வலைச்சரத்தில் மூன்றாவது நாளாக , ஆசிரியராக உங்கள் வாழ்த்துகளுடன் !
எனது சொந்த அனுபவ பதிவை பகிர்கிறேன் உங்களுடன் ...
பதிவர்கள் பதிவு அடுத்து ...தொடர்கிறது..
-----------()----------------------------
முதல் விமானப்பயணம்...
அரேபிய மண்ணைப்பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே முதலில்..உணர்வது இதை..!
திருச்சி லிருந்து...ஷார்ஜா பயணம்..!!
14வருடங்களுக்கு முன் , சின்ன வயது , க்யூல நிக்கக்கூட விடாதப்பிள்ளை.சகிதம்..விஸா..டிக்கெட் வாங்கி.பயணித்த என்னுடைய முதல் விமானப்பயணம்..மறக்கமுடியாதது.
தனியாக சென்றே ஆக வேண்டிய கட்டாயம் , (ஒரு கண் இல்லை ,ரெண்டையும் எப்போதும் அவன் மேல் வைக்கவேண்டும் )
ரொம்ப துறுதுறு பிள்ளை..,
வயிற்றில் புளி கரைத்தது ..
பயணத்தை எண்ணி , ..
விஸா..டிக்கெட் என்றால் என்னவென்று தெரியாது, மெயிலில் வந்தது ரெசிடென்ஸ் விஸா, ட்ராவல் ஏஜண்ட் ஆபீஸ் ல் ..அமர்ந்து
பலமுறை திருப்பிப்பார்த்த டிக்கெட்ஸ்..
பேங்க் செக் புக் போல இருக்கும்..அப்போது ..(இப்ப எல்லாமே ஈ..டிக்கெட்ஸ் ..)
அந்த நாளும் வந்தது....
முதல் நாள் நல்ல மழை ...மழையில் இரும ஆரம்பித்த மகன், நல்ல விஸீங் அவனுக்கு ...டாக்டரிடம்..சென்று மணிக்கணக்கில் அமர்ந்து ,
."ஏர்போர்ட் , விமானத்தில் ஏஸியாக ..இருக்கும் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை மருந்து தாங்க"..என்ற டாக்டர் அட்வைஸ் டன் பயணத்திற்கான ஆயத்தம் .
கணவர் போன்ல formulas மாதிரி சொல்லியிருந்தார் ஏர்போர்ட் ல என்னென்ன ப்ரசீஜர் என்று ..உள்ளுக்குள் ஆயிரம் கிலி...சமாளித்தவாறே..மதியம் ப்ளைட் ஏற வேண்டும் . முதல் நாள் காலை முதலே .சாப்பாடே உள் இறங்கவில்லை . அம்மா கவலையுடன் புலம்பினார் பலமுறை !.
முதல் முறை..நம் குடும்பத்தில் அனைவரையும் பிரிகிறோம்...வருடத்திற்கு ஒரு முறை தான்..திரும்ப பார்க்க முடியும் !! இப்படி ,
எத்தனை எத்தனை எண்ண அலைகள் மனதில் மோத..!!
தூக்கமின்றி கழித்த முன் இரவு சற்றே சோர்வையும் , அழுத்தமும் தர..புன்னகையை தவழவிட்டவாறே..தயாரானேன்..!
3மணி நேரத்திற்கு முன் செல்ல வேண்டும் அப்போது Internatinal flights க்கு !(.இப்போது 2மணி நேரத்துக்கு முன் செல்கிறோம்..)
ஷார்ஜா ப்ளைட்...
பழைய Air India ..
பையன் கைப்பிடித்தவாறே...அழும் பெற்றோர்களின் கண்ணீர் ,கால்களை பின்னிழுக்க..
கணவருடன் வாழ வேண்டிய வாழ்க்கை முன் தள்ள..நானும் லக்கெஜஸ் ட்ராலி தள்ளி..
ஏர்ப்போர்டில் நுழைந்தேன் ..
முன் நின்ற..துப்பாக்கி ஏந்திய போலீஸ் ..முதலில்..பாஸ்போர்ட் செக் செய்ய .பதட்டம் தொற்றியது !
காமிப்போமா..வெளியில்! புன்னகையுடன்..கெத்தாக ...அடுத்த லக்கேஜ் செக்கிங் ...நல்ல வெயிட்...ஹெல்ப்க்கு ஆள் வந்தனர்.. இதயம்...இடம் மாறியப்போல..ஒரு டென்ஷன்...குடும்பத்திற்கு தேவையான சாமான்களும் கொஞ்சம் பேக்கிங் கூடுதலாக
பண்ணியிருந்ததால்..எதாவது தப்பாகிடுமோ என்று ! ( உள்ள நுழையும் போதே நடுக்கம், மறைக்க தான் பல சீன்கள் :P )
.எடைப்பார்க்க..அடுத்தது ஏர் இந்தியா கவுண்டரில் ..
முன்னாடியே , பல விதங்களில் , (பக்கத்திலிருக்கும் அரிசிக்கடையில் , சந்தேகத்திற்கு பேப்பர் வெயிட் போடும் கடையில் ,கடைக்காரர் பார்த்த பார்வைகளை அலட்சியப்படுத்தி , சந்தேகம் தீர்க்க வேண்டாமா !) எடை பார்த்திருந்தாலும் , ஒரு பரபரப்பு ...
குறிப்பிட்ட அளவிற்குள் வர வேண்டுமே...வரிசையாக...வணங்கும் தெய்வங்களை ..அழைத்து இண்ஸ்டண்ட் ஆக ஒரு மானசீக பூசை...
பயந்ததை விட.. கம்மி வெயிட் தான்..அப்பாடா என்றிருந்தது...பழைய திருச்சி விமான நிலையம்...சிறியதாக இருந்தது அப்போது ! ( 2000 ல் , சின்ன கட்டிடம் , செண்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆபீஸ் போல தான் இருந்தது )
குடியுரிமை / Immigration checking ..பெரிய்ய க்யூ....தந்திருந்த form பூர்த்தி செய்து...க்யூவில் ஐக்கியமானேன்..கையில் பிள்ளையுடன் ..
நிறைய... ஆண்கள்..அனைவரும்..இங்கு தொழிலாளர்களாக வரும் அதிகம் படிக்காதவர்கள்.
அவர்களை கேள்வி கேட்ட அதிகாரிகள் அதட்டல் கள் காதில் விழ..
பின் வரிசையில். ஒருவர்..இது சரியா..பாருங்க என. அவர் பார்ம் கொடுத்துக்கேட்க...திரும்பி சரிபார்த்து..என் இடம் திரும்ப நகர. ...
கைப்பிடித்து நின்றிருந்த மகனைக்காணோம்..
பக்கென்று இருந்தது..எங்கப்போயிருப்பான்.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்காண வில்லை..படித்து படித்து சொல்லி அழைத்து வந்தும்..பதட்டம் அதிகரிக்க.. ஒரே ஓட்டம் தான்...
விமானம் ஏறச்செல்லும் செக்யூரிட்டி செக்கிங் பிரிவில் அங்கிருந்த போலீஸ் காரருடன் பேசிக்கொண்டிருந்தவனைப்பார்த்ததும்..சென்ற உயிர் உடல் புகுந்தது..!
மீண்டும் வரிசையில் என் பதட்டம் பார்த்து நல்லவேளை மீண்டும் அதே இடம் கிடைத்தது !!
கிடச்சுட்டானா என்ற சுற்றி பலர் பார்வையால் விசாரிக்க...இமிக்கேரஷன் ஆபிஸர் என்னிடமும் கேள்விகளை வீசினார்..
என்ன செய்யறார் கணவர்.. எங்கிருக்கிறது ஆபீஸ்..etc..etc ...புன்னகையுடனே பதில் தந்தேன்...
எதையும் காட்டத ..சுமி ந்னு உள்ளுக்குள் இருந்த டென்ஷன் எனக்கு இருந்தது அவருக்குக்கடத்தப்படவில்லை..!
அடுத்தது செக்யூரிட்டி செக்கிங்...
பெண் போலீஸ் ..தனியாக அழைத்தார் , விழித்தேன்...ஆனாலும் ஒரு ஸ்மைலியை தள்ளிவிட்டு பையனை..வெளி நிறுத்தி உள் செல்ல... மெட்டல் டிடெக்டர் பல இடம் பாய ஏகப்பட்ட சவுண்ட்ஸ் ... முகத்தில் எனக்கு வியர்வை வெளியே ஹாய் சொல்லி தெரிய ஆரம்பிக்க...என்னை அவர் பார்த்ததும்...முந்திக்கொண்டு இதெல்லாம் தான் இருக்கு..பாருங்க..என்றேன் ...
தாலிச்செயினில் கோர்த்திருந்த சேப்டி பின்களை ...தலையடித்துக்கொள்ளத குறையாகப்பார்த்த போலீஸுடமிருந்து , எஸ்கேப் ...அதிலேயே பர்ஸ்ட் டைமா..என்ற கிண்டல் பார்வையை யார் லட்சியம் செய்தது.. :P
கிடைத்த கேப் பில் விஷமம் செய்யும் மகனை பிடித்தவாறே...
போர்டிங் க்கு முன் கேட் அருகில் , (அங்க அப்போது ஒரே வழி -- கேட் தாங்க !)
ஹெண்ட் லக்கேஜ் டன்...சீட் பிடித்து அமர..தயாராக இருந்தது அருகில் அமர்ந்திருந்தப்பெண்ணின் பேட்டி...எங்கப்போறீங்க..எந்த ஊர்.. அங்க எங்க...இப்படி ..! பதில் தராமலே (வேறென்ன பயம் தான்!! ) பொத்தாம் பொதுவாக பேசியப்படி வேறு இடத்தில் பார்வையை செலுத்தினேன் .
மைக்கில் ப்ளைட்டினுள் ஏற அழைத்ததும்...
ஏர் ஹோஸ்டஸ் எல்லாரும் புடவையில் .
.ப்ளைட்டுக்குள்...சீட்டைக்காட்டினார்..!! பையனைக்கையில் பிடித்து இழுத்தவாறே ...அப்பாடா..என்ற பெருமூச்சும் !
முதலில்...சாக்லேட் ..தண்ணீருடன் ட்ராயில் ஏந்திய ஏர் ஹோஸ்டஸ் ...புன்னகையை அள்ளித்தெளித்துப்போக..கண்களால் புன்னகைத்தே.. எடுத்துக்கொண்டு ..
காதில் பஞ்சை திணித்து..நானும் வைத்துக்கொண்டேன் ..!
(கணவர் சொன்ன instruction ) அந்த சாக்லெட் அதற்கு தான்..எனப்புரிந்தது அடுத்த பயணத்தில் தான்..!!
விமானம் மேலெழும்பி ..காற்றழுத்தம் உருவாக...காதுகளில் காற்று உட்புகுந்து அழைத்துக்கொள்ளும்..பின் வலிக்கும்..அதற்கு தாடையெலும்புகளை அசைத்துத்தர...காற்று உட்புகுதல் சரி செய்யப்படும்..இதற்கு தான் ஏறியதும் ..சாக்லெட்..
விமானம் மேல் கிளம்ப ...பதட்டத்துடன் ..நம் மண் வாசனையும், கண்ணீருடனும்..கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த பெற்றோர்கள் முகம் வர .மனதை பாரம் வெகுவாக அழுத்த...உடல் லேசானது...! கால்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலெம்புவதை உண்ர்ந்து கொண்டது...சிறு..பந்து வயிற்றில் சுழல ஆரம்பித்தது... மேலே நன்கு ஏறி.. மேகக்கூட்டங்களை தாண்டி...செலுத்தினார் விமானி..ஜன்னல் வழி பார்த்தால் ஏதும் இல்லை..பரந்த அண்டம் மட்டுமே !
இது எப்போதும் பிடித்த ஒன்று.எதோ ஒரு நிர்மலம் ...இது தான் நாம்..என்னும் கணம்..!!
சீட் பெல்ட் அவிழ்க்கவேயில்லை.!
பணிப்பெண் புரிந்த வராக தெரிந்தார் ...
முதல் தடவையா..என பதில் தந்து என் பெல்ட்டை அவிழ்த்து...மகனிடம் பேசினார்..அப்போது அவனால் அதிகம் ஆங்கிலத்தில் பதில் தர முடியாது..! ஆனாலும் அவர்கள் பேசினார்கள் .
நான் பார்த்துக்கறேன்..நீங்க டாய்லெட் போறதாக இருந்தா போங்க என்றார் ..
எழுந்து நடந்தால் தேவலாம் என்ற எண்ண உந்துதலில்... நடந்து கழிவறைக்கண்டேன்.
சின்ன இடம்..கண்ணாடி யுடன் கனக்கச்சிதம் !
வியப்பை அள்ளித்தர ...அங்கிருந்த ப்ளைஷ் ஐ அழுத்த...அது தந்த சப்தம்...தூக்கிவாரிப்போட்டது...!!
vacuum செய்த சத்தம்..ஏதேதோ கற்பனை அதற்குள் . எதாவது உடைந்திருக்குமோ ..என்ற பயம்..!!
எல்லாம் சரிதானே என்ற பயத்துடன் வெளி வந்தால் போதும் என்று வெளிறிய முகத்தை மறைத்தபடி சீட்டுக்கு மீண்டும் அமர்ந்தேன் ..பையன் தூங்க ஆரம்பிக்க. மனம்...கடந்த நாட்களை, நிமிடங்களை , நொடிகளை அசைப்போட ஆரம்பித்தது...
எதோ மணம் மூக்கை துளைக்க ...சாப்பாடு நீட்டினார் பணிப்பெண் ..வேண்டாம் என மறுத்தேன் ..ஏன் என , பசியில்லை என்றதும் அவர் நகர்ந்தார்...இவனை அவன் அப்பா கையில் ஒப்படைத்ததும் சாப்பிடுவேன் என்றதும் நகர்ந்தார் புன்னகைத்தப்படியே ஒரு வினோத
பார்வையுடன்.. மிக அழகாக இருந்தவர் , என்னை அழகென்றும் சொல்லி நகர்ந்தார்.
மீண்டும் எண்ண அலைகள் தாலாட்ட கண் மூடி தூங்க முயற்சி க்க..பையனுக்காவது கொடுங்க...என்று பணிப்பெண் தந்ததை
வாங்கி க்கொண்டேன்.. ஏர்போர்ட் , விமானத்தில் மற்ற சீட்களில் இருந்தவர்களுடன் கொண்ட அரட்டை அசதியில் அவன் உறங்க , தந்த பணிப்பெண் மீண்டும் வந்து கொஞ்சம் சாப்பிடுங்கள் என்றார் ...
நான் இல்லை.என் கணவரைப்பார்த்து அவர் கையில் இவனை சேர்த்தால் தான் சாப்பிட முடியும் என்றேன் ...
புரிந்துகொண்டார் என் உணர்வுகளை ...
அத்துணை எளிதாக இல்லை...ஒரு சிறு வயதுப்பெண் , கட்டுக்கோப்பான குடும்ப பிண்ணனி யில் தனியாக விஸா..டிக்கெட் பெற்று ...துடிப்பான பிள்ளை யுடன் பிரிந்த கணவரை சேர்வது...உணர்ந்தவர் மட்டுமே உணர முடியும்..
அத்தனை உணர்வுகளும் காம்பேக்ட் ஆக அழுத்திக்கொள்ள பல்வேறு உறவுகளின் கேள்விகள், சமாளிப்புகள் , எதிர்பார்ப்புகள் , அனைத்தையும் விழுங்கி விட்டு வருடங்கள் பிரித்திருந்த கணவரைக்காண ஆவல் ,, அடுத்தடுத்து வந்த மணித்துளிகளை நொடிப்பொழுதாக்கின.
விமானம் தரையிறங்கிய தும்...
விஸா சப்மிட்க்கென தனி கவுண்டர் ..ப்ரஸிஜர் ..
அனைத்தையும் முடித்து...லக்கெஜ் சேகரித்து ட்ராலி தள்ளியப்படி வெளி வர...விஸிட்டர்ஸ் வழியில் கலக்கதை மறைத்தப்புன்னகையுடன் கண்ணாலே விசாரித்தார் கணவர் ...
அவர் கை நீட்டியதும் ..மகனின் கையை ஒப்படைத்ததும் இதயம் சீராகத்துடித்தது..
வெளியே காத்திருந்த நண்பரின் காரில் எங்களை புதைத்துக்கொண்டோம் .
என்னவர் போன் எடுத்து அவளும் குழந்தையும் நல்லபடியா வந்தாச்சு என்பதை காதில் வாங்கியபடியே கண்களை சற்று மூடினேன் ...

தங்கள் அனுபவம் அருமை!! துணிச்சலுக்கு பாராட்டுக்கள்!!
ReplyDeleteபொறுப்புணர்வு அழகு!! நான் விமானத்த அண்ணாந்து பார்த்ததோடு சரி!!! நன்றி
, எதோ .. வந்தாச்சு , நன்றி :) மகிழ்ச்சி
Deleteஎல்லாவற்றையும் -
ReplyDeleteஎல்லாவற்றையும் பிரிந்து வெளிநாடு புறப்படும் வேளையில் மனம் படுகின்ற பாடு - மாபெரும் உணர்ச்சிப் போராட்டம் - அது!..
இயல்பான நடையில்!..
வாழ்க நலம்!..
நன்றி .. மகிழ்ச்சியும்
Deleteஆஹா..! என்னவொரு தெளிவான நடை. சிறு குழந்தையோடு மொழிதெரியாத புது நாட்டிற்கு முதல் முறையாக விமானப் பயணம், அதில் ஏற்படும் அத்தனை உணர்ச்சிப் போராட்டங்களையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ!
த ம 1
தேங்க்யூ .. பல பலப்போராட்டங்கள் , இள வயது சவால்கள் .. பதிவாக பல வருடங்கள் கழித்து எழுதியது . மகிழ்ச்சி சகோ..
Deleteஅருமை
ReplyDeleteநன்றி ..
Deleteவணக்கம்,
ReplyDeleteநல்ல நாவல் படித்தது போல் உள்ளது.
ஏம்மா? நான் எவ்வளவு டென்ஷனா போனத அதே டென்ஷன் குறையாமல் சொன்னால் உங்களுக்கு நாவல் படித்தது போல் உள்ளதா?,,,,,
சரி சரி புரிகிறது, அருமையா தங்கள் உணர்ச்சிப் போராட்டத்தைச் சொல்லியுள்ளீர்கள்.
நாங்கள் எல்லாம் மிகப் பெரிய தைரியசாலிகள் என்று உள்ளுக்குள் அழும் பெரியவர்கள்,,,,
ஆனா அதப் பாருங்கள், அந்த ஊக்கு ஸ்டான்ட். அதாங்க தாலிசெயின் தான், அப்ப நீங்களுமா?
,,,,,,,,,என்னவர் போன் எடுத்து அவளும் குழந்தையும் நல்லபடியா வந்தாச்சு என்பதை காதில் வாங்கியபடியே கண்களை சற்று மூடினேன் ...
உண்மைதானே,, அப்பாடா,,,,
அருமை, தொடருங்கள்.
அருமையான கமெண்ட் , அனுபவிச்சு படிச்சு , தந்திருக்கீங்க , அப்படில்லாம் நினைக்கல மஹேஸ்வரி , எழுதும் வரை தான் . எழுதியப்பின் ...எழுத்துக்கள் தான் ..என் உணர்வுகள் கடத்தப்பட்டிருக்கு .. நன்றி !
Deleteஅனுபவம் புதுமைகள் அதில் இதுவும் ஒரு பாடம்! அருமையான பகிர்வு!
ReplyDeleteநன்றி .. ஆமாம் .. :)
Deleteவெகு இனிமை சுமி. வாழ்த்துகள்.
ReplyDeleteதேங்க்யூ ரேவதிம்மா .. :)
Deleteஹாஹாஹா ஸூப்பர் முதல்முறை விமானப் பயணத்தில் டாய்லெட்டில் அந்த சத்தத்தைக் கேட்டு பயப்படாதவர்களே இருக்க முடியாது...
ReplyDeleteஎனக்கு 1996 ஜனவரி 26 ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... பம்பாய் ஞாபகம் வருதே...
ஓ.. வந்தல்லோ ..வந்தல்லோ .. :)
DeleteSuperb write up ..எனது முதல் பயணத்தில் பயம் வரல்ல :) கணவர் இண்டியா வந்து கூட்டி போனார் :)
ReplyDeleteஅந்த தண்ணி சத்தம் :) நான் கூட பயந்தேன் விட்டா நம்மையே இழுத்து போகும் அளவுக்கு பேய் இரைச்சல் .
btw உங்க ப்ளாகில் கமெண்ட இட பார்த்தேன் google + இல் இருந்தா தான் கமெண்ட்ஸ் போட முடியும் என்று நினைக்கிறேன் என்னை ரொம்ப டீடெயில்ஸ் கேக்குது comment form .
ஓ.. ஏஞ்சலின் ..தெரியல என்னக் காரணம் என்று .. மகிழ்ச்சி , படிச்சு அழகா கமெண்ட் தந்துருக்கீங்க ...
Deleteஉடன் பயணித்தது போன்ற ஓர் உணர்வு! அருமையான எழுத்து நடை! தொடருங்கள்!
ReplyDeleteநன்றி ..மகிழ்ச்சி ...
Deleteஇந்த பதிவை படிக்கும் போது பயணித்தது நீங்களா அல்லது நானா என்று தெரியாத அளவிற்கு இருந்தது .பயணத்தின் போது உங்களுக்கு டென்ஷன் என்றால் படிக்கும் பொது எங்களுக்கும் டென்ஷன்.... நடை அருமை....
ReplyDeleteநன்றி.. :) கொஞ்சம் மறக்க முடியாத அனுபவம் ஆச்சு அது தான் .. :)
Deleteவிமானப் பயணம் மேற்கொள்ளாவிட்டால்கூட உங்களது முதல் பயணம் எங்களுக்கு ஓர் அனுபவத்தைத் தந்துவிட்டது. நாங்கள் பயணிக்கும்போது உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி.
ReplyDeleteஆஹா .. சந்தோஷம் சார் ..
Delete