வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 4-ம் நாள்
---------------------------------------------------------
நான்காம் நாள்
இன்று நான் பதிவுலக சக்திகளில் சிலரை அறிமுகப் படுத்துகிறேன்
முதலில் திருமதி கீதா சாம்பசிவம் ஆன்மீக விஷயங்களில் இவர் கரை கண்டவர் என்று
கூறப்பட்டதுண்டு 2000-க்கும் அதிகமான பதிவுகளை எழுதி இருக்கிறார். இன்ன
தலைப்புதான் என்றில்லை. அவர் வீட்டில் குருவிகளைப் புகைபடமெடுத்தது முதல் திருமண
சம்பிரதாயங்கள் சடங்குகள் போன்றவற்றில் தனக்கிருக்கும் நம்பிக்கைகளையும் எழுதுபவர். தான் கொண்டுள்ள சில கொள்கைகளில் அசையாப்
பிடிப்பும் கொண்டவர். திருச்சி சென்றால் நான் சந்திக்க விரும்பும் ஒரு ஆற்றல் மிக்க
பெண்மணி.இவரது பதிவுகளில் எதைக் குறிப்பிடுவதுஎதை விடுவது தெரியவில்லை இருந்தாலும்
ஒரு ருசிக்காக இதோ
தொழில் நுட்பத் திறனில் திருமதி ராமலக்ஷ்மி கோலோச்சுகிறார்
குறிப்பாகப் புகைபடக்கலையைச் சொல்லலாம் இவரை பெங்களூரில் நடந்த ஒரு சிறிய பதிவர்
சந்திப்பில் கண்டேன் கவிதைகள் எழுதுவார். ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார்.இவரை
பதிவுலகில் தெரியாதவர் இருக்க வாய்ப்பில்லை போர்ட்ரெய்ட் பற்றிய இவரது பதிவைப்
பாருங்கள் பலவிஷயங்கள் புரியும்
அடுத்த சக்தி கீதமஞ்சரி என்னும் தளத்தில் எழுதி வரும்
திருமதி கீதா மதிவாணன் ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் இவர் திருச்சியைச் சேர்ந்தவர். சிறுகதைகளின் நீள அகல ஆழங்களைக்கண்டு
விமரிசனம் செய்யும் திறன் வாய்ந்த வித்தகி ஆஸ்திரேலியாவின் சரித்திரம் முதல் அங்கு
வாழும் சகல ஜீவராசிகளைப் பற்றியும் தாவரவகைகளைப்பற்றியும் எழுதி இவர் ஒரு தகவல்
களஞ்சியமே உருவாக்கி இருக்கிறார். ஒரு முறை என் தோட்டத்தில் பெயர் தெரியாமல்
வளர்ந்திருந்த சில வாசமில்லப் பூக்களின் பெயர் தெரியவில்லை என்று எழுதி அவற்றின்
புகைப்படங்களை வெளியிட்டிருந்தேன். தகவல் களஞ்சியமல்லவா. எங்கெல்லாமோ தேடிக் கண்டு
பிடித்து அது பற்றய விளக்கங்களும் கொடுத்திருந்தார். இவரது ஒரு பதிவுசாம்பிளுக்காக
அடுத்த சக்தி திருமதி ஷைலஜா. இவர் ஏற்பாடு
செய்திருந்த ஒரு குட்டிப் பதிவர் மாநாட்டில் பங்கேற்கப் போனேன் . அப்போது நேரில்
அறிமுகம்இவரும் பன்முகத் திறனாளி என் வீட்டுக்கும் திரு ஐயப்பன் கிருஷ்ணனோடு
வந்திருக்கிறார் எழுதுவது அவர் உடலில் ஓடும் ஜீன்ஸிலேயே இருக்கும் போல. தந்தையும்
பிரபல எழுத்தாளர். பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இவருக்கு உறவு
எழுத்துக்கள் பெரும்பாலும் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருக்கும் மாதிரிக்கு
ஒன்று.”கொஞ்சம் சீரியசா'
பதிவுலகில் சக்திகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் நான்
பதிவுலகில் ப்ரவேசித்தபோது எனக்கு ஊக்கம் அளித்தவர் சக்திப்ப்ரபா. இவரை நான்
பெங்களூர் பதிவர் சந்திப்பின் போது நேரில்
அறிமுகமானேன் பெங்களூரில் இருந்தவர் இப்போது சென்னைவாசி ஆகிவிட்டார். பதிவர் திரு
அப்பாதுரை ஒரு முறை புத்தாண்டு ப்ரமாணமாக இவரது பதிவுகளை விடாமல் படிக்கவேண்டும்
என்று கூறி இருந்தார் சிலகாலம் சோவின் எங்கே பிராமணன் என்னும் கருத்தை இவர்
பாணியில் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார். இப்போது பதிவுப்பக்கம் எப்போதாவதுதான் வருகிறார் இவரது தளம்
மின்மினிப்பூச்சிகள் இவரது அண்மையப்பதிவு ஒன்று உங்கள் கவனத்துக்கு”குரு வந்தனம்
இனி இன்னும் வேறு சில அறிமுகங்களோடு நாளை
சந்திக்கலாம்
கீதா சாம்பசிவம் அம்மா அவர்கள் சகலகலா வல்லவர்...
ReplyDeleteஅனைத்து (சக்திகளுக்கும்) அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்...
@ திண்டுக்கல் தனபாலன்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிடி
அனைவருமே தொடர்ந்து வாசித்து வரும் பதிவர்கள்.....
ReplyDeleteஇன்றைக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
@ வெங்கட் நாகராஜ்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
வணக்கம்,
ReplyDeleteஇன்று வலைச்சரம் பகிர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
தங்களுக்கு நன்றிகள் அய்யா,
@மகேஸ்வரி பாலசந்திரன்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
இன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி ராமலக்ஷ்மி மற்றும் திருமதி கீதா மதிவாணன் ஆகியோரின் வலைத்தங்கள் எனக்கு பரிச்சயமுண்டு. மற்றவர்களின் பதிவுகளை படிக்க இருக்கிறேன். இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete@ வே.நடனசபாபதி
Deleteமற்ற பதிவர்களின் தளங்களுக்கும் விஜயம் செய்யுங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
அனைவரும் அறிந்தவரே வாழ்த்துகள்!
ReplyDelete@ அறிந்தவர்களுக்கு வாழ்த்துக்கூற வந்த உங்களுக்கு நன்றி ஐயா.
Deleteஅனைத்து சக்திகளும் நமக்கு அறிமுகமானவர்களே! சக்திப்ரபாவும், ஷைலஜாவும் என் மரத்தடி காலத்தோழிகள்!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
@ துளசி கோபால்
Deleteஅதென்ன மரத்தடித் தோழிகள். மரத்தடியில் சந்திப்பீர்களா.?ஜோக் அபார்ட், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்
பத்துவருஷம் முன்பு ஆரம்பித்த மகத்தான் குழுமம் மரத்தடி டாட்காம்..அதில் தான் எனக்கும் துளசிவாசம் கிட்டியது!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்! திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் விதவிதமான பதிவுகளின் ரசிகன் நான். மற்றபடி சக்திப்ரபா தளம் சென்றதில்லை! மற்றவர்களின் தளங்களுக்கு சென்றிருக்கிறேன். கீதமஞ்சரி தளத்தில் கீதா மதிவாணன் எழுதும் பதிவுகள் மிக சுவாரஸ்யம். திருமதி ஷைலஜா, திருமதி ராமலஷ்மி தளங்களும் சிறப்பான ஒன்று. நன்றி!
ReplyDelete@ தளிர் சுரேஷ்
ReplyDeleteசக்திப் பிரபாவின் மின்மினிப்பூச்சிகள் தளத்துக்கும் சென்று ரசியுங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
அடையாளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! சிலரை அறிந்திருந்தாலும் வலைத்தளம் சென்று பின்னூட்டம் இட்டதில்லை. செல்கின்றோம்...
ReplyDeleteநன்றி சார்!
Delete@ துளசிதரன் தில்லையகத்து
Deleteஅறிமுகமாவர் தளத்துக்குச் சென்றால் வந்த அடையாளம் இட்டுச் சென்றால் பதிவர் மனம் மகிழும் வருகைக்கு நன்றி சார்
இன்றைய அறிமுக ஜாம்பவான்களான பதிவர்கள் அனைவருக்கும்
ReplyDeleteகுழலின்னிசையின் இனிய நல்வாழ்த்துகள்.
நல்ல பதிவாளர்களை நாள்தோறும் அடையாளம் காட்டி வரும் அய்யாவுக்கு நன்றி!
த ம 5
நட்புடன்,
புதுவை வேலு
@ யாதவன் நம்பி
Deleteவலைச் சரத்தில் அடையாளம் காட்டப் படும் பதிவர்களுக்கு அது தெரியப் படுத்தப் படுகிறதா.?எனக்கு நீங்கள் ஒரு தளத்தில் அடையாளம் காட்டப் பட்டதைத் தெரிவித்தது போல்
வருகைக்கும் உற்சாகப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா.
அனைத்துத் தளங்களுக்கும் சென்றேன், படித்தேன். சிலர் முன்னரே அறிமுகமானவர்கள். பதிவுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
Deleteவருகைக்கு நன்றி ஐயா.
மிக்க நன்றி ஜிம் எ்ம்பி சார் உங்களால் இங்கு என் அறிமுகம்! அன்று உங்கள் இல்லத்தில் தங்கள் மனைவி கையால் உண்ட இனிய விருந்துபோல இங்கு உங்கள் கைவண்ணத்தில் வலைச்சரம் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்! மறுபடி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வோம் அவசிய ம்தாங்கள் வரவேண்டும்.
ReplyDelete@ ஷைலஜா
Deleteநீங்கள் நினைவு வைத்திருப்பது மகிழ்ச்சியத் தருகிறதுவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்
என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என் தளத்துக்கு வந்து எனக்குத் தெரிவித்த திரு ஜம்புலிங்கம் அவர்களுக்கும் நன்றி. இன்றைய அறிமுகங்களில் சக்திபிரபா தவிர மற்றவர்கள் நன்கு அறிமுகம் ஆனவர்களே! இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள் பெண் பதிவர்கள். கவிநயா, ரேவதி நரசிம்மன், தேனம்மை லக்ஷ்மணன், அமைதிச்சாரல் சாந்தி மாரியப்பன், புதுகைத் தென்றல் என. :))))அனைவரும் ஒருவரை ஒருவர் தோற்கடிக்கும்படி எழுதும் திறமை உள்ளவர்கள்.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
Deleteஅடையாளம் காட்ட நிறையவே பேர் இருக்கிறார்கள் நேரம் நீளம் கருதி சிலரை மட்டுமே அடையாளம் காட்ட முடிகிறது. அப்படி அறிமுகம் செய்யப் படாதவர்கள் பிரபலம் அல்ல என்றோ நன்கு எழுதாதவர் என்றோ பொருளில்லை. வருகைக்கு நன்றி மேம்
இனி வரும் வலைச்சர ஆசிரியர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். வலைச்சரம் ஆரம்பித்ததில் இருந்து பல நண்பர்களால் பல முறை அறிமுகம் (!!!!!) செய்யப்பட்டு விட்டேன். பத்துவருடங்களாகத் தொடர்ந்து என்னை அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் ஆசிரியர்கள் தயவு செய்து புதிதாக வரும் பதிவர்களையும், புதுமையாக எழுதும் பதிவர்களையும் மட்டும் அறிமுகம் செய்யுமாறு வேண்டுகிறேன். புரிதலுக்கு மிக்க நன்றி.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
Deleteஇந்த அறிமுகம் என்னும் வார்த்தையே சரியில்லை. யாரும் யாரையும் அறிமுகம் செய்வதில்லை. ஆசிரியருக்கு நன்கு பரிச்சயமான பதிவர்கள் அடையாளம் காட்டப் படுகிறார்கள். அப்ப்டி அடையாளம் காட்டப்படுபவரில் சிலரை சிலருக்கு அறிமுகம் ஆகி இருப்பதில்லை. பல முறை அறிமுகம் என்பது குறிப்பிட்ட பதிவரின் ப்ராபல்யத்துக்கு சான்றாகவே கருதலாம் மனதில் பட்டதைக் கூறியதற்கும் அதற்கான மறுமொழி அளிக்க சந்தர்ப்பம் தந்ததற்கும் நன்றி மேடம்
என்னையும், என் பதிவுகளையும் இனியானும் யாரும் அடையாளம் காட்ட வேண்டாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். அது வேறு மாதிரியாகப் புரிந்து கொள்ளும்படி எழுதி விட்டேன் போல. மற்றபடி வேறு எவரையும் குறிப்பிடவில்லை. :)
Delete@ கீதா சாம்பசிவம்
Deleteஎழுத்துக்களும் எண்ணங்களும் சரியாக புரிந்துகொண்டால் பிரச்சனையே இருக்காது, மீள் வருகைக்கு நன்றி மேம்
விடியற்காலையிலேயே தேடினேன்..
ReplyDeleteகொஞ்சம் தாமதமாகத் தான் வெளியாகியிருக்கின்றது..
சிறந்த பதிவர்களை அறியக் கூடியதாக இருந்தது - இன்றைய தொகுப்பு..
வாழ்க நலம்..
@ துரை செல்வராஜு
Deleteகாலை எட்டுமணிக்கு முன்பாகவே பதிவிட்டு விட்டேனே. அதுவே தாமதம் என்றால் பொறுத்தருளவும் பாராட்டுக்கு நன்றி ஐயா.
அன்பின் ஐயா..
Deleteதங்கள் தொகுப்பினைக் காண்பதற்கான ஆவல் தான் அது..
தங்களின் பணி மகத்தானது.. நிறைமங்கலம் காட்டும் தங்களுக்கு அன்பின் வணக்கங்கள்!..
இன்றைய சக்தி பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ தனிமரம்
Deleteவாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
மிக்க நன்றி GMB sir. இன்றைய தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
ReplyDelete@ ராமலக்ஷ்மி
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
முதிர்ச்சியான எழுத்துக்குச்
ReplyDeleteசொந்தக்காரர்கள் இவர்கள் அனைவரும்
அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
@ ரமணி
Deleteவருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்
இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் அறிமுகப் படுத்தி இருக்கும் பாங்கு அம்சமாக இருக்கிறது அய்யா! தொடருங்கள்.
த ம 9
@ எஸ்.பி. செந்தில் குமார்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ பரிவை சே.குமார்
Deleteவாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா
G.M.B அய்யா அவர்களுக்கு வணக்கம். 4- ஆம் நாளான இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் இப்போது ஸ்ரீரங்கவாசி ஆகி விட்டார். திருமதி ராமலக்ஷ்மி குடும்பத்தில் அவரது சித்தப்பா, நானானி என்று அனைவருமே நல்ல வலைப்பதிவர்கள். தமிழார்வம் மிக்க கீதமஞ்சரி வாசகர்களில் நானும் ஒருவன். எழுத்தாளர் ராகவன் அவர்களது மகளான திருமதி ஷைலஜா அவர்கள் ரொம்பநாளாய் தமிழ்மணம் பக்கம் வாராதிருந்து இப்போதுதான் வருகிறார்.
சக்திப் பிரபா அவர்களது வலைத்தளம் இன்றுதான் உங்கள் வலைச்சரம் வழியே அறிமுகம்.
த.ம.10
@ தி தமிழ் இளங்கோ,
Deleteமுதற்கண் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயாராமலக்ஷ்மி குடும்பத்தார் பற்றிய செய்தி எனக்குப் புதியதுசக்திப்பிரபா பற்றி இவரை அடையாளம் காட்டும்போதே சொல்லி இருக்கிறேன்
ஒரே (ராமலஷ்மி) குடும்பத்தில் ஐந்து பதிவர்கள். நான் வலையுலகில் நுழைந்த புதிதில் ஐவரின் பதிவுகளையும் படித்து இருக்கிறேன். சகோதரி தேனம்மை லஷ்மணன் எழுதிய இந்த பதிவைப் படித்துப் பாருங்கள். http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_7.html
DeleteAya vaalthukal arimuga paduthiya anithu padivum padithan. ungal eluthin moolam padika aarvathai thundiyathu. ond
ReplyDelete@ My mobile studios,
Deleteஎன் எழுத்து உங்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி இருந்தால் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ உமையாள் காயத்ரி
Deleteவருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி மேம்
ஐயா வணக்கம்.
ReplyDeleteதங்களால் அடையாளங் காட்டப்பட்டவர்களுள், கீதா மதிவாணன் அவர்களைத் தவிர பிறர் நான் அறியாதோர்.
பதிவுகளைப் பார்க்கிறேன்.
அப்பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.
த ம 11
நன்றி.
@ ஊமைக் கனவுகள்
Deleteவலைச்சரத்தின் ஒரு குறிக்கோளே அறியாத பதிவர்களை அறிமுகப்படுத்துவதுதானே. வாழ்த்துக்கு நன்றி ஐயா
நறுக்குத் தெறித்தார் போல!!! என ஒரு கூர்மையான அறிமுகங்கள்! சூப்பர் சார்!
ReplyDelete@ மைதிலி ரெங்கன்,
Deleteபாராட்டுக்கு நன்றி மேடம்,
@ மை திலி கஸ்தூரி ரெங்கன்,
Deleteமன்னிக்கவும் .மேலே பெயரைக் குறுக்கி விட்டேன் உங்கள் பதிவில் சுய அறிமுகத்தில் பெண் என்பது தவிர வேறு செய்திகள் இல்லையே
ஒரே (ராமலஷ்மி) குடும்பத்தில் ஐந்து பதிவர்கள். நான் வலையுலகில் நுழைந்த புதிதில் ஐவரின் பதிவுகளையும் படித்து இருக்கிறேன். சகோதரி தேனம்மை லஷ்மணன் எழுதிய இந்த பதிவைப் படித்துப் பாருங்கள். http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_7.html
ReplyDeleteதங்களைக் கவர்ந்த பதிவர்கள் வரிசையில் என்னையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு மிகுந்த நன்றி ஐயா. தாங்கள் இங்கு என்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வரிகள் தொடர்ந்து எழுதும் உத்வேகமும் உற்சாகமும் தந்து மகிழ்விக்கின்றன. மனமார்ந்த நன்றி. என்னோடு அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தோழியருக்கும் அன்பான வாழ்த்துகள்.
ReplyDelete@ கீதமஞ்சரி
Deleteசக்திகள் உலகில் நீங்கள் இல்லாமலா.?வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
அறிந்த பதிவர்கள். சக்திப்ரபா தவிர! வாழ்த்துகள்.
ReplyDelete@ ஸ்ரீராம்
Deleteஇப்பொழுது அறிந்துகொண்டீர்கள் அல்லவா.?வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ
நன்றி ஜி.எம்.பி சார். பதிவுலகம் மறந்தே போய்விட்ட நிலையிலும், உங்களைப் போன்றோர் என்னை நினைவில் கொள்வதே எனக்கு பெருமகிழ்ச்சி.
ReplyDelete