வாசக பெருமக்களே,
முதல்லயே சொல்லிட்டேன், இந்த தலைப்பு எல்லாம் ஏன் வச்சன்னு கேட்டீங்கனா கண்டிப்பா என்னால விளக்கம் குடுக்க முடியாது...
அதுக்கு என்னோட ஒரே பதில், "அதெல்லாம் அப்படிதான்... ஆஆஆங்ங்ங்.... "
எங்க ஊருல பாட்டி ஒருத்தங்க இருக்காங்க. தினமும் காலைல ஒவ்வொரு வீடா போய் யாருக்கு என்ன வேணும்னு கேட்டு, சந்தைல போய் வாங்கிட்டு வந்து குடுப்பாங்க. அதுக்கு தனியா எல்லாம் காசு வாங்க மாட்டாங்க. சாமான் காசு மட்டும் தான்.
இங்க எல்லாம் கோழிங்க வளர்ப்பு ரொம்ப அதிகமா இருக்கும். யார் வீட்ல கோழி முட்டை அடை வைக்கணும்னாலும் அந்த பாட்டிக்கு தான் சொல்லி விடுவாங்க. சேர்த்து வச்சிருக்குற முட்டைகள்ல இருந்து பொட்ட கோழி பொறிக்குற முட்டையா சரியா பிரிச்சு குடுப்பாங்க. எப்படி தான் தெரியுமோன்னு ஆச்சர்யமா இருக்கும். அவங்க கணிப்பு எப்பவுமே பெர்பெக்ட் தான்...
அதென்ன பெரிய சிதம்பர ரகசியம்ன்னு ஒரு நாள் பாட்டிகிட்ட கேட்டேன். அது ஒண்ணும் பெரிய கம்பசூத்திரம் இல்ல, முட்டைய கைல குறுக்க வச்சுட்டு பாத்தா, முனை மழுங்கி இருக்குற முட்டைல இருந்து பொட்ட கோழி குஞ்சுங்க வரும், நீளமா இருக்குற முட்டைல சேவல் குஞ்சு வரும்னு சொன்னாங்க...
நானும் ட்ரை பண்ணி பாத்துருக்கேன், ஆனா ஒரு 60% வரைக்கும் சரியா இருக்கும்... இதுக்கே நான் இல்லாத காலர தூக்கி விட்டுக்குறது எல்லாம் நடக்கும்...
நிஜமாவே நம்ம முந்தின ஜெனரேசனோட நுண்ணறிவு அவ்வளவு அற்புதம். நாம தான் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு சொல்றதுக்கே கேல்குலேட்டர தேடி ஓடிடுறோம், அப்புறம் எங்க நுண்ணறிவு வளருறது?
என்ன பண்றது, காலம் மாறிடுச்சு, இனிமேல் இந்த மாதிரி நுண்ணறிவு இருக்குறவங்கள பாத்தா நமக்கு எதோ அதிசய பொருள பாத்த மாதிரி தான் பாக்கப் போறோம்...
சரி, அத விடுங்க, ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு நம்ம வேலைய ஆரம்பிப்போம்...
சரி, அத விடுங்க, ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு நம்ம வேலைய ஆரம்பிப்போம்...
இன்னிக்கி நாம பாக்கப் போற பெரும்பாலான வலைபூக்கள் கேசவராஜ் அண்ணா பரிந்துரைத்தது... அதனால கேசவராஜ் அண்ணாவுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்சோட நாம இப்ப பதிவுகள பாக்கலாம்...
நாலாயிரம் பதிவுகள், ஒரு கோடி ஹிட்ஸ், தனிநபர் தமிழ் வலைப்பூக்களில் முதலிடம்ங்குற அட்டகாசமான அதிரடியோட ஐந்தாவது ஆண்டுல அடியெடுத்து வச்சிருக்காங்க அட்ரா.... சக்க... நிஜமாவே அட்ரா சக்க தான்... அசந்துட்டேன். இதுல மேலாண்மை. பொன்னுச்சாமியோட வனச் சுதந்திரம் சிறுகதை இருக்கு. சிறுகதை விரும்பிகள் அவசியம் படிக்கவும்.
சுவாரஸ்யமாய் எழுதுவதன் ரகசியம் கற்க, எழுதி பழக, தான் இந்த மரப்பசு வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டதாம். அம்பேத்கார் வாழ்க்கைல நடந்த முக்கியமான விசயங்கள இவர் அம்பேத்கர் மனதை பாதித்த ஆறுசம்பவங்கள்... ன்னு சுருக்கமா தந்துருக்கார்.
நோக்கும் இடமெல்லாம் நாமன்றி வலைப்பூவோட சொந்தகாரர் இரா எட்வின். இவர் நிறைய எழுதியிருக்கார்னாலும் இவருடைய சாமி மீண்டும் பொய்மையாய்ப் போனார்- ங்குற சிறுகதைய முதல்ல படிச்சிடுங்க. அப்புறமா அடுத்தடுத்து ஒவ்வொரு பதிவா படிங்க..
இப்போ இணையத் தளமா தன்னோட சேவையை தொடங்கியுள்ள மாற்று வலைப்பூவுல அநீதி, அடிமைத்தனம், அறியாமை, ஆதிக்கம் பற்றின பல்வேறு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுருக்கு. அணு ஆற்றல் பத்தின கருத்துக்கள அணு ஆற்றல் தேவையா? -2 (இரு கண் பார்வை தேவை) அப்படின்னு வெளியிட்டுருக்காங்க. அவசியம் தெரிஞ்சிக்கோங்க.
கோயம்புத்தூர் இளங்கோவுக்கு சொந்தமானது இப்படிக்கு இளங்கோ. இயற்கை பொருட்களுக்காக கோவைல ஆரம்பிக்கப்பட்ட தரு இயற்கை அங்காடி பற்றிய விபரங்கள இங்க பாக்கலாம். கோவை மக்கள் கண்டிப்பா இயற்கை பொருட்கள வாங்கி பயனடையுங்க...
மனிமேகலாவோட வலைப்பூ அக்ஷ்ய பாத்ரம் . காதலர் தினத்துக்கு உங்கள் காதல் எதனை விலையாகக் கேட்கிறதுன்னு சொல்லியிருக்காங்க... படிச்சுப் பாருங்க...
செங்குருதி வலைப்பூவோட ஆசிரியர் யார்ன்னு தெரியல. ஆனா, விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்! ன்னு அமரகவி பாரதியோட வரிகள கையாண்டுருக்கார். ம. தவசியின் சேவல்கட்டு புத்தகத்தை சேவலுடன் ஒரு வாழ்க்கை ங்குற தலைப்புல விமர்சித்து எழுதியிருக்கார்.
விஷ்ணுபுரம் சரவணனோட வலைப்பூ நள்ளிரவு காற்று. தினமணி – சிறுவர் மணி ல வந்த வித்தைக்காரச் சிறுமி சிறுவர் கதைய படிச்சுட்டு உங்க வீட்டு குட்டீஸ்க்கு சொல்லிக் குடுங்க...
நீங்க அப்படியே எல்லாம் படிச்சு, கமன்ட் போட்டு எல்லாரையும் ஊக்கப்படுத்துங்க... நான் அப்படியே காலேஜ் போயிட்டு வந்துடுறேன்...
Paati sonathu arumai. vaalthukal.
ReplyDeleteபாட்டி சொன்னது தான் அருமையா? அவ்வ்வ்வ்
Deleteசில தளங்கள் பல வருடங்களாக தொடராதவை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ரெண்டு அப்படி தான் இருந்துச்சு அண்ணா, ஆனாலும் நிறைய பேர் படிக்குறாங்க...
Deleteகோழி முட்டையைப் பற்றி நான் கருத்து சொன்னால் தப்பாகி விடும் (அழுகிய) முட்டையை எடுத்து வீசினாலும் வீசிடுவீங்க....
ReplyDeleteஇன்றைய அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
-கில்லர்ஜி-
அப்புறம் நாலு நாளைக்கு முன்னாலே திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 3
ஏண்ணே, இதுக்காகவே சீக்கிரம் திருமதி ஆகிடுறேன்ண்ணே... நீங்க மறக்காம ஓட்டு போட்ருங்க, வழக்கம் போல
Deleteகோழி முட்டையும் வலைப்பூவும்!..
ReplyDelete-இதுக்கு விளக்கம் எல்லாம் கொடுக்க முடியாது.. ந்னு எப்படி நீங்க சொல்லலாம்!?..
இதுக்குள்ள எவ்வளோ பெரிய தத்துவம் இருக்கு!..
அதை தெரிஞ்சுக்கிட்டுத் தானே வெச்சீங்க!.. அருமை.. அருமை!..
தலைப்பே அருமை..ன்னா தொகுப்பைப் பற்றிச் சொல்லவா வேணும்!..
(வெள்ளிக்கிழமையும் அதுவுமா - கோழி முட்டையும் குருமாவும்..ன்னு கொடுக்காம - வலைப்பூவும் ..ன்னு கொடுத்தீங்களே!..)
அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
ஹஹா வெள்ளிக்கிழமை கோழி முட்டை போடலாம், ஆனா நாம அத ஆம்லேட் போடக்கூடாது...
Deleteவலைப்பதிவுப் பகிர்வுக்கு எனது நன்றிகள்.
ReplyDeleteநன்றிக்கு நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும்வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
Deleteவாழ்த்துக்கு வாழ்த்து
-நன்றி-
-அன்புடன்-
-காயத்ரி தேவி-
இது நண்பர் ரூபனை காலை வாறிவிடுவதுபோல் இருக்கிறதே......
Deleteஆஹா அண்ணே... விடுங்க, அவர் தான் எல்லாம் போஸ்ட்லயும் வந்து கமன்ட் போட்டுட்டு போறார் ... விட்ருங்கண்ணே
Deleteநிஜமாவே நம்ம முந்தின ஜெனரேசனோட நுண்ணறிவு அவ்வளவு அற்புதம்//
ReplyDeleteஆமாம் உண்மைதான்...வியந்து கொண்டே நாம் இருக்கலாம் அவ்வளவு இருக்கின்றன...
அடடா...கலர் எல்லாம் தூக்கி விட்டுக்கிட்டாச்சா....கரைக்கிட்டா கண்டு பிடித்ததற்கு....
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
அடடா...காலர் ... சாரி கலர்ன்னு...
Deleteஹஹாஹா... வாழ்த்துக்கு நன்றி
Delete/நிஜமாவே நம்ம முந்தின ஜெனரேசனோட நுண்ணறிவு அவ்வளவு அற்புதம்./
ReplyDeleteமிகச் சரியாகச் சொன்னீர்கள்.அத்தோடு அவர்களிடம் உண்மையும் நேர்மையும் ஒழுங்கும் ஒழுக்கமும் கூட மிகுந்திருந்தன. இன்று தகவல் தொழில் நுட்பம் புதிய உலகப் பண்பாடு ஒன்றை துரிதமாய் வளர்த்து வருகிறது. அது புதிய பரம்பரையை எங்கு கொண்டுபோய் விடப் போகிறதோ தெரியவில்லை.
கூடவே, என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி காயத்திரி. அதனை சிரத்தையோடு வந்து தெரியப்படுத்தியமைக்காக நண்பர் தனபாலருக்கு என் பிரத்தியேகமான அன்பும் நன்றியும்.
தனபாலன் அண்ணா எப்பவுமே ஆபத்பாந்தவன் தான்... நன்றிக்கு நன்றி
Deleteகோழி முட்டைத் தலைப்பு அருமை. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களோட வாழ்த்துக்கு நன்றி
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete