காலை வணக்கம் நண்பர்களே...
நாளை கோபுரங்கள்.. சுற்றுக் கோவில்கள் கும்பாபிஷேகம் ஸ்ரீரங்கத்தில்..
அந்நாட்களில் சோலைகள் நிறைந்த ஊர்.. நடுவே கோவில்.. சுற்றிலும் மதில்கள்..
மதிள் சூழ் தென்னரங்கம் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவரங்கத்தின் மதில்களுக்குள் கடைசி வீதி அடையவளைந்தான்..
இங்குதான் வெளிஆண்டாள் சந்நிதி என்றழைக்கப்படும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் சந்நிதி உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வந்த ஆண்டாள் வந்திறங்கிய இடம்.
அடுத்த முறை வாய்ப்பு கிட்டும்போது வந்து பாருங்கள்.. அர்ச்சகரும் சொல்வார்.. ஆண்டாளின் திருமுகம் நம்மை நேரடியாய்ப் பார்க்காமல் ஒரு புறம் சற்றே திரும்பி உள் வீதியில் மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனைப் பார்க்கும் கோணத்தில் அமைந்திருக்கும். ஆச்சர்யம் இல்லையா.. ! இதோ வெண்ணைத்தாழி அலங்காரத்தில் ஆண்டாள்..
சப்தப்ராகாரத்தில் அடையவளைந்தான் சேர்த்தி இல்லை. ஆனால் ஆண்டாள் சந்நிதி அமைந்து வீதியை பெருமைக்குரியதாக்கி விட்டது.
இனி இன்றைய நமது நண்பர்கள்...
மஹா சுமன் எண்ணங்கள் பல வண்ணங்கள் என்கிற தலைப்பில் தமது எண்ணங்களைப் பகிர்ந்து வுருகிறார். இவரை எனக்கு முகநூல் மூலம் தான் முதலில் அறிமுகம். எழுத்தில் இவர் சளைப்பதில்லை.. அதேபோல நட்பைப் பேணுவதிலும். இவர் ரசித்த படைப்பாளிகளைப் பற்றி இவர் பகிர்ந்த பேரன்பிற்கு வார்த்தைகள் இல்லை பாராட்ட. தானும் எழுதி பிறரையும் ஊக்குவிக்கும் இவர் முதல் தர ரசிகர்.
மௌனக்கலை பயில்வதில்தான் எத்தனை நன்மைகள்..
மூங்கில் காற்று திரு டி.என் முரளிதரனின் வலைத்தளம்.
வலைப்பூவில் எழுதுபவன் நோக்கம் படைப்புத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமன்று. யாரும் படிக்க வேண்டியதில்லை எனது ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறேன்.பார்வையாளர்களைப் பற்றிக் கவலை என்று ஒரு சிலர் சொன்னாலும் நமது படைப்புகளை பிறர் படிப்பதாலும் அங்கீகரிப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதே உண்மை .விவேக் ஒரு திரைப்படத்துள் சொல்வது போல யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்.
நமது பதிவுகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவது அதற்கான முயற்சிகள் எடுப்பதும் தவறில்லை.
நெத்தியடியாய் சொல்லி நிறைய டிப்ஸ்களை வழங்கியிருக்கும் இவர் பல சுவாரசியமான பதிவுகளுக்கு சொந்தக்காரர். சலிக்காமல் எழுதி வரும் இவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இவரது வலைத்தளத்தில் போய் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து படிக்க அழைக்கிறேன்.. இன்ன விதமாகத்தான் எழுதுவது என்று வட்டம் போட்டுக் கொள்ளாமல் வானமே எல்லை என்று எழுதும் இவரது ஏதேனும் ஓரிரு பதிவுகளை மட்டும் குறிப்பிடுவது சரியில்லை என்று உணர்வதால் இப்படி அழைக்கிறேன்.
விமலன் வெகு இயல்பான எழுத்து நடை. வாசகனை அன்னியப்படுத்தாமல் கைப் பிடித்து அழைத்துப் போகும் இவர் வாசிப்பது கதையா.. அல்லது நாம் அன்றாடம் பார்க்கும் நிஜமா என்று யோசிக்க வைத்து விடுவார். சிட்டுக் குருவி இவரது வலைத்தளம். 6 தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர்.
ஒரு சொல் ஒரு ஓசை என்ன ஒரு இயல்பாய் மனதை ஈர்க்கிறது.. ஒங்கள நான் மாப்ளைன்னு கூப்பிடட்டுமா.. மனசு கனத்துப் போகும் தருணம் அது.
விடுவிக்க முடியா
தீரா வனம்
விரிந்து கொண்டேயிருக்கிறது
புல்லாங்குழலுள்.

இந்திராவின் கிறுக்கல்கள் நான் மிகவும் ரசிக்கிற எழுத்துக்காரர்.
தூரங்கள் என்னும் தொலைவுகள் என்கிற பதிவில் அவர் சொல்லிப் போயிருப்பது அப்படியே எனக்கான.. ஏன் நம்மில் பலருக்கான மனநிலையும் தானே.
எதையுமே யோசிக்காமல், அந்நேர மனமாறுதலுக்காக மட்டுமேயென சிம்மக்கல் தொடங்கி மாட்டுத்தாவணி வரை நடந்தே சென்ற நாட்கள் இருக்கின்றன. ஆனால் வழி நெடுக எதை ரசித்தேன் என்று யோசித்தால் விடை பூஜ்ஜியம் தான். திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சியில் மேகங்களை வேடிக்கை பார்க்கவென நான் தேர்ந்தெடுத்த பாறையும், திருச்சி வழியிலிருக்கும் சிவன்கோவில் மண்டபத் தூணில் கன்னம் வைத்து உணர்ந்த அந்த ஜில் தன்மையும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயுளுக்கும் நினைத்துச் சிலிர்க்கும் அம்மாதிரியான தருணங்களை, மீண்டும் சந்திப்பதற்கு வெகுநேரமாகிவிடப் போவதில்லைதான். ஆனால் பட்டாம்பூச்சியிலிருந்து மீண்டும் கூட்டுப்புழுவாக மாறும் இவ்வியந்திரத்தனம் அதற்கான நேரங்களை எப்போதும் திருப்பித் தருவதில்லை.
நினைத்த மாத்திரத்தில் நனையும் மழையும், நினைத்த மாத்திரத்தில் நமக்கே நமக்கென சந்தோசமாய் கிளம்பும் பயணங்களும் வரம்.
என்ன அழகாய் எழுத்து.. வாழ்த்துகள்..
வலைச்சரத்திற்காக நான் இப்போது மீண்டும் ஒவ்வொரு வலைத்தளமாய் நுழைந்து பார்க்கிறேன். மனசுக்குள் ஒரு வேதனை கவ்விக் கொள்கிறது.. எத்தனை பேர் இப்போது எழுதுவதை அதாவது அவரவர் வலைத்தளத்தில் எழுதுவதை விட்டு விட்டார்கள் என்று அறிய நேரும்போது ஒரு வித சங்கடம்..
நண்பர் கே.பி.ஜனார்த்தனன் சொல்லுவார்.. முகநூலில் எழுதினால் என்ன.. அதையே கூட நீங்கள் உங்கள் வலைப்பூவிலும் பதியலாமே.. உயிர்ப்போடு வைத்திருக்கலாமே என்று.
ஏதாவது ஒரு வகையில் வலைப்பூவுடன் தொடர்பிருந்தால் அதுவே ஒரு தூண்டுதலாகிப் பிறகு வலைத்தளத்திற்காகவே புதிதாய் எழுதத் தோன்றும் அல்லவா..
முகநூல் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் ஃப்ராங்ளின்குமார்.. இவரது கவிதைகளில் காட்சியும்.. புகைப்படங்களில் கவிதையும் விரியும்.
தீரா வனம்
விரிந்து கொண்டேயிருக்கிறது
புல்லாங்குழலுள்.
இதோ அவரது புகைப்படக் கவிதை..
தொடர்வோம் நாளை...
ஆறாம் நிலையில் தொடங்கி அறிமுக பதிவர்களின் பதிவுகளின் சிறப்புகளோடு... தொடரட்டும் ஆசிரியப்பணி. வாழ்த்துகள் அனைவருக்கும்.
ReplyDeleteமகிழ்வும் நன்றியும்.
Deleteசிறப்பான அறிமுகங்களுக்கும் அழகாக வழங்கிய தங்களுக்கும்
ReplyDeleteவாழ்த்துகள்!!! நன்றி
நன்றி நண்பரே
Deleteமஹாசுமன் தவிர மற்ற அனைவரும் தெரிந்தவர்களே. அதிலும் இந்திராவின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த எழுத்து என்னையும் மிக ஈர்த்தது. அசத்தல். அனைவருக்கும் நல்வாழ்த்துகள். (அண்ணே... முகநூல்லயும் நம்ம ப்ளாக்கர்ஸ் எல்லாரும் இருக்கறதால அங்க பகிர்ந்ததை ப்ளாக்ல போட்டா, ஏற்கனவே படிச்சாச்சேன்னு கமெண்ட் வருது. அதனால புதுசா இதுக்கும் டைம் ஸ்பெண்ட் பண்ணி எழுத வேண்டியிருக்குது. அவ்வ்வ்வ்.)
ReplyDeleteசரிதான் பால கணேஷ்.. அப்படியாச்சும் இந்தப் பக்கம் இழுக்கலாம்னு.. இப்படி கமெண்ட் வரும்போது புதுசா எழுத தூண்டுதல் கிடைக்கும்னு போட்டிருக்கேன்.. இதுல நானும் விதிவிலக்கல்ல,,
Deleteதிருவரங்கம் அழைத்துச்சென்றுவிட்டீர்கள். அரங்கனைக் கண்டதில் மனதிற்கு மகிழ்ச்சி. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteஅன்பு நன்றி
Deleteநல்ல அறிமுகங்கள் ரிஷபன்ஜி! வலைப்பூக்கள் நீங்கள் சொன்னது போல் வாடித்தான் காணப்படுகிறது , இதில் கட்டாயம் நாம் ஏதேனும் செய்தாக வேண்டும். யோசிப்போம்... குறைந்தபட்சம் ஒரு நூறு நல்ல பதிவர்களையாவது தொடர்பு கொண்டு மீண்டும் அவர்களிள் வலைப்பூக்களுக்கு புத்துயிர் அளிக்க வேண்டலாம்... இதற்கு பிள்ளையார்சுழி போட்டு நான் பதிவர்களை தொடர்பு கொள்கிறேன். அனைவருமே இதை செய்யலாம். ஓரிரு நாளில் வானவில் மனிதனில் இதற்கான செயல்திட்டத்தை பகிர்கிறேன். சின்னதோர் இயக்கமாய் முன்னெடுப்போம்.
ReplyDeleteஎழுத்து முழுமையாய் பரிமளிப்பது வலைத்தளத்தில் தான்..உங்கள் முயற்சி பலனளிக்கட்டும். கை கொடுக்கிறேன்
Deleteவெளி ஆண்டாள் சந்நிதி - சென்றிருந்தாலும் ஆண்டாள் அரங்கனைப் பார்க்கும் விதத்தில் இருப்பதை கவனித்ததில்லை. அடுத்த முறை பார்க்க வேண்டும்.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.
கட்டாயம் பாருங்கள்.. ஆண்டாள் அரங்கனைப் பார்ப்பதை.
Deleteவருகைக்கு நன்றி
அறிமுக இனிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteவாங்க பதிவர்களில் அழகரே.. வணக்கம்
Deleteஅருமை
ReplyDeleteநன்றி
Deleteவெளி ஆண்டாளை இன்னமும் பார்த்தது இல்லை, பார்க்கணும், உள் ஆண்டாளோடு தான் பரிச்சயம், தாவா எல்லாமும்! கண்ணாடி அறைக்காரியை எப்போதேனும் பார்ப்பது உண்டு. :) இங்கே சொல்லி இருக்கும் பதிவர்களில் டி.என்.முரளிதரன் ஒருத்தரைத் தான் தெரியும்.:)
ReplyDeleteஅவசியம் தரிசிக்கவும்..நேரம் வாய்க்கும் போது
Deleteதிருவரங்கப் பிரகாரங்களுக்குள் அருமையாய் உலா செல்லும் நேர்த்தி பிரமிக்கச்செய்கிறது.
ReplyDeleteஎன்ன அழகாய் அறிமுகங்கள்..!.. வாழ்த்துகள்.!!
அன்பு நன்றி..
Deleteஇந்திராவின் கிறுக்கல்கள் படித்தேன்.
ReplyDeleteஇயல்பான அவர் நடை பெரிதும் கவர்கிறது.
வழி தெரியாப் பயணங்கள் பல என்
மொழி தெரியா இடங்களில் அடையச் செய்திடினும்
அழியாத பல நினைவுகளை என் மனதில் நிறுத்தி, இன்னும்
கழியாத வாழ்நாளில் காட்சி தருவது உண்மைதான்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
சௌக்கியமா.. தங்கள் வருகை என் மகிழ்ச்சி
Deleteஅந்த ஆண்டாளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
ReplyDeleteஅந்த அரங்கனே வந்து எனை
அழைத்துச் செல்வான் என
அமைதியாக காத்து இருக்கின்றேன்.
சுப்பு தாத்தா.
வாங்கோ.. கூட்டிண்டு போறேன்
Deleteதிருவரங்கம் - ஒரு கடல் மாதிரி.. ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தகவலைத் தரும்..
ReplyDeleteசூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் வந்து இறங்கிய இடத்தைக் குறித்தமைக்கு நன்றி..
வாழ்க நலம்!..
ஆம்..இத்தனை வருடமாய் அங்கிருந்தாலும் எப்போதும் ஓர் ஆச்சர்யம் வைத்திருக்கிறது திருவரங்கம்
Deleteஅறிமுக ஊர்வலம் அழகாக ஆரம்பம்...
ReplyDeleteஉங்கள் ஏகலைவனாய்..
Deleteஉங்கள் ஏகலைவனாய்..
Deleteதிருவரங்கம் அறியத் தந்தமைக்கு நன்றிகள், அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துககள்.
ReplyDeleteஆண்டாளை தரிசனம் செய்யவைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteசிறப்பான பதிவர்கள் அறிமுகம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
08-09-15 8.00 pm
ReplyDeleteவெளி ஆண்டாள் சந்நிதிக்கு ஓரிரு முறை சென்றிருந்தாலும் தாங்கள்
குறிப்பிட்டிருக்கும் சுவாரஸ்யத்தை கவனித்ததில்லை ..உடனே சென்று
தரிசித்து வந்தேன் !என்ன ஆச்சர்யம் ..என் கண்கள் பனித்துவிட்டன ..வீட்டிற்கு வந்து மாதங்கியிட்ம் பகிர்ந்து கொள்ளும்பொழுது தொண்டை அடைதுக்கொண்டுவிட்டது ..மிக்க நன்றி ..
மாலி
அது என்னவோ தெரியவில்ல இ. பலரும் முகநூலுக்குச் செல்லும் போது அது என்னை ஈர்க்கவில்லை. எத்தனைபேர் லைக் காமெண்ட் போடுகிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்று தெரிவதில்லை. முகநூலில் எழுதும் போது ஸ்டேடஸ் என்கிறார்கள். அளவில் சின்னதாக இருக்கவேண்டும் என்னும் தவறான கருத்து எனக்கு. வலைப்பூவில் எழுத அழைக்கிறேன் டி.என் முரளிதரன் நன்கு பரிச்சயப்பட்டவர். பிறரது எழுத்துக்களை இப்போதுதான் பார்க்கிறேன் நீங்கள் ப்ராகாரம் என்று சொல்வதை நான் வெளிச்சுற்று என்று நினைக்கிறேன் தொடர்கிறேன்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகளும்.....
ReplyDeleteஅறிமுகப் பதிவவர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteமஹா சுமன் தவிர மற்றவர்கள் நான் ஏற்கெனவே வாசிப்பவர்கள். இன்று அறிமுகமானவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவர்கள் முகனூலில் சங்கமித்ததில் பதிவுகள் குறைந்துதான் விட்டன.
ReplyDeleteஆனாலும் துளசி, கீதா,,டிடி ,ரஞ்சனி எல்லோரும் நல்ல பதிவுகளைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எங்கள்ப்ளாக் தன் சேவையாக நிறைய விஷயங்களைப்
பதிகிறார்கள். அரங்க மானகரையும் அரங்கனைடயும் ஆண்டாளையும் தரிசித்ததில் மிக மகிழ்ச்சி ரிஷபன் ஜி.
ஆண்டாளின் திருக்கோலத்தை மிக அழகாக உணர்த்திய வரிகள் ரிஷபா..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா..
அட! ஆண்டாள் அப்படியா தலையைத் திருப்பிண்டு இருக்காள்? கவனிச்சுப் பார்க்கலை பாருங்கள் ..... அடுத்தமுறை அவளை விடமாட்டேன்:-)
ReplyDelete