வலைச்சரம் ஐந்தாம் நாள்
நாங்கள் சென்னை அண்ணா நகரில்
இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு தம்பதி. சித்ரா, தாசரதி என்று. சித்ரா நன்றாகப் பாடுவாள். (அவளே சொல்லிக்கொள்ளுவாள்!)
அதனாலேயே தாசரதி பாடுபவர்களைக் கிண்டல் அடிப்பார். ரொம்பவும் உற்சாகமான தம்பதி
அவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சீண்டி
கொள்வது ரசிக்கும்படி இருக்கும். ஒருமுறை
அப்போது மிகவும் பிரபலமாக இருந்த – அவ்வப்போது
சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த பாடகரின் கச்சேரி தூரதர்ஷனில் ஒளிபரப்பானது.
சித்ரா அவரது விசிறி. அவர்கள் வீட்டில் அப்போது தொலைக்காட்சி வந்திருக்கவில்லை.
அதனால் நான் சித்ராவை எங்கள் வீட்டிற்கு வந்து கேட்குமாறு அழைத்திருந்தேன்.
தாசரதியும் கூடவே வந்தார்.
கச்சேரி ஆரம்பித்தது. அந்த காலத்தில்
அவரது கச்சேரி கேட்டிருப்பவர்களுக்கு அவர் பாடும்போது செய்யும் சேட்டைகள் நன்றாகவே
தெரியும். பின்னால் தம்பூரா போடும் பெண்ணைப் பார்த்து வழி...ஸாரி...சிரிப்பார்.
அவர் கூடவே வரும் அவரது மனைவியும் மேடையில் அமர்ந்திருப்பார். அவரைப் பார்த்து
சிரிப்பார். அவரது பாட்டை விட இதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். சித்ராவின் பிள்ளை
சுதர்சன் ரொம்பவும் சின்னவன் – கேள்வி கேட்பதில் மன்னன். கேள்வி
கேட்டு நம்மைத் துளைத்து விடுவான். கச்சேரி ஆரம்பித்தவுடன் இவனது கேள்விக்
கணைகளும் பறக்க ஆரம்பித்தன.
‘ஏன் இந்த மாமா இப்படி திரும்பித்
திரும்பிப் பார்க்கறா?’
சித்ரா அவனை சமாளிக்க தயாராகவே
வந்திருந்தாள். ‘அந்தப் பொண்ணு சரியா தம்பூரி போடறாளா
இல்லையானு பார்க்கத்தான்....’
‘எதுக்கு சிரிக்கணும்?’
‘ப்ரெண்ட்லியா சிரிக்கறா...’
தூரதர்ஷன் காமிராமேனுக்கு அன்று செம
மூடு போலிருக்கு. பாடகரையும் அந்த தம்பூரா பெண்ணையும் மாற்றி மாற்றிக்
காண்பித்துக் கொண்டிருந்தார். பாடகரின் மனைவியையும் அவ்வப்போது காண்பிக்கத்
தவறவில்லை. கச்சேரியை விட இது தாசரதிக்கு பிடித்திருந்தது.
சுதர்சன் விடாமல் கேட்டான்: ‘அந்த மாமா மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? வாய ஏன் இப்படி கோணிக்கறார்?’
சித்ரா பதில் சொல்வதற்குள் குறுக்கே
பாய்ந்தார் தாசரதி. ‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான்
இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா...!’
எங்களுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.
உண்மையிலேயே பாடகரின் மூஞ்சி
சிரிக்கறாரா அழறாரா என்றே தெரியவில்லை. ‘ழ......ழ......’
என்று வேறு வார்த்தைகளை முழுங்கிக்
கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ‘சுப்புடு’ தான் சங்கீத கச்சேரிகளுக்கு விமரிசனம் எழுதுவார். விமரிசனம் என்றால்
அப்படி இப்படி இல்லை. கிழித்து தோரணம் கட்டிவிடுவார். இந்த பாடகர் சுப்புடு வாயால்
நிறைய குட்டு வாங்கியவர். இருவருக்கும் பத்திரிகைகளில் வாக்குவாதமும் நடக்கும்.
சுப்புடு சங்கீதம் மட்டுமில்லை
நாட்டியக் கச்சேரிகளைப் பார்த்தும் விமரிசிப்பார். நம்மூரில் பிறந்து ஹிந்தி
சினிமாவில் கொடி நாட்டிய தாரகை ஒருவரின் நாட்டியத்திற்கு சுப்புடு
எழுதியிருந்தார்: ‘நந்தனாரின் ‘வருகலாமோ?’ பாட்டிற்கு இந்தப் பெண் செய்த அபிநயம் ‘காலிங் பெல்லை அழுத்தி ‘மே ஐ கமின்?’
என்று கேட்பதுபோல இருந்தது’ என்று.
நிற்க. அன்றைக்கு சித்ராவால் கச்சேரியை
அதிகம் ரசிக்க முடியவில்லை.
‘சங்கடமான சங்கீதத்தை விட்டு சமையலைப்
பார்க்கப் போறேன்’ என்று வீட்டிற்குப் போய்விட்டாள், பாவம்!
இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கும்
பதிவர்கள்
முனைவர் இரா. குணசீலன் அவர்களின் குணாதமிழ் வலைத்தளம்.
இதைப்பற்றி முனைவர் கூறுவது:
கணிதமேதை இராமனுசம் அவர்களின்
பிறந்தநாளன்று மாணவர்கள், இராமானுசம் அவர்களின் பணியை
நினைவுகொள்ளும் விதமாக கவிதை கட்டுரை பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபெற்று
தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இன்றைய மாணவர்கள் கணிதத்தை மனப்பாடம்
செய்துதான் படிக்கிறார்கள்! இல்லை இல்லை புரிந்துதான்
படிக்கிறார்கள் என்ற தலைப்புகளை முன்வைத்து விவாதகளமும் நடந்தது. இவர்களுக்கு
நடுவராக இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவர்களின்
முயற்சியும் பாராட்டுதலுக்குரியது என்றாலும் கங்கா என்ற மாணவர் எழுதிய கவிதை பலரது
பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.
தமிழில் பிள்ளைத்தமிழ் போன்ற
இலக்கியங்களில் கடவுளையோ, அரசரையோ, வள்ளல்களையோ குழந்தையாகப் பாவித்து பாடுவது மரபாகும். அதுபோல இந்த
மாணவர் கணிதத்தைப் பெண்ணாகப் பாவித்து பாடிய கவிதை, கணிதம் என்ற பாடத்தின் மீது இவருக்கு
எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது. தொடர்ந்து படிக்க மேலே
உள்ள சுட்டியை சொடக்கவும்.
காட்சி
என்னும் தளத்தில் இந்தப் பதிவு.
எழுதியது யமுனா ராகவன் மதிப்பிற்குரிய
ஆண்களே இதைப்படிப்பீராக!
சதீஷ் செல்லத்துரை தமிழ்மொட்டு என்ற
வலைத்தளத்தில் எழுதி வருகிறார். நக்கீரன் பத்திரிகையில் வந்த ஒரு கடிதத்தைப்
பகிர்கிறார்.
‘ஒரு சக சிப்பாயாக இதனை
பகிர்கிறேன்.எமக்கான குரலை இங்கு நாங்கள் எடுத்து வைத்ததே மிகப்பெரிய
விடயமாகும்.சங்கங்கள் இல்லாது சட்டங்கள் தெரியாது தவிக்கும் சிப்பாய் ஜாதியை மனித
உரிமை குழுக்கள்,ஊடகங்கள் மட்டுமே வெளியுலகுக்கு
எடுத்து சொல்லி காப்பாற்ற முடியும்.பூனைக்கு எலிதான் மணி கட்டணும்னு இல்லையே...
ஏனெனில் நீங்கள் எலிகள் அல்லவே... ‘ என்கிறார்.
******************
இவரது பெயர் இவரது தளத்தில் எங்கும் இல்லை.
தேசப்பற்று என்பது தானாகவே, இரத்தத்திலேயே, கலந்து
வருவதில்லையா ?
நாட்டுப்பற்றை யாரும் வந்து
ஊட்டவேண்டுமா? இங்கு ‘யாரும்’ என்பது அரசியல்வியாதிகளையும்
அதிகாரத்தில் இருப்பவர்களையும் குறிக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக சிறுவயதிலிருந்தே
அப்படித்தான் பழக்கவேண்டும் என்றால், ஏன் அதைச்
செய்யாமல் வேறுவித பழக்கங்களுக்கு அடுத்ததலைமுறையை அடிமையாக்குகிறார்கள் ?
ஆல்
போல் தளைத்து அருகு போல் வேரோடி – நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று
படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
****************
சீனுகுரு என்ற வலைத்தளத்தில்
எழுதும் ஸ்ரீநிவாசன் என்கிற சீனு.
டயனா
கிழவி பற்றி சொல்லுவதைப் படியுங்கள். நீங்களும் உங்கள் பள்ளிப்
பிராயத்திற்குப் போய்விடுவீர்கள்.
குறும்பட நாயகனாகவும் மாறியிருக்கும் சீனுவிற்கு வாழ்த்துக்கள்.
தனது நண்பர் ஆவிக்கு இவர் எழுதியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்து மடல் இங்கே
***********************
கோவைஆவி சமீபத்தில் காதல்
போயின் காதல் என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் ஆனந்த ராஜா விஜயராகவன் எனும் ஆவி.
அஜித்தை
எனக்குப் பிடிக்காது என்கிறார். ஏன் என்று படித்துப் பாருங்களேன்.
நான் அடிமை இல்லை..!
இவரைப் போலவே நாமும் ஒருநாள் இருந்து பார்க்கலாமே என்று தோன்றும் இந்தப் பதிவைப்
படித்தபின்.
இவரது ஆவிப்பா புத்தகம் வெளியீட்டு விழா. .
இரண்டாம் ப்ளாகர் திருவிழாவில் பாட்டு
எழுதி பாடியவர்.
சிறந்த திரைப்பட இயக்குனர் ஆக வர
வாழ்த்துக்கள்.
****************
தளிர் என்ற
வலைத்தளத்தில் எழுதும் சுரேஷ் வேலூர்
அருகில் இருக்கும் ஸ்ரீபுரம் போய்விட்டு வந்து
சிறுவர் பகுதி, ஜோக்ஸ், கவிதை, சிறுகதை,
புகைப்பட ஹைக்கூ, எளிய இலக்கணம் இனிய இலக்கியம், தித்திக்கும் தமிழ், ஆன்மிகம்
என்று பலவற்றையும் எழுதுகிறார்
மூங்கில் காற்று என்ற
வலைத்தளத்தில் எழுதும் டி.என். முரளிதரன்
திரு ஜோதிஜியின் தொழிற்சாலை
குறிப்புகளுக்கு இவர் எழுதிய மதிப்புரை இங்கே
எனது எண்ணங்கள் தமிழ்
இளங்கோ
ரத்தக்கண்ணீர் வசன புத்தகம் வாங்கப் போனவர் வாங்கி வந்த புத்தகம் நவீன
ஒப்பாரி கோர்வை.
ஒப்பாரிப்
பாடல்கள் ஒப்பாரி இலக்கியம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறார்.
‘ஙப்போல் வளை’ என்பதற்கு பொருள் தெரியுமா? இங்கு
படியுங்கள்.
இத்தனை நாட்களாக ஸ்பை யாக இருந்த கார்த்திக் சரவணன்.
எலெக்ட்ரானிக்
அடிமைகள் இவரும் ஆவியும் ஒரே விஷயத்தைத் தான் வேறு வேறு கோணங்களில்
பேசியிருக்கிறார்கள்.
பின்னோக்கியான்
என்ற பெயரில் சற்குணம் எழுதும் வலைப்பதிவு இது.
பல வித்தியாசமான கட்டுரைகளை கொண்டிருக்கிறது. விகடனில் வந்த செய்திகளும், பேட்டிகளும் நிறைய இருக்கின்றன.
மகாத்மா காந்தி முதல் மன்மோகன் வரை
என்று பல பகுதிகள் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். பெரியாரின்
பேட்டி மிகவும் சுவாரஸ்யம்.
***********************
‘நண்பர்களே, வாருங்கள். பள்ளி செல்ல இயலவில்லையே, படிக்க
முடியவில்லையே என்ற வருத்தம் இனியும் வேண்டாம். வாருங்கள்,
எழுதவும், படிக்கவும் நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். வாருங்கள்,
நண்பர்களே வாருங்கள்’ என்று அழைத்து தன் கிராமத்து சிறுவர்
சிறுமியர்களுக்கு
கல்வி கற்பிக்கும் சிறுவன் பாபர் அலி பற்றிய பதிவு
இது.
இசை மேதை
பீத்தோவன் பற்றிய பதிவு இதோ
நாளை பார்க்கலாம்
இன்னொரு சங்கீத பதிவுடன் .......
காமிராமேனுக்கு நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருப்பார் போல...
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க தனபாலன்!
Deleteஆமா, இல்லேன்னா ரசிச்சு ரசிச்சு அப்படி காண்பித்திருப்பாரா?
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அந்தப் பாடகர் யாராயிருக்கும் என்று மனை குடைகிறது? ம.ச?
ReplyDeleteபெருமளவு பதிவர்கள் தெரிந்தவர்கள் / நண்பர்கள்.
மனை - மனம்
Deleteஹை......யோ.....ஹை........யோ....!
வாங்க ஸ்ரீராம்!
Deleteஅது யாரு ம.ச.?
இவர அவர் இல்லை...கொஞ்சம் பொறுங்கள். கீதா சொல்லுகிறாரா பார்ப்போம்.
நடிகையை சரியாகச் சொல்லிவிட்டார்!
சங்கீதம்பற்றிய மலரும் நினைவுகள் அருமை.
ReplyDeleteஇன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அனைத்து பதிவுகளையும் படித்து தேர்வு செய்து அளித்த பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்.
வாங்க கோமதி!
Deleteவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
சங்கீதம் பற்றிய மென்மையான அனுபவப்பதிவு. ரசிக்கும்படி இருந்தது. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள், மே ஐ கமின் முமாரோ?
ReplyDeleteவாங்க டாக்டர் ஐயா!
Deleteவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
நாளையும் நிச்சயம் வரலாம்!
இசையும் தமிழுமாக இன்றைய தொகுப்பு!..
ReplyDeleteஅறிமுக நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
வாங்க துரை செல்வராஜூ!
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
//சுப்புடு சங்கீதம் மட்டுமில்லை நாட்டியக் கச்சேரிகளைப் பார்த்தும் விமரிசிப்பார். நம்மூரில் பிறந்து ஹிந்தி சினிமாவில் கொடி நாட்டிய தாரகை ஒருவரின் நாட்டியத்திற்கு சுப்புடு எழுதியிருந்தார்: ‘நந்தனாரின் ‘வருகலாமோ?’ பாட்டிற்கு இந்தப் பெண் செய்த அபிநயம் ‘காலிங் பெல்லை அழுத்தி ‘மே ஐ கமின்?’ என்று கேட்பதுபோல இருந்தது’ என்று.//
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிகவும் ரஸித்தேன்.
>>>>>
எங்கள் ஊர் பதிவரும் என் இனிய நண்பருமான ‘எனது எண்ணங்கள் திரு. தமிழ் இளங்கோ’ அவர்களை இங்கு இன்று அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ReplyDeleteவாங்கோ கோபு ஸார்!
Deleteவருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும், இரண்டு முறை பின்னூட்டம் கொடுத்ததற்கும் நன்றி!
மிக்க நன்றி அம்மா என்னையும் கூடவே நமது நண்பர்களையும் அறிமுகம் செய்ததற்கு.. அதுவும் ஒரு எழுத்தாளரே எங்களை அறிமுகம் செய்ததற்கு :-)
ReplyDeleteவாங்க சீனு!
Deleteநீங்களும் எழுத்தாளர்தானே சீனு? இன்னும் கதாநாயகனாகி பெரிய பெரிய உயரங்களைத் தொடப்போகிறீர்கள், நாளை.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
சங்கீத கச்சேரியின் நினைவுகளை சுவையாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஇன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க உமையாள் காயத்ரி!
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
சமையலில் இருந்து சங்கீதமா ? அருமை.
ReplyDeleteபதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாங்க ரமா ரவி!
Deleteசங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடலாம் என்று!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
இன்றைய வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தினையும், பதிவுகள் இரண்டனையும் அறிமுகம் செய்தமைக்கும், எனது வலைத்தளம் வந்து தகவல் தெரிவித்தமைக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteஒப்பாரி என்ற தலைப்பினை வைத்து எழுதும் போது வாசகர்கள் மத்தியில், வரவேற்பு இருக்குமா? என்ற ஐயத்துடனேயே எழுதினேன். நல்ல வரவேற்பு. வலைச்சரத்திலும் இடம்பெறும் அளவுக்கு மதிப்பீடு செய்த சகோதரிக்கு நன்றி.
அடுத்தது, ‘ஙப்போல் வளை’ என்பதற்கு பொருள் சொன்ன ஜோசப்விஜூ (ஊமைக்கனவுகள்) அவர்களுக்கு நன்றி சொன்ன பதிவு.
இங்கு எனது வலைத்தளம் அறிமுகத்திற்கு, நன்றி சொன்ன மூத்த பதிவர் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.
த.ம.5
வாங்க இளங்கோ ஸார்!
Deleteஉங்கள் பதிவுகள் எல்லாமே சுவாரஸ்யமானவை. இங்கு இடம் இல்லாத காரணத்தால் இரண்டே இரண்டு மட்டும் அடையாளம் காட்டியிருக்கிறேன். ஒப்பாரி பற்றி இத்தனை விஷயங்கள் உங்கள் பதிவைப் படித்ததும் தான் தெரிந்தது. ஙப்போல் வளை என்பதற்கும் உங்கள் பதிவு மூலம்தான் பொருள் தெரிந்து கொண்டேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அநேகமான பதிவர்களைத் தெரியும். ஆனால்கரந்தை ஜெயக்குமார் மற்றும் ஸ்பை பதிவுகளைத் தவிர மற்றப் பதிவுகளை அதிகம் படிக்கவில்லை. இத்தனை பதிவுகளையும் எப்படித்தான் படித்துத் தவறாமல் கருத்துச் சொல்கிறீர்கள் என்றும் தெரியவில்லை. உண்மையில் உங்கள் நேர மேலாண்மைக்கு ஒரு வாழ்த்துச் சொல்லிக்கிறேன். என்னால் பலரோட பதிவுகளுக்குப் போக நேரமே இருப்பதில்லை. :)
ReplyDeleteவாங்க கீதா!
Deleteஉடனே படிக்க முடியாவிட்டாலும், கொஞ்சம் சேர்த்து வைத்தாவது எல்லாப் பதிவுகளையும் படித்து விடுவேன். வீட்டிலயும் வேலை ரொம்ப இல்லை என்பதுதான் உண்மை (வெளில சொல்லிடாதீங்க!)
அந்த 'மே ஐ கம் இன்?' என்று கேட்ட நடிகை ஹேமமாலினி என எண்ணுகிறேன். செரியா? :))))
ReplyDeleteரொம்ப கரெக்ட்!
Deleteபாமுகி பாமுகினு நினைச்சேன். ஆனால் சொல்லவேண்டாம்னு சொல்லலை! :)))))
ReplyDeleteநீங்க ரொம்ப ரொம்ப கிரேட்! அவரே தான்!
Deleteஹிஹிஹி, ரெண்டுமே சுப்புடுவோட விமரிசனங்களை விடாமல் படிச்சதன் விளைவு தான். ஞாபகம் வந்து தொலைச்சது! :)))))
Deleteநானும் உங்களைப் போலத்தான். அவரோட விமரிசனங்கள் போல காரசாரமாக யாரும் இப்போது எழுதுவதே இல்லை. எல்லாமே வழவழ கொழகொழ தான்!
Deleteஎல்லாவற்றையும் படிக்க வேண்டும். ராகம்,தானம்,பல்லவி என்று சங்கராபரணமாக இருக்கிறது உங்கள் ரஸனை. படித்து மகிழ்வோரில் நானும் ஒருவள். . முடியும்போது எல்லா பதிவுகளையும் வாசிக்கிறேன்.
ReplyDeleteயாவருக்கும் வாழ்த்துக்கள் . அன்புடன்
வாங்கோ காமாக்ஷிமா!
Deleteநிதானமாகப் படியுங்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
பின்னூட்டங்களும் வெகு ஸ்வாரஸ்யமாக இருக்கிரது.
ReplyDeleteபடிக்க ருசியாக வருகிறது உங்களுக்கு. அன்புடன்
நிஜம் தான். பின்னூட்டங்கள் இந்த பதிவிற்கு மெருகூட்டுகின்றன.
Deleteவலைச் சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் சகோதரியாரே
தம +1
வாங்க ஜெயக்குமார்!
Deleteஉங்களை அறிமுகப்படுத்தி நான் பெருமை அடைந்தேன் எனபதுதான் உண்மை. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு வைரம்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
காலையில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். இடம் பெறவில்லையே!
ReplyDeleteவருகலாமோ என்பதற்கு may I come in என்பதுதான் பொருள அல்லவா அதையே அபிநயித்துக் காட்டிவிட்டார் போல் இருக்கிறது
எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி
குறிப்பிட்டவை அனைத்தும் சிறப்பான பதிவுகள்
வாங்க முரளிதரன்!
Deleteஇந்த ஒரு பின்னூட்டம் மட்டுமே வந்திருக்கிறது. வேறு ஒன்றும் காணவில்லையே.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான் இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா...!’
ReplyDeleteரசித்துச் சிரித்தேன். விமர்சகர் சுப்புடு அவர்களின் கமெண்டும் ரசிக்கும்படி இருந்தது.
வாங்க கலையரசி!
Deleteவருகைக்கும், ரசித்துப் படித்துப் பின்னூட்டம் கொடுத்ததற்கும் நன்றி!
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அம்மா... அதிலும் இரண்டு பதிவுகள் என்பது மிகவும் சிறப்பு...
ReplyDeleteவாங்க ஸ்பை. உங்களை இப்படிக் குறிப்பிட்டால் தான் நன்றாக இருப்பது போல இருக்கிறது :)!
Deleteஇரண்டு பதிவுகள் மிகவும் குறைவு என்னைப் பொறுத்தவரை.
உங்களுடைய குறும்படத்தையும் குறிப்பிட வேண்டும் என்று நினைத்து மிஸ் பண்ணிவிட்டேன்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நன்றி அம்மா.. என்னையும் எங்கள் படத்தையும் அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி.
ReplyDeleteவாங்க ஆவி!
Deleteவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. நாளைய டீசர் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!
//சித்ரா பதில் சொல்வதற்குள் குறுக்கே பாய்ந்தார் தாசரதி. ‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான் இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா...!’//
ReplyDeleteஹா.ஹா.... அவர் மனைவி பாடுவதை அருகே இருந்து கேட்டவர்/ பார்த்தவராயிற்றே! மனைவியிடம் சொல்ல முடியாததை இப்படிச் சொல்லி விட்டாரோ.....
இன்றைய அறிமுகங்களில் பல நண்பர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாங்க வெங்கட்!
Deleteவருகைக்கும், ரசித்துப் படித்துப் பின்னூட்டம் போட்டதற்கும் நன்றி!
இங்கு அறிமுகமாகியுள்ள பதிவர்களில் ஒரு சிலரே நான் அறியாதவர்கள். அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். பதிவுகளை மிக அழகாகத் தொகுத்தளிக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ரஞ்சனிம்மா.
ReplyDeleteவாங்க கீத மஞ்சரி!
Deleteவருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!
காஸிப்புடன் பதிவு .... ஆஹா நல்லாவே இருக்கு. காமிராமேனும் போட்டுக் கொடுத்திருக்காரே !
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
வாங்க சித்ரா!
Deleteகாஸிப் எப்போதும் சுவாரஸ்யம் தான்!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
இந்த பதிவர்கள் அனைவரும் விடாது நானும் பின்தொடர்ந்து படித்துவரும் பதிவர்கள் . அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா .
ReplyDeleteகரந்தையாரின் பீத்தோவன் பற்றிய பதிவு அருமை
பீத்தோவன் பற்றிய
வாங்க மெக்னேஷ் திருமுருகன்!
Deleteவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அருமையான ந்ஹகைச்சுவைப் பதிவு. சுட சுட மிஸ் பண்ணிவிட்டோம்.. பரவாயில்லை ஆறினாலும் பேஷ் பேஷ் !!!
ReplyDeleteஇன்று பல நண்பர்கள் அறிமுகம், ஆவி, சீனு, சரவணன், சுரேஷ், கரந்தை என்று பலர்....மிக்க நன்றி சகோதரி!
என்னுடைய அறிமுகத்திற்கு மிக்க நன்றி! உடனே வர முடியவில்லை! சிறப்பான பதிவர்களின் தொகுப்பு! தொகுப்பிற்கு முன் சங்கீதம் குறித்த நினைவுகள் பகிர்வது சுவாரஸ்யம்! தொடருங்கள்! நன்றி!
ReplyDelete