Sunday, August 30, 2009

நன்றி சுரேஷ் ‍- வருக வருக சக்கரை சுரேஷ்

கடந்த ஒரு வார காலமாக நண்பர் சுரேஷ் ஆசிரியப் பொறுப்பினை அருமையான முறையில் நிறைவேற்றி இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் பல அரிய இடுகைகளையும் பல பதிவர்களையும் அறிமுகப்படித்தி உள்ளார். தனது நிச்சயதார்த்தப் பணிகளுக்கு இடையேயும் ஏற்ற பொறுப்பினிற்காக நேரம் ஒதுக்கியமைக்கு பாராட்டுகள்.

அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவினிலேயே இனிய இல்லற வாழ்வினில் ஈடுபடவும் நல்வாழ்த்துகள்.

அடுத்து 31.08.2009ல் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சக்கரை சுரேஷ் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மென்பொருளாள‌ராகப் பணியாற்றுகிறார். இனிப்பானவரானதால் சக்கரை சுரேஷ் என அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய முழு விவரம் அறிய ஆசைப்படுபவர்கள் இங்குசெல்க.இவர் சக்கரை என்னும் பதிவினில் எழுதி வருகிறார்.

அருமை நண்பர் சுரேஷ்குமார் என்ற சக்கரை சுரேஷினை வலைச்சரம் சார்பினில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன். இனிய இடுகைகளை அள்ளித் தருக என வேண்டுகிறேன்

சீனா

6 comments:

  1. வாங்க சக்கர...

    இப்பதான் எழுதணுன்னு தோணியதா?

    வலைச்சரம் மூலம் தங்களை சந்திக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி....

    வருக வருக

    ReplyDelete
  2. வலைச்சரம் மூலம் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  3. வருக, வருக நண்பர் சக்கரை சுரேஷ் அவர்களே...

    ReplyDelete
  4. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  5. வா மச்சான்

    வாழ்த்துகள்.

    ReplyDelete