அம்புலிப் பருவம்!!!
" எந்தச் சேனல் மாத்தினாலும் போட்டதையே போடுறான்.... புதுசா இந்த உலகத்தில எதுவுமே இல்லையா?............"
" ஏங்க புதுசா ஏதாவது மாடல் வந்திருக்கா ... எல்லாம் பழசு மாதிரியே தெரியுதே.."
புதிய தகவல்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.
பொதுவாக, நேரம், தரம்  மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. 
யாருமே
 எங்கேயும் காத்திருந்து கிடைக்கும் ஒரு பொருளுக்காக காத்திருக்க 
விழைவதில்லை. நேரம் காரணமாக இருக்கலாம்? இந்தப் பொருளுக்காக இவ்வளவு நேரம் 
காத்துக் கிடக்கணுமா ?? என்ற தரம் குறித்த கேள்வியாகவும்.. ஏ..அப்பா... 
இப்பளவு விலையா இதுக்கு இவ்வளவு கூட்டமா? 
ஒரு புதிய 
பொருளை ஏற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகிறோம், யாராவது பயன்படுத்திப் 
பார்த்து, நல்லா இருக்குன்னு சொன்ன பிறகு அந்தப் பொருளுக்காக எவ்வளவு நேரம்
 வேண்டும் என்றாலும் காத்துக்கிடந்து வாங்குவோம்.
இன்று 
பல தொலைகாட்சி நிறுவனங்களும், ஊடகங்களும், பள்ளி கல்லூரிகளும் இளம் 
விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்புகளை உலகறியச் 
செய்கிறார்கள். நமக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது.
"பழையன கழிதலும் 
புதியன புகுதலும் "
என்றைக்கும்
 அவசியமான தேவையே. மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தால் தான் வளர்ச்சிப் 
பாதையில் பயணிக்கும் நம் நாட்டுக்கு வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும்.
சிறுபனை ஓலையில் 
சிலவரிகள் எழுதி 
புறாவிடு தூதனுப்பி!
ஒரு திங்கள் காத்திருந்தேன்!
மூன்றுபக்க கடிதத்தில் 
முழுமனதை எழுதிவிட்டு 
ஒரு வாரம் காத்திருந்தேன்!
தந்தியெனும் நந்தியில் 
சில வார்த்தைகள் அனுப்பி 
ஒரு நாள் காத்திருந்தேன்.........
நினைத்த நேரத்தில் 
குறுஞ்செய்தி அனுப்பி 
அடுத்த நொடி பதில்கண்டேன் 
வியந்தேன் விஞ்ஞானத்தை 
அவசியமான ஆகிருதிகள் என 
வாரி அணைத்துக்கொண்டேன்....=====================================================================
அம்புலிப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் அம்புலிப் பருவம். அமுதுண்ணும் போது வாயினுள் இருக்கும் உணவை உதடு வழியாக பிதுக்கி வெளியே கொண்டுவந்து கைகளால் முகம் முழுதும் கோலம் போட்டு அன்னையைப் பார்க்கும் குழந்தை, எனதருமைச் செல்லமே உனக்காகவே இந்த அமுதூறும் உணவென அமுதூட்டும் அன்னையவள் அம்புலியைக் காட்டி குழந்தைக்கு அமுதூட்டுதலே அம்புலிப் பருவமாம். இப்படியான அழகான பருவத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் இளம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசும் பதிவர்களைக் காண்போம்.
=======================================================================
தொழில்நுட்பம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நண்பர் தங்கம்பழனி அவர்கள். இதோ பாருங்கள், தானியங்கி பண இயந்திரத்தில் பணமெடுக்க 
பணமெடுக்கும் அட்டை இல்லாமல் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறையொன்றை 
விளக்குகிறார் வாருங்கள் பார்ப்போம்.
தங்கத் தமிழ்மகனே 
தருவித்தாய் இனிதாய் 
தகவல் தொழில்நுட்பங்களை 
உருவிலும் ஏற்றி - எம் 
சிந்தனைக்கு விருந்தளித்தாய் 
இன்னும்பல நுட்பங்களை 
எமக்காய் வழங்கிடவே 
வாழிய எம்மானே!!=========================================================================
புயல் காற்றிலோ அல்லது விபத்திலோ எதிர்பாராமல் அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கியுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள VRS பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஹரிஷங்கர், மணிவண்ணன் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.வளரும் இந்த இளம் விஞ்ஞானியை சென்று பார்ப்போம் வாருங்கள்.
மின்சார மின்னனுக்களை 
செயல் இழக்கச் செய்திடவே 
உபாயம் கண்டெடுத்தீர் - உம் 
செயற்கரிய செயலிது 
போற்றத் தகுந்ததய்யா!!=======================================================================
கணினி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம். அதிலும் நொடிக்கு நொடி புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.இதோ நண்பர் சில்வெஸ்டர் சிபி விண்ணரசன் அவர்கள் தனது தளத்தில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பொன்றை விளக்குகிறார்.
செல்பேசி செய்தியை 
செல்லமாக சொல்லும் தம்பி 
செவ்வனே தொடருங்கள் 
செழிப்பான உம் பணியை 
களிப்புடனே ஏற்கிறோம் 
நீவீர் தரும் செய்தியினை!!!====================================================================
மாணவப் பருவத்தில் இருக்கும் அறிவுப்பசி அளவற்றது. அத்தகைய பருவத்தில் இன்று உலகமே அனுபவித்துக்கொண்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதலுக்கு ஒரு உபாயம் கண்டுபிடித்திருக்கிறார் ஒரு மாணவர். நண்பர் இளங்கோ தனது வலைப்பதிவில் அறிமுகப்படுத்துகிறார் வாருங்கள் பார்ப்போம்.
கரியமில வாயுவை 
கரைத்து உருமாற்றிட 
கனிவாக வழி சொன்னாய் 
கரு சுமந்த வான்மேகம் - உன்னை 
கருணைகொண்டு வாழ்த்தட்டுமே!!===================================================================
குறைந்தபட்சம் ஆறுமாத காலம் காத்திருந்தால் தான் நாம் தங்குவதற்கு 
வீடு கட்ட இயலும். ஆனால் இங்கே பாருங்க ஒரே நாளில் வீடு தயார் 
செய்கிறார்களாம். ஆச்சர்யங்களுக்கு அளவே இல்லை.
அஸ்திவாரம் போட்டு 
பத்து நாள் தண்ணீர்விட்டு 
அதற்கு மேல்கட்டி 
உச்சிக்கூரை போட்டு 
அன்பகத்தில் குடியேற 
ஆறுமாதம் ஆகிடுமே!
ஒரு நாளில் அதைச்செய்யும் 
புண்ணியவாளனே 
எங்கய்யா நீ இருக்க.....=====================================================================
இயந்திரந்துறையில் ஒரு அரிய சாதனை படைத்து  அரசின் "இளம் விஞ்ஞானி விருது" பெற்ற திரு.செந்தில்குமார் அவர்களை நமக்காக 
அறிமுகப்படுத்துகிறார்கள் இங்கே. வாருங்கள்  சென்று பார்த்து வாழ்த்தி 
வருவோம்.
இரு உலோகத் தனிமத்தை 
ஓட்டுவதில் நீ புரிந்த 
இமாலய சாதனை 
இயந்திரத் துறைக்கு 
இன்னுமொரு வைரக்கிரீடமே!!====================================================================
அகண்ட பெருவெளியில் 
அடியெடுத்த மனிதனுக்கு 
அறிவியலே விடிவெள்ளி....
நிற்காமல்
 எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உலக வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை 
எத்தனையோ கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள். இன்னும் பெருகும் நித்தமும் 
நித்தமும். ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கும் நற்பதிவுகளை வாசிப்போம், 
நேசிப்போம், வளம் பெறுவோம் வாழ்த்துவோம்.
இன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுறுகிறது. கடந்த ஏழு நாட்கள் ஒரு 
பிள்ளையாய் நான் உங்களோடு தவழ்ந்திருந்தேன். அனுபவம் பல பெற்றேன். என்னை 
ஆசிரியனாய் அமர்த்திய ஐயா.சீனா அவர்களுக்கு மீண்டும் என் சிரம்தாழ்ந்த 
நன்றிகள். அருமையாக கருத்திட்டு என் எழுத்துக்களை மேம்படுத்திய அனைத்து 
நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
என்றென்றும் 
அன்புடன் 
அன்பன் 
மகேந்திரன் |  |  | 









 
சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநம் விழாவில் சந்திப்போம்...
நல்ல பல தளங்களை அறிமுகம் செய்து சிறப்பாக ஆசிரியர் பணியை நிறைவு செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்...நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவித்தியாசமான முறையில் நல்ல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சிறப்பாக ஆசிரியர் பணியை செதமைக்கு வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ...!
வணக்கம் !
ReplyDeleteமிகச் சிறந்த பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்
அன்புச் சகோதரனே !தங்களுக்கும் இங்கு அறிமுகமான அனைவருக்கும்
என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் .
வாரம் முழுவதும் பல பதிவர்களை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம்....
ReplyDeleteசிறப்பாக ஒரு வாரம் பல்வேறு தலைப்புக்களில் தொகுத்த வலைச்சரம் மணத்தது! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவித்தியாசமான தலைப்புகளில் பதிவுகளைத் தொகுத்து வழங்கி விடைபெறும் நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாளை முதல் ஆசிரியப் பணியேற்க வருகை தரும் நண்பர் சே. குமார் அவர்களுக்கு நல்வரவேற்பு!
ReplyDeleteஅறிமுகங்கள் விதவிதமான தலைப்புடன் அரங்கேறி நிறைவு பெறுகிறது.. நன்றி சகோ. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசே.குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வித்தியாசமான முறையில் இவ்வாரம் தொகுப்பு .வாழ்த்துக்க்கள் மகி அண்ணாச்சி!
ReplyDeleteஏழு நாட்களும் என்னோடு தோள் மீது கரமிட்டு நட்புறவோடும் சிறந்த கருத்துக்களைப் பகிர்ந்தும்
ReplyDeleteவாழ்த்தியும் ஏழு ஸ்வரங்களாய் மாற்றிய தோழமைகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.