மற்ற எந்த மொழிகளையும் விட தமிழின் வலைப்பூ உலகம் மிகவும் பரந்துப்பட்ட ஒன்று. பன்முகத்தன்மை கொண்டது.
ஆங்கில, பிரெஞ்சு வலைதளங்கள் கூட ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் இயங்குபவை. பெரும்பாலும் பொழுதுபோக்கு ரசணை சார்ந்தவை. உதாரணமாக மீன்பிடிப்பதை பொழுதுபோக்காக கொண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் தொழில்நுட்பங்களை பரிமாறிகொள்ளவும் ஒரு குழுவாக நடத்தும் வலைதளங்கள். தமிழில் இதுபோன்ற வகைசார்ந்து பெரும் வெற்றிபெற்ற வலைப்பூ குழு காமிக்ஸ் ரசிகர்கள் ! அழிவின் விளிம்பில் நின்ற தமிழ் காமிக்ஸ் கலையை தங்களுக்குள்ளான தகவல் பரிமாற்றத்தின் மூலம் மீட்டெடுத்த சாதனையாளர்கள்.
தினசரி செய்திகள் தொடங்கி கதை, கவிதை, கட்டுரை என ஊடகம் மற்றும் இலக்கியத்தின் அனைத்து வீச்சிலும் இயங்கும் தமிழ் வலையுலகம், பதிவர் சந்திப்புகள, மாநாடு என வலிமையான சமூக இயக்கமாகவும் உருபெற்று வருகிறது. லாப நோக்கமற்ற பல சமூக அக்கறை கொண்டவர்களின் முயற்சியின் பலன் இது.
ஒருமாபெரும் தேசத்தின் லட்சிய சிறகுகளை விரிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாமனிதர் அப்துல் கலாம் மறைந்த வாரம் இது...
பலகோடி இளைஞர்களிடம் லட்சிய கனவுகளை விதைத்த திருப்தியுடன் மீளாதுயிலில் ஆழ்ந்துவிட்ட அந்த நல்ல மனிதரின் கனவினை நனவாக்கும் பணியினை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். அவரின் சரிதையான அக்னி சிறகுகளை படித்தவர்களுக்கு அவர் தன் ஆசிரியர்களின் மேல் வைத்திருந்த பற்று புரியும்.
தமிழ் வலைதளம் நடுத்துபவர்களில் பலர் ஆசிரியர், ஆசிரியைகள் என்பது தமிழ் வலையுலகின் தனிப்பெரும் சிறப்பு.
ஒரு தலைமுறையையே உருவாக்கும் புனிதமான பணி ஆசிரியபணி !...
பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஒரு நல்ல மனிதனின் வளர்ச்சி அவனுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்களை சார்ந்தே இருக்கிறது. இது எந்த தேசத்துக்கும் எந்த மண்ணுக்கும் பொருந்தும் !
ஒரு ஆசிரியர் நினைத்தால் காந்தியின் கட்டுப்பாடையும், பாரதியின் நெஞ்சுரத்தையும், பெரியாரின் சீர்த்திருத்ததையும், கலாமின் லட்சியத்தையும் ஒரு சேர மாணவர்களுக்கு புகட்ட முடியும் !
" ஐரோப்பாவில், பாரீஸ் மாநகர்...
பனிபடர்ந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் மக்கள் கூட்டம்...
பணக்காரர்கள் SAMARITAINE, GALLERY LA FAYETTE போன்ற பெரும் ஷாப்பிங் மால்களில் மொய்க்க, நடுத்தர மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வரிசையில் நிற்கிறார்கள். மால்களுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வெளியே கடும் குளிரை பொருட்படுத்தாது கையேந்தி நிற்கும் ஏழைகள் !
உரையாடல்களை உற்று கேட்டால்... அரசியல் நிலவரம்... வேலை பிரச்சனை... நேரமின்மை... காதல்... பிரிவு.... நம்பிகை... துரோகம்... !
கண்களை மூடினால் பூகோள எல்லைகள் தொடங்கி சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தும் மறந்துவிடுகிறது.
சந்தைகளும் திருவிழா கூட்டங்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. தாயின் அன்பும், மழலையின் சிரிப்பும், காதலின் கிளுகிளுப்பும், பிரிவின் துயரமும், நட்பின் கதகதப்பும், துரோகத்தின் வலியும், தோல்வியின் கழிவிறக்கமும், இளமை முறுக்கும், முதுமையின் தளர்வும் உலகெங்கும் ஒரே அதிர்வைதான் ஏற்படுத்துகின்றன. "
சாதிமத வேறுபாடுகளற்ற, மொழிகள் எல்லைகள் கடந்து மனிதம் போற்றும் புதியதோர் உலகம் செய்ய கனவு காண்போம்... அந்த கனவினை நம் வாழ்நாளிலேயே நனவாக்குவோம் !
தான் கற்றதையும் பெற்றதையும் அனைவருக்கும் அளிக்க, ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் நடத்தும் வலைதளம். அதிகம் அறியப்படாத ஆனால் அனைவரும் வாசிக்க வேண்டிய தளம்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற தலைப்புடன் திகழும் சொர்னமித்ரனின் சாத்தான்குளம் வாசகசாலையினுள் சிறுகதைகள், கட்டுரைகள் தொடங்கி ஆன்மீகம்வரை வாசகர் தேடும் எதுவும் கிடைக்கும் !
" எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் " என மின்னும் வரிகளுடன் காணப்படும் மின்னல்வரிகளில் நகைச்சுவை, இலக்கியம், சிறுகதை, சினிமா என பல்சுவை கார மிக்சர் ரெடி !
முத்தான தகவல்கள் தாங்கிய முத்தரசுவின் முத்துதமிழ் !
கதைகளும், சுவையான தகவல்களும் தாங்கி ராஜலக்ஷ்மிபரம்சிவத்தின் அரட்டை !
ரெளத்திரம் பழகு என்ற தலைப்பில் " ஏதோ என்னால் முடிஞ்சது " என அடக்கமாய் பதிவுகளிடும் தமிழ்ழ்மொட்டு தம்பியின் பதிவுகளில் சமூக அவலங்களை சாடும் ரெளத்திர நெருப்பு !
நீலன் சமூகத்தின் மீது கொண்ட அன்பால் சமூகத்து சீரழிவுகளை சொல்லால் வறுத்தெடுக்கும் வலைப்பூ !
சசிதென்றல், சகோதரி சசிகலாவின் கவிதை சாரல்கள் தாங்கிய குளிர் தென்றல் !
எளிமையான யதார்த்தம் கூறும் உமையாள் காயத்ரியின் தளத்தில் சுவையான சமையல் குறிப்புகளுடன் அமைதி தரும் ஆன்மீகமும் உண்டு !
நன்றியுடன்...
தமிழ் வலையுகம் என்னும் நந்தவனம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்த தோட்டம் ! அதில் நான் தொகுத்ததெல்லாம் நேரமும் காலமும் அனுமதித்த அளவில் என் கண்களுக்கு எட்டி கைகளில் கொண்டவைதான் !
இந்த ஒருவார காலத்தில் அறிமுகப்படுத்தப்படாத வலை நண்பர்கள் அனைவருக்கும் அவரவர் தளம் சிறக்க என் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த வார வலைச்சர பணியை எனக்களித்த பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் யாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த பொறுப்பினை முன்மொழிந்து தொடர் ஊக்கமளித்த நண்பர் புதுவை வேலு (யாதவன் நம்பி) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
என் வலைச்சர பொறுப்பினை தனிப்பதிவாகவே வெளியிட்டு வாழ்த்திய சகோதரி மகிழ்நிறை மைதிலி கஸ்துரி ரெங்கன் தொடங்கி என்னை வாழ்த்தி வரவேற்று, பின்னூட்டங்கள் பதிந்து என்னை அங்கீகரித்த அன்பர்கள் அனைவருக்கும்...
" இந்த முகமற்ற சாமானிய மனிதன்பால் நீங்கள் கொண்ட அன்புக்கும் நட்புக்கும் என்ன தவம் செய்தேன் நான் ? "
நன்றி என்ற ஒரு வார்த்தையில் என் நெகிழ்ச்சியை அடைத்துவிடமுடியாது பெருமக்களே !
வேறுபல பதிவர்களின் காமிக்ஸ் தளங்களை நண்பர் ஈரோடு விஜயின் பெயரில் அறிமுகப்படுத்தியது, நண்பர் காரிகனை டி எம் எஸ் ரசிகராக்கியது, நண்பர் தளிர் சுரேஷின் முதல் கதை பூந்தளிரில் வெளிவந்ததாக குறிப்பிட்டது போன்ற தவறுகளுக்கு வருந்துகிறேன். மேலும் ராஜு முருகனின் நூலை வட்டியும் முதலும் என்பதற்கு பதிலாக கற்றதும் பெற்றதும் என தவறாக குறிப்பிட்டிருந்தேன். சுட்டிக்காட்டப்பட்ட அவற்றை உடனடியாக திருத்திவிட்டேன் என்றாலும் இனி இதுபோன்ற தவறுகள் நேராமல் இருக்க அதிக கவனத்துடன் செயல்பட முயற்சிக்கிறேன். நன்றி
பதிவுகளில் தொடருவோம் !
பட உதவி : GOOGLE
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

அன்புள்ள அய்யா,
ReplyDeleteஒருவார காலத்தில் தங்களின் பணிகளுக்கிடையில் மிக அருமையாக.... அனைவரும் பாராட்டும்படியாக,,, வெற்றிகரமாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியது சிறப்பிற்குரியது. வாழ்த்துகள்.
“மற்ற எந்த மொழிகளையும் விட தமிழின் வலைப்பூ உலகம் மிகவும் பரந்துப்பட்ட ஒன்று. பன்முகத்தன்மை கொண்டது”.
-உண்மையை உலகுக்கு உரைத்தீர்கள்...! தமிகுக்குப் பெருமை... தமிழனக்குக் கிடைத்த பெருமை...மேலும் வளரும்...வளரட்டும்...! தமிழ் இனி மெல்ல மெல்ல வாழும்...!
கலாமுக்கு சலாம்...!
காந்தியைப் போல -நம்
காலத்தில் வாழ்ந்தவர்...!
கனவு விரைவில் நனவாகும்...!
காலம் வாழ்த்தும் என்றும் எளியவரை...!
கரம்கூப்பி தொழுகின்றோம்...!
-மிக்க நன்றி.
த.ம.1
அய்யா...
Deleteவருகைக்கும் உங்களின் ஊக்கமிக்க பின்னூட்டத்துக்கும் நன்றி.
பதிவுகளில் தொடருவோம்
வலைசரத்தில் ஆசிரியராக செயலாலற்றி மிக சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்
ReplyDeleteஉங்கள் தளத்தில் உங்கள் பதிவுகளின் மூலம் மீண்டும் சந்திப்போம்...வாழ்க வளமுடன்
ReplyDelete
ReplyDeleteஎங்களை பொறுத்தவரை மிக சிறப்பாக செய்து இருக்கிறீர்கள் ஆனால் மைதிலி டீச்சர்தான் மார்க்க்கு போட வேண்டும்.....பார்ப்போம் என்ன மார்க் போடுகிறார்கள் என்று
உங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி...
Deleteஆமாம் நானும் மைதிலி டீச்சரைதான் தேடிக்கொண்டிருக்கிறேன்... ஒருவார தேர்வினை திருத்த வேண்டும் அல்லவா ? மார்க் கொஞ்சம் லேட்டாத்தான் வரும் !
சிறப்பாக முடித்தீர்கள் சாம். வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே...
Deleteஉங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி
சாம்,
ReplyDeleteஒரு வாரம் என்றே தோன்றவில்லை. கச்சிதமாக ஆசிரியர் பணியை செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள சிறு தவறுகள் இயல்பானவையே. வலைஞர்களை (மீன் பிடிப்பவர்கள் என்று இளங்கோ அவர்கள் (அவர்தானே?) சொல்லியிருந்தார். இருந்தாலும் பரவாயில்லை.) அறிமுகம் தவிர நீங்கள் எழுதியிருந்த பதிவுகளும் வெகு சிறப்பானவையே. நான் வலைச்சரத்திற்கு தொடர்ச்சியாக வந்தது இதுதான் முதல் முறை. உங்கள் எழுத்துக்கு பெரிய பட்டாளமே காத்திருக்கிறது - நானும் அதில் ஒருவன். பொறுப்பு விட்டது என்று குதூகுலமாக இருப்பீர்கள். இனிமேல் பதிவுகளில் சந்திக்கலாம்.
காரிகன்...
Deleteநீங்கள் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்துவந்தது எனக்கே ஆச்சரியம்தான் ! மிக்க மகிழ்ச்சி காரிகன்.
வலைஞர்கள் என்றே வைத்துகொள்வோமே !
உண்மையிலேயே குதூகலமாகத்தான் இருக்கிறது காரிகன் ! உங்களை போன்றவர்களின் ஆதரவை கண்டு !
நிச்சயமாக பதிவுகளில் சந்திப்போம்.
நெஞ்சார்ந்த நன்றிகள் பல
வலைச்சர ஆசிரியப் பணியினை செம்மையாய் செய்ததற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா
Deleteவலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக இருந்தது.பாராட்டுகள்.
ReplyDeleteதொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம்....
நன்றி நண்பரே...
Deleteபதிவுகளில் தொடர்வோம் !
இவர் இருக்கும் பிஸியில் எப்படி இந்தப் பணிக்கு ஒத்துக்கொண்டார் என்று என் வீட்டில் கேட்டாங்க...
ReplyDeleteஇருந்தாலும் பதிவுகள் சோடைபோகவில்லை
திரு காரிகன் விசயத்தில் நீங்கள் சொன்னது சரியே... என்ன எல்லா இசையும் அவருக்குப் பிடிக்கும்
அவர் எழுதுவைதைப் படிப்பது எனக்குப் பிடிக்கும் ...
----
அதற்குள் ஒருவாரம் போயிடுத்தா...
ஒரு பதிவராக எப்படி சொதப்பிக்கொண்டிருகிறேன் என்று உணர்ந்தேன் ..
உடனடி பின்னூட்டம் என்கிற நல்ல பழக்கத்திற்கு வரவேண்டும் அடியேன்.
மன்னியுங்கள் தோழர்
----
சகோ.இனியா பொறுப்பில் இருந்த பொழுதே இப்படித் தான் நிகழ்ந்தது .
அப்போதும் இப்படி வருந்தினேன்.
==
கொடுமை என்னவென்றால்
எனது இனிய நண்பர் மெக் கடந்த வாரப்பொறுப்பாசிரியர் ...
ஒருமுறை நாள் கூட பாக்க்கல ...
நிறைய குற்ற உணர்வு ...
--
பணி எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் ...
ஒருவாரம் வீட்டில் மூன்று மணிக்குத்தான் தூங்கினார்கள்.
---
தொடருங்கள் தோழர்
வாழ்த்துகள் மீண்டும்
" இவர் இருக்கும் பிஸியில் எப்படி இந்தப் பணிக்கு ஒத்துக்கொண்டார் என்று என் வீட்டில் கேட்டாங்க...
Deleteஇருந்தாலும் பதிவுகள் சோடைபோகவில்லை "
எப்படி இது ? என்னருகில் இருந்து கண்டது போல ?...
சில வேலைகளில் என் மிக நெருங்கிய நண்பர்களில் யாரேனும் காரிகனின் பின்னே ஒளிந்துகொண்டிருக்கிறார்களா என தோன்றும்... இப்போது உங்கள்மீதும் அதே சந்தேகம் ?!
" ஒருவாரம் வீட்டில் மூன்று மணிக்குத்தான் தூங்கினார்கள். "
இங்கும் அதே நிலைதான் ! அதிகாலையில் தயார் செய்து நள்ளிரவு தாண்டி பதிந்து முடிப்பேன் ! உண்மையிலேயே கடினமான பணி.
இந்த பணியில் தொடர் ஊக்கமளித்ததற்கு நன்றிகள் பல.
பதிவுகளில் சந்திப்போம்.
கொடுத்த பணியை சிறப்பாக முடித்தீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteதங்களின் வலையில் சந்திப்போம்... தொடர்பு கொள்ளவும்... நன்றி...
அய்யா...
Deleteஇந்த வாரம் முழுவதும் என் வலைச்சர பணியை தொடர்ந்து, ஊக்கமளித்ததற்கு நன்றிகள் பல
மிக விரைவில் தொடர்பு கொள்கிறேன்...
//தாயின் அன்பும், மழலையின் சிரிப்பும், காதலின் கிளுகிளுப்பும், பிரிவின் துயரமும், நட்பின் கதகதப்பும், துரோகத்தின் வலியும், தோல்வியின் கழிவிறக்கமும், இளமை முறுக்கும், முதுமையின் தளர்வும் உலகெங்கும் ஒரே அதிர்வைதான் ஏற்படுத்துகின்றன.// அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ. அருமையாக வலைச்சரம் தொகுத்து விடைபெறும் உங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசகோதரி...
Deleteநேரமற்ற நிலையிலும் என வலைச்சர வாரத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி
பதிவுகளில் தொடருவோம்.
பாராட்டுக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
என வலைச்சர பொறுப்புக்கு முதல் காரணமானவர் நீங்கள்.
Deleteஉங்களின் தொடர் வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி
தமிழையும் அனுபவங்களையும் அழகிய சொற்றொடர்களால் அனுபவித்து எழுதி வந்த நீங்கள் திடீரென்று எழுத்துப்பயணத்தை முடித்த மாதிரி இருக்கிறது! இந்தக் குறை இருந்தாலும் உங்களுக்கென்றே உள்ள தனித்தன்மையுடன் உங்கள் ஆசிரியப்பொறுப்பை இனிதே செய்து முடித்து விட்டீர்கள்!! என் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅம்மா...
Deleteஎன் குறைகள் நிறைகளாய் மாறுவதற்கு உங்களை போன்றவர்களின் ஊக்கமும் வாழ்த்துமே காரணம்.
உங்களின் மிக இதமான பின்னூட்டத்துக்கு நன்றிகள் பல.
பதிவுகளில் தொடருவோம்
அருமையாக பணியை முடித்து கொடுத்திருக்கிறீர்கள் சாம். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு.
ReplyDeleteமிகவும் நன்றி குரு.
Deleteஉங்களை போன்றவர்கள் ஆரம்பித்துவைத்த பாதையில் தொடருபவன் நான் ! வலைப்பூ வயதில் முத்தவர் என்பதுடன் அழகிய, ஆழமான, வசீகர எழுத்துக்கு சொந்தக்காரரான நீங்கள் தொடர்ந்து வருகை தந்ததில் மகிழ்ச்சி
புதியதோர் உலகில் என்னையும் சுட்டிக் காட்டியதில், இன்று புதிதாய் பிறந்ததாய் உணர்கிறேன் சாம். என் எழுத்தைப் பாராட்டி அடையாளம் காட்டியதற்கு மிக்க நன்றி. என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்ட சக வலைப் பதிவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சாம்.
அம்மா...
Deleteஇந்த அறிமுகம் உங்கள் வலைத்தளம் இன்னும் சிறக்க உதவுமெனில், அதைவிட பெருமகிழ்ச்சி எனக்கு கிடையாது !
வருகைக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் நன்றி
தாயின் அன்பும், மழலையின் சிரிப்பும், காதலின் கிளுகிளுப்பும், பிரிவின் துயரமும், நட்பின் கதகதப்பும், துரோகத்தின் வலியும், தோல்வியின் கழிவிறக்கமும், இளமை முறுக்கும், முதுமையின் தளர்வும் உலகெங்கும் ஒரே அதிர்வைதான் ஏற்படுத்துகின்றன. "------தங்களால்-அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும். இனிமேல் அறிமுகப்படுத்தபட இருக்கின்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்களும். அறிமுகப்படுததிய ஆசிரியர் களுக்கும் இனிமேல் அறிமுகப்படுத்தப்பட காத்துக் கொண்டு இருக்கின்ற ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் தோழரே...
Deleteஉங்களை போன்றவர்களின் சமூக அக்கறை கொண்ட வலைதளங்கள் இன்னும் பலரால் தொடரப்பட வேண்டும். வலைதள பணியில் நீங்கள் இன்னும் பல உயரம் தொட வேண்டும்.
பதிவுகளில் தொடருவோம் தோழரே
வணக்கம் சகோ ! எழுத்துக்களால் அனைவரையும் கட்டிப்போடும் எழுத்தாளர்களில் தாங்களும் ஒருவர். ரௌத்திரம் பழகு தான் நான் முதலில் வாசித்த தங்கள் பதிவு. ஏன்றும் என் மனதை விட்டகலாத பதிவு அதிலிருந்து தங்கள் ரசிகை ஆகிவிட்டேன்.ஹா ஹா ...
ReplyDeleteபல சிரமங்களுக்கு மத்தியில் ஆகக் கூடிய பதிவர்களை அறிமுகம் செய்ததோடு, பல நல்ல தகவல்களும் தந்து தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள். மேலும் வலையில் தொடர்ந்து சந்திக்கலாம். அத்துடன் எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் .....! நன்றி !
வாருங்கள் சகோதரி...
Deleteகாரிகன், மது எஸ் போன்றவர்களின் பின்னூட்டங்களின் மூலம் அடியேன் மிகவும் பிஸி என்பதை அறிந்திருப்பீர்கள்... ரசிகர் மன்ற தொடக்க விழா தேதியை முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும் ஆமாம் ! ஹீ... ஹீ...
அப்படியே ஆகுக சகோதரி...
நீங்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று, பூவுடன் சேர்ந்த நாராய் நானும் மனக்க வேண்டுகிறேன்.
நிச்சயமாக பதிவுகளில் தொடருவோம் சகோ !
ஒருவாரம் ஓடியதே தெரியவில்லை. பல புதியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். பல அரிய செய்திகளைப் பகிர்ந்துள்ளீர்கள். சிறப்பாகப் பணியினை நிறைவு செய்த உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து சந்திப்போம், உங்கள் பதிவுகள் மூலமாக.
ReplyDeleteஅய்யா...
Deleteஅறிவாலும் அனுபவத்தினாலும் மிகவும் மூத்த நீங்கள் என் வலைச்சரபணியை தொடர்ந்து, வாழ்த்தியதில் பெருமை கொள்கிறேன்.
நன்றிகள் அய்யா
என்னை அறிமுகம் செய்ததோடு , என் தளத்தில் செய்தியை அறிவித்ததற்கு நன்றிகள் பல சாம்.
ReplyDeleteஅம்மா... அது என் கடமை அல்லவா ?
Deleteவலைச்சர ஆசிரியப் பணி நிறைவுற்றதை அறிவிக்கவாவது என் தளத்துக்கு வந்த உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
ReplyDeleteஅய்யா...
Deleteஇனி நிச்சயம் தொடருவேன்.
தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல
அழகுத் தமிழ் வார்த்தைகளால்
ReplyDeleteஅழகுற வலைச் சரத்தில்
ஒரு வாரம் அற்புதமாய்
பதிவுகளிட்டு
பணியாற்றிய தங்களின் அயராப் பணிக்கு வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள்
நன்றி
தம +1
அய்யா...
Deleteஅறிவாலும் அனுபவத்தினாலும் மிகவும் மூத்த நீங்கள் என் வலைச்சரபணியை தொடர்ந்து, வாழ்த்தியதில் பெருமை கொள்கிறேன்.
நன்றிகள் அய்யா
வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று் செம்மையாகவும் திறம்படவும் நடத்தி முடித்தீர்கள். பாராட்டுக்கள் சாம்!
ReplyDeleteவாருங்கள் கலையரசி...
Deleteஉங்களின் தொடர் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
“ மயிர்வனப்பும் கண்வவ்வும் மார்பின் வனப்பும்
ReplyDeleteஉகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு “
எனச் சொல்லின் அழகே அழகென்னும். சிறுபஞ்சமூலம்.
“ சொல்லுங்கால் சொல்லின் பயன்காணும் தான்பிறர்
சொல்லிய சொல்லை வெலச்சொலும் பல்லார்
பழித்தசொல் தீண்டாமற் சொல்லும் விழுத்தக்க
கேட்டார்க் கினியவாய்ச் சொல்லும்“
எனச் சொல்ல வேண்டிய முறையைச் சொல்லும் தகடூர் யாத்திரை.
அழகான சொற்களின் மூலம், சொல்லவேண்டிய முறையில் இந்த வாரம் முழுக்க வலைச்சர ஆசிரியப்பணியை உங்களின் தேர்ந்த நடையில் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் அண்ணா.
மகிழ்வும் நன்றியும்.
வாருங்கள் சகோதரரே...
Deleteஇந்த ஒரு வார காலமும் தொடர்ந்து, பின்னூட்டமிட்டு என் வலைச்சரப்பணியை சிறப்பித்தமைக்கு நன்றி
என் சிறப்பெல்லாம் உங்களை போன்றவர்களை தொடருவதால் உண்டாகும் சிறப்பு.
நன்றி. பதிவுகளில் தொடருவோம்
வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteத ம 10
வணக்கம்,
ReplyDeleteதங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள், இனி தங்கள் பக்கத்தில் சந்திப்போம்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
தங்களுக்கு நன்றி.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteநிச்சயமாக நம் பக்கங்களில் தொடருவோம்
எனக்கு ஆங்கிலம் அவ்வளவாய்த் தெரியாது. எனவே, தமிழ் தவிர வேறு மொழி வலைப்பூக்களை நான் படிப்பதில்லை. அதனால், வலைப்பூ உலகில் தமிழின் தரநிலை என்ன என்பதை அறியாதிருந்தேன். அப்படிப்பட்ட எனக்குத் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என மூன்று மொழி வலைப்பூக்களையும் ஒப்பிட்டுத் தமிழின் வலையுலகம் பற்றி நீங்கள் தெரிவித்திருக்கும் தகவல் படிக்கப் பெருமையாயிருந்தது. மிக்க நன்றி!
ReplyDeleteவாருங்கள் அய்யா...
Deleteமற்ற மொழிகளில் தொழில் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வலைபக்கங்களும் பிரபல எழுத்தாளர்களின் தளங்களின் ஆதிக்கமே அதிகம்.
கல்வி, பொருளாதார, சமூக படிகளை மீறி சகலரும் எழுத்து படைப்புகளில் பங்கு பெறுவது தமிழ் வலையுலகின் சிறப்பு.
மேலும் உங்களை போன்றவர்களின் பங்களிப்பு இன்னும் அதிகரித்து தமிழ் வலையுலகத்தினால் நம் சமூகம் சீர்த்திருத்தப்படவேண்டும் என்பதே என் கனவு.
நிச்சயம் நிகழ்த்துவோம் ! தொடர் வருகைக்கு நன்றி அய்யா
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் தொடர் ஊக்கத்துக்கு நன்றி நண்பரே...
Deleteபதிவுகளில் தொடருவோம்
நாளையும் மற்றுமொரு பதிவு தாங்கள் வெளியிடலாமே?
ReplyDeleteவாருங்கள் நிஜாம்...
Deleteஇல்லை... ஞாயிற்றுக்கிழமைகளில் அடுத்த வலைச்சர ஆசிரியரை அறிவிக்க வலைச்சர நிர்வாகிகள் பயன்படுத்துவார்கள்...
நம் பதிவுகளில் சந்திப்போம் நண்பரே !
Anaivarukum valthukkal. ..ennaiyum arimugam saithamaikku Nandri sako
ReplyDeleteAnaivarukum valthukkal. ..ennaiyum arimugam saithamaikku Nandri sako
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோதரி... பதிவுகளில் தொடருவோம்
Deleteசாம் அவர்களே
ReplyDeleteகொஞ்சம் புரியவில்லை . வலைச்சரம் யார் நடத்துவது ? வாரம் ஒரு முறை ஆசிரியர் பணி மாறுமா? ஆசிரியருக்கு என்ன பணி? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை . முடிந்தால் விளக்குங்கள் . மற்றபடி உங்களின் எழுத்து வன்மையை மீண்டும் படிக்க உதவினீர்கள். மற்றவர்களின் தளங்களையும் அறிமுகப்படுத்தினீர்கள் . அதற்காக உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
சாம் அவர்களே

வாருங்கள் சார்லஸ்...
Deleteவலைச்சர பொறுப்பாளர்களில் ஒருவரான நண்பர் குழலின்னிசை புதுவை வேலு பரிந்துரைத்ததினால் இந்த பணி ஏற்றேன்... சுழற்சி முறையில் வாரம் ஒரு வலைபதிவாளரின் கண்ணோட்டத்தில் வலைப்பூக்களை அறிமுகம் செய்ய வைப்பதே வலைச்சரத்தின் பணி.
இத்தளத்தின் முழு கதையை வலைச்சர வரலாறு பக்கங்களில் காணலாம்.
தங்களின் வருகைக்கு நன்றி சார்லஸ்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteபுதியதோர் உலகத்தில் தென்றலின் அறிமுகம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.
ReplyDeleteவணக்கம் சகோதரி...
ReplyDeleteவருகைக்கு நன்றி. பதிவுகளில் தொடருவோம்
சாம்: வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்! கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க! மில்லியன் டாலர் கொடுத்தாலும் இப்பொறுப்பை என்னால் ஏற்க முடியாது- அத்தனை பெரிய பொறுப்பு இது! :)
ReplyDeleteவாருங்கள் வருண்...
Deleteஉண்மையிலேயே மிக கடினமான பணிதான் ! ஒரு வாரத்துக்கு கணினி திரையை தொடர்ந்து பார்த்ததில் கண்களில் பூச்சி பறக்கிறது !
உங்களின் ஆதரவுக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி வருண்
பதிவுகளில் சந்திப்போம்
வணக்கம் நண்பரே அழகாக கோர்த்த வலைச்சரத்தை தினம் செல் போணில் படித்து வந்தேன் நண்பரே கருத்துரைதான் இட முடியவில்லை.
ReplyDeleteநலமா நண்பரே ?
Deleteமுடிந்தால் நிச்சயம் வந்துவிடுவீர்கள் என்பது தெரியும் ஜீ.
ஊர் நிலவரமெல்லாம் எப்படி ?!
பதிவுகளில் சந்திப்போம். நன்றி
அருமையான பதிவுகள் சாம்! சிறப்பான வலைச்சர ஆசிரியப்பணி! பொறுப்பும் மிகப் பெரியது....மிகச் சிறப்பாகவே செய்து முடித்துள்ளீர்கள்!!! இனியும் தொடர்வோம் தங்களின் பதிவுகளின் வழியாக....வாழ்த்துகள்!! நண்பரே!
ReplyDeleteஆசானே...
ReplyDeleteஉண்மையிலேயே மிக கடினமான பணிதான் ! அதனை சிறப்பாய் முடித்தமைக்கு உங்கள் அனைவரின் ஊக்கமும் பாராட்டுமே காரணம்.
பதிவுகளில் தொடருவோம்
நன்றி
நானே மறந்து போன என் வலைப்ப்பூவை அவ்வப்போது நியாபகப்படுத்தி உற்சாகமளிக்கும் வலைச்சரத்திற்க்கும் இன்று அறிமுகம் செய்த சாமானியன் அவர்களுக்கும் பிற பதிவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
ReplyDeleteவாருங்கள் சதீஷ்...
ReplyDeleteஉங்களை போன்ற, சமூக அக்கறையுள்ளவர்கள் அவ்வளவு சீக்கிரம் தங்கள் பணியினை மறந்து விடலாமா ?!
தொடருங்கள் ! தொடருவோம் !!
நன்றி