரியாம வாங்கி கட்டிக்கிட்டேன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலைச்சரம் திங்கட் கிழமையில், நீங்கள் அறிமுகம் செய்த ஆசிரியர், கரந்தை ஜெயக்குமார், முனைவர் B. ஜம்புலிங்கம்,
ReplyDeleteஆர். உமையாள் காயத்ரி, அய்யா V.நடனசபாபதி, மின்னல் வரிகள் பாலகணேஷ், மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரங்கன், கவிஞர் யாழ் பாவாணன் – அனைவரது வாசகர்களில் நானும் ஒருவன். சகோதரர் தர்மலிங்கம் ராஜகோபாலன் எனக்கு புதுமுகம். இவர்களோடு என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி
(இங்கு கடந்த 5 நாட்களாக, எங்கள் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் பள்ளங்கள் தோண்டியதில், B.S.N.L நெட்வொர்க் முழுதும் காலி. எனவே எனது மகனிடம் லேப்டேப்பில் இருக்கும் TATA நெட்வொர்க்கை அவ்வப்போது இரவலாக வாங்கி பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதனால் வலைப்பக்கம் அதிகம் வர முடியவில்லை. இதுவே தாமதத்திற்கு காரணம். மன்னிக்கவும்.)
த.ம.10
வருக நண்பரே தங்களை காணவில்லையே என நினைத்துக்கொண்டே இருந்தேன் வருகைக்கும், கருத்துக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..எல்லோரும் என் சகோதர சகோதரிகளாக இருப்பதில் மிகவும் பெருமையே..அதென்ன மொழி..டலாமா....புரியல...வீடியோவும் வரல சகோ...
ReplyDeleteஇதுக்குத்தான் ஒழுங்கா ஆரம்பத்துல இருந்தே வரனும் இடையில வந்து கேட்டால் டீச்சருக்கு இதுகூடவா தெரியாது
Deleteஇங்கே களைகட்டியிருக்கும்போது வரமுடியாமல் போச்சே..ஆனாலும் புதியதாய் கலக்கும் பதிவு சகோ...அச்சோ யோசிக்காம அறஞ்சுட்டாங்களே அப்பா...பெரியப்பா...ஸ்ஹப்பாஆஅ :))
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரும் நான் அறிந்தவர்கள், அனைவருக்கும் வாழ்த்துகள்!
பெரிய கத்தியா வச்சுருக்கீங்களே சகோ?
வருகைக்கு நன்றி ஆமா இங்கே ஆளாளுக்கு அறையுறாங்க யாராவது வந்து கேட்கிறீங்களா ?
Deleteபொதுவா நான் கேக் வெட்டுறதுக்கு கோடரிதான் எடுக்கிறது வழக்கம் இந்த தடவை கத்திதான் கிடைச்சது
தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கணும். ஆனா இது என்னோட தப்பு இல்லை. என்னோட டஷ்போர்ட்ல தங்களோட வலைச்சர பதிவுகள் எதுவமே வரலை. என்னடா நம்ம நண்பர் வேலையை ஒழுங்கா செய்வாரே, ஏன் பதிவை போடலைன்னு மண்டையை குடைஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
ReplyDeleteஇன்னைக்கு சகோதரி உமயாள் வந்து உங்களை அறிமுகப்படுத்தியிருக்காருன்னு சொன்னாங்க. என்னடா, இந்த தேவகோட்டைக்காரர் ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்றாருன்னு யோசிச்சு வலைச்சர தளத்துக்கே நேர வந்து பார்த்தா, ஐயா ரொம்ப சமர்த்தா எல்லா பதிவுகளையும் போட்டிருக்கிங்க.
எங்களைத்தான் குழப்புவீங்கன்னு பார்த்தா, சிவனோட குடும்பத்துலேயே குழப்பத்தை உண்டு பண்ணிடுவீங்க போல.
அப்பா, ஒரு கண்ணத்துல தான் அறைந்தாரா, நான் ரெண்டு கண்ணத்துலேயும் அறைந்திருப்பாருன்னு இல்ல நினைச்சேன்.
அறிமுகம் ஆனா எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நாங்களெல்லாம் சொன்னால், சொன்னபடி நடப்போம் யாராவது வந்து என்னை காப்பாத்தாமலா இருக்கப்போறாங்க.... பொருத்திருந்து பாருங்க....
Deleteசெவனேனு இருந்தவனை வலைப்பதிவு ஆசிரியராக்கினால் சிவனை மட்டுமல்ல எவனையும் குழப்புவோம்.
நான் தொடரும் சிறந்த பதிவர்களை இன்றும் அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு நன்றி! என்னுடைய டேஷ் போர்டில் வலைச்சரப்பதிவுகள் வரவில்லை! இதனால் உடனுக்குடன் படித்து கருத்திட முடியவில்லை! இன்று உங்கள் இணைப்பை பார்த்து வந்தேன்!
ReplyDeleteவருக நண்பரே தங்களை தினம் எதிர்பார்த்தேன்.... நன்றி
Deleteவித்தியாசமாய் உங்கள் பணியைச் செய்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள்... எதிர்ப்பார்ப்பில்லையென்றால் ஏமாற்றமில்லை... என்னன்னு பார்த்துட்டே இருந்தேன் எனக்குப் புரியவேயில்லை....
ReplyDeleteவருக தாங்கள் ரயிலில் லாரி வருமென எதிர்பார்த்தீர்களா ? இல்லையே அதைத்தான் வாழ்க்கையிலும் புகுத்தினேன்.
Deleteநன்றி
இருவர் தவிர மற்றவர்கள் தெரிந்தவர்கள். சற்றே தாமதமாய் வருகிறேன்....
ReplyDeleteவருக நண்பரே நன்றி
Delete\\நினைத்த படியே எல்லாம் நடந்து விடுகிறதா ?\\ செம டிவிஸ்டு!!
ReplyDeleteதொடர் வருகைக்கும், நன்றி நண்பரே...
Deleteபிள்ளையாரப்பனைப் பெரியப்பா என்று உங்கள் ஆசிரியர் கூப்பிடச் சொன்னதே மிகை! இதில், உங்கள் அப்பா பெயர் கணபதி என்றிருப்பதால் நீங்கள் அவரையே பெரியப்பா என்பதா? பின்னே ஏன் விட மாட்டார்கள் அறை?
ReplyDeleteவாங்க, இது தெரிஞ்சிருந்தால் ? நான் ஏன் ? வாங்குறேன் அறை...
Delete