Friday, June 26, 2015

வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 5-ம் நாள்


                              வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 5-ம் நாள்.
                              ----------------------------------------------------------


ஐந்தாம் நாள்
இன்று இப்பதிவில் காணப்படுபவர்கள் எல்லாம் பதிவுலக ஜாம்பவான்கள் நான் ஜாம்பவான்கள் என்று கூறப் பிரத்தியேகக் காரணமுண்டு. ஜாமபவான் அனுமனை ஊக்குவித்து அவரது திறமையை உணரச்செய்தார் என்பது கதை, அதுபோல் இதில் வரும் பதிவர்கள் எழுதுபவருக்குக் கிரியா ஊக்கிகள் என்றால் தவறாகாது. இவர்களது எழுத்தில் ஒரு முதிர்ச்சி இருக்கும் அனுபவம் இருக்கும் ஆதரவு இருக்கும் சிலநேரங்களில் சுயப் பிரதாபமும் இருக்கும் இவர்களை எழுதுவிப்பது எது. இவர்களுக்கு இருக்கும் நேரம் , திறமை,என்று சொல்லிக் கொண்டு போகலாம் எல்லாவற்றையும் விட இளைஞர்களோடு பந்தயத்தில் ஓடும் திறனும்தான்  ஆம் இன்று நாம் பார்க்கப்போவது மூத்தபதிவர்கள் பற்றி. மூத்தவர்கள் முதியவர்களாயும் இருப்பது சிறப்பு
சரி விஷயத்துக்கு வருவோம்.தமிழ்ப் பதிவுலகில் என் கண்ணில் பட்ட எழுபது வயதைத் தாண்டியவர்கள் யார் யார் என்று பார்ப்போமா. முதலில் இந்தப் பதிவுக்கு வழிவகுத்தவர் சூரி சிவா. அவ்வப்போது அவர் எழுதியதைப் படித்ததில் இருந்து அவரது வயது 73 அல்லது 74 இருக்கலாம். மிகுந்த நகைச் சுவை மிகுந்தவர். இசையில் ஆர்வம் கொண்டவர். மெத்தப் படித்தவர். பல விஷயங்களில் யாரும் எண்ணாத கோணத்தில் எழுதுபவர்.அவரை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்து இருக்கிறேன்  அவர் நினைத்தாலும் பாடுவதை அவரால் தவிர்க்க முடியாது என்று எழுதி இருந்தார். சிவகுமாரன் கவிதைகள் பலவற்றைப் பாடி ஆடியோ வாக அனுப்புவார். ஒரு முறை கன்னட நாட்டுப்பாடல்  ஒன்றைத் தமிழ்ப்படுத்தி ( மாத்தாடு மாத்தாடு மல்லிகே) எழுதி  

இருந்தேன் . அதைப் பாடி எனக்கு ஆடியோ அனுப்ப வேண்டி இருந்தேன். எந்த ஒரு தகவலும் இருக்க வில்லை. பிறிதொரு சமயம் நான் எழுதிய ஒரு பாட்டுக்கு மெட்டமைத்துப் பாடி அதன் ஆடியோவை அனுப்பி இருந்தார். முன்பு நான் கேட்டு எழுதிய பாடல் பாட மனம் ஒப்பவில்லை என்று எழுதி இருந்தார்.அப்பாதுரையின் பதிவுகளுக்கு அவர் எழுதும் பின்னூட்டங்களை நான் ரசித்துப் படிப்பேன்.அவர் பதிவில் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது இன்றைய நாளை இனிதே கழிக்க இரண்டே வழிகள். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் நாளை நன்றாகவே இருக்கும் என்று நம்புங்கள் ஏறத்தாழ இதுவே அவரை அடையாளம் காட்டும். அவர் ஒரு முறை சொன்னது. மூத்தது மோழை இளையது காளை என்பர். இன்றைய பதிவுலகம் காளைகளின் சிலம்பாட்டம். மூத்த பதிவர் எனைப்போன்று வயதில் மூத்தவர் பலர் உளர் . இல்லை எனச்சொல்ல வில்லை எனினும் எண்ணங்களிலும் எழுச்சிதரும் எழுத்துக்களின் முதிர்விலே முன்னணியில் நிற்பவர் என்னைக் கவருபவர்கள் இளைஞர்கள் தான் .அவர் எழுதி இருந்த ஒரு பதிவு உங்கள் பார்வைக்குசுப்புத் தாத்தாவின் வலைக்கு வாருங்கள்  


அடுத்ததாக திரு காஷ்யபன்  . நாக்பூரில் வசிக்கிறார்.என்னைவிட இண்டு வயது மூத்தவராக இருப்பார் என்று தோன்றுகிறதுஇந்த வயதிலும் இவரை எழுத வைப்பது எது என்று சிந்திக்கையில் அவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். எழுதுவது அவர் தொழிலாக இருந்தது.இருந்தாலும் இப்போது எழுத வைப்பது அவரது கொள்கைப் பிடிப்பே என்று தோன்றுகிறது. பொதுவுடமைவாதி. முன்பொரு பதிவில் சில நடைமுறை வழக்கங்களுக்குத் தெளிவு கேட்டு எழுதி இருந்தேன். அதன் பின்னூட்டத்திலவர் “I am a non believer, but I believe those who believe in God, because of the simple reason , they are my fellow beings” என்று எழுதி இருந்தார்.இந்தக் கருத்து ஏறக்குறைய என் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது .. என்னுடைய சில எழுத்துக்களை இன்னார் படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்போது அவருக்கு அந்தப் பதிவை அனுப்பி வைப்பேன். அது மாதிரி கடவுள் அறிவா உணர்வா என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்கு அவரது கருத்தை கேட்டு எழுதி இருந்தேன். கடவுள் என்பது ஒரு கான்செப்ட் என்று தொடங்கி விரிவான பின்னூட்டம் எழுதி இருந்தார்.மற்றும் ஓரிரு பதிவுகளுக்கு கருத்து கேட்டு எழுதியிருந்தேன். எனக்கு அஞ்சலில் அந்தப் பதிவுகள் திறப்பதில்லை என்றும் கணினிக்கு எதிராகப் பல வருஷங்கள் போராடியவர். இப்போது அதனுடன் மல்லுக் கட்ட சிரமமாய் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார்.அவரது பதிவு ஒன்று மாதிரிக்கு ஒன்று இட ஒதுக்கீட்டை ஏற்கும் மனவளம் வேண்டும்  மனவளம் வேண்டும்


அடுத்து நான் கூறப்போவது கோவையில் இருந்து சாமியின் மன அலைகள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் டாக்டர். பழனிச்சாமி கந்தசாமி என்பவரைப் பற்றி. நான்  வலையில் எழுதத் துவங்கிய காலம் முதல் என் பதிவுகளைப் படித்துக் கருத்து எழுதுபவர்.  ஊக்கம் கொடுத்து வருபவர். பின்னூட்டங்கள் மிகவும் க்ரிஸ்ப்பாக ஓரிரு வார்த்தைகளில் இருக்கும். எந்த விஷயமாவது யாராவது சொல்லி விட்டால் அது பற்றி அவர் பதிவு எழுதி விடுவார். நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் பல விஷயங்களைஅதன் முக்கியத்துவம் தெரிந்து எழுதுவார். போர்த்திக்கொள்ளும் போர்வையின் தலைமாடு கால்மாடு அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் பாணியில் எழுதி விடுவார். சில நேரங்களில் அவர் எழுதியது குறித்து சில சர்ச்சைகள் எழுவதுண்டு. மனிதர் கவலைப்படவே மாட்டார். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த மனிதர் என்பதே என் அனுமானம்.ஒரு கருத்தை எழுதிப் போட்டுவிடுவார். பின்னூட்டங்களில் சரவெடி வெடிக்கும். மாதிரிக்கு அண்மையில் வெளியான ஒரு பதிவுதீண்டாமையைவளர்ப்பது யார் 

பலருக்கும் பரிச்சயமான மூத்த எழுத்தாள்ர்.புலவர் இராமானுசம் முன்பெல்லாம் என் பதிவுகளுக்குத் தவறாமல் வருகை தந்து ஊக்கப் படுத்துவார். எனக்கு நான் எழுதுவது கவிதையில் சேராது என்ற எண்ணம் கவிதையின் இலக்கணங்களையாவது கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கவிதை கற்கிறேன் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னூட்டமாக பாதை தெரிந்து விட்டது. பயணம் போகத் தயங்காதீர் என்று எழுதி உற்சாகப் படுத்தினார். பின்னொரு பதிவின் பின்னூட்டமாக நான் புலவன் சொல்கிறேன் நீங்கள் எழுதுவது கவிதைதான் என்று எழுதி ஊக்கப் படுத்தினார்.அடுத்த முறை சென்னை செல்லும்போது அவரை சந்திக்க விரும்புகிறேன் அவருடைய அண்மைப் பதிவு ஒன்று இன்றைய பள்ளிகள் பற்றி


எனக்கு ஒரு மூத்த பதிவரின் வலைத்தளத்தை  கீத மஞ்சரி அறிமுகப் படுத்தினார் . அவர் பெயர்  சொ.ஞானசம்பந்தன்.என்னைவிட  வயது மூத்தவர். இலக்கியச் சாரல் என்னும் வலைப்பூவில் எழுதுகிறார் ஆங்கிலம் ஃப்ரென்ச், லத்தீன் போன்ற பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்.பிறப்பொக்கும் என்று கூறி நாளும் எங்கும் உயர்வு தாழ்வுகளையே பார்க்கிறோம்  பிறப்பிலேயே உயர்வு தாழ்வு பண்டைக்காலத்தில் இருந்தது என்று பழைய பாடல்களை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். பெரும்பாலும் இலக்கியப் பதிவுகளே. மிகவும் குறைவாகவே எழுதுகிறார். இந்த வயதிலும் எழுதும் ஆர்வம் போற்றத்தக்கது.இதோ ஒரு கருமி பற்றிய குட்டிக்கதை

நாளை இன்னும் சில பதிவர்கள் அறிமுகத்துடன் சந்திப்போம்
 
 


 

42 comments:

  1. ஐயா வணக்கம்.

    மூத்த பதிவராக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளவர்களுள் ஒருவரை அறியேன்.

    மற்ற அனைவரின் தளங்களையும் முடிந்த மட்டும் தொடர்கிறேன்.

    அறிவும் அனுபவமும் வாய்க்கப்பெற்ற இவர்கள் எல்லாரிடமிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது என்பது எப்போதும் உண்மை.

    வழக்கம் போல உங்களின் பாணியில் அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள்.

    நன்றி

    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies

    1. @ ஊமைக்கனவுகள்
      நீங்கள் அறியாத அந்த ஒருவர் யார் என்று குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  2. நாம் நினைக்காத கோணத்தில் நம் பதிவில் கருத்துரை இடுவதிலும் வல்லவர் நம்ம சூரி தாத்தா... மன்னிக்கவும் இளைஞர்...

    பதிவுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. @ திண்டுக்கல் தனபாலன்
      அவரை அவரைத் தாத்தா என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்நாம் அதை ஏன் மாற்ற வேண்டும் வருகைக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  3. வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 5-ம் நாள் அறிமுகங்கள் அமுதத்தையே ஆறாய் பெருகெடுத்து வர செய்து விட்டீர்கள்! அருமை அய்யா!
    இசை அமுதமாய் இனித்த இன்றைய பதிவாளர்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்!
    அறிமுகங்கள் அனைவருக்கும் ஆரத்தி(தகவல்) எடுத்து விட்டேன் அய்யா அவர்களே!
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @ யாதவன் நம்பி
      இம்மாதிரி கவி உள்ளம் படைத்தவர்க்கே உரிய குணம் மிகைப்படுத்திக் கூறல் என்றால் தவறாகாதே.ஆரத்திக்கு நன்றி ஐயா

      Delete
  4. சுப்புத் தாத்தா பல்துறை வித்தகர்.புலவர் ஐயாவை வலையுலகம் வந்த நாள் முதலே அறிவேன்,.
    வலையுலகில் கணினி இயக்கமுறையை தானே நிறுவிக்கொள்ளத் தெரிந்த ஒரே மூத்த பதிவர் கந்தசாமி அவர்களாகத் இருக்க முடியும். பல மென்பொருட்களை சோதனை செய்து பார்த்த வகையில் மூத்த தொழில்நுட்ப பதிவர் என்றும் அவரைக் கூறலாம் மற்ற இருவரின் வலை தளங்களுக்கு எப்போதாவது செல்வது உண்டு

    ReplyDelete
    Replies
    1. @ டி.என். முரளிதரன்
      மற்ற இரு பதிவர்களும் திறன் வாய்ந்தவரே. வருகைக்கு நன்றி சார்

      Delete
  5. அருமையான மூத்த பதிவர்களை
    மிகச் சரியான அனுமானித்து
    சுருக்கமாக ஆயினும் மிக அற்புதமாக
    அறிமுஅம் செய்த விதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @ ரமணி
      நீங்கள் ஒரு பின்னூட்டத்தில் கூறி இருந்தது போல் எம்.ஜி/ஆர்-ஐ தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது போல்தான் என் அறிமுகம். நான் எங்கே அறிமுகம் செய்தேன்? அவர்களே பதிவுலகில் வியாபித்து இருக்கிறார்கள். நான் ஏதொ அடையாளம் காட்டினேன் அவ்வளவுதான் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

      Delete
  6. அன்பின் ஐய! வணக்கம்! என்னையும் அறிமுகப் படித்தினீர் நன்றி! தங்களைக் காணவேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு ! தாங்கள் சென்னை வந்தால் தகவல் தாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. @ புலவர் இராமாநுசம்
      ஐயா வணக்கம் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. இந்த அறிமுகம் என்னும்சொல்லை வலைச்சரத்தில் இருந்து நீக்கச் சொல்ல வேண்டும் நான் பதிவர்களை அடையாளம் காட்டி இருக்கிறேன் அவ்வளவுதான் நான் சென்னை வரும்போது அவசியம் சந்திப்போம் ஐயா வருகைக்கு நன்றி.

      Delete
  7. மூத்த பதிவர்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி! இவர்களில் சுப்பு தத்தாவை மட்டுமே எனக்கு தெரியும். ஏனையோரை அவ்வளவாக தெரியாது. அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. @ இனியா
      ஏனைய பதிவர்களின் தளங்களுக்கும் செல்லுங்கள் மாதிரிப்பதிவுகள் கொடுத்திருகிறேனே அத்தனையும் அனுபவச் சுரங்கங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்

      Delete
  8. அனைவரும் மூத்த அறிஞர்கள்... திரு. சொ.ஞானசம்பந்தன் ஐயா வலை புதிது... வாசிக்கிறேன்...
    அருமையான அறிமுகங்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. @ பரிவை.சே. குமார்
      சொ.ஞானசம்பந்தன் ஐயாவின் தளம்பல தெரியாத செய்திகளைத் தாங்கி வரும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. இன்றைக்கு வலைச்சரத்தில் கௌரவிக்கப்பட்ட மூத்த பதிவர்கள் ஐவரில், திரு சுப்புத்தாத்தா, முனைவர் பழனி.கந்தசாமி மற்றும் புலவர் இராமனுசம் ஐயா ஆகிய மூவரை எனக்குத் தெரியும் திரு காஷ்யபன் மற்றும் திரு சொ.ஞானசம்பந்தம் ஆகியோர்கள் எனக்கு புதியவர்கள். அவர்களின் பதிவுகளைப் படிக்க உதவிய தங்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. @ இப்பதிவின் மூலம் உங்களுக்குப் புதிய பதிவர்கள் சிலர் அடையாளம் காட்டப் படுவது மகிழ்ச்சி தருகிறது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  10. ஆஹா, என்னையும் ஒரு பதிவராக ஜிஎம்பி ஏற்றுக்கொண்டு விட்டார். வாழ்க அவர் தளம்.

    ReplyDelete
    Replies
    1. @ டாக்டர் கந்தசாமி,
      யார் ஏற்றுக் கொண்டால் என்ன ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன பதிவுலகில் அலருடைய மன சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கு நன்றி ஐயா

      Delete
  11. வணக்கம். பதிவுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. @ மகேஸ்வரி பாலசந்திரன்
      பதிவுலக ஜாம்பவான்களை வாழ்த்தியதற்கு நன்றி மேடம்

      Delete
  12. இங்கே சொடுக்கவும்
    சுப்பு தாத்தா
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. @ சூரி சிவா,
      ஹல்லோ . சார், நாந்தான் ஜீஎம்பி. இதைவிட சத்தமாச்சொன்னால் வீட்டில் இருக்கும் மனைவி பயந்து விடுவாள். வலைச்சர ஆசிரியராக இருக்கக் கேட்டார்கள், நானும் சரி என்றேன் தினமும் சில பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்றார்கள். சரி என்றேன் பிறகுதான் தெரிந்தது எவ்வளவு பெரிய வேலை என்பது. இந்த அறிமுகப் படுத்தல் என்னும் வார்த்தையே சரி இல்லை என்று தோன்றியதால் அடையாளம் காட்டுகிறேன் என்று கூறுகிறேன் அப்படி அடையாளம் காட்டப் போய்மூத்தவர்கள் என்னும் வகையில் உங்களையும் இணைத்தேன் அதற்கு உங்கள் பின்னூட்டமே காணொளி வடிவில் அசத்தி விட்டீர்கள். பதிவர்கள் இதைப்பார்க்க வேண்டுமே என்னும் ஆர்வம் எனக்கு. என் தந்தையும் மகனும் உங்கள் குரலில் அசத்தி விட்டீர்கள் நன்றியுடனும் அன்புடனும் ஜீஎம்பி

      Delete
    2. சுப்புத் தாத்தா அவர்களுக்கு : நீங்கள் கொடுத்த இணைப்பை [http://www.youtube.com/watch?v=tOG7WoxS2sI] சொடுக்கினால், “This website/URL has been blocked as per instructions from Department of Telecommunications and/or Courts of India.” என்று வருகிறது...

      சரியான இணைப்பு இதோ : https://www.youtube.com/watch?t=85&v=tOG7WoxS2sI

      Delete
    3. @ திண்டுக்கல் தனபாலன்
      சுட்டியைச் சொடுக்கி நான் பார்த்தேனே. ஒன்னுமே புரியலெ நீங்கள் அனுப்பிய மின் அஞ்சலிலும் பார்க்க முடிந்தது

      Delete
  13. அனைவரும் சிறப்பான ஜாம்பாவன்களே என்பதில் ஐயமில்லை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இவர்களின் ஆர்வமும் விடாமுயற்சியும் ஒவ்வொரு முறையும் நம்மை ஊக்கப்படுத்தி இயங்கவைக்கும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @ தளிர் சுரேஷ்
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

      Delete
  14. அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம். வலைச்சரத்தில் வெற்றிகரமான 5 ஆம் நாள். இன்று அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வலைப்பதிவர்களது வலைத்தளங்களிலும் எனக்கு வாசிப்பு உண்டு.

    சூரி சிவா என்கிற சுப்புத்தாத்தா அவர்களது வலைத்தளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அவரது திறமைகளைச் சொல்லும். தனது மனதில் பட்ட கருத்துரையை சட்டென சொல்லுவார்.

    நீங்கள் சொல்வது போல காஷ்யபன் அவர்கள் சிவப்பு சிந்தனைக்காரர்தான். ஒன்றிரண்டு கட்டுரைகளை படித்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் ”மனவளம் வேண்டும்” என்ற சுட்டிக்குள் நுழைந்தால் மீண்டும் சுப்புத்தாத்தாவின் வலைக்கே அழைத்துச் செல்கிறது. சரி செய்யவும்.

    முனைவர் பழனி. கந்தசாமி அய்யா அவர்களின் நகைச்சுவையான பதிவுகளை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். “சில நேரங்களில் அவர் எழுதியது குறித்து சில சர்ச்சைகள் எழுவதுண்டு. மனிதர் கவலைப்படவே மாட்டார். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த மனிதர் என்பதே என் அனுமானம்.” – என்ற உங்கள் கணிப்பு சரிதான்.

    இன்றும் வலைத்தளத்தில் தொடர்ந்து மரபுக் கவிதைகளை புலவர் அய்யாவை மறக்க முடியுமா? நீங்கள் சுட்டிய சுட்டியில் உள்ள கவிதையைப் படித்தேன். பள்ளிகள் நடத்துவது என்பது இப்போது சேவைக்காக அல்ல: காசு பண்ணுவதற்கே என்ற அவரது ஆதங்கம் எல்லோருக்கும் உண்டானதுதான்.

    பெரியவர் சொ.ஞானசம்பந்தன் இலக்கியக் கட்டுரைகளை படித்து இருக்கிறேன்.

    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. @ தி தமிழ் இளங்கோ
      பிழை சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா. இப்போது சரிசெய்து விட்டேன் திரு காஷ்யபனின் வலைக்கே இட்டுச்செல்லும் வருகைக்கும் கூர்ந்த படிப்புக்கும் நன்றி ஐயா.

      Delete
  15. இன்றைய சரம் - மூத்த பதிவர்களைச் சிறப்பித்து தொடுக்கப்பட்டிருக்கின்றது..

    மேலும், பற்பல விஷயங்கள்..

    வாழ்க .. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. @ துரை செல்வராஜு
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

      Delete
  16. இன்றைய அடையாளப்படுத்தலில் நாங்கள் அறிந்தவர்கள் மூவர். சுப்பு தாத்தா....இந்த வயதிலும் சிக்சர் அடிப்பவர்! னீங்கள் சொல்லி இருப்பது போல நல்ல நகைச்சுவையுடன் எழுதுபவர் வித்தியாசமாகவும்.....இளைஞரே சந்தேகமே இல்லை....

    கந்தசாமி ஐயா அவர்கள் நையாண்டி (கொங்கு நாட்டிற்கே உரியதோ!!) நகைச்சுவையுடன் எழுதுவதை நாங்கள் மிகவும் ரசிப்போம்..எந்தத் தாக்குதலுக்கும் பயப்படாமல் நேருக்கு நேர் எதிர்கொள்பவர்...இல்லை கண்டு கொள்ளாமல் செல்பவர்....மன அலைகள் மனம் கவர்பவை...

    புலவர் கவிதையில் கலக்குபவர். நல்ல மனிதரும் கூட....நேரில் சந்தித்த அனுபவம் உண்டு..

    மற்றவர்களையும் அடையாளம் கண்டு கொண்டோம்...செல்கின்றோம்....நேரமின்மைதான் காரணமாகிவிடுகின்றது...

    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. @ துளசிதரன்
      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா கந்தசாமி ஐயா பற்றிய உங்கள் கருத்து /எந்தத் தாக்குதலுக்கும் பயப்படாமல் நேருக்கு நேர் எதிர்கொள்பவர்...இல்லை கண்டு கொள்ளாமல் செல்பவர்..../சரிதான் என்று தோன்றுகிறது

      Delete
  17. பதிவுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  18. @ தனிமரம்
    பதிவுலக ஜாம்பவான்கள் அனைவரையும் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  19. இன்றைய பதிவுகளில் பலர் அறியப்பட்டவர்களே. இருப்பினும் அவர்களது தளங்களுக்குச் சென்றேன். நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அறியப்பட்டவர்கள் ஆனாலும் அவர்களது தளங்களுக்குச் சென்றதற்கும் வருகைக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  21. பதிவுலக பெருமக்கள் வரிசையில் தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள அனைவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இளைய தலைமுறையினர் பலருக்கும் நல்ல முன்னுதாரணமாக திகழ்பவர்கள்.. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ கீதமஞ்சரி
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  22. இன்றையப் பதிவில் அடையாளம் காணப்பட்ட அனைவரையுமே நான் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @ துளசி கோபால்
      வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

      Delete