தொடர்ந்து எழுதாதவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கலாம். உண்மையிலேயே காரணங்கள் தானா அல்லது சப்பைக்கட்டா என்பது அவரவர்க்குத் தெரிந்திருக்கும். எனக்கும் காரணம் இருக்கிறது. தினமும் காலை எட்டு மணி அல்லது எட்டேகால் மணிக்குப் புறப்பட்டு மகனையும் மகளையும் பள்ளியில் விட்டுவிட்டு வேளச்சேரிக்குச் சென்று வண்டியை நிறுத்திவிட்டு எட்டு ஐம்பது மணி ரயிலைப் பிடித்தால் ஒன்பதரை மணிக்கு மயிலாப்பூர் அலுவலகத்துக்குச் சென்றுவிடலாம். மாலை ஐந்தரை மணிக்கு முடியும் என்றாலும் ஆறு மணிக்குக் குறைந்து வெளியேற முடியாது. ஆறு மணிக்குக் கிளம்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் ஏழு மணி ஆகிவிடும்.
இதெல்லாம் ஒரு காரணமா என்கிறீர்களா? இல்லை. நான் ஜப்பானிய மொழி பயில்கிறேன். வரும் ஐந்தாம் தேதி அதற்கான தேர்வும் நடைபெற இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் வகுப்பு நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரையும் ஞாயிறன்று காலை ஒன்பது மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் வகுப்புகள் இருக்கும். நல்ல வேளையாக சனிக்கிழமை மதியத்துக்குப் பின்னான வகுப்பு என்பதால் பிரச்சனையில்லை. எனக்கு சனிக்கிழமை மதியம் இரண்டு மணி வரை மட்டுமே அலுவலகம். முழு வேலை நாளாக இருந்திருந்தால் ஞாயிறு மட்டும் நடைபெறும் வகுப்பில் சேர்ந்திருக்கவேண்டும். இதில் சேர்ந்திருந்தால் அடுத்த மாதம் தேர்வு எழுத முடியாது. டிசம்பர் மாதத்தில் தான் எழுத முடியும்.
நம்மைப் பொறுத்தவரையில் ஜப்பானிய மொழி கொஞ்சம் கடினமான மொழி. ஆங்கிலேயர்களுக்கு மிக மிகக் கடினமான மொழி. தினம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்கள் செலவழித்தாலேயொழிய புரிந்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் கடினம். தொடங்கிய புதிதில் கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருந்த நான் சில நாட்களில் இம்மொழியின் கடினத்தை உணர்ந்துகொண்டதும் சீரியசாகப் படிக்கத் தொடங்கிவிட்டேன். மொழி பயில்வதற்காக செலவு செய்யப்படும் நேரமும் என்னை வலைப்பக்கத்திலிருந்து தள்ளிவைத்திருக்கிறது.
இந்த மொழி பயில்வதற்குத் தூண்டியவர் ஒரு வலைப்பதிவர் தான். அபயா அருணா என்ற பெயரில் எழுதிவரும் திருமதி.உமா மகேஸ்வரி அம்மா அவர்கள் தான். சென்னையில் தான் வசிக்கிறார். போனில் பலமுறை பேசியிருக்கிறேன், இருந்தாலும் இது வரை நேரில் சந்தித்ததில்லை. இந்தப் பதிவை பப்ளிஷ் செய்ததும் அழைக்கலாம் என்றிருக்கிறேன். இவரும் எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. இவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்தவை:
இவரது பதிவுகளில் சென்று மீண்டும் எழுத வருமாறு அழையுங்கள்.
தொடர்ந்து உற்சாகமாக எழுதி வருபவர்களில் முக்கியமானவர் தளிர் சுரேஷ் அவர்கள். இவருடைய பாப்பா மலர், ஹைக்கூ கவிதைகள் மற்றும் நகைச்சுவைப் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. பின்னூட்டங்கள் வருகின்றனவோ இல்லையோ - எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார். இவருடைய வலைப்பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
எப்போதாவது எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் பதிவர் சீராளன். அக்கினிச்சுவடுகள் என்னும் வலைப்பூவில் கவிதைகள் மட்டுமே எழுதிவருகிறார். நம்முடைய பின்னூட்டங்கள் இவரைத் தொடர்ந்து எழுதச் செய்யட்டும்.
புத்தம் புதிய பதிவர் ஒருவரைப் பார்க்கலாமா? நண்பர் ப்ரீத்தம் கிருஷ்ணா முகநூலில் தீவிரமாக இயங்கி வருபவர். அங்கே வெளியிடும் சில பெரிய பதிவுகளை தனது ப்ரீத்தம் கிருஷ்ணா என்னும் வலைத்தளத்திலும் அவ்வப்போது வெளியிடுபவர். சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் எழுதுகிறார். எல்லா பதிவுகளையும் முகநூலிலேயே படித்துவிடுவதால் நான் அதிகம் இவரது தளத்துக்குச் செல்வதில்லை. இவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் பதிவுகளின் மீது எனக்கு அளவற்ற ஈடுபாடு உண்டு!
சிறப்பு வாழ்த்துகள்.
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
முகநூலில் எழுதுகிற சில நல்ல பகிர்வுகளை வலையில் போடலாம் என்றாலோ, வலையில் நிறைய வரவேற்பு பெற்றதை முகநூலில் போடலாம் என்றாலோ இதுதான் கஷ்டம். அங்கயே படிச்சுட்டனேன்னு உன்னை மாதிரி நெறையப் பேர் எஸ்ஸாயிடுறாங்க. ரெண்டு தளத்துக்கும் தனித்தனியாத்தான் இயங்க வேண்டியிருக்கு. சிறப்பான இன்றைய அறிமுகங்களுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றும் ஒரு புதிய தளம்... நன்றி...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
ப்ரீதம்கிருஷ்ணா ஃபேஸ்புக்கில் எனக்கு அறிமுகம். இசை ரசிகரும் கூட!
ReplyDeleteநண்பர்களுக்கு வாழ்த்துகள்.
இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் தாங்கள் ஜப்பான் மொழி பயில்வது அறிந்து மகிழ்ச்சி...நண்பரே..
ReplyDeleteஇன்றைய அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு ந்னிறகள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅபயா அருணா அவர்களை இரண்டாம் பதிவர் மாநாட்டில் சென்னையில் சந்திருக்கிறேன்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ஜப்பானிய மொழித் தேர்வை சிறப்பாக செய்ய என் வாழ்த்துகள்.
அபய அருணாவின் பதிவுகளை வாசித்து இருக்கிறேன்! இப்போது எழுதுவதில்லை போலும்! என்னுடைய அறிமுகத்திற்கும் சிறந்த பதிவுகளை பகிர்ந்தமைக்கும் நன்றி! சீராளனின் கவிதைகள் சிறப்பானவை! ப்ரித்தம் கிருஷ்ணா தளத்திற்கு எப்போதோ சென்ற நினைவு! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteஎன் கிறுக்கல்களையும் இவ்விடத்தில் வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் கார்த்திக் சரவணன் அனைத்துச் சக பதிவர்களுக்கும் இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுடைய தளங்களைக் கண்டேன். நன்றி. நாளை சந்திப்போம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSorry there is no tamil font in my cell .
ReplyDeleteThanks a lot for remembering me . My lap top is not keeping well and I use Ipod where typing English also is difficult . I do not like making comments ( Comment Box)in English. Thanks to Venkat sir Thalir sir for remembering me and of course School paiyan. I am also busy preparing for Top level exam of Japanese , Which is very difficult to crack , and that too on my own without any guidance from any body except net.
From July 5 th with an incredible speed and energy I will start
ஜப்பானிய மொழி கற்கிறீர்களா? பிரமாதம்! பரீட்சைக்கு வாழ்த்துகள்!
ReplyDelete