Sunday, September 6, 2015

அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .

வலைச்சரத்தில் இறுதி நாள் .

அற்புதமான வாய்ப்பு ஆசிரியர் பணி !

வலைப்பூவே புதிதாக இருக்கும் போது , வலைச்சரம் அறிமுகம் ஆகி , நாமும் அறிமுகமாகி  , அறிமுகப்படுத்தும் நோக்கில் நிறைய படிக்கவும் நேர்வது , கரும்புத்தின்ன கூலியா என்பது போல உள்ளது. 
சர்க்கரை பாத்திரத்தில் மூழ்கிய எறும்பாக ஒவ்வொரு ப்லாக்கிலிருந்தும் வெளிவருவது சற்றுக்கடினமாகவே உள்ளது.

எத்தனை ரசனையாக , அழகாக எழுதுகிறார்கள் என்ற பிரமிப்பும் ஆழ்த்தி செல்கிறது , நிறைய நிறைய இன்னும் பலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர் , காலம் தான் டோக்கன் தந்து நம்மை உள் அழைத்து செல்ல வேண்டும்.
இது எனது வரிகள்.. 


அசுர வளர்ச்சி
வளர, வளர்ந்து விட்டோம்...
தூசி, பெயரிடா
புதுப்புது பிணிகளுடன்
இருப்பதை விற்று..
வேண்டாததை வாங்குகிறோம்
தாலாட்டும் தென்றல்
நச்சுவாயு வெளியிடும் ஏசியிலா. .
உலகம் நம் கையில்..




இயற்கையின் மீது எப்போதுமே உள்ள தாகம் , வெட்ட வெளி , பசுமை ,எதோ ஒரு உணர்வை விஷயத்தை நமக்கு சொல்லிச்செல்வதுப்போல இருக்கும் எனக்கு .

கிடைத்த இடத்தில் , செடிகளை வளர்ப்பது பிடித்தமான ஒன்று , 
அந்த ஆர்வத்தில் தேடியதில் கிட்டிய வலைப்பூ இது..

தோட்டம் - சிவா என்பவரது வலைப்பூ.. !

www.thooddam.blogspot.com 




 என்று 


கார்டன் டிப்ஸ் , நர்ஸரி டிப்ஸ் என்று அசத்தலால பல பதிவுகள் .
இன்று பலப்பல நோய்கள் , அதிலும் உயிர்க்கொல்லி நோய்கள் அணிவகுத்துக்காத்திருக்கின்றன மானுட வாழ்விற்கு சவாலாக .
இத்தனைக்கும் காரணம் நம் வாழ்வியல் , இயற்கையை சிதைத்த செயற்கைவாழ்வு , அத்துடன் கெமிக்கல் கலந்த மருந்துகள் கொண்ட காய்கறிகள் , பழங்களும் என்றும் கொஞ்சம் தாமதமாகவே உணர்ந்திருக்கிறோம். 

சாதாரண காய்கறி விலையை விட , ஆனை விலைப்பெற்று உலக சந்தையில் ஆர்கானிக் , இயற்கை விவசாயமுறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பும் காத்திருக்கிறது.

இவரது பதிவுகளைப்படிக்கும்போதே எனக்கும் கை பரபரக்கிறது , 36 வயதினிலே ஜோ ஸ்டைல்ல ..இல்லன்னாலும் .. (அதான் இல்லன்னுன்னுட்டேனே ) , என் வீட்டுக்காவது கண்டிப்பா பால்கனிலருந்து பறிச்சுத்தான் சமைக்கணும் ந்னு ஒரு பேராவல் எழுகிறது. 

அப்படி கஷ்டப்பட்டு , குழந்தைகள் மாதிரி நாம் வளர்க்கும்போது , அதை இந்த பூச்சிகள் கபளீகரம் செய்யும் போது , வரும் அவஸ்தையும் வேதனையும் சொல்லி மாளாதுங்க ..

வீட்டுத்தோட்டத்தில் பூச்சிக்கொல்லி முறைகள்  என்ற பதிவில் சிவா சார் ஹெல்ப் , யாமிருக்க பயமேன் ந்னு ஹெல்ப் பண்றார் . 


இயற்கை விவசாயம்.. பூச்சிக்கொல்லிப்பற்றி என்ற இப்  பதிவில் , எப்படி பூச்சிகளைக்கட்டுப்படுத்தலாம் என்றும் இயல்பான நடையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

உயிரியல் சங்கிலி ..இயற்கையின் அமைப்பில் ஒவ்வொரு உயிரினமும் மற்றொன்றை சார்ந்தே வாழ வேண்டும். சங்கிலியை உடைத்து .. நாம் மாற்றிட முயற்சிக்க , அதன் விளைவை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம்.


தோட்டம் தேடி வரும் விருந்தாளிகள்  என்ற பதிவில் அழகாக சொல்கிறார் .




தோட்டம் நம் வீட்டில் விளைந்த காய்கறிகள் மட்டுமல்ல கூடவே வரும் வளரும் அணில்கள் , பறவைகள் இவற்றுடன் இயைந்த வாழ்வு எத்தனை அருமையானது என்பதையும் தனது பதிவில் கூறியிருக்கிறார். அவசியம் படிக்க வேண்டியது ..படத்துடன் தந்திருக்கும்போது மிஸ் செய்வோமா !

தோட்டம் பற்றி இத்தனை சொன்னப்பறம்  என்ன ஒரு தக்காளி .....செடி கூட வளர்க்கலன்னா எப்படின்னு என் மை. வாய்ஸ் என்னை மிகவும் டிஸ்டர்ப் செய்யுதே ... :)

அவள் விகடன் இதழில் அங்கீகரிக்கப்பட்ட இவரது வலைப்பூ ..மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது நம்மையும்..சிவா அவர்களுக்கு நம் வாழ்த்துகளையும் வலைச்சரம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.


பத்து வருடங்களுக்கு முன் இணையத்தில் தமிழ் படிப்பதும் எழுதுவதும் சற்றே சவாலான விஷயமாக இருந்தது எனலாம்.
அப்படியான காலக்கட்டத்தில் , tamil.net என்ற தமிழ் வலைத்தளத்தில் சுஜாதா அவர்களது கட்டுரைகளை வெளியிட்டு , தனது அமெரிக்க அனுபவக்கட்டுரைகள் , சில நகைச்சுவை கட்டுரைகளும் , ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகளையும் எழுதி வந்தார் . எழுத்தாளர் சுஜாதா அவர்களது அதி தீவிர வாசகர் , அவரது பெயரை தனதுப்பெயருடன் இணைத்துக்கொண்ட திரு. சுஜாதா தேசிகன் அவர்கள் .


எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முன்னுரையுடன் வரவேற்கிறது இவரது வலைப்பூ. www.sujathadesikan.blogspot.com .
சொந்த ஊர் , சொந்த மண் வாசம் தரும் சுகம் , பிரிந்து அயல்மண்ணில் வசிப்பவர்கள் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று !





இவரது திருச்சிடா என்ற பதிவு , திருச்சியை மிஸ் செய்தவர்கள் , சென்றுப்பார்த்த உணர்வு , ஒரு ரவுண்ட் அடித்த உணர்வைத்தருகிறார்.
என்ற தலைப்பில் இவரது பதிவே சிறுகதையாக உள்ளது. ( சொந்த ஊர்ப்பாசம் அடியேனுக்கும் உண்டல்லோ .. :) 

காக்கா  என்ற இவர் பதிவு 

ஒரு காக்கா தந்த சோதனை கொஞ்சம் ஓவர் தாம்ப்பா..என்ற எண்ணத்தோன்றுகிறது.

தனது சிறுகதைகளையும் வெளியிட்டு , அவை உருவானக்காரணங்களையும் அழகாக வெளியிடுகிறார்.
என்ற பதிவு அதற்கு ஒரு துளி சான்றாக.


சுஜாதாவை இழந்த நமக்கு இவரது எழுத்துகள் பெரும் ஆறுதலாக , இனிய நடையில் ஆழ்த்தி செல்கின்றன.

இவரது சமீபத்திய புத்தக வெளியீடு ரெண்டு 

1. அப்பாவின் ரேடியோ சிறிகதைகள்  என்ற சிறுகதை தொகுப்பு .
2. என் பேர் ஆண்டாள் என்ற கட்டுரை தொகுப்பு.

இரண்டும் என் கைகளுக்குகிடைக்கப்பெற்றேன். படிக்க படிக்க ஒரே மூச்சில் படித்து வைக்கவேண்டும் என மனம் அடம்பிடிக்கிறது அத்தகைய எழுத்தாளுமை , நடை.

 படித்ததில் பல பதிவர்களும் தனது சொந்தப்புகைப்படங்களையே பயன்படுத்தியிருப்பது கூடுதல் அட்ராக்‌ஷன் . 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமாக என் பார்வையில் படித்த ரசித்தப்பதிவுகளை உங்களின் கண்களுக்கும் காண்பித்தேன். 

இதற்கு வாய்ப்பு தந்த வலைச்சர குழுவினருக்கு என் நன்றிகள்.

ஓரளவு நியாயமாக எழுதிருக்கேன் என்ற நம்பிக்கையுடன் (சரிதானே ! :) ) நிறைவுப்பெறுகிறேன் இப்பணியிலிருந்து.

என்னுடன் பயணித்து , ஒவ்வொரு நாளும் ஊக்கமளித்து கமெண்ட்ஸ் தந்த நட்புக்களுக்கும் நன்றிகள்.






அன்புடன்
சுமிதா ரமேஷ்.

11 comments:

  1. நல்ல தளங்கள் பலவற்றை அறிமுகம் செய்து - விடை பெறும் தங்களுக்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி , நன்றி ..

      Delete
  2. வணக்கம்,
    புதிய பல பக்கங்களை அறிமுகப்படுத்திய தங்கள் பணிக்கு எம் நன்றிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்யூ மஹேஸ்வரி ! :)

      Delete
  3. சுஜாதா தேசிகன் அருமையான எழுத்துக்காரர்.. திருச்சிக்காரர் என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.. அதிலும் சுஜாதா சம்பந்தம் உள்ளவர் என்பதில் இன்னும் பல மடங்காய்.

    ReplyDelete
  4. அழகாக வலைச்சரத்தை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  5. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்......

    சுஜாதா தேசிகன் அவர்களின் தளம் தொடர்ந்து வாசிப்பது.

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    "தோட்டம்" நான் விரும்பி வாசிக்கும் வலைப்பூக்களில் ஒன்று.

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சகோதரி...
    மிகச் சிறப்பான வாரமாகக் கொண்டு சென்றீர்கள்..
    வாழ்த்துக்கள்... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete