Wednesday, August 19, 2015

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

முதல்நாளில்..முத்துப் பூ மூன்று படித்து..வளமாய் வாழ்த்தி வரவேற்று...
வாகைமொழி மாலை சூடிய இதயநட்புகளுக்கு...இனிய நன்றி கூறி............

அன்னை வணங்கி ஆரம்பிக்கிறேன்..வலைச்சரத்தில் மூன்றாம் நாளின்....இரண்டாம்கட்ட ..அறிமுக வலைப்பூக்களை

எடுத்து தொடுக்கும் முன்.....விழி ஒளிபட்டு .. நெகிழ காத்திருக்கும்
நட் பூக்களின் மொழிக்காம்பு ..
இளைப்பாற  இடைவெளியிட்டு

இதோ பல் நல .. பல மொழிகள்...
இன்று நாம் கருத்தறிய வரும் பல்மருத்துவ மேலாண்மைதுறை... ஆதிஅந்த சொல்துறை
முதல்மொழியாய்  செல்லச்சிட்டு ..அம்மா என்றழைக்க.....பால்பல் ஒன்று எட்டிப்பார்க்கும்...
அச் சொல்லமுது ..... சுவையமுதாய் வடிய .......


PEDODONDICS
குழந்தைகளின் பல் பற்றிய துறை
குழந்தைகளுக்கு வாயில் ஏற்படும் வளர்சிதைமாற்றங்களை பற்றி விளக்கும் துறை
பால்பற்கள் (முளைத்தல்..விழுதல்... சொத்தை..பல் எடுத்தல்)

முன்பகுதி பற்கள் உடைந்தால் செய்யும் சிகிச்சை முறைகள்..12 வயது வரை  நிரந்தர பற்கள் அனைத்தும் வந்து
அதன் குறைபாடுகள் சரிசெய்யப்படும் இத்துறையில்.....கைசப்புதல்..உறக்கத்தில் பற்களை கடித்தல்..உணவு சரியாக உட்கொள்ளாமல் இருக்கும் பிரச்சனை அனைத்தும் சரிசெய்யப்படும்


அன்புக்குழந்தைகளுக்கு..ஆரோக்கிய சிரிப்பை பரிசாய் அளிக்கும் பசிய துறை..வழி சென்று வலியின்றி நலமடைவோம்

வாருங்கள் செல்வோம்....உயிர்தாக சாந்திக்கு..உற்சவ தமிழ் தடாகத்துக்குள்

முதல் பூவாய் இன்று முகமன் கூறி நம்மை வரவேற்கும் வலைப்பூ......

அன்புத் தம்பியாம்...ஆழ்கற்பனை சொல்வல்லனாம்.....எண்ணங்களுக்கு பல வண்ணங்கள் தீட்டும்
திரு மகா சுமன் அவர்களின் தூரிகை அருவிக்குள்


கவிதையாய்..கட்டுரையாய்..கருத்தாய்வாய்...காதலாய்....
வாழ்க்கை சொல்லி...மரபுகளையும்..மாண்புற காத்து மகிழ்ப்பூ பூக்கும் தம்பி தம் அருவிச்சாரல்

முதலாய் இவர் வண்ண எண்ணத்தில் .. நனைய நான் அழைத்துச்செல்வது....காகிதப் படகு...நிகழ்வு சொல்லும் ..நினைவுச் சாரல்.....தன்னை உழைப்பில் அர்ப்பணிப்பவனே..நல்லதொரு தலைவனாக ஆக முடியும் என  ..வெகுசில நிமிடங்களில்...தன் நிகழ்வாய் நிகழ்த்திக்காட்டி..உழைப்பு உப்பை ருசிக்க சொல்லும்.....வெற்றி வியர்வைச் சாரல்..

காகிதக் கப்பல்   செய்யவில்லை அவர்....தம் நிகழ்கால வாழ்வுக்கு...சேகரித்துள்ளார்....பக்குவ உயர் பணிவெனும் பயணிக்கப்பல்....வாசித்து நேசியுங்கள்
அடுத்து ...மரபுக் கவியாய் 

எவள் அவள்....தன்னை தான் கரு கொண்டு பிரசவித்தாள் என்றே...புருவம் உயர்த்த வைக்கும் சிந்தை மொழி...தமிழாள்பவளை ....உயர்த்தும் உன்னதஎழில் மொழி
நட்பை..உயிரென கொண்டாடுபவர் வரிசையில்  ...தாய் மொழியணைப்பவரை......தலைமேல் அமர்த்தி ..தன் மொழிக்கரமெடுத்து தாங்கி...அனைவரும் அறிய செய்யும் பெருமை மொழி 
உடனிருக்கும் நட்பை உவகையோடு திறமை செப்ப..ஏராள தாராள பெருந்தன்மை பெற்றிருப்பது சுமனின் சுகந்த சிறப்பு.

வாழ்க்கை சொல்லும் கவி தத்துவமாய்...பொய்மை உலகில் மெய்மை தேடும் சித்தன் மொழி......

இணையாணவளை...இதயநிகர் உயிரை..எத்தனை வெற்றி   நாம் பெற்ற போதும்..இமையணைத்து நம் இன்பதுன்ப நெகிழும் செருக்குதிமிரான சதியை...
வேண்டும் வேண்டும் நீ.. வேண்டும் என தவிப்புற்று கெஞ்சும்  கொஞ்சல்மொழி.....வேண்டும்.. .நீ வேரானவளே... என்றிவர் மொழியெடுக்க... நெகிழ்கிது.... இணைதேடும் உயிர் 

 
 எண்ணங்கள் பல வண்ணங்கள்... தீட்டும்.. மொழித்தூரிகைச்சாரலில்.....இன்புற நனைந்து ..இதயம் சிலிர்த்து மகிழுங்கள் நட்புகளே. 
***************************************
முகமன் செய்து முகம்காட்டும் அடுத்த பூ...என் தங்கப் பூ...தங்கைப்பூ...என்னை இங்கு சிம்மாசனம் அமர அழைத்த அன்பூ
வெகுபலர் அறிந்து....வெள்ளைசிரிப்பு பகிர்ந்து ..பட்டாம்பூச்சியாய்...அவரை பண்பாடும் பிள்ளைப்பூ காயு ..எனும் பிள்ளைக்கொஞ்சலாடும் ..கனிப் பூ..... காயத்ரி தேவி  அவர்களின்... என்னில் உணர்ந்தவை  எனும்
தன்னை தான் உணர்ந்த உணர்வுப்பூ


சிந்தை கலவைகளின் சீர் கொள்ளிடம் இவரென்றால் இணைச்சொல் வேறேது..
குழந்தையென கொஞ்சி...குமரியென வம்பிழுத்து ..சட்டென சாட்டை சொடுக்கி
நான் யார் என்று..தன்னை தான் கேட்டு....பிரியமாடும் பிள்ளைப்பூ

தமிழ் மணத்தில் ...ஆஸ்தான தேவதையாய்  பொன்னூஞ்சலாடி

எளிமை மொழி தொட்டு...அசால்ட்டாய்...சொல்லும் கருத்தை உள்திணிக்கும் இவரின் எழில் வளமை....தொடாத தலைப்புகளில்லை யெனினும்...
என்னில் உணர்ந்த இவரை....என் விழிதொட்டு வந்த மொழி..சில ...

இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள். என்றெடுக்கும் சவுக்கு மொழி........
தெரிந்து ....அறிந்து..புரிந்ததை..தெளிவாய்..அச்சம் தவிர்த்து.......பாதகம் செய்வோரைக் கண்டால்..மோதி மிதித்துவிடு பாப்பா என்று எம் மீசைக்கவி இவருக்கென்று ...இளஞ்செவி சென்று...கூவி உரைத்தாரோ .....என்றே கோபம் கொள்ளச் செய்யும் குணமொழியாடல்....

சமையலில்...இப் பூவின் சுவையாடல்...புட்டு....புட்டு புட்டு வைக்கிரது அம்மிணியின் அடுப்படி திறமைகளை...
.இருந்தாலும் முயற்சி  பண்ண பயமா இருக்கு புள்ள....நமக்கெல்லாம் அடுப்பில் குக்கர் வைச்சாலே விசில விட மேல பறக்கும்.....சிரட்டையா....எதுக்கும்அவசர உதவிக்கு.பயர் சர்வீஸ்  பக்கத்துல வைச்சுபோம்

நேசிப்பை...நேசவாள் எடுத்து கீறி உதிரம் சொட்ட சொட்ட..உயிர் உருகி நிற்கும்.....உணர்வு திறமை மொழி...

நேசிப்பதை விட..இப்படி நேசிக்கப்படுதல் தான் எத்தனை உயிர் தவம் ...கொடுத்து வைத்தவனடா நீ கவிதைக்காரா....இவள் இன்பம் சொல்ல எடுத்த மொழியில் இங்கு வழிந்தவை இதழ் மீறித் தளும்பியவையே......நேசமனைக்கும் ஜீவன்கள் பொறாமை கொள்கிறது...கொஞ்சம்  இமைஇறகு விரித்து கண்ணுக்குள் கனியுறங்குங்கள்...கவின் சொந்தங்களே என்னில் உணர்ந்தவையில்   உன்னின் மொழி எழிலில் நான் உயிர்சிலிர்க்கிறேன் தங்கைத்தோழியே. 
*********************************************
வரும் பூ..வலைப்பூவின் அதிகம் தன்னை பகிராத புதுப் பூ...சரித்திர கவி சொல்லும் சட்டப் பூ
கலையழகாய் வலம் வரும் தங்க கதிரவன் கவிதைப் பூ

 ஆரம்பித்து ஆண்டு சில ஆயினும்....அதிக பணிச்சுமை தோள் ஏற...இலக்கிய தாகத்தை இருவிழிச்சிறைக்குள் சிறையிட்டு....காணும் தமிழை எல்லாம் கரைசேர்க்க ..கவிமொழியால்..கரம் கொடுத்து உற்சாகப் படுத்தும் உன்னதப் பூ

என்னதான் மறைத்தாலும்..ஒளித்தாலும்...தன்னை மீறி தளும்பிவிடுவாள்..தனக்குள் காதலிருக்கும் தமிழ் மகள் ..என்பதன் எடுத்துக்காட்டாய்..இவரின் கவித்துளிகள்....தங்க கதிரவரே தன் கைமூடினாலும் ஒளிக்க முடியாத கதிர்வீச்சுக்கள்

போர்க்களத்தில் பூவொன்று.........ஆஹா..என்னவொரு வீரத்திமிர் நடை...சங்க காலத்தில் போருக்குசெல்லும் வீரமகனார்..தலைவி பிரிவை...காதல் மலரழகே என..விளித்து....
””எல்லை கடந்து போகிறேன்..ஆதலின் உன்னிடம் எல்லை மீறாமல் போகிறேன்.”””....என ..உயிர்பொருள்..உயர்பொருளாய்..திமிரணைத்து சொல்லும் பேராற்றல் மொழி
 போர்க்களத்தில் பூவொன்று..!
என்று ..இலக்கியம் அனைத்தும் கூறி ..அன்பழைக்கும்
அதிகார மொழி
பட்டுச்செழுமை பதியன் மொழி
மதுஓவிய மலர்கள் என .....ஒரு ஓவிய படத்தொகுப்பெடுத்து ...எழுது ஒரு மொழியென எனக்கு கட்டளையிட்டு..எழுதவைத்து...ஒளிப்படச்சுருளுக்குள்..முதலாய் என் மொழி கொணர்ந்து வடிவமைத்து வாகைசூடி மகிழும் நட்பை என்ன நான் இங்கு நன்றியுரைத்து ...அவர்தம் திறமை சொல்ல மதுஓவிய மாதுமலர்கள் தேன் சிட்டு  அழகு கொஞ்ச......பதினொன்கீழ்கணக்கில்..ஊடல்முற்றி கூடலூர் செல்ல.....பத்துப்பாட்டில் ..செல்ல தமிழ்ப் பிள்ளை கொஞ்சி..
தன் இலக்கிய தாகம் பருகுகிறார்...தமிழ்சுடர்

பெருமையடைகிறேன் நண்பரே......சிறுபெரும் சிலகவியில்...தங்கள் இலக்கியசெழுமை கண்டு வியந்து என் நீள்பெரும் விழிப்பார்வையில் .....நின் கருத்தணைத்து காட்சிகண்ட தமிழ் வளமைகளே...
இன்று தொடுத்த சரப்பூ பக்கம் சென்று..மிச்சமிருக்கும் தேன் பருகி...மீள் நிம்மதி மனதினியுங்கள் ...

சந்திப்போம் நாளை..இன்னும் சில சன்னிதிப் பூக்களுடன்...... __/|\__
*********************************


34 comments:

  1. அபார எழுத்தின் மூலம் எங்களை வேறு ஒரு உலகிற்கு அழைத்துச்செல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்கிறேன். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  2. ரொம்ப தாங்க்ஸ் அக்கா. லேப்டாப் இல்லாம ரெண்டு நாளா ஆன்லைன் வர முடியல. அதனால என்னால உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாம போச்சு. ரெண்டு நாள் பிந்தினாலும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மா. அன்பின் நன்றி !!

      Delete
  3. இன்றைய அறிமுக பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிறப்பாக தொகுப்பித்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  4. பற்களைப் பற்றியும் பதிவுகளைப் பற்றியும் -
    இளஞ்சாரல் நடையில் - பகிர்ந்தமை கண்டு மகிழ்ச்சி..

    நல்வாழ்த்துக்களுடன்!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  5. வணக்கம்
    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  6. இன்றைய அறிமுக பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  7. அழகாக சரம் கோர்த்து சென்று கொண்டு இருக்கின்றீர்கள் இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  8. வணக்கம், என்னுடைய வலைப்பூவிற்கு வாசம் தந்து அழகு பார்க்கும் டாக்டர் சுந்தரி கதிருக்கும், வலைச்சரத்திற்கும் மிக்க நன்றி.
    - தங்க.கதிரவன்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  9. Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  10. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  11. இன்றும் கவிச்சரமாய் புதுப்பூக்களின் அறிமுக வாசம்....

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி!! நன்றி சார்!!!

      Delete
  12. அருமையான
    அறிமுகம்!

    தகுதியான மூவரின்
    திறமைகள்...
    சுந்தர தமிழில் நம் கவிஞர்
    உரைக்க....
    இனித்தன செவிகள்!

    அவர்களின்
    வலைப்பதிவுகளும்
    எமக்கு இனி...
    தமிழ்ப்பூ மணக்கும்
    நல்ல
    பூந்தோட்டங்களே!

    கவிஞர்...
    கைகாட்டியுள்ள இடங்கள்
    அருமையான
    வலைப் பக்கங்களே...
    தரமானப்
    பதிவுச் சுரங்கங்களே!

    பதிவர்களுக்கு
    நல்வாழ்த்துக்கள்!

    அறிமுகப்படுத்திய
    கவிஞருக்கு
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

      Delete
  13. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

      Delete
  14. பல் மருத்துவ குறிப்பு அருமை. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். நாளை வரை காத்திருக்கிறோம் மற்ற பூக்களுக்கு!!

    ReplyDelete
  15. அருமையான பதிவுகள் அனைத்தும் சகோ வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி!! வாழ்த்துகளுக்கு நன்றி!!

      Delete
  16. அருமை! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. அன்பின் நன்றி!!

      Delete
  17. மகா சுமனின் கவிதைகள் யெப்போதும்
    மனதில் நின்று பேசிச் செல்பவையே
    காயத்திரி தேவி மற்றும் தங்கக் கதிரவன்
    ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
    தமிழமுதத்தை திரட்டித் தந்திடும்
    தமிழ்ச்செல்வியாம் கவிக்குயில் சுந்தரி கதிருக்கு
    வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

      Delete