வலைச்சரம் ஆறாம் நாள்
Yan can cook so can you!
அந்தக்காலத்தில் நம் தூரதர்ஷன் மட்டுமே செங்கோலோச்சிக்கொண்டிருந்த நாட்களில்
முதன்முதலாக ஸ்டார் ஆங்கில சானல் வர தொடங்கியது. அதில் நாங்கள் விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சி
நான் மேலே எழுதியிருக்கும் தலைப்பு. சமையல் நிகழ்ச்சி யேன் என்ற சைனாகாரர் வந்து
சமைப்பார். எல்லாமே அசைவ உணவு தான். ஆனாலும் அதை நான் விரும்பிப் பார்க்கக் காரணம்
அவர் செய்யும் விதம். அப்புறம் அந்த சமையலறை. பளபளவென்று இருக்கும். அவர்
பயன்படுத்தும் பாத்திரங்களும் கத்திகளும் கண்ணைப் பறிக்கும் சுத்தம். ஒவ்வொரு முறை
காய்கறி கட் பண்ணிவிட்டு டேபிளை அழகாத் துடைத்து விடுவார். துளிக்கூட சிந்தாமல்
சிதறாமல் பொருட்களை - ஒன்றைக்கூட கையால் தொடமாட்டார் – அதுவே எனக்குப் பிடித்தது.
அவர் கொண்டு வரும் மீன், இறைச்சி ஆகியவை மிகவும் சுத்தமாக இருக்கும். நம்மூர்
சமையல் நிகழ்ச்சி செய்பவர்கள் நிச்சயம் அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் அவர் உயிருடன்
பாம்பை கொண்டு வந்தவுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அன்று பாம்பு பஜ்ஜியோ என்னவோ, அத்துடன்
அந்த நிகழ்ச்சி பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
இப்போது FoodFood, khana khazana ஆகிய ஹிந்தி சானல்கள் முழுக்க
முழுக்க சமையலுக்காகவே – 24 மணி நேரமும் சமைக்கிறார்கள். அய்யோ! என்னால் ஒரு மணி
நேரம் சமைக்க முடியவில்லையே! இந்த இரண்டு சானல்களிலும் கூட சமையலறை மிகவும்
சுத்தம். அதேபோல பயன்படுத்தும் பாத்திரங்கள் பளபள!
இதையெல்லாம் பார்த்துவிட்டு நம்மூர் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்க்கவே
பிடிப்பதில்லை. அதுவும் வெள்ளிக்கிழமைகளில் வரும் டாக்டர் பட்டம் வாங்கியவர்
கையாலேயே உப்பையும் போடுவார். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் அதே
கையாலேயே....! பார்க்கவே பிடிக்காது!
ஒரே ஒரு விஷயம் எனக்கு ரொம்ப நாட்களாக புரியவில்லை. சமையல் நிகழ்ச்சிகள்
செய்ய ஆரம்பிப்பவர்கள் நாளாக நாளாக குண்டாகி விடுகிறார்களே! அது எப்படி? சமைத்ததை
தாங்களே சாப்பிட்டு விடுவார்களோ!
இன்றைய வலைச்சரத்தை சிறப்பிக்கும் பதிவர்கள்
ஷைலஜா
எண்ணிய முடிதல் வேண்டும்
என்ற வலைத்தளத்தின் சொந்தக்காரர். நிறைய
பத்திரிகைகளில் எழுதி வருகிறார். கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர்.
நிறைய போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
பத்திரிகைகளில் எழுதி வருகிறார். கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர்.
நிறைய போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
இன்றைய வலைச்சரத்தில் காதலர் தின சிறப்புப் பதிவு இவருடையது தான்.
காதல் புதிதா , பழசா?
காரிலிருந்து
இறங்கிய ஸ்ரீதரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சென்னைக்கு
அருகில் இத்தனை அருமையான
கிராமமா? எங்கு
திரும்பினாலும்
பசுமை. நிறைய மரங்கள். அழகான தோப்புகள். வாசலில் மாடுகள்.
*************************************************************************************************
*************************************************************************************************
‘இ’ ஸார் என்று
எங்கள் குழுவினரால் (வல்லமை மற்றும் மின்தமிழ்
குழுமங்கள்) அன்புடன் அழைக்கப்படும் இன்னம்புரான்
சௌந்தரராஜன்.
இந்திய அரசில் மிகப்பெரிய அதிகாரியாக பல வருடங்கள் டெல்லியில்
இருந்தவர். எதைப்பற்றி எழுதினாலும் அதில் ஒரு தீர்மானம், தெளிவு
இருக்கும்.
நிதானமாகப் படிக்க வேண்டிய எழுத்து.
நிறைய எழுதும்
இவரது எழுத்துக்களிலிருந்து ஒரு துளி இங்கே.
மொத்தம் ஐந்து
கடிதங்கள். இந்த மூன்றாவது கடிதம் நிச்சயம் படிக்க
வேண்டிய ஒன்று. அதனால் இதற்கு
இணைப்புக் கொடுத்திருக்கிறேன்.
இதற்கு முன் பின் இருக்கும் கடிதங்களையும்
படியுங்கள்.
கடிதம் எழுதுவது
பற்றியும், அதை எழுதியவர்கள் பற்றியும் மிக மிக
சுவாரஸ்யமாகச் சொல்லுகிறார்.
மொத்தம் ஐந்து
கடிதங்கள். ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
*************************************************************************
*************************************************************************
ஆலோசனை – பார்வதி
ராமச்சந்திரன்
விரதம் பூஜைகள் என்று ஆன்மீக அனுபவங்கள் இங்கு நிறையக் கிடைக்கும்.
வயதில் இளையவர் ஆனாலும் இந்த விஷயங்களை மிகச் சிறப்பாக எழுதுகிறார்.
நாராயணீயத்தை கண்ணனை
நினை மனமே என்று தொடராக எழுதி வருகிறார்.சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு தமிழில் சிறப்பான விளக்கங்களும், கூடவே ஆழ்வார்களின் பாசுரங்களையும்
மேற்கோள்காட்டி நம்மை மனமுருகச் செய்கிறார்.
கோலங்கள் பெண்களின் கலா ரசனை மாற்றும்
அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதர்காக மாத்திரம் அல்ல. கோளங்களின் சக்தி வாய்ந்த எந்திரங்கள்
மறைந்திருக்கின்றன. கோலங்கள் தெய்வீக சக்தி கொண்டவை என்கிறார்.
********************************************************************
100 என்பது
மூன்றிலக்க எண்களின் முதல் எண். எந்த எண்ணுக்கும்
இல்லாத சிறப்பு இந்த நூறு எனும்
எண்ணிற்கு உண்டு. எப்பவும்
ஆண்டின் முதல் நாளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம்
போல
மூன்றிலக்க எண்ணின் முதல் எழுத்தான நூறுக்கும் முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறோம்.
அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு
குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே
ஸ்கூல்,இரண்டரை வயதில்
ப்ரீ-கேஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில்
யு.கே.ஜி என்ற
சித்ரவதை அங்கே
இல்லை.
***************************************************************************
***************************************************************************
கோமதி, திருமதி பக்கங்கள் என்ற வளைத்தின் சொந்தக் காரர்.
குங்குமம்தோழியில் சிறப்பு விருந்தினராக அடையாளம்
காணப்பட்டவர்.
மதுரையில் டெம்பிள் சிட்டி என்ற ஓட்டலில், காலம் மாறும்போது
நம்
உணவு உண்ணும் முறை மாறியதை வருடங்கள் போட்டுப் படம்
வரைந்து பிரேம் போட்டு மாட்டி
வைத்து இருந்தார்கள். சுவாரஸ்யமான
விஷயத்தை சொல்லுகிறார்.
இவர்கள் அமெரிக்காவில்
பயணம் செய்த பழைய காலத்து ரயிலைப்
பற்றி (விண்டேஜ் ரயில்!) இந்த பதிவு. இந்தப்
பதிவின் முன்னுரை
சுவாரஸ்யம். கூடவே கணவர் வரைந்த ரயிலடி அத்தை வீட்டின்
வண்ணப்படமும்.
*************************************************************************
எழிலாய் பழமை பேச
என்று அந்தியூரான் பழமைபேசி எழுதுகிறார் தனது
மணியின் பக்கங்கள் என்ற
வலைத்தளத்தில்.
“ஆமாமாங்.
இப்பெல்லாம் ஆருங் முன்ன மாதர தை நோம்பியெல்லாங்
கும்புடுறாங்க? அல்லாம் மாறிப்
போச்சு பாருங்!”
இவரது கவிதை
ஒன்று:
*******************************************************************
சொந்தக்காரர்.
பணமா
படிப்பா சாதிக்க எது தேவை அவர் இருக்கும் ஆஸ்திரேலியாவில்
நடந்த ஒரு வழக்காடு மன்றம் பற்றிச் சொல்லுகிறார். ஆடியோவும்
கேட்கலாம்.
****************************************************************************
ஜோசப்விஜூ
திருக்குறளில்
135 அதிகாரங்களோடு ஒரு சுவடி பிரான்சில் இருப்பதாக
ஆய்வாளர் ஒருவர்
குறிப்பிட்டுள்ளதாக கவிஞர் பாரதிதாசன் ஒரு
பின்னூட்டத்தில் கூறியிருந்ததை வைத்து
இவர் எழுதிய பதிவு இது.
******************************************************************************
இடைத்தேர்தல்
மற்றும் தேர்தல் – திருவரங்கத்தின் இடைத்தேர்தல்,
டெல்லியின் தேர்தல் பற்றிய பதிவு.
இவரது மாஸ்டர்
பீஸ் பயணக் கட்டுரைகள் தான். இவை தவிர
வெள்ளிக்கிழமைதோறும் வரும் ப்ரூட் சாலட்.
நிறைய
புத்தகங்கள் படிப்பவர். அதனால் புத்தக விமரிசனங்களும் வரும்.
சமீபத்திய புத்தக
விமரிசனம்:
தம்பதிகளை
சேர்த்தே சொல்லிவிடலாம்.
எழுதுகிறார்.
தனது வலைச்சர
வாரத்தில் கணவருக்கு இணையாக பயண கட்டுரை
எழுதி அசத்தியவர். இவரும் புத்தக
விமரிசனங்கள் எழுதுகிறார். சமையல்
குறிப்புகளும் இவரது தளத்தில் உண்டு.
எந்தப் பரீட்சையில்?
திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது முகநூல் கணக்கு இருக்கா என்று
கேட்க
வேண்டுமாம்!
*******************************************************************************************************
*******************************************************************************************************
சித்ராவின் பொழுதுபோக்குப் பக்கங்கள் என்ற பெயரில் இரண்டாவது
தான். வேர்ட்ப்ரெஸ்
–இல் இருக்கும் தளம் சமையலுக்கு என்றால் இந்தத்
தளம் பல்சுவைக்கும்.
தனது ‘மிமிக்ரி’
திறமையை வைத்து தன் கணவரை ஒட்டியதை சிரிக்கச்
சிரிக்கச் சொல்லுகிறார்.
கல்வி என்பது
கற்றல். கற்றல் என்பதன் அர்த்தத்தை நமது
கல்வியாளர்கள் மறந்துவிட்டார்களோ என்ற
ஐயம் அடிக்கடி எழுகின்றது
என்பவர் ஆசிரியர்களின் கடமை பற்றிப் பேசுகிறார்.
இப்படியும்
புத்தக விமரிசனம் எழுதலாம் என்று காட்டுகிறார்.
*********************************************************************************
நிகழ்காலம் எழில் எழுதும் வலைத்தளம்
‘கவிதை,கதை, சமையல் அத்தோடு
அரசியலும் கொஞ்சம் பேசுங்கள்
பெண்களே.... உங்களின் பங்கும் இருக்கிறது இந்த சமுதாய
மாற்றத்தில்...ஆண்களே உங்கள் வீட்டுப் பெண்களை வீட்டு அரசியலை
விடுத்து நாட்டு
அரசியலை பேச உதவுங்கள்....’ என்று வேண்டுகோள்
விடுக்கிறார்.
************************************************************************
சமையலறைத்
தூய்மையில் வெட்டும் பலகையின் (Cutting board) சுத்தத்திற்கு
முக்கிய இடம் உண்டு. அவற்றை உரிய முறையில் கழுவி கிருமி
நீக்கம் செய்து
உபயோகிப்பதை வழமையாகச் செய்ய வேண்டும்.
இல்லையேல் நோய்களை உண்டாக்கக் கூடிய E. Coli and
Salmonella போன்ற
கிருமிகள்
அதில் தங்கியிருந்து நோய்களைப் பரப்பக் கூடும் என்கிறார்.
அம்மப்பாவிற்கு
தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத்
வருடிவிடும் அம்மம்மாவின் செயல்
பிள்ளைகளுக்குச் சினமாக
இருக்கிறது. அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும்
செயற்பாட்டிற்கும்
உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அவ் விடயத்தில் அவர்களது
செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை
சொல்வதையும் நிறுத்துங்கள். இது பற்றிய வெளிப்படையான
கலந்துரையாடலை சம்பந்தப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில்
ஆரம்பியுங்கள்.
அவர்களது
வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.
அருமையான
ஆலோசனைகள்.
****************************************************************************
****************************************************************************
என் அம்மா அனுபவித்த துன்பங்களை
உடனிருந்து
பார்த்ததால் – நான் எனக்குள் எடுத்துக் கொண்ட
உறுதி என்னவென்று படியுங்கள்.
நிறைய அரசியல்
பதிவு எழுதினாலும் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவு. ஒரு நல்ல மனிதரின்
உள்ளம் நமக்குப் புரிகிறது.
*************************************************************************
பல்கலை வித்தகி. நிறைய பத்திரிகைகளில் இவரது கவிதைகள், கதைகள்,
புகைப்படங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. பல ஆங்கிலக் கவிதைகளை மொழி பெயர்ப்பு
செய்கிறார்.
சென்ற வருடம் இவரது சிறுகதை தொகுப்பு ‘அடைமழை’, கவிதைத் தொகுப்பு ‘இலைகள்
பழுக்காத காலம்’ இரண்டு புத்தகங்கள் வெளியாகின. புத்தகங்கள் இரண்டிற்கும் நிறைய விருதுகள்.
புகைப்படக்கலைக்காக தமிழில் ஒரு வளைத்தளமும் நடத்துகிறார்.
புகைப்படக்கலைக்காக தமிழில் ஒரு வளைத்தளமும் நடத்துகிறார்.
"டேஸ்ட் டேஸ்ட்" செய்தே இப்படி ஆகியிருக்கலாம்...
ReplyDeleteஅனைத்தும் தொடரும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க தனபாலன்!
Deleteநிஜம்தான். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
நீங்கள் சொல்வது செஃப் தாமுவையோ?
ReplyDeleteயூ டியூபில் பாம்பு மற்றும் சிலவகை மீன்களை உயிருடன் எண்ணெயில் போட்டு பொரித்துத் தருவார்கள். பாதி பொரிந்த நிலையிலும் முகப்பகுதி உயிருடன் துடித்துக் கொண்டிருக்கும்.
இன்றைய அறிமுகங்களில் பாதிக்கும் மேலே தெரிந்தவர்கள்.
நீங்கள் சொல்வது செஃப் தாமுவையோ?
ReplyDeleteயூ டியூபில் பாம்பு மற்றும் சிலவகை மீன்களை உயிருடன் எண்ணெயில் போட்டு பொரித்துத் தருவார்கள். பாதி பொரிந்த நிலையிலும் முகப்பகுதி உயிருடன் துடித்துக் கொண்டிருக்கும்.
இன்றைய அறிமுகங்களில் பாதிக்கும் மேலே தெரிந்தவர்கள்.
வாங்க ஸ்ரீராம்!
Deleteஅவரேதான். அவர் செய்வதைப் பார்க்கவே பிடிக்காது. ஒரு உணவு செய்து கொண்டிருக்கும்போதே வேறு ஒன்று எப்படிச் செய்வது என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்.
பாவம் அந்த பிராணிகள்!
வருகைக்கும், புதிருக்கு விடை கண்டுபிடித்ததற்கும் நன்றி!
இன்றைய வலைச்சரத்தில் எங்கள் இருவரின் வலைப்பூக்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிம்மா....
ReplyDeleteசிறப்பான பல வலைப்பதிவர்களின் அறிமுகம். மகிழ்ச்சி.
வாங்க வெங்கட்!
Deleteஎனக்கும் உங்கள் இருவரையும் அறிமுகம் செய்தது சந்தோஷமாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
இன்றைய சரத்தில் எங்களை அறிமுகப்படுத்தியது கண்டு மிக்க மகிழ்ச்சி அம்மா. எங்களுடன் அறிமுகமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க ஆதி!
Delete'மேட் ஃபார் ஈச் அதர்' தம்பதியை அறிமுகப்படுத்தியதில் மிகவும் பெருமை எனக்கு.
வருகைக்கும், வாழ்த்தக்களுக்கும் நன்றி!
மகிழ்ச்சி ரஞ்சனிம்மா. உடன் அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி!
Deleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
இன்று அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
சமையல் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிப்பவர்கள் நாளாக நாளாக குண்டாகி விடுகிறார்களே! அது எப்படி? சமைத்ததை தாங்களே சாப்பிட்டு விடுவார்களோ! - இந்த ஐயம் எனக்கும் உண்டு. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளைக்காகக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteவாங்க டாக்டர் ஐயா!
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
என் தளத்தை அறிமுகப்படுத்தயமைக்கு நன்றி அறிமுகமாகியுள்ள அனைத்துத் தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க எழில்!
Deleteநான் குறிப்பிட்டிருக்கும் உங்களுடைய இரண்டு கட்டுரைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. பெண்கள் நிச்சயம் அரசியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
இன்றைய வலைச்சரத்தில் வலைப்பூ அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிம்மா....
ReplyDeleteவாங்க பாண்டியன்!
Deleteமிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் மணம் 6
வாங்க கில்லர்ஜி!
Deleteவருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி!
மிகவும் சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க கோபு ஸார்!
Deleteவருகைக்கும், பாராட்டுக்களுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி!
வணக்கம் !
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா தங்களின் சிறப்பான ஆசிரிய வாரம் கண்டு மகிழ்ந்தேன் !
அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
வாங்க அம்பாளடியாள்!
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
ReplyDeleteதிருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கட்கு,
அறிமுகத்திற்கும், உங்கள் கருத்தினை தெரிவித்ததற்கும்
மிக்க நன்றி. அரசியல் தவிர்த்த, சமூக நலன் சார்ந்த
பிற விஷயங்களையும் நிறைய எழுத வேண்டுமென்று தான்
நினைக்கிறேன். ஆனால் -
நான் வாசிப்பதில் நிறைய விருப்பமுள்ளவன்.
படிப்பில் இறங்கினால் - எழுத முடிவதில்லை.
நேரம் போதவில்லை...! (இந்த வயதில் நேரம் போதவில்லை
என்று சொல்வது வியப்பாக இருக்கலாம் - ஆனால்
என் விஷயத்தில் அது தான் உண்மை...)
இயன்ற வரையில் மற்ற விஷயங்களும் எழுத
நிச்சயம் முயல்வேன்....
(ஒரு விஷயம் - நானும் உங்களூர் தான்...!!!)
நீங்கள் நன்றாக, இயல்பாக எழுதுகிறீர்கள்.
உங்களுக்கென நிறைய வாசகர்களை
சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்.
மீண்டும் நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
வாங்க காவிரிமைந்தன் ஸார்!
Deleteஉங்களது வருகையும், கருத்துரையும் எனக்கு எத்தகைய சந்தோஷத்தைத் தருகிறது என்று சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு வாரமாக நான் பட்ட முதுகுவலி எல்லாம் அப்படியே மாயமாக மறைந்துவிட்டது, உங்கள் பின்னூட்டம் பார்த்ததும்.
உங்கள் தளத்தில் வரும் அரசியல் விமரிசனங்களை நான் படிப்பதுடன் நிற்காமல் எனது கணவருக்கும் படித்துக் காட்டுவேன். அவருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். நான் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பதிவு உங்களது மென்மையான பக்கத்தைக் காண்பிக்கிறது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி.
//சமையல் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிப்பவர்கள் நாளாக நாளாக குண்டாகி விடுகிறார்களே! அது எப்படி? சமைத்ததை தாங்களே சாப்பிட்டு விடுவார்களோ!
ReplyDelete..//
நானும் Catering Staff - என்ற முறையில் நீங்கள் சொல்வதை ஆதரிக்கின்றேன்.
HACCP - பயிற்சிப் பட்டறையில் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் - அதற்கு முன்னரே - நம்மவர்கள் கையாண்டிருப்பதை எண்ணி வியந்திருக்கின்றேன்.
நம்ம ஊர் தொலைக் காட்சிகளில் நடத்தும் சமையல் காட்சிகளில் விருப்பம் இருப்பதே இல்லை.
நல்ல தளங்களின் அறிமுகமாக மிளிர்கின்றது இன்றைய தொகுப்பு!..
வாழ்க நலம்!..
வாங்க துரை செல்வராஜூ!
Deleteவருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்,
Deleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
எல்லாப் பதிவுகளையும் போய்ப் பார்க்கவேண்டும். உன்பதிவு
ReplyDeleteஹாஸ்யம் கலந்துள்ளது. அன்புடன்
வாங்கோ காமாக்ஷிமா!
Deleteவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி ரஞ்சனிம்மா.. உடன் அறிமுகமாகியிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteகடைசி பாராவில் நீங்க சொல்லியிருக்கும் சந்தேகம் எனக்கும் உண்டு ரஞ்சனிம்மா:))!!..
வாங்க பார்வதி!
Deleteஅட உங்களுக்கும் அந்த சந்தேகம் உண்டா? சந்தேகத்தை யார் நிவர்த்தி செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லையே!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் சகோ,
ReplyDeleteஇந்த வலைத்தளத்தினால் எனக்குக் கிடைத்த உண்மைப் பயன் உங்களைப் போன்ற அறியாத பேராளுமைகளின் நட்புத் தான்!
இதற்குக் கைமாறு என்ன செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.
இந்தச் சிறியவனையும் மதித்து எனக்குமோர் அறிமுகத்தைக் கொடுத்த உங்களின் அன்பினுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
பதிவில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
இது போன்ற ஊக்குவிப்புகள் நிச்சயம் எம் போன்ற பதிவர்கள் பெரிதும் வளரத் துணைசெய்யும்.
அதற்கு நன்றி.
நானும் உங்கள் ஊராய் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
நன்றி
த ம கூடுதல் 1
வாங்க ஜோசப் விஜூ!
Deleteஎங்கள் ஊரா? சீக்கிரம் சந்திக்கலாம்.
மிகச் சிறப்பான கருத்துக்களை உங்கள் பதிவுகளில் சொல்லிவருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.
வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி!
அடேயப்பா எத்தனை அறிமுகங்கள்! நகைச்சுவையும் கலந்து எழுதுவதற்குப் பாராட்டுக்கள்!
ReplyDeleteவாங்க கலையரசி!
Deleteவருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!
எவ்வளவு அறிமுகங்கள்...
ReplyDeleteஅவ்வளவு பேரும் அருமையான எழுத்தாளர்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க பரிவை சே.குமார்!
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
இன்றைய அறிமுகப் பதிவர்களில் பெரும்பான்மையோர் நான் தொடரும் பதிவர்கள் என்பதில் எனக்கு மகிழ்வும் பெருமையும். மிக அழகாக சுவையாகத் தொகுத்தளித்த தங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க கீத் மஞ்சரி!
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அவரது கை மட்டுமல்ல, விரல்களில் உள்ள மோதிரங்களும் சமைக்குமே, அவர்தானே !
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவையும் இங்கே அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்கோ. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க சித்ரா!
Deleteகையில் மோதிரம் போட்டிருப்பாரா? நினைவில்லை.
உங்கள் பல்சுவைப் பதிவுகள் அருமை!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்கோ!
ஒருவாரமாய் பணிநிமித்தம் வலைச்சரம் வர இயலவில்லை . தங்களின் அறிமுகங்களில் உள்ள புதுமுகங்களை இனிதான் படிக்கவேண்டும் . நன்றி அக்கா
ReplyDeleteவாங்க மெக்னேஷ் திருமுருகன்!
Deleteநானும் உங்களை மிகவும் மிஸ் பண்ணினேன். இதோ வந்து எல்லாவற்றையும் படித்து கருத்துரையும் கொடுத்து விட்டீர்களே!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
இரண்டு நாட்களாய் அதிக வேலை மும்முரம். வந்திருந்த உறவினரெல்லாம் இன்று தான் ஊருக்குக் கிளம்பிச் சென்றார்கள். இன்றைய அறிமுகங்களில் திரு பாண்டியனைத் தவிர மற்றவர்கள் அறிந்தவர்களே! அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து படிக்காவிட்டாலும் அவ்வப்போது படிப்பேன். ஆனால் கருத்துச் சொல்ல முடிந்ததில்லை. :(
ReplyDeleteவாங்க கீதா!
Deleteநீங்கள் வராமல் கொஞ்சம் போர் அடித்தது.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
//அதுவும் வெள்ளிக்கிழமைகளில் வரும் டாக்டர் பட்டம் வாங்கியவர் கையாலேயே உப்பையும் போடுவார். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் அதே கையாலேயே….! பார்க்கவே பிடிக்காது!//
ReplyDeleteஇதை மட்டும் சொன்னா எப்பூடி? டேஸ்ட் பார்க்கிறேன்னு ஒரு ஸ்பூனிலே எடுத்து வாய்க்குள் விட்டுச் சாப்பிட்டுவிட்டு அதே ஸ்பூனை மொத்த உணவிலும் போடுவாங்க! எனக்கு அதைப் பார்க்கவே பிடிக்காது. ஒவ்வொருவரின் வாயிலும் ஒவ்வொரு வகை பாக்டீரியா உற்பத்தி ஆகும். அதன் மூலம் வியாதிகள் பரவும். இது கூடத் தெரியலையேனு கோபமா வரும்!
நீங்கள் இதைச் சொன்னவுடன் எனக்கு வேறு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. ஒரு முறை மும்பை போயிருந்தபோது சுழலும் உணவகத்திற்குச் சென்றோம். மெதுவாக சுழலும் போது சமையலறை வந்தது. அங்கு ஒரு chef சமையல் செய்துகொண்டே நீங்கள் சொல்வதுபோல ஸ்பூனில் எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்படியே உணவில் போட்டு.... அன்றைக்கு அவருடைய சேஷம் சாப்பிட வேண்டும் என்று இருந்தது எங்களுக்கு!
Deleteகோபப் பட்டு என்ன செய்ய? வெளியில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
பொதிகை தவிர மற்றத் தொலைக்காட்சிகளின் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது இல்லை. பொதிகையிலும் குறிப்பாகச் சிலர் மட்டும், கிஷோர், சாந்தி பலராமன், சமையல்ராணி செல்லம் போன்றோரின் நிகழ்ச்சிகளை மட்டுமே பார்ப்பேன். அதுவும் அன்று அவர்கள் நிகழ்ச்சி எனத் தெரிந்திருந்தால் மட்டுமே. :))))
ReplyDeleteஎனக்கு சமையல் நிகழ்ச்சியில் பயன்படுத்தும் கரேல் என்ற வாணலி, மோசமான சமையலறை என்று எல்லாமே அலர்ஜி! நம்ம ரங்கஸ் எல்லாவற்றையும் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருப்பார். ஏதாவது கையேந்தி பவன் போனால் தோசை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பார். நான் அந்தப் பக்கமே போகமாட்டேன். நதி மூலம், ரிஷி மூலம் போல சமையலறை மூலமும் பார்க்கக்கூடாது என்பது என் கொள்கை.
Deleteஎன்னோட வலைச்சர வாரத்தில் முதல் தடவை(?) பழமையை அறிமுகப் படுத்திய நினைவு இருக்கு. அவரோட சிறுகதைகளும் அருமையாக இருக்கும்.
ReplyDeleteபோனதடவையும் நான் அவரை அறிமுகப்படுத்தினேன். நல்ல எழுத்தாளர். அந்த நடை எனக்கு மிகவும் பிடித்தது.
Deleteநன்றி கீதா, எல்லாவற்றையும் விடாமல் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு.
என் வலைத்தளத்தையும், என்னையும் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDelete//சுவாரஸ்யம். கூடவே கணவர் வரைந்த ரயிலடி அத்தை வீட்டின்
வண்ணப்படமும்.//
என் கணவரை குறிப்பிட்டமைக்கு மிக மிக நன்றி. என் கணவரிடம் நீங்களும் வலைத்தளத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள் ரஞ்சனி குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்றவுடன் நன்றி சொல்ல சொன்னார்கள்.
சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். வெளியூரில் இருப்பதால் தாமதமாய் பார்த்துக் கருத்து சொல்கிறேன் மன்னிக்கவும்.
மிக்க நன்றி சகோதரி! எங்களையும் எங்கள் நண்பர்கள் பலருடன் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு! மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteஒரே ஒரு விஷயம் எனக்கு ரொம்ப நாட்களாக புரியவில்லை. சமையல் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிப்பவர்கள் நாளாக நாளாக குண்டாகி விடுகிறார்களே! அது எப்படி? சமைத்ததை தாங்களே சாப்பிட்டு விடுவார்களோ!// ahahaha
அருமையான கேள்வி ஏனென்றால் இதையேதான் நாங்களும் கேட்டுக் கொள்வோம். ஒரு நகைச்சுவைப் பதிவில் சொல்ல நினைத்தது...ஆஹா நீங்கள் அதை இங்கு சொல்லிவ்யிருக்கின்றீர்கள்....ஹஹ
மிக்க நன்றி Ranjani Narayanan.
ReplyDeleteஎனது வலைப்பதிவுகளையும் அறிமுகப்படுத்தியயதற்கு