ஜீஎம்பி-யின் வலைச்சரத்தில் முதல் நாள்
-------------------------------------------------------------
25-ல் ஜீஎம்பி |
இந்த ஒரு வாரம் ஆசிரியர்
பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நான் முதற்கண் வலைச்சர வாசகர்களுக்கு என்
வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஏறத்தாழ
ஐந்து ஆண்டுகளாக வலைப்பூவில் எழுதி வருகிறேன் பல பதிவர்களுக்கும் ஓரளவு
பரிச்சயமானவன் பல முறை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளேன்.அறுநூறுக்கும்
அதிகமான பதிவுகள் எழுதி இருக்கிறேன் பெயர் ஜீ.எம். பால சுப்பிரமணியம் வயது தற்போது
77 நடந்து கொண்டு அல்லது ஓடிக் கொண்டு இருக்கிறது.ஊரறிந்த பார்ப்பானுக்குப் பூணூல்
எதற்கு என்னும் சொல் வழக்கு ஒன்றுண்டு. இருந்தாலும் சில நடை முறைகளைப் பின்
பற்றவேண்டியே என்னை பற்றிய இந்த அறிமுகம்
இது வரை யாரும் வலைச்சர ஆசிரியர்ப் பொறுப்பை
ஏற்கிறாயா என்று கேட்டதில்லை அதற்கு ஏதோ பிரத்தியேகத் தகுதி வேண்டும் போல்
இருக்கிறது என்று இருந்துவிட்டேன் நானாக ஆசிரியர் பொறுப்பை ஏற்பதாக கேட்கவும் இல்லை வேண்டவும் இல்லை.இந்நிலையில் சில
வாரங்கள் வலைச்சரம் எந்த ஆசிரியர் பொறுப்பிலும் வரவில்லை என்று நினைக்கிறேன்
நானும் வலைச்சரத்தைத் தொடர்ந்து படித்ததில்லை.ஒரு முறை திரு தி இளங்கோ அவர்களது
பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாகவலைச்சர ஆசிரியர் ஆக ஏதாவது தகுதி உண்டா என்று கேட்டு
எழுதிய நினைவு அவரது மறு மொழியில் பிரத்தியேகத் தகுதி என்று ஏதுமில்லை என்றும்
வரும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி எழுத வேண்டும் என்றும் அது கட்டாயமில்லை என்றும்
கூறி அவர் பதிவில் எழுதி இருந்த சில சுட்டிகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுமாறும்
எழுதி இருந்தார் அப்படிப் படிக்கும் போது நண்பர் தமிழ் வாசிப் பிரகாஷ் ஒரு
கேள்விக்குப் பதிலாக இவ்வாறு கூறி இருந்தார்
ஒரு
வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை
தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?
குறிப்பிட்டுச் சொல்லும்
படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க
தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து
விடுவோம். அவ்வளவுதான்.”
அதை படித்தபோது எனக்குப் பொறுப்பேற்க தகுதி இருக்கிறது
என்று ஆசிரியர் குழு இதுவரை எண்ணவில்லை என்று நினைத்துக் கொண்டேன் மேலும் இந்தப்
பொறுப்பினைக் கொடுத்தால் என்னால் செவ்வனே செயல் பட
முடியுமா என்றும் கேள்வி என்னுள்
எழுந்தது இந்த நிலையில் எனக்கு ஆசிரியர் பொறுப்பேற்க விருப்பமா என்று கேட்டுக் குழல்
இன்னிசை தள யாதவன் நம்பி புதுவை வேலு மின்
அஞ்சல் அனுப்பி இருந்தார் அவர் வலைச்சரம் நிர்வாகக் குழுவில் ஒருவர் என்று
அறிந்தேன் இதுதான் நான் ஆசிரியர் பொறுப்பேற்க வந்த கதை.
முதல் நாள் என் பதிவுகள் சிலவற்றைப் பகிர்ந்து
கொள்ள அனுமதி இருப்பதால் கொஞ்சம் சுய தம்பட்டம்
நான் எழுதிய சில பதிவுகளை என்னாலேயே மறுமுறை எழுத
முடியுமா என்னும் சந்தேகம் உள்ளது.அப்பேற்பட்ட பதிவுகளில் ஒன்று நான் எழுதி இருந்த
ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களுடனும் அமைந்திருந்த “சாதாரணன்ராமாயண்ம் “படித்துப் பாருங்களேன்
இப்போது வயது 77 ஆனாலும் நானும் இளஞனாக இருந்தவன்
தானே. சீனுவின் திடங்கொண்டு போராடு ”எழுத நினைத்த காதல் கடிதம்” போட்டி அறிவித்திருந்தபோது
எழுதியது. போட்டிக்கு அனுப்பாதது. காதல் சொட்டும் கடிதத்தை நீங்களும் படியுங்களேன்
நிலவி வரும் ஏற்ற தாழ்வுகள் கண்டு மனம் சஞ்சலப்
படுபவன் நான் அது குறித்த என் பார்வையைக் காட்டும் ஒரு பதிவு “ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி. தீர்வு உண்டா”“ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி. தீர்வு உண்டா”
தொழில் நுட்பங்களை முயன்று பார்க்க பயம் ஆனால் வித்தியாசமாக எழுத முயற்சிகள்
செய்திருக்கிறேன் அதில் ஒன்று “திருவெழுக்கூற்றிருக்கை “திருவெழுக்கூற்றிருக்கை””
ஆன்மீகத்தில் ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்
போது அது பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வேன் அப்படிப் பட்ட நேரத்தில் என்
சிந்தையில் உதித்த பதிவு “ஜீவாத்மாவும் பரமாத்மாவும் “
அது பற்றிய ஒரு வித்தியாச அணுகல்
இவை சில சாம்பிள்களே. ஆர்வமுள்ளவர்கள் என் பதிவுகளைத்
தொடர்ந்து படிப்பார்கள் என்று நம்பிக்கையில்
இன்னும் எழுதிக் கொண்டு போனால் ஒருவேளை தடை விதிக்கப்
படலாம் இனி வரும் நாட்களில் பிற பதிவர்களை
எனக்குத் தெரிந்தவரை அறிமுகப் படுத்துவேன்
75-ல் ஜீஎம்பி |
ஆரம்பம் ஜோராக இருக்கிறது. நீங்கள் வலைச்சர ஆசிரியராக நட்சத்திரம் போன்று ஜொலிப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
Deleteமுதலில் வந்து வாழ்த்தியதற்கு நன்றி ஐயா தொடர்ந்து வரவும் ஆதரவு கோரியும்
மிகவும் அருமையான முன்னுரையோடு ஆரம்பித்துள்ளீர்கள். உங்களது பதிவுகளை நாங்கள் அனைவருமே விரும்பிப்படிக்கின்றோம். தங்களது பதிவுகள் எங்களுக்கு மிகுந்த அனுபவத்தையும் பயனையும் தருகின்றன. தங்களது ஆசிரியப்பணியில் மிளிர்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தங்களுக்கு நல்வரவு. நாளை சந்திப்போம்.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
Deleteஎன் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி ஐயா. கொடுக்கப்பட்டுள்ள சில சுட்டிகள் சிலரால் படிக்க விட்டுப் போயிருக்கலாம் வருகை தரும்போது சுட்டிகளில் இருக்கும் பதிவுகளையும் வாசிக்க வேண்டுகிறேன்
உங்களின் சில எண்ணங்கள் (பதிவுகள்) பாடமாகவும் இருந்திருக்கிறது... அடுத்த பதிவு எழுத தூண்டியதும் உண்டு... வணக்கங்கள் வாழ்த்துகள் ஐயா...
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
Deleteஎன் எண்ணங்கள் உங்களை அடுத்து எழுதுவதற்கு தூண்டுகிறது என்று அறிய மகிழ்ச்சி. சுட்டிகளில் காணும் பதிவுகளையும் படிக்க வேண்டுகிறேன் நன்றி டிடி
அய்யா ஜி.எம். பாலசுப்பிரமணியம் அவர்களை வணங்கி வரவேற்கிறேன். வாருங்கள் அய்யா! வருகிற நாட்களில் வல்லமை பொருந்திய வலையுலக பதிவர்களை அறிமுகம் செய்து வலைச்சரத்தின் மூலம் தாருங்கள்.
ReplyDeleteதங்களது முதல் பதிவு! வெகு சிறப்பு!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
@ யாதவன் நம்பி
Deleteஎன் முதல் பதிவைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா. நான் கொடுக்கும் சுட்டிகளில் இருக்கும் பதிவுகளும் வாசிக்கப்பட்டால் இன்னும் மகிழ்ச்சி கூடும்
அருமையான துவக்கம். தொடருங்கள்.
ReplyDelete@ எஸ். ராமன்
Deleteபாராட்டுக்கு நன்றி. உங்களையும் தொடர வேண்டுகிறேன்
முதல் பதிவே அட்டகாசம் ஐயா....
ReplyDelete@ கார்த்திக் சரவணன்
Deleteபாராட்டுக்கு நன்றி சார்.
இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக பணியேற்றி இருக்கும் தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDelete@ வே.நடன சபாபதி
Deleteஉங்கள் வாழ்த்துக்களை வணங்கி ஏற்கிறேன் நான் கொடுத்துள்ள சுட்டிகளின் பதிவுகளையும் வாசித்தால் மகிழ்ச்சி கூடும் நன்றி ஐயா.
தொடக்கம் அட்டகாசம் ஐயா வாழ்த்துகள் தங்களது இணைப்புகளுக்கு பிறகு போவேன்
ReplyDelete25ம், 75ம் சரி 50 எங்கே ஐயா அதையும் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
- கில்லர்ஜி
@ கில்லர்ஜி
Deleteபாராட்டுக்கு நன்றி ஜி. இணைப்புகளையும் படித்தால்தான் எழுதுபவரின் பரிமாணம் புரியும்
செவ்வெனே பணியைத் தொடங்கியுள்ளீர்கள். வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா.
ReplyDelete@ அ. பாண்டியன்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Welcome Sir..
ReplyDelete@ துரை செல்வராஜு
Deleteவரவேற்புக்கு நன்றி ஐயா.
செவ்வெனே பணியைத் தொடங்கியுள்ளீர்கள். வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா.
ReplyDelete@ அ.பாண்டியன்
Deleteஇரண்டாம் முறையும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி ஐயா
வலைச்சரம் இந்தவாரம் வாலிபரின் பார்வையில் மின்னப் போகிறது வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தின் இந்தவார ஆசிரியரே தவறாக நினைக்க வேண்டாம். தங்கள் பதிவு அல்லது பின்னூட்டம் என்றாலே அதில் எதற்கும் எங்கும் யாருக்கும் பயப்படாத துள்ளல் நடை இருக்கும் அதை வைத்தே வாலிபர் என்றேன்.
தொடருங்கள் தொடர்கிறேன்.
@ சசிகலா,
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்.நானே என்னை ஒரு இளைஞனாகக் கருதும்போது உங்களஅங்கீகாரம் வலு சேர்க்கிறது. நான் கொடுத்துள்ள சுட்டிகள் இருக்கும் பதிவுகளுக்கும்சென்று வாசிக்க வேண்டுகிறேன் சுட்டிக்காட்டப் படும் பதிவுகள் பதிவரைப் பற்றிய நான் கொடுக்கும் செய்திகளுக்கு உரம் சேர்க்கும் நன்றி
வணக்கம் ஐயா, தங்களின் பல பதிவுகளைப் படித்துள்ளேன், வலைச்சரம் இனி மனம் வீசட்டும், வணங்கி வரவேற்கிறோம். நன்றி.
ReplyDelete@ மகேஷ்வரி பாலசந்திரன்
Deleteஎன் பதிவுகளைப் படித்துள்ளேன் என்கிறீர்கள் ஆனால் வந்த சுவடுகள் ஏதும் இட்டுப் பொகவில்லையே. தொடர்ந்து வாருங்கள் வரவேற்புக்கு நன்றி மேடம்
வாழ்த்துக்கள் ஐயா! சிறப்பான முறையில் சுய அறிமுகம்! உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். வலைச்சரம் தங்கள் கைவண்ணத்தில் மிளிரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! தொடருங்கள்! நன்றி!
ReplyDelete@ தளிர் சுரேஷ்,
Deleteதொடர்ந்து வாசிப்பவர்களும் தவற விட்டிருக்கக் கூடிய என் பதிவுகளுக்கே சுட்டி கொடுத்திருக்கிறேன் . அவற்றையும் வாசித்தால் என் எழுத்துக்களின் பரிமாணம் ஓரளவு தெரியும் உங்கள் நம்பிக்கைக்குப்பாத்திரமாக வலைச் சரம் மிளிரும் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி. ஐயா
வலைச்சரம் தொடுக்க வந்திருக்கும் அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்! எந்த பணியையும் (தஞ்சாவூர் ஓவியம் என்றாலும்) விரைவில் கற்றுக் கொண்டு எளிதில் படைக்கும் உங்களுக்கு வலைச்சரம் பணி ஒன்றும் கடினமல்ல. உங்களுடைய சுய தம்பட்டத்தில் தம்பட்டம் அதிகம் இல்லை.
ReplyDeleteஎனது பெயரை தி.தமிழ் இளங்கோ என்பதற்குப் பதில் // தி. இளங்கோ // என்று குறிப்பிட்டு விட்டீர்கள். (தமிழ் வலையுலகில் நிறைய இளங்கோக்கள் உண்டு.) அதனால் ஒன்றும் பாதகம் இல்லை.
த.ம.6
@ தி.தமிழ் இளங்கோ
ReplyDeleteபதிவுலகில் நான் அறிந்த ஒரே இளங்கோ நீங்கள்தான் இருந்தாலும் தவறு தவறுதான் பொறுத்தருள வேண்டுகிறேன் பலதொடர் வாசகர்களும் படிக்க விட்டிருந்த சில பதிவுகளின் சுட்டிகளைக் கொடுத்து இருக்கிறேன் எல்லாவற்றையும்படித்தால் என் எழுத்து பற்றியஒரு கருத்து உருவாக்கிக் கொள்ளலாம் அல்லவா. வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிஐயா
வருக! வருக! தொடக்கமே அருமை! வெற்றியுடன் பணியாற்ற வாழ்த்துகள்! என் வயது
ReplyDeleteஎணபத்தி மூன்று ஓடிக் கொண்டிருகிறது!
@ புலவர் இராமாநுசம்
Deleteவயது எண்பத்துமூன்று ஆனால் என்னையா? பதிவுலகில் மரபுக் கவிதைகளின் முன்னோடி அல்லவா நீங்கள். உங்கள் வலைக்கு அவ்வப்போது வ்ருவேன். கவிதைகளுக்கு பின்னூட்டமிட ஒரு தயக்கம் அதனால் வாசித்துச் சென்று விடுவேன் உடலுக்கு மூப்பு வந்தாலும் எண்ணங்கள் இளமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவன் நான் உங்கள் அருமையான வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து வந்து ஊக்கமளிக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா.
வலைச்சர ஆசிரியர் பதவியை பொறுப்பேற்றுள்ளதற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@மனோ சாமிநாதன்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மேடம்
தங்களின் தளத்தில் சில பதிவுகளை வாசித்திருக்கிறேன் ஐயா
ReplyDeleteஅழகான சுய அறிமுகம்.
வாத்துக்கள்..வாழ்த்துக்கள்
@ உமையாள் காயத்ரி
Deleteநான் குறிப்பிட்டிருக்கும் சுட்டிகள் என் எழுத்தை ஓரளவு புரிந்து கொள்ள உதவும் என்றே அவைகளைக் கொடுத்தேன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்
வணக்கம் ஐயா இணைப்புகள் அனைத்தும் படித்தேன்
ReplyDeleteசாதாரணன்ராமாயண்ம் ஏற்கனவே படித்த்தைத்தவிர மற்றவைகளுக்கு கருத்துரை இட்டேன்
எழுத நினைத்த காதல் கடிதம்
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி- தீர்வுண்டா.?
திருவெழுக்கூற்றிருக்கை...என் பாணியில்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...
ஜீவாத்மா பிரமிப்பாக படிப்பதற்க்கு இருந்தது
தொடர்கிறேன் வலைச்சரத்தை வாழ்த்துகளுடன் கில்லர்ஜி
@ கில்லர்ஜி,
Deleteஇதை இதைத்தான் நான் அப்ப்ரிஷியேட் செய்கிறேன் தொடர்ந்து கொடுக்கும் சுட்டிகளையும் வாசித்து எழுத்தாளனை மதிப்பீடு செய்வீர் மீள் வருகைக்கு நன்றி ஐயா.
வாருங்கள் ஐயா... கலக்கலான வாரமாக அமையட்டும்.
ReplyDelete@ பரிவை சே,குமார்
Deleteகலக்கலான வாரமாய் அமைவதே என் விருப்பமும் வருகைக்கும் உற்சாகக் கருத்துக்கும் நன்றி ஐயா.
வாழ்த்துக்கள்!
ReplyDelete@ அப்பாதுரை
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
வணக்கம் ஐயா..
ReplyDeleteஇருபத்தைந்திலும் எழுபத்தைந்திலும் அதே கம்பீரம்! வாழ்த்துகள் ஐயா
@ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
வாழ்த்துகள் மட்டும்போதாது மேடம் கொடுத்துள்ள சுட்டிகளின் பதிவுகளையும் வாசியுங்கள் என்னைப் போல் என் எழுத்துக்களையும் மதிப்பிட உதவும் வருகைக்கு நன்றி மேம்
வணக்கம் சார்! :)
ReplyDelete@ வருண்
Deleteவணக்கம் .கொடுத்திருந்த சுட்டிகளின் பதிவுகளைப் படித்தீர்களா.? வருகைக்கு நன்றி சார்
உங்க பதிவுகள் எல்லாம் ஏற்கனவே படிச்சு இருக்கேன் சார். :)
Deleteதமிழர்களிடம் எம்.ஜி. ஆர் அவர்கள்
ReplyDeleteதன்னை அறிமுகம்
செய்து கொள்வது போலத்தான்
வலையுலகிற்கு உங்களை நீங்கள்
அறிமுகம் செய்து கொள்வதும்....
மிகச் சிறப்பான வாரமாக இந்த
வலைச்சர வாரம் அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@ ரமணி
Deleteஎன்னை நானே அறிமுகம் செய்து கொள்வது சிரமமாய் இருந்தது,என்னை அறிமுகப் படுத்த என் பதிவுகளைவிட வேறேன்ன இருக்கிறது உங்கள் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி.ஐயா.?
சிறப்பான தொடக்கம்.தங்களின் சிந்தனைகளும் எழுத்தாற்றலும் பிரமிக்க வைப்பவை. தங்கள் மனம் கவர்ந்த பதிவர்களின் பதிவுகளை அறிய ஆவல்
ReplyDelete@ டி.என் முரளிதரன்
Deleteவாசகர்களின் மனம் கவர்ந்திருந்தால் என் சுட்டியில் கொடுத்துள்ள பதிவுகள் படிக்கப் பட்டு இருக்க வேண்டும் நாளைமுதல் பதிவர்கள் அறிமுகம் வருகைக்கு நன்றி முரளி.
என்னைப் போன்ற மொக்கைப் பதிவர்களை விட்டு விட்டு உருப்படியான பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன் :)
ReplyDelete@ பகவான் ஜி
Deleteமொக்கைப் பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் அதிகம் சும்மாவா தமிழ் மண ரேங்கில் முதலில் வருவது. உமக்கெல்லாம் அறிமுகமே தேவை இல்லை என்றே எண்ணுகிறேன் தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்வருகைக்கு நன்றி
என்னைப் போன்ற மொக்கைப் பதிவர்களை விட்டு விட்டு உருப்படியான பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன் :)
ReplyDelete@ பகவான் ஜி
Deleteஇருமுறை கருத்திட்டாலும் ஒரே மறுமொழி நன்றி
சிறப்பான அறிமுகம் அய்யா!
ReplyDeleteதங்களின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்த போதே வலைச்சரம் வாரம் முழுதும் மிளிரப் போகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தொடருங்கள் அய்யா, நானும் வணக்கத்துடன் தொடருகிறேன்.
த ம 9
@ எஸ்.பி.செந்தில்குமார்,
Deleteஅறிமுகங்களை ஓரளவு புரிந்து கொள்ள அவர்களது பதிவைக் குறிக்கும் சுட்டிகளையும்திறந்து வாசியுங்கள். வருகைக்கு நன்றி
வலைச்சர ஆசிரியராக முதன் முறையா.. ஆச்சர்யமாக இருக்கின்றது. சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் பாலா சார் :)
ReplyDeleteஆமா புது ஆசிரியர் ஆச்சே. பழைய ஆசிரியர் நாங்க எல்லாம் ராகிங் செய்யலாமா. :)
@ தெனம்மை லக்ஷ்மணன்
Deleteஎதற்கும் முதல் என்று ஒன்று உண்டல்லவா. ராகிங்செய்யலாமே. இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்தா முடியுமா. தொடர்ந்து வாருங்கள்நன்றி.
அருமையான சுய அறிமுகத்துடன் அட்டகாசமான பகிர்வு! சுட்டிகளை படித்து இனி கருத்தினை பகிர்கின்றேன் ஐயா. பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete! தனிமரம்
Deleteஉங்கள் வரவு சிறக்கட்டும் சுட்டிகளைப் படியுங்கள். வாழ்த்துக்கு நன்றி
உங்களின் தளத்திற்கு அப்ப அப்ப வந்து படித்து இருக்கிறேன் படித்தவரையில் எல்லாம் தரமாகவே இருந்தது.பாராட்டுக்கள். நான் பொதுவாக கருத்துக்கள் இடும் போது கலாய்த்துதான் இடுவேன் ஆனால் பெரியவரான உங்கள் பதிவில் அப்படி இடலாமா என்று கருதியே இதுவரை கருத்துக்கள் இட்டது இல்லை. பதிவுகளை ப்டித்துவிட்டு சும்மா அருமை என்று சொல்லிவிட்டு போவதில் எனக்கு உடன்பாடு இல்லை அப்பை அருமை என்று நான் சொல்லி கருத்து இட்டு இருந்தால் நேரமின்மையால் நான் அங்கு வந்து படித்து சென்றேன் என்பதற்காகவே இருக்கும். இந்த வயதிலும் உங்களைப் போன்றவர்கள் எழுதுவது மிக ஆச்சிரியத்தை அளிக்கிறது. நீங்கள், வைகோ, பழனிச்சாமி, இளங்கோ,ஜம்புலிங்கம், ரமணி, புலவர், போன்ற அனைவருக்கும் எனது சல்யூட். இந்த சல்யூட்டுக்கு காரணம் இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் வருகிறார்கல் எழுதுகிறார்கள். அதன் பின் அவர்களுக்கு கருத்துகள் பலர் இடவில்லை என்று கருதி காணாமல் போகிவிடுகிறார்கள் ஆனால் நீங்கள் அனைவரும் அதனை பொருட்படுத்தாமல் எழுதுவதுதான் மிக சிறப்பு அதற்குதான் ராயல் சல்யூட் உங்களுக்கு. பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்
ReplyDelete@ அவர்கள் உண்மைகள்
Deleteநானும் உங்கள் பதிவுகளை ரெகுலராக வாசிப்பவன் பெரும்பாலும் அரசியல்சார்ந்து இருப்பதால் கருத்திடத் தயக்கம் ஒன்றிரண்டு முறை கருத்திட்டிருக்கிறேன் ஆனால் என் அஞ்சல் பெட்டியில் டெலிவரி ஃபெய்ல்ட் என்று வருகிறது. தொடர்ந்து வாருப்ங்கள். கொடுத்திருக்கும் சுட்டிகளில் உள்ள பதிவுகளைப்படியுங்கள் எழுதுபவனின் பரிமாணம் புரியலாம் வருகைக்கு நன்றி
இந்த வார வலைச்சர ஆசிரியர் தாங்கள்தான் என்று இப்போதுதான் அறிந்தேன். வாழ்த்துகள் ஐயா. சுய அறிமுகத்தொகுப்பு அழகாக செய்திருக்கிறீர்கள்.
ReplyDelete@ கீதமஞ்சரி
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்
வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துகள். சுய அறிமுகம் அருமை.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம் .
வணக்கம் ஐயா! வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு யூத் டச்சுடன் மற்றும் ஒருவரை கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்! ம.பொ.சி., இந்த வரிசையில் ஜி.எம்.பினாகிய தங்களின் மீசை ரசிக்கத்தக்கதாக இருக்கிறது! பதிவுகளை படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்! அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்
ReplyDelete@ இந்த ஆசிரியர் பொறுப்பை ஏற்றதால் எனக்கும் பல பதிவர்கள் அறிமுகமாகிறார்கள். ம.பொ.சி அளவுக்கு என் மீசை இல்லை. இப்போதெல்லாம் வயதில் முதியவர்கள்தான் இளைஞர் மாதிரி சிந்திக்கிறார்கள் பதிவுகளைப் படித்ததற்கான சுவடுகளையும் பதியுங்கள் வரவுக்கு நன்றி
Deleteஅட! சார் தங்களின் அழகான, தனித்துவமான நடையில் அறிமுகம்! அசத்தல் சார்! தங்களதுபதிவுகள் விடுபட்டாலும் ரசித்து வாசிப்பவர்கள் நாங்கள். தங்கள் பதிவுகள் சிந்திக்க வைப்பவை. தங்களைப் போன்றவர்கள் பலரும் இங்கு எழுதுவது எங்களை மிகவும் ஊக்கப்படுத்தும் ஒரு விஷயம். யார் வாசிக்கின்றார்கள், கருத்து இடுகின்றார்கள் என்பதை எல்லாம் பொருட்படுத்தால்மல், வருபவர்களை நினைத்து மகிழ்ந்து, பிறவற்றைப் பொருட்படுத்தாமல் நாங்களும் எங்களது கருத்துகளைப் பதிவிடுவதற்கு உங்களைப் போன்றோர் அளிக்கும் ஊக்கமும், பதிவுகளும் தான் சார். எங்கள் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! தொடர்கின்றோம். இதோ பல நாட்கள் வலைப்பக்கம் வர இயலாத காரணத்தினால் தங்களது பதிவுகள் விடுபட்டுள்ளதா என்றும் பார்க்க வேண்டும், மற்ற வலைத்தளங்களையும்...
ReplyDeleteதொடர்கின்றோம் சார்! வாழ்த்துகள்!
@ துளசிதரன் தில்லையகத்து
Deleteஏன் இவரை இன்னும் காணவில்லையே என்றிருந்தேன் லேட்டாக வந்ததால் உங்களையும் அடையாளப் படுத்தி இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் பதிவுகள் களைகட்டுவது பின்னூட்டங்களால்தான் என்று உங்களுக்குத் தெரியாதது அல்ல, வருகைக்கு நன்றி சார்
இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் காதல் கடிதம் ஏற்ற தாழ்வு சுட்டிகளைச் சொடுக்கிவிட்டோம் மற்றவை வாசித்திருக்கின்றோம்.....மிக்க நன்றி சார்!
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
Deleteவாசிக்கும் பதிவுகளில் உங்கள்சுவடுகளையும் பதிக்க வேண்டுகிறேன் மீள் வருகைக்கு நன்றி சார்