நந்தவனப் பூக்களுடன் சுகந்தநடைபோட்ட நட்புகளுக்கு மன நன்றி கூறி....சீதனபூக்கள் சில எடுத்து.. ஆறாம்நாள் அரும்பெடுக்கிறேன்..ஆற்று நீரோடி
இன்று நம்மில் இதழ்மலர்ந்திருக்க வரும் வலைபூக்கள்..
திரு மண பெண்மைப் பூக்கள்... சுதந்திர இணையத்தில் சுடர்
தமிழ் வாகைசூடி வானுயரம் கண்ட தேன்சிட்டு பூக்கள்
மாதவம் செய்து மாதராய் பிறந்து .. செல்ல மொழி கொஞ்சும் தமிழன்னைமடி.. செழுமையாய் தவழும் செம்மொழி சீதன பூக்களின் பூவிதழ் விரிக்கும் முன்
பல நல பல்மொழிகளில்..... நாம் இன்று அறிந்துகொள்ளப் போகும் மேலாண்மைத்துறை
பற்சொத்தைகளால் பற்களில் வலி வரும் போது அதை சரிசெய்து ..
பற்களை பாதுக்காக்கும் துறை வேர்சிகிச்சை முறையிலும் பற்சொத்தைகள் சரி செய்யப்படும் விளையாட்டிலோ... விபத்திலோ பற்களின் சிறுபகுதி உடைந்து விழும் போதும் வயதின் காரணமாக பற்களின் மேற்பகுதி எனாமல் தேய்மானமாகி ..பற்கூச்சம் ஏற்படும் போது..இத்துறை வல்லுனர்களால் அவை சரி செய்யப்படும் இயற்கை பற்களின் இதயத்துடிப்பான .. இத்துறை அறிந்து ....இளமை சிரிப்பை காத்திடுவோம் வளமைகளே
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
முதலாய் நம்மை சுகந்தமிழுக்க வரும் சூட்சம சீதனப் பூ ... சுடரென்று தமிழ்த் தீ தித்திக்கும் அகல்முக அகப்பூ {படம் 3} இருளிலும் எம் தமிழ் பிரகாசிக்க ....பெண்மை அவதாரமெடுத்த புதுமை பார தீ... சக்தியும் ஜோதியுமாய் தன்னை..புடம் போட்டு...10 புத்தங்களுக்கு மேல் வெளிவந்தபோதும்
தான் என்ற கர்வத்திமிர் கொள்ளாத தமிழன்னை மதிநிறை திருமதி சக்திஜோதியின் சீதன வலைப்பூ
கொடிபிச்சிப் பூவாய் ...வனக்காடுகளில் வலம்வந்த கதிரைப் பூவை .. ஆதிகாடு ஆதிமொழி என்றே இமையணைப்பது இவரின் தனிப் பெரும் பேராண்மை
நீயும் நானும் நாமாகி.... தள்ளி நின்று நம்மை நாமே ரசித்தல் எப்படியென்பதை இலக்கிய மொழியாய் புகுத்தி வெற்றி காண்பவர்...... அன்பிலான ஒரு சொல் ......
மொழிகளுக்குள் சிக்காத நேசத்தை.. எப்படி எளிமையாய்..இமையணைத்து இதழ் பரப்புகிறது..இக் குழைவுச் சொல்...வரை ஓவியத்தில் ஓர் வம்சவாழ்வு சொல்லி சுடரேற்றி விடுவார் ..ஜோ பெண்மை விழிப்புணர்வுகளின் பெரும்சக்தி இவர்....ஒருசமுதாய மாற்றத்தை சுவசமாய் சுவாசித்து...களைகளை களையெடுக்க வாள் எடுடுக்கும் தைரியப் பூ ஊடகங்களில் திருநங்கைகள் ....
உத்திரவாதமாய் விமர்ச்சனம் வரும் அனல் தலைப்புகளை,... தனிமேடை அமர்ந்து சொல் எடுத்து விளாசும் துணிச்சல்..இத் தீக்கு தவிர எத் தீ க்கு வரும்
சென்று வாசியுங்கள்....செந்தீ ஏந்துவீர்கள் நீவீரும் இவருகென்று எப்படி கிடைக்கிறது..இப்படிப்பட்ட வளமை தலைப்புகள்
புத்தகத்திற்கும்..கவிதைக்கும் புருவம் உயர்த்தி வியக்கவைக்கும் அற்புதமாய் மீன் நிறத்திலொரு முத்தம்..நிலம் புகுந்த சொற்கள்..கடலோடு இசைத்தல்......காற்றில் மிதக்கும் நீலமென சொல் எனும் தானிய விதையாய் கட்டுக்கடங்காமல்.. எழுதிக்குவித்து..கருத்தரங்கம் பல கண்டு ...கலைமகள் அரிதாரமாய் வலம் வரும் இவரின் இன்னொருமுகம் இயற்கை வளம் காக்கும் பசும் முகம்...சத்தமில்லாமல்..பசுமைப் புரட்சி செய்யும் பாச முகம் இதுவரை கிட்டத்தட்ட 50000 க்கு மேல் மரக்கன்றுகள் வளம் செய்து ..மண்காத்து மழைதர பூமி வந்த தீ மேகம் நின்று வாழும் வரம் பெற்ற நிரந்தபுகழ் தேவதை பக்கம் சென்று நாமும் கற்போமே.....கொஞ்சம் தீந்தமிழ்
*******************************************************************************
அடுத்து வரும் அழகு சீதனப் பூ....... இணையவானொலியின் ஆர் ஜேவாய்,....அழகைமெருகில்... ஆதர்சகுரலில் ஆளுமை மொழியில்..தமிழ் தடாகம் பூத்து அரபுநாட்டில் மணக்கும் தேன்சிட்டு பூ
திருமதி சுமிதா ரமேஷின் ..
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஆழவார்கள் கூட்டி....திருமாலை அறிவோமா ..என்றெடுக்கும் இவர் மொழி
அழைத்து வந்து அமரவைக்கிறது..அந்த பரந்தாமனை..பாற்கடலில் இருந்து எழுப்பி.. இவரின் இறைமொழிக்குள் ராதைமணாளனின் திருவடிகளே சரணம்
இறைமொழி ஆதி அந்தமிட..விமர்ச்சன மொழிகளாய்..இவர் நம் முன் வைக்கும்.... தான் மயங்கிய மரப்பசுவும் தி ஜ வாஇ தன் மொழி ரசனையாய் ..இவர் நம் முன் சமைக்கும் விதம் அருமை
கதைகதையாம் காரணமாம் என்றே...கடவுச்சொல்லெடுத்து
காலச்சக்கர மொழிப் பார்வையில்..நிறுத்துகிறார்...நரசிம்மரை நம்முன
காலச்சக்கர மொழிப் பார்வையில்..நிறுத்துகிறார்...நரசிம்மரை நம்முன
*********************************************************************************
இனிய கவிதை தீர்த்தமாய் அடுத்து நம் முன் மணம் பரப்ப வரும் சீதனப் பூ...
தேடல்களும் படைப்புகளுமாய்......தேன் சிறகு விரித்து வானுயர் வாகை செய்த
தேடல்களும் படைப்புகளுமாய்......தேன் சிறகு விரித்து வானுயர் வாகை செய்த
திருமதி கீதா ரவி அவர்களின் வசந்த வலைப்பூ
காதலை..களவை...கோபத்தை..சிரிப்பை....கொள்லும் மொழியாய்..கொள்கல பிரியமாய்..கவிமணம் ஏந்தி
நித்தம் ஈர மணம் பரப்பி..எம் தமிழன்னையை ..அயல் பூமி சென்று தரணி விதைக்கும் பூ
விடாமல் துரத்தும் கோளை...விட்டுவிடு என்று கையெடுத்து வணங்கி ...எள்கற்பூரதீபமேற்றி
வருத்த மொழியில்..இயல்பணைத்து...வளமையாய் நிதர்சனம் பேசுகிறார் .....சலம்பல் பண்ணும் சனிபகவனிடம்
எழூத்தணைக்கும் எல்லோரின் கனவிலும் கண்டு உண்டு ரசிப்பான்....எம் மீசைத் திமிரோன் இவரிலும் கருக்கொள்கிறான்.... ‘’பாரதி பிறந்தால்’’
விரல் பிடித்து அழைத்துச்செல்லும் வேரோர் வெற்றி உலகு... முண்டாசுக்கவியின் முன்வீரமாய் மூப்பு சொல்லும் வழிநடை
விண் சென்ற எந்தைக்கு...என’ விழிநீரால் ஓர் கடிதம் ’’இவரெழுத மொழிவழித் துக்கம் மனம் நிறைந்து வழிகிறது கன்னகதுப்பெங்கும் உப்புச் சூடாய்.....
இனிமையணைக்கும் மொழியாடல்களை...சென்று கண்டு ருசித்து வளமையாடுகள் தமிழ் மண வண்ணமலர்களே
****************************************************************************************************************************************
இன்றின் இறுதியாய்..நம்மை நிலவணைக்க வரும் நிலா...குழந்தை நிலா ஹேமா பெளர்ணமித்தோழியின் பார்வெல்லும் சீதன வலைப்பூ
****************************************************************************************************************************************
இன்றின் இறுதியாய்..நம்மை நிலவணைக்க வரும் நிலா...குழந்தை நிலா ஹேமா பெளர்ணமித்தோழியின் பார்வெல்லும் சீதன வலைப்பூ
வானம் வெளித்த பின்னும் ..என வெட்டவெளி தலைப்பிட்டு ....வாழ்வியல் சீர்பிறழ்வுகளை சிந்தைதட்டி மொழியாண்டு உயர்சிகரமேறும்
தமிழ் விந்தை கற்ற வியந்தை இவர்
மொழி சுழல் கொண்டு மையமாடும் இவரின் ஈழத்து தமிழில் அடங்காதவர்கள் மாதமிது என்று .....முள்ளிவாய்கால் கொடூர சிதறலை...கொடும் மொழியெடுத்து இவர் செப்ப
தமிழ் விந்தை கற்ற வியந்தை இவர்
மொழி சுழல் கொண்டு மையமாடும் இவரின் ஈழத்து தமிழில் அடங்காதவர்கள் மாதமிது என்று .....முள்ளிவாய்கால் கொடூர சிதறலை...கொடும் மொழியெடுத்து இவர் செப்ப
பிசைந்தமனம் வழியே வழியும் ஈரமெங்கும்..கரு கலைந்த வலியோடு கூடிய உதிரப் பிசுபிசுப்பு மண்ணிறங்கி மீண்டும் பிரபஞ்சம் ஏந்த ஈர முத்தமேந்தி வரும் தேவதூதனாய்...காற்றாகி அவன் என்னவொரு காத்திருப்பின் தவிப்பாடல்,..வனமும் வண்டும்..வானும் வெளியும் மயங்கிச் சொக்கி நிற்கிறதடி..தோழி நின் மொழிதேவன் புவியிறங்க
கனா உலாவரும் கருக்களை...சொல் உருக்கள் கொண்டு பிரியமாடி...பயந்து..குட்டி புன்னகையில் புதைத்து பிள்ளைஉறக்கம் தேடும் ..பிரிய சொல்லாடல் இனிய தாலாட்டு
வலைப்பூ பக்கம் சென்று வாசித்து மொழிசுழல்சிக்கி மோட்சம் காணுங்கள்
கவின் மனங்களே சீதனப்பூவாய் நான் இன்று தொடுத்து வலைக் கூந்தல் சூடிய.... தேன்சிட்டுப் பூக்கள் கண்டு ..உவகைப்பிரியமெடுத்து உயிராடும் பிரியங்களே.. சந்திப்போம் .நாளோடு என் வலைநாள் மங்களமாகும் தமிழ் மண நாளில் ..
*********************************************************************************
எல்லோரும் தெரிந்த பதிவர்களையே அறிமுகம் செய்யும்போது இதுவரை அறியாத பல புதிய பதிவர்களை தாங்கள் அறிமுகம் செய்வதற்கு நன்றி! அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!! தொடர்ந்து வருகை தந்து அனைவரையும் வாழ்த்தியமைக்கு அன்பின் நன்றி!!
Deleteவணக்கம் ஐயா! இனையம் + வலைப்பூ+வலைச்சரம் அனைத்திற்கும் நான் புதியவன்!! படிப்பதுதான் என் பொழுதுபோக்கு என்பாதால் சில மாதங்களாக இனையத்தில் வலைப்பூக்களை தேடி பிடித்து படித்து வருகிறேன் வலைப்பூ என்கிற உலகம் ஒன்று இருப்பது இத்தனை நாள் எனக்கு தெரியாது என்பதை சொல்வதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது! இனி தொடர்ந்து வருவேன்!! அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!!!
ReplyDeleteநன்றி!!
மிக்க மகிழ்ச்சி!!
Deleteஇன்று வழங்கிய சீதனப் பூக்கள்
ReplyDeleteநின்று பேசிடும் தங்கள் பெயரை!..
வாழ்க நலம்!..
தொடர் வருகைக்கு அன்பின் நன்றி!!
Deleteஅருமையான ஆற்றுப்படுத்தல்!
ReplyDeleteஆற்றுப்படுத்தப்பட்ட சீதனப் பூக்கள் மூன்றுமே சிறப்பானப் பூக்கள்.
இப்பூக்களின் ஒவ்வொரு இதழும், அறம், பொருள், இன்பம் ஆகியனவற்றுள் ஏதேனும் ஒன்றைச சார்ந்த பயனுள்ள செய்தியேந்தியே உள்ளது என்பது உண்மை!
பெருமைக்குரிய அறிமுகம்.
மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள்!
தொடர் வருகைக்கு அன்பின் நன்றி!!
Deleteநல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு அன்பின் நன்றி!!
Deleteஅறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!!
Deleteநன்றி , சுந்தரி , அறிமுக வலைப்பதிவராக ஆரம்பித்துள்ளேன் என் எழுத்துக்களை ! என் எழுத்துக்களுக்கும் அங்கீகாரம் தந்து சிறப்பித்தும் , வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.
ReplyDeleteமகிழ்ச்சி சுமி!! தொடரட்டும் இந்த வலைப்பூ பயணம்.
Deleteவணக்கம்,
ReplyDeleteதங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
மிக்க மகிழ்ச்சி!!
Deleteஇதுவரை பார்த்த பதிவுகளில் தங்கள் மூலமாக அறிமுகமானவர்கள் அதிகம் என நினைக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா!! தொடர்ந்து வருகை தந்து புதுப்புது பூக்களின் அறிமுகங்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தியமைக்கு அன்பின் நன்றி!! நிறைவுநாளாய் மற்றும் சில பூக்களுடன் நாளை...
Deleteஅருமையான தொகுப்பு டா. இன்றைய அறிமுகப்பூக்களுக்கு என் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி டி
Deleteஅனைவருக்கும் என் வாழ்த்துகள் டாக்டர்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ! அன்பின் நன்றி ஆசானே !!
ReplyDeleteநிறைய பேர் எனக்கு புதியவர்கள்! நேரம் கிடைக்கையில் சென்று படிக்கிறேன்! அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி சார்!!
Deleteஅனைவரும் எனக்கு புதியவர்களே!
ReplyDeleteபிறகு சென்று பார்க்கிறேன், இறை நாட்டம்!!
மிக்க மகிழ்ச்சி!!
Deleteஹேமாவின் தளம் மட்டும் அறிவே. மற்றைய தளங்கள் புதிது பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!
Deleteதந்தையின் இழப்பினால் ஹேமா இணையத்தில் இன்னும் இணையவில்லை அவர்சார்பில் வானம் வெளித்த பின்னும்தள அறிமுகத்துக்கு நன்றிகள்.
ReplyDeleteமகிழ்ச்சி!!
Deleteஹேமா எனக்கு முகநூல் தோழி.
Deleteஎனது வலைத்தளத்தையும் இனிய சொல்முத்துக்கள் கோர்த்து வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிமா...முன்பும் அருமையான வாய்ப்பை ஆசிரியர் கிரேஸ் அவர்கள் வலைச்சரம் மூலம் கொடுத்தார்கள்...வலைச்சரத்துக்கும் உங்களுக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றியுடன் சக அறிமுகப் பதிவாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! <3
ReplyDeleteபுதிய பல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ! அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்! நேரம் கிடைக்கும் போது அவர்கள் தளத்துக்கு சென்று படிக்கிறேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete