நண்பர்களே! நல்வணக்கம்!
இந்த வார வலைச்சரம் ஆசிரியப் பணியை அழகுற நிறைவு செய்யும் ‘சாமானியனின் கிறுக்கல்கள்’ வலைஞர், சாமானியன் சாம் அவர்கள் மிகவும் திறம்பட, பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்தளித்து, பலதரப்பட்ட சிறந்த பதிவர்களை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்து, வலைச்சரத்திற்கு மேலும் சிறப்பினை சேர்த்தமைக்காக ! அவருக்கு, வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது.
அவரது சிறப்பினை சீர்த்தூக்கிப் பார்க்கும் நன்மதிப்பு பட்டியல் இதோ!
சாமானியன் சாம் உங்களிடமிருந்து,
276 க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,
61 - தமிழ் மணம் வாக்குகளையும்,
1435 - க்கும்மேற்பட்ட பக்கப்பார்வைகளும் இதுவரையில் பெற்றுள்ளார்.
தமது, வலைச்சர வாரத்தை, வலைஞர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், அவரது அருந்தமிழ் பணியை நமக்கெல்லாம் பகிர்ந்தளித்து நமது நம்பிக்கையை பெற்று விடை பெறுகிறார்.
நண்பர் சாமானியன் சாம் அவர்களை,
நன்றி பாராட்டி, வாழ்த்தி வழியனுப்புவதில் 'வலைச்சரக் குழு' பெரு மகிழ்ச்சியடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க.... கவிஞா் கி. பாரதிதாசன் விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.
மூப்பைத் தீண்டா யாப்பை யளிக்கும்
யாப் பெருங்கலக் காரிகை -நூற்பா
கோர்க்கும் கோப் பெருங் கவியேநீ!
வார்க்கும் கவி மரபு!
புதுவையில் பிறந்தவர்!
பிரான்சு நாட்டில் வாழ்பவர்!
தனித்தமிழ்
தமிழ்மொழி காப்பதுவும் பரப்புவதும்
தமிழின முன்னேற்றம்
முக்கொள்கையைக் கொண்டு இயங்குபவர்!
பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவர்
மரபுக் கவிஞர்
இலக்கண ஆசிரியர்
சொற்பொழிவாளர்
எனப் பன்முகம் படைத்த
கவிஞா் கி. பாரதிதாசன் அவர்கள்
இவ்வாரம் 'வலைச்சரத்தை'க் கவிச்சரமாய் மின்ன ஆசிரியராக
பொறுப்பேற்கிறார்.
தமிழ்ப் பணி செய்வதில் தனி ஆர்வமிக்க நன்னூல் வழி காட்டும் நன்னெறியாளர்
"கவிஞர் கி.பாரதிதாசன்" அவர்களை,
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது
நல்வாழ்த்துகள் சாமானியன் சாம்
நல்வாழ்த்துகள் கவிஞர் கி.பாரதிதாசன்
கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி வார்த்தைச் சித்தரே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
ஐயாவின் இரு இணைப்புகளையும் சரி செய்யவும்... நன்றி...
ReplyDelete
ReplyDeleteவலைச்சரம் பெருமை கொள்கிறது சாமானியரே!
தங்களது பணிச் சிறப்பை பாராட்டுகிறது.
நன்றி நண்பரே!
இலக்கண/இலக்கிய வானில் இந்த வாரம் கவி மழை!
மூப்பைத் தீண்டா யாப்பை யளிக்கும்
யாப் பெருங்கலக் காரிகை -நூற்பா
கோர்க்கும் கோப் பெருங் கவியேநீ!
வார்க்கும் கவி மரபு!
மண்னின் மைந்தரின் கவிஞர் மரபுக் கவி மழையில் நனைய....,
கவியே! கவிஞர் கி.பாரதி தாசன் அவர்களே! வருக!
கவியை புனைக!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
ReplyDeleteவலைச்சர நண்பர்களே வணக்கம்!
மின்னும் வலைச்சரத்தை மீட்ட வருகின்றேன்
பின்னும் கவிச்சரப் பேறேந்தி! - அன்புடைய
யாதவ நம்பியார் என்னைப் பணித்துள்ளார்
மாதவன் காப்பான் மகிழ்ந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
உங்களின் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
Deleteநன்றி முனைவர் அய்யா!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
பாராட்டுகள் சாம்.....
ReplyDeleteவாழ்த்துகள் கவிஞர் பாரதிதாசன் ஐயா...
நன்றி நண்பரே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
சிறப்பாக பணியை செய்த சாமானியன் அவர்களுக்கு வாழ்த்துகளும்.
ReplyDeleteவரும் வலைச்சர ஆசிரியரான எங்கள் ஆசிரியருக்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா. வருக! வருக!
நன்றி சகோதரி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களுக்கு அன்பின் நல்வரவு!..
ReplyDeleteஅருள் மழை வந்து
Deleteமரபுக் கவியை வாழ்த்தியது வெகு சிறப்பு!
நன்றி அய்யா!
நட்புடன்;
புதுவை வேலு
இனிதாய் வலைச்சரப் பணியை நிறைவு செய்த
ReplyDeleteசகோதரர் சாமானியன் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!
வருகிற வாரம் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும்
எங்கள் ஆசான் ஐயாவை வணங்கி வரவேற்று வாழ்த்துகிறேன்!
வலைச்சர வாரம் மழையென..பா! கொட்டும்!
தலைமகன்! பைந்தமிழ்ச் சான்றோன் தலைமையில்!
எங்கள் குரு!.ஆற்றும் இப்பணி தானோங்க
இங்கிட்டேன் வாழ்த்தை இணைத்து!
வாழ்த்துக்கள் ஐயா!
"வலைச்சர வாரம் மழையென..பா! கொட்டும்!"
Deleteஉண்மையே சகோதரி!
மரபு மழைமேகம் இப்போதே சூழ்ந்து வருகிறதே!
நன்றி!
நட்புட,
புதுவை வேலு
வாழ்த்துக்கள் சாம் சார்,
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கத்துடன் வரவேற்பும்,
நன்றி.
நன்றி சகோதரி!
Deleteவாழ்த்தும், நன்றியும், தந்த தங்களது தங்கத் தமிழுக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
Deleteஒஒஒஒஒ இங்கு இவ் வேளையில் இருப்பதால் தான் அங்கு தங்களைக் காணவில்லைப் போலும்,,,,,
நன்றி.
வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாகச் செய்த சாமானியன் சாம் அவர்களுக்கு நன்றி. வருகின்ற வாரத்திற்கு வலைச்சரம் தொடுக்க வந்திருக்கும் அய்யா கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
ReplyDeleteத.ம.7
தமிழ்ப் பணி செய்த சாமானியரையும், சிறப்புத் தமிழ் மரபை கவியாய் புனையும் அய்யா கி.பாரதிதாசன் அவர்களையும் பாராட்டிய பாங்கு வாழ்த்துக்குரியது அய்யா!
Deleteநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆசிரியப்பணியை மிகவும் சிறப்பாக நிறைவேற்றிய திரு சாமானியன் (இவர் சாமானியன் அல்லர்) சாம் அவர்களுக்கு நன்றி. ஆசிரியப்பொறுப்பேற்கவுள்ள, கவிதைகளாலேயே பதிவுகளை இடும் திரு பாரதிதாசன் அவர்களுக்கு நல்வரவு.
ReplyDeleteசிறப்பு சிம்மாசனம் தந்து விட்டு சென்றுள்ளார் சாமனியன்
Deleteகவியின் சாம்ராஜ்யம் புவியில் சிறப்புற!
வாழ்த்துக்கு நன்றி முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
புதுவையின் நிலவே அன்பு பாரதியே
ReplyDeleteபுதுமையாக மீட்டுவாய் வலைச்சரம் எனும்
புதிய இணைய உலகை! பூரிப்போடு வாழ்த்துக்கள்
பூமழையாக பூமலைபோல பாரதிதாசன் பணி சிறக்கட்டும்
பூரிப்புடன் ஏதிலி தனிமரம்!
புதுவையின் புன்னகை நிலவு
ReplyDeleteவலைச்சர வானில் வலம் வருகிறது
மங்காத 'மரபு' வெளிச்சத்தை சிந்தியபடி!
வந்தனை செய்ய வந்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
சாம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள் !
ReplyDeleteகவிஞர் பா தாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
வாருங்கள் சகோதரி!
Deleteதங்களது வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பாக தன் பணியை செய்துள்ளார் சாமனியன்.
ReplyDeleteபாரதிதாசன் ஐயா அவர்களின் அறிமுகங்களை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
வாருங்கள் அய்யா!
Deleteதங்களது ஆவலை மரபுக் கவிஞர் மாண்புறச் செய்வார்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
விடைபெறும் சாம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! ஆசிரியப்பணியேற்கும் கவிஞர் பாரதிதாசன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாருங்கள் சகோதரி!
Deleteதங்களது வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கவிஞரை வரவேற்க்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் நண்பரே!
Deleteவாழ்த்திய உள்ளம் உயர்வு பெறட்டும்! தொடருங்கள்.
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்.
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பர் புதுவை வேலு அவர்களே...
என்னை வாழ்த்திய வலை நட்புகளுக்கு நன்றி.
வரும்வார வலைச்சர பொறுப்பை ஏற்கும் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பணி மிக சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
நன்றி
சாமானியன்
மிக சிறப்பான வகையில் உன்னதப் பணியை உளமாற தந்து வலைச்சரத்தை மணம் வீச செய்த சாமானியருக்கு நன்றி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
வருக கவிஞரே! தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்! தொடர்கின்றோம்...
ReplyDeleteவணக்கம் ஆசானே!
ReplyDeleteநன்றியோடு கலந்து வாழ்த்து மழை பொழிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு