அனைவருக்கும் வணக்கம் ,
எனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் இவ்வார வலைசரத்திற்கும் ஆசிரியராக நானே தொடர்கிறேன். கொடுத்த வாய்ப்பை அதி்கரித்த வலைச்சர குழுமத்திற்கும், தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனுக்கும் என் நன்றியைத் தெரிவித்து விட்ட , இன்றைய பதிவர்களைப் பற்றி காணலாம் .
குருநாதர்
இன்றைய குருநாதர் வரிசையில் நான் கூறப்போவது அமைதியே வடிவமாக கொண்ட ஒரு பதிவர் . அவர் எவ்வளவு அமைதியானவர் என்றால அமைதியே அவரிடம் தோற்றுப்போய் விடும் எனும் அளவிற்கு அமைதியானவர். ஆனால் பதிவுகளின் வழியே பலருடைய அமைதியை குலைத்துவிடுவார். அவர்தாம் ஸ்கூல்பையன் எனும் வலைத்தளத்தில் எழுதிவரும் கார்த்திக் சரவணன் அண்ணா. இவரை ஒருமுறை தான் சந்தித்திருக்கிறேன் எனினும், பலமுறைச் சந்தித்து பேசியதொரு உணர்வு. இவர் எப்பொழுதாவது தான் எழுதுவார் எனினும் அந்த பதிவும் குறிஞ்சமலராய் மணம் வீசும் . இவரின் சில பதிவுகள்,
அரசியல்
மானுட விடுதலை எனும் தலைப்பில் எழுதி வரும் ரமேஷ் அண்ணனின் அரசியல் கட்டுரைகள் பல, மாற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது மட்டுமின்றி பற்பல பத்திரிக்கைகளிலும் பிரசூரிக்கப்பட்டுள்ளன. அரசியல் சார்ந்த பதிவுகளை தைரியமாக, அனைவருக்கும் புரிகின்ற வகையில் எழுதிவரும் இவர், சமூகத்தின் மீதான சாடலை நேர்பட வைத்து பேசுவது அருமை.
ஒரு கட்டுரையில் ஊழல் சார்ந்த இவரது பார்வை
ஊழல் என்பது அதிர்ச்சியான, அருவருப்பான செய்கையாய் பார்க்கப்படாமல், வெகு இயல்பாக பேசி கலைகிற சங்கதியாய் மாறி வருகிறது. இது தேசத்தை நேசிப்பவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து மட்டங்களிலும் ஊழலால் ஏதோ ஒரு முறையேனும் பாதிக்கப்படுகிற இந்திய குடிமகன் அதற்கு எதிராக கோபம் கொள்வது குறைந்துக்கொண்டே இருக்கிறது.
இப்படி அரசியல் மட்டுமின்றி , சினிமா , சர்வேதேசியம் , வரலாறு , நூல் அறிமுகம் என பலப்பல விஷயங்களை எழுதிவரும் இவரது வலைத்தளம் அனைவரும் படித்தாக வேண்டிய மிகமுக்கிய தளமாகும் . இவரின் கட்டுரைகளில் சில ,
ஊழலின் பரிமாணம்
விடுதலைப்போரில் பெண்கள்
சினிமா
வெண்புரவி எனும் தளத்தின் வழியே பற்பல அனுபவக்கட்டுரைகள் மற்றும் சினிமா சார்ந்த பதிவுகள் எழுதிவரும் வெண்புரவி அருணா, தனக்கே உரிய பாணியில் தன் பதிவுகளில் தூள் கிளப்பி வருகிறார். இவரின் பதிவுகள் நீளமாயிருப்பினும் அயற்சியைத் தராமல , ஆர்வத்தோடு படிக்கவைப்பதுடன் பற்பல அனுபவங்களையும் அதனுள் நுழைத்து எழுதிவருவது சிறப்பு. இவரின் சில பதிவுகள்
சிறுகதை
படலை எனும் தளத்தில் பற்பலவிதமாக எழுதிவரும் JK அண்ணன் சிறுகதைகளுக்கு குறிப்பாக சயின்ஸ் பிக்சன் சிறுகதைகளுக்கு செம பேமஸ். இவர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார் . எதை விடுவது? எதை வலைச்சரத்தில் கோர்ப்பது? என்று என்னையே குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார். ஒரு சிறுகதையில் , பள்ளியில் அறிவியல் வகுப்பு நடைபெறுகிறது . மாணவர்கள் அனைவரும் தாங்கள் உருவாக்கிய (அ) கண்டுபிடித்த அறிவியல் மாதிரிகளை ஆசிரியரிடம் சப்மிட் செய்கிறார்கள் .அப்போது ஒரு மாணவன் பூமி எனும் கிரகத்தை உருவாக்கி, அம்மாதிரியை அவ்வாசிரியரிடம் காட்டுதற்காக முழுபயத்துடன் காத்திருக்கிறான் . அவன் கையில் பூமி இருக்கிறது . அசிரியர் ‘அடுத்து’ என்று கூறியவுடன் இவனுக்கு நடுக்கம் ஏற்படுகிறது . அந்த நடுக்கத்தின் தாக்கத்தால், அவன் கையிலிருக்கும் பூமியில் உள்ள இந்தோனிஷியாவின் கடற்கரை திட்டுகளில் இடப்பெயர்வு நடைபெற்று சுனாமி உருவாகிறதாம் . என்னே உவமை? லூப் எனும் மாதிரியை வைத்து இவர் உருவாக்கிய இக்கதை , அட்டகாசமான கதை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மேலும் இவர் கணிதம், இயற்பியல் சார்ந்த விஷயங்களையும் வியாழமாற்றம் எனும் தலைப்பின் கீழ் எளிமையாக எழுதிவருகிறார் .
இவரின் சிறுகதைகளில் சில ,
இவரின் பதிவுகளில் ஒன்று ,
இசை
வெல், இந்த டாபிக்கின்கீழ் தமிழ்வலையுலகில் எழுதிவருபவர்கள் வெகு சிலரே! அதுவும் தொடர்ந்து எழுதுபவர்கள் என்றால் அரிதானதொருசிலர் மாத்திரமே . முழுக்க முழுக்க இசையும், இசை சார்ந்த விடயங்களையும் எழுதிவரும் காரிகன் அவர்களைப்பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவருக்கு வலையுலகில் இசைப்பதிவர் என்றொரு செல்லப்பெயருமுண்டு . எனக்கு இசையின்பால் அதிதீவிர ஈடுபாடு இருப்பினும், அதை எழுத்தில் எழுதமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். அதுவும் இவரின் பதிவுகளுக்குச் சென்று பார்த்தால், உடனே இசைச் சம்பந்தமான கட்டுரை ஒன்றாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். அந்தளவுக்கு இசையோடு இயைந்து எழுதுபவர். இசைவிரும்பிகள் எனும் தொடர்பதிவின் வழியே, தமிழ்சினிமா இசையையும், இசையமைப்பாளர்களைப் பற்றியும் இவர் தொடர்ந்து எழுதிவருவது சிறப்பானதொரு பணியாகும் . இவரின் பதிவுகளில் சில
நன்றியுடன் ,
மெக்னேஷ் திருமுருகன்
அட...! இரண்டாவது வாரமும்...! அசத்துங்க...
ReplyDeleteநம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
நன்றி மெக்னேஷ். அறிமுகத்துக்கும் அறிமுகப்படுத்தியமைக்குக்கும்.
ReplyDeleteநன்றி மெக்னேஷ்! ஜே.கே தளம் சென்றதில்லை! சென்று வருகிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடரட்டும் சிறப்பாக இந்த வாரம் சகோ! இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிடா முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்கிறோம். நாளை சந்திப்போம்.
ReplyDeleteஇந்த வாரத்திய புதிய ஆசிரியர் யார் என்று பார்க்க வந்தேன் பேஷ்பேஷ் நீங்களே தொடர்கிறீர்கள்.வாழ்த்துக்கள்சில நாட்கள் பயணத்தில் இருந்ததால் வலைச்சரத்துக்கு வர இயலவில்லை. இனி வருவோமில்ல. .
ReplyDeleteதொடரும் வாரம்...
ReplyDeleteதொகுப்புகள் சிறப்பு...
தொடருங்கள்...
த. ம. +1
தொடர்ந்து இரண்டாம் வாரமும்.... வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
அட தொடர்ந்தா?!! போன வாரம் கொஞ்சம் விட்டுப் போச்சு...ம்ம்ம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...