Monday, April 14, 2008

சுய புராணம்





ஹாய் மக்கள்ஸ்..., ஹலோ.. என்ன? என்னிய வலைச்சரத்துக்கு ஏதோ புது ஸ்டூடண்ட்ட பாக்கற மாதிரி பாக்கறிங்க?. ராகிங் பண்ணலாம்ன்னா?.அதானே நடக்காது .ஏன்னா நான் தான் இந்த வாரம் வாத்தியாராம்ல்ல... ஹெட் மாஸ்டர் முத்துலட்சுமி அக்கா சொன்னாங்க. அவங்களுக்கு நன்றி. எல்லாரும் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க....
(வந்த ஒடனேவா?)

கூடவே என்னிய வாட்ச் பண்ணறதுக்கு பறக்கும் படைக்கு தலைவரா ‘சீனா ஜயா’வ அரேஞ்ச் பண்ணியிருக்கறதா சொல்லியிருக்காங்க..
உங்க அன்பிற்க்கும்,வரவேற்ப்புக்கு மிக்க நன்றிகள் சீனா சார்.

வலைச்சரத்திற்க்கு எழுத நான் கொஞ்சம் டைம் கேட்டப்போ,” உனக்கு 3 வாரம் தான் டைம். அதுக்குள்ள என்ன எழுதறதுன்னு முடிவு பண்ணிக்கோ”ன்னு சொன்னாங்கJ

அட எம்புட்டு தாரளமா 3 மூனு வாரம் தந்திருக்காங்க.. கடைசி வாரத்துக்குள்ள,அதிகம் வெளியில் தெரியாத நல்ல பிளாக்ஸ் எல்லாம், படிச்சு,அதிகம் பேருக்குத் தெரியாத பதிவுகள் லிங்க் கொடுக்கலாம்ன்னு கணக்கு போட்டுட்டு அலட்சியமா இருந்தாக்கா,2 வாரம் வேகமா ஓடிருச்சு. திடீருன்னு முத்துலட்சுமி அக்கா,ஒரு வ.பீ.கோ (வலைசரம் ஃபீனல் கோர்ட்) சட்ட புத்தகம் அனுப்பியிருந்தாங்க.நல்லா இருந்தாலும்,பிரட்சனையான விவாதங்களை தூண்டுற பதிவெல்லாம் அலவுடு கெடையாதுப்பான்னு சொல்லிட்டாங்க.


சரி... வலைசரத்துல முந்தைய வாத்தியார்கள் என்ன எழுதியிருக்காங்கன்னு, வந்து பார்த்தாக்கா..,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......


தமிழ்வலைப்பதிவுகளுல ஒன்னுத்தையும் விட்டு வைக்கலை.எல்லாரும் போட்டிப் போட்டுக்கிட்டு கலக்கியிருக்காங்க.அதுலயும் இந்த இம்சை மாம்ஸ்,மனுஷன் மனசாட்சியே இல்லாம 132 லிங்கோட 23 பதிவு போட்டிருக்காரு.அடுத்து வர்ரவங்களுக்கு ஏதாவது பதிவு மிச்சம் வைக்கனும்ன்னு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம. கர்ர்ர்ர்....

இதையெல்லாம் பார்த்தா நாம புதுசா சொல்ல எதுவுமிருக்காதுன்னு வந்தா கண்டுக்கப்டாதுன்னு விட்டுட்டேன் (வரலைன்னு நெனைக்கறேன்:P).

அதிகம் பிரபல்யமாகாத புதிய நல்ல பதிவுகளை தேடிப்புடிச்சு படிக்கலாம்ன்னா, என் நேரம், புராஜெட் முடியற சமயம்ங்கறதால ஆணியெல்லாம் கடப்பாரை சைஸ்சுக்கு இருக்கு.

சாப்பாடு ,தூக்கத்துக்கப்பறம் அதிமுக்கியமான சாட்டிங்(ஹிஹி) கூட வர முடியலை. திடீருன்னு பாத்தா ,ஒரு நாள் நம்ம முத்து அக்கா, டேய் 14ம் தேதி ஞாபகம் இருக்கு இல்ல?ன்னு மிரட்டினாங்க...:) அப்பத்தான் யோசிச்சேன்.நம்ம சரவணன் மாம்ஸ் கல்யாணத்துக்கு கேட்ட லீவே இன்னும் சரியாகலை.அம்புட்டு ஆணி.இனியும் அப்புறம் பாத்துக்கலாம்ன்னா சரிப்படாது.ஊருக்கு வந்தா எழுத நேரம் கிடைக்காது.அதனால எடு கீபோர்டை,டைப்பு தோனறதைன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.

இன்ஸ்டன்டா ஞாபகம் வர்ர பதிவுகளை அப்படியே உங்களுக்கு வழங்கறேன்.


அப்படியே முதல் பதிவுல நம்மளப் பத்தி சுய தப்பட்டம் அடிச்சுக்க அனுமதி உண்டாமே:P

ரெடி ஸ்டார்ட் மியுஜிக்...

1980வது வருஷம், உலக சரித்திரத்துலயே ஒரு முக்கியமான வருடம். உலகமே தவங்கிடந்த அந்த வாய்ப்பு இந்தியாவில்,பாண்டிச்சேரி என அழைக்கப் படும் புதுவைக்கு கிடைத்தது.

அந்த வருஷம் தான்,ராஜ ராஜ, ராஜ மார்த்தாண்ட,ராஜ கம்பீர,ராஜகுல திலக ஸ்ரீதர சக்கரவத்தி ஜனனம்.


சீனா: ரசிகன் நிறுத்து நிறுத்து.... உன்னோட சுய புராணம்ல்லாம் எல்லாம் சொன்னா எப்போ முடியறது?.சுய தம்பட்டம்ன்னா உன்னோட பதிவு பத்தி சொல்லனும்.

ஓகே... ஓகே.....கூல்..,கூல்...(நாங்களும் சிவாஜி படம் பாத்திருக்கோம்ல்ல..:P).எந்த விஷயத்தையும் முழுசா சொல்ல விடமாட்டேங்கறாய்ங்கப்பா:)

சரி நம்ம பொதுப்பதிவுக்கும், ஒரு சரம் தொடுத்த மாதிரி இருக்கட்டுமேன்னு கொடுத்திருக்கேன். கலந்து தர்ரத விட, அவங்கவங்களுக்கு புடிச்ச பிரிவுல போய் பாத்துக்கோங்க மக்கள்ஸ்.

முதல் முத்தம்.முதல் காதல்.முதல் பிரசவம்,முதல் மரணம் (அவ்வ்வ் ஏதோ ஒரு ஃபுலோவுல வருது கண்டுக்காதிங்க:P)
போல,நான் எழுதிய எனது முதல் எழுத்துப்பதிவுஎனது துபாய் இரவு அனுபவப்பதிவு .


பிராணிகளிடத்தில் இரக்கம் தேவையா?-ஒரு சொந்த அனுபவம்

மற்ற அனுபவப் பதிவுகள்

என் மொபைல் நம்பரை மறந்த மஞ்சக்காட்டு மைனா..

தீபாவளியா?.....தீபா"வலி"யா?...

விடுமுறை கொண்டாட்டம், அப்போது எனக்கு அறிமுகமாகியிருந்த பதிவுலக நண்பர்களுடன் கொண்டாடிய கலக்கப் போவது யாரு?..ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்.

கலக்கப்போவது யாரு? ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் -சீசன் -I

கலக்கப்போவது யாரு? ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்- சீசன்-II

கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-இறுதிப்பகுதி)

கதை என்ற பெயரில் குதறியவை

இன்று, அவளிடம் என் மனதைச் சொல்லிவிடப் போகிறேன்...

எச்சரிக்கை : பலவீன இதயம் கொண்டவர்கள் தயவு செய்து இதை படிக்கவேண்டாம்...

நவீன பாஞ்சாலிகள்.


சமுகத்தைப் பற்றிய பதிவுகள் (நாங்களும் டென்ஷன் ஆவோம்ல்ல:P )

கொலை செய்ய லைசென்ஸ்? -டாக்டர்கள் ஜாக்கிரதை.

கிராமபுற சேவையா? மருத்துவ பயிற்சியா?

பள்ளிக்கூடம்- நிஜமாகுமா?

தண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....

என்ன கொடுமைங்க இதெல்லாம்?...

வேலைத்தேடிக் கொண்டிருக்கும் பெண்களே.. உஷார்..

திருடனுக்கு தேள் கொட்டினாக்கா எப்பிடியிருக்கும்..?

எல்லாரும் சினிமாவுக்குத்தான் விமர்சனம் போடுவாங்க, கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு என்னை கவர்ந்த இடுகைகளுக்கு விமர்சனம் போட்ட பதிவு.

மாமியாரை நான் எதுக்கு வாழ்த்தனும்?..

பதிவிலேயே பின்னூட்டம் போடுவோர் சங்கம்.

பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் சங்கம் ..- இடுகை 3

மீசை வைச்ச ஆம்பளைங்களிடம் ஒரு கணக்கெடுப்பு



கொஞ்சம் அறிவியல்

சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் (இளையவர்களுக்கான விஞ்ஞானம்) - இடுகை1(ஒலிப் பட்டையுடன்)...(சொந்தக் குரலில் ஒலிப் பதிவு – முதல் முயற்சி)

பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...

மறுப்பிறவி- ஒரு விஞ்ஞான அலசல்...(பாகம்-1 உடல்)

கொஞ்சம் மொக்கைஸ்..

சானியா மிர்சாவும், படங்களும்.

தமிழ் பெண் பதிவர்களுக்கு ஒரு கேள்வி

பத்து நிமிசத்தில் கவிதை எழுத கத்துக்கனுமா?(பின்குறிப்பு: முன் அனுபவம் தேவையில்லை)

ஹலோ.. யாருப்பா..அது? ”எல்லாமே மொக்கையாதானே இருக்கு?.இதுக்கு மொத்தமா பிளாங்க் லிங்கயே தந்திருக்கலாம்ல்லன்னு சொல்லறது???.
முதல் பதிவு-சுய புராணம். கண்டுக்கப்டாது ஆமா:P


நம்ம கும்மி மக்கள்ஸ் எல்லாம் குசும்பர் கல்யாணத்துக்கு
பயணத்துல இருக்கறதால தாக்குதல் கம்மியாத்தான் இருக்கும் என்ற ஆறுதலுடன் (யாருக்குத் தெரியும்? அங்கிருந்தே மிசைல் அனுப்பினாலும் அனுப்புவாங்க நம்ம மக்கள்ஸ்.அவ்ளோ பொறுப்புணர்ச்சி: P) & அன்புடன்
உங்கள் ரசிகன்...

41 comments:

  1. இரசிகனுக்கு வாழ்த்துக்கள் :)
    (கும்மனுமா?)

    ReplyDelete
  2. பதிவர்களுக்கு php பாடமா ? எல்லாம் coding ஆக இருக்கு !
    :)

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. //கோவி.கண்ணன் said...
    பதிவர்களுக்கு php பாடமா ? எல்லாம் coding ஆக இருக்கு !
    :)//

    repeatu ;-)

    வாழ்த்துகள் thala

    ReplyDelete
  4. கலக்குங்க ரசிகன்மாமா

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    இப்படிக்கு,

    ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றம்
    தோஹா

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ரசிகன். இப்போதைக்கு ஒத்த கமெண்ட், திருவாரூர்ல இருந்து வந்துட்டு போடறேன் மிச்ச கமெண்ட்டு.

    ReplyDelete
  8. மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    // கோவி.கண்ணன் said...
    பதிவர்களுக்கு php பாடமா ? எல்லாம் coding ஆக இருக்கு !
    :)

    வாழ்த்துகள்!
    //

    ReplyDelete
  9. வாத்தியார் என்றவுடனே பாடமா...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இந்த வாரம் முழுவதும் பட்டயக் கிளப்ப வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் தலைவா ;))

    கலக்குங்க ;)

    ReplyDelete
  13. //தமிழ் பிரியன் said...

    இரசிகனுக்கு வாழ்த்துக்கள் :)
    (கும்மனுமா?)//

    முதல்ல வந்ததுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.இந்தாங்க பிடிங்க ஒரு லெமென் டீ.

    என்னதிது கேள்வி? உங்களுக்கு இல்லாத உரிமையா ? நடத்துங்க..நடத்துங்க:)))))))

    ReplyDelete
  14. //கானா பிரபா said...

    //கோவி.கண்ணன் said...
    பதிவர்களுக்கு php பாடமா ? எல்லாம் coding ஆக இருக்கு !
    :)//

    repeatu ;-)

    வாழ்த்துகள் thala//
    ஹிஹி..நன்றிகள் மாம்ஸ்.. என்னவோ கோடு,புள்ளில்லாம் தானா வந்துச்சு(ஒருவேளை அரசியல்ல இருந்தாக்கா, இது எதிர்கட்சியின் சதின்னு பேசியிருக்கலாம்:P) இப்போ சரியாகிருச்சுங்க மாம்ஸ்:)

    ReplyDelete
  15. // கோவி.கண்ணன் said...

    பதிவர்களுக்கு php பாடமா ? எல்லாம் coding ஆக இருக்கு !
    :)

    வாழ்த்துகள்!//

    கொடுத்துடலாம்..:))))))
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே:)

    ReplyDelete
  16. //Blogger நிலா said...

    கலக்குங்க ரசிகன்மாமா//

    ரொம்ப தாங்க்ஸ்டா நிலா செல்லம்.:)
    நீ குசும்பன் மாம்ஸ் கல்யாணத்துக்கு கிளம்பிக்கிட்டிருக்கறதா நந்து அங்கிள் தானே சொன்னாங்க :)அங்க ஸ்ரீ மாம்ஸ் சார்புல நீதான் கல்யாணத்தை பொறுப்பா நடத்தி வைக்கனும் சரியா?:)

    ReplyDelete
  17. //ஆயில்யன். said...

    வாழ்த்துக்கள்

    இப்படிக்கு,

    ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றம்
    தோஹா?//

    சங்கத்தின் சார்புல வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மாம்ஸ்.

    ReplyDelete
  18. //மங்களூர் சிவா said...

    வாழ்த்துக்கள் ரசிகன். இப்போதைக்கு ஒத்த கமெண்ட், திருவாரூர்ல இருந்து வந்துட்டு போடறேன் மிச்ச கமெண்ட்டு//

    நன்றிகள் மாமேய்.. நீங்க இன்னேரம் டிரெய்ன்ல டிராவல் பண்ணிக்கிட்டிருக்கறதா தானே சொன்னாங்க :)))
    அந்த அவசரத்துலயும் வாழ்த்துக்கள் சொன்னதுக்கு தாங்க்ஸு.

    ReplyDelete
  19. //Blogger TBCD said...

    மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    // கோவி.கண்ணன் said...
    பதிவர்களுக்கு php பாடமா ? எல்லாம் coding ஆக இருக்கு !
    :)

    வாழ்த்துகள்!//

    அடடா.. உங்க மறுமொழிதலுக்கு நன்றிகள் மாம்ஸ்.. (ரிப்பீட்டுக்குன்னு சொன்னா சண்டைக்கு வருவிங்களே:P):)))

    ReplyDelete
  20. //TBCD said...

    வாத்தியார் என்றவுடனே பாடமா..//

    பின்ன நம்மக்கிட்ட சாக்பீஸ குடுத்துட்டா ஆரம்பிச்சுற வேண்டியது தானே :))))))

    (அதுசரி .. (செய்தி/பொழுதுபோக்கு)பத்திரிக்கை,கதை எல்லாம் உருவாக்கறவங்கள ஏன் ஆசிரியர்ன்னு சொல்லராங்க? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்:)

    ReplyDelete
  21. // திகழ்மிளிர் said...

    வாழ்த்துக்கள்//

    நன்றிகள் திகழ்மிளிர்.

    ReplyDelete
  22. //பிரேம்குமார் said...

    இந்த வாரம் முழுவதும் பட்டயக் கிளப்ப வாழ்த்துக்கள்?/

    நீங்க வந்துட்டிங்கல்ல,.. கிளப்பிருவோம்:))

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பிரேம்:)

    ReplyDelete
  23. // கோபிநாத் said...

    வாழ்த்துக்கள் தலைவா ;))

    கலக்குங்க ;)//
    வாங்க மாம்ஸ்.. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்:)

    ReplyDelete
  24. அட, நேத்து சாட்டும்போது சொல்லி இருக்கலாம்லே இன்னிலேருந்து ஆரம்பிக்குதுனு, நான் அடுத்த வாரம்னு இல்லை நினைச்சேன்! :)))))))))))))
    வாழ்த்துகள்,
    உங்க டீச்சர் நான் அப்படினு சொல்லி இங்கேயாவது மானத்தை வாங்காமல் இருங்க கொஞ்சம். தினமும் வந்து எ.பி,. சோதிப்பேன்.! :P

    ReplyDelete
  25. அட கொடுமையே! :P

    ReplyDelete
  26. //என் நேரம், புராஜெட் முடியற சமயம்ங்கறதால ஆணியெல்லாம் கடப்பாரை சைஸ்சுக்கு இருக்கு.//

    என்ன நிசமாவா??அடக்கடவுளே,நீங்க அலுவகத்தில் வழக்கம் போல "கடலை" சாப்பிட்டுகிட்டு இருந்தீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன் :P

    ReplyDelete
  27. சுயபுராணத்துக்கே இம்புட்டு சுட்டிகளா?அப்போ மத்தவங்க புராணத்துக்கு...ஆஹா ;)

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள். லின்க் எல்லாம் வழக்கம் போல இனி தான் படிக்கோணும் :)

    ReplyDelete
  29. வாழ்த்துகள் ரசிகன்...

    ReplyDelete
  30. சுட்டிகள் அனைத்தும் இனிமேல் நேரம் கிடைக்கும்போது தான் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் ரசிகன்!!!

    ReplyDelete
  32. // கீதா சாம்பசிவம் said...

    அட, நேத்து சாட்டும்போது சொல்லி இருக்கலாம்லே இன்னிலேருந்து ஆரம்பிக்குதுனு, நான் அடுத்த வாரம்னு இல்லை நினைச்சேன்! :)))))))))))))
    வாழ்த்துகள்,
    உங்க டீச்சர் நான் அப்படினு சொல்லி இங்கேயாவது மானத்தை வாங்காமல் இருங்க கொஞ்சம். தினமும் வந்து எ.பி,. சோதிப்பேன்.! :P//

    அக்கா கஷ்டப் பட்டு எ.பி(எழுத்துப்பிழை) இல்லாம முயற்ச்சி பண்ணுறேன். ஆனா எப்படியும் ஏதாவது பிழை உங்க கண்ணுல மட்டும் எப்டி மாட்டுதுன்னே தெரியலையே:))))

    வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும், முதல்பதிவுன்னு திட்டாம விட்டதுக்கும் நன்றி அக்கா.:)

    ReplyDelete
  33. //துர்கா said...

    அட கொடுமையே! :P//

    :P:P:P :D

    ReplyDelete
  34. // துர்கா said...

    //என் நேரம், புராஜெட் முடியற சமயம்ங்கறதால ஆணியெல்லாம் கடப்பாரை சைஸ்சுக்கு இருக்கு.//

    என்ன நிசமாவா??அடக்கடவுளே,நீங்க அலுவகத்தில் வழக்கம் போல "கடலை" சாப்பிட்டுகிட்டு இருந்தீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன் :P//

    அவ்வ்வ்வ்வ்.... எல்லாரையும் தன்னைப்போலசே நெனைச்சுக்கிறது நம்ம அப்பாவி சிறுமிக்கு வழக்கமா போச்சு:P

    ReplyDelete
  35. //துர்கா said...

    சுயபுராணத்துக்கே இம்புட்டு சுட்டிகளா?அப்போ மத்தவங்க புராணத்துக்கு...ஆஹா ;)//

    ஹிஹி.. சமமா இருக்கோனுமில்லையா? வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நம்ம அ(ட)ப்பாவி சிறுமி துர்காவுக்கு நன்றிகள்:)

    என்னா கும்மி ? பரிட்சை சமயத்துல படிக்காம!!! :P

    ReplyDelete
  36. //தஞ்சாவூரான் said...

    வாழ்த்துக்கள். லின்க் எல்லாம் வழக்கம் போல இனி தான் படிக்கோணும் :)//

    நன்றிகள் நண்பரே:) ஊருக்கு இப்போ தானே வந்திங்க. மெதுவா நேரம் எடுத்துக்கிட்டு படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க:)

    ReplyDelete
  37. //ஜே கே | J K said...

    வாழ்த்துகள் ரசிகன்...//

    வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மாம்ஸ்

    ReplyDelete
  38. //cheena (சீனா) said...

    சுட்டிகள் அனைத்தும் இனிமேல் நேரம் கிடைக்கும்போது தான் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்.

    நல்வாழ்த்துகள்//

    ஹிஹி.. சீனா சார்..இதுல சொன்ன பதிவு எல்லாமே நீங்க படிச்சது தான்:P

    தமிழ்ப் பதிவுலகத்துல நீங்க படிக்காத இடுகைகள விரல்விட்டு எண்ணிறலாம்ல்ல..:))
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா:)

    ReplyDelete
  39. //Divya said...

    வாழ்த்துக்கள் ரசிகன்!!!//

    வருகைகளுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் திவ்யா மாஸ்டர்:)

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் ரசிகன்!

    ReplyDelete
  41. ரசிகன் கலக்கறீரு..நல்லா நகைச்சுவையா அசத்தபோவாதாரு வாத்தியாரு மாதிரியே ஹி ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete