Friday, June 5, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

ஐந்தாம் திருநாள்

05.06.2015


19] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்-10



மிடுக்காய் கடுக்காய்-11





 மலர்களே மலர்களே-12







20. முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
வலைத்தளம்: மன அலைகள்


திருச்சியில் ஒரு இளைஞர்

என் அந்தப்புரத்து ராணிகள்

எங்க ஊர் பைரவ சேனை




21. திரு. துளஸிதரன் V. தில்லையக்காது அவர்கள் 
வலைத்தளம்:  Thillaiakathu Chronicles



    http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Teakwood-Museum-Nilambur-Kerala.html

    தேக்குமர அருங்காட்சியகம் – நிலம்பூர் – கேரளா


    கடவுள் ஏன் கல்லானார்?

    கற்க கசடற .... கற்பிக்கவும் கசடற




    22.   யாதவன் நம்பி திரு. புதுவை வேலு அவர்கள்
    வலைத்தளம்:  குழல் இன்னிசை



    தெள்ளத் தெளிவுறுதல் வேண்டும் 


    அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்

    சேவையே உன்னை சேவிக்கிறேன்

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

    08.06.2014 அன்று வலைத்தளத்தினில் 
    எழுதத்துவங்கியுள்ள இவர்
    ஓராண்டு நிறைவுக்குள் 
    225க்கும் மேற்பட்ட பதிவுகள் வெளியிட்டுள்ளார். 

    எழுச்சிமிக்க இவருக்கு நம் ஸ்பெஷல் பாராட்டுகள் :)




    23. ஆரண்ய நிவாஸ் 
    திரு. R. ராமமூர்த்தி அவர்கள்
    வலைத்தளம்: ”ஆரண்யநிவாஸ்” ஆர். ராமமூர்த்தி


    ஆண்டார் வீதியும் நானும்

    மூட்டு வலியும் மும்தாஜ் பேஹமும்

    சும்மாக் கிடந்த சங்கை.....







    மீண்டும் நாளை சந்திப்போம் !




    என்றும் அன்புடன் தங்கள்

     

    [வை. கோபாலகிருஷ்ணன்]









    68 comments:

    1. இன்றைய பதிவில் எமது நண்பர்கள் திரு. பழனி கந்தசாமி ஐயா திரு. துளசிதரன் - கீதா மற்றும் திரு. யாதவன் நம்பி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
      - கில்லர்ஜி

      ReplyDelete
    2. இன்றைய அறிமுக வலையாளர்களிற்கும்
      தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்:

      ReplyDelete
    3. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

      ReplyDelete
    4. என்னையும் வலைச்சரத்தில் வைகோ சேர்த்து விட்டார். நான் பிரபலமாகி விட்டேன். நன்றி கோபு சார்.

      ReplyDelete
      Replies
      1. பழனி. கந்தசாமி Fri Jun 05, 04:09:00 AM

        வாங்கோ, வணக்கம்.

        //என்னையும் வலைச்சரத்தில் வைகோ சேர்த்து விட்டார். நான் பிரபலமாகி விட்டேன். நன்றி கோபு சார்.//

        ஏற்கனவே மிகப்பிரபலமான என் அன்புக்குரிய தங்களை வலைச்சரத்தில் கொண்டுவந்தாவது நாமும் கொஞ்சூண்டு பிரபலமாக முடியுமா என்றதோர் நப்பாசை மட்டுமே எனக்கு. :)

        தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

        தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.

        Delete
    5. வலைச்சரத்தில் மணம் வீசும்
      நல்ல பல வண்ண மலர்களைக் கோர்த்துக்
      கொடுத்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

      ReplyDelete
    6. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வழக்கம் போல, ’ஆன்மீகப் பதிவர்' திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களது தெய்வீக மணம் கமழும் பதிவுகளுடன் இன்றைய தொடக்கம்.

      அய்யா முனைவர் திரு. பழனி கந்தசாமி அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தனது இயல்பான நகைச்சுவையுடன் கூடிய பதிவுகளை எழுதி அனைத்து தரப்பினரையும் தன்வசம் வைத்து இருப்பவர். நான் விரும்பிப் படிக்கும், இவரது அந்த காலத்து சமாச்சாரக் கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யம்.

      ’தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகள்’ என்ற வலைத்தளத்தினை நண்பர்களாக இணைந்து நடத்தி வரும் சகோதரர் துளசிதரன் மற்றும் சகோதரி கீதா ஆகியோரது கல்வியியல் மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் நல்ல பல தகவல்கள் கொண்டவை.


      ‘யாதவன் நம்பி’ புதுவை வேலு என்ற சகோதரர் நல்ல கவிஞர்; தமிழ் ஆர்வம் மிக்கவர். தமது வலைத்தளத்தில் பல பத்திரிகைகளில் வரும் முக்கிய தகவல்களையும் தான் ரசித்த கட்டுரைகளையும் பகிர்ந்து கொள்பவர்.

      ”ஆரண்யநிவாஸ்” ஆர். ராமமூர்த்தி என்றாலே உடன் எனக்கு நினைவுக்கு வருபவை, அவரது ”ஆரண்யநிவாஸ்” என்ற சிறுகதைத் தொகுப்பும், திருச்சியில் உள்ள ‘ஆதிகுடி’ காபிகிளப்பின் சூடான அசோகா அல்வா மற்றும் பட்டணம் பகோடா ஆகியவைகளும். அவரது எழுத்துக்கள் எல்லாமே சுவாரஸ்யம்தான். அண்மையில் ஸ்ரீரங்கம் பதிவர் சந்திப்பின் போதும், மற்றொருமுறை மாவட்ட மைய நூலகத்திலும் அவரைப் பார்த்ததுதான்.

      உங்கள் பதிவுகளை ஏற்கனவே படித்து இருந்தாலும், மீள் பதிவில் படிக்கும் போதும் ”ஒன்ஸ்மோர்“ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

      த.ம.4

      ReplyDelete
      Replies
      1. தி.தமிழ் இளங்கோ Fri Jun 05, 05:52:00 AM

        வாங்கோ சார், வணக்கம் சார்.

        //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வழக்கம் போல, ’ஆன்மீகப் பதிவர்' திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களது தெய்வீக மணம் கமழும் பதிவுகளுடன் இன்றைய தொடக்கம்.//

        நம் எல்லா செயல்களும் இறுதிவரை நாம் திட்டமிட்டபடி வெற்றிபெற தெய்வ அனுக்கிரஹமும் வேண்டும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். வலைச்சரத்தில் தினமும் முதலில் தெய்வீக மணம் கமழட்டுமே என்பதால் மட்டுமே எனக்குத்தெரிந்த இந்த எளிய முறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன்.

        முதல் நாள் என் சுய அறிமுகத்தில் நம்ம ஊர் பிரபல இடங்களான மலைக்கோட்டை, உச்சிப்பிள்ளையார், காவிரி நதி, நான் வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு போன்றவற்றை கொண்டுவந்தேன்.

        அதன்பிறகு இரண்டாம் நாள் என் இஷ்டதெய்வமான பிள்ளையரப்பாவையும் அவர்களின் 1000வது வெற்றிப் பதிவின் மூலம் கொண்டுவந்தேன்.

        மூன்றாம் நாள் அவர்களின் பதிவின் மூலம் என் குலதெய்வமான குணசீலம் பெருமாளை என்னால் கொண்டுவர முடிந்தது.

        நான்காம் நாள் என் கிராமதேவதையான மாந்துறையானையும், கருப்பரையும் அவர்களின் அபூர்வப்பதிவின் மூலம் என்னால் கொண்டுவர இயன்றது.

        ஐந்தாம் நாளான இன்று எங்களின் அடுத்த இஷ்ட தெய்வமும், அனைத்து மதத்தவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டாடி மகிழும் உலகப்புகழ்பெற்ற சமயபுரம் மஹமாயீ அம்பாளை அவர்களின் பதிவின் மூலம் கொண்டுவந்துள்ளேன்.

        நாளை ஆறாம்நாளுக்கும் எங்கள் பரம்பரை குடும்பத்தாரின் அடுத்த இஷ்ட தெய்வமான ஓர் மிகவும் பிரும்மாண்டமான பிரபலமான கோயிலை அவர்களின் பதிவுகளில் தேடிக் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்.

        எல்லாப்புகழும் அவர்களையே சேரட்டும். :) எனக்கும் மகிழ்ச்சியே.

        >>>>> தொடரும் >>>>>

        Delete
      2. vgk >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [2]

        எனது வலைச்சர ஆசிரியர் பணி ஆரம்பித்து ஐந்து நாட்களே முடிந்துள்ள நிலையில் வலைப்பதிவர்களின் போக்கினிலே ஏராளமான மாற்றங்களைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

        1) பல்வேறு காரணங்களால் இடையில் வரமால் இருந்துள்ளவர்களை மீண்டும் இங்கு காண முடிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

        2) வலைச்சரத்தின் மூலம், என் அன்புக்குரிய, விஜி, பூந்தளிர், ஜெயா போன்ற ஒருசிலராவது பிறரின் பதிவுகள் பக்கம் சிரத்தையாகப்போய் ஏதோ ஒருசில கருத்துக்களைப் பதிவுசெய்து வருவது என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதில் எனக்கும், அந்த சம்பந்தப்பட்ட பதிவினை வெளியிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

        3) பல்வேறு காரணங்களால் இடையில் இதுவரை நீண்ட இடைவெளி கொடுத்து பதிவு ஏதும் தராமல் இருந்துள்ள சிலரை மீண்டும் பதிவுகள் கொடுக்கத் தூண்டியுள்ளதாகவும் தெரிகிறது. உதாரணமாக இன்றைய புதிய வெளியீடான ‘காரண விநாயகர்’ http://jaghamani.blogspot.com/2015/06/blog-post.html என்பதைச் சொல்லலாம்.

        ’காரண விநாயகர்’ வெளியீட்டுக்கு உண்மையான காரணம் எதுவாக இருப்பினும், அதற்கான காரணம் நம் வலைச்சரமே என நினைத்து நாம் மகிழ்வோம். :)

        >>>>>

        Delete
      3. VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [3]

        //அய்யா முனைவர் திரு. பழனி கந்தசாமி அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தனது இயல்பான நகைச்சுவையுடன் கூடிய பதிவுகளை எழுதி அனைத்து தரப்பினரையும் தன்வசம் வைத்து இருப்பவர். நான் விரும்பிப் படிக்கும், இவரது அந்த காலத்து சமாச்சாரக் கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யம்.

        ’தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகள்’ என்ற வலைத்தளத்தினை நண்பர்களாக இணைந்து நடத்தி வரும் சகோதரர் துளசிதரன் மற்றும் சகோதரி கீதா ஆகியோரது கல்வியியல் மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் நல்ல பல தகவல்கள் கொண்டவை.


        ‘யாதவன் நம்பி’ புதுவை வேலு என்ற சகோதரர் நல்ல கவிஞர்; தமிழ் ஆர்வம் மிக்கவர். தமது வலைத்தளத்தில் பல பத்திரிகைகளில் வரும் முக்கிய தகவல்களையும் தான் ரசித்த கட்டுரைகளையும் பகிர்ந்து கொள்பவர்.

        ”ஆரண்யநிவாஸ்” ஆர். ராமமூர்த்தி என்றாலே உடன் எனக்கு நினைவுக்கு வருபவை, அவரது ”ஆரண்யநிவாஸ்” என்ற சிறுகதைத் தொகுப்பும், திருச்சியில் உள்ள ‘ஆதிகுடி’ காபிகிளப்பின் சூடான அசோகா அல்வா மற்றும் பட்டணம் பகோடா ஆகியவைகளும். அவரது எழுத்துக்கள் எல்லாமே சுவாரஸ்யம்தான். அண்மையில் ஸ்ரீரங்கம் பதிவர் சந்திப்பின் போதும், மற்றொருமுறை மாவட்ட மைய நூலகத்திலும் அவரைப் பார்த்ததுதான்.//

        இன்று என்னால் இங்கு வலைச்சரத்தினில் அடையாளம் காட்டப்பட்டு, சிறப்பிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பதிவரைப்பற்றியும் தாங்கள் இப்படி விலாவரியாக புட்டுப்புட்டு வைத்துள்ளதைப் படித்த எனக்கு ‘இனிப்புப் புட்டு’ சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது. :)

        >>>>>

        Delete
      4. VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ [4]

        //உங்கள் பதிவுகளை ஏற்கனவே படித்து இருந்தாலும், மீள் பதிவில் படிக்கும் போதும் ”ஒன்ஸ்மோர்“ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. //

        மிக்க மகிழ்ச்சி.

        //த.ம.4//

        வலைச்சரத்திற்கு தாங்கள் இட்டுள்ள வாக்குக்கும் நன்றி.

        என் வலைச்சரப்பதிவுகளுக்கு ‘தகவல் ஒலிபரப்பு அமைச்சர்’ ஆக செயல்படும் மூவரில் தாங்களும் ஒருவர் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆழமான கருத்துக்களுக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

        என்றும் அன்புடன் VGK

        Delete
    7. அனைவருக்கும் வாழ்த்துகள்...

      ReplyDelete
    8. இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

      ReplyDelete
    9. இன்றைய சரத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் அனைவர் தளத்துக்கும் சென்றிருக்கிறேன். திரு யாதவன் நம்பி தளத்துக்கு ஒரிரு முறைதான் சென்றிருக்கிறேன்! வாழ்த்துகள்.

      ReplyDelete
      Replies
      1. :) நன்றி :)

        ஸ்ரீராம் ஜெயராம் ஜய ஜய ராம் ! :)

        Delete
    10. ஆஹா! ராஜேஷ்வரி அம்மா வின் வலைத்தளத்துடன் ஆரம்பிக்கும் வலைச்சரம் அருமையாக தொடுக்கப்பட்டு வருகின்றது.... வலைத்தள பெரியவர் ஜாம்பவான் திரு பழனிகந்தசாமி ஐயா அவர்களின் அறிமுகம், தமிழில் கலக்கு யாதவன் நம்பிதிரு புதுவை வேலு, ஆரண்யனிவாஸ் போன்ற ஜாம்பவான் களின் நடுவில் நாங்களுமா?!!!!ஆச்சரியம், சந்தோஷம் மறுபுறம்....

      எங்களுக்கு தெரியப்படுத்திய சகோதரி ஆதிவெங்கட், கில்லர்ஜி இருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

      மீண்டும் நன்றி சார் எங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு!

      ReplyDelete
      Replies
      1. :) மிக்க நன்றி :)

        தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

        அன்புடன் VGK

        Delete
    11. ஆரண்ய நிவாஸை தற்போது தங்கள் மூலமாக அறிந்தேன். அவரது தளத்தைச் சென்று பார்த்தேன். மற்றவர்கள் தொடர்புள்ளவர்களே. நன்றி. நாளை சந்திப்போம்.

      ReplyDelete
    12. அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய இந்த மாத வலைச்சர ஆசிரியர் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள்
      இன்று (05/06/2015) என்னையும், எனது பதிவுகளில் சிலவற்றையும் சிறப்பித்து சிறந்த பதிவாளர்களுள் ஒருவராக வலையுலகிற்கு அடையாளம் காட்டியமைக்கு, முதலில் எனது நன்றியை ஆசிரியர் அய்யா அவர்களுக்கும், வலைச்சரம் குழுவினருக்கும்,
      அய்யா அவர்களுக்கு உறுதுணை புரிந்து வரும் அன்பர்களுக்கும், மேலும் என்னையும், எனது படைப்புகளையும், பதிவுகளையும் தொடர்ந்து ஊக்கப் படுத்தி வரும் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் தெரிவித்து மகிழ்கின்றேன்!

      எனது வலைப் பூ "குழலின்னிசை" தொடங்கி ஒரு வருடம் நிறைவுபெற இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில்.....
      அய்யா அவர்கள், சிறந்த பதிவாளராக சமுகத்திற்கு என்னை அடையாளம் காட்டியிருப்பது, எனது வலைப் பூவின்
      முதல் ஆண்டு பிறந்த நாளின் முதல்வாழ்த்தாகவே கருதி ஏற்றுக் கொள்கிறேன்.

      தமிழ்ப் பணி தொடர அன்பு வாழ்த்தினை தாருங்கள் நன்றி!

      த ம 2
      நட்புடன்,
      புதுவை வேலு
      www.kuzhalinnisai.blogspo.com
      France

      ReplyDelete
      Replies
      1. @yathavan nambi

        :) மிக்க நன்றி :)

        தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

        தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

        என்றும் அன்புடன் VGK

        Delete
    13. இன்றைய வலைச்சர அறிமுகத்தில் திரு ஆரண்யநிவாஸ் அவர்களைத் தவிர மற்ற அனைவருமே எனக்கு பரிட்சயமானவர்களே! தங்களின் அறிமுகம் மூலம் வலையுலகில் கோலோச்சும் நண்பர்களின் அறிமுகம் கிடைக்கிறது. மிக்க நன்றி அய்யா!
      த ம 7

      ReplyDelete
    14. இன்றும் இனிய தளங்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன..

      அன்பின் நல்வாழ்த்துகள்!..

      ReplyDelete
    15. இன்று அறிமுகம் ஆகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இப்பவே ஒவ்வொருவர் பதிவையும் போய்ப்பார்க் கிளம்பிட்டேன் இந்த வலைச்சர அறிமுகம் மூலம் நிறைய பதிவர் களையும் அவரவர் களின் எழுத்து மற்ற திறமை களையும் நன்னாவே தெரிஞ்சுக்க முடெகிறது.

      ReplyDelete
      Replies
      1. பூந்தளிர் Fri Jun 05, 09:40:00 AM

        வாங்கோம்மா, வணக்கம்மா.

        ஹைய்யோ .... வந்துட்டீங்களா, மிக்க மகிழ்ச்சி.

        //இன்று அறிமுகம் ஆகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

        அனைவர் சார்பிலும் பூந்தளிருக்கு என் நன்றிகள்.

        //இப்பவே ஒவ்வொருவர் பதிவையும் போய்ப்பார்க்கக் கிளம்பிட்டேன்.//

        சமத்தோ ....... சமத்தூஊஊஊஊஊ ! :) மகிழ்ச்சி. நன்றி.

        //இந்த வலைச்சர அறிமுகம் மூலம் நிறைய பதிவர்களையும் அவரவர்களின் எழுத்து மற்ற திறமை களையும் நன்னாவே தெரிஞ்சுக்க முடிகிறது.//

        ஒருசிலரின் பதிவுகள் பக்கம் சென்று ”வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மூலம் இங்கு நான் வந்தேனாக்கும்” என்று முதலில் சொல்லி விட்டு அதன்பிறகு அங்கு தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்து வருவது அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

        மிக்க நன்றிம்மா ..... பூந்தளிர் ! :) தினமும் வாங்கோ, ப்ளீஸ்

        பிரியமுள்ள கோபு

        Delete
    16. வலைச்சரத்தில் ஐந்தாம் திருநாள் உற்சவத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      35 நாட்களில் என் வலைத்தளம் எங்கோ சென்று விடுவேன் என்று நினைக்கிறேன்.

      வணக்கத்துடனும்
      வாழ்த்துக்களுடனும்
      அன்புடனும்

      ஜெயந்தி ரமணி

      ReplyDelete
      Replies
      1. Jayanthi Jaya Fri Jun 05, 10:14:00 AM

        வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

        //வலைச்சரத்தில் ஐந்தாம் திருநாள் உற்சவத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //

        அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

        //35 நாட்களில் என் வலைத்தளத்துடன் நான் எங்கோ சென்று விடுவேன் என்று நினைக்கிறேன்.//

        எங்கேயும் போய்விடாதீங்கோ ப்ளீஸ். எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே நீங்க இருக்கணுமாக்கும் .. ஹுக்க்கும்:)

        வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும், அன்புடனும்
        ஜெயந்தி ரமணி//

        :) மிக்க நன்றி ஜெயா :)

        Delete
    17. எல்லாருடைய பதிவுகளையும் படித்தேன் பின்னூட்டமும் போட்டேன் ஒருவரின் பக்கம் பின்னூட்ட பெட்டி இல்லியே.

      ReplyDelete
      Replies
      1. பூந்தளிர் Fri Jun 05, 10:14:00 AM

        வாங்கோ பூந்தளிர், தங்களின் மீண்டும் வருகை சும்மாச் சொக்க வைக்கிறது என்னை. :)

        //எல்லாருடைய பதிவுகளையும் படித்தேன். பின்னூட்டமும் போட்டேன். ஒருவரின் பக்கம் பின்னூட்ட பெட்டியே இல்லையே.//

        ஒருசிலர் அப்படித்தான். பின்னூட்டப்பெட்டியை எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பார்கள். அதற்காக ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளாதீங்கோ.

        தங்களின் தங்கமான தகவலுக்கு மிக்க நன்றி.

        அன்புடன் கோபு

        Delete

    18. ஐந்தாம் திருநாளில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில், முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பதிவுகளையும், புதுவை திரு வேலு அவர்களின் பதிவுகளையும் தவறாமல் படிப்பவன் நான். மற்ற இருவரின் தளத்திற்கும் சென்றதுண்டு. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களின் முத்தான மூன்று கதைகளையும் முன்பே படித்து இரசித்தவன். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

      ReplyDelete
    19. வலைச்சர ஆசிரியர் பொறுப்பெடுத்த துணிவுக்குப் பாராட்டுக்கள். முப்பது நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் செய்யுங்களேன்? உங்களால் முடியாதது எதுவுமேயில்லை என்ற கணிப்புக்கு வந்து வருடக்கணக்கிலாகிறது.

      ReplyDelete
      Replies
      1. அப்பாதுரை Fri Jun 05, 11:15:00 AM

        வாங்கோ, திரு. அப்பாதுரை, சார். வணக்கம்.

        //வலைச்சர ஆசிரியர் பொறுப்பெடுத்த துணிவுக்குப் பாராட்டுக்கள்.//

        நான் பதிவு எழுத ஆரம்பித்த ஆறே மாதங்களுக்குள் எனக்கு நம் திரு. அன்பின் சீனா ஐயா அவர்களால் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் அப்போது அதனை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இப்போது நானாகவே ஏற்றுக்கொள்ள காரணம் இந்தத் தொடரின் என் சுய அறிமுக முதல் பதிவினில் கொடுத்துள்ளேன். http://www.blogintamil.blogspot.in/2015/06/blog-post.html நீங்களே பார்த்துக்கோங்கோ.

        //முப்பது நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் செய்யுங்களேன்? உங்களால் முடியாதது எதுவுமேயில்லை என்ற கணிப்புக்கு வந்து வருடக்கணக்கிலாகிறது.//

        இதுபோல ஏதாவது சொல்லி, என்னைத்தட்டிவிடுவதே தங்களின் குணம் + வழக்கம் என்பதை நானும் புரிந்துகொண்டு என் கணிப்புக்கு வந்து வருடக்கணக்கிலாகிறது.

        சந்தேகமானால் இதோ பாருங்கோ இந்த இணைப்பினை:
        http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

        தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி, சார்.

        அன்புடன் VGK

        Delete
    20. எல்லா நாட்களும் சிறப்பான அறிமுகங்கள் எல்லோரும் ஜாம்பவான்கள்!

      ReplyDelete
    21. ஆஹா இன்று இறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்கள் பதிவுகளுக்கும் நன்றி. தொடருங்கள்.

      ReplyDelete

    22. இன்று அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    23. தொடர் அறிமுகம் செய்யப்பெற்று வரும் திருமதி.ராஜராஜேஸ்வ‌ரி, இன்றைய அறிமுகங்கள் திரு.பழனி கந்தசாமி, திரு. ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, திரு.புதுவை வேலு, திரு. துளசிதரன் ஆகியோருக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்!!

      ReplyDelete
      Replies
      1. மனோ சாமிநாதன் Fri Jun 05, 01:15:00 PM

        வாங்கோ மேடம், வணக்கம்.

        //தொடர் அறிமுகம் செய்யப்பெற்று வரும் திருமதி. ராஜராஜேஸ்வ‌ரி, //

        இவர்களின் தொடர் அறிமுகத்திற்கான சில காரணங்களை நான் மேலே நம் நண்பர் திரு. தமிழ் இளங்கோ அவர்களின் பின்னூட்டத்திற்கு என் பதிலாகக் கொடுத்துள்ளேன்.


        //இன்றைய அறிமுகங்கள் திரு.பழனி கந்தசாமி, திரு. ஆரண்யவாஸ் ராமமூர்த்தி, திரு.புதுவை வேலு, திரு. துளசிதரன் ஆகியோருக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்!!//

        தங்களின் அன்பார்ந்த வாழ்த்துகளுக்கு அவர்கள் அனைவரும் சார்பிலும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

        Delete
    24. :) Thanks a Lot Chitra :)

      மிக்க நன்றி !

      ReplyDelete
    25. இன்றைய அறிமுகங்கள் - பெருமுகங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்! வாத்யாரே வலைச்சரம் சூடுபுடிக்க ஆரம்பிக்குதுன்னு நினைக்கிறேன்! கலக்குங்க! அன்புடன், உங்கள் எம்ஜிஆர்

      ReplyDelete
      Replies
      1. @RAVIJI RAVI

        :) மிக்க நன்றி :)

        அன்புடன் VGK

        Delete
    26. வலைச்சரம் மறுபடியும் வந்ததுக்கு என்னோட வாழ்த்துகள். ஒரு மாச காலம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று இருக்குற வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

      இது எல்லாமே சந்தோசமான விஷயம் தான்னாலும் ஒரு சின்ன விஷயம் சொல்லணும்னு நினைக்குறேன். இதுவரைக்கும் வலைச்சரத்துல ஆசிரியரா இருந்தவங்க எல்லாருமே சின்ன சின்ன சம்பவங்கள், விபரங்கள்ன்னு எதையோ ஒண்ணை கொண்டு ஆரம்பிச்சு பதிவர்கள் பற்றியும் அவர்கள் பதிவு பற்றியும் சின்ன அறிமுகம் குடுத்து அப்புறம் அந்த பதிவுக்கான லிங்க் குடுப்பாங்க. இப்படி குடுக்கும் போது, சுவாரசியமா அத போய் படிக்குற மாதிரி இருக்கும்.

      ஆனா இங்க, வெறும் லிங்க் மட்டும் தான் இருக்கு. இதனால வலைச்சரத்து பதிவ பாத்துட்டு பதிவர்களோட பதிவுகள பாக்காம நிறைய பேர் அப்படியே போய்ட நிறைய வாய்ப்பு இருக்கு.

      வர்ற நாட்கள்ல ஆசிரியர் இத மனசுல வச்சுட்டு செயல்பட்டா நல்லாயிருக்கும். அதோட குறைவான அறிமுகங்கள் அலுக்காம பாக்கவும் வசதியா இருக்கும். இது என் சொந்த கருத்து. ஆலோசனை பண்ணினா சந்தோசம்.

      ReplyDelete
      Replies
      1. காயத்ரி தேவி Fri Jun 05, 03:41:00 PM

        //வலைச்சரம் மறுபடியும் வந்ததுக்கு என்னோட வாழ்த்துகள். ஒரு மாச காலம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று இருக்குற வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துகள். //

        :) மிக்க நன்றி :)

        //இது எல்லாமே சந்தோசமான விஷயம் தான்னாலும் ஒரு சின்ன விஷயம் சொல்லணும்னு நினைக்குறேன். இதுவரைக்கும் வலைச்சரத்துல ஆசிரியரா இருந்தவங்க எல்லாருமே சின்ன சின்ன சம்பவங்கள், விபரங்கள்ன்னு எதையோ ஒண்ணை கொண்டு ஆரம்பிச்சு பதிவர்கள் பற்றியும் அவர்கள் பதிவு பற்றியும் சின்ன அறிமுகம் குடுத்து அப்புறம் அந்த பதிவுக்கான லிங்க் குடுப்பாங்க. இப்படி குடுக்கும் போது, சுவாரசியமா அத போய் படிக்குற மாதிரி இருக்கும். //

        ஒவ்வொரு வலைச்சர ஆசிரியர்களும் ஒவ்வொரு பாணியினை கையாள விரும்புவார்கள். வலைச்சர ஆசிரியர் சொல்லும் சில சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் படித்துவிட்டு, அவரால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்படும் பதிவினை வாசகர்கள் படிக்காமல் சென்றுவிடும் ஆபத்தும் அதில் உண்டு. அதனால் நான், என் வலைச்சரப்பணியில் அந்த முறையை பிரதானமாக எடுத்துக்கொள்ளவில்லை.

        //ஆனா இங்க, வெறும் லிங்க் மட்டும் தான் இருக்கு. இதனால வலைச்சரத்து பதிவ பாத்துட்டு பதிவர்களோட பதிவுகள பாக்காம நிறைய பேர் அப்படியே போய்ட நிறைய வாய்ப்பு இருக்கு. //

        தாங்கள் சொல்வது முற்றிலும் தவறு. லிங்க் தான் மிகவும் முக்கியம். லிங்க் கொடுத்துள்ளதால் பலரின் பதிவுகளுக்கு உடனே தாவிச்சென்று படித்து கருத்துக்கள் எழுதி வருகிறார்கள் என்பதற்கான நிறைய உதாரணங்கள் என்னிடம் உள்ளன. யார் யார் எந்தெந்தப்பதிவுகளுக்கு புதிதாக இன்று வலைச்சரம் மூலம் சென்றுள்ளார்கள் என்ற அனைத்துப் புள்ளி விபரங்களும் என்னிடம் உள்ளன. அதில் தாங்கள் மட்டும் தான் இன்னும் எங்குமே செல்லவில்லை என்பதும் தெரியவருகிறது. :)

        //வர்ற நாட்கள்ல ஆசிரியர் இத மனசுல வச்சுட்டு செயல்பட்டா நல்லாயிருக்கும்.//

        எனக்குப்பிறகு ஒருவேளை தாங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க நேர்ந்தால் இதையெல்லாம் பின்பற்றி இன்னும் சிறப்பாகச் செய்யுங்கோ. என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

        வலைச்சர ஆசிரியராக ஆக தங்களுக்கு விருப்பம் இருந்தால் உடனே தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: cheenakay@gmail.com

        //அதோட குறைவான அறிமுகங்கள் அலுக்காம பாக்கவும் வசதியா இருக்கும்.//

        தினமும் மிகக்குறைவான எண்ணிக்கைகளில் மட்டுமே தான் பதிவர்கள் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும். அத்தகைய ஒவ்வொருவரின் பதிவுகளின் இணைப்புகள் வேண்டுமானால் சற்றே கூடுதலாக இருக்கலாம். அதுவும் தங்களுக்குப்பிடித்தமான ஏதோவொரு தலைப்பினைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அந்தப்பதிவரின் பதிவுகள் பக்கம்போய் ஏதேனும் ஒன்றையாவது படித்துப் பார்க்கட்டுமே என்ற உயரிய நோக்கத்தில் மட்டுமே அவ்வாறு செய்யப்பட்டு வருகிறது.

        //இது என் சொந்த கருத்து. ஆலோசனை பண்ணினா சந்தோசம்.//

        தங்களின் அன்பான வருகைக்கும், சொந்தக்கருத்தாகச் சொல்லியுள்ள பல்வேறு ஆலோசனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

        அன்புடன் VGK

        Delete
    27. வணக்கம்
      ஐயா
      இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
    28. இன்று அறிமுகமாகியிருக்கும் பதிவர்களில் திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி தவிர மற்ற அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்களே. திரு பழனி கந்தசாமி அவர்களின் நகைச்சுவை நிரம்பிய பதிவுகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். வேலு அவர்கள் எங்கள் மண்ணின் மைந்தர். நல்ல கவிஞர். திரு துளசிதரன் அவர்களின் பின்னூட்டத்தைப் பல பதிவுகளில் படித்திருக்கிறேன். வலைப்பக்கம் சென்றதில்லை. இன்று சிறப்பிக்கப்பட்டுள்ள எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்! நேரங்கிடைக்கும் போது நீங்கள் அடையாளம் காட்டியுள்ள பதிவுகளைப் படித்துக் கருத்திடுவேன். மிக்க நன்றி

      ReplyDelete
      Replies
      1. @Kalayarassy G

        தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள். - நன்றியுடன் கோபு

        Delete
    29. என் தளத்தை நீங்கள் அறிமுகப்படுத்தியதன் விளைவாக பூந்தளிர், விஜி என இரு சிறந்த பதிவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது. என் பதிவுகளைப் படித்துக் கருத்திட்ட இருவருக்கும் என் நன்றி! உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் என் நன்றி!

      ReplyDelete
      Replies
      1. Kalayarassy G Fri Jun 05, 06:53:00 PM

        வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகையும் செய்திகளும் மிகவும் மகிழ்வளிக்கின்றன.

        //என் தளத்தை நீங்கள் அறிமுகப்படுத்தியதன் விளைவாக பூந்தளிர், விஜி என இரு சிறந்த பதிவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது.//

        இருவரும் மிகவும் நல்லவர்கள். என்னிடம் தனிப்பிரியமும் ஆத்மார்த்த நட்பும் பாசமும் கொண்டவர்கள். வலையுலகில் என் நலம் விரும்பிகளான வெகுசிலரில் இவர்கள் இருவருக்கும் தனிச்சிறப்பான இடம் உண்டு.

        // என் பதிவுகளைப் படித்துக் கருத்திட்ட இருவருக்கும் என் நன்றி! உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் என் நன்றி!//

        அவர்களின் பின்னூட்டங்களும், தங்களின் பதில்களும் எனக்கு மெயில் மூலம் தகவல்களாக வந்திருந்தன. பார்த்தேன், படித்தேன், மனதுக்குள் மகிழ்ந்தேன்.

        இதுபோன்ற இனிமையான நட்புகள் மென்மேலும் வளரட்டும். அதற்கு இந்த என் வலைச்சரப் பதிவுகள் உதவட்டும். எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

        என் அன்புக்குரிய பூந்தளிர் சிவகாமிக்கும், பிரியமுள்ள விஜிக்கும் என் நன்றிகளையும் இங்கு தங்களுடன் சேர்ந்து நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

        Delete
    30. .
      .
      .
      இன்று
      இடம் பிடித்த
      பதிவர்கள் அனைவருக்கும்
      வாழ்த்துகள்.
      சில பதிவுகள் சென்று படித்து வந்தேன்.
      .
      .
      .

      ReplyDelete
      Replies
      1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் Fri Jun 05, 08:51:00 PM

        ஆஹா ! வாருங்கள் நண்பரே, வணக்கம்.

        //இன்று இடம் பிடித்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
        சில பதிவுகள் சென்று படித்து வந்தேன்.//

        மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. - அன்புடன் VGK

        Delete
    31. இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

      ReplyDelete
      Replies
      1. Tamizhmuhil Prakasam Fri Jun 05, 09:11:00 PM

        //இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.//

        வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி. அனைவர் சார்பிலும் தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

        Delete
    32. பதிவுலகில் அசத்தும் பதிவர்களின் படைப்புக்களை இன்று தொகுத்து தந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! தங்களது நாவினால் சுட்டவடு சிறுகதை மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

      ReplyDelete
      Replies
      1. @‘தளிர்’ சுரேஷ்

        மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

        Delete
    33. ராஜி, வேலு சகோ, துளசிதரன் சகோ, ஆர் ஆர் ஆர் , கந்தசாமி சார் அனைவருக்கும் வாழ்த்துகள்.

      சிறப்பான பகிர்வுக்கு நன்றி விஜிகே சார் :)

      ReplyDelete