Monday, February 16, 2009

தேவகுமாருக்கு பிரியாவிடையும் - நாமக்கல் சிபிக்கு வரவேற்பும்

அன்பின் பதிவர்களே !

ஒரு வார காலமாக, அருமை நண்பர் மருத்துவர் தேவகுமார் என்ற தேவன்மாயம் அவர்கள் கடுமையாக உழைத்து, கொடுத்த பொறுப்பினை நிறைவேற்ற அரும்பாடு பட்டு, பல பதிவுகளை இட்டு, ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவர் புதுமையாக, ஒரு நல்ல சிந்தனை, ஒரு மருத்துவக் குறிப்பு, பதிவர்கள் அறிமுகம், ஒரு கதை/கவிதை மற்றும் ஒரு பொன்மொழி என பல்வேறு பகுதிகள் கொண்ட அமைப்பாகப் பதிவுகளை இட்டிருக்கிறார். அவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் அனைவருமே புதியவர்கள் / கவிஞர்கள் / ஆழ்ந்த சிந்தனையாளர்கள். அனைவரும் சுட்டிகளைச் சுட்ட வேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுதி இருக்கிறார்.

அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிக்கிறோம்
------------------------------------------------
பதினாறாம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் நாமக்கல் ஷிபி ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அவர் ஏறத்தாழ எட்டு குழுப் பதிவுகளிலும் , மூன்று தனி பதிவுகளிலும் எழுதி வருகிறார். கும்மி அடிப்பதில் மன்னரவர். மொக்கை மெயில் என்ற கூகிள் குழுமத்தில் கலக்குகிறார். பொறியியல் வல்லுனரான இவர் கணினித்துறையில் மென்பொருளாளராகப் பணி புரிகிறார். இவரை அனைத்து நண்பர்களும் அன்புடன் மாநக்கல் ஷிபி என அழைக்கின்றனர். அந்த அளவிற்கு நக்கல் அடிப்பவர் ( நண்பர்களை மட்டுமே ).

நயந்தாராவின் நண்பர் ( ???) - இவரை வருக வருக என வரவேற்று பொறுப்பினை மகிழ்வுடன் ஒப்படைக்கிறேன். ( என்ன பண்ணப் போறாறோ தெரில - பாப்போம்).

நல்வாழ்த்துகள் மாநக்கலாரே !

சீனா
-----------------

14 comments:

  1. வாழ்த்துக்கள்

    தேவாவுக்கும்

    சிபிக்கும்.

    ReplyDelete
  2. தேவாவிற்கு நன்றிகள் !!!!!!!

    புதிய ஆசிரியர் நாமக்கல் சிபிக்கு வாழ்த்துகள் !!!!

    ReplyDelete
  3. நாமக்கல் சிபிக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சிபி.

    ReplyDelete
  5. 'மாநக்கல்' சிபி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
    <(நயன்தாரா நண்பராஆஆஆஆஆ.....)>

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தேவா பணியினை சிறப்பாக முடித்ததற்காக.

    சிபி...வருக வருக ..
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  8. தேவா,தங்கள் பணியைச் சிறப்பாக குட்டிக்கதைகள்,கவிதைகள்,
    வைத்தியம என்று கலக்கிட்டீங்க.
    நிறைவான வாழ்த்துக்கள்.இனித் தேநீர் தந்து பதிவுகள் தொடரும்தானே உங்கள் பதிவுகள் !

    சிபி அவர்களை அன்போடு வாழ்த்துச் சொல்லி வரவேற்றபடி....!

    ReplyDelete
  9. சிபிக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஏழு நாட்கள் வெற்றிகரமாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று வெற்றியுடன் நடத்தி முடித்தற்கு எனது காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள் தேவா!!!

    ReplyDelete
  11. நாமக்கல் சிபிக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நம்ம சிபியா ?

    அவர் ஆவிகளுடனும் 'தொடர்பு' 'வைத்திருப்பவர்' ஆயிற்றே !

    ReplyDelete
  13. //நயந்தாராவின் நண்பர்//

    இதுக்கே எனது மாபெரும் நன்றி!..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  14. நாமக்கல் சிபிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete