வணக்கம்
நேற்றைய தினம் படிக்கும் வேலை இருந்ததால் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தும் வலைச்சரத்துக்கு எழுத முடியவில்லை. அதில் வருத்தம் இருந்தாலும் நிறைய பாடங்களைப் படித்ததில் திருப்தி ஏற்பட்டுவிட்டது.
நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் - ஒரு பதிவு எழுதினால் அன்றைய தினம் மட்டும் ஐநூறு பேர் வருவார்கள். அடுத்த நாள் இருநூறு பேரும் எழுதாத மற்ற நாட்களில் சராசரியாக நூறு பேரும் வந்துகொண்டிருந்தார்கள். இப்போது ஒரு பதிவு எழுதினால் அன்றைய தினம் முன்னூறு பேர் மட்டுமே வருகிறார்கள். எழுதாத மற்ற நாட்களில் ஐம்பது பேர் வந்தாலே பெரிய விஷயம். சொல்லப்போனால் தொடர்ந்து எழுதாத காரணத்தால் பல வாசகர்களை இழந்துவிட்டேன் என்பது தான் உண்மை. ஏதோ ஒரு ஊரிலிருந்தோ பெயர் தெரியாத நாட்டிலிருந்தோ யாரோ ஒருவர் அலைபேசியில் அழைத்து "உங்க பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று சொல்லும்போது கிடைக்கும் ஆனந்தம் அலாதி.
தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் பதிவர் துளசி கோபால் அவர்கள். பல வருடங்களாக இவருடைய பதிவுகளைப் படித்து வந்தாலும் நேரில் சந்தித்தது என்னவோ கடந்த ஆண்டு மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் தான். இவர் எழுதிய "அக்கா" வாங்கி ஆறு மாதத்துக்கும் மேலாகிறது. இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. இவரது எழுத்துக்கள் உரைநடையாக இல்லாமல் பேச்சு வழக்கில் இருக்கும். சமீபத்தில் எழுதிய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
நியூசிலாந்து நாட்டின் இணைய வேகம் பற்றிய பதிவு.
பதிவர் துளசி கோபால் அவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் மூன்று மாநிலப் பயணத்தொடர் மிகவும் சுவாரஸ்யம்.
தொடர்ந்து உற்சாகமாக எழுதி வருபவர்களில் அடுத்ததாக விசுAwesomeமின் துணிக்கைகள் என்னும் தளத்தில் எழுதிவரும் RJ விசு அவர்கள். இவர் எழுதிய விசுவாசமின் சகவாசம் புத்தக வெளியீடு கடந்த ஆறாம் தேதி வேலூரில் நடைபெற்றது. அன்றைய தினம் என்னுடைய திருமண நாள் என்பதாலும் வகுப்பு இருந்ததாலும் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. இவரது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வந்தாலும் கருத்துரை இட்டதில்லை. இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
மதுரைத்தமிழன் என்றால் பதிவர்களில் அறியாதவர்களே இருக்கமாட்டார்கள். காரணம், ஒவ்வொரு பதிவரையும் அன்பாகக் கலாய்ப்பதும் பதிலுக்கு நாம் கலாய்த்தால் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்வதும் இவரது சுபாவம். தவிர, அரசியல் நையாண்டி பதிவுகள் இவரைப்போல் யாராலும் எழுதமுடியாது. போட்டோஷாப்பிலும் பலே ஆள். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவர் இந்தியாவுக்கு வரும்போது கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளிடமும் அடி வாங்குவது உறுதி என பலரும் பின்னூட்டத்தில் தெரிவிப்பதுண்டு. மிக சமீபத்தில் இவர் தமிழகம் வந்திருந்தார். பதிவர் விசு அவர்களின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டார். மதுரைத்தமிழனிடம் போனில் உரையாடும் வாய்ப்பு மட்டுமே கிட்டியது. இவரது பதிவுகளில் என்னைக் கவர்ந்தவை:
நல்ல உணவு வகைகளையும் வித்தியாசமான உணவுகளையும் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து ருசி பார்க்கும் பதிவர் ஒருவர் இருக்கிறார். அவர் கடல்பயணங்கள் என்னும் தளத்தில் எழுதிவரும் திரு.சுரேஷ் குமார். கடைக்கு தேநீர் அருந்துவதற்காக வெளியே சென்றவர் நல்ல தேநீரை சுவைக்க கொஞ்சம் கொஞ்சமாக கேரளா வரை சென்றுவிட்டவர். விதம் விதமான ஹோட்டல்களையும் சாப்பாடு வகைகளையும் ருசி பார்ப்பவர். ஹோட்டல் மட்டுமின்றி சிறு பிள்ளையாவோம் என்ற தலைப்பில் எழுதும் பதிவுகள் நம்மை இருபது இருபத்தைந்து வருடங்கள் முன்னர் இழுத்துச் செல்லும். இவரது சமீபத்திய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில
புத்தம் புதிய பதிவர் ஒருவரை அறிமுகப்படுத்தலாமா?
சுந்தரமூர்த்தி என்னும் பெயரில் முகநூலில் இருக்கிறார். செல்லா என்னும் பெயரில் வலைப்பூவில் எழுதிவருகிறார். சுவாரஸ்யமான கவிதைகளும் சில கதைகளும் எழுதியிருக்கிறார். இதுவரை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறாரா தெரியவில்லை. நிறைய பதிவுகள் எழுதியிருந்தாலும் ஏனோ பின்னூட்டங்கள் அதிகம் வந்ததில்லை. இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
இன்னும் பேசலாம் - நாளை.
முடிவில் உள்ள தளம் புதியது... நன்றி கார்த்திக் சரவணன்...
ReplyDeleteஇன்றைய அறிமுக இனிய நண்பர்களுக்கும், துளசி அம்மாவிற்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகில்லர்ஜி
தங்களால் அறிமுகப் படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகக பதிவர்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல பதிவர்களை அடையாளம் கண்டு சிறப்பித்து வரும் நண்பர் கார்த்திக் சரவணன்
அவர்களுக்கு பாராட்டுக்கள்.
த ம 3
நட்புடன்,
புதுவைவேலு
கடைசியில இருக்கற ஒருத்தரத் தவிர மத்த எல்லாருமே அம்ம ஆளுங்கதேங். இங்க பாத்ததுல கொள்ளை கொள்ளையான மகிழ்வோட அவங்களுக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஆமா.. நீங்க ஏன் பதிவெழுதா விரதம் எடுத்திருக்கீங்க?
Deleteஅறிமுகத்திற்கு நன்றி, மற்றும் சக அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். தாம் என் எழுத்தை தொடர்ந்து படிப்பதை அறிந்து மகிழ்ந்தேன். ஆனாலும், இந்நாள்வரை தாம் பின்னோட்டம் இடவில்லை என்பதை படித்தவுடன்.. எதோ ஒரு சோகம்...
ReplyDeleteஇன்று பூத்த மலர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிசு அவர்களின் தளமும், சுந்தரமூர்த்தி அவர்களின் தளமும் புதிது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்! நேற்று வகுப்பு இருந்ததால் வலைச்சரத்திற்கு லீவ் விட்டுவிட்டீர்களா? ரொம்ப நேரம் தேடியும் பதிவு காணலையேன்னு ஒரே குழப்பம்! இப்பத்தான் தீர்ந்தது. கடைசியில் அறிமுகம் செய்துள்ள செல்லா அவர்களின் தளம் சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! மற்றவர்கள் நம்ம நண்பர்கள்தான்! நன்றி!
ReplyDeleteநினைவில் வைத்தமைக்கு நன்றி சரவணன்.
ReplyDeleteஇடம்பெற்ற அனைவரும் ஓரளவு தெரிந்தவர்கள்தான்,புத்தம் புதியவரைத் தவிர.
அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் நன்றி சரவணன்.
ReplyDeleteஅறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி கார்த்திக் சரவணன் அவர்களே... :-)
ReplyDeleteஎல்லோரும் சொல்லியிருப்பது போல செல்லா மட்டும் புதியவர். மற்ற அனைவரும் நண்பர்களே.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
சிறந்த அறிமுகங்கள் சகோ. புதிய தளத்திற்கும் சென்று பார்க்கிறேன்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுதியபதிவரை சென்று பார்க்கிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...!
அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteஅண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html