வணக்கம் வலைச்சர நண்பர்களே...
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த தினத்தந்தி பத்திரிக்கை கட்டுரையாளர் கூட்டாஞ்சோறு வலைப்பதிவர் S.P. செந்தில் குமார், தமது வலைச்சர வாரத்தை மிகுந்த பொறுப்புடனும், ஆர்வத்துடனும், அனைவரையும் தன் பதிவுகள் பால் ஈர்க்கும் வண்ணம் எழுதி முடித்துள்ளார்.
மொத்தம் ஆறு பதிவுகள் எழுதிய அவர் 300-க்கும் மேலே மறுமொழிகள் பெற்றும், சுமார் 1500 பக்கப்பார்வைகளுக்கும் மேலே பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "சுந்தர நேசங்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுந்தரி கதிர் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார்.
அவரைப் பற்றி சொல்வதென்றால் மதுரையில் பிறந்து கோவையில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதும், புத்தகங்கள் வாசிப்பதும் அவரது பொழுது போக்காக இருந்தாலும், பல் மருத்துவம் படித்து முடித்து மருத்துவ மேலாண்மையராக உள்ளார். சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தனது வலைப்பூவை ஆரம்பித்து எழுதும் அவர் இதுவரை 1392 பதிவுகள் எழுதியுள்ளது மிகவும் மலைப்பாகத் தான் உள்ளது. வலைச்சர ஆசிரியராய் பொறுப்பு, புது வித தாய்மொழி தேடல் அனுபவமாய் அமையும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
சுந்தரி கதிர் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நல்வாழ்த்துக்கள் S.P. செந்தில் குமார்,
நல்வாழ்த்துக்கள் சுந்தரி கதிர்.
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...
சோதனை மறுமொழி.....
ReplyDeleteஅன்பும் மகிழ்ச்சியும் வலைச்சர குழுவினர்களுக்கு,,,
DeleteS.P. செந்தில் குமாருக்கு அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteசுந்தரி கதிர் அவர்களுக்கு வரவேற்பு
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
மிக்க மகிழ்ச்சி :)
Deleteவருக.. வருக..
ReplyDeleteசுந்தரி கதிர் அவர்களுக்கு நல்வரவு!..
அன்புக்கு நன்றி
Deleteவலைச்சரப் பொறுப்பை இனிதே நிறைவேற்றிய செந்தில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! பொறுப்பேற்க வரும் சுந்தரி கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகப்பதிவில் வரவேற்று வாசிப்பை தொடருங்கள் கலையரசி
Deleteவருக வருக சுந்தர் கதிர் சிறப்பாக வலைச்சரம் அலங்கரிக்கட்டும்!
ReplyDeleteஎதிர்கொண்டு வரவேற்கும் அனைவரும் அன்பும் மகிழ்ச்சியும்.
ReplyDeleteசுந்தரி கதிர் அவர்களே... வாழ்த்துகள்...
ReplyDeleteஅன்புக்கு நன்றி
Deleteஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் சுந்தரி கதிர் அவர்களே!
ReplyDeleteஅன்புக்கு நன்றி
Deleteஆசிரியப்பணியை சிறப்பாக நிறைவேற்றிய செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து அவரை அவருடைய தளத்தில் சந்திப்போம். சுந்தரி கதிருக்கு நல்வரவு.
ReplyDeleteஅன்புக்கு நன்றி
Deleteகவியே கவிப்பூச்சூட போகிறதா
ReplyDeleteபூக்களே அலங்கரிக்கப் புறப்பட்டதா
இசையே இசைவாக மீட்டுகிறதா
பூஞ்சாரலே புகழ்ச்சாரல் பொழிகிறதா
வண்ணமே ஒளியூட்டப் பயணமா
வானவில்லே வரவேற்கிறதா
சுந்தரத்தமிழே சுழலப் போகிறதா
விழி வீச்சினசைவு வீரியத்தை காண
வழி மேல் காத்து நிற்கிறோம்
பொங்கட்டும் பரவட்டும் திக்கெட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் நலமுடன்
வாழிய புகழுடன்
அன்புத் தோழமையே
அன்புக்கு நன்றி
Deleteநல்வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
ReplyDeleteஅன்புக்கு நன்றி
Deleteபாராட்டுகளும் வாழ்த்துகளும்!
ReplyDeleteஅன்புக்கு நன்றி
Deleteஅன்புள்ள சகோதரி,
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க "சுந்தர நேசங்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுந்தரி கதிர் அவர்களின் சுய அறிமுகம் நன்றாக இருந்தது.
பொறுப்பாசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்.
நன்றி.
அன்புக்கு நன்றி
Deleteஅருமை!
ReplyDeleteமகிழ்கிறேன்...
வாழ்த்துகிறேன்!
அன்புக்கு நன்றி
Delete