Thursday, January 29, 2015

வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'

மங்கையராய்ப் பிறப்பதற்கு 
மாபாவம் செய்திருக்க வேண்டும்!


பெண்சிசுக்கொலை, பெண்கள் & குழந்தைகள் வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு போன்ற கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் இக்காலத்தில் மங்கையராய்ப் பிறப்பதற்கு, மாதவமா செய்திருக்க வேண்டும்?

தாய்மையைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இந்நாட்டில், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை செய்தி, இடம் பெறாத நாளேடுகளே இல்லை என்றாகி விட்டது இன்றைக்கு. 


இக்கொடுமை தற்போது 792 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பெண்ணியம் இணைய இதழின் கட்டுரை சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  


பாலியல் கொடுமைகள் முன்பும் நடந்து கொண்டு தானிருந்தது.  ஆனால் அவை வெளிச்சத்துக்கு வரவில்லை. இப்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக, அதிகளவில் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன; என்று சிலர் வாதிட்டாலும், இன்றுங்கூட எல்லாக் குற்றங்களும் பதிவு செய்யப்படுவதில்லை என்பது தான் உண்மை.  


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலான பெண்கள்,  நம் சமூகத்தின் கேவலமான பார்வைக்கும், புறக்கணிப்புக்கும் அஞ்சி தமக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து விடுகின்றனர்.


மேலும் குடும்பத்துக்கு ஏற்படும் அவமானம், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாதல், போதுமான வசதியின்மை, சட்ட நிவாரணம் குறித்து விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களாலும், பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.    


இதனால் தவறு செய்தவர்கள் தண்டனை ஏதுமின்றிச் சுலபமாகத் தப்பவும், மென்மேலும் இது போன்ற குற்றங்களைத் துணிந்து செய்யவும் வழி ஏற்படுகின்றது. 


பதிவு செய்யப்படும் குற்றங்களே இத்தனை சதவீதம் என்றால் பதிவு செய்யப்படாத குற்றங்கள் எத்தனை சதவீதம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.


பாலியல் கொடுமை தவிர காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், இப்போது அதிகரித்து வருகிறது. 

ஆசிட் வீச்சு, பாலியல் வன்முறையை விட மகளிருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிட் அரக்கர்கள் என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருக்கிறார் இமானுவேல் நூறு பூக்கள் மலரட்டும் என்ற தமது வலைப்பூவில். 

தஞ்சையம்பதி மகளிர் தினம் என்ற கட்டுரையில் உலகில் 2014 ஆம் ஆண்டின் மிகவும் தைரியமான பெண் என்ற
விருதை   லஷ்மி என்பவர் மேக்கேல் ஒபாமாவிடம் வாங்கிய நிகழ்வு குறித்து எழுதியிருக்கிறார்.   


அச்சமயம் லஷ்மி கூறிய சொற்கள், முட்களாய் நம் நெஞ்சைக் கீறுகின்றன:-

“என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்தது என் முகம் மட்டுமல்ல;  என் கனவுகளும் தாம். இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் இதயத்தை அன்பால் நிரப்பப் பாருங்கள்; ஆசிட்டால் அல்ல!”


சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும்.  பெண்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.


இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குரல் கொடுக்க  வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. 


இனி வலைப்பூக்களில் மங்கையருக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகள் பற்றிச் சகபதிவர்கள் எழுதியுள்ள பதிவுகள் உங்கள் பார்வைக்கு:--

“ஒரு உள்ளார்ந்த துயர்
கேவிக்கொண்டே இருக்கிறது
வன்பாலுறவுள்ளாக்கப்பட்ட பெண்கள்
வாழும் தேசத்தில்…”

என்கிறார் சைக்கிள் வலைப்பூ மிருணா புறம் அகம் கவிதையில்.


அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன என்று மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி பாடசாலையில் விளக்கமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.   

பாலியல் வன்முறை நடைபெறும் போதெல்லாம் குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கொந்தளிக்கிறோம்.  சமூகத்தின் ஒழுக்கக் கேட்டிற்குக் கண்டிப்பாக உளவியல் காரணம் இருக்கிறது; அதிலும் ஆண் பெண் உடல் தொடர்புடைய பிரச்சினை என்றால் அதற்கு முதல் காரணம் உளவியல் தான் என்கிறார் இவர். 


பெண் பலவீனமானவள்; அவளை நல்லபடியாகக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி பண்ணும் நாம், பையன் அவளை விட பலவீனமானவன்; அவனை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று உணராமல் இருந்து விட்டோம்.  எனவே ஆண் குழந்தைகளின் வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற இவரது கருத்து ஏற்புடையதாயிருக்கிறது. 


அதிகளவில் குற்றங்கள் நிகழ என்ன காரணம் என்பதை உளவியல் நோக்கில் ஆராய்ந்து, அதை நிகழாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம்; அவசரமும் கூட.  


பெண்கள் மீதான வன்முறைஎன்ற கட்டுரையில் பெண் எனும் புதுமை கோவை சரளா இக்கொடுமையினைச் சாடியிருக்கிறார்:-


பொறுப்பற்ற பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் தாம்  இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.  வளர்ப்புச் சூழல் சரியாக அமையாத பிள்ளைகள் பின்னாளில் ஒழுக்கமுள்ள குடிமகன்களாக எப்படி விளங்க முடியும்? என்று கேட்கிறார் இவர். 


பெண்கள் வன்முறையிலிருந்து காக்கப்படுவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதம் இல்லாத நிலையில், நவம்பர் 25 ஆம் நாள் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாளாகக் கொண்டாடுவது கேலிக் கூத்தாக அல்லவோ இருக்கிறது?.  .


‘நான் ஒரு பெண், நான் பாதுகாப்பாக இல்லை,’ என்ற கட்டுரையில்  கணவனை விட அதிகம் படித்த மனைவி மற்றவரை விட 1.4 மடங்கும்,  பெண் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பத்தில் 2.44 மடங்கும் அதிகமாக வன்முறையை அனுபவிப்பதாக ஆய்வு ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார் ரஞ்சனி நாராயணன். 


மனைவி அதிகமாக படித்திருந்தாலோ, சம்பாதித்தாலோ வன்முறையால் மட்டுமே அவளை அடக்க முடியும் என்று கணவன் நினைக்கிறானாம்.


 பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும் என்ற கட்டுரையில் ஒரு பெண்ணிற்குத் தன் மேல் விருப்பமிருக்கிறதா இல்லையா என ஆராய்ந்து பார்க்காமல், தனக்குப் பிடித்தால் அவளுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குத் தரங்கெட்ட திரைப்படங்களும் 99% பெண்ணைப் போகப்பொருளாகக் காட்டும் ஊடக விளம்பரங்களும் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார சும்மா வலைப்பூவின் தேனம்மை லெட்சுமணன்.


இவரது பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும் என்ற இன்னொரு பதிவில் குழந்தைகளிடம் உடலின் தொடக்கூடிய பகுதி, தொடக்கூடாத பகுதி என்பதைச் சொல்லி வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் தேனம்மை.  

அண்மை காலங்களில் குழந்தைகளின் மீதும், இத்தகைய பாலியல் வன்முறைகள் பெருகி வருவதை நம்மால் ஜீரணிக்கவே இயலவில்லை
குழந்தைகளைக் குறி வைக்கும் பாலியல் வன்முறை பற்றி விரிவாக அலசுகிறது கவிதைச் சாலை.

இந்தியாவில் சமீபத்து ஆய்வொன்றில் 48 விழுக்காடு பெண் குழந்தைகள் தாங்கள் ஆண்களாய்ப் பிறக்காததற்காக வருத்தப் பட்டிருக்கிறார்கள்.  காரணம் பாலியல் தொல்லைகள்.  . 
பெண்களை மதிப்பதாகவும், துதிப்பதாகவும் இனியும் கதை அளந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை குழந்தைகளைப் பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் அவலம் இந்தியாவில் தான் மிக அதிகம் என்கிறார் கவிதைச்சாலையின் சேவியர். . 


உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? என்ற பதிவில் இன்றைய இக்கட்டான சூழலில் நாம் எப்படிப் பயணப்பட வேண்டும் என்பதை விளக்குவதுடன் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் எழுத்தாளர் சமஸ்.    பெற்றோர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.


ஆடை குலைக்கும் கைகள்
அப்படியே துண்டாக,
நெறிகெட்ட நினைப்பு வந்த
நெஞ்சு இரண்டாக,
தொட்டதும் தலைவெடிக்க,
தொடருமுன்
தொடைகிழிக்க
அவளுக்குப் பலம் தரவோ
அடுக்காக வரம் தரவோ
ஆரு சாமி இருக்கீங்க ..
குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா...
தவழும்போதே
தற்காப்புக் கலை சொல்லவா
..

என்று வேதனையோடு குமுறுகிறார் கவிஞர் சக்தி 'நெஞ்சு இரண்டாக' என்ற தம் கவிதையில்.  


தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி அவர்கள் எழுதியுள்ள  இளங்கன்றே நீ பயமறிவாய்என்ற கவிதை என்னை மிகவும் பாதித்தது.  

குட்டிக்கும் பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்
....
குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....

இளம் கன்றே
  நீ உலகறிவாய் 


ஆற்ற முடியாத வேதனையுடனும், தாங்க முடியாத கோபத்துடனும் ஆறறிவு மிருகங்களைச் சாடி விழிப்புணர்வு ஊட்டும் இக்கவிதை என்னைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. 


இதனை ஏற்கெனவே பலர் படித்திருந்தாலும், இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கவிதையின் சில வரிகளை இங்கே குறிப்பிட்டிருக்கின்றேன்.

பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம் இவற்றைத் துறந்து நம் சமுதாயம் விலங்கு நிலையை எய்துவதற்கு முன், நம் சந்ததியிடம்  இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மென்மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, நம் அனைவர்
கையிலும் உள்ளது.


நாளை சந்திப்போம்!


நன்றியுடன்,
ஞா.கலையரசி  

45 comments:

  1. இன்றைய ஆரம்பமே மிகவும் சூடாக அனல் தெரிப்பதாக உள்ளதே !

    பொறுமையாகப்படித்து விட்டு மீண்டும் வருவேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி கோபு சார்!

      Delete
  2. இன்றைய காலகட்டத்திற்கு.....தேவையான கருத்துக்கள். பலரும் பலவிதமாக கொடுத்துள்ளதை தாங்கள் கொடுத்துள்ளீர்கள்.
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    தங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி காயத்ரி!

      Delete
  3. தாங்கள் கொடுத்துள்ள ஒவ்வொரு செய்திகளும் மிகுந்த வேதனை அளிப்பதாகத்தான் உள்ளன. இவை எல்லாமே மிகவும் உண்மைதான். எதுவுமே மறுப்பதற்கு இல்லை.

    காலம் காலமாக இந்தக் கொடுமைகள் ஆங்காங்கே நடைபெற்று வந்த போதிலும், இன்று பல்வேறு நவீன ஊடகங்களாலும், மிக விரைவான தகவல் தொடர்பு சாதனங்களாலும், உடனுக்குடன் செய்திகள் விரைவாக எல்லோருடைய கவனத்திற்கும் கொண்டுவரப்படுகின்றன. இதற்கெல்லாம் நிரந்தரமானத் தீர்வு தான் தெரியாமல் உள்ளது. மனிதர்களாகப் பார்த்து திருந்தினால் தான் உண்டு.

    இயற்கையாகவே பெண்கள் மட்டுமே எவ்வளவோ தொல்லைகளுக்கு ஆளாகி தவிக்க வேண்டியதாக உள்ளது. சேலை மேல் முள் விழுந்தாலும், முள்ளின் மேல் சேலை விழுந்தாலும், சேதாரம் சேலைக்கு மட்டுமே என இயற்கையே வழிவகுத்துள்ளது, கொடுமையாகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்! இந்தக் கொடுமைகளைப் பற்றி நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கு வலைச்சர வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டென். கருத்துக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  4. //ஆசிட் வீச்சு, பாலியல் வன்முறையை விட மகளிருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் //

    100% உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete
  5. //“என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்தது என் முகம் மட்டுமல்ல; என் கனவுகளும் தாம். இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் இதயத்தை அன்பால் நிரப்பப் பாருங்கள்; ஆசிட்டால் அல்ல!”//

    லஷ்மி கூறிய சொற்கள், முட்களாய் நம் நெஞ்சைக் கீறத்தான் செய்கின்றன. :(

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாம் அந்த வலி தெரியும். வருத்தப்படுவதைத் தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. கருத்துக்கு நன்றி சார்!

      Delete
  6. //பெண் பலவீனமானவள்; அவளை நல்லபடியாகக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி பண்ணும் நாம், பையன் அவளை விட பலவீனமானவன்; அவனை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று உணராமல் இருந்து விட்டோம். //

    இது விஷயங்களில் ஆண்கள்தான் மிகவும் பலவீனமானவர்கள் என்பதே மாபெரும் உண்மை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மனதளவில் பெண்ணை விட ஆண் பலவீனமானவன். அதனால் தான் ஆண்கள் வளர்ப்பிலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும் என்று டாக்டர் ஷாலினி கூறுகிறார். தங்கள் கருத்துக்கு நன்றி சார்!

      Delete
  7. //தனக்குப் பிடித்தால் அவளுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குத் தரங்கெட்ட திரைப்படங்களும் 99% பெண்ணைப் போகப்பொருளாகக் காட்டும் ஊடக விளம்பரங்களும் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார சும்மா வலைப்பூவின் தேனம்மை லெட்சுமணன்.//

    திருமதி தேனம்மை அவர்கள் சொல்வது மிகவும் சரியே / நியாயமே.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்!

      Delete
  8. தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி அவர்கள் எழுதியுள்ள ’இளங்கன்றே நீ பயமறிவாய்’ என்ற கவிதை உங்களை மட்டுமல்ல, நெஞ்சில் நேர்மையுள்ள, உள்ளத்தில் தூய்மையுள்ள எல்லோரையும் பாதிக்கத்தான் செய்யும்.

    மிகச்சிறப்பான பதிவுகளை அடையாளம் காட்டி, ஓர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    இதைப்படிக்கும் யாரேனும் ஒருசிலராவது திருந்தினாலோ, தவறு இழைக்கும் பிறரைத் திருத்தினாலோ அதுவே மாபெரும் வெற்றிதான்.

    நாளை சந்திப்போம்.

    ooooo

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வாசிப்பவர்களில் ஒன்றிரண்டு பேருக்கு மனமாற்றம் ஏற்பட்டாலே அதுவே பெரிய வெற்றி தான். கருத்துக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  9. சிறப்பான பதிவுகளின் அறிமுகங்களுக்கு இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிகவும் நன்றி துளசி!

      Delete
  10. வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே!
    பெண்ணியத்தை பேசும் பதிவுகளை பெருமை படுத்தியது கண்டு
    மிக்க மகிழ்ச்சி!
    இன்றைய மனங்கவர்ந்த பதிவாளர்கள் அனைவருக்கும்
    அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தினமும் வந்து கருத்து சொல்லி ஊக்குவிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி!

      Delete
  11. மிகச் சிறந்த பதிவர்களுடன் என்னையும்
    இணைத்துப் பெருமைப்படுத்தியது மகிழ்வளிக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். என் தலைப்புக்கு மிகவும் பொருத்தமான பதிவு. நான் எழுதும் நீண்ட கட்டுரையை விட கவிதையின் வீச்சு அதிகம். வாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  12. எப்போதுமே ஆண் மனதளவில் பலவீனமானவன் என்பதை பெண்களே அறிவதில்லை... அருமையான பதிவுகளின் தொகுப்பு... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  13. செய்திகளை உணர்வுகளாகத் தொகுத்து பகிர்ந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த ஆதங்கமும்,கோபமும் வரும். நடப்பினை இயல்பாகப் பகிர்ந்தமைக்கு நன்றி. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தினமும் கருத்தளித்து ஆக்கமும் ஊக்கமும் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சார்!

      Delete
  14. சிறப்பான பகிர்வு. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  15. இன்றைய தொகுப்பு -
    சமுதாயத்தில் சீர் கெட்டலையும் சிறுமதியாளர்க்கு சவுக்கடி!..

    பெண்குலத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தம் குரலைப் பதிவு செய்த நல்லோருடன் என்னையும் அடையாளப்படுத்தியமைக்கு நன்றி!..

    பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் நண்பரே....

      Delete
    2. கருத்துக்கு மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  16. சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். சமூக சீர்கேட்டாலும் பெற்றோரின் கவனமின்மையாலுமே இப்படிப்பட்ட மனிதர்கள் உருவாகி உலவுகிறார்கள். இது ஒரு தொடர் சங்கிலி போல் உலகம் முழுமைக்கும் நடந்து வருகிறது. டெல்லி, அடுத்து மும்பை, அடுத்து தமிழகம் என்று சிறு கிராமங்களையும் பெரு நகரங்களையும் விட்டு வைக்காமல் தொடர்கிறது இந்த மனித நேயமற்ற செயல்கள். மானுடப் பிறப்பின் மதிப்புணராமல் ஆறாம் அறிவு இருப்பதை மறந்து இணையாய் நினைப்பவரை அழிக்கக் கூட விரும்பும் இச்செயல் துணுக்குறச் செய்கிறது.

    பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும் என்று கல்விக் கூடங்களில் கற்றுக்கொடுக்கப்பட்டால் இவ்வழிவிலிருந்து பெண்கள் காப்பாற்றப்படக்கூடும். நன்றி கலையரசி என் இடுகைகளையும் குறிப்பிட்டமைக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தேனம்மை!

      Delete
  17. \\பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தற்போது 792 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பெண்ணியம் இணைய இதழின் கட்டுரை சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\\ மிகுந்த அதிர்ச்சி தருகிறது இத்தகவல். 79.2 சதவீதமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் இணைப்பில் சென்று பார்த்தேன். தகவல் உறுதியென்று அறிந்து அதிர்ந்தேன். இன்றைய பதிவில் குறிப்பிட்டுள்ள பல பதிவுகளையும் வாசித்திருக்கிறேன். பெண்குழந்தைகளை அப்படியிருக்கவேண்டும் இப்படியிருக்கவேண்டும் என்று வழிநடத்தும் பல பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகளை முறையாக வழிநடத்தாமையே பல சமூகக் குற்றங்களுக்குக் காரணம் என்னும் மருத்துவர் ஷாலினியின் கருத்து கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான விழிப்புணர்வுப் பதிவுகளின் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete
  18. பற்றியெரியும் பிரச்சினைகள் பற்றிப் பேசியிருக்கிறீர்கள்,சிறப்பான அறிமுகங்களுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சார்! தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  19. சமூக நலனைக்குறித்த சிறப்பான பதிவுகள் அருமை.
    இன்றைய அறிமுகங்களுக்கும் நண்பர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

    தமிழ் மணம் – 3
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
    (நேற்றைய எனது கருத்துரை எங்கே ? போனது)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் தமிழ் மணவாக்குக்கும் நன்றி கில்லர்ஜி சார்!

      Delete
  20. வணக்கம்

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ரூபன் சார்!

      Delete
  21. மிகச்சிறப்பான தொகுப்பு, அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    http://samaiyalattakaasam.blogspot.com/
    ஜலீலாகமால்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலா!

      Delete
  22. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.என் ஆக்கம் தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  23. வணக்கம் கலையரசி.
    பெண்களைப் பற்றிய இந்தப் பதிவில் எனது கட்டுரையும் இடம் பெற்றிருப்பதற்கு நன்றி. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.மற்ற கட்டுரைகளையும் படிக்கிறேன்.

    ReplyDelete