Tuesday, June 23, 2015

வலைச்சரத்தில் ஜீஎம்பி யின் 2-ம் நாள்


                              வலைச்சரத்தில் ஜீஎம்பி-யின் 2-ம் நாள்
                              --------------------------------------------------------


இரண்டாம் நாள்
வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலேயே கடினமான வேலை இதுதான் என்று எண்ணுகிறேன் பதிவர்களை அறிமுகப் படுத்துதல் என்பதே சரியில்லையோ. அப்படி வலைச்சரத்தில் அறிமுகமாகும் பல பதிவர்களும் பெயர் பெற்றவர்களே,இருந்தாலும் அவர்களையும் படிக்காத சிலரும் இருக்கலாம் அவர்களுக்காக என்று எடுத்துக் கொள்ளலாம் நானும் பதிவர்கள் சிலரை வகைப் படுத்தி அவர்கள் பற்றி எழுத முடிவு செய்துள்ளேன்
அன்பே சிவம் என்னும் கொள்கை உடையவன் நான் அந்த அன்பு பற்றி சென்னைப் பித்தன் அவர்கள் எழுதி இருப்பது ரசிக்க வைத்தது ”புலியின்மீசை”  என்ற கதையோடு அது பற்றி ஓர் விளக்கம்
வே.நடன சபாபதி எப்போதும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறோம், ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்துத் தொடராக எழுதி வருகிறார் எந்தப்பதிவைப் படித்தாலும் சுவாரசியமாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்கும் சாம்பிளுக்கு ஒன்று .இவரது பல்வேறு பரிமாணங்கள் இன்னும் சரியாக வெளிச்சத்துக்கு வரவில்லை என்று நினைக்கிறேன் ஓவியம் தீட்டுவதில் வல்லவர். தமிழை ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுபவர்.
தி தமிழ் இளங்கோவை நான் திருச்சியில் ஒருமுறையும் மதுரை பதிவர் விழாவிலும் சந்தித்தேன் சில நேரங்களில் நான் எழுதுவது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரியும் . அதுவும் என் சில தீவிரக் கருத்துக்களில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரியும் அவரவருக்கான ஸ்பேஸ் என்று எண்ணத்தில் கண்டுகொள்ள மாட்டார். இவர் இன்ன மாதிரிப் பதிவுதான் எழுதுவார் என்று சொல்ல முடியாது. சில பதிவுகள் அவுட் ஆஃப் த வேர்ல்ட் ஆக இருக்கும் . சைவ சித்தாந்தக் கருத்துக்களில் ஈடு பாடுடையவர் என்று தெரிகிறது. சில நேரங்களில் என் எழுத்துக்கள் இன்னாரது எழுத்துப் போல் இருக்கிறது என்றும் பின்னூட்டமிடுவார். திரைப் பாடல்கள் நடிகர்கள் என்று இவர் ரசிக்கும் விஷயங்கள் பல. அண்மையில் நடிகர் எஸ்வி,ரங்கராவ் பற்றி எழுதி இருந்தார். நீங்களும் பாருங்களேன்
டி பி ஆர் ஜோசப் என்னுலகம் என்னும் தளத்தில் எழுதுகிறார். அண்மையில் இவரது பதிவுகள் வருவது குறைந்து விட்டது ஆனால் இவர் எழுதி வந்த சொந்த செலவில் சூனியம் என்னும் க்ரைம் தொடர் போல் நான் இதுவரைப் படித்ததில்லை. காவல்நிலைய சங்கதிகள் நீதிமன்ற நிகழ்வுகள் போன்றவை பாடமாக இருக்கும் வெகு நீளமானதொடர். இருந்தாலும் விடாமல் படிக்கத் தூண்டும் கதையும் எழுத்தும் அது மட்டுமல்ல பொருளாதார விஷயங்களும் இவருக்கு அத்துப்படி தொடரின் ஆரம்பச் சுட்டியைத் தருகிறேன். இவரது பின்னூட்டங்களை ஆங்காங்கு நான் கண்டாலும் இவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் சென்னை வாசியான இவரை சந்திக்கவும் ஆசை “க்ரைம் தொடர்
 
மைத்துளிகள் என்னும் தளத்தில் எழுதும் மாதங்கி மாலி ஒரு வித்தியாசமான பெண்மணி. முதலில் என் பதிவு ஒன்றுக்கு அவர் எழுதி இருந்த பின்னூட்டம் என்னை அவர்பால் ஈர்த்தது கோவில்களில் கருவறைகளில் நாம் காணும் கடவுளின் உருவச் சிலை தெரியாத அளவுக்கு வெளிச்சம் இல்லாமலிருப்பதால் கடவுளின் உருவத்தை மனதில் பதிக்க முடிவதில்லை என்பது போல் ஒரு பதிவில் எழுதி இருந்தேன் உருவமில்லாத கடவுளைத் தரிசிக்க வெளிச்சம் எதற்கு. உள்ளம் வெளிச்சமாக இருந்தால் போதாதா

என்கிற மாதிரியான பின்னூட்டம் பிற்குதான் தெரிந்து கொண்டேன் இருபதுகளில் இருக்கும் இள மாது என்று. இவரையும் இவரது தந்தை மஹாலிங்கத்தையும் சென்னையில் இரு முறை சந்தித்து இருக்கிறேன்  இரு முறையும் சிரமம் பார்க்காமல் என்னைக் காண வந்திருந்தார்கள் இவரது சிந்தனைகளின் போக்கே புரிபடாதபடி சிலநேரங்களில் எழுதுவார். ஒரு முறை நான் அப்ஸ்ட்ராக்டாக எழுதாமல் புரியும் படி எழுதலாமே என்று பின்னூட்டமிட்டிருந்தேன் அது அவருக்கு உடன்பாடில்லை என்னும் விதத்தில் கோபமாக மறு மொழி எழுதி இருந்தார் ஹைலி இண்டிபெண்டண்ட் மைண்ட். அவரது  சாரல் “ என்னும் பதிவையும் படியுங்கள் புரியும்
என்ன நண்பர்களே நான் பதிவர்களை வகைப்படுத்தி இருப்பதன் பேஸ்(base) புரிகிறதா இவர்கள் வங்கிப் பின்னணி கொண்டவர்கள்.நான் கொடுத்திருக்கும் சுட்டிகளில்  உள்ள பதிவுகள் மாதிரிக்கே. இன்னும் அதிக விஸ்தீரணம் உள்ளவர்கள் மீண்டும் நாளை சந்திப்போம்

55 comments:

  1. இவ்வுலகில் பணமே பிரதானம் என்றுணர்ந்து வங்கிப் பதிவர்களைத் முதலாவதாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. @ டாக்டர் கந்தசாமி
      அப்படி எல்லாம் இல்லை ஐயா. எப்படித் துவங்கிவகைப் படுத்துவதுஎன்று நினைத்தபோது ஏற்பட்ட ஒரு திடீர் முடிவு. முதல் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  2. டி பி ஆர் ஜோசப் ஐயா அவர்களை சந்திக்க வேண்டும் எனும் ஆவல் உள்ளது...

    வங்கிப் பின்னணி கொண்ட அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. @ திண்டுக்கல் தனபாலன்
      திரு ஜோசப் சென்னை ஆவடியில் இருக்கிறார். அறிமுகப் பதிவர்களை வாழ்த்தியதற்கு நன்றி டிடி

      Delete
  3. டி பி ஆர் ஜோசப், மைத்துளிகள் இருவரைத் தவிர பிறரை அறிவேன். அவர்களுடைய தளங்களுக்குச் சென்று படித்தேன், பின்னூட்டம் இட்டுள்ளேன். தங்களின் அயரா உழைப்பின் வெளிப்பாடாக பதிவுகள் மிளிர்கின்றன. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. @ டாக்டர் ஜம்புலிங்கம்
      பதிவர்களின் தளம் சென்றது கேட்டு மகிழ்ச்சி ஐயா. பாராட்டுக்கு நன்றி.

      Delete
  4. தமிழ்மணத்தில் பதிவை இணைத்து (+1) விட்டேன்...

    இணைக்க தாமதமானால் நம் (சில) நண்பர்கள் இணைத்து விடுவார்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. @ திண்டுக்கல் தனபாலன்
      நேற்று இணைக்கச் சென்றபோது ஏற்கனவே இணைத்தாயிருந்தது என் பதிவுகளை நான் இணைக்காமலேயே அவைஇணைக்கப் படுவது போல் என்று நினைத்தேன் தமிழ் மணத்தில் இணைத்ததற்கு நன்றி டிடி

      Delete
  5. அறிமுகங்களை வாழ்த்துவோம்
    தொடரட்டும் தங்களின் சீரிய பணி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. @ கரந்தை ஜெயக் குமார்
      இந்த அறிமுகம் என்னும் வார்த்தையே இங்கு சரியில்லையோ என்று தோன்றுகிறது. இவர்கள் வலையுலகில் பிரபலங்கள் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  6. வலைச்சரத்தில் என்னை வேறு கோணத்தில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. @ வே.நடன சபாபதி
      எனக்குத் தெரிந்தவரை சொன்னேன் ஐயா. வருகைக்கு நன்றி.

      Delete
  7. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. @ சென்னை பித்தன்
      மேலே சொன்ன மறு மொழியே. நன்றி ஐயா

      Delete
  9. வணக்கம் ! தங்கள் பணி சிறக்கவும், அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. @ இனியா
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மேம்

      Delete
  10. இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகளும்....

    கில்லர்ஜி

    ReplyDelete
  11. இன்று வலைச் சரத்தில் தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்,

    ReplyDelete
    Replies
    1. @ மகேஷ்வரி பாலசந்திரன்
      உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மேம்

      Delete
  12. இன்றைய அறிமுகப்பதிவர்களில் மைத்துளி மாதங்கியைத்தவிர மற்றவர்கள் அறிமுகப்பதிவர்களே என்பதில் மகிழ்வே. தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. !@ சசிகலா
      இப்பதிவின் மூலம் மாதங்கியுடன் அறிமுகம் ஆனால் மகிழ்வேன் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  13. I ) இன்றைய வலைச்சரத்தில் ஒருமலராக எனது வலைத் தளைத்தினையும் சேர்த்த அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். இந்த தகவலை எனது வலைத்தளம் வந்து தெரிவித்த முனைவர் B. ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு நன்றி.

    // சில நேரங்களில் நான் எழுதுவது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரியும் . அதுவும் என் சில தீவிரக் கருத்துக்களில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரியும் அவரவருக்கான ஸ்பேஸ் என்று எண்ணத்தில் கண்டுகொள்ள மாட்டார். //

    அவரவர் தளத்தில் அவரவர் கருத்தினைச் சொல்கிறார்கள்; இதில் எனக்கு பிடிக்காதது என்று நான் சொல்ல முடியாது. சிலசமயம் எல்லா பதிவுகளுக்கும் கருத்துரைகள் எழுத முடியாமல் போய் விடுகிறது. அவ்வளவுதான்.

    // இவர் இன்ன மாதிரிப் பதிவுதான் எழுதுவார் என்று சொல்ல முடியாது. சில பதிவுகள் அவுட் ஆஃப் த வேர்ல்ட் ஆக இருக்கும் . சைவ சித்தாந்தக் கருத்துக்களில் ஈடு பாடுடையவர் என்று தெரிகிறது. //

    ஆரம்பத்தில் இலக்கியம் மட்டுமே எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வலைப்பக்கம் எழுத வந்தேன். அதிக வாசகர்கள் கொள்வாரில்லை. எனவே இலக்கியம் உட்பட அனுபவம், சினிமா என்று எழுதுகிறேன்.. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” - என்ற கருத்தினில் எம்மதமும் எனக்கு சம்மதமே


    II) மூத்த வலைப்பதிவர்கள் சென்னைப்பித்தன், வே.நடனசபாபதி, டி.பி.ஆர் ஜோசப் ஆகியோரது வலைத்தளங்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகன் நான். ஜோசப் அய்யா ஏனோ இப்போது எழுதுவதில்லை. சகோதரி மாதங்கி மாலி அவர்களின் வலைத்தளம் சென்றதில்லை. அவர் வங்கிதுறையைச் சார்ந்தவர் என்று உங்கள் பதிவின் வழியே தெரிந்து கொண்டேன்.

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. @ தி தமிழ் இளங்கோ
      வலைப் பதிவுகளில் வரும்பதிவுகளும் இடும் பின்னூட்டங்களும் சில அனுமானங்களைத் தோற்றுவித்தது. தவறாய் ஏதுமில்லையே. மாதங்கி மாலி ஐ டி துறையிலிருந்து வங்கித் துறைக்கு வந்தவர். தற்சமயம் திருச்சிவாசி. இப்பதிவுமூலம் ஒரு புதிய பதிவர் அறிமுகமாவது மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி ஐயா.

      Delete

  14. "இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துகள்!"

    காசேதான் கடவுளப்பா!-அது
    கடவுளுக்கும் தெரியுமப்பா!

    ஆஹா! கடவுளுக்கே மிக வேண்டப் பட்ட
    பதிவர்களா? இன்று!!!

    (வங்கிப் பதிவர்கள்
    சிறப்பு பதிவுக்கு வணக்கங்கள்)
    1) சிலர் காசை கண்களில் ஒத்திக்! கொள்வார்கள்
    2) கண்களில் ஒத்திக் கொள்ளும் மிகச் சிறந்த பதிவுகளைத் தந்த பதிவாளார்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்! நன்றி அய்யா!
    த ம 5

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @ யாதவன் நம்பி
      ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டீர்கள். எப்படி வகைப்படுத்துவது என்று நினைக்கையில் தோன்றியதே இந்த வங்கியாளர் அறிமுகம் மற்றபடி தேவைக்கு மட்டுமே காசு என்பவன் நான் வருகைக்கு நன்றி.

      Delete
  15. இன்று அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர்கிறோம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. @ உமையாள் காயத்ரி
      அறிமுகம் என்னும் சொல்லே சரியில்லையோ. இன்று நான் அடையாளம் காட்டி இருக்கும் பதிவர்களனைவரும் தனக்கென ஒரு பாணியுடன் பதிவிட்டு வருபவர். சுட்டியில் காணும் அவர்கள் தளமே இதைச் சொல்லும் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. வணக்கம் அய்யா!
    ஒட்டளிப்பதில் தமிழ் (தி.தமிழ் இளங்கோ )என்னை முந்திக் கொண்டு வாக்கு அளித்து விட்டார்!
    எனது த ம வாக்கு 6
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @ யாதவன் நம்பி
      இந்த ஓட்டளிப்பு விஷயமே எனக்குத் தெரியாதது. நான் அடையாளம் காட்டி இருக்கும் பதிவர்களுக்கு வலைச்சரத்தில் அவர்களைப் பற்றி வந்திருப்பதை யார் தெரிவிப்பார்கள். ? சிலர் தினசரி வலைச்சரம் பார்க்காதவர்களாயும் இருக்கலாம் . மீள்வருகைக்கு நன்றி சார்

      Delete
  18. மாதங்கி அவர்களின் பதிவுகளை படித்ததில்லை. .படித்து விடுகிறேன். சென்னை பித்தன் அவர்கள்தான் என்னை முதன் முதலில் வலைசரத்தில் அறிமுகப் படுத்தியவர் .

    ReplyDelete
    Replies
    1. @ டி.என். முரளிதரன்
      மாதங்கி மாலி ஒரு சுவாரசியமான பதிவர். புதிய அறிமுகம் என்பதில் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி முரளி.

      Delete
  19. வணக்கம் ஐயா!, இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மாதங்கி மாலி அவர்களின் பதிவுகளை இதுவரை வாசித்தது இல்லை! மற்றவர்களின் தளம் சென்று வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்! இவர்கள் அனைவருமே வங்கியில் பணியாற்றியவர்கள் பணிபுரிபவர்கள் என்பது எனக்கு புதிய விஷயம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @ தளிர் சுரேஷ்
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. பதிவர்பற்றிய சில செய்திகளும் அவர்கள் தளமும் அடையாளம் காட்டப்படுவதே நோக்கம்

      Delete
  20. அன்பின் ஐயா..

    இங்கே - ரமலான் நோன்பு நேரம். எனவே வேலை நேரத்தில் மாறுதல்.
    வேலை முடித்து இப்போது தான் வந்தேன்.. எனினும் விடியற்காலையிலேயே தங்களுடைய பதிவினை Galaxy -யில் வாசித்து விட்டேன்..

    சிறப்பான பதிவர்களின் தளங்கள் தங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

    திரு. தமிழ் இளங்கோ அவர்களின் தளத்திற்கு மட்டும் சென்றிருக்கின்றேன்..

    மற்றபடி, மரியாதைக்குரிய மூத்த பதிவர்களான - சென்னைப்பித்தன், வே.நடனசபாபதி, டி.பி.ஆர் ஜோசப் ஆகியோரைத் தங்களது தளத்தில் கண்டிருக்கின்றேன்.

    புதியதாக மாதங்கி மாலி அவர்களின் வலைத்தளம் பற்றி அறிகின்றேன்...

    சிறப்புடைய தளங்களைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. @ துரை செல்வராஜு
      அடையாளம் காட்டப்பட்டிருக்கும் தளங்களுக்குப் போய் வாசிப்பது ஒரு சிறந்த அனுபவமாயிருக்கும் .வருகைக்கு நன்றி ஐயா..

      Delete
  22. இரண்டு தளங்கள் இப்போதுதான் எனக்கு அறிமுகமாகுகிறது. வாழ்த்துக்கள் அய்யா..

    ReplyDelete
    Replies
    1. @ மணிமாறன்
      அடையாளப் படுத்தப்படும் பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்களாக இருப்பார்களோ என்றிருந்தது. ஆனால் சிலருக்கு அறிமுகம் ஆக வேண்டியவகளே என்பது சற்று ஆறுதல் அறிமுகத் தள பதிவுகளுக்கும் சென்று படியுங்கள், வருகைக்கு நன்றி சார்

      Delete
  23. சிறப்பான அறிமுகங்கள். மாதங்கியின் எழுத்தை அவரது பின்னூட்டங்கள் பலவற்றின் வழியே அறிவேன். அவரது தளத்துக்கு இன்றுதான் சென்றேன். தேர்ந்த எழுத்துவித்தகி. மற்றவர்களின் தளங்களுக்கு அவ்வப்போது செல்வது வழக்கம். இன்றைய பதிவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ கீதமஞ்சரி
      கூடியவரை வகைப் படுத்தப்பட்டவர்களில் சிறப்பானவரையே அடையாளம் காட்டி இருக்கிறேன் வருகைக்கு நன்றி மேடம்

      Delete
  24. இன்றைய சரத்தை அலங்கரிப்பவர்களில் 99 சதவிகிதம் அறிமுகமானவர்களே! வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீராம் அது நீங்கள் நிறைய தளங்களுக்குச் செல்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  25. நல்ல அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. @ பரிவை சே, குமார்
      வாக்ஷ்த்துக்களுக்கு நன்றி குமார்

      Delete
  26. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் .

    ReplyDelete
    Replies
    1. @ தனிமரம்
      அனைவர் சார்பிலும் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

      Delete
  27. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவரும் தெரிந்தவர்களே. அனைவருக்கும் என் வாழ்த்துகள். நேரில் ஒரு குழந்தையைப் போல் காணப்படும் மாதங்கி மாலி எழுதும்போது காட்டும் அசாத்திய மன முதிர்ச்சி வியக்க வைக்கும் ஒன்று..

    ReplyDelete
  28. @ கீதா சாம்பசிவம்
    சரியாக அடையாளப் படுத்தி இருக்கிறேன் இல்லையா.?வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  29. Thank you for introducing me gmb sir!

    ReplyDelete
    Replies
    1. @ மாதங்கி மாலி
      வருகைக்கு நன்றிம்மா

      Delete
  30. டி பி ஆர் ஜோசப், மைத்துளிகள் புது அறிமுகங்கள். பார்க்க வேண்டும். வே நடனசபாபதி அவர்களை அறிமுகம் உண்டு என்றாலும் வலைப்பக்கம் செல்லவில்லை...செல்ல வேண்டும். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  31. @ துளசிதரன் தில்லையகத்து
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete