Sunday, September 6, 2015

சுமிதா ரமேஷிடமிருந்து ஆசிரியர் பொறுப்பை ரிஷபன் ஏற்கிறார்...

வணக்கம் வலை நண்பர்களே...

இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த "சுமியின் கிறுக்கல்கள்"எனும் வலைப்பூ பதிவர் சுமிதா ரமேஷ் அவர்கள் தனது பணியை ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் புதுப்புது பதிவர்களை அறிமுகம் செய்தும், வாசகர்கள் கவரும் விதமாக எழுதி முடித்துள்ளார். 

மொத்தம் ஒன்பது பதிவுகள் எழுதி 225-க்கும் அதிகமாக மறுமொழிகள் பெற்றும், சுமார் 1800 பக்கப்பார்வைகளுக்கும் அதிகமாக பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "ரிஷபன்" வலைப்பூ பதிவர் ஸ்ரீநிவாசன் என்ற ரிஷபன் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார். 

திருச்சி மாநகரத்தில் வசிக்கும் ரிஷபன் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை புத்தகங்களாக எழுதியுள்ளார்.. அவரின் 11 தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன.
மேலும் 3 மின்னூல்கள் பிரசுரம் செய்துள்ளார்..

அவரது சிறுகதை தொகுப்புகள் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அதன் விவரங்கள்
திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு நடத்திய போட்டியில்(2003) துளிர் முதல் சிறுகதைத் தொகுப்பே முதல் பரிசு பெற்றது..
அதே அமைப்பு நடத்திய போட்டியில் (2008) பனி விலகிய நேரம் சிறுகதைத் தொகுப்பிற்கு மீண்டும் முதல் பரிசு கிடைத்தது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்திய மாநில அளவிலான போட்டியில் சூர்யா சிறுகதைத் தொகுப்பு 3ம் பரிசு பெற்றது.

இலக்கிய சிந்தனைப் போட்டியில் இரண்டு முறை மாதப் பரிசு.

"ஏன் " சிறுகதை (இலக்கிய சிந்தனைப் பரிசு) பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய-ப்ரெஞ்ச் கூட்டமைப்பின் காலாண்டு இதழில் பிரசுரம்.

சாவி, ராஜம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுகள்.. 

கல்கி வைர விழாப் போட்டியில் மூன்றாம் பரிசு.இன்னும் பல பரிசுகள்.

கவிதைகளுக்கு தொடர்ந்து 3 முறை திருச்சி இலக்கிய வட்டத்தில் முதல் பரிசு.

இவ்வளவும் சாத்தியமானது நட்பும் உறவும் அளிக்கும் இடைவிடாத உற்சாகத்தால் மட்டுமே என சிலாகிக்கிறார். 

ரிஷபன் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் சுமிதா ரமேஷ்,
நல்வாழ்த்துக்கள் ரிஷபன்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

12 comments:

  1. வாழ்த்துக்கள் ரிஷபன் .

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சுமிதா ரமேஷ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
    ரிஷபன் அவர்களுக்கு சிவப்பு கம்பள விரிப்பு
    தமிழ் மணம் 2
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. தேங்க்யூ ஜி ! மகிழ்ச்சி :)

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சிறப்பாகச் செய்த சுமிதா ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு வாய்ப்பளித்த வலைச்சரத்திற்கு நன்றி

    ReplyDelete
  6. சிறப்பாகச் செய்த சுமிதா ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு வாய்ப்பளித்த வலைச்சரத்திற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி . கலக்குங்க சார் ! வாழ்த்துகள்

      Delete
  7. எல்லா நாட்களிலும் அழகான கமெண்ட்ஸ் தந்து அறிமுகம் ஏற்று உற்சாகப்படுத்தின அனைவருக்கும் என் நன்றிகள். மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துகள் ! வரவேற்கிறேன்..

    ReplyDelete
  8. எல்லா நாட்களிலும் அழகான கமெண்ட்ஸ் தந்து அறிமுகம் ஏற்று உற்சாகப்படுத்தின அனைவருக்கும் என் நன்றிகள். மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துகள் ! வரவேற்கிறேன்..

    ReplyDelete
  9. நல்வாழ்த்துகள்!

    ReplyDelete