Sunday, July 19, 2015

இன்றோடு ஐந்தாம் நாள்

அனைவருக்கும் வணக்கம் ,

உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கும் ; எதற்கு இவன் தினமும் குருநாதர் எனும் வரிசையில் தினம் ஒரு பிரபல பதிவரை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறான் ? அதற்கான காரணம் ரொம்ப சிம்பிள் . இன்று கூகிலில் தேடினால் என் பெயரும் என் புகைப்படமும் வருகிறது என்றால் அதற்கு காரணம் என்னுடைய குருநாதர்கள் தான் . அவர்களிடம் இருந்து எழுதுவது எப்படி என்பதை மட்டுமில்லாமல் , பல நற்குணங்களையும் கண்டு அதையும் பின்பற்றி வருகிறேன் . எடுத்துக்காட்டாக ராம்குமார் அண்ணனிடம் துளிகூட பிகு , ஈகோ என்பதைக் காணவே முடியாது . அண்ணே ! நீங்க சூப்பரா எழுதிரிங்க என்றால் ஏன்யா நீ வேற ? அப்படிலாம் இல்லையா என்று சிரித்துக்கொண்டே பேசுவார் . வாத்தியாரிடம் சீனியர் எழுத்தர் என்ற தலைக்கணத்தை நீங்கள் கடுகளவும் காணமுடியாது . இதுபோன்றே என் குருநாதர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குணங்களும் எழுத்தின் பரிமாணங்களையும் கண்டு , அதை பயில்வதால் எனக்கு வரும் நன்மை பல. அவர்களிடம் நான் கொண்டுள்ள நன்றியுணர்வை இங்கே பலரின் முன்னிலையில் வெளிப்படுத்துவதே மிகச்சரியான கணம் என்று நினைக்கிறேன் . வெல் , பதிவுக்குச் செல்லலாமா ? அதற்குமுன் ஒரு குட்டி ஜோக் .

அரசியல்வாதி – என்னப்பா ! மேடையில ஒரே ஓடா வந்து விழுகுது ?
தொண்டர் -  ஓட்டை அள்ளி வீசுங்கனு நீங்க சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க தலைவரே !!!


குருநாதர்
உங்களுக்கெல்லாம் சூரியநாராயண சாஸ்திரிகள் என்றொருவரைப் பற்றி சொன்னால் ஒருகணம் யோசிப்பீர்கள் . அவரது தமிழ்ப் பெயரான பரிதிமாற் கலைஞர் என்று சொன்னால் , பெட்ரோலில் பற்றிய நெருப்பாய் உங்கள் மனம் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் . அதுபோல தான் ராஜா அண்ணனும் . கவிதை மட்டுமின்றி சொ(நொ)ந்த அனுவங்கள்  எழுதுவதில் கில்லாடி . யார் இந்த ராஜா என்று யோசிக்கவேண்டாம் . அரசன் அண்ணாவின் இயற்பெயர் ராஜா தான் . எனக்கே இன்று காலை தான் தெரியும் . அண்ணனைப் பற்றி மிக எளிமையாக சொல்லவேண்டுமெனில் இவரின் கவிதைகளைப் போன்றவர் தான் . வெளியில் இருந்து படிக்க எளிமையான தோற்றத்தினைக் கொண்டிருக்கும் இவரது கவிதைகளில் உள்ளார்ந்த அர்த்தங்கள் பல பொதிந்திருக்கும் . அக்கவிதைகளைப் போன்றதொரு மனிதர் தான் அரசன் அண்ணா .

என்னிடம் ஒருமணிநேரம் தொடர்ந்தாற்போல் பேசினால் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம் ; ஒரு அரைக்கிறுக்கனின் வார்த்தைகளைப் போன்றுதான் என் உரையாடல்கள் இருக்கும் . ஒருநாள் ஆமாம் அது கரெக்ட் என்று கூறிவிட்டு, அடுத்த நாளே அதெல்லாம் மாபெரும் தவறு எனும் ரேஞ்சில் பேசுவேன் . என்ன செய்ய? மேனுபேக்ச்சுரல் டிபெக்ட் . ஆனால் அரசரடிம் பேசினால் அப்படியிருக்காது . நான் என்னதான் ப்ளேடு போட்டு கழுத்தை அறுத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாம் பேசுவதை ஆர்வத்துடன் கேட்பார் . நான் பேசுவது சில சமயங்களில் எனக்கே அலுப்பை உண்டாக்கி , அண்ணே ! செம மொக்க போடறேன்ல னு கேட்டால் கூட , அவரின் வாயிலிருந்து அட ! எங்கிட்ட போடாம வேற யார்கிட்ட தம்பி போடப்போறனு கேட்கும் ஆள் .

எல்லாரும் , குறிப்பாக இன்னும் திருமண பந்தத்தில் சிக்காமல் , காதலியை கரெக்ட் செய்ய முடியாமல் , காதலியிடம் சண்டையில் இருப்பவர்கள் , அல்லது புதுக்காதலை ஏற்படுத்திக் கொள்ள விழைபவர்களெல்லாம் அண்ணனுடைய குடிலுக்கு வருகை தாருங்கள் . இவரிடம் காபிரைட் பிரச்சனையெல்லாம் இல்லை . இவரது கவிதைகளை நீங்களே எழுதியதாகக் கூறி காபி-பேஸ்ட் செய்தால் போதும் . மணமானவர்களுக்கும் இது பொருந்தும் . கண்டிப்பாக ஊடல் , கூடலில் முடியும் .  நானே பல இக்கட்டான தருணங்களில் இவரது கவிதைகளை நான் எழுதியதாக பில்டப் செய்து தான் சமாளித்து வருகிறேன் . இவரது தளத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் மிகமுக்கியமான நல்ல விஷயம் , இவரின் தளம் கூகுலில் தேடும்போது அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை . ஏதோ  search description மற்றும் டெம்ப்ளேட் குறித்த பிரச்சனைகள் இருக்கின்றது என நினைக்கிறேன்.  அதை அவர் சரிபடுத்திக்கொள்ளாதவரை எனக்குப் பிரச்சனையில்லை . ஒருவேளை சரிபடுத்திவிட்டால் , வேறு என்ன ? காபி – பேஸ்டிற்கு எனக்கு வேலையில்லாமல் போகும் ; பரவாயில்லை ! அரசன் அண்ணே ! கொஞ்சம் அதை கவனியுங்கள் . அண்ணாரின் சில கவிதைகள் மற்றும் அனுபவக் கட்டுரைகள் ,



சினிமா & கேம்ஸ் & காமிக்ஸ்

முதலை எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெயர் தெரியா நண்பர் , இப்போது குறைந்த காலத்தில் மிகப்பிரபலம் ஆகிக்கொண்டிருப்பவர் . ஹாலிவுட் சினிமாக்கள் , காமிக்ஸ்கள் , கம்ப்யூட்டர் கேம்ஸ் , PSP , PS2 என கேம்ஸ்களின் மொத்த வரிணையையும் வகைப்படுத்தி அட்டகாசமாக எழுதி வருகிறார் . அவரின் பதிவுகளில் சில ,





சமையல்

அமைதிச்சாரல் எனும் வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் சாந்தி மாரியப்பன் அவர்களை உங்களுள் பலருக்கு தெரிந்திருக்காம் . புகைப்படப் பிரியையான இவர்  பல்வேறு வணிக மற்றும் சிறு பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார் . மேலும் ஒரு புகைப்படத் தளத்தையும் நிர்வகித்து வருகிறார் . இவரின் சமையல் சார்ந்த பதிவுகளில் சமைப்பது எப்படி என்பது மட்டுமின்றி , அதன் வரலாறு , அச்சமையலால் ஏற்படும் பயன்கள் போன்ற பல விஷயங்களையும் விளக்குகிறார் . இவரின் பதிவுகளில் சில


கவிதை

நீரோடை எனும் தலைப்பில் எழுதிவரும் மலிக்கா அக்கா அவர்கள் பள்ளிக்கல்வியையே முடிக்காத நிலையில் அற்புதமான எளிமையான கவிதைகளை தனது தளத்தில் எழுதிவருகிறார் . இவரின் பதிவுகளில் சில



குறும்படம் + அனுபவம் + கவிதை

எறியாத சுவடிகள்எனும் தளத்தில் எழுதிவரும் நண்பர் பவண் , சில காலங்களாக தலைமறைவாக இருந்துவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார் . ஜாலியான எழுத்துகளுக்கு சொந்தக் காரர். கவிதையிலும் தன்னுடை முத்திரையை தொடர்து பதித்து வருபவர் . அவ்வப்போது குறும்படமும் இயக்கி வருகிறார் . இவரின் சில பதிவுகள்





நன்றியுடன் ,

மெக்னேஷ் திருமுருகன்









10 comments:

  1. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தொடருகிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Search Description முக்கியமான விசயம்...

    நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பவன்சிங்கும் முதலையும் எனக்குப் புதுசு. பாக்கறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இன்றும் சிறப்பான அறிமுகங்கள்...
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள் ..! தங்கள் குருநாதார் பக்திகண்டு மகிழ்ந்தேன் வியந்தேன். நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  7. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. எரியாத சுவடிகள் தளம் புதிது! இணைப்புக்களுக்குச் சென்று பார்க்கிறேன்! அரசனின் இயற்பெயர் அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
  9. அறிமுகங்களுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete