வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிதான மாலை வணக்கம்,
நேற்று எவ்வளவோ முயன்றும் என்னால் இங்கு வரமுடியவில்லை. வழக்கமான வேலையோடு சுதந்திரதினத்துக்கான வேலைகளும் சேர்ந்துகொண்டதால் வரமுடியவில்லை. மன்னிக்கவும்!
இனி இன்றைய நிறைவு நாள் பதிவர்களின் அறிமுகங்கள்.
சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன..!
http://subastravel.blogspot.in/
பதிவர்: சுபாஷிணி ட்ரெம்மல் |
ஜெர்மனியில் வசிக்கும் தமிழ் ஆர்வலர். மரபு சார்ந்த தமிழுக்காக உலகம் முழுவதும் பயணிப்பவர். பயணங்களில் ஈடுபாடு கொண்டவர். இவர் தமிழகம் வரும் போதெல்லாம் பல கல்லூரிகள் பேச அழைக்கும். பணி, ஆய்வு, வரலாறு, சுற்றுலா என்று தொடர்ந்து வானில் பறந்து கொண்டே இருப்பவர். தமிழின் பழைய ஓலைச்சுவடிகள், நூல்களை டிஜிட்டல் மயத்திற்கு மாற்றும் பணியை இவரது தமிழ் மரபு நூலகமும், தமிழ் மரபு கட்டளையும் சேர்ந்து செய்து வருகின்றன. தமிழுக்கு இவர் ஆற்றும் மாபெரும் சேவை இது.
அயர்லாந்தின் அழகில்...
http://subastravel.blogspot.in/2011/12/1.html
அயர்லாந்தின் அற்புதமான அழகை நம் கைப்பிடித்து அழைத்து செல்வது போல் சுவையாக சொல்கிறார். இந்த மினி தொடரைப் படிப்பதன் மூலம் செலவில்லாமல் அயர்லாந்தை சுற்றி வரலாம். இவரின் படங்களும் பதிவுக்கு வலு சேர்கின்றன.
* * * * *
வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம்
http://subas-visitmuseum.blogspot.com/2013/09/8.html
வ.உ.சி.யை பற்றி நினைக்கும் போது இந்த சம்பவம் என் நினைவுக்கு வந்துவிடும். எனது மாமா ஒருவர் மேலாளராக வேலைப் பார்த்த நிறுவனத்திற்கு புதிதாக ஒரு லேபர் ஆபிசர் வந்திருந்தார். எப்போதுமே இப்படிப்பட்ட ஆட்கள் வந்தால் பணம் பறக்கும். ஆனால் அவரோ ஒரு பைசா கூட வாங்கவில்லை. மிகவும் வற்புறுத்தியதால் ஒரேயொரு காபி மட்டும் சாப்பிட்டார். புறப்படும் போது அந்த காபிக்கான ஒரு ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். என் மாமா தனது வாழ்நாளில் இப்படியொரு லேபர் ஆபிசரை பார்த்ததில்லை. வாய்விட்டே கேட்டுவிட்டார். நீங்கள் யாரென்று..? அப்போதுதான் அந்த ஆபிசர் 'வ.உ.சி.யின் மகன் நான். என் தந்தை இந்த நாட்டுக்காக எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார். நான் என்னால் முடிந்தவரை அதை காப்பாற்றுகிறேன்.' என்று கூறிவிட்டு போய்விட்டார். எப்போதும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்.
நாட்டுக்காக அந்தமான் சிறையில் வாடிய அந்த மாமனிதரின் வீடு தற்போது அருங்காட்சியகமாக காட்சியளிக்கிறது. உலகின் பல அருங்காட்சியகங்களை பார்த்திருக்கும் சுபாஷிணி தனது அனுபவங்களை இங்கே கூறியிருக்கிறார்.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
umakrishhonline.blogspot.in
பதிவர்: உமா கிருஷ்ணமுர்த்தி |
மயிலிறகால் மென்மையாக வருடினால் கிடைக்கும் சுகம் இத் தளத்தை வாசிக்கும் போதும் கிடைக்கும். நாம் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் இனிமையான பாடல்களை அந்த இனிமையோடு விமர்சிக்கும் தளம் இது. ஒவ்வொரு பாடலும் எனக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே தாக்கத்தை இவருக்கும் ஏற்படுத்தி இருப்பது வியப்பை தருகிறது. நான் என்னையே இந்த பதிவுகளில் பார்க்கிறேன். நீங்களும் பாடலை கேட்டு விட்டு வாசித்துப் பாருங்கள். உங்களையே உங்களால் பார்க்க முடியும்.
http://umakrishhonline.blogspot.in/2015/06/blog-post.html
என்னுள் நீண்ட நாள் ஒலித்த பாடல் இது. உயிரை துளைக்கும் ஒரு இசை இந்த பாடலில் ஒளிந்துள்ளது. எனது சில இரவுகளை இந்த ஒரு பாடல் மட்டுமே களவாடி சென்றிருக்கிறது. விடிந்ததுகூட தெரியாமல் திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட பாடலை இந்த பதிவில் பார்க்கும் போது நான் மீண்டும் 20 வருடம் பின்னோக்கிப் போனேன். வறுமையையும் வறட்சியையும் ஊனுருக சொன்ன பாடல்.
* * * * *
http://umakrishhonline.blogspot.in/2015_07_01_archive.html
இரவின் அமைதியில் கேட்க தோதான பாடல். நம்மை மென்மையாக வான்வெளிக்கு கொண்டு சென்று சுகமான தென்றலுக்கு நடுவே உலாவவிட்டு மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் இசை. வித்யாசாகர் இசையில் காலத்தை வென்ற பாடல். அந்த பாடலை எத்தனை ரசனையாக அணுஅணுவாக அனுபவித்து ரசித்து எழுதியிருக்கிறார் பாருங்கள். மிக ரசனையான பதிவு.
* * * * *
மனைவியை இப்படி ஒரு குழந்தைபோல் தாலாட்ட முடியுமா? எம்.எஸ்.வி. இசையும், எஸ்.பி.பி.யின் குரலும் இருந்தால் முடியும். என்னை கிறங்க வைத்து பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் அப்படியொன்றும் பெரிய 'ஹிட்'டில்லை. ஆனாலும் நம்மை ஆழ்நிலையில் ஆழ்த்தி துயில் கொள்ள வைக்கும் பாட்டு இது. என்னைப்போல் மிக சிலரே இந்த பாடலை ரசித்திருப்பார்கள் என்று எண்ணியிருந்த வேளையில் இந்த பதிவு என் கண்ணில் பட்டது. வாசித்தபோது பிரமித்துவிட்டேன். வாழ்வின் மீது பிடிப்பையும் நம்பிக்கையையும் கொண்டு வரும் பாடல் இது.
'கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே!'
வாலியின் நம்பிக்கை வரிகளும் இந்தப் பாடலை திரும்ப திரும்ப கேட்க காரணம். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/
இந்தியாவை ஆள்பவர்கள் வாழும் ஊரில் வாழ்பவர். அதனாலே பதிவுலகை ஆள்கிறார். பயணங்களின் மீது தீரா காதல் கொண்டவர். இவரின் பயணக்கட்டுரைகள் படிப்பவர்களுக்கு ஏக்கத்தை தருபவை. பயணம் மட்டுமல்லாமல் மற்ற தளங்களிலும் பதிவிடுபவர்.
பளிங்கினால் ஒரு மாளிகை.
http://venkatnagaraj.blogspot.com/2011/11/blog-post_14.html.
வட இந்திய மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் ஒரு புறக்கணிக்கப்பட்ட மாநிலமாகவே படுகிறது. அரசியல், தொழில், சுற்றுலா என்று எல்லாமே அங்கு பின்தங்கிதான் இருக்கிறது. அங்கு பயணித்த வெங்கட்ராஜ் தனது அனுபவங்களை அற்புதமாக தொகுத்து தந்திருக்கிறார்.
* * * * *
என் இனிய நெய்வேலி!
http://venkatnagaraj.blogspot.com/2012/11/blog-post_20.html
கல்லூரி காலங்களில் எல்லோருக்கும் ஏற்படும் அந்த விபத்து என் வாழ்விலும் ஏற்பட்டது. அதுதான் காதலில் விழுவது..! நான் காதலித்தப் பெண்ணின் ஊர் நெய்வேலி. அதனால் இந்த 'என் இனிய நெய்வேலி'யை கடந்து செல்ல முடியவில்லை. அவளை பார்ப்பதற்காக மூன்று முறை நெய்வேலி சென்றிருக்கிறேன். உண்மையில் அருமையான ஊர். இந்த பதிவில் அதன் சிறப்பை இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ளாலாம்.
* * * * *
கூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?
http://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post_16.html
வேலை, வசதி, மனமில்லாமை என்ற பல காரணங்களுக்காக நம் இந்திய பண்பாட்டுச் சூழலில் கூட்டுக் குடும்பம் என்ற அற்புதத்தை இழந்துவிட்டோம். இந்த பதிவில் நடந்துள்ள சம்பவம் ஒருவேளை அந்தக் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்திருந்தால் நடந்திருக்காதோ என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வார்த்தை விருப்பம்
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/
இசையை இத்தனை நுணுக்கத்துடன் எழுத முடியுமா..? எண்ணி எண்ணி வியக்கவைக்கும் ஒரு பதிவர் இவர். இளையராஜாவை கொஞ்சமாகவும் ரஹ்மானை அதிகமாகவும் எழுதுபவர். இவர் பதிவை படிக்கும் முன் நான் என் வேலையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டுதான் படிப்பேன். பதிவின் நீளம் அப்படி. போய்க்கொண்டே இருக்கும். ஆனாலும் ஏகப்பட்ட விஷய ஞானம்.. இல்லை இசை ஞானம் கொண்டவர். பாடல்களைப் பற்றி பல விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் வித்தகர். படித்துப் பாருங்கள்! உங்களுக்குள் புதிய இசை உலகம் உருளும்.
உடைந்த ஒப்பனைகள்
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015_04_01_archive.html
தமிழ் சினிமாக்களில் எழுபதுகளை ஒரு வறண்ட காலம் என்றே சொல்லலாம். வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்த சிவாஜி
கூட முழுவதும் மசாலாத் தனத்திற்கு திரும்பியது அப்போதுதான். எம்.ஜி.ஆர்.ரைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர் படங்களில் சிறப்பான கதை என்று ஒன்றும் இருந்ததில்லை. அந்த காலகட்டத்திலும் அற்புதமான பல பாடல்கள் வந்ததன. அவற்றைப் பற்றியும் '16 வயதினிலே' என்ற மண்ணின் மனம் சார்ந்த பிரமாண்டம் அறிமுகமானதையும் மிக மிக விரிவாக இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறார்.
* * * * *
எழுந்த இசை
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/11/xii.html
90-களின் துவக்கத்தில் இந்திய இசையுலகில் ஒரு மாபெரும் புயல் ஒன்று கிளம்பியது. அந்த புயலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்று பெயர். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களைப் பற்றி விரிவான அலசல். இசையில் ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறார் நண்பர் காரிகன்.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சாமானியனின் கிறுக்கல்கள்!
http://saamaaniyan.blogspot.com/
நண்பர் சாம் எந்த பணியில் இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவருக்குள் தீவிர தேடல் கொண்ட ஒரு இலக்கிய எழுத்தாளன் ஒளிந்து கொண்டிருக்கிறான். அதை அவரின் ஒவ்வொரு பதிவிலும் பார்க்க முடியும். வெளிநாட்டில் வேலைக்காக சென்றவர்கள் நாடு திரும்பும் போது அவர்கள் சந்திக்கும் மகிழ்ச்சியையும் இன்னல்களையும் அவர்களை நம் மக்கள் பார்க்கும் விதத்தையும் விடுமுறை விட்டாச்சு பதிவில் மிக அற்புதமாக சொல்லியிருப்பார். இன்னும் நிறைய எழுதுங்கள் சாம். உங்களின் எழுத்து வசீகரம் மிக்கது.
காலம் திருடிய கடுதாசிகள்!
http://saamaaniyan.blogspot.com/2015/07/blog-post_18.html
என்னதான் மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் என்று இன்றைய தொழில்நுட்பம் வேகம் எடுத்திருந்தாலும், என் பள்ளிப்பருவத்தில் கடிதங்கள் ஏற்படுத்திய பாதிப்பை இவைகள் ஏற்படுத்தியதே இல்லை. அன்றைக்கு எனது உயிர் நண்பர்கள் இருவர். நசீர் அஹமத், வெற்றிவேல். இருவருக்கும் வாரத்தில் இரண்டு முறை கடிதம் போடுவேன். கடிதம் என்றால் சாதாரணக் கடிதமல்ல. அது அந்த நான்கு நாட்களில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ அத்தனையும் இருக்கும். கடிதம் அது பக்கம் பக்கமாக நீளும். 100 பக்கத்திற்கெல்லாம் கடிதம் எழுதியிருக்கிறேன். தபால்காரர் எங்களின் கடவுளாக இருந்த காலம். இப்படி பல மலரும் நினைவுகளை கிளறிவிட்டது இந்த பதிவு.
* * * * *
விடாது துரத்திய விஷ்ணுபுரம்!
http://saamaaniyan.blogspot.in/2014/12/blog-post_15.html
வாசிப்பின் மீது நேசிப்பு கொண்ட ஒரு மனிதரின் புத்தக தேடல் இது. வாசிப்பில் நமக்கும் அயல்நாட்டினருக்கும் இருக்கும் முரணை வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார். தன் தாய்மொழியையே தரம் தாழ்ந்ததாக நினைக்கும் ஒரு இனம் தமிழ் இனம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த பதிவு. விஷ்ணுபுரத்தை தேடி வீதி வீதியாக அலைந்த இவருக்கு இறுதியில் கிடைத்தது மனதுக்கு நிம்மதியை தருகிறது. புத்தகப் பிரியர்களுக்கு பிடித்த பதிவிது.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தளிர் சுரேஷ்
http://thalirssb.blogspot.com/
கோவில் அர்ச்சகராக இருக்கும் நண்பர் சுரேஷ் கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அதிலும் பாப்பாமலர் என்ற பெயரில் குழந்தைகளுக்காக எழுதும் கதைகளும் அருமை. தமிழில் குழந்தை இலக்கியம் வெற்றிடமாகவே உள்ளது. இதுபோக தன்னுடைய அனுபவங்கள், கட்டுரைகள், பத்திரிக்கைகளில் வரும் வித்தியாசமான தகவல்கள் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்துபவர்.
அறிவுள்ள வேலைக்காரன்!
http://thalirssb.blogspot.com/2015/07/pappa-malar-25-7-15.html
இது ஒரு சிறுவர் கதைதான். செவி வழியாக வந்த கதையை நன்றாக எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள். வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் படிக்கச் சொல்லுங்கள். இப்படி சின்ன சின்ன கதைகள் மூலம்தான் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.
* * * * *
பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே!
http://thalirssb.blogspot.com/2015/03/dont-be-selfish.html
பிறருக்காக வாழ்வதுதான் வாழ்க்கை. இப்படிதான் நாம் குழந்தைகளாக இருந்த போது போதிக்கப் பட்டது. ஆனால், உலக தாராளமயத்திற்குப்பின் பணம்தான் பெரிது என்று போதிக்கப்பட்டது. அதன் விளைவு எல்லா மனிதர்களும் சுயநல பிடிக்குள் சிக்கிக்கொண்டார்கள். அவர்கள் பிறருக்காகவும் வாழவேண்டும் என்கிறார் இவர்.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இன்றைய பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள்.
விடைபெறுகிறேன்.
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்
'கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே!'
வாலியின் நம்பிக்கை வரிகளும் இந்தப் பாடலை திரும்ப திரும்ப கேட்க காரணம். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/
பதிவர்: வெங்கட் நாகராஜ் |
பளிங்கினால் ஒரு மாளிகை.
http://venkatnagaraj.blogspot.com/2011/11/blog-post_14.html.
வட இந்திய மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் ஒரு புறக்கணிக்கப்பட்ட மாநிலமாகவே படுகிறது. அரசியல், தொழில், சுற்றுலா என்று எல்லாமே அங்கு பின்தங்கிதான் இருக்கிறது. அங்கு பயணித்த வெங்கட்ராஜ் தனது அனுபவங்களை அற்புதமாக தொகுத்து தந்திருக்கிறார்.
* * * * *
என் இனிய நெய்வேலி!
http://venkatnagaraj.blogspot.com/2012/11/blog-post_20.html
கல்லூரி காலங்களில் எல்லோருக்கும் ஏற்படும் அந்த விபத்து என் வாழ்விலும் ஏற்பட்டது. அதுதான் காதலில் விழுவது..! நான் காதலித்தப் பெண்ணின் ஊர் நெய்வேலி. அதனால் இந்த 'என் இனிய நெய்வேலி'யை கடந்து செல்ல முடியவில்லை. அவளை பார்ப்பதற்காக மூன்று முறை நெய்வேலி சென்றிருக்கிறேன். உண்மையில் அருமையான ஊர். இந்த பதிவில் அதன் சிறப்பை இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ளாலாம்.
* * * * *
கூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?
http://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post_16.html
வேலை, வசதி, மனமில்லாமை என்ற பல காரணங்களுக்காக நம் இந்திய பண்பாட்டுச் சூழலில் கூட்டுக் குடும்பம் என்ற அற்புதத்தை இழந்துவிட்டோம். இந்த பதிவில் நடந்துள்ள சம்பவம் ஒருவேளை அந்தக் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்திருந்தால் நடந்திருக்காதோ என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வார்த்தை விருப்பம்
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/
பதிவர்: காரிகன் |
உடைந்த ஒப்பனைகள்
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2015_04_01_archive.html
தமிழ் சினிமாக்களில் எழுபதுகளை ஒரு வறண்ட காலம் என்றே சொல்லலாம். வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்த சிவாஜி
கூட முழுவதும் மசாலாத் தனத்திற்கு திரும்பியது அப்போதுதான். எம்.ஜி.ஆர்.ரைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர் படங்களில் சிறப்பான கதை என்று ஒன்றும் இருந்ததில்லை. அந்த காலகட்டத்திலும் அற்புதமான பல பாடல்கள் வந்ததன. அவற்றைப் பற்றியும் '16 வயதினிலே' என்ற மண்ணின் மனம் சார்ந்த பிரமாண்டம் அறிமுகமானதையும் மிக மிக விரிவாக இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறார்.
* * * * *
எழுந்த இசை
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/11/xii.html
90-களின் துவக்கத்தில் இந்திய இசையுலகில் ஒரு மாபெரும் புயல் ஒன்று கிளம்பியது. அந்த புயலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்று பெயர். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களைப் பற்றி விரிவான அலசல். இசையில் ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறார் நண்பர் காரிகன்.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சாமானியனின் கிறுக்கல்கள்!
http://saamaaniyan.blogspot.com/
பதிவர்: சாமானியன் சாம் |
காலம் திருடிய கடுதாசிகள்!
http://saamaaniyan.blogspot.com/2015/07/blog-post_18.html
என்னதான் மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் என்று இன்றைய தொழில்நுட்பம் வேகம் எடுத்திருந்தாலும், என் பள்ளிப்பருவத்தில் கடிதங்கள் ஏற்படுத்திய பாதிப்பை இவைகள் ஏற்படுத்தியதே இல்லை. அன்றைக்கு எனது உயிர் நண்பர்கள் இருவர். நசீர் அஹமத், வெற்றிவேல். இருவருக்கும் வாரத்தில் இரண்டு முறை கடிதம் போடுவேன். கடிதம் என்றால் சாதாரணக் கடிதமல்ல. அது அந்த நான்கு நாட்களில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ அத்தனையும் இருக்கும். கடிதம் அது பக்கம் பக்கமாக நீளும். 100 பக்கத்திற்கெல்லாம் கடிதம் எழுதியிருக்கிறேன். தபால்காரர் எங்களின் கடவுளாக இருந்த காலம். இப்படி பல மலரும் நினைவுகளை கிளறிவிட்டது இந்த பதிவு.
* * * * *
விடாது துரத்திய விஷ்ணுபுரம்!
http://saamaaniyan.blogspot.in/2014/12/blog-post_15.html
வாசிப்பின் மீது நேசிப்பு கொண்ட ஒரு மனிதரின் புத்தக தேடல் இது. வாசிப்பில் நமக்கும் அயல்நாட்டினருக்கும் இருக்கும் முரணை வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார். தன் தாய்மொழியையே தரம் தாழ்ந்ததாக நினைக்கும் ஒரு இனம் தமிழ் இனம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த பதிவு. விஷ்ணுபுரத்தை தேடி வீதி வீதியாக அலைந்த இவருக்கு இறுதியில் கிடைத்தது மனதுக்கு நிம்மதியை தருகிறது. புத்தகப் பிரியர்களுக்கு பிடித்த பதிவிது.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தளிர் சுரேஷ்
http://thalirssb.blogspot.com/
கோவில் அர்ச்சகராக இருக்கும் நண்பர் சுரேஷ் கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அதிலும் பாப்பாமலர் என்ற பெயரில் குழந்தைகளுக்காக எழுதும் கதைகளும் அருமை. தமிழில் குழந்தை இலக்கியம் வெற்றிடமாகவே உள்ளது. இதுபோக தன்னுடைய அனுபவங்கள், கட்டுரைகள், பத்திரிக்கைகளில் வரும் வித்தியாசமான தகவல்கள் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்துபவர்.
அறிவுள்ள வேலைக்காரன்!
http://thalirssb.blogspot.com/2015/07/pappa-malar-25-7-15.html
இது ஒரு சிறுவர் கதைதான். செவி வழியாக வந்த கதையை நன்றாக எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள். வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் படிக்கச் சொல்லுங்கள். இப்படி சின்ன சின்ன கதைகள் மூலம்தான் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.
* * * * *
பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே!
http://thalirssb.blogspot.com/2015/03/dont-be-selfish.html
பிறருக்காக வாழ்வதுதான் வாழ்க்கை. இப்படிதான் நாம் குழந்தைகளாக இருந்த போது போதிக்கப் பட்டது. ஆனால், உலக தாராளமயத்திற்குப்பின் பணம்தான் பெரிது என்று போதிக்கப்பட்டது. அதன் விளைவு எல்லா மனிதர்களும் சுயநல பிடிக்குள் சிக்கிக்கொண்டார்கள். அவர்கள் பிறருக்காகவும் வாழவேண்டும் என்கிறார் இவர்.
* * * * *
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இன்றைய பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள்.
விடைபெறுகிறேன்.
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்
வெங்கட் நாகராஜ், காரிகன், தளிர் சுரேஷ். ஆகியோர் ஏற்கனவே அறிமுகம் .சாமானியன் அண்மையில் அவர் வலைச்சர ஆசிரியரானபோது அறிமுகம். மற்றவர்களின்னும் தெரிந்து கொள்ளப் படாதவர்கள். இனி. பார்ப்போம். வலைச்சராஆசிரியப் பணியை இனிதே முடித்ததற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!
Deleteநண்பர் செந்தில்,
ReplyDeleteஎன் வலைப்பூவை அழகாக அறிமுகம் செய்ததற்கு நன்றி.
பல தலைப்புகளை லாவகமாக எடுத்துக்கொண்டு அதைப் பற்றி சிறப்பாக எழுதும் சிலரில் நீங்கள் ஒருவர் என்று உங்களை நான் கணக்கிட்டிருக்கிறேன். என்னை நீங்கள் ஞாபகம் வைத்து இப்படி சிறப்பு செய்வீர்கள் என்று எண்ணவேயில்லை.
நான் இளையராஜா ரஹ்மான் இருவரைப் பற்றி எழுதுவதை விட எம் எஸ் வி பற்றியே அதிகம் எழுதியிருக்கிறேன். மேலும் மக்கள் இப்போது மறந்துவிட்ட பல இசை அமைப்பாளர்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன்.உதாரணம் சங்கர் கணேஷ், வி குமார் போன்றோர். தற்போது இசையைத் தாண்டி எழுத உத்தேசித்துள்ளேன். கண்டிப்பாக வருகை தரவும்.
மயிலிறகு என்ற அருமையான தளத்தை அறிமுகம் செய்தததற்கு நன்றி. இன்றுதான் அப்படி ஒரு தளம் இருப்பதை அறிந்தேன். இசை பற்றி அநியாயத்துக்கு அபாரமாக எழுதியிருக்கிறார் உமா கிருஷ்.
சாம் என் மனதுக்கினிய இணைய நண்பர். எழுத்தில் பல வண்ணங்களை தீட்டுபவர். தளிர் சுரேஷ் அவர்களின் பதிவுகளை தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நான் படிப்பதுண்டு.
வெங்கட் ராம், சுபாஷினி ட்ரெம்மல் தளங்களுக்கு இனிதான் செல்ல வேண்டும்.
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
Deleteஇசை விமர்சனத்தை நிறுத்தி விடாதீர்கள். இசையை பற்றி அதிலும் உங்களைப் போல் இசையின் பாணி, ராகம், தழுவல் போன்ற நுணுக்கமான சங்கதிகளை விமர்சனம் செய்பவர்கள் மிகக் குறைவு. உங்களின் தனித்தன்மையான இசையை விட்டுவிடாதீர்கள்.
நீண்ட ஒரே பதிவை தருவதற்கு பதிலாக ஒரு படத்தின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக விரிவான பதிவாக தரலாம். உதாரணத்திற்கு நீங்கள் தந்திருக்கும் 'சங்கமம்', 'உயிரே' விமர்சனங்களை சொல்லலாம். சிறு சிறு பதிவுகளை தந்தால் இன்னும் அதிகமான பேர் படிப்பார்கள் என்பது எனது கருத்து.
உங்கள் பதிவுக்கு தவறாமல் வருவேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
இனிய அறிமுகங்கள் கண்டு மகிழ்ச்சி..
ReplyDeleteவாழ்க நலம்!..
நன்றி நண்பரே!
Deleteவலைச்சர ஆசிரியர் பணியை தங்களது பணிகளுக்கிடையே வெற்றிகரமாக ஏற்று நடத்தியதற்கு வாழ்த்துக்கள்! இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteபல்வேறு பணிகளுக்கு இடையிலும் வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாக செய்தீர்கள் நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவணக்கம்,
ReplyDeleteதங்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், சிறப்பாக தங்கள் வலைச்சர ஆசிரியர் பணினியை முடித்தீர், வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி சகோ!
Deleteஎதிர்பாராத ஆச்சர்யமாக இறுதியில் என் தள அறிமுகம்! நன்றி நண்பரே! சுபாவின் பயணங்கள், மயிலிறகு தளங்களுக்குச் சென்றது இல்லை! மற்ற தளங்கள் நான் சென்று வாசிக்கும் அருமையான தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! புதிய தளங்களுக்குச் சென்று பார்க்கின்றேன்! நன்றி!
ReplyDeleteமற்ற தளங்களை பாருங்கள்! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteமுதலில் வலைச்சரத்தில் தங்களுக்கு கூட வாழ்த்து எழுதாமல் மயிலிரகின் வருடலை தேடிச்சென்றேன். என்ன சொல்ல! அற்புதமான தேடல் தங்களுடையது எனக்கு பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்னுடன் அமர்ந்து வார்த்தைக்கு வார்த்தை பேசுவது போன்ற உணர்வைத் தரும் தளம் அது நன்றிங்க.
ReplyDeleteஅடுத்து காரிகன் தளத்திற்கு சென்றேன். ஒருவருடப்பதிவை ஒருங்கே படித்துக்கொண்டிருக்கிறேனோ என்று திரும்பிப்பார்த்தேன் எத்தனை! எத்தனை! விஷயங்களை ஒரே நேரத்தில் தருகிறார் மீண்டும் செல்ல வேண்டும். ஆச்சரியம்!
அசத்தலான அற்புதமான தங்கள் பணிக்கு மனம் நிறைந்த எனது வாழ்த்துகள் சகோ.
தளிர் மற்றும் வெங்கட் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதில் மகிழ்ச்சி அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
Deleteஇசையின் வளத்தை சொல்லும் இரண்டு தளங்களுக்கும் சென்று வந்தது மகிழ்ச்சியளிக்கிறது சகோ!
Deleteவணக்கம் நண்பரே பலரும் பலகும் நமது நண்பர்களே சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களின் தளம் அடிக்கடி போவதுண்டு மற்றும் நண்பர்கள் திரு.தளிர் சுரேஷ், திரு. வெங்கட் நாகராஜ், திரு. சாமானியன் அனைவருடைய தளமும் தொடர்வதே... சிறப்பாக தங்களது பணியை முடித்தமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 2
தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நண்பரே!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதிருவாளர்கள் சுபாஷிணி ட்ரெம்மல், உமா கிருஷ்ணமுர்த்தி , வெங்கட் நாகராஜ், காரிகன்,
(சாமானியன் சாம், தளிர் சுரேஷ் ) இறுதியில் சொன்ன இருவரின் வலைத்தளம் பற்றி கொஞ்சம் அறிவேன். மற்றவர்களின் வலைத்தளம் பற்ற முயற்சிக்கிறேன்.
ஒரு வாரத்தில் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று வெகு சிறப்பாக செயலாற்றியமைக்குப் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
த.ம.
அன்புள்ள சகோதரி,
Delete"கனா காணும் கண்கள் மெல்ல.." இயக்குநர் இமயமும், இசைமன்னரும் இறவாப் பாடலைப் படைத்திட்ட பாங்கை அழகாக விளக்கிச் சொல்லியது பாராட்டுக்குரியது.
சரிதாவும் தன் உருட்டும் கண்களால் நடிப்பில் மெரட்டியிருப்பார். ஒரு திரைப்படத்தில் இவ்வளவு பெரிய புகைப்படம் வைத்து எடுத்தது இந்தப்படத்தில்தான்.
எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
நன்றி.
வலைச்சரத்தின் அனைத்து பதிவுகளுக்கும் வருகை தந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி அய்யா!
Deleteநான் மிகவும் நேசிக்கும் பதிவர்களே இன்றைய அறிமுகங்கள் என்பதை என்னும்போது மட்டற்ற மகிழ்ச்சி மனதில். மயிலிறகு மனதை வருடியது. வாழ்த்துகள். அனைவருக்கும் ஆனந்த நல் வாழ்த்துகள்.
ReplyDeleteநட்புடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே!
Deleteவணக்கம் நண்பரே!
ReplyDeleteஒரு வார ஆசிரியப் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறமைக்கு மகிழ்ச்சி.
தங்களால் அடையாளங்காட்டப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.
பலரும் நான் அறியாதவர்கள்.
தங்கள் தளத்தில் சந்திப்போம்.
த ம 2
நன்றி
தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நண்பரே! கருத்துரை இடுவதற்கு நேரமில்லாமல் தான் பின்னூட்டம் இடுவதில்லை மற்றபடி தங்களின் பதிவுகளை படித்துவிடுகிறேன். தொடர்ந்து நம் தளங்களில் சிந்திப்போம்.!
Deleteவலைச்சர ஆசிரியப்பணியை அழகாகச் செய்து முடித்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுகள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஆசிரியப் பணியை சிறப்பாக முடித்துள்ளீர்கள் பாராட்டுக்கள். இன்றைய அறிமுகங்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteவலைச்சர ஆசிரியப் பணியை சிறப்புறச் செய்தமைக்கு வாழ்த்துகள் செந்தில் சகோ
ReplyDeleteஎனக்குப் பிடித்த வெங்கட்சகோ, தளிர் சுரேஷ் சகோ, காரிகன் சார் ( மிகப்பெரிய கட்டுரையானாலும் சுவாரசியமாக இருக்கும் ) தளங்கள் அறிமுகமே.அவர்களுக்கு வாழ்த்துகள்.
சுபாஷிணி, உமா கிருஷ், சாம் ஆகியோர் தளங்களுக்கும் செல்கிறேன்.
முடிவில் அனைவருக்காகவும் வாழ்வோம் என்ற சுரேஷ் சகோவின் வார்த்தைகளுடன் முடித்திருப்பது சிறப்பு :)
நான் எண்ணிப் பார்த்து வியக்கும் ஒரு பதிவர் நீங்கள். என் வலைச்சர அறிமுகப் பட்டியலில் உங்களையும் ஒருவராக வைத்திருந்தேன். சூழலின் காரணமாக பல பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாமல் போய்விட்டது. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
Deleteபல கடும் வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் ஒரு வார ஆசிரியர் பணியைச் சிறப்பாய் செய்தீர்கள்.
ReplyDeleteபதிவர்களை அறிமுகம் செய்தவிதம் அருமை!
தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய நண்பருக்கு வாழ்த்துக்கள்!
Deleteஇன்றைய அறிமுகங்களில் சிலர் தெரிந்தவர்கள்; சிலர் தெரியாதவர்கள். எல்லோருடைய பதிவுகளையும் சென்று பார்ப்பேன், அனைவருக்கும் என் பாராட்டுக்கள்! கடுமையான பணிச்சுமைக்கிடையிலும் ஆசிரியர் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றியமைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
ReplyDeleteவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ!
Deleteதாமதமான வருகைக்குப் பொறுத்துக்கொள்க. அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்து முடித்தமைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஅறிமுகப் பதிவர்களில் நானும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. மத்தியப் பிரதேசம் - சுற்றுலா செல்ல நிறைய இடங்கள் இங்கே உண்டு. ஆனாலும் அவ்வளவாக யாரும் செல்வதில்லை என்பது வருத்தம் தரும் விஷயம்.
உணமைதான் நண்பரே!
Deleteநானும் அவ்வளவாக மத்திய பிரதேசம் பற்றி அறிந்ததில்லை.
வருகைக்கு நன்றி!