எல்லாருக்கும் குட் மார்னிங் குட் மார்னிங்....
இந்த நாளுக்கு ஏன் இருபத்திநாலு மணிநேரம் வச்சாங்க, பேசாம நாப்பத்தெட்டு மணிநேரம் வச்சிருக்கலாம்ல, பாருங்க, ஒரு பனிரெண்டு மணிநேரம் கூட நிம்மதியா தூங்க முடியல.... ஒரு பத்து நிமிஷம் கூடுதலா தூங்கினா நச்சு நச்சுங்குறாங்க... என்னவோ போங்க...
அச்சச்சோ, சாரி, நான் பாட்டுக்கு புலம்பிட்டே இருந்துட்டேன்ல... நீங்க ஒண்ணும் பதட்டப்படாதீங்க... நான் வேலைய ஆரம்பிச்சுடுறேன்...
ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஒரு தத்துவம் பாத்துருவோமா?
என்னதான் நமக்குன்னு பிரெண்ட்ஸ் வட்டம், சதுரம் எல்லாம் பெருசா இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச, நெருங்கிய நட்புன்னு ஒண்ணு இருக்கும். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அத எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு தோள் குடுத்து நிக்குறது தான் அந்த நல்ல நட்புக்கு அடையாளம். கண்டிப்பா எல்லோருக்கும் உண்மையா இருக்கணும்னு நினச்சா முடியாது, ஆனா நட்புக்குள்ள உண்மையா இருக்கணும். அத விட்டுட்டு மதில் மேல பூனை மாதிரி இந்த பக்கமா அந்த பக்கமான்னு தடுமாறிட்டு நிக்கக் கூடாது. புடிச்சவங்க பக்கம் தொபுக்குன்னு குதிச்சு பிரெண்ட் ஷிப்ப நிலைநாட்டணும். இல்லனா வாழற வாழ்க்கைல பாதி இல்ல, முழுசுமே வேஸ்ட் அப்படின்னு காலங்காத்தால இந்த பட்டாம்பூச்சி தத்துவம் சொல்லிக்குது....
அப்படியே கதம்பம் தேடி தேன்குடிக்க பறந்தப்ப தான் இந்த பக்கமா வந்தேன். ஆன்மீகம் பற்றிய பல தெரிஞ்சுக்க வேண்டிய கருத்துக்கள உள்ளடக்கியது சசி ராமாவோட இந்த வலைப்பூ (ஆன்மிகம்). இதுல பலவிதமான கருத்துக்கள அவர் பகிர்ந்திருந்தாலும் இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள் என்னன்னு சொல்லியிருக்கார், கண்டிப்பா எல்லாரும் படிங்க...
அடுத்து என்னடா பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே ஒவ்வொரு வலைப்பூவா தாவிகிட்டு இருந்தேனா அப்ப தான் உமையாள் காயத்ரியோட வலைப்பூ பக்கமா வந்தேன். கண்ணுல டக்குன்னு பட்டது பரோட்டா பத்தின பதிவு தான். பரோட்டானா தான் எனக்கு ரொம்ப புடிக்குமா, சரி, பரோட்டா அதுவும் கோதுமை பரோட்டா எப்படி பண்றதுன்னு சொல்லியிருக்காங்களே புதுசா யாராவது தெரிஞ்சுக்கட்டும்ன்னு இங்க தூக்கிட்டு வந்துட்டேன்.
அடுத்ததா கண்ணுல பட்டது மனசு. சரி எதோ புது வலைப்பூ, நாமளும் ஒரு போஸ்ட் இதுல இருந்து எடுக்கலாம்னு நினச்சா பரிவை சே குமார் உலகம் தழுவிய சிறுகதை போட்டியில மூன்றாவது பரிசு பெற்றவர்ன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி நான் என்ன சொல்ல, இவரோட கதைய எல்லாரும் தான் படிச்சிருப்பாங்களே, ஆனாலும் படிக்காதவங்க இந்த செவலைப்பசு வ படிங்க..
இந்த அண்ணன் எப்பப் பாத்தாலும் நம்மள விடாம ஓட்டு போடுறதுக்கு காரணம் சொல்லிட்டே இருக்காரு. சரி, அண்ணன் வலைப்பூவ போய் பாத்துரலாம்னு உள்ள போனேன். ஏண்ணே உங்க வலைப்பூ பேரு கில்லர்ஜியா, இல்ல என் குரலா? காவல் துறை உங்கள் நண்பன்னு சொல்லிட்டு அவங்கள என்ன கிண்டல் பண்ணியிருக்கார் பாருங்க.... நான் எஸ்கேப்
என் பக்கம் யாசோதா அப்படிங்குறவங்களோட வலைப்பக்கம். குட்டி குட்டியா கவிதைகள் எழுதியிருக்காங்க. ஏனோ இப்போதைக்கு வலைப்பூ பக்கம் எட்டிப் பாக்கலன்னு நினைக்கிறேன். சரி சரி, அவங்க மறுபடியும் எழுதணும்ன்னு வாழ்த்தோட பிரிவு பத்தின அவருடைய இந்த கவிதைய வாசிச்சுட்டு கருத்தும் சொல்லிட்டு போங்க.
கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டிய தூரங்களின் தொகுப்ப அறந்தாங்கியான் தன்னோட வலைப்பூவுல குடுத்துருக்கார். பெரும்பாலும் தன்னோட மனக்குமுறல கொட்டித் தீர்த்திருக்கும் அவர் சுதந்திர தினமும்... பேஸ்புக்கும் பற்றி என்ன சொல்றார்ன்னு பாக்கலாம்.
நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணாவோட போஸ்ட் எல்லாம் எப்பவுமே எனக்கு ரெண்டு மூணு தடவ படிச்சா தான் புரியும். அண்ணன் சுத்த தமிழ் எனக்கு புரியலன்னு நினைக்குறேன். அடப்போங்கப்பா.... நீங்களும் உங்க பதிவும்னு (அய்யய்யோ அப்படி நான் சொல்லவே இல்ல, அண்ணன் தான் சொல்றார்) அண்ணன் சொல்றத கேட்டுருங்க. இல்லனா, இன்னொரு தடவ படிக்க வச்சிருவேன்...
எப்படியோ இன்னிக்கி போஸ்ட் எல்லாம் பிரபலங்கள குறிவச்சே எழுதுறமாதிரி ஆகிப்போச்சு. விட்டா, ஏய், எங்க வீட்டுக்குள்ளயே வந்து எங்களையே அறிமுகப்படுத்துறியான்னு கேட்டாலும் கேட்ருவீங்க. அதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிடுறேன். ஜூட்....
அழகான தொகுப்பு.. நட்பு வட்டங்கள்!..
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
தேங்க்ஸ் அண்ணா... எல்லோருக்கும் வாழ்த்து சொன்னதுக்கு இன்னொரு தேங்க்ஸ்
DeleteVaalthukal.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி
Deleteமுதலில் நன்றி...
ReplyDeleteபட்டாம்பூச்சி தத்துவம் ஓஹோ...
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இனி தொழிற்நுட்ப பதிவுகள் மட்டும் எழுத வேண்டியது தான்... ஹா... ஹா...
அய்யய்யோ அண்ணா, உங்களுக்கு நிறைய fans இருக்காங்க. அதனால முடிவுகள மறுபரிசீலனை பண்ணுங்க.... வாழ்த்துக்கும் ஓஹோவுக்கும் ஸ்பெசல் தேங்க்ஸ் அண்ணா
Deleteஅண்ணன்கள் திண்டுக்கல் தனபாலன், கில்லர்ஜி...
ReplyDeleteசகோதரி உமையாள் காயத்திரி உள்ளிட்ட என் உறவுகளுடனும்
சசி ராமா, யசோதா, அறந்தாங்கியான் என புதிய நட்புக்களுடனும்
எனக்குமாய் ஒரு அறிமுகம்...
தங்களைக் கவர்ந்தவர்களில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி சகோதரி....
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஹஹா உங்க blog பக்கம் இன்னும் ஒரு வாரத்துல அதிரடியா நுழையலாம் நானு... கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கோ
Deleteஆஹா...என் சகோக்களுடன் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. வண்ணத்துப்பூச்சி என்பக்கம் கோதுமை பரோட்டா சாப்பிட வந்தமைக்கு மகிழ்ச்சி. அவ்வப்போது வண்ணதுப்பூச்சி என் வலைப்பக்கம் வந்தால் சந்தோஷப்படுவேன். புதிய வைலைப்பூக்களின் ( எனக்கு புதுசு அதைச் சொன்னேன்) அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகண்டிப்பா வர்றேன். எனக்குன்னு கொஞ்சம் நேரம் ஒதுக்கிட்டு இன்னும் கொஞ்ச நாள்ல எல்லார் பக்கமும் அதிரடியா வர்றேன்..... உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹஹா உங்க பாராட்டுக்கு தேங்க்ஸ் அண்ணா
Deleteஅனைவருக்கும் தெரிந்த முகங்களோ ? வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎங்கண்ணே.... நம்ம ஏரியான்னு வந்துட்டாலே தெரிஞ்சுக்க வேண்டியது தானே
Deleteவணக்கம் காயு, (மருத்துவர்)
ReplyDeleteதத்துவம் புல்லரித்தது அருமை தினம் தினம் இதைப்போலவே ‘’ஜொள்ளுங்கோ’’ என்னையும் வலைச்சரத்தில் மாலையாக கோர்த்தமைக்கு மனமாரந்த நன்றி.
மூன்று தேவகோட்டையர்களை அறிமுகப்படுத்தியமைக்கு தேவகோட்டை சார்பாகவும் நன்றி, நண்பர் டி.டி. உள்பட அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
எனது அழகான பெயரும், தளத்தின் பெயரும் கில்லர்ஜி.
என்குரல் மறுநாள் ஐயன் குறள் என மாறும்.
ஒரு வருத்தமும்கூட காவல்துறை நம் நண்பன் அவர்களை நான் கிண்டல் செய்தேன் என எழுதியிருப்பது கண்டு வருந்தினேன்.
- கில்லர்ஜி –
அப்புறம் மூணு நாளைக்கு முன்னாலே திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 2
(கள்ள ஓட்டுப்போட்டால் அபுதாபி போலீஸ் பிடிச்சுரும் அதான் பயமாகீது)
இவ்வளவு பெருசா எழுதி எல்லாம் பயமுறுத்தக் கூடாது. அப்புறம் நானும் பெருசு பெருசு பெருசா டைப்ப வேண்டியிருக்கும்.
Deleteஇப்ப தான் உங்க தளத்தோட பெயர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. உங்க வருத்தம் கண்டு நானும் வருத்தமடைந்தேன்....
ஆனாலும் கள்ள ஓட்டு போடாமல் ஏமாற்றிய உங்கள அபுதாபி போலீஸ் தேடிட்டு இருக்காங்களாம்...
தத்துவம் எல்லாம் பலமாக இருக்கே.
ReplyDeleteஇன்றைக்கு அறிமுகம் ஆனா நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்புறம் நண்பர் கில்லர்ஜி, அபுதாபி போலீஸ்க்கு தெரியாம கள்ள வோட்டு போட்டுட்டாராம்.
உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்... ஆனா கள்ள ஓட்டு எல்லாம் போடலையாம் அண்ணே... அண்ணன் பயந்துட்டார்
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதேங்க்ஸ்... சீக்கிரம் தோப்பு ஆகிடுங்க
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
தேங்க்ஸ்
Delete