07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 3, 2007

சுட்டிகள் உங்களுக்காக!

மனிதனை இரண்டுகால் மிருகமென்றும் சொல்லி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (சில,பல சமயங்களில் எனக்கும் அப்படித்தோன்றும்.. அது பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்) இந்த இரண்டுகால் மிருகம் நான்கு கால் மிருகத்திடமிருந்து வேறுபடும் இடங்களில் நகைச்சுவையும் ஒன்று.

நக்கல், நையாண்டி இரண்டுக்கும் வேறுபாடு இருந்தாலும் இவ்விரண்டும் நகைச்சுவையின் முதுகில் ஏறித்தான் சவாரி செய்தாகவேண்டும்.

ஒரு பேச்சாளர் குட்டி ஒரு நகைச்சுவை கதையை சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த நகைச்சுவைக்கு பார்வையாளர்களின் ரசிப்பு வேறுபடும். அது எப்படி என்ற சந்தேகம் வரலாம்..!

அந்த நகைச்சுவைக்கதையை.. கார்ப்பரேட் மாதிரி அலுவலக மீட்டிங்கில் சொன்னால்.. பற்கள் கூட வெளித்தெரியாமல் சிரிப்பார்கள்.

அதே கதையை.. கொஞ்சம் போக்குவரத்துக்கழகம் மாதிரியான தொழிற்சங்க கூட்டத்தில் சொன்னால்.. கை தட்டல் காதை பிளக்கும்!

அதே கதையை.. உடல் உழைப்பை முன்னிருத்தி வாழும் மக்கள் கூட்டத்தில் சொன்னால்... விசில் சத்தம் விண்ணைத் தொடும்!

ஒரே கதை தான். சொல்லப்பட்ட விதமும் ஒரே மாதிரியாகத்தான். ஆனால்.. ரசிப்பு மட்டும் மாறுபடுகிறது. இது போல.. ஒரூ செய்தியை வெறும் செய்தியாக சொல்லுவதை விட, நகைச்சுவை கலந்து கொடுக்கும் போது.. அது மக்களிடம் எளிமையாகப் போய்ச்சேரும் என்பது கலைவாணர் போன்றவர்களின் நமக்கு உணர்த்திய உண்மை!

நகைச்சுவை மூலம் அழகாக குட்டு வைக்கலாம், உள்குத்தும் வைக்கலாம். அறிவுறை சொல்லலாம். கோபத்தையும் வெளிப்படுத்தலாம். இப்படி எத்தனையோ லாம்.

ஆண்களை விட, அதீத நகைச்சுவையுணர்வு மிக்கவர்கள் பெண்கள் என்பது என் அனுபவம். அதை வெளிப்படுத்திக்கொள்ள நம் சமூகம் தான் அவர்களுக்கு சரியான வாய்ப்புக்களை வழங்கவில்லை என்ற உண்மையைச் சொன்னால் என்னோடு பலர் சண்டைக்கு வரக்கூடும்.
அப்படி நான் ரசித்த ஒரு பதிவு இது. ஆதிரை இதன் மூலம் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதை நீங்களும் உணர்ந்துகொண்டால் எழுதியவருக்கு வெற்றி!

☀ ☀ ☀

இறை நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் வெகுவாக குறைந்து வருகின்றன என்ற உண்மையை பலர் ஏற்க மாட்டார்கள். வெறும் புராண இதிகாச கதை பெருமைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த சன்யாசிகளின் பலர் இன்று, மனித உறவு குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மனித உறவுகளை பேணுவது என்பது மிகுந்த சிரமமான காரியம் அல்ல. ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே பல குடும்பங்கள் பிரச்சனையின்றி இருக்கலாம்.

இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுவது, காதுள்ள கல் தான். ஆனால் வினோதம் என்னவென்றால் காதுகளற்று வாய் உள்ள கல்லாக மட்டுமே பலர் இருக்கிறார்கள். தான் பேசுவதை மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதே சமயம்.. அடுத்தவர் பேச்சை கேட்கத்தயாராக இருப்பதில்லை.

குடும்ப உறவை மேம்படுத்த.. சில ஆலோசனைகளை அள்ளி விடுகிறார் மழைஸ்ரேயா! அம்மணி தைரியமாக கவுண்சிலிங் ஆரம்பித்து விடலாம். :)

☀ ☀ ☀

இன்று பெண்கள் கையில் திணிக்கப்பட்டு விட்ட சமையலில் கெட்டிக்காரர்களாக இருந்தது/இருப்பது ஆண் வர்க்கம் தான். பெண்கள் சரியான நிர்வாகத்திறன் கொண்டவர்கள். ஆனால் ஆண்சூழ்ச்சி அவர்களை அடுப்படிக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டது. அதை உணராகவர்களாகவே இன்றும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

நளன், பீமன் , கிருஷ்ணன் போன்ற புராண இதிகாச பாத்திரங்களில் சமையலில் சிறந்தவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் ஆண்வர்க்கம் தான். இதுபற்றி யோசிக்கும் போது எனக்கு பொன்ஸ் எழுதிய இந்த நூல் குறித்து மிகவும் பிடிக்கும். என்ன வழமை போல.. கரண்டியை கையில் கொடுத்தவர்கள் இந்த பதிவை அதிகம் பேர் பார்வையில் படம்.. ஓரம் கட்டி விட்டார்கள். :(

☀ ☀ ☀

அது போல தமிழ்பதிவுகள் உலகில் தொடர்ந்து சமையல் குறித்து எழுதிவரும் ஜெய்ஸ்ரீயின் பதிவுகள் அடிக்கடி படித்து வருகிறேன் என்றாலும், இந்த பதிவு என் சாய்ஸ்!



தொடர்வேன்..

3 comments:

  1. சுவாரசியமான சாய்சஸ்.. நன்றி

    ReplyDelete
  2. பாலபாரதி,
    சுட்டிகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி பாபா!

    வெற்றி, உங்கள் எதிர்பார்ப்பை முழுமையாகக் முடியாமல்.. பட்டறை வேலைகள். ஆனாலும் நான் தருகின்ற சுட்டிகளில் ஒன்றையேனும் நீங்கள் படிக்காமல் விட்டிருந்தால்..அவை உங்களுக்கு புதியதாக இருந்தால்.. அவையே எனக்கு மகிழ்ச்சி!

    தோழன்
    யெஸ்.பா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது