Thursday, August 20, 2015

நான்காம் நாளாய் நல்லிதய பிரியங்களுக்கு

நான்காம் நாளாய் நல்லிதய பிரியங்களுக்கு வணக்கமும்..முதல் மூன்றுநாள்..என்மொழி படித்து உவகைகொண்டு உற்சாக கருத்திட்ட பிரியங்களுக்கு நன்றியும் போற்றி... .
அனைத்துமான அன்னை வணங்கி வலைச்சர நாரெடுத்து தொடுக்கிறேன்
இன்றும்...மூன்று ..சன்னிதிபூக்களை.....அதன் முன் முதலாய் ஆசிரியனை ஆசிக்கும் தொழில் வணங்கி சில வரிகள்
பல் மருத்துவ நல மொழிகளில்
இன்று நாம் அறிந்துகொள்ளப்போகும் பல் மருத்துவ மேலாண்மைத்துறை



சீரற்ற முறையில் முளைத்து இருக்கும் பற்களை சீர்படுத்தும் துறை
பால் பற்கள் முளைப்பதிலும்...
அவை விழுந்து நிரந்தர பற்கள் வரும் போதும்..
இடையில் ஏற்படும் சில சீரற்ற பராமரிப்பால் இடைவெளி ஏற்படும் போதும்....
தாடை எலும்பு கோளாறுகளினாலயும்
வம்சவளியாக வரும் தொடர்புகளினாலும்
சிலர் குழந்தைபருவத்தில் ..ஏற்படும் விரல் சப்பும் பழக்க வழக்கத்தினாலும்..முன்பற்கள் நீட்டி 
சிலருக்கு பற்கள் முன் பின் அமைந்து ..முக தோற்றதை கோரமாக்கிவிடுகிறது,..மற்றும் உணவு மெல்லுதல்..அரைபடுதலில் குறைபாடுகள் ஏற்படும்.....
இத்தகைய பிரச்சனைகளை சரிசெய்து..அழகிய முகவடிவையும்..அற்புத சிரிப்பையும் ..தங்களுக்கு வழங்கும்
மேலாண்மைதுறையே...இத்துறை..


மண்ணில் மனிதன் பெற்ற ஒரு அழகிய நோய்,... சிரிப்பு எனும் தொற்று வியாதி..
மனதோடு மலர்தல் தரும் முகப் பொலிவை ..மகிழ்வாய் பெற்று வளமாய் வாகைசூடுவோம் பிரியங்களே
இனி செல்வோமா..செந்தமிழ் மணப் பூக்கள் தொடுக்க
முதல் பூ...தமிழ் மணம் அறிந்த..தமிழ்குடில் பூ...தாய்ப்பூ.....காய் பூ இல்லாத காயுப் பூ

                                         தூரிகைச் சிதறல்களாய்

திருமதி காயத்ரி வைத்தியநாதன் அவர்களின் தூரிகைச் சிதறல்களாய்.. சிதறிய இதழ்களில்...சில

என் விழி மணத்தில் ... கவிக் காயத்ரி ..இதழும் இறகுமாய்..இவர்தம் இளஞ்சிவப்பு வலை பார்வை கவர்ந்திழுத்து
குளுமைதந்து கூதலணைக்கிறது...மனதை மகிழ்வு கோதி வென்றுவிடுகிறார்..தன் ரசனை வடிவமைப்பில்
இளஞ்சோலை சென்று தென்றல் மொழி படிக்கும் சுகம்
அறிந்தும் அறியாததுமாய்..இவர் தரும் அன்னை மொழி.....அருமையான வாழ்வியல் மொழிகள்


நறுக்குத்தெறித்த சில வரிகளில்...வாழ்யோசிப்பு வனம் செல்லவைத்தல் ..பெரும் சிறப்பு
{{{தொலைத்தவற்றை மீட்டெடுப்பதாக எண்ணி, இருப்பதையும் தொலைத்துவிடுகிறோம்...பலநேரங்களில்/////
இதுவும் கடந்துபோகுமென்ற நம்பிக்கையும் மனதைவிட்டு கடந்து செல்லும் ஏதோ ஒரு நேரத்தில்...////
தன் உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பிறரின் அன்பை இழக்கச்செய்(கிறது)யும் ..}}} எனும் தத்துவ சொல்லாடல்களும்
அன்பின் அகராதியிலிருந்து ..முத்துதிர்க்கும்..நேச முத்தமிடல்களும்....அவரின் பக்குவமனதின் பாச ஈரம் சொல்கிறது

செடிகளுக்கும் மரங்களுக்கும்...செழுமைபிரியங்கள் உண்டு என்பதை....உரையாடல்களாய் ...உருக் கொணர்ந்து உற்றதோழியாய் .. எழில்வளைந்து ..உயிர்தந்த உரையாடல்...குழந்தையாய்..அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணிய மகவுவாய்....இடம் பாராது..இயல்பணைத்து ஈரமாக்கும் மழையாய்...தாய்மையெனவே நேசிக்க வைக்கும் மொழிகையாடல் 
ரோஜாவும், நானும்... ...உரையாடல் 



எல்லாம் சரி...எங்கேயடி தோழி..என்உயிரை காவுகொல்லும் கவிநேசம்  என்றே நானும் சுவாசம் தேட...வந்து விழிமோதி தெறிக்கிறது....
அவனதிகாரமாய் அம்மணி தளும்பி தவித்த மொழிதேன் துளி

உன் கண் சுகித்த பாதை சென்று உண்டு சுகித்து ....தித்திக்கிறது ..என் விழிப்பார்வையும்..உன்னவன்..உண்ணும்..உன் அவனதிகாரத்தில்
தூரிகைச்சிதறல் சென்று....துளிர்த்த இன்பம நுகர்ந்து நீவீரும் நிகழ்வு மணங்கள் தோழமைகளே

*******************************************************************************************

அடுத்து வரும் சன்னிதிப்  பூ

தன் பெயரையே பேராண்மையாய் எடுத்து வலைப்பூ மொழியும்..வண்ணப் பூ...ரிஷபன்


இரணடாவது ஜோதிட அறிகுறியாகும்..சுக்கிராதிபதி...ராசியை தன் நாமகரணமாய் கொண்டு
எழுத்துலக கோலோச்சும் கோள்
மலைகோட்டை கணபதி மடியமர்ந்த ஸ்ரீரங்க பிள்ளையாண்டான்
இயல்பென்பது மொழியெனினும் அதை இசையாண்டு சொல்ல சிலரால் மட்டும் முடியும்///இவரால் என்றும் முடியும்
தமிழ்மொஅழி தளவாட உணர்கள் அனைத்தையும் இவர் தன் வசப் படுத்தியிருந்தாலும்...
இவர்தம் அடையாள அகமுகமாய்...என்னில் எப்போதும் விழி ரசிப்பவை...
இவரோடு வேரோடி கன்னம் கொஞ்சும் இவர்தம் ஜ்வால்யா

எப்படி இப்படி பிள்ளை பிரியங்களை...பிள்ளையாகவும் தகப்பானாகவும் எழுதி...ப்ரியம் ரசிக்க வைக்கிராது என்றே ...
நினைத்து யோசித்து வியக்க வைக்கும் ...வித்தக மொழியாடல்



எல்லோரும் அம்மாவைக் கொண்டாடுகிறார்கள். அப்பாவின் பாசம் அழகான கவிதை. ///எத்தனை எளிமையாய் சொல்லிவிட்டார் தகப்பனெனும் கவிதையை
வாசித்தால் நிச்சயம் நின்று வசித்து வருவோம் ..ஜ்வால்யாவின் மழலை மனங்களில்
தந்தையில் தனிநிகர் சிகரம் இவர்மகள்

பால்ய ஊஞ்சல்கள்
அடுத்து அனுபவக்கதை சொல்லும்..அச்சலாத்தி பிரியங்கள்.....வாசித்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது



கணக்கை நிகர் செய்த கணக்காளின் வித்தியாசம்.....

வாழ்வெனும் அற்புதமாய் ..ரயிலாய்...தாயார் அத்யயன உத்சவமாய்...நம்மையும் உடன் அழைத்துசெல்கிறார் ..அவர்தம் அனுபவமாய்.....
அடுத்து கவிதை தென்றலொன்று மொழிப் புயலாய்.. சிறு கதைக்குள் மையம் கொண்டு மனதள்ளும் வித்தை.....ஸ்ரீரங்கத்தான் (சுஜாதா ) அதிகம் அணைத்திருப்பாரோ..இவரை தன் எழுத்தாய்.....முடிக்கப்படாத கடிதமும்...அந்தநாள் தேவதையும்..அள்ளுகிறது..அவ் வழி இயல்பு மொழியில்


வைதேஹி நினைவுறுத்துகிறாள்...எனக்கு ..பாலாவின் (பால குமாரன்) அகல்யாவை 
கற்கண்டு வைரமாய்..கல்கி இவரை கண்டெடுத்து மெருகேற்றி சிரசணிவித்துள்ளது ...சீர் மணிமகுடமாய் ..சிறுகதை அச்சிலேற்றி
இதுவரை ஒருமுகமாய்..கவிமுகமாய்...கண என் விழிகள்,...இன்று நீவீர் கையாளும் மொழித்திறமை கண்டு ..
பேரானந்த பிரமிப்பு கொள்கிறது...தோழா..பெருமிதம் கொள்கிறேன்..உம் மொழி  இங்கு பூத்தொடுக்க

 *********************************************************************************************

மூன்றாவது பூவாய்...இங்கு மணம் வீச மனம் கொள்வது......கனவுகளின் ஆதிக்க பிரியனாய் வலம் வரும்....
தேடல்களாய்  தித்திக்கும் தேன்  மொழிச்சாளரப் பூ......

தேடல் அறிவோர் தெளிவறியார் என்பர்..ஆனால் இவரோ..தெளிவாய் ....வேண்டியதை...தெளிய தெளிய ..தேடுவார்

பெயர் வேறு ....அழைப்பு வேறு..கனவுப் பிரியன் என்றே அனைவர் அறிந்தாலும்...இவருக்கு பயங்கரமாய்..இன்னொரு பெயர் இருக்கிறது...அது தான்======= ”””புல்லட் பாண்டி””
என் போன்றோர்  மொழியை கையில் எடுத்து உணர்வை ஆள..இவர் கொஞ்சம்  மாறுதலாய்....உணர்வை கையிக் எடுத்து மொழியை கைவளையென கொஞ்சுபவர்...
வாழும் மனிதர்களை..வார்த்தைகள் கூட்டி அழைத்து வந்து அமரவைத்து போவார்....கணினி பெண்ணை விட கள்ளிக்காட்டு கருவாச்சி யோசிப்பை அறியவே...ஆசைப்படும் அவர்தம் கரிசல் மனம்



பெண்களை பெண்பார்வையில் புரிந்துகொள்பவன் ...தனக்கு வளர்க்க ஒரு பெண்ணில்லையே என ஏங்கும் மூன்று சிங்கங்களின் முத்து தகப்பன்..முத்துகுளிக்கும் ஊர் தத்துகொடுத்த சொத்து ....இவர்தம் மனைவிப் பிரியங்களை ...வாசிக்க வாசிக்க நெகிழ்ந்து நெஞ்சு பிரியமாடும்..தோழனின் வாழ்வியலோடு வாழ்த்தி பயணித்து...கடவுள் அமைத்து வைத்த மேடை...சுந்தரி கண்ணால் ஒரு சேதியாய்...மனைவி அமைவதெல்லாமுமாய்
வாஞ்சி மணியாச்சி.....கப்பலோட்டியோனை கைதிட்டு கடும்துன்பம் படுத்தியது கண்டு.....வாஞ்சி எழுந்தான்  என்பதை வரலாறு படித்திருந்தாலும்...வாழ்வியலில் தொலைத்ததை... கடக்கும் போதெல்லாம் நினைக்கும் இவர்தம் மனமெனில்....வாஞ்சி .....உதிர சுவாசம் ..உம்மில் எப் பிறவி இணைசேர்ந்தது 

அணுஅணுவாய் ஒரு அனுக்கதிர் என்பதில் வாழ்வியலோடு..தொழிலியல் இணைத்து...இன்பதுன்ப உணர்வாய் பொங்கும்
நூலக திறப்பிடமாய் தன் வலைப்பூ வாசம் குமித்துள்ளார்.....
அயல்நாடு சென்றாலும் ..அருமையாய் வசவு  மொழி பேசுவதில்  ஒரு சுகமிருக்கிறது என்பதை இயல்பாய் அவர் இயற்கை பழிப்பை சாடுவதில் உணர முடிகிறது
Fluke Biomedical / USA பிராண்ட். அருமையான மெசின்.

Beta above 1 MeV, Gamma and x-rays above 25 keV புதிய தெரிதலும்..தெளிவும் உணர முடிகிரது..உம் வெப்ப வீச்சில் 
சொல்லும் சொல்லிலும் எழுதும் எழுத்திலும் ...இன்னும் இன்னும் என்றே தேடல் தீரா மொழிகள் ஆயிரமாயிரம் உண்டு
உம் அனுபவ பிரியமாடல்களில்...ஒருபானை சோற்றுக்கு..ஒன்றிரண்டு கருத்திட்டு மகிழ்கிறேன் நண்பரே
வந்தமர்ந்து வாசித்து..வலைப்பூ நேசிக்கும் வளர்தமிழ் சொந்தங்களே...இன்று இங்கு நின்று விடைபெற்று
நாளை நாம் இணைநடப்போம்..இன்னும் சில நந்தவனப் பூக்களுடன்....


24 comments:

  1. தேடல்!..

    எத்தனை எத்தனை விஷயங்களை முன் வைக்கின்றது..

    இன்றைய தொகுப்பும் அருமை!..

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பதிவுகளை வாசித்து கருத்திடுவதற்கு அன்பின் நன்றி!! வரும் நாட்களும் தொடர்வோம்.

      Delete
  2. அமிழ்தத்தை மட்டுமே கொண்ட மூன்று தமிழ் பூங்கடலுக்குள் மூழ்கி நல்முத்துகள் எடுத்து சரம் தொடுத்திருக்கிற டா. மேலும் ஒளிர்கிறது அவை உன் அமுதமொழியில்!! வாழ்த்துகள் நல் முத்துகளை தந்த மூவருக்கும் !!

    ReplyDelete
  3. தோழி சுந்தரி கதிர் வலைச்சரத்தில் தொடுத்த பூமாலையில் தூரிகைச்சிதறலையும் ஓர் மலராய் கோர்த்திருப்பது கண்டு மகிழ்ச்சி . :) தங்களின் அழகான சொல்லாடல் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. தொடரட்டும் தங்கள் எழுத்துமழை.
    தம்பி கனவுப்பிரியனின் எழுத்தின் வாசகி. இயல்பான எழுத்து நடை அனைவரையும் வசீகரிக்கச்செய்வதோடு புன்னகையை வரவழைத்து நம்மையும் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் எழுத்து. வாழ்த்துகள் தம்பி.

    சகோதரர் ரிஷபனின் வலைப்பூ எமக்குப் புதிது அவசியம் கண்டு அறிந்து கற்றுக்கொள்கிறேன். வாழ்த்துகள். :)

    ReplyDelete
    Replies
    1. மணக்கும் மலரெடுத்து தொடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே தோழி!!

      Delete
  4. அருமையான மொழி.. கையாளும் லாவகம்.. உங்களிடம் மொழி கொஞ்சும் அழகை முத்துப் பற்கள் சிரிக்கச் சிரிக்க ரசிக்க முடிகிறது.. கவிதை நேசம் உங்கள் பலம்..நட்பின் வாழ்த்து பூச்சொரியலாய்..

    ReplyDelete
    Replies
    1. ஜ்வால்யாவின் தந்தைக்கு என் அன்பின் நன்றி!! வாழ்த்துகள்

      Delete
  5. இதுவரை அறிமுகப்படுத்தப்படாத பல பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதற்கு நன்றி. எல்லோருடைய வலைத்தளங்களுக்கும் சென்று படிக்க இருக்கிறேன். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  6. ரிஷபனை அறிவேன். பிறரது தளங்களைக் கண்டேன். அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  7. சிறப்பான தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருகை தந்து பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி!!

      Delete
  8. இன்றும் அருமையான தொகுப்பு!

    அறிமுகப் பதிவர்களுக்கு நல்வாழ்த்து!

    .
    .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  9. காயத்ரி மந்திரமாய் தொடங்கி
    ரிஷபனை ஜ்வால்யமாக பிரகாசித்து
    கனவுப்பிரியனின் உலகத்தில் நுழைந்து
    தமிழ்தேனை அள்ளி அள்ளி வழங்கிட்ட
    சுந்தர சொற்றொடரில் சொக்கிப்போனோம்
    சூழ்நிலையாளும் மொழி வல்லமை வாழ்கவே
    வாழ்த்துக்கள் தோழமையே பணி சிறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

      Delete
  10. ரிஷபன் அவர்களின் தளம் அறிவேன். மற்றவர்கள் புதுசு. எல்லோருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

      Delete
  11. அறிமுகம்
    செய்தவருக்கும்...
    செய்யப்பட்டோருக்கும்
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

      Delete
  12. அனைவருக்கும் என் வாழ்த்துகள் டாக்டர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ! அன்பின் நன்றி ஆசானே !!

      Delete