வணக்கம் அன்பர்களே!
வலைச்சரத்தின் ஆசிரியராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று உங்களை எல்லாம் சந்திப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகின்றேன். முதல் முறை ஆசிரியராக இருந்தபோது இருந்த பதற்றம் தற்போதும்
குறையவில்லை. நம்முடைய தளத்தில் பதிவுகள் எழுதுவது என்பது வேறு. வேறு ஒருவரின் தளத்தில்
விருந்தினராக பதிவுகள் எழுதுவது என்பது வேறு. இதனால் கூடுதல் பொறுப்புணர்ச்சி கூடுகின்றது.
இரண்டு நாள் முன்னதாகவே அறிமுகப் பதிவு எழுதி
வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபோதும் நிறைவேற்ற முடியவில்லை. இதோ இந்த ஞாயிறு இரவில்
தட்டச்சு செய்து கொண்டுள்ளேன். போன முறை சில கவிதைகள் கொடுத்து பின்னர் ஒரு தலைப்பு
எடுத்துக் கொண்டு அதற்கேற்றார்போல பதிவர்களை அறிமுகம் செய்தேன். ஒருநாளைக்கு இருபது
பதிவர்கள் என்ற அளவில் அந்த அறிமுகம் இருந்தது. இந்த முறை பதிவர்கள் அறிமுகம் குறைவாக
இருந்தாலும் நிறைவாக செய்யலாம் என்று உத்தேசம்.
புகழ்பெற்ற பதிவர்களை திரும்ப திரும்ப ஏன் அறிமுகம்
செய்ய வேண்டும்? என்று ஜி.எம்.பி ஐயா கேட்டிருந்தார். அதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை!
அதே சமயம் வலையுலகில் புதியவர்களுக்கு புகழ்பெற்றவர்கள் பற்றி அறியாது இருக்கலாம்.
நண்பர்கள் கூட அவர்களின் சில பதிவுகள் தவறவிட்டிருக்கலாம் அப்படி ஒன்றை நாம் அறிமுகம்
செய்ய வாய்ப்பிருக்கின்றது. எனவே பழமை புதுமை கலந்து அறிமுகம் செய்ய உத்தேசம்.
அத்துடன் குறைந்தது நான்கரை வருடங்களாக எழுதி வருகின்றேன்.
வலையுலகில் நான் பெற்ற அனுபவங்களை கூறி புதியவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தரலாம்
என்று நினைக்கின்றேன். என்னைப்பற்றி திரு யாதவன்
நம்பி அறிமுகப்பதிவில் சொல்லிவிட்டார். கோயில் குருக்களாக இருந்தாலும் தணியாத எழுத்தார்வம்
வலைப்பதிவுகளை எழுதத் தூண்டுகின்றது. 2011 முதல் தளிர் என்ற வலைப்பூவில் எழுதி வருகின்றேன்.
226 பாலோயர்கள் 1700க்கும் மேற்பட்ட பதிவுகள் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான கருத்துரைகள்
பெற்றிருந்தாலும் தளிருக்கும் ஓர் களங்கம் உண்டு. அது என்னவென்று நாளை கூறுகின்றேன்.
இணையத்தில் என்னும் மாபெரும் கடலில் எண்ணற்ற வலைப்பூ பேராறுகள் ஓடிக் கலக்கின்றன! அதில் நான் ஓர் சிற்றாறு! இல்லை இல்லை சிறு ஓடை என்று கூட சொல்லிக்கொள்ளலாம். இணையத்தில் இன்னும் எவ்வளவோ கற்க வேண்டியிருக்கிறது. இருந்த போதும் நான் கற்ற பாடங்கள் சிலவற்றை புதியவர்களுக்கு சொல்லலாம் என்று யோசனை!
வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்திருக்கும் நண்பர்களே!
உங்களுக்கு ஓர் ஆலோசனை! எழுத ஆரம்பித்த உற்சாகத்தில்
நாம் தான் இங்கு பெரிய எழுத்தாளர் என்ற ஓர் வித்யாகர்வம் எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்டிருக்கும்.
மற்ற தளங்கள் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டோம். ஆனால் நம் தளத்திற்கு வாசகர்கள் வரவேண்டும்
என்ற எதிர்பார்ப்பில் இருந்தீர்கள் ஆனால் யாரும் உங்கள் வலைப்பூவை வாசிக்க வரமாட்டார்கள்.
ஒருகாலத்தில் நிறைய திரட்டிகள் இருந்தன. அதன் மூலம் வாசகர்கள் வந்தார்கள். இப்போது
திரட்டிகளும் குறைந்துவிட்டன. எழுதுபவர்களும் குறைந்துவிட்டார்கள்.
எனவே எழுதுங்கள்! அதற்கு முன் பலரின் படைப்புக்களை
அவர்களின் தளங்களுக்குச் சென்று வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் எழுத்து மெருகேறும்.
அப்போது உங்களுக்கு உங்களின் தரம் தெரிந்து போகும். உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் மற்ற தளங்களுக்குச் சென்று இங்கே வாருங்கள் என்று உங்கள் லிங்கை கொடுக்காதீர்கள்!
அது சில சமயம் பிரச்சனையைக் கிளப்பிவிடும்.
படைப்பாளிகள் நிறைய வாசிக்க வேண்டும். அப்போது
உங்களின் எழுத்து திறனும் மேம்படும். பல தளங்களை மாதிரியாகக் கொண்டு உங்களின் தளத்தை
வடிவமைக்கவும் உதவும். உங்களுக்கும் நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் தளத்திற்கான வாசகர்கள்
வட்டமும் பெருகும். அப்புறம் என்ன எழுதுவது? அதை நாளை பார்ப்போமே!
இன்று என்படைப்புக்கள் சில உங்கள் பார்வைக்கு!
நிறைய பதிவுகள்
எழுதி இருந்தாலும் என் பெயரை காப்பாற்றிய பதிவுகள் சில இருக்கின்றன. அடிப்படையில் முதலில்
நான் கதைகள் தான் எழுதப் பழகி எழுதிவந்தேன் என்றாலும் ஹைக்கூ கவிதைகள் எனக்கென்று ஓர்
வாசகர் வட்டத்தை தந்ததுடன் பலரின் பாராட்டுக்களையும்
பெற்றது. அப்படி பலரின் பாராட்டுக்களை பெற்ற ஹைக்கூ கவிதைகள் சில!
இந்த நேரத்தில்
எனக்கு ஹைக்கூ எழுத பழக்கிய கற்றுக்கொடுத்த தமிழ்த்தோட்டம் நண்பர் கவியருவி ரமேஷ் அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். எனதுஹைக்கூ கவிதைகளில் கூர்மை இருக்கிறது என்பார் சகோதரி எழில் அவர்கள் நீங்கள் வாசிக்க இதோ தளிர் ஹைக்கூ கவிதைகள்
புகைப்படங்களுக்கு ஹைக்கூ என்பது கொஞ்சம் கடினம். அதில் நான் கொஞ்சம் கைவரப்பெற்றுள்ளேன்! ஒரே படத்திற்கு பல ஹைக்கூக்கள் எழுதி புகைப்பட ஹைக்கூ வாக பதிவிட்டு பாராட்டுக்கள் பெற்றிருக்கின்றேன். மேகத்தில் ஒளிகின்ற நிலவைப் பாருங்களேன்!
சிறுகதைகள் கையெழுத்து
பிரதிகளில் எழுதிக்கொண்டிருந்தேன். அதில் எழுதிய சில கதைகள் வலைப்பூவில் வெளியிட்டபோது
பாராட்டுக்கள் பெற்றன. அதில் சில: கடைத்தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைக்கலாமா? என்று வினவியுள்ளேன் இங்கே! தாய் மனசு என்ற கதையில் அம்மா- பிள்ளை பாசத்தை சொல்லியுள்ளேன்.
இயற்கையிலேயே தமிழார்வம்
எனக்கு கொஞ்சம் உண்டு. கொஞ்சம் இலக்கணம் எனக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுத்தேன். பெரும்
பாராட்டினை பெற்ற தொடர் இது. உங்களின் தமிழ் அறிவு எப்படி?
அமானுஷ்யங்கள்
என்றால் எல்லோருக்கும் ஓர் ஆர்வம் இருக்கும் நான் பெற்ற அமானுஷ்ய அனுபவங்கள் இங்கே! தொலைந்த காசு கிடைத்தது!
புத்தகவிமர்சனங்கள்
சில எழுதினேன். இந்த நூலுக்கு நான் எழுதிய விமர்சனம் இங்கே! பொன்னியின் செல்வனை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலனின் மரணம் ஓர் புதிர். அந்த கொலையைச் செய்தது யார் என்று இந்த புத்தகம் சொல்கிறது அதன் விமர்சனம் ஆதித்ய கரிகாலனைக் கொன்றது யார்?
பொதுக்கழிப்பறைகளின்
அவசியத்தை கூறியுள்ளேன் இங்கே! எக்ஸ்கியூஸ்மீ கொஞ்சம் மூக்கை பொத்திக்கோங்க!
மற்ற பத்திரிக்கைகளில்
வந்த ஜோக்குகளை எடுத்துவெளியிட்டுக் கொண்டிருந்தபோது கோவை ஆவி அங்க வந்தது இங்க எதுக்கு பாஸ்? என்று கேட்டார். அவர் கேள்வி நியாயம் எனப்படவே
இப்படித்துவக்கினேன் நாற்பது பகுதிகளுக்கு மேல் வளர்ந்துவிட்டது. கொஞ்சம் சிரியுங்க பாஸ்!
மாமியாருக்கு அல்வா கொடுத்த மருமகள் பற்றி இங்கே படித்து சிரியுங்கள்!
தளிர் என்றாலே
சிறார்கள் ஞாபகம் வர வேண்டும் அல்லவா? பாப்பாமலர் என்னுடைய பேவரிட். அதில் வரவேற்பு
பெற்ற ஓர் பதிவு. ரஜினியின் கோச்சடையான் படத்தை விட இது அதிகம் வரவேற்பு பெற்றது கோச்சடையான் கதை பொய் சொல்லுவது சிறுவர்களுக்கு சகஜம் இவன் சொன்ன பொய் எதற்கு? படித்து பாருங்களேன்! ஏண்டா பொய் சொன்னே?
ஆன்மீகப்பதிவுகளும்
எழுதி வருகிறேன்! எங்கள் ஊர் கோயில் பற்றி எழுதிய பதிவு இது தடைகளை தகர்க்கும் ஸ்ரீ காரிய சித்தி கணபதி
கோயில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்று வரும் வேளையில் அதைப்பற்றி எழுதியது சங்கடங்கள் போக்கும் சனிமஹா பிரதோஷம்
கொஞ்சம் அதிகமாகவே என் புராணம் பாடிவிட்டேன் போல! சென்ற வருடம் வலைச்சரம் ஆசிரியர் ஆனபின் எழுதிய பதிவுகளே தந்துள்ளேன். இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற தணியாத தாகம் இருக்கின்றது. எனவே பதிவுகள் பெருகிவருகின்றது.
நாளை முதல் பதிவர்களையும் அவர்களின் படைப்புக்களையும் என்னால் இயன்றவரை சிறப்பாக அடையாளம் காட்ட முயல்கின்றேன். வாசகர்கள் பொதுவாக பாராட்டுதல்கள் மட்டும் கூறாமல் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும். தளிரில் குறைகளைக் களைவது சுலபம்! வளர்ந்தபின் களைவது கடினம் அல்லவா? எனவே குற்றம் இருப்பின் கடிந்துரைக்க வருந்தவேண்டாம். தாராளமாக சுட்டுங்கள்! நிவர்த்தி செய்யப்படும். உங்களின் ஆலோசனைகளும் ஏற்கப்படும்.
இன்று என்னுடைய அறிமுகப்பதிவை வாசித்து மகிழும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! நாளை சந்திப்போமா?
“““““எழுதுங்கள்! அதற்கு முன் பலரின் படைப்புக்களை அவர்களின் தளங்களுக்குச் சென்று வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் எழுத்து மெருகேறும். அப்போது உங்களுக்கு உங்களின் தரம் தெரிந்து போகும். உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.““““““““““
ReplyDeleteஎன்ற உங்களின் ஆலோசனையை ஏற்கிறேன்.
““““““படைப்பாளிகள் நிறைய வாசிக்க வேண்டும். அப்போது உங்களின் எழுத்து திறனும் மேம்படும். “““““
என்கிற உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.
தாங்கள் குறிப்பிட்ட இடுகைகளைக் காண்கிறேன்.
நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விஜி!
Delete““தளிரில் குறைகளைக் கலைவது சுலபம்! ““““
ReplyDeleteஇங்குக் ‘களைவது’ என்றிருக்க வேண்டுமோ?!
நீங்கள் சுட்டச் சொன்னதற்காய்..! :)
நன்றி.
முதலில் திருத்தம் சொன்னதற்கு நன்றி! கணிணியில் தட்டச்சுகையில் ஷிப்ட் கீ சரியாக அழுத்தாமையால் ஏற்பட்ட பிழை! நன்றி! வேறு ஏதேனும் இருப்பினும் தயங்காமல் சுட்டுங்கள்!
Deleteவருக.. வருக..
ReplyDeleteதங்களுக்கு அன்பின் நல்வரவு!..
நன்றி நண்பரே! பதிவு குறித்து ஏதாகிலும் ஆலோசனை நல்கலாமே!
Deleteஆரம்பமே அருமையாய் இருக்கிறது. இவ்வார வலைச்சரம் தங்களின் கைவண்ணத்தால் மிளிர வாழ்த்துக்கள்! இன்று குறிப்பிட்ட தங்களின் படைப்புகளில் சிலவற்றை படித்திருக்கிறேன். . மற்றவைகளையும் படிக்க இருக்கிறேன்.
ReplyDeleteநன்றி ஐயா! படியுங்கள்! உங்களின் ஆலோசனைகளையும் தயங்காமல் கூறுங்கள்!
Deleteதமிழ் ஆர்வம், நகைச்சுவை, டிப்ஸ் பகுதி, கவிதைகள், செய்திகளின் தொகுப்பு என அனைத்திலும் மிளிர்கிறீர்கள்... வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி நண்பரே! வலைப்பூ எழுத ஆரம்பித்த புதிதில் உங்களின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது! புதியவர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி நீங்கள்! நன்றி!
Deleteஅசத்துங்கள் நண்பரே!
ReplyDeleteஅறிமுகப் பதிவர்களின் பதிவுகளை காண மிகவும் ஆவலாக உள்ளேன்!
வலைச்சரத்திற்கு தங்களது பணி நிச்சயம் பெருமை சேர்க்கும்.
நன்றி!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே! வலைச்சர ஆசிரியர் பணியினை வழங்கியமைக்கு மிக்க நன்றி! மதியம் பதற்றத்தில் வலைச்சரம் டேஷ்போர்டில் வரவில்லை என்று மெயில் செய்துவிட்டேன். அப்புறம் திரு பிரகாஷை தொடர்பு கொண்டபின் தான் மெயில் அனுப்பி இருப்பது தெரிந்தது. தொடர்வோம்!
Deleteநிதானமான அறிமுகம், நிறைகுடம் போன்ற பேச்சு, அறிமுகம் ஆனவர்களை அனுசரித்து போகும் பாணி, புதியவர்களுக்கு வரவேற்பு என அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteநன்றி ஐயா! நாளை சந்திப்போம்!
Deleteவலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் சுரேஷ்!
ReplyDeleteநன்றி அம்மா!
Deleteவணக்கம் தளிர் அவர்களே,
ReplyDeleteகலக்குங்குள், வாழ்த்துக்கள், தங்களின் பதிவுகளை படித்துள்ளேன், ஆனால இந்த ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? படிக்கனும்,
தாங்கள் சொன்னது உண்மை, பிறர் தளம் சென்று வாசிக்கனும், நம்மின் எழுத்து மேம்படும், கர்வம் குறையும்,
ஏற்கிறேன்,
ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்,
நன்றி.
நன்றி சகோ! வாழ்த்துக்களுடன் அவ்வப்போது ஆலோசனைகளையும் நல்குங்கள்!
Deleteதலைப்பு அசத்தல்! அறிமுகம் அருமை!
ReplyDeleteபொதுவாக எழுதுவதற்கு தணியாத தாகம் இருக்க வேண்டும். உயிர்ப்பும் புரிதலும் தெளிவும் அவசியம்! உங்கள் எழுத்தில் இவை அத்தனையும் இருப்பது தெரிகிறது. நிச்சயம் ஒரு தேர்ந்த எழுத்தாளராக பரிணமிப்பீர்கள்! வாழ்த்துக்கள்!
நன்றி அம்மா! இரண்டாம் முறையாக கருத்திட்டு வாழ்த்தியமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
Deleteவாழ்த்துகள்! சுய அறிமுகம் அடக்கமாக உள்ளது அருமை!
ReplyDeleteநன்றி ஐயா!
DeleteV A Z T H U K A L
ReplyDeleteநன்றி ஜி!
Deleteநண்பர் தளிர் சுரேஷ் வலைசர ஆசிரியராக புது அவதாரம் எடுத்ததற்கு வாழ்த்துக்கள். புதிய பதிவர்களுக்கு தாங்கள் சொன்னது எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது. இன்னமும் பதிவுலகம் எனக்கு பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. அறிவுரைக்கு நன்றிகள்.
ReplyDeleteவரும் வாரத்தை ஆவலோடு எதிர்நோக்குகிறேன். தங்கள் ஆசிரியப் பணியில்..!
த ம 5
நன்றி நண்பரே!
Deleteவலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறை பொறுப்பு....
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே. தொடர்ந்து சந்திப்போம்.
நன்றி நண்பரே!
Deleteதளராது அடுக்கடுக்காய் நீங்கள் எழுதும் ஜோக்ஸ் மற்றும் ஹைக்கூக்கள் எனது ஆச்சர்யம்.
ReplyDeleteவெல்கம் சுரேஷ்!
முயற்சி திருவினை ஆக்குகிறது நன்றி நண்பரே!
Deleteஇந்தச் சுட்டிகளைப் படிக்கும் போது உங்கள் பதிவுகள் பலவும் நான் வாசிக்காததுஎன்று தெரிகிறது. நிறைய சுட்டிகள். சிலபடித்தேன் சில படிக்க முயற்சிப்பேன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா! நேரம் கிடைக்கையில் வாசித்து பாருங்கள்!
Deleteநல்ல தொடக்கம். நல்ல முன்னுரை. வாழ்த்துக்கள்! தொடர்கின்றேன்.
ReplyDeleteத.ம.8
வாழ்த்துகள்! ' மீள் 'ஆசிரியராய் பொறுபேற்றுக் கொண்டதற்கு :)
ReplyDeleteஅதென்ன ஜீ “மீள்” புரியவில்லை! மீண்டும் என்று எடுத்துக்கொள்வோமா? நன்றி!
Deleteவணக்கம் நண்பரே...
ReplyDeleteமற்றவர்களின் தளங்களுக்குச் சென்று படியுங்கள்... உங்கள் இணைப்பைக் கொடுத்து வரச் சொல்லாதீர்கள்...
உண்மைதான்... இப்போது கொஞ்சம் வேலையின் காரணமாக மற்ற தளங்கள் செல்வது குறைந்துள்ளது, மற்றபடி இதுவரை எந்தப் பதிவர் பக்கத்திலும் இணைப்புக் கொடுத்து (வலைச்சர ஆசிரியனாய் பகிர்ந்த இணைப்பு கொடுத்தது தவிர) வாருங்கள் என்று சொன்னதில்லை...
சுய அறிமுகம் அருமை... தொடருங்கள்... தொடர்கிறோம்.
நன்றி நண்பரே! எனக்கு தெரிந்த ஆலோசனைகளை வழங்கினேன்! அவ்வளவுதான்! நன்றி!
Deleteவாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteநிதானமாக அழகாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். தொடருகிறோம்...நன்றி
தம 10
நன்றி சகோ!
Deleteஅருமையான ஆரம்பம் மட்டுமல்ல, பிறர் தளங்களையும் வாசிக்க வேண்டும் என்று சொல்லி னம்மை நாமே நம் எழுத்தை சுய அலசல் செய்து கொள்ள ஆலோசனை வழங்கியதும் நன்று சுரேஷ்....தங்களது பாப்பா மலர் கதைகள், ஹைக்கு, சென்ரியூ கவிதைகள், சிரிங்க பாஸ் ஜோக்குகள், தமிழ் எங்களைக் கவர்ந்தவை....
ReplyDeleteதொடர்கின்றோம்...வாழ்த்துகள்!
நன்றி தொடருங்கள்!
Deleteவாழ்த்துக்கள் தளிர். சுய அறிமுகம் அருமை.
ReplyDeleteபிரபல பதிவர்களை மீண்டும் மீண்டும் அறிமுக படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இருந்தாலும் தம் கருத்தை மதிக்கின்றேன்
சென்ற மாத புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் தம்மை காண இயலாமல் போனது வருத்தமே.
ஆலோசனைக்கு நன்றி நண்பரே! புத்தக வெளியீட்டு தினத்தன்று கோயில் பணி இருந்தமையால் வர இயலாது போயிற்று. அந்த சமயம் இணையம் பக்கம் கூட வர இயலாது போயிற்று!
Deleteஇவ் வார ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்...! ஆரம்பமே அட்டகசமாக இருக்கிறது கலக்குங்கள். தங்கள் ஆலோசனையையும் மறக்காமல் ஏற்று நடந்து கொள்கிறேன். நன்றி !
ReplyDeleteநன்றி சகோ!
Deleteவணக்கம். மீண்டும் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் சகோவிற்கு அன்பான வாழ்த்துகள். எழுத்தாளர்களுக்கு தங்கள் அறிவுரை அருமை. மிக்க மகிழ்ச்சி. உண்மைதான் பல எழுத்துக்களை வாசிக்கும்போது வார்த்தைப்பிரயோகம் கைவசப்படும். நேர பற்றாக்குறை மற்ற தளங்களுக்கு அதிகம் செல்லமுடிவதில்லை. இனி முடிந்த அளவு முயற்சிக்கிறேன். வாழ்த்துகள் நன்றி.
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்!
ReplyDelete