Friday, August 14, 2015

வலைச்சரத்தின் ஐந்தாம் நாள் - கதம்பம்


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், 

வலைச்சரத்தில் ஐந்தாம் நாளாக அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய வலைச்சரம் பலவண்ண மலர்களைக் கொண்ட கதம்பமாக மலர்கிறது. 


http://veesuthendral.blogspot.in/

பதிவர்: சசிகலா
இன்றைய இளம் கவிஞர்கள் பெரும்பாலும் உரைநடையை அப்படியே மூன்று நான்கு வார்த்தைகளுக்கு ஒரு வரியாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி புதுக்கவிதை என்று சொல்லிவிடுகிறார்கள். ஏனென்றால் அதற்குதான் விதிமுறைகளே இல்லையே. ஆனால், மரபுக் கவிதைகள் அப்படியல்ல. அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள், சந்தங்கள் உண்டு. அதற்குள் வார்த்தைகளை கச்சிதமாக பொருத்துவது ஒரு கலை. அந்தக் கலை இவருக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது.

எழுத நினைத்த காதல் கடிதம்

http://veesuthendral.blogspot.in/2013/06/blog-post_26.html


காதலின் தவிப்பை அற்புதமாய் சொல்லும் இந்த 'எழுத நினைத்த காதல் கடிதம்' ஒரு காலப்பெட்டகம். இவரின் எழுத்து ஆளுமைக்கு இந்த ஒரு பதிவே போதும்.
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@



http://puthur-vns.blogspot.com/

பதிவர்: வே.நடனசபாபதி 
தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து, அதை திறம்பட வழங்கி வருபவர். வங்கியில் அதிகாரியாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பல்வேறு சுவைகளில் பதிவுகளாக தந்து கொண்டிருப்பவர். எங்களின் பத்திரிகையில் கூட  இவரின் 'ஏமாற்றுவதும் ஒரு கலைதான்' தொடராக வரவுள்ளது. 

http://puthur-vns.blogspot.com/2014/01/blog-post_4969.html#more


பெரியவர்கள் கொஞ்சம் மெதுவாத்தான் நடமாடுவார்கள். எதாவது கேட்டால் கொஞ்சம் யோசித்துதான் பதில் சொல்வார்கள். அதற்கு காரணம் முதுமையால் மூளை மந்தமாகி விட்டதாக எல்லோரும் நினைப்பார்கள். அது உண்மையில்லை. அதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் படிக்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. படித்துப் பாருங்கள்!
* * * * * 

http://puthur-vns.blogspot.com/2014/06/2.html


என்னதான் விவரமானவர்களாக இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் அதற்கு மேல் விவரமாக இருக்கிறார்கள். மனிதர்களை எத்தனை விதத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை ஒவ்வொரு பதிவிலும் இவர் சொல்லி செல்வது அபாரம்! 'ஏமாற்றுவதும் ஒரு கலைதான்' என்ற இந்த தொடர் பதிவு முழுவதையும் படிப்பவர்கள் அத்தனை விரைவில் ஏமாறமாட்டார்கள் என்பது உறுதி!
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@


gmbat1649.blogspot.in

பதிவர்: ஜி.எம்.பாலசுப்ரமணியம்
தனது உள்ளத்து உணர்சிகளை அப்படியே பதிவில் கொண்டு வரக்கூடியவர். சிறுகதை எழுத்தாளர், இளமையான மூத்த பதிவர். நிகழகால நிகழ்வுகளையும், தனது இளமை நினைவுகளை 'ஒ.. அந்தக்காலம்' என்ற தலைப்பிலும் சுவைப்பட எழுதி வருபவர்.

http://gmbat1649.blogspot.in/2015/05/blog-post.html


ஏழை எளியவர்களும் கிராமத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத்தான் காமராஜர் ஒவ்வொரு மூன்று கி.மீ.க்கும் ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்றார். ஆனால், இன்று நாம் மீண்டும் கல்வியை வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். யாரோ ஒரு கல்விக் கொள்ளையன் வசதியாக வாழ்வதற்கு நாம் தரமான கல்வி என்ற பெயரில் கொட்டிக்கொட்டிக் கொடுக்கிறோம். இன்றைய அனைவருக்கும் சமமாக கிடைக்காத கல்வியைப் பற்றி அலசியிருக்கிறார் ஜிஎம்பி! 
* * * * *

http://gmbat1649.blogspot.in/2015/06/blog-post_19.html


பருவத்து ஆண்கள் பலருக்கும் இருக்கும் பிரச்சனைதான் இது. முன் தோல் பின்னுக்கு செல்லாமை. இது திருமணத்தில் தொந்தரவு தரும். அதனால்தான் பெரியவர்கள், வலித்தாலும் பரவாயில்லை கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்கு இழுத்துப் பழக்கிக்கொள் என்பார்கள். இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும். இன்றைக்கு பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்குமான இடைவெளி அதிகமாகி விட்டது. அதனால் இது போன்ற அறிவுரைகளை யாரும் தருவதில்லை. அய்யா ஜிஎம்பி கதை போல் இதை சொன்னவிதம் அருமை. பருவ வயதில் இருக்கும் ஆண்களுக்கு அவசியத் தேவை.
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@


http://thillaiakathuchronicles.blogspot.com/

பதிவர்கள்: துளசிதரன் - கீதா
நான் பொறாமைப்படும் இரட்டைப் பதிவர்கள் இவர்கள். மிக்க ஞானம் பெற்றவர்கள்.  பின்னூட்டத்திலேயே பல விவரங்களை கூறும் வல்லமைப் பெற்றவர்கள். தேர்வெழுதி மதிப்பெண்ணுக்காக காத்திருக்கும் மாணவன் போல் பதிவெழுதி, இவர்களின் கருத்துக்காக எப்போதும் காத்திருப்பேன். மதிப்புமிக்க கருத்துக்களாகவே அவைகள் இருக்கும். இவர்கள் பின்னூட்டம் இடும் பாணி வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது.


தமிழ் தொ(ல்)லைக் காட்சித் தொடர்களும்,பெண்களும்

http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Tamil-Serials-Tamil-Women.html

தொலைகாட்சித் தொடர் நம்மை எப்படியெல்லாம் தொல்லை செய்கிறது என்பதை தனது தோழியின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தோடு விவரிக்கிறார் கீதா. இன்றைய யுகத்திற்கு ஏற்ற பதிவு.
* * * * * 

http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Teakwood-Museum-Nilambur-Kerala.html


கேரளாவில் இருக்கும் தேக்குமர அருங்காட்சியகத்தை பற்றி இந்த பதிவில் படித்துப் பாருங்கள். ஒரு ஆய்வுக் கட்டுரையோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் குவிந்துக் கிடக்கும். அதுதான் இவர்களின் பாணி. எந்தவொரு விஷயத்தையும் மிக ஆழமாக அலசுபவர்கள். வாசித்துப் பாருங்கள் நாம் அருங்காட்சியகத்தை வலம் வந்த உணர்வு தோன்றும். 
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@


http://www.nisaptham.com/
பதிவர்: வா.மணிகண்டன் 
பொறியியல் பட்டம் பெற்று பெரும் நிறுவனத்தில் பணியாற்றினாலும் இவர் கதை, கவிதை, கட்டுரை, வலைப்பதிவு என்று எப்போதும் இலக்கியத்துடனே பயணித்துக் கொண்டிருப்பவர். 'கண்ணாடியில் நகரும் வெயில்' கவிதை தொகுப்பின் மூலம் இலக்கிய வெளிக்கு அறிமுகமானவர். தினமும் பதிவெழுதுபவர். அவை அனைத்தையுமே சுவராசியமாய் தருபவர். நிசப்தம் என்ற அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி வருபவர்

ஐடி வேலை எப்படி?

http://www.nisaptham.com/2015/06/blog-post


ஐடி வேலை நிரந்தரமற்றதா? அவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறார்களா? போன்ற சில அடிப்படை கேள்விக்கு இந்த பதிவு தெளிவான பதிலை சொல்கிறது. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதன் மூலம் நீடித்து பணியில் நிலைக்கலாம். அதை செய்ய மறுப்பவர்கள் வேலை இழக்கிறார்கள். படித்துப் பாருங்கள் குழம்பிய மனம் தெளிவு பெரும். 
* * * * *

எப்படி மனசுக்குள் வந்தாய்

http://www.nisaptham.com/2012/09/blog-post_10.html


சிறுகதை விரும்பிகளுக்கு இது ஒரு அருமையான பதிவு. தங்குதடையின்றி தெளிவான நீரோட்டம் போல் செல்லும் இந்த கதை மனப்பிறழ்வை அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
* * * *  * 
@@@@@@@@@@@@@@@@@@


இன்றைய பதிவு தங்களுக்குப் பிடித்திருந்ததா..!

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!

அன்புடன், 

எஸ்.பி.செந்தில்குமார் 





45 comments:

  1. வணக்கம் நண்பரே இன்றைய அறிமுகங்கள் ஐயா திரு. ஜியெம்பி, நண்பர். திரு. வே. நடனசபாபதி, வில்லங்கத்தார் திரு. துளசிதரன் கோஷ்டிகள், சகோ. திருமதி. சசிகலா, மற்றும் புதிய நண்பர் திரு. வா. மணிகண்டன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்

    கில்லர்ஜி
    தமிழ் மணம் 222

    ReplyDelete
    Replies
    1. முதலில் வந்து வாழ்த்துக்கள் சொல்லி வாக்கும் அளித்ததற்கு நன்றி நண்பரே!

      Delete
  2. வணக்கம் சகோ! இன்றைய அழகான கதம்பச்சரத்தில் தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
    மதுரையில் பிறந்த மாமனிதர் அதுவும் சோதனைகளை சாதனைகளாக்கியவரிடமிருந்து எனக்கான அறிமுகம் கிடைத்ததில் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவ்வளவு மகிழ்ச்சி.
    இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்.
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க சகோ.
    தங்களின் பணிச்சுமைக்கு நடுவிலும் இந்த வலைச்சரத்தை வெகு சிறப்பாக தொடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தங்கள் ஆர்வமும் உழைப்பும் கண்ணில் தெரிகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      நான் மாமனிதரெல்லாம் கிடையாது. சாமானியன். தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

      Delete
  3. எனது பதிவுகளையும், என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே! மேலும் உங்களின் பத்திரிக்கையில் எனது எழுத்தும் வர இருக்கிறது என அறிவித்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  4. நண்பரே! மன்னித்துவிடுங்கள் முதலில். தாமதம்.மீண்டும். வேலைப் பளு...

    நீங்கள் இப்படிச் சொல்லும் அளவிற்கு நாங்கள் இருக்கின்றோமா என்று வியக்கின்றோம். ஏனென்றால் உங்களைச் சொல்லி நாங்கள் எவ்வளவு எழுதுகின்றார் அதுவும் அழகாக..பல தகவல்கள், பயணக் குறிப்புகள், பத்திரிகையாளர் அதனால் மிகத் திறம்பட எழுதுகின்றார்...என்று பல சொல்லி வியப்பதுண்டு. உங்களை நண்பராகக் கிடைக்கப்பெற்றமைக்கும் நாங்கள் மகிழ்வதுண்டு.

    மிக்க நன்றி எங்களையும் பல ஜாம்பவான்களுடன் அடையாளப்படுத்தியமைக்கு....நாங்கள் மகிழ்ந்தாலும் கூடவே பொறுப்புணர்வும் வருகின்றது. உங்கள் வார்த்தைகளைக் காப்பாற்றும் பொருப்பு. மிக்க நன்றி மிக்க நன்றி....நாங்கள் உங்கள் பதிவுகளுக்காகக் காத்திருக்கின்றோம்....வருகின்றோம் அங்கு.

    அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தகுதியானவர்கள் தான் நண்பர்களே! உண்மையில் பல கருத்துக்களுக்கு என்ன எழுதுவதென்றே தெரியாத அளவுக்கு தகவல்கள் இருக்கும். எனக்கு தெரிந்த ஒரே வார்த்தை 'நன்றி'. அதை மட்டுமே அதில் தெரிவிப்பேன். மிக்க நன்றி!

      Delete
  5. இன்றைய சரத்தில் இடம் பெற்றவர் அனைவரும் என் மனம் கவர்ந்தவர்கள.நடன சபாபதி அவர்கள் தன் துறை சார்ந்த பதிவுகளை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். சசிகலா, துளசிதரன்.ஜி.எம்.பி ஆகியோரும் நான் விரும்பும் பதிவர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் மனம் கவர்ந்தவர்களும் கூட..!

      Delete
  6. அன்புள்ள அய்யா,


    ‘தென்றல்’ சகோதரி சசிகலா, ‘நினைத்துப்பார்க்கிறேன்’ அய்யா வே.நடனசபாபதி,
    ‘gmb writes’ பெரியவர் அய்யா ஜி.எம்.பாலசுப்ரமணியம், ‘தில்லையகத்து க்ரானிகல்ஸ்’
    அன்புள்ள அய்யா துளசிதரன் & சகோதரி கீதா, ‘நிசப்தம்’ அய்யா வா.மணிகண்டன் உட்பட அறிமுகப் படுத்திய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம. 7


    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      Delete
  7. என் தளத்தையும் இரு பதிவுகளையும் அடையாளப் படுத்தி எழுதியதற்கு நன்றி. பொதுவாக வலைச்சரத்தில் அடையாளப்படுத்தும் பதிவுகளையே சிலர் படிக்காமல் அறிமுகப் படுத்துவது கண்டிருக்கிறேன் நீங்கள் எக்செப்ஷன் அதற்காக மீண்டும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி!

      Delete
  8. அட அன்பான நட்புகளின் அறிமுகங்கள் என் மதிப்பிற்கு உரியவர்கள். ஓரிருவர் புதியவர்கள். அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ!

      Delete
  9. வலைப் பூவுலகின் கலை நட்சத்திரங்கள்

    ‘தென்றல்’ சசிகலா,

    நினைத்துப்பார்க்கிறேன்’வே.நடனசபாபதி,

    ‘gmb writes’ ஜி.எம்.பாலசுப்ரமணியம்,

    தில்லையகத்து க்ரானிகல்ஸ்
    துளசிதரன் & சகோதரி கீதா,

    ‘நிசப்தம்’ வா.மணிகண்டன்

    அனைவருக்கும் குழலின்னிசையின் இனிய நல்வாழ்த்துகள்.

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

      Delete
  10. பெரும்பாலானோர் அறிமுகமானவர்களே. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் தேர்ந்தெடுத்தும் தரும் பாணி சிறப்பாக உள்ளது. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா!

      Delete
  11. இன்றைய அறிமுகங்களில் நிசப்தம் மட்டும் எனக்குப் புதுத்தளம். சசிகலா அருமையான மரபுக்கவிஞர். மற்றவர்களின் படைப்புக்களைப் படித்ததில்லை என்றாலும் பின்னூட்டங்களின் வாயிலாக அறிவேன். நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவுகளை நேரங்கிடைக்கும் போது வாசிப்பேன். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்! பணிச்சுமைக்கிடையிலும் வலைச்சர ஆசிரியர் பணியைச் செம்மையாக நிறைவேற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள் செந்தில்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ!

      Delete
  12. இன்றைய அறிமுகங்கள் அனைவரும்
    அறி(ந்த )முகங்களே!
    பதிவுகளை சுட்டி கொடுத்து சுட்டிய விதம் சிறப்பு!

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்களுக்கும் அறிமுகப்படுத்தியவருக்கும் எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  14. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அறிந்த நண்பர்கள் அதிகம்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. நிசப்தம் வலைக்கும் சென்று வந்தேன். நன்றி சகோ.

    ReplyDelete
  17. சசிகலாவின் எழுத நினைத்தகாதல் கடிதம் படித்தபோது நான் எழுதி போட்டிக்கு அனுப்பாத கடிதம் நினைவுக்கு வந்தது. படித்திருக்கிறீர்களா.?

    ReplyDelete
    Replies
    1. எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? //

      இந்த வரிகளை மறக்கமுடியுமா?
      தங்கள் கடித வரிகளில் என் மனதில் ஆழப்பதிந்த வரி.

      Delete
    2. படிக்கவில்லை. கூடிய விரைவில் படித்துவிடுகிறேன். அய்யா!

      Delete
  18. வணக்கம்,
    அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துககள்.
    நன்றி.

    ReplyDelete
  19. நான் விரும்பி படிக்கும் சிறப்பான பதிவர்களின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! அனேகமாக அறிமுகமான பதிவர்கள்! புதிய பதிவு அறிமுகங்கள்!

    ReplyDelete
  22. உங்களுடைய வலைச்சர அறிமுகப்பாணி மிகவும் வித்தியாசமாகவும் முழு ஈடுபாட்டுடனும் உள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் செந்தில் குமார். இன்று அடையாளங்காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள். ஒவ்வொரு பதிவாக சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி கீதா மதிவாணன் அவர்களே,
      தங்களின் பாராட்டும் வாழ்த்தும் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
      நன்றி!

      Delete