வலைச்சரத்தில் எனது மூன்றாம் நாள்
➦➠ by:
S.P.செந்தில்குமார்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
வலைச்சரத்தில் மூன்றாம் நாள் தங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று வித்தியாசமாக சிந்திக்கும் பெண் பதிவர்கள்.
பதிவர்: J.P.ஜோஸபின் பாபா |
எழுத்தாளர், இதழியல் விரிவுரையாளர், வலைப்பதிவர் என்று முப்பரிமாணங்களில் ஜொலிக்கும் ஜோஸபின், வளமான இலக்கிய மொழிநடைக்கு சொந்தக்காரர். ஆழமாக சமூகவியல் பிரச்சனைகளை அலசுவதாக இவரது பெரும்பாலான பதிவுகள் இருக்கும். தீவிர தேடல் கொண்ட படைப்பாளி. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
பெண்களுக்கு மன அழுத்தம்!
http://josephinetalks.blogspot.com/2011/07/blog-post_2804.html
இல்லம், அலுவலகம் என்ற இரட்டைக் குதிரையின் மீது சவாரி செய்யும் மனநிலையில்தான் இன்றைய பெண்கள் இருக்கிறார்கள். நம் இந்தியப் பெண்களில் 87% பேர் மன அழுத்த நோயால் துன்புறுகிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம். மேலும் பல அதிர்ச்சிகளை இந்த பதிவில் அவர் தருகிறார். பெண்களின் மன அழுத்தத்திற்கு பெண்களே காரணமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார். நவீனப் பெண்களின் உளவியலை படம் பிடித்து காட்டும் பதிவிது.
* * * * *
http://josephinetalks.blogspot.com/2014/07/blog-post_27.html
நம் சமூகத்தில் பேச கூச்சப்படும் ஒரு விஷயத்தைப் பற்றிய பதிவு இது. பாலியல் தொழிலாளி நளினி ஜமீலா எழுதிய சுயசரிதையை தேர்ந்த நடையில் விமர்சித்திருக்கிறார். ஜமீலாவிடம் இருக்கும் ஆண்களை பற்றிய அவதானிப்பும், பல வகையான பாலியல் தேவைகளை பற்றியும், அறை எடுத்து தங்குவதை விட உடன் பயணிப்பது, பேசி கொண்டிருப்பது என ஆண்கள் பல விதமான விருப்பத்துடன் அணுகுவதை பற்றியும் ஜமீலா குறிப்பிட்டுள்ளதை படிக்கும் போது வியப்பு ஏற்படுகிறது. 'ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை'யை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் பதிவிது.
* * * * *
http://josephinetalks.blogspot.com/search/label/Men-ஆண்கள்
ஒரு சமூகம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து கட்டமைப்பதில்தான் இருக்கிறது. ஆனால், இங்கு ஆண்கள் பெண்களை ஏசுவதும், பெண்கள் ஆண்களை தூற்றுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. உலகில் மிக கேவலமான வார்த்தைகளால் கணவனை திட்டுவது நம் இந்தியப் பெண்கள்தானாம். ஆண்களைப் பற்றி மேலும் ஜோஸபின் கதைப்பதைக் கேட்போம்.
- # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
http://unjal.blogspot.com/
பதிவர்: ஞா.கலையரசி |
பல பத்திரிகைகளில் கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் பதிவர் இவர். இவரின் இனிமையான மொழிநடையும் இயற்கை மீது இவருக்கு இருக்கும் ஆர்வமும் என்னை மிரள வைக்கிறது. பன்முகத் திறமைக் கொண்ட பதிவர்.
http://unjal.blogspot.com/2015/03/3.html
பறவைகளை உற்று நோக்குதல் ஒரு கலை இயற்கை மீதும், உயிரினங்களின் மீதும் அதீத காதல் கொண்டவர்களால் தான் அது முடியும். இவர் ஒவ்வொரு பறவையையும் அறிமுகப்படுத்தும் போது மெய் சிலிர்த்துப்போகிறது. இயற்கைதான் எத்தனை அழகானது என்பதை தொடர்ந்து நிரூபிப்பதுபோல் தெரிகிறது.
* * * * *
பறவைகளுக்கு உணவிடுவதற்காகவே சற்று கூடுதலாக சமைப்பவர்கள் நாங்கள். அதில் உப்பு, காரம், புளிப்பு எல்லாமே இருக்கும். இந்த பதிவை படித்ததும் மனம் பகீரென்றது. இத்தனை காலம் அவைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை அல்லவா கொடுத்திருக்கிறோம். அதிலிருந்து அவைகளுக்கு உப்பில்லாமல் கொடுக்க தனியாக சமைக்க தொடங்கிவிட்டோம்.
* * * * *
பறவைகளை உற்று நோக்குதல் ஒரு கலை இயற்கை மீதும், உயிரினங்களின் மீதும் அதீத காதல் கொண்டவர்களால் தான் அது முடியும். இவர் ஒவ்வொரு பறவையையும் அறிமுகப்படுத்தும் போது மெய் சிலிர்த்துப்போகிறது. இயற்கைதான் எத்தனை அழகானது என்பதை தொடர்ந்து நிரூபிப்பதுபோல் தெரிகிறது.
* * * * *
பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது
http://unjal.blogspot.com/2015/08/blog-post.html
* * * * *
'சுற்றுலா அனுபவங்கள்'
http://unjal.blogspot.com/2012/02/blog-post_02.html
சுற்றுலா செல்கிறீர்களா? அந்த ஊரில் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா..! அவர்கள் மூலம் சிக்கனமாக தங்கப் போகிறீர்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்குதான். கலையரசியின் கதையை கேளுங்க..!
http://geethamanjari.blogspot.com.au/
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்
http://geethamanjari.blogspot.com.au/2014/06/1.html
நமது சென்னைத் தமிழ் எப்படி தமிழில் தனி சிறப்பு பெற்று விளங்குகிறதோ, அப்படியே ஆஸ்திரேலியா ஆங்கிலமும் புகழ் பெற்ற ஒன்று. இரண்டு இடங்களிலும் வசித்த அனுபவத்தை வைத்து அருமையான பதிவை தந்திருக்கிறார் கீதா மதிவாணன். படித்துப் பாருங்கள் சென்னைத் தமிழின் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியும். அது எங்கிருந்து வந்ததென்ற வேர்ச்சொல்லும் தெரியும்.
* * * * *
எங்கள் தோட்டத்துப் பறவைகள்...
http://geethamanjari.blogspot.in/2014/05/blog-post_2.html
தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் பறவைகளின் படங்களும் அதன் குரல் இனிமையையும் ஒருசேர இந்த பதிவில் தந்திருப்பது அழகு. நகரத்தில் கான்கிரிட் காடுகளுக்கு மத்தியில் வாழும் மனிதர்களுக்கு இந்த பறவைகளின் ஒலி மகிழ்ச்சியைக் கூட்டும்.
* * * * *
ஒண்ட வந்த பிடாரிகள்
http://geethamanjari.blogspot.in/2015/02/2.html
இயற்கை உயிரினங்களில் சமநிலையை வைத்திருக்கிறது. புலிக்கு மான் இரையாவதுதான் நியதி, சமநிலை. ஒருவேளை புலிகளே இல்லையென்றால் என்னவாகும். உயிரினங்களின் சமநிலை எவ்வளவு முக்கியம் என்பதை அற்புதமாக விளக்கும் தொடர் பதிவு இது. நாங்கள் வெளியிடும் 'அக்ரி டாக்டர்' நாளிதழில் இந்த தொடரை வெளியிட்டு வருகிறோம். படித்துப் பாருங்கள். ஆஸ்திரேலிய அரசே தன் நாட்டு விலங்குகளை தாங்களே சுட்டுக் கொள்ளவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதிதான் இது. பெண்களே பேச கூச்சப்படும் ஒரு விஷயத்தை துணிச்சலோடு சொல்லியிருக்கிறார். இதுதான் இவர் பாணி. நாப்கின் என்ன தீண்டத்தகாத ஒன்றா..! படித்துப் பாருங்கள். புரியும்!
* * * * *
எதிர்பாக்காத தருணங்கள்
நாம் எதிர்பார்க்காத தருணங்களில் ஏற்படும் விபத்து நம்மை எப்படி பாடுபடுத்தும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள் நமக்கும் வலிக்கும்.

http://gayathrid.blogspot.com/
பதிவர்: காயத்ரி தேவி |
ஆசிரியராக பணிபுரியும் காயத்ரி தேவி தனது சொந்த அனுபவங்களையே 'என்னில் உணர்ந்தவை'யாக தருகிறார். மாணவர்களுக்கு உதவியதாக இருக்கட்டும், பார்த்த சினிமாவாக இருக்கட்டும், கேட்ட இசையை இருக்கட்டும், மாதவிலக்கு பிரச்சனையாக இருக்கட்டும், ஆண் நண்பர்களின் துரோகமாக இருக்கட்டும் எல்லாமே வெளிப்படையாக கூறும் துணிவான பெண் இவர். பாலியல் கல்வியை கொண்டுவரலாமா? வேண்டாமா? என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதை அமைதியாக செயல் படுத்தி வருகிறார் இவர்.
http://gayathrid.blogspot.com/2015/08/blog-post.html
இன்றைய இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதிதான் இது. பெண்களே பேச கூச்சப்படும் ஒரு விஷயத்தை துணிச்சலோடு சொல்லியிருக்கிறார். இதுதான் இவர் பாணி. நாப்கின் என்ன தீண்டத்தகாத ஒன்றா..! படித்துப் பாருங்கள். புரியும்!
* * * * *
எதிர்பாக்காத தருணங்கள்
gayathrid.blogspot.com/2015/06/blog-post_19.html
நாம் எதிர்பார்க்காத தருணங்களில் ஏற்படும் விபத்து நம்மை எப்படி பாடுபடுத்தும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள் நமக்கும் வலிக்கும்.
- # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
இன்றாவது விரைவில் வரவேண்டும் என்றிருந்தேன். இன்று எங்கள் பகுதியில் மின்தடை. இன்னும் அதிகமான பதிவர்களை அறிமுகப்படுத்த நினைத்திருந்தேன். நேரமின்னமையால் அதுவும் குறைந்துவிட்டது. நாளையாவது விரைவாக வர முடிகிறதா என்று பார்ப்போம்.
மீண்டும் நாளை சிந்திப்போம்!
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்
|
|
வணக்கம் நண்பரே
ReplyDeleteஇன்றைய மகளிர் மட்டும் அணியில் ஒரு சிலரைத் தவிற நான் தொடரும் பதிவர்களே அனைவருக்கும் எமது சிறப்பான வாழ்த்துகள்
தமிழ் மணம் இணைப்புடன் 1
பதிவர் காயத்ரி தேவி ஆசிரியர் அல்ல மருத்துவக்கல்லூரி மாணவி 80 குறிப்பிடத்தக்கது.
Deleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
Deleteகாயத்ரி தேவியின் ஏதோ ஒரு பதிவில் ஆசிரியை என்று குறிப்பிட்டது போல் நினைவிருக்கிறது. மற்றபடி அவர் தனது வேலையை பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. அதனால் தவறு ஏற்பட்டிருக்கும். தகவலுக்கு நன்றி நண்பரே!
Deleteவணக்கம்.
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளப் படுத்தப்பட்ட அனைத்துப் பதிவர்ளின் பதிவுகளையும் தொடர்கிறேன்.
இன்றைய பதிவில் இடம் பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி.
தங்கள் வருகைக்கும் தொடர்விற்கும் நன்றி நண்பரே!
Deleteஇன்றைய தொகுப்பு - வெகு சிறப்பாக - மங்கையர் மலராக மலர்ந்துள்ளது..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
தொடர் வருகைக்கு நன்றி அய்யா!
Deleteஅருமையான ஆறுமுகங்கள் . மகளிர் எழுத்தே ஒரு தனி பாணி. அதை ரசித்து படிப்பவன் நான். அறிம்குகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!
Deleteஅறிமுக தோழமைகட்கு வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி சகோ!
Deleteபெருமை தரும் பதிவுகளை தந்த பெண் இனப் பதிவர்களை சிறப்பித்தமைக்கு நன்றியும், வாழ்த்துகளும்!
ReplyDeleteஇன்றைய சிறப்பு பதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
தங்களின் உற்சாகமூட்டும் பின்னூட்டம்தான். எனது ஓய்வின்மையை மறக்கச் செய்கிறது. மிக்க நன்றி நண்பரே!
Deleteஇன்றைய அறிமுக மகளிர் பதிவாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர் வருகைக்கு நன்றி நண்பரே!
Deleteசிறப்பான அறிமுகங்கள், பல பதிவுகளைப் புதிதாகப் படித்தேன். பாராட்டுகள்.
ReplyDeleteபாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி அய்யா!
Deleteஅறிமுகங்களின் தேர்ந்தெடுத்த பதிவுகள் அனைத்தும் அருமை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்...
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே
Deleteசகோதரி ஜோஸ்பின் அவர்கள் தளம் எனக்குப் புதியது.
ReplyDeleteநல்ல சிந்தனையாளர் தொடருங்கள். நன்றி!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிர்களுக்கு வாழ்த்துகள். தொடர்கிறேன்.
-மிக்க நன்றி.
த.ம.9
தங்கள் வருகைக்கும் தொடர்விற்கும் நன்றி அய்யா,
Deleteநண்பரே வேலைப்பளுவோ...தாமதமாகிவிட்டது இல்லையா...எங்களுக்கும் பளு கூடியுள்ளது...வரும் மூன்று நாட்கள் ரொமவே....
ReplyDeleteசகோதரி ஜோஸ்ஃபின் தளம் புதியது எங்களுக்கு...மற்றவர்களை அறிவோம் சிலரை அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு....
அனைவருக்கும் வாழ்த்துகள்..
என்ன செய்வது வேலைப்பளுதான் நம் இருவரையும் வாட்டுகிறது. வேலை முடித்து வலைச்சரத்திற்காக உட்கார்ந்தால் தூக்கம் வருகிறது. எப்படியோ எல்லா துயரங்களையும் கடந்து நான்கு நாட்கள் ஓடிவிட்டது.
Deleteநன்றி நண்பரே!
வித்தியாசமாக சிந்திக்கும் பெண்பதிவர்கள் வரிசையில் என்னையும் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி செந்தில் குமார். மற்றப் பதிவர்களையும் அறிவேன் எனினும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில பதிவுகளை இதுவரை வாசித்ததில்லை. விரைவில் வாசிக்கிறேன். இங்கு அறிமுகமாகியுள்ள ஜோஸபின், கலையரசி அக்கா, காயத்ரி அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
Deleteஅறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் எல்லோரும் புதியவர்களே நன்றி! தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதங்களுக்கு புதியவர்களை அறிமுகம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி!
Deleteவணக்கம்,
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்,
ஜோஸ்பின் தளம் எமக்கு புதிது,,,,,,
தங்களுக்கும் நன்றிகள்.
தாங்கள் அறியாத ஒருவரை அறிய வைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!
Deleteஇன்றும் முதல் பதிவரைத்தவிர மற்ற பதிவர்கள் அறிமுகமானவர்களே என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. முதல் பதிவரை சென்று பார்த்து வருகிறேன். வித்தியாசமான தங்கள் சரமும் வெகு சிறப்புங்க சகோ.
ReplyDeleteதாங்கள் அறியாத ஒருவரை அறிய வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி சகோ!
Deleteபொறுமையாகவே தாங்கள் பதிவிடலாம். நாங்களும் பொறுமையாகப் படிப்போம். தொடர்வோம். அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteஎனக்காக பொறுமை காக்கும் தங்கள் நல் உள்ளத்திற்கு எனது நன்றி அய்யா!
Deleteஇவர்களில் பெரும் பாலோர் நான் அறிந்தவர்களே! வாழ்த்துகள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா
Deleteசிறப்பான பதிவர்கள்! அவர்களைப் பற்றிய விளக்கம் என அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள்! நன்று! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகூர்ந்து கவனித்து விமர்சனம் செய்ததற்கு நன்றி நண்பரே!
Deleteசிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
Deleteஎப்போதும் போல வலைச்சரம் வந்தால் என் ஊஞ்சலும் இங்கே! இனிய அதிர்ச்சி! மிகவும் நன்றி செந்தில்! ஒரேயடியாக என்னைத் தூக்கி உயரத்தில் வைத்துவிட்டீர்கள். என் சில கதைகள் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. அவ்வளவு தானே யொழிய தொடர்ந்து எழுதுபவள் இல்லை. இப்போதெல்லாம் இணைய இதழ்களில் மட்டும் தான் வெளிவருகின்றன. காயத்ரி, ஜோஸ்பின் இருவரும் எனக்குப் புதியவர்கள். கீதமஞ்சரியின் எழுத்துக்கு நான் ரசிகை. அதனால் அனைத்துப் பதிவுகளையும் வாசித்திருக்கிறேன். அவர்கள் வலைப்பூ போய்ப் பார்க்கவேண்டும். என்னுடன் அறிமுகமாகும் அனைவருக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! மீண்டும் நன்றி செந்தில்!
ReplyDeleteதங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரும்பாலான இதழ்களில் தங்களின் படைப்புகள் வந்திருப்பது தங்களின் தளத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. அதை வைத்துதான் அப்படி எழுதினேன். மகிழ்ச்சி!
Deleteசுவையான பதிவுகளை அறிமுகப் படுத்தினீர்கள்!
ReplyDeleteநன்று!!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஅறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஅறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Delete