Sunday, August 23, 2015

சுபமங்கள இறுதிநாளில்

சுகந்தம் பொங்கி சுவாசமலரெடுத்து வண்ணப்பூமாலை செய்து தோரணம் கட்டிய வலைச்சர நாளின், சுபமங்கள இறுதிநாளில்வந்திருந்து வாசித்து மணம் பெற்ற மாதவ வலைப்பூக்களுக்கு நன்றி கூறி....

மகிழ்மாலை சரமாகிய மதுமலர்கள் அறிமுகத்தில் இன்றும் சில ஆதர்ச பூக்கள்
எடுத்த பூக்களை தொடுக்கும் முன் ... இன்று நம்மின்

பல நல பல்மொழிகளில் நாம் அறிந்துகொள்ளப்போகும் மேலாண்மைத்துறை

பற்கள் சொத்தையால் வலி ஏற்பட்டு அதனை காப்பாற்ற முடியாமல் போகும் போது
பல்லை எடுத்து மேலும் தொந்தரவு ஆகாமல்..பக்கத்தில் இருக்கும் பற்களையும் கிருமி பாதிப்பு தொற்றாமல் பாதுகாக்கும் துறை

பற்கள் நேராக வராமல் தன் அமைப்பு மாறி முளைக்கும்போது பல் அடியில் சீழ்கட்டி இருந்து பாதிக்கும் போது தாடை எலும்புகள் அடிபடும் போது.. மெல்லுவதில் பிரச்சனை ஏற்படும் போது...
முக அழகை சீர்படுத்தும் அறுவைசிகிச்சை முறையும்....

மவுத் கேன்சர் எனப்படும் வாய்புற்று நோய் ஏற்படும்  போது..
அதன் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு
அதனை அறுவை சிகிச்சை முறையில் இத்துறை வல்லுனர்கள் சரி செய்வார்கள்
அழகு ஆரோக்கியமாய் இயற்கை தந்த பற்களை பேணி பாதுக்காத்து.. அழகிய முக அமைப்பையும் ஆனந்த சிரிப்பையும்
அற்புத சொல்லையும் ஆயுள் உடல்நலத்தையும் அன்புடன் காப்போம் தோழமைகளே

வரும் முன் காக்க சில குறிப்புகள்
1. இரண்டு மாத்திற்கு ஒருமுறை TOOTH BRUSH மாற்றவும்
2.ஆறுமாதத்திற்கு ஒரு முறை அருகில் இருக்கும் பல்மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்யவும்
3 சரியான முறையில் பற்களை துலக்கவும்
4.அதிகாலை ..இரவு இருமுறையும் கட்டாயம் பல் துலக்கவும்
5.இனிப்பு உணவுகள் உண்டவுடன் நன்கு வாய் கொப்பளித்து உணவுத் துகள் பற்களில் சேகரமாகாமல் செய்யவும்
6. பற்கள்தொந்தரவு அறிகுறிகள் அறிந்தவுடனே காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகவும்

நலம் தரும் பற்களை நன்முறையில் காத்து ஆயுள்பலம் கூட்டுவோம் அருமைகளே

இன்றின் நம்மின் ஆதர்ச பூக்களில் முதலில்
அயல்நாட்டில் பணிபுரிந்து.... அன்னைதமிழ் வாசம் பரப்பும் ஆடலரசின் எண்ணங்களாய் வலம் வரும்
தில்லயம்பலத்தான் பெயர்தாங்கிய நண்பரின் நல்மொழி வலைப்பூ


தாமிரபரணி ஆற்றங்கரை பிறந்த இவரின் தமிழில் என்றும் மணக்கும் பசுமையாய் விளைந்த கதிர்மணிகள்

உழவர் திருநாளில் உழவனுக்கு ஒர் வணக்கமாய்... சோறுடை தமிழ்நாட்டை... சொல்லி மேன்மையும் மொழிகளாய்...உயிர்மெய்தழுவி உயர்வாடும் இவர் தம் சொல்வளமை சொக்கவைக்கும் உயிராடல்
முப்பெரும் தேவிகளை முதன்மைஅழைத்து அமரவைத்து...அவர் தம் கொலுவேறிய அழகை .நவராத்திரி பெருமை சொல்லும் கவியாய்...நல்சிரிப்பு ரசனையாய்....கடல்கடந்து சென்றினும் நம் கலாச்சார பெருமை மறவாத ஈர விழிப்பாய் சொல்லாடும் இவர்தம் கொலு அழைப்பு

சதங்கை கட்டும் வண்ணப்பூ சென்று ..சற்று ஆடல் ரசித்து வாசித்து தமிழ் மணங்கள் பிரியங்களே.
**************************************************************************************************************
கலையழகு மொழி கொஞ்சி அடுத்து வரும் கவின் பூ ..பூபாள ராகமிசைக்கும் திரு பூபாலனின்..எனது கவிதைகள்


பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பெருமை மிகு அடையாளமாய் வலம் வந்து நித்தம் கவிமொழியாய் எளிமைத் தமிழை எழுத்தாய் சுவாசிக்கும் அருமை நணபரின் படைப்புகள் பல பத்திரிக்கைகளில் வெளிவந்து வாகை சூடிய போதும்
கைகட்டிய அடக்கமாய் என் புகழ் அனைத்தும் என்னுயிர் தமிழுக்கே என்றே சிந்தை துளிர்ப்பார்

செல்போன் படுத்தும் பாடு எனும் கட்டுரை சொல்லும் ..வாழ்வியல் நிதர்சனைகளை.. விகடன் அங்கீகார அக்கவிதை சொல்லும் வாழ்வோட்ட வரைமுறைகளை


விஷமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை ..என்று உணவுப்பெருட்களில் கலந்து கொண்டிருக்கும் நச்சுப் பொருட்களை அலசி ஆராய்ந்து விழிப்புணர்வு சொல்லும் பதிவு ..சமூகத்தின் மீதான அக்கறைகோபத்தை அறிவுத்தும்

கொலுசுஎனும் இணைய இதழ் ..நிலாமுற்ற கலந்துரையாடல்.....ஞாயிறு வரத் தப்பினாலும்.. ஞாயிரு எங்கும் மலரும் இவர்கள் இலக்கிய ஒளிவிழா ..என தமிழ்தொண்டாற்றும் வலைப்பூ பக்கம் சென்று வாசித்து வளமையாடுங்கள்

***********************************************************************************************************************
மதுரை மல்லியாய்..தன் தளம் மணக்கும் நண்பர் பழனிகுமார் பக்கங்கள்

ஏதோ எழுதி எங்கோ சேமித்த என்னை ..வலைப் பூ ஒன்று ஆரம்பியுங்கள்..உங்கள் வளமைத்தமிழ் சேமியுங்கள் என்றே நலப் பிரியமாட அழைத்த இங்கு காலூன்ற வைத்த ஆரம்பத் தமிழன்

தாய்மொழித் செழுமையை எளிமை செயலாடல்களாய் ..குறுஞ்செய்திகளில் கூட்டெழுத்து விகுதிகளாய் பெரும் உணர்வுகள் சொல்லும் இவரின் கவி மொழிகள்


ஈரமாடும் மொழி இவர் சிறப்பு

அநேகமாய் இவர் நேசிக்கும் மொழி சொல்லும் இவரின் அன்புத் தளவாட எளிமைகளை
*************************************************************************************************************************
ஆதர்ச பூக்கள் பக்கம் சென்று அன்பணைத்த தோழமைகளே

இது வரை இன்சிறப்பு வாரமாய் இங்கு எனக்கு சிம்மாசனமிட்டு வாழ்த்திய வலைச்சரத்தில் ..
நித்தம் நான் தொடுக்கும் பூக்கள் பக்கம் சென்று மணம் பெற்று ..மனம் போற்றிய தோழமைகள்

டாக்டர் ஜம்புலிங்கம்
திரு நடனசபாபதி
திரு பரிவை குமார்
திரு தளிர் சுரேஷ்
திரு துரை செல்வராஜூ


மற்றும் ஆசிரிய பொறுப்பேற்க அழைத்து அணி செய்த வலச்சர ஆகம பிதாக்களுக்கு அன்பு கூறி விடைபெறுகிறேன்....

அலுவல் நேரமாய் ஓடிக்கொண்டிருக்கும் எனக்கு ..கிடைக்கும் அரைநிமிடமும் இளப்பாற இன் மடி தரும் தாய் மொழியில்..அடுத்தவர் பக்கம் சென்று வாசிக்க நேரமில்லமல்..
அடுத்தடுத்து மொழி துள்ளி எழுத்தணைக்கும் ...என்னின்

தமிழ் பொக்கிஷங்களை....தேடி வளமையாய் சேகரித்து..இப் பொறுப்பு நான் அமர..வலக்கையாய் வந்தமர்ந்து உடன் பின் நின்று உவகை சாமரம் வீசி என் வனப்பு காத்த உயிர் தோழி மீராவுக்கு நன்றி மொழிகளை நல்முத்து முத்தங்களாய் இட்டு....

கவி விடைபெறுகிறேன்....களம் பல கண்டு கவின் தோழமை தேன்கூடாய் வலைச்சரம் ஆயுள் அமுதம் பருகி ...புதுவித தேடல் பல நான் பெற்ற பேருனபவத்துடன்.......நன்றி நன்றி நன்றி ..நட்பூ மலர்களே




28 comments:

  1. ஐயா! உங்களின் எழுத்து நடை வசிகரிக்கிறது


    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும். தொடர்ந்து வாசித்து கருத்திட்டமைக்கு நெஞ்சம் நிறை ன்றி!!

      Delete
  2. இன்னும் கொஞ்சம் எழுதக்கூடாதா!?...

    மழைத் தூறலில் நனைந்தபடி இலக்கின்றிச் செல்கையில் விளைந்த மகிழ்வு!..

    பற்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் -
    பதிவுகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் - ஆகிய தமிழ்ப் பூவனம்!..

    எமக்கும் அன்பினொடு அன்பு கூர்ந்த அன்பினுக்கு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும். தொடர்ந்து வாசித்து கருத்திட்டமைக்கு நெஞ்சம் நிறை ன்றி!!

      Delete
  3. ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. புதிய அறிமுகங்கள். நல்ல செய்திகள், அதுவும் பற்களைப் பற்றி சற்றே கூடுதலாக. சிறப்பாக ஆசிரியப்பணியை நிறைவேற்றியமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும். தொடர்ந்து வாசித்து கருத்திட்டமைக்கு நெஞ்சம் நிறை ன்றி!!

      Delete
  4. வலைச்சரத்தின் இவ்வார ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பாக செய்து முடித்தமைக்கு பாராட்டுக்கள்! பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கும் பல் மருத்துவத்தில் உள்ள பல்வேறு துறைகளை தெரியப்படுத்தி, ஒரு மருத்துவராய் பல்லை பாதுகாப்பது குறித்து தந்த அறிவுரைக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும். தொடர்ந்து வாசித்து கருத்திட்டமைக்கு நெஞ்சம் நிறை ன்றி!!

      Delete
  5. வலைப்பூக்களில் நாளும் சரம் தொடுத்து
    வாசனைப்பூக்களாய் மாற்றியமைத்து
    நித்தம் தேன் தமிழில் கவின் வரிகளில்
    நேர்த்தியாக அழகு மொழியமைத்திட்ட
    சுந்தர கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்
    ஆசிரியப் பணியை அலங்கரித்த விதம் அருமையே

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும். தொடர்ந்து வாசித்து கருத்திட்டமைக்கு நெஞ்சம் நிறை ன்றி!!

      Delete
  6. அனைவருக்கும் வாழ்த்துகள் டாக்டர்

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும் ஆசானே

      Delete
  7. முதலில் நன்றி...
    அதன்பின் நன்றி

    மல்லி மணம்பிறக்கும் மதுரைபிறந்து
    கதிர் மணக்கபேருந்தில் கோவைபறந்து

    கதிரவன் ஒளியால் மலருமே புவிமலர்கள்
    கதிர் அவன்(ர்) நிழாலால் வருமே கவிமலர்கள்

    தமிழில் சொல்சுவை விருந்தாய் கவிரசிக்க தந்து
    ஞாயிறில் பல்சுவை விருந்தாய் புவிபுசிக்க தந்து

    பல் மருத்துவ தொழிலாய்
    சொல் மகத்துவ தோழியாய்

    வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேட்க போட்டாபோட்டி
    சிஸ்டர் கவிக்கையால் கவியென உலகுக்கு சுட்டிக்காட்டி

    என்னையும்
    கவியாய் புவிக்குணர்த்திய
    பொன்னான கவியே
    உங்கள் மோதிரக்கை
    குட்டிய தலைதடவி
    உங்களின் ஆசியுடன்
    உத்வேகமாக இன்னும்
    தருவேன் என்தமிழால்
    வண்ணத்தமிழுக்கு என்
    எண்ணத்தமிழ்....

    முடிவாய் மீண்டும் நன்றி....

    இவண்
    -ஆடலரசன்@Natarajan


    பின்குறிப்பு:
    வலைப்பூ (blogspot) காணத என் எண்ணங்களை விரைவில் எல்லார் பார்வைக்கும் வைக்கிறேன். மீண்டும் வாருங்கள் என் பக்கம் http://aadalarusu.blogspot.ae

    My Facebook page : @[424394750965316:]

    ReplyDelete
  8. தொடர்ந்து ஒரு வாரம் வலைச்சரத்தில் ஆசிரிய பொறுப்பேற்று உனக்கே உரிய பாணியில் அழகாய் புதிய வலைப்பூக்களை அறிமுகம் செய்து உன் பணியாய் பல் மருத்துவ சொல் மொழிந்து... நிறைவாய் என்னையும் இங்கே ஆணி செய்திருக்கிறாய் டா. அன்பும் மகிழ்ச்சி டா.

    ReplyDelete
  9. நிறைவாக ஆசிரியர் பணியை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி!!

      Delete
  10. அழகான தமிழ் முத்துக்களால் அறிமுகம் தந்த அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் மா! அழகிய ஆசிரியப்பணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மா!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும் மேடம்

      Delete
  11. கவிச்சரமாய் ஒருவார காலம் வலைச்சரத்தை தொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்! இன்றும் சில புதிய தளங்கள்! சென்று பார்க்கிறேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருகை தந்து வாசித்து கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி! வாழ்த்தியமைக்கு அன்பும் மகிழ்ச்சியும்.

      Delete
  12. அருமை சகோதரி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நன்றி சகோ!!

      Delete
  13. ஒரு வாரம் முழுவதும் பல் மருத்துவம் பற்றிய குறிப்புகள்!

    பல அருமையான தள அறிமுகங்கள்!

    சிறப்புற செய்திட்ட (ஆசிரியப்) பணிக்காக,
    பாராட்டுகள் தங்களுக்கு!

    ReplyDelete
  14. அழகாய் வலைச்சரம் தொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete