வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Tuesday, October 20, 2009
கடவுள் வாழ்த்து
வாங்க நல்ல மனசுக்காரங்களே.. போன பதிவுல இருந்த லிங்க்ல போய் என் வலைப்பூவைப் பார்த்தீங்களா.. இப்போ தெரிஞ்சிட்டு இருப்பீங்க.. என்னைப்பத்தி.. கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.. .. எந்த கடவுள்கிட்ட வேண்டறது, எப்படி வேண்டறதுன்னு கவலைப்படாதீங்க.. இப்போ நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் விவரங்களைத் தர்றேன்.. அதை வச்சி எந்தக் கடவுள,எப்படி எப்படி பூஜை பண்ணி வேண்டனுமோ..அப்படியெல்லாம் வேண்டிக்கோங்க..
எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
கமலா சனத்துக் கற்பகமே
என பாரதியால் பாடப்பெற்ற முழுமுதல்வன் முந்தி விநாயகன் பெயரிலான வலைப்பூ இது
இவ்வலைப்பூவின் பெயரே மூத்த விநாயகர் கோவில்.இதில் நிறைந்திருக்கும் ஆன்மீக விஷயங்களைப் பற்றி விளக்க மேலும் சாட்சி வேண்டுமோ?
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேரிய பெம்மா னிவனன்றே
எனத் திருநான சம்பந்தரால் பாடப் பெற்ற சிவனைப் போற்றும் வலைப்பூ இது
சிவத்தமிழோன்
சைவசமய நீதியினைப் பற்றி சிந்தையில் சிவனை நிறுத்தி விளக்கும் வலைப்பூ இது..பிற ஆன்மீக வலைப்பூக்களுக்கும்,சிவநெறி தொடர்பான யூட்யூப் வீடியோக்களுக்கும் கூட சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது
சிவனின் மற்றுமோர் வடிவான சந்திரசேகரரின் நிழற்படங்களோடு,கார்த்திகை சோமவார மகிமையையும் அறியத்தருவது இப்பதிவு ஒரு நடை போய்வாங்க
கேதார கெளரி விரதச் சிறப்பை அறியவும், அது தொடர்பான பாடல்களைத் தரவிறக்கவும் இங்கே முயற்சிக்கலாம்
பிரதோஷ விரதத்தின் விவரங்கள் வேண்டுமா.. இதோ இங்கே இருக்கு.வருடத்தின் எல்லா நாட்களின் ஆன்மீகச் சிறப்புகளும் இவ்வலைப்பூவில் உள்ளன
திருநந்தீஸ்வரம் போக ஆசையா? அங்கே போகாமலேயே அத்திருத்தலத்தின் ஒவ்வொரு பகுதியையும் காண இங்கே சென்றாலே போதுமே
கரும்பும்,கணை ஐந்தும் பாச அங்குசமும்,கைக்கொண்டு அடியேன்
திரும்பும் திசை தொறும் தோற்றிக் கண்டாய் இசைத் தேக்கு மணிச்
சுரும்பு உண்ட காவியும்,சோதி நிலாவும்,துளிரும் சற்றே
அரும்பும் கனம் குழலாய், மதுராபுரி அம்பிகையே
எனப்பாடப் பெற்ற மீனாட்சி அம்மன் புகழ் பாடும் வலைப்பூ இது
மீனாட்சி அம்மன் கோயில் உலா என்னும் இப்பதிவு,அக்கோயிலுக்கே நேரில் சென்றுவந்ததைப் போன்ற நிறைவைத் தருகிறது.
இறைவனின் புகழ்பரப்ப விளையும் இவரின் இந்த வலைப்பூவில் பல்வேறு திருத்தலங்களின் கருடசேவை உற்சவங்கள் நிழற்படங்களொடு மிளிர்கின்றன.இந்த வலைப்பதிவரின் மற்ற வலைப்பூக்களையும் பார்த்தீர்களானால் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பல செய்திகளையும் அறியலாம். பல்வேறு கடவுள்களின் நிழற்பட தரிசனமும் கிடைக்கும்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் வரைமுறையும்,வழிமுறையும் வேண்டுமா?
இதோ உதவிகரமான குறிப்புகள்
இன்னும் நெறைய நெறைய வலைப்பூக்கள் ஆன்மீகத்தைப் பத்தி பேசுதுங்க.. ஆனால் அது எல்லாம் ஏற்கனவே வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு..
எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க.
மேலும் பல புதிய வலைப்பூக்களோடு அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுவது... இயற்கை மகள்
//கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.//
ReplyDeleteஅந்த கடவுளே அபப்டி தான் வேண்டிகிட்டு இருக்கிரதா கேள்விப்பட்டேன்!!!
சென்டிமென்டா சாமி கும்பிட்டு துவங்கி வைச்சுட்டீங்க :)
ReplyDeleteஆரம்பமே கடவுள் வாழ்த்து :) நல்ல செண்டிமெண்ட்ங்க.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபக்திமணம் கமழுது
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆர்மபமே பக்தி மணம் கமழுதே!!
ReplyDeleteமனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
ReplyDeleteநினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
கமலா சனத்துக் கற்பகமே//
நாக்கெல்லால்..ம்,, கொளறுதே!!
//எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//
ReplyDeleteரைட்டு !
ஆரம்பமே கடவுள் வாழ்த்து :)
ReplyDeleteசூப்பர்.
Good start..
ReplyDeleteall the best
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகுறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
ReplyDeleteகுறை ஒன்றும் இல்லை கண்ணா
நல்ல பதிவு
ஆண்டவா இயற்கையிடம் இருந்து காப்பாத்து
ReplyDeleteஎதிரிகளை நான் பார்த்துக் கொள்கின்றேன்
:)
இருப்படிக்கிற இடத்துல இந்த ஈக்கு வேலையில்லை!
ReplyDeleteகும்மி அடிக்கும் போது வந்து கலந்துகிறேன்!
இரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்க சொல்லிய வலைப்பூ எதுவும் இதுவரை பார்த்ததில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கின்றேன்.
தகவல்களுக்கு நன்றி.
அழகும் மணமும் பயனும் நிறம்பிய
ReplyDeleteமலர்களை எடுத்து சரம் தொடுத்துள்ளீர்கள்.
பொங்கும் மங்களம்
எங்கும் தங்கட்டும்!
பக்தி மணம் கமழும் சரம்.இறைவனுக்கு படைக்கத் தகுந்தது
ReplyDelete:-)))
ReplyDeleteவாழ்த்துக்கள் இயற்கை.
ReplyDeleteஎன் வலைப்பூ தங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி. இங்கே குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி
ReplyDeleteஇரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் அக்கா..
ReplyDeleteஅருமை... தொடருங்கள்...
ReplyDeleteஎதோ இன்னிக்கு கடவுள் விஷயமா போனதால கும்மிக்கு லீவு விடப்படுகிறது.. !
ReplyDeleteஎல்லா கடவுளரின் அருளோடு நாளைக்கு இறங்கி கும்மப்படும்..!!
//குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.//
அந்த கடவுளே அபப்டி தான் வேண்டிகிட்டு இருக்கிரதா கேள்விப்பட்டேன்!!!//
ஆமா..நானும் கேள்விப்பட்டேன்..
நரகத்துல பாவிகளுக்கு தண்டனையா இவங்க ப்ளாகை தான் தினமும் நூறு முறை படிக்க சொல்றாங்களாம்..
மேலும் தகவலுக்கு நாரதரை அணுகவும்..!!
அறிமுகப்படுத்த உபயோகித்த பாடல்கள் மிக அருமை.
ReplyDeleteரொம்ப பக்தியோ நீங்க? சாமியோட ஆரம்பிக்கிறீங்க?
//
ReplyDeleteவாங்க நல்ல மனசுக்காரங்களே..
//
இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரனகலமாக்கிடுராங்கப்பா..
/விடைபெறுவது... இயற்கை மகள் /
ReplyDeleteரொம்ப சந்தோஷம்...:)
//
ReplyDeleteஇந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.. .. எந்த கடவுள்கிட்ட வேண்டறது, எப்படி வேண்டறதுன்னு கவலைப்படாதீங்க.. இப்போ நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் விவரங்களைத் தர்றேன்..
//
ம்ம்.. எந்த தெய்வத்த வேண்டினாலும் உங்க தொல்லை தீராதுனு குருவி ஜோசியன் சொன்னான்..
எல்லா பூக்களுமே எனக்கு புதியவை.. இயன்றஅளவு சென்று பார்க்கிறேன்.. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..
ReplyDeleteசொல்ல மறந்துட்டனே..
ReplyDeleteஇரண்டாம்நாள் வாழ்த்துக்கள்..
/போன பதிவுல இருந்த லிங்க்ல போய் என் வலைப்பூவைப் பார்த்தீங்களா.. இப்போ தெரிஞ்சிட்டு இருப்பீங்க./
ReplyDeleteநேத்து நிறைய பேரு இங்க வந்து இருந்தாங்க....இன்னைக்கு ஏன் வரலைன்னு இப்ப தான் தெரியுது:)
//குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//கடவுளே ..இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.//
அந்த கடவுளே அபப்டி தான் வேண்டிகிட்டு இருக்கிரதா கேள்விப்பட்டேன்!!!
//
நல்லா ஆரம்பிச்சிட்டீங்களா..ம்ம்ம்
//சின்ன அம்மிணி said...
ReplyDeleteசென்டிமென்டா சாமி கும்பிட்டு துவங்கி வைச்சுட்டீங்க :)
//
ஆமாங்க. அதையும் காமெடி பண்றாங்க பாருங்க..
வருகைக்கு நன்றிங்க ஆதவன்
ReplyDeleteநன்றிங்க புதுகைத் தென்றல்
ReplyDelete/Suresh Kumar said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
/ வாங்க சுரேஷ்குமார். வாழ்த்திற்கு நன்றி
/தேவன் மாயம் said...
ReplyDeleteஆர்மபமே பக்தி மணம் கமழுதே!!
/
வாங்க டாக்டர். எப்படியோ மனம் விரும்பும் மணமாக இருந்தால் சரி
//தேவன் மாயம் said...
ReplyDeleteமனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
கமலா சனத்துக் கற்பகமே//
நாக்கெல்லால்..ம்,, கொளறுதே!!
//
வாய்விட்டுப் படிக்கதீங்க டாக்டர். என்னை மாதிரி மனசுக்குள்ளயே சொலிகோங்க:-)
/ஆயில்யன் said...
ReplyDelete//எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//
ரைட்டு !
/
எப்போ போகச்சொல்லுவாங்கன்னு சான்ஸ் பார்த்துட்டு இருக்கீங்களா பாஸ்
/மங்களூர் சிவா said...
ReplyDeleteஆரம்பமே கடவுள் வாழ்த்து :)
சூப்பர்.
/
நன்றிங்க சிவாண்ணா
Thanks Jeevs anna:-)
ReplyDelete//S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
//
இரண்டாம் நாள் நன்றிகள்:-)
/சிட்டுக்குருவி said...
ReplyDeleteகுறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
நல்ல பதிவு
/
மிக மிக நன்றி
//இயற்கை said...
ReplyDelete/ஆயில்யன் said...
//எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//
ரைட்டு !
/
எப்போ போகச்சொல்லுவாங்கன்னு சான்ஸ் பார்த்துட்டு இருக்கீங்களா பாஸ்//
ஹாஹாஹா..தெரிஞ்சா சரி..!!
//இயற்கை said...
ReplyDelete//தேவன் மாயம் said...
மனதிற்சலனமில்லாமல், மதி யிலிருலே தோன்றாமல்
நினைக்கும் பொழுதுநின் மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய திவையுந்தர நீ கடவாயே
கமலா சனத்துக் கற்பகமே//
நாக்கெல்லால்..ம்,, கொளறுதே!!
//
வாய்விட்டுப் படிக்கதீங்க டாக்டர். என்னை மாதிரி மனசுக்குள்ளயே சொலிகோங்க:-)//
எனக்கு நாக்குலயே சுளுக்கு வந்துடுச்சு..அவ்வ்வ்வ்வ்வ்வ்...!!
//எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஆண்டவா இயற்கையிடம் இருந்து காப்பாத்து
எதிரிகளை நான் பார்த்துக் கொள்கின்றேன்
:)
//
உங்கள இந்த ஜென்மத்தில என்கிட்ட இருந்து காப்பத்த முடியாது அண்ணா
:-))
//வால்பையன் said...
ReplyDeleteஇருப்படிக்கிற இடத்துல இந்த ஈக்கு வேலையில்லை!
கும்மி அடிக்கும் போது வந்து கலந்துகிறேன்!
//
ஐய்...இன்னிக்கு கும்மி இல்லியே... :-))
/இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
நீங்க சொல்லிய வலைப்பூ எதுவும் இதுவரை பார்த்ததில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கின்றேன்.
தகவல்களுக்கு நன்றி.
/
இன்னிக்கும் ஹோம்வொர்க் கரெக்டா பண்ணிட்டீங்களா.. வெரிகுட்:)
அருமையான வலைப்பூக்கள். கட்டாயம் பாருங்க
/Anonymous said...
ReplyDeleteஅழகும் மணமும் பயனும் நிறம்பிய
மலர்களை எடுத்து சரம் தொடுத்துள்ளீர்கள்.
பொங்கும் மங்களம்
எங்கும் தங்கட்டும்!
/
நன்றிங்க. அப்படியே உங்க பேரையும் போட்டு இருகலாமே
//Anonymous said...
ReplyDeleteபக்தி மணம் கமழும் சரம்.இறைவனுக்கு படைக்கத் தகுந்தது
//
நன்றி..நன்றி
@ T.V.Radhakrishnan
ReplyDeleteவாங்க அண்ணா
நன்றி தாரணி.. வாங்க ..ரொம்ப நாளைக்கப்புறம் வர்றீங்க.
ReplyDeleteநன்றி காயத்ரி
ReplyDeleteநல்ல வலைப்பூக்கள் அன்பு. கட்டாயம் பாருங்கள்
ReplyDeleteநன்றிங்க கிருஷ்ணபிரபு
ReplyDelete//ரங்கன் said...
ReplyDeleteஎதோ இன்னிக்கு கடவுள் விஷயமா போனதால கும்மிக்கு லீவு விடப்படுகிறது.. !
எல்லா கடவுளரின் அருளோடு நாளைக்கு இறங்கி கும்மப்படும்..!!
//
கடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(
//நரகத்துல பாவிகளுக்கு தண்டனையா இவங்க ப்ளாகை தான் தினமும் நூறு முறை படிக்க சொல்றாங்களாம்..
ReplyDelete//
ஆமாம் .. அவங்க செஞ்ச பாவத்தைக் குறைக்க
/ஜோசப் பால்ராஜ் said...
ReplyDeleteஅறிமுகப்படுத்த உபயோகித்த பாடல்கள் மிக அருமை.
ரொம்ப பக்தியோ நீங்க? சாமியோட ஆரம்பிக்கிறீங்க?
/
நன்றிங்க
பக்தியும் இருக்கு
//இயற்கை said...
ReplyDelete//ரங்கன் said...
எதோ இன்னிக்கு கடவுள் விஷயமா போனதால கும்மிக்கு லீவு விடப்படுகிறது.. !
எல்லா கடவுளரின் அருளோடு நாளைக்கு இறங்கி கும்மப்படும்..!!
//
கடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(//
கடா மட்டுமில்லை.. கும்மி..கும்மியடித்தல், கும்மலாட்டம், கும்மி தாண்டி, இப்படி பல போட்டிகள் நடத்தி “விழாவை சிறப்பிக்க” போறோமே.!!
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
வாங்க நல்ல மனசுக்காரங்களே..
//
இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரனகலமாக்கிடுராங்கப்பா..
/
ஹி..ஹி..கண்டுபிடிச்சிட்டீங்களா
/நிஜமா நல்லவன் said...
ReplyDelete/விடைபெறுவது... இயற்கை மகள் /
ரொம்ப சந்தோஷம்...:)
/
பாஸ்.. யூ டூ... நீங்க எவ்ளோ நல்லவரு.. இப்பிடி சொல்லல்லாமா
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
இந்தப் பொண்ணுகிட்ட இருந்து காப்பாத்துன்னு வேண்டனும்ன்னு தோணுமே.. .. எந்த கடவுள்கிட்ட வேண்டறது, எப்படி வேண்டறதுன்னு கவலைப்படாதீங்க.. இப்போ நான் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் விவரங்களைத் தர்றேன்..
//
ம்ம்.. எந்த தெய்வத்த வேண்டினாலும் உங்க தொல்லை தீராதுனு குருவி ஜோசியன் சொன்னான்..
/
இந்த தொல்லைக்கு காரணம் யார்ன்னு எல்லாருக்கும் சொல்லட்டுமா ?:-)))
//सुREஷ் कुMAர் said...
ReplyDeleteஎல்லா பூக்களுமே எனக்கு புதியவை.. இயன்றஅளவு சென்று பார்க்கிறேன்.. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..
//
இது நல்ல புள்ளக்கி அடையாளம்
/सुREஷ் कुMAர் said...
ReplyDeleteசொல்ல மறந்துட்டனே..
இரண்டாம்நாள் வாழ்த்துக்கள்..
/
சொல்ல மறந்துட்டனே..நன்றி
/நிஜமா நல்லவன் said...
ReplyDelete/போன பதிவுல இருந்த லிங்க்ல போய் என் வலைப்பூவைப் பார்த்தீங்களா.. இப்போ தெரிஞ்சிட்டு இருப்பீங்க./
நேத்து நிறைய பேரு இங்க வந்து இருந்தாங்க....இன்னைக்கு ஏன் வரலைன்னு இப்ப தான் தெரியுது:)
/
நல்லவர்ன்னு பேர் வச்சிகிட்டு ....இதெல்லாம் சரியே இல்ல பாஸ்
/ரங்கன் said...
ReplyDelete//இயற்கை said...
/ஆயில்யன் said...
//எல்லா கடவுளையும் வேண்டியாச்சா? நல்ல புள்ளங்களா போயி வெலைய பாருங்க//
ரைட்டு !
/
எப்போ போகச்சொல்லுவாங்கன்னு சான்ஸ் பார்த்துட்டு இருக்கீங்களா பாஸ்//
ஹாஹாஹா..தெரிஞ்சா சரி..!!
/
ஒய் திஸ் மர்டர்வெறி மிஸ்டர் ரங்கா
கடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(//
ReplyDeleteரங்கன் said...
கடா மட்டுமில்லை.. கும்மி..கும்மியடித்தல், கும்மலாட்டம், கும்மி தாண்டி, இப்படி பல போட்டிகள் நடத்தி “விழாவை சிறப்பிக்க” போறோமே.!!//
அறிமுகப்படுத்தற வலைப்பூக்களப் பாருங்கப்பு.. யாரைப் போட்டுத் தள்ளலாம்ன்னு யோசிச்சிகிட்டு
//இயற்கை said...
ReplyDeleteகடவுளே.. கடா வெட்ட ரெடியா இருக்காங்களே..:-(//
ரங்கன் said...
கடா மட்டுமில்லை.. கும்மி..கும்மியடித்தல், கும்மலாட்டம், கும்மி தாண்டி, இப்படி பல போட்டிகள் நடத்தி “விழாவை சிறப்பிக்க” போறோமே.!!//
அறிமுகப்படுத்தற வலைப்பூக்களப் பாருங்கப்பு.. யாரைப் போட்டுத் தள்ளலாம்ன்னு யோசிச்சிகிட்டு//
அதெல்லாம் பண்ணிட்டு தான் இருக்கோம்.. ஆனாலும் கும்மியை கைவிட என்னமோ மன்ஸே வர்லை..!!
உலா வரும் ஒளிக்கதிர் அப்படி ஒரு நிகழ்ச்சி தூர்தர்ஷனில் வரும். அதை நினைவு படுத்தி விட்டது...
ReplyDeleteபக்தி மணம்..
நல்லாயிருக்கு...
அன்பின் இயறகை மகள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் - அனைத்தும் ஆன்மீகப் பதிவுகள் - தேடிப் பிடித்துப் போடப்பட்ட இடுகைகள் - எல்லாக்கடவுள்களின் அருளும் கிட்ட நல்வாழ்த்துகள்
ஒவ்வொண்னையும் போய்ப் பாத்தேன் - சிவமுருகனைத் தவிர அனைத்துமே புதியவை.
இரண்டாம் நாள் நல்வாழ்த்துகள் ராஜி
மிக அரிய செய்திகள்.
ReplyDeleteபக்தி முத்திப்போச்சுன்னு சொல்லுவாங்களே அப்பிடியா ராஜி?
ReplyDelete:))))
இதுவரைக்கும் படிச்சே இல்லாத வலைப்பூக்கள் அறிமுகத்துக்கு நன்றி ராஜி
நன்று நன்றி
ReplyDeleteஇறைவனிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை
ReplyDeleteகுறை ஒன்றும் இல்லை என்று வலைச்சரப் பணியை துவக்கியுள்ள இயற்கைப் மகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் தொகுப்புகள், வலைப்பூ எல்லாம் அருமை. நட்சத்திரமாக ஒளிர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteம்ம்..உங்க திருப்திக்கு கும்மியாச்சா ரங்கன். இப்போ நிம்மதியா
ReplyDelete//butterfly Surya said...
ReplyDeleteஉலா வரும் ஒளிக்கதிர் அப்படி ஒரு நிகழ்ச்சி தூர்தர்ஷனில் வரும். அதை நினைவு படுத்தி விட்டது...
பக்தி மணம்..
நல்லாயிருக்கு...
//
மறை(ற) ந்துபோன ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டியதற்கு நன்றி
/cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் இயறகை மகள்
அருமையான அறிமுகங்கள் - அனைத்தும் ஆன்மீகப் பதிவுகள் - தேடிப் பிடித்துப் போடப்பட்ட இடுகைகள் - எல்லாக்கடவுள்களின் அருளும் கிட்ட நல்வாழ்த்துகள்
ஒவ்வொண்னையும் போய்ப் பாத்தேன் - சிவமுருகனைத் தவிர அனைத்துமே புதியவை.
இரண்டாம் நாள் நல்வாழ்த்துகள் ராஜி/
மிக்க நன்றி. நீங்கள் அளித்த பணியை நீங்கள் மகிழ்வுறும் வகையில் செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சி
/Anonymous said...
ReplyDeleteமிக அரிய செய்திகள்/
/ Anonymous said...
நன்று நன்றி
/
நன்றி
/
ReplyDeleteபிரியமுடன்...வசந்த் said...
பக்தி முத்திப்போச்சுன்னு சொல்லுவாங்களே அப்பிடியா ராஜி?
:))))
இதுவரைக்கும் படிச்சே இல்லாத வலைப்பூக்கள் அறிமுகத்துக்கு நன்றி ராஜி/
இப்பிடி சொல்லிட்டீங்களே வசந்த்..இப்பிடி சொல்லிட்டீங்களே:))
/இறைவனடிமை said...
ReplyDeleteஇறைவனிடம் கையேந்துங்கள்.அவர் இல்லையென்று சொல்லுவதில்லை
/
வாருங்கள். தங்கள் கருத்துக்கு நன்றி
/Kailashi said...
ReplyDeleteகுறை ஒன்றும் இல்லை என்று வலைச்சரப் பணியை துவக்கியுள்ள இயற்கைப் மகளுக்கு வாழ்த்துக்கள். தங்கள் தொகுப்புகள், வலைப்பூ எல்லாம் அருமை. நட்சத்திரமாக ஒளிர வாழ்த்துக்கள்./
நன்றி
/சந்ரு said...
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்./
நன்றி
வாழ்த்துக்கள் இயற்கை.
ReplyDeleteநன்றிங்க DG
ReplyDelete