சாப்பாடுனாலே என்னைப் பொருத்தவரைக்கும் எப்பவும் ஸ்பெசல் தான்... சின்ன வயசுல சாப்பாட்டு ஐட்டம் எது கிடைச்சாலும் நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவேன்.
அப்படி என்னோட சாப்பாட்டு லிஸ்ட்ல இருக்குற ஐட்டங்கள் தான் தேங்காப் புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு... இந்த புண்ணாக்கு ஐட்டங்கள சாப்பிடுறதே தனிக்கலை. தேங்காப் புண்ணாக்கு அப்படியே சாப்பிடலாம். தேங்காய் எண்ணெய் வாசம் தூக்கும். எள்ளு புண்ணாக்குக்கு கருப்பட்டி செம காம்பினேசன். ரெண்டையும் உரல்ல வச்சு இடிச்சு எடுத்து சாப்பிட்டா எம்மி..... கடலைப் புண்ணாக்கு சும்மா வாய்ல போட்டாலே எச்சி ஊறிடும்...
அட, நானாவது பரவால, என் தம்பி, கூழாங்கல்லை எல்லாம் வாய்ல போட்டு குதப்பிட்டு இருப்பான்.
அப்புறம் அடுப்படில சமைக்குறோம் பேர்வழின்னு நானும் தம்பியும் அதகளம் பண்றதெல்லாம் தனிக்கதை... பிரியாணி, கடலை முட்டாய், மைசூர்பாகு, முட்டை கேக், பீசா, அதிரசம், கேசரி, உளுந்த வடை, குலோப் ஜாமூன்.... லிஸ்ட் எல்லாம் போட்டா அப்புறம் தாங்கிக்க மாட்டீங்க...
அதனால, வாங்க இப்ப நாம சில கிட்சன் கில்லாடிகள பாக்கலாம்....
1. மிராவின் கிட்சன் – வடைகள் பலவிதம்
10. தமிழ் கடல் - எள் உருண்டை
இன்னும் ஏகப்பட்ட ஐட்டம்ஸ் இருக்குனாலும் காலேஜ் போற அவசரத்துல இவ்வளவு தான் என்னால முடிஞ்சுது...
கூலாங்கல்லு வச்சு ஏதாவது ரெசிபி செய்ய முடியுமான்னு யோசிச்சு வைங்க, நான் காலேஜ் போயிட்டு வந்துடுறேன்...
kaalai vanakathudan, ahga ena oru thin pandam sapida anupavam. vaalthukal
ReplyDeleteதின்பண்டம் மட்டுமில்ல, சாப்பாடே ரசிச்சு ருசிச்சு தான் சாப்பிடணும்... வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteகிட்சன் கில்லாடிகளுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகளுக்கு தேங்க்ஸ் அண்ணா
Deleteசாப்பாட்டு விசயத்துல நானும் இப்படித்தான் கூலாங்கல்லை இடிக்க மாட்டேன் கடிச்சு சாப்பிடுவேன்.
ReplyDeleteஇன்றைய அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
-கில்லர்ஜி-
அப்புறம் அஞ்சு நாளைக்கு முன்னாலே திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 3
கூழாங்கல் வச்சு ரெசிபி சொல்லுங்கனா நீங்க அப்படியே சாப்டுறீங்க... என்னமோ போங்கண்ணே, பல் இல்லாத பாட்டி எல்லாம் எப்படி கூழாங்கல் சாப்பிடுறது?
Deleteஅப்புறம் கள்ள ஓட்டு போடாததுக்கு கண்டனங்கள்...
ஒரே ஒரு ஓட்டு போட்டதுக்கு நன்றிகள்
சமையல் அறை ....அறிமுகம் --வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு தேங்க்ஸ்.. மறக்காம எல்லா சாப்பாட்டு ஐட்டமும் செய்து பாத்து சாப்ட்டுடுங்க
Deleteஅடுக்களை....அன்பின் பிறப்பிடம்....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கண்டிப்பா அடுக்களை அன்பின் பிறப்பிடம் தானே... அம்மா அங்கயே இருக்குறதால.... வாழ்த்துக்கு நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கு நன்றிண்ணே... உங்க ஸ்டைல்ல நன்றி சொல்லலாம்னு தான் பாத்தேன், அப்புறம் சரி வேணாம்னு வெறும் நன்றிய மட்டும் தெரிவிச்சுக்குறேன்
Delete//தேங்காப் புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு... இந்த புண்ணாக்கு ஐட்டங்கள சாப்பிடுறதே தனிக்கலை..//
ReplyDeleteசந்தேகமேயில்லை!.. நீங்க நம்ம ஊரு பக்கம் தான்!..
ஸ்ரீராம் கபே மறுபடியும் திறந்துட்டாங்களா!..
கிராமம்னாலே புண்ணாக்கும் சகஜம் தானே அண்ணா...
Deleteவீட்டில் எள்ளை அலம்பி உரலில் ஒரு குத்து போட்டு வெல்லம் சேர்த்து மரச்செக்கில்
ReplyDeleteஇட்டு ,காளைமாடுகளால் எள்ளுகாணம் ஆட்டுவது என்பது வழக்கத்திலுள்ள காலம் ஒன்று இருந்தது. பிண்ணாக்கு தனி. எண்ணெய் தனியாகப் பிரித்து எடுப்பார்கள். அந்த பிண்ணாக்கு மிக்க ருசியாக இருக்கும், அதை ஊறவைத்து கறியும் செய்வார்கள்.
வெல்லம் போட்டு எண்ணெய் எடுத்தால் எண்ணெய் தெளிவாக இருக்கும், நாட்பட கெட்டுப்போகாது என்று சொல்வார்கள். இதெல்லாம் ஞாபகம் வருகிறது உன்னுடைய
இன்றைய தினப்பதிவு.
என்னுடைய பதிவையும் அறிமுகப்டுத்தியதற்கு நன்றியும் அன்பையும் சொல்லுகிறேன்.
எல்லா கிச்சன் கில்லாடிகளுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள். அன்புடன்
எங்க வீட்ல அவல் இடிப்பாங்க. எள்ளு, காணம் இதெல்லாம் சமைச்சு சாப்பிடுறது தான் எத்தனை ருசியும் ஆரோக்கியமும்...
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி
கூலாங்கல்லு வச்சு ஏதாவது ரெசிபி செய்ய முடியுமா? என்ற தங்களின் கேள்வியைப் பார்த்தவுடன், கிராமத்தில் குழந்தை பருவத்தில் மணல் வீடுகட்டி, மண்சோறு ஆக்கி விளையாண்ட அந்தநாள் நினைவுக்கு வந்தது சகோதரி. நேரம் கிடைக்கும்போது ” ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி... தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்... ” என்ற பாடலை (படம்: வாழ்க்கை வாழ்வதற்கே) முழுமையாக கேட்டு ரசியுங்கள்..
ReplyDeleteத.ம.4
ஹஹா கண்டிப்பா கேக்குறேன்.... இந்த கூலாங்கல்லு ரெசிபி எல்லாம் இந்த கால குழந்தைங்க அனுபவிக்காத ஒண்ணுன்னு நினைக்குறேன். அழுக்கு பட்டுடும்னே பல குழந்தைக்கும் தெருவுல மண்ணுல விளையாட அனுமதி கிடையாதே
Deleteசமையலறை சாதனையாளர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றிக்கு நன்றி
Deleteகிச்சன் கில்லாடிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete