2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
பத்தாம் திருநாள்
10.06.2015
49. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
கோபியர் கொஞ்சும் ரமணா ! [25]
தங்கிய தங்கத் தருணங்கள்-2 [26]
தங்கிய தங்கத் தருணங்கள்-1 [27]
50. திருமதி. ஏஞ்சலின் அவர்கள்
இவர் க்வில்லிங் வேலைகளில் நிபுணர்
வலைத்தளம்:
PAPERCRAFTS
காகிதப்பூக்கள்
Loud Speaker .... 24
ஆலமரம் .... ஓர் பிறந்த நாள் வாழ்த்து
நினைவுகள் மற்றும் அதிரசம் :))
வடுமாங்காய் - அம்மாஞ்சிக்குழம்பு
வற்றல் குழம்பு
கருப்பு முழு உளுந்து வடை + ரவா லட்டு
வெங்காய சமோசா
51. திருமதி. இமா அவர்கள்
வலைத்தளம்:
இது இமாவின் உலகம்
கீவியின் கூவல்கள்
நான் வரைந்த ஓவியமே
தொலை பேசுகிறேன்
பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி
மருதாணி ... மறுத்தாய் நீ
52. திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
பாராட்டு நூறு
ஊஞ்சல்
ராசி போட்ட முடிச்சு
லால்குடி
இவர் எழுதியுள்ள மின்னூல்
53. திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
வலைத்தளங்கள்:
இயற்கையின் கொடை ... பழங்கள்
இவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர்.
WORDPRESS இல் பல வலைத்தளங்களில் எழுதி வருகிறார்.
அதுதவிர ’நான்கு பெண்கள்’ தளத்தில் இவர் எழுதியுள்ள
’செல்வக்களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு’ கட்டுரைகளும்
அதேபோல ‘நோய் நாடி .. நோய் முதல் நாடி’ என்ற தலைப்பில்
மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகளும் மிகவும் பிரபலமானவைகளாகும்.
இந்தத்தளத்தில் இவர்களின் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கலாம்.
’விவேகாநந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன் - வாழ்க்கை வரலாறு’
என்ற நூலும், ’மலாலா ஆயுத எழுத்து’ என்ற நூலும்
சமீபத்தில் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதவிர இரண்டு மின்னூல்களும் வெளியிட்டுள்ளார்கள்.
HTTP://FREETAMILEBOOKS.COM/ EBOOKS/SADHAMINIYIN- ALAPPARAIGAL/
மொத்தத்தில் இவர் ஒரு சகலகலாவாணி
என்பதில் நமக்கு ஓர் தனிமகிழ்ச்சியே !
நாளை 11.06.2015 முதல் என் சுய அறிமுகப்பதிவுகள் மட்டும்
இங்கு வலைச்சரத்தில் வெளியிடப்பட மாட்டாது
எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :(
இது உறங்கப்போகும் நேரம் இங்கே! நேரம் 10.45. கணினியை மூடுமுன் வலைச்சரத்தை எட்டிப்பார்த்தால் 10ஆம் திருநாள் வந்திருப்பது தெரிந்தது!
ReplyDeleteதிருமதி. ராஜராஜேஸ்வரியுடன் இன்றைக்கு அறிமுகம் பெற்ற திருமதி.ரஞ்சனி நாராய்ணன், திருமதி.ராஜலக்ஷ்மி பரமசிவம், திருமதி.ஏஞ்சலின், திருமதி. இமா அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!
@மனோ சாமிநாதன்
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
வணக்கம் !
ReplyDeleteஅனைவரும் நான் அறிந்த மிகச் சறந்த பதிவர்களே ! இவர்களை அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கும் இங்கு அறிமுகமான அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா !
@அம்பாளடியாள்
Delete:) அம்பாளுக்கு மிக்க நன்றி :)
ஏஞ்சலின், இமா, ரஞ்சனி அம்மா,ராஜி அம்மா.இராஜேஸ்வரி அம்மா...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@R.Umayal Gayathri
Delete:) மிக்க நன்றி :)
வலைச்சரத்தின் 10ஆம் நாள் உற்ச்சவத்தின் உபயதாரர்கள்
ReplyDelete(சிறப்புக்குரியோர்) இன்றைக்கு அறிமுகம் பெற்ற மங்கையர் திலகங்கள்,
திருமதி. ராஜராஜேஸ்வரி, திருமதி.ரஞ்சனி நாராய்ணன், திருமதி.ராஜலக்ஷ்மி பரமசிவம், திருமதி.ஏஞ்சலின், திருமதி. இமா, அனைவருக்கும் குழலின்னிசையின் அன்பு வாழ்த்துக்கள்!
த ம
நட்புடன்,
புதுவைவேலு
எனது வலைப்பூவில் வந்து விவரம் அளித்த சகோதரர் வேலு அவர்களுக்கு மிக்க நன்றி
Delete@yathavan nambi
Delete:) மிக்க நன்றி, நண்பரே :)
த ம 3
ReplyDeleteநட்புடன்,
புதுவைவேலு
@yathavan nambi
Deleteதகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அவர்களின் பொன்னான தமிழ்மண வாக்குக்கு வலைச்சரத்தின் சார்பில் மிக்க நன்றி.
எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்ததற்கு ..நன்றி கோபு அண்ணா .என்ன்ன்னோடு அறிமுகமான அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் ..
ReplyDelete@Angelin
Delete:) மிக்க நன்றி, சகோதரி :)
தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு அண்ணா
அறிமுகம் செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDelete@பழனி. கந்தசாமி
Delete:) மிக்க நன்றி, ஐயா :)
என்னை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி கோபு சார்.என்னுடன் அறிமுகமாகியுள்ள அனைத்து சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஎன் வலைச்சர அறிமுக செய்தியை என் தளத்திற்கு வந்து அறிவித்த திரு புதுவை வேலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
@rajalakshmi paramasivam
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
இன்றைய சரத்தை அலங்கரிக்கும் அனைத்துப் பதிவர்களும் நண்பர்கள்! எல்லோரின் வலைப்பக்கத்துக்கும் சென்றிருக்கிறேன், சென்று வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள்.
ReplyDelete@ஸ்ரீராம்.
Delete:) மிக்க நன்றி, ஸ்ரீராம் :)
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDelete@பூந்தளிர்
Delete:) மிக்க நன்றி, பூந்தளிரே ! :)
இன்றைய அறிமுகங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்...
ReplyDelete@ADHI VENKAT
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
ஏஞ்சலின், இமா ஆகியோரின் பதிவுகளை தங்களால் காணும் வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் முன்னால் அறியப்பட்டவர்களே. பஞ்சாமி பல் பதிவு நகைச்சுவை கலந்த பதிவாக இருந்தது. நாளை சந்திப்போம்.
ReplyDelete@Dr B Jambulingam
Delete:) மிக்க நன்றி, முனைவர் ஐயா :)
பத்தாம் திருநாள் அருமை
ReplyDeleteதொடருங்கள்
தம +1
@கரந்தை ஜெயக்குமார்
Delete:) மிக்க நன்றி, சார் :)
அனைத்தும் தொடரும் சிறந்த பதிவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
Delete:) மிக்க நன்றி Mr. DD Sir :)
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வலைச்சரத்தில் வெற்றிகரமான 10 ஆவது நாள் பதிவு இது. தசம் என்று சொல்வார்கள் (தசாம்சம்). இன்றும் ஆன்மீகப் பதிவரின் புன்னகைப் பூக்கள்.
ReplyDeleteநீங்கள் அறிமுகம் செய்த ’காகிதப் பூக்கள்’ ஏஞ்சலின் அவர்களின் வாசகர்களில் நானும் ஒருவன். இவரது ’லவுட் ஸ்பீக்கர்’ ஒரு வித்தியாசமான தொடர். இதில் விழிப்புணர்வு சம்பந்தமான சமூக நலக் கட்டுரைகளை வாசிக்கலாம்.; க்வில்லிங் வேலைகளில் மட்டுமல்லாது வீட்டு பிராணிகள் மீதும் அன்பும் உள்ளவர். இது சம்பந்தமான சுவாரஸ்யமான கட்டுரைகளையும் இவருடைய பதிவுகளில் காணலாம்.
சகோதரி இமா அவர்களது பதிவுகளில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை.உங்கள் பதிவுகளின் கருத்துரைப் பெட்டியில் இவருடைய பெயரை பார்த்து இருக்கிறேன்; கருத்துரையைப் படித்தும் இருக்கிறேன். என்னைப் போல அவரும் போட்டோகிராபி கலையில் ஆர்வம் உள்ளவர் என்று தெரிகிறது.
சகோதரி ’அரட்டை’ ராஜலஷ்மி பரமசிவம் அவர்களது வாசகர்களில் நானும் ஒருவன். நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.
அடுத்து சகோதரி ரஞ்சனி நாராயணன். தனது பதிவுகளை WORD PRESS - இல் தொடர்ந்து எழுதுபவர். இவரது நகைச்சுவை மற்றும் உடல்நலம் சார்ந்த பதிவுகள் படிக்க அலுப்பு தட்டாதவை. இவரது வாசகர்களில் நானும் ஒருவன்.
உங்களது சுய அறிமுகப் பதிவுகள் அனைத்தையும் ஏற்கனவே படித்து இருக்கிறேன். எப்போதாவது ஆண்டார்தெரு பக்கம் வரும்போதெல்லாம், ’ராமா கபே, வரிசையில் இருக்கும் அந்த பஜ்ஜி கடையைப் பார்க்கும் போதெல்லாம், பஜ்ஜி பற்றி நீங்கள் எழுதிய பதிவுதான் எனக்கு நினைவுக்கு வரும்.
இன்றைய உங்களது அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.
த.ம.7
மிக்க நன்றி அண்ணா
Delete@தி.தமிழ் இளங்கோ
Deleteவாங்கோ சார், வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும், பொன்னான தமிழ்மண வாக்கு போன்ற அனைத்துக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள் VGK
Congratulations to all!
ReplyDelete@Chitra
Delete:) மிக்க நன்றி, சித்ரா :)
எல்லாருடய பதிவும் பார்த்தாச்ச
ReplyDelete@பூந்தளிர்
Delete//எல்லாருடய பதிவும் பார்த்தாச்சு//
:) ஓக்கேம்மா ...... தேங்க் யூ வெரி மச் :)
பிரியமுள்ள கோபு
வலைச்சர நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளின்படி
ReplyDeleteநாளை 11.06.2015 முதல் என் சுய அறிமுகப்பதிவுகள் மட்டும்
இங்கு வலைச்சரத்தில் வெளியிடப்பட மாட்டாது
எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :( ////////
வணக்கம்....
மேலே தாங்கள் குறிப்பிட்டுள்ள படி நாங்கள் சொன்ன விதிமுறைகள் புதியது என குறிப்பிட்டு உள்ளீர்கள். இதுவரை எத்தனையோ பதிவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். அவர்கள் பலரும் உங்களுக்கு நண்பர்கள் தான். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வலைச்சர விதிமுறைகள் என்னவென்று?
அதே போல வலைச்சரத்தில் அவர்கள் எவ்வாறு எழுதியிருந்தார்கள் எனவும் கேட்டுப் பாருங்கள்?
உங்களுக்கென (அ) இந்த வாரம் முதல் நாங்கள் வலைச்சர விதிமுறைகளை மாற்றி அமைத்தது போல குறிப்பிட்டு வலைச்சர வாசகர்களுக்கு எங்களின் மீதான நம்பிக்கையை சற்று குறைத்தது போல உள்ளது.
நீங்கள் மூத்த பதிவர், பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவரிடம் இருந்து இப்படி வலைச்சர விதிமுறைகளை குறை சொல்லி வரிகள் வரும் என எதிர்பார்க்கவில்லை.
மேலும் மேற்கண்ட பதிவில் முதல் அறிமுகப் பதிவர் உங்களது வலைச்சர பதிவுகளில் பல முறை வந்துள்ளது. அதுவும் வலைச்சர விதிமுறைக்கு பொருந்தாது. ஏற்கனவே வலைச்சர ஆசிரியர்களாக இருந்த உங்களது நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
மீண்டும் இங்கே வலைச்சர விதிமுறைகளை பகிர்கிறேன்
4. முதல் பதிவாக இடும் அறிமுக இடுகையில் தங்கள் சொந்த வலைத்தளம் / வலைப்பதிவுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். தங்களின் முக்கியமான பழைய இடுகைளுக்கு சுட்டி கொடுத்து குறிப்பும் தரலாம்.
5. மற்ற பதிவர்களின் இடுகைகளில் படித்ததில் பிடித்த, கவர்ந்த பதிவுகளைப் பற்றி, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் பதிவுகளை, பலருக்கும் பயன்படும் பதிவுகளை எல்லாம் அறிமுகம் செய்யலாம்.
6. புதிதாக பதிவுலகிற்கு வந்துள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து தொகுத்து ஒரிரு இடுகைகள் இடலாம்.
பெரும்பாலும் குறிப்பிட்ட இடுகையை சுட்டிக்காட்டி அந்த அறிமுகம் அமைவது நல்லது.
7. துறை வாரியாகவும் மற்றபடி கற்பனைக்கேற்றபடியும் தொகுப்புகளை வழங்கலாம்.
8. அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.
********************
நீங்கள் வேறு வலைப்பூவில் மாதிரி எழுதி வலைச்சரத்தில் பேஸ்ட் செய்து ஒவ்வொரு பதிவும் வெளியிட்டு வருகிறீர்கள். அப்படியிருக்கையில் இந்தப் பதிவிலும் நீங்கள் நினைத்திருந்தால் உங்களது சுய வலைப்பூ பதிவுகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் நாளை என நோட்டீஸ் கொடுத்து உள்ளீர்கள். ஆனாலும் இத்தகைய பதிவுகளை எங்களால் அனுமதிக்க முடியாது. எனவே வலைச்சரத்தில் மேலே எங்களது ஓடும் வரிகளின் படி தங்களது சுய அறிமுக பதிவைத் தவிர்த்து மற்ற பதிவுகளில் உங்களது சுய பதிவுகளை (வலைச்சர பொறுப்பாசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றே) நீக்குகிறேன். (இனி புதியதாய் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் பதிவர்கள் உங்களது பதிவை முன்மாதியாக எடுத்துக் கொள்வார்கள் எனக் கருதி)
தமிழ்வாசி பிரகாஷ் Wed Jun 10, 10:20:00 AM
Delete*வலைச்சர நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளின்படி நாளை 11.06.2015 முதல் என் சுய அறிமுகப்பதிவுகள் மட்டும் இங்கு வலைச்சரத்தில் வெளியிடப்பட மாட்டாது எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :( ////////
//வணக்கம்....//
இனிய நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு, வணக்கம்.
//மேலே தாங்கள் குறிப்பிட்டுள்ள படி நாங்கள் சொன்ன விதிமுறைகள் புதியது என குறிப்பிட்டு உள்ளீர்கள். இதுவரை எத்தனையோ பதிவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். அவர்கள் பலரும் உங்களுக்கு நண்பர்கள் தான். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வலைச்சர விதிமுறைகள் என்னவென்று?//
இவைகள் எல்லாம் வலைச்சரத்தின் பழைய விதிமுறைகளாகவே இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நான் முதன் முதலாக வலைச்சர ஆசிரியராக இப்போது மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதால் இவை எதுவும் என் கவனத்திற்கு யாராலும் ஒருபோதும் கொண்டுவரப்படவில்லை. 08.06.2015 அன்று தாங்கள் அனுப்பிவைத்த மின்னஞ்சல் செய்திகள் மூலம் மட்டுமே, இதில் இவ்வளவு கெடுபிடிகள் உள்ளன என்பதை ஓரளவுக்கு நான் அறிந்துகொண்டேன்.
//அதே போல வலைச்சரத்தில் அவர்கள் எவ்வாறு எழுதியிருந்தார்கள் எனவும் கேட்டுப் பாருங்கள்?//
ஏற்கனவே வலைச்சரத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சில பதிவர்கள் (வலைச்சர ஆசிரியர்கள்) ஏற்கனவே அந்த வாரம் முழுவதும் அவர்களின் சொந்த வலைத்தளப் பதிவுகளை சுய அறிமுகமாகக் காட்டியுள்ளார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அதேபோல வாரம் முழுவதும் ஒரே பதிவரின் பதிவுகளை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள வலைச்சர ஆசிரியர்களும் உள்ளனர். ஒருவேளை அவை விதிமீறல்களாக அப்போது இருந்த வலைச்சர நிர்வாகிகளால் கருதப்படாமல் அனுமதிக்கப்பட்டும் இருக்கலாம். OK .... Past is Past. அதனால் மட்டுமே, அவற்றின் இணைப்புகளை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
>>>>>
//உங்களுக்கென (அ) இந்த வாரம் முதல் நாங்கள் வலைச்சர விதிமுறைகளை மாற்றி அமைத்தது போல குறிப்பிட்டு வலைச்சர வாசகர்களுக்கு எங்களின் மீதான நம்பிக்கையை சற்று குறைத்தது போல உள்ளது.
Deleteநீங்கள் மூத்த பதிவர், பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவரிடம் இருந்து இப்படி வலைச்சர விதிமுறைகளை குறை சொல்லி வரிகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. //
இல்லை. அப்படி ஏதும் நினைத்து நான் குறிப்பிடவே இல்லை. என் தற்போதைய உடல்நிலையை உத்தேசித்து தாங்கள் எவ்வளவோ விட்டுக்கொடுத்துப்போய் இருக்கிறீர்கள் என்பதைத்தான் என்னால் நன்றியுடன் உணரமுடிகிறது. அதற்கு மீண்டும் என் நன்றிகள்.
தாங்கள் இப்படியெல்லாம், ’வலைச்சர விதிமுறைகளை’ நான் ஏதோ குறை சொன்னதாக எடுத்துக்கொள்வீர்கள் என நானும் எதிர்பார்க்கவில்லை.
>>>>>
//மேலும் மேற்கண்ட பதிவில் முதல் அறிமுகப் பதிவர் உங்களது வலைச்சர பதிவுகளில் பல முறை வந்துள்ளது. அதுவும் வலைச்சர விதிமுறைக்கு பொருந்தாது. ஏற்கனவே வலைச்சர ஆசிரியர்களாக இருந்த உங்களது நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். //
Deleteநாளை முதல் அந்தக்குறிப்பிட்ட பதிவரின் பெயரும், வலைத்தள முகவரியும், Profile Photo வும் இடம்பெறாமல் வேறு தலைப்பிட்டு கொடுக்க உத்தேசித்துள்ளேன். இதைமட்டும் தயவுசெய்து வலைச்சர நிர்வாகம் ஏற்றுக்கொண்டு உதவிட வேண்டுமாய் அன்புடன் கோரிக்கை வைக்கிறேன். ஏற்கனவே இதுபற்றி குறிப்பாக நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களிடமும் நான் சொல்லியுள்ளேன் என்பதை இங்கு மீண்டும் நினைவூட்டுக்கொள்கிறேன்.
>>>>>
//*********
Deleteமீண்டும் இங்கே வலைச்சர விதிமுறைகளை பகிர்கிறேன்
4. முதல் பதிவாக இடும் அறிமுக இடுகையில் தங்கள் சொந்த வலைத்தளம் / வலைப்பதிவுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். தங்களின் முக்கியமான பழைய இடுகைளுக்கு சுட்டி கொடுத்து குறிப்பும் தரலாம்.
5. மற்ற பதிவர்களின் இடுகைகளில் படித்ததில் பிடித்த, கவர்ந்த பதிவுகளைப் பற்றி, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் பதிவுகளை, பலருக்கும் பயன்படும் பதிவுகளை எல்லாம் அறிமுகம் செய்யலாம்.
6. புதிதாக பதிவுலகிற்கு வந்துள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து தொகுத்து ஒரிரு இடுகைகள் இடலாம்.
பெரும்பாலும் குறிப்பிட்ட இடுகையை சுட்டிக்காட்டி அந்த அறிமுகம் அமைவது நல்லது.
7. துறை வாரியாகவும் மற்றபடி கற்பனைக்கேற்றபடியும் தொகுப்புகளை வழங்கலாம்.
8. அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.
********************//
மிக்க நன்றி. இவை இனி வரப்போகும் வலைச்சர ஆசிரியர்களும் தங்களின் கவனத்தில்கொண்டு செயல்பட மிகவும் உதவியாக இருக்கும்.
>>>>>
//நீங்கள் வேறு வலைப்பூவில் மாதிரி எழுதி வலைச்சரத்தில் பேஸ்ட் செய்து ஒவ்வொரு பதிவும் வெளியிட்டு வருகிறீர்கள். அப்படியிருக்கையில் இந்தப் பதிவிலும் நீங்கள் நினைத்திருந்தால் உங்களது சுய வலைப்பூ பதிவுகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் நாளை என நோட்டீஸ் கொடுத்து உள்ளீர்கள். ஆனாலும் இத்தகைய பதிவுகளை எங்களால் அனுமதிக்க முடியாது.//
Deleteஆம். நான் எந்த ஒரு வேலை அல்லது பொறுப்பினை ஏற்றுக்கொண்டாலும், முன்கூட்டியே திட்டமிட்டு அவற்றை ஓரிடத்தில் தனியாக அழகாக வடிவமைத்துக்கொண்டுதான், பிறகு அவற்றை வெளியிடுவது வழக்கம்.
இப்போது அநேகமாக தினமும் பலமணி நேரங்கள் ஆஸ்பத்தரிக்குச் சென்று மருத்துவரைப் பார்த்துவிட்டு வரவேண்டிய சூழல் நாளுக்கு நாள் எனக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால், எனக்கு புதிதாக வலைச்சரத்தில் எழுத, போதிய நேர அவகாசம் இல்லை. அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு இவற்றை ஓரளவு ’மாதிரிப் பதிவுகளாக’ ஆக்கி, தயார் நிலையில் என்னிடம் வைத்துக்கொண்டு விட்டேன். அதனால் மட்டுமே இன்றைய என் பதிவினில் திடீர் மாற்றங்களை என்னால் உடனடியாகக் கொண்டுவர இயலவில்லை. அதனால் நாளை முதல் செய்வதாகக் கேட்டுக்கொண்டேன். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
>>>>>
//எனவே வலைச்சரத்தில் மேலே எங்களது ஓடும் வரிகளின் படி தங்களது சுய அறிமுக பதிவைத் தவிர்த்து மற்ற பதிவுகளில் உங்களது சுய பதிவுகளை (வலைச்சர பொறுப்பாசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றே) நீக்குகிறேன். //
Deleteமுதல் நாள் என் சுய அறிமுகப்பதிவினிலேயே இவ்வாறு நான் குறிப்பிட்டுள்ளேன்:
-=-=-=-=-=-
நான் என் வலைத்தளத்தினில் எழுதி வெளியிட்டுள்ள சிறுகதைகளும், இதர ஆக்கங்களும் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவைகளாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இந்த வலைச்சரத்தில் தினமும் அவ்வப்போது கொஞ்சமாக குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
பதிவின் நீளம் கருதி என் சுயபுராணங்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு விடைபெறுகிறேன். நாளை முதல் தினமும் மற்ற பிரபல பதிவர்களில் சிலரை மட்டும் அடையாளம் காட்டிட விரும்புகிறேன்.
-=-=-=-=-=-
அதில் நான் சொல்லியுள்ளபடியே, தொடர்ந்து அடுத்துவந்த 10 நாட்களுக்கும் என் சுய அறிமுகப்பதிவுகளை அன்றாடம் இறுதியில் காட்டி வந்தேன்.
இனி அவ்வாறு செய்யாமல் தங்களின் வழிகாட்டுதல்களை ஏற்று, அந்த இடத்தில் வேறு ஒரு புதிய பதிவரை நாளை 11.06.2015 முதல் அடையாளம் காட்டி சிறப்பிக்கலாம் எனவும் இப்போது முடிவெடுத்து விட்டேன்.
அதனால் இதுவரை நான் வெளியிட்டுள்ள பதிவுகளை (PAST IS PAST) ‘போனது போகட்டும்’ என நினைத்து, அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும் என விட்டுவிடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவற்றில் எதையாவது தாங்கள் நீக்குவதற்கு பதிலாக என்னையே கூட வலைச்சர ஆசிரியர் பதவியிலிருந்து, உடனடியாக நீக்கிவிட்டாலும் நல்லது. எதையும் நான் மகிழ்ச்சியுடன் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்.
ஏற்றுக்கொண்டபடி 35 நாட்களும் ஆர்வத்துடன் வலைச்சர ஆசிரியர் பணியினை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதே இன்னமும் எனது விருப்பமாக உள்ளது என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் நாளை முதல் என் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்களில் நீடிப்பதா வேண்டாமா என்பதை வலைச்சர நிர்வாகம் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.
கடந்த 10 நாட்களில் வலைச்சரத்திற்கான வாசகர்களின் வரவேற்புகள் அவர்கள் தினமும் அளித்துள்ள கணிசமான தமிழ்மண வாக்குகள் + ஏராளமான பின்னூட்டங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
வலைச்சரம் தொடர்ந்து பொலிவுடன் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும்.
என்றும் அன்புடன் VGK
இன்றைய அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களது நான்கு சிறு கதைகளையும் படித்தேன்!. இரசித்தேன். வாழ்த்துக்கள்!
ReplyDelete@வே.நடனசபாபதி
Delete:) மிக்க நன்றி, சார். மிகவும் சந்தோஷம் :)
மிக அருமையான பதிவுகளின் அறிமுகம். அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@RAMA RAVI (RAMVI)
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
>>> அநேகமாக தினமும் பலமணி நேரங்கள் ஆஸ்பத்தரிக்குச் சென்று மருத்துவரைப் பார்த்துவிட்டு வரவேண்டிய சூழல் நாளுக்கு நாள் எனக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால், <<<
ReplyDeleteஇனிய பதிவுகளைத் தொகுப்பதில் -
எத்தனை எத்தனை சிரமங்கள் - தங்களுக்கு..
நலம் வாழ வேண்டுகின்றேன்..
@துரை செல்வராஜூ
Delete:) தங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி, சார் :)
//இப்போது அநேகமாக தினமும் பலமணி நேரங்கள் ஆஸ்பத்தரிக்குச் சென்று மருத்துவரைப் பார்த்துவிட்டு வரவேண்டிய சூழல் நாளுக்கு நாள் எனக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால், எனக்கு புதிதாக வலைச்சரத்தில் எழுத, போதிய நேர அவகாசம் இல்லை. //
ReplyDeleteஇந்த நிலையில் இப்படி ஒரு பொறுப்பை அதுவும் 35 நாட்கள் ஏற்றுக் கொண்டது உங்களின் சிரத்தை, எழுத்தின் மேல் உள்ள காதல், மற்றவர்களை ஊக்குவிக்கும் நல்லெண்ணம் இவற்றைத்தான் காட்டுகிறது.
நீங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இன்று அறிமுகமான அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Jayanthi Jaya
Deleteவாங்கோ, வணக்கம்.
//இந்த நிலையில் இப்படி ஒரு பொறுப்பை அதுவும் 35 நாட்கள் ஏற்றுக் கொண்டது உங்களின் சிரத்தை, எழுத்தின் மேல் உள்ள காதல், மற்றவர்களை ஊக்குவிக்கும் நல்லெண்ணம் இவற்றைத்தான் காட்டுகிறது.
நீங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
தங்கள் புரிதலுக்கும், பேரன்புக்கும், என் மீதான தனி அக்கறைக்கும், என் நலம் வேண்டி செய்யும் பிரார்த்தனைகளுக்கும், மிக்க நன்றி, ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
சகோதரி இமா தவிர மற்றவர்கள் மிகவும் பரிச்சயம். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//இப்போது அநேகமாக தினமும் பலமணி நேரங்கள் ஆஸ்பத்தரிக்குச் சென்று மருத்துவரைப் பார்த்துவிட்டு வரவேண்டிய சூழல் நாளுக்கு நாள் எனக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால், எனக்கு புதிதாக வலைச்சரத்தில் எழுத, போதிய நேர அவகாசம் இல்லை//
இந்த உடல் நலக் குறைவிலும் கூட வலைச்சர ஆசிரியப்பணி பார்ப்பது வியக்க வைக்கிறது சார்! உங்கள் ஆர்வத்தைக் கண்டு. தங்கள் உடல் நலம் காத்துக் கொள்ளவும். தங்கள் உடல் நலம் நன்றாகிட எங்கள் பிரார்த்தனைகள்! சார். டேக் கேர் சார்!
@Thulasidharan V Thillaiakathu
Deleteதங்களின் வியப்புக்கும், அன்புக்கும், அக்கறைக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் அன்பு நன்றிகள், சார்.
இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.
ReplyDelete- கில்லர்ஜி
@KILLERGEE Devakottai
Delete:) நன்றி :)
தாங்கள் இன்று அறிமுகம் செய்துள்ள
ReplyDeleteபதிவர்கள் அனைவரின் பதிவுகளும்
ஆழமான சிந்தனையில் விளைந்தவைகளாகவும்
பயனுள்ளவைகளாகவும் இருக்கும் என்பதால்
நான் தவறாது தொடர்வேன்
அறிமுகத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@Ramani S
Delete:) மிக்க நன்றி, Mr. Ramani Sir :)
இன்றைய வலைச்சர அறிமுகப் பதிவர்கள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!!!
@அ. முஹம்மது நிஜாமுத்தீன்
Delete:) மிக்க நன்றி, நண்பரே :)
இன்றைய அறிமுகத்தில் இமா தவிர மற்றவர்களைத் தெரியும். ராஜலெட்சுமியின் நகைச்சுவை கதாபாத்திரம் ராசியை எனக்குப் பிடிக்கும். தினமும் மருத்துவமனை சென்று வர வேண்டியிருப்பதை அறிந்து வருத்தமேற்பட்டது. உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். த ம வாக்கு 9. எல்லோருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்!
ReplyDelete@Kalayarassy G
Deleteவாங்கோ, வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும், என் உடல்நலம் மீது பரிவுடன் காட்டிடும் அக்கறைக்கும், மற்றவர்களுக்கான வாழ்த்துகளுக்கும், பொன்னான தமிழ்மண வாக்குக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.
நன்றியுடன் கோபு
இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், தங்களுக்கு என் நன்றிகள்.
ReplyDelete@mageswari balachandran
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
இன்றைய வலைச்சர அறிமுகங்களில் நான் அறிந்த அஞ்சலின். இமா. ரஞ்சனி எனது வாழ்த்துகள். மற்றவர்களையும் தொடர்கின்றேன் இன்றைய குயில்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDelete@தனிமரம்
Delete:) மிக்க நன்றி, சார் :)
அனைவரும் நான் தொடரும் சிறப்பான பதிவர்கள்! திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதிய குழந்தை வளர்ப்பு கட்டுரைகள் மிகவும்பயனுள்ளதாக இருக்கும். சிறப்பான தொகுப்பு! நன்றி! நேற்று இட்ட கருத்துரை பதிவாகவில்லை! அதனால் இந்த கருத்தை பதிகின்றேன்! நன்றி!
ReplyDeleteராஜி, ஏஞ்சல், இமா, ராஜலெக்ஷ்மி, ரஞ்சனி மேடம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி விஜிகே சார்
வணக்கம் வைகோ ஸார்.
ReplyDeleteஎன் வலைத்தளங்களையும், புத்தகங்களையும் வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கு நன்றி. ஊரில் இல்லாததால் உடனே வந்து பார்த்து நன்றி கூற முடியவில்லை. மன்னிக்கவும்.
என்னை இங்கு பாராட்ட்யிருக்கும் பதிவுலக அன்பர்களுக்கும் எனது நன்றி. என்னுடன் அறிமுகமாகி எழுத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் மற்ற பதிவர் சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
திரு ஸ்ரீராம் (எங்கள் ப்ளாக்) இந்தச் செய்தியை எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். அவரிடம் என் நிலைமையை சொல்லி உங்களுக்கு அறிவிக்குமாறு சொன்னேன். சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
நன்றி ஸார்!