Friday, October 9, 2009

நான் பின்பற்றும் வலைப்பதிவர்கள்...

அதிஷா:- வினோத்..

வலையுலகில் நான் படித்த முதல் பதிவர் அதிஷா அண்ணன்..அவர்களின் வலைப்பூவைத்தான் தொடர்ந்து வாசித்துவந்தேன்..முதலில் தொலைபேசியில் உரையாடல் கொண்டதும் அவர்களுடனே..அவரின் உதவியால் தான் வலைப்பூ ஆரம்பித்தேன்..அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

அவரது படைப்பினில் எனக்கு மிகவும் பிடித்தது...

இன்பக்கதைகள் இன்பினிட்டி(6)

இருபத்திநான்கு வரி ஹைக்கூ..

பிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்!

************************

சாளரம்:- கார்க்கி...


இவரது பல பதிவுகளை படித்து மிகவும் சிரித்ததுண்டு..புட்டிக்கதைகள் எழுதி வருகிறார்..நிறைய மொக்கைகள்,விஜய் பற்றின தகவல்கள் என இவர் எழுதும் அனைத்தும் தொடர்ந்து படிப்பேன்...இவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்..சொல்லப்போனால் காலையில் வந்ததும் பத்து மணிக்கு நான் பார்க்கும் முதல் பதிவு இவரோடுதான்..

உலகை அழிக்க வந்த உலக அழகி...

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?...


அனிதா காலிங்..

************************

வால்பையன்:- அருண்..

பொதுவாக அனைவரது பதிவிலும் இவரது பின்னூட்டத்தினை காண முடியும்..அந்த அளவுக்கு வாசிப்பு அனுபவம் கொண்டவர்...எதிர் கவுஜ எழுதுவதில் திறமையானவர்..அடிக்கடி விவாதங்கள் நடத்துவார்..இவரை ஒருமுறை பார்த்தாலும் இன்றும் என்மனதில் நிற்கிறார்..பழகுவதற்கு இனிமையானவர்..என்றும் இளமையானவர்..அட நிஜமாதாங்க..

வெளியேறிய கவிதைகள்!

கதை சொல்லும் கதை!

செத்துப்போன தருணங்கள்!

பொன்னியின் செல்வன்:- கார்த்திக்..

என்னையும் பதிவர் என நினைத்து முதன் முதலாக எனக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்து விருந்து பறிமாறியவர்..நிறைய பரிவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்..இவரது படைப்புகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்..

மூன்று கவிதைகள்..!!!

பிரியமான தோழிக்கு...!!!

ரயில் பயணங்களில்...!!!

13 comments:

  1. //ஒருமுறை பார்த்தாலும் இன்றும் என்மனதில் நிற்கிறார்..பழகுவதற்கு இனிமையானவர்..என்றும் இளமையானவர்..அட நிஜமாதாங்க..//

    அண்ணே நீங்க ரொம்ப நல்லவருன்னு அடிக்கடி நிறுபிக்கிறிங்கண்ணே!

    உங்களுக்கு எப்படி கைமாறு செய்யறதுன்னே தெரியல!

    ReplyDelete
  2. என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி தம்பி.. வலைச்சரம் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அன்பு

    ReplyDelete
  4. அதிஷா:- வினோத்..., சாளரம்:- கார்க்கி..., வால்பையன்:- அருண்.., இவர்கள் மூவரையும் சென்னை சிறுகதைப் பட்டறையில் தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அனைவருடனும் அன்பாக பழகுகிறார்கள். அனைவருமே பலராலும் வாசிக்கப்படும் பதிவர்கள்.

    அதில் கார்த்திகைப் பாண்டியனின் சில பதிவுகளை நான் விரும்பிப் படித்ததுண்டு. "போதிமரம்..!!!" அவற்றுள் ஒன்று. "வரலாறும் தமிழகத்தடங்களும்..!!!" கூட அவர் எழுதியவற்றில் நான் விரும்பிய பதிவு.

    பகிர்விற்கு நன்றி...

    ReplyDelete
  5. கார்த்திக் அண்ணாவின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.. வாழ்த்துக்கள் அன்பு.

    ReplyDelete
  6. //வால்பையன்..என்றும் இளமையானவர்..அட நிஜமாதாங்க..//

    நம்பறேங்க....

    வழிமொழிகின்றேன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமையான அறிமுகம் அன்பு

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ஐந்தாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. நீங்கள் கூறி இருக்கும் அனைவருமே அருமையான எழுத்தாளர்கள்
    இவர்கள் என்ன எழுதினாலும் ரசிக்க முடியும்.

    ReplyDelete
  10. //
    //ஒருமுறை பார்த்தாலும் இன்றும் என்மனதில் நிற்கிறார்..பழகுவதற்கு இனிமையானவர்..என்றும் இளமையானவர்..அட நிஜமாதாங்க..//

    அண்ணே நீங்க ரொம்ப நல்லவருன்னு அடிக்கடி நிறுபிக்கிறிங்கண்ணே!

    உங்களுக்கு எப்படி கைமாறு செய்யறதுன்னே தெரியல!
    //

    அன்புக்கு என்ன செய்யலாம்னு யோசிங்க யோசிங்க :))

    ReplyDelete
  11. அன்பு கலக்கல் அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அனைவரும் அறிந்த அறிமுகங்கள் அருமை அன்பு.

    ReplyDelete
  13. வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete