வாங்க மக்களே.. வணக்கம்.. ரெண்டு நாளா எதை எதையோ பத்தி எழுதிட்டு, தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்லாமயே விட்டுட்டேன்..
தீபாவளி வாழ்த்துக்கள் மக்களே..
அட..ஏன் கோபப்படறீங்க .. தீபாவளி லீவெல்லாம் முடிஞ்சி ஆபீஸ்ல வந்து சோகமா உக்கார்ந்து இருக்கற நாள்ல வந்து வாழ்த்து சொல்றேனேன்னு தானே கோபம்.ம்ம்.உங்க கோபம் நியாயம்தான்.ஆனா வாழ்த்தாம எப்படி விடறது..அதனாலதான் வாழ்த்திட்டேன்...
இப்பிடித்தாங்க சில பேர் எந்த நேரத்துல எதைப்பேசறதுன்னு தெரியாம..என்னை மாதிரி வம்புல மாட்டிகறாங்க.. அது எப்படின்னு நான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)
ஒரு பெரியவர் ஒரு சின்ன கிராமத்துக்குப் போக வேண்டி இருந்துச்சாம்.பஸ் எத்தனை மணிக்கு வரும்ன்னு தெரியாததால அவர் பேரனைக் கூப்பிட்டு பஸ் ஸ்டாண்ட்ல போயி "பஸ் எப்போ வரும்ன்னு கேட்டுட்டு வா" அப்படின்னு சொன்னாராம்.
பேரன் "சரி"ன்னு சொல்லிட்டு பஸ்ஸ்டான்ட்ல போயி கேட்டானாம்..4 மணிக்கு வரும்ன்னு சொன்னாங்களாம்..
நம்ம பயதான் வாலுப் பயலேச்சே.. சும்மா இருப்பானா..
" 4 மணிக்கு வரும்"" 4 மணிக்கு வரும்"ன்னு கத்திகிட்டே..வீட்டுக்கு வந்தானாம்..
வர்ற வழியில ஒரு மண்பானை செய்யறவர்.. பானையெல்லாம் செஞ்சி வெயில்ல காயவச்சிகிட்டு இருந்தாராம்.மேகம் அப்போ அப்போ வந்து போய்கிட்டு இருந்துச்சாம்.. மழை வந்திரக்கூடாதே.. பானையெல்லாம் வீணாயிடுமேன்னு கவலைப் பட்டுட்டு இருந்தாராம்.
அந்த வழியா நம்ம ஹீரோ 4 மணிக்கு வரும்ன்னு கத்திட்டு வந்தாராம்.எப்படி இருக்கும் அந்த மனுசனுக்கு..கூப்ட்டு நம்ம ஹீரோவை "நல்லா கவனிச்சு"..(மேகம்)உள்ளதும் போயிடும்ன்னு சொல்லுன்னு மிரட்டினாராம். உடனே பையன்
உள்ளதும் போயிடும்ன்னு கத்த ஆரம்பிச்சுட்டான்..
அடுத்து வழில..ஒருத்தர் கண் சிகிச்சை செஞ்சுகிட்டு ..கண் நல்லாத் தெரியணுமேன்னு கடவுள வேண்டிகிட்டே வர்றார்.அவர் முன்னாடி போயி.."(பார்வை)உள்ளதும் போயிடும்"ன்னு கத்தினா என்ன ஆகும்..ம்ம்.. ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் மாதிரி.. மிரட்டல் ரிப்பீட்டட்.. நல்லாத் தெரியும்ன்னு சொல்லுன்னு சொல்லி அனுப்பி வச்சாராம்.பையன்.. நல்லாத் தெரியும்ன்னு கத்திட்டே வந்தானாம்.(( பயபுள்ள இத்தனைக்கும் கத்தறத மட்டும் விடல.. இதைப்போட்டு சாத்தினா தப்பே இல்ல))
இப்போ எதிர்ல வந்தது திருட்டுப் பொருட்களோட ஒரு திருடன்.திருடினது யாருக்கும் தெரியக்கூடாதுங்கற கவலையோட...இப்போ அவர் முன்னாடி பையன் போயி " நல்லாத் தெரியும்"ன்னு கத்தினான். அப்புறம் என்ன.. வழக்கமான கவனிப்போட.. டயலாக்.. "ஒண்ணும் தெரியாது"ன்னு மாற்றப்பட்டது. வீட்டுக்குப் போனான் தாத்தாகிட்ட போயி ஒண்ணும் தெரியாதுன்னு சொன்ன்னான். ம்ம்.. அப்புறம் என்ன.. தாத்தாகிட்டயும்..ஸ்டார்ட் மீஜிக்தான் .. தேவையில்லாத நேரத்துல.. தேவையில்லாததப் பேசினா இப்பிடித்தாங்க ஏடாகூடமா ஏதாச்சும் நடக்கும்
இப்படியெல்லாம் நேரம் காலம் தெரியாம உளராம சொல்ல வர்ற கருத்தை அனைவரும் ஈர்க்கும் சொற்களோடு,எளிதில் புரியும் வகையிலும்,விரும்பப்படும் வகையிலும் சொல்வதே கதையும்,கவிதையும். இதைப் போன்ற சிறந்த கதாசிரியர்களும்,கவிஞர்களும் வலையுலகில் மிக அதிகம்.அவர்களில் சிலரின் வலைப்பூவை இங்கே காணலாம்.
எல்லாரும் அதிகமா காதல் கவிதைகள் படிச்சிருப்பீங்க.மொழிப்பற்று,நாட்டுப்பற்று இதைப் போன்ற கவிதைகள் படிச்சிருக்கலாம். ஆனா இவர் எழுதியிருக்க கவிதையப் பார்த்தா டைட்டில்லயே டெரர் ஆகுதுங்க. நீங்களும் படிங்க. பயந்திராதீங்க
http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post_19.html
ஆத்திச்சூடியை மாத்தித் தந்திருக்கிறார் இவர்
http://vijaykavithaigal.blogspot.com/2009/09/2009.html.இதுமட்டுமல்ல காதல் கவிதைகள் முதல் கண்ணீர்க்கவிதைகள் வரை அனைத்தும் உண்டு இவ்வலைப்பூவில்
ஒரு மீனவ குடும்பத்தின் வாழ்வைச் சொல்லுவதாய் எழுதப்பட்ட இக்கவிதை கடல் கடந்து குடும்பத்தைப் பிரிந்து வாழும் எவருக்கும் பொருந்ந்துவதாய் இருப்பது சிறப்பு http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/10/blog-post_392.html
உதவிகள் இன்றியும் உண்ணால் முடியும்
உழைக்க ஏனோ தயங்குகிறாய்...
தன்னம்பிக்கையைத் தூண்டும் அரிய கவிதையின் சில வரிகள் இவை.மேலும் படிக்க கீழே கிளிக்குங்கள்
http://aazhmana-alaigal.blogspot.com/2009/09/blog-post_24.html
ஆறாந்திணை என்னும் தலைப்பில் ஐவகை நிலங்களின் இயல்போடு இவர் எழுதும் கவிதைகள் அபாரம்
http://theyaa.blogspot.com/2009/09/blog-post_16.html
சில கதை எழுதும் வலைப்பூக்களைப் பார்க்கலாமா இப்போ?
இவர் எழுதும் தில்தில் திகில் நிஜமாவே திகிலாத்தான் இருக்கு.நீங்களும்தான் கொஞ்சம்பயப்படுங்களேன்
http://mahawebsite.blogspot.com/
உறவுகளின் அருமையைச்சொல்லும் அழகிய கதை இது
http://anbudan-mani.blogspot.com/2009/10/blog-post_18.html
ஆன்மீகக் கதைகளை ஜனரஞ்சகமான வடிவில் படிக்க வேண்டுமா?வாருங்கள் இங்கே.நிச்சயமாய் ஆன்மீகத்தைப் பற்றிய ஒரு புதிய சிந்தனையைத் தரும் இவரது பதிவுகள்
http://gurugeethai.blogspot.com/
இன்னிக்குப் பதிவு கொஞ்சம் பெரிசா போச்சி. அதனால இதேவகையில் மற்ற சில வலைப்பூக்களை நாளை பார்க்கலாம்.
அதுவரைக்கும் டாடா..பைபை..சீ யூ... ஃப்ர்ம் இயற்கைமகள்
me the first :) :) :)
ReplyDeleteபயபுள்ள நம்ம இயற்கை மாதிரி இருந்தா இப்பிடி தான்.. எல்லோரும் தூக்கி போட்டு மிதிப்பாங்க.
ReplyDeleteஇன்னைக்கு கவிஞர்களா... அசத்துங்க :)
ReplyDeleteநாளைக்கு என்ன... சமையலா?
இன்னைக்கு கவிஞர்களா... அசத்துங்க :)
ReplyDeleteநாளைக்கு என்ன... சமையலா?
என்னையும் ஒரு கவியாய் மதித்து தங்கள் வலைப்பதிவில் என்னை கௌரவித்தமைக்கு மிக மிக நன்றி
ReplyDeleteவிஜய்
அருமை.. சூப்பர்.. அற்புதம்... விவரிக்க வார்த்தைகளே இல்லை...
ReplyDeleteஅய்யோ.. என்ன இது பக்கம் மாறி பின்னூட்டம் போட்டுட்டேனே!!!!
நன்றிங்க.. நல்ல பல பதிவர்களை அறிமுகப்படுத்துவதற்கு!!!
ReplyDeleteஅப்புரம், அந்த கதையில வர பையன் நீங்க தானே? ஆள மாத்தினா நாங்க கண்டு பிடிக்க முடியாதா? உங்க முதல் வலைசர பதிவிலிருந்து இன்னும் மீண்டு வரல போல!!!
ReplyDelete//ரெண்டு நாளா எதை எதையோ பத்தி எழுதிட்டு, தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்லாமயே விட்டுட்டேன்.. /
ReplyDeleteபாத்தீங்களா மக்களே!! இவங்க எதை எதையோ எழுதுவாங்களாம் ஆனா படிக்கிரது மட்டும் நாமளாம் :(((((9
முன்னால சொன்ன கதை நல்லாயிருக்கு!
ReplyDeleteநல்லாயிருக்கு, நல்லாயிருக்குன்னு சொல்லிகிட்டே ரோட்ல போகும் போது எதுதாப்புல ஒரு பொண்ணு வந்தா என்ன செய்யுறது!?
நல்ல தொகுப்பு
ReplyDeleteஇன்னைக்கு கவிஞர்களா... அசத்துங்க :)
ReplyDeleteநாளைக்கு என்ன... சமையலா?
Good Collections
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletekavinjarkal arimugam azaku
ReplyDeleteஇயற்கையின் பதிவில் துளசியின் வாசமா???
ReplyDelete'ஆழ்மன அலைகள்' வலைப்பூவை தங்களின் வலைபதிவில் அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி.
நேற்று என் வலைப் பூவை அறிமுகம் செய்ததற்கு நன்றி. கொஞ்சம் வலைப்பக்கம் வரமுடியாதளவுக்கு சூழ்நிலை இறுக்கமாக இருக்கிறது.
ReplyDeleteதாமத நன்றிக்கு மன்னிக்க.
--வித்யா
வால்பையன் said...
ReplyDeleteமுன்னால சொன்ன கதை நல்லாயிருக்கு!
நல்லாயிருக்கு, நல்லாயிருக்குன்னு சொல்லிகிட்டே ரோட்ல போகும் போது எதுதாப்புல ஒரு பொண்ணு வந்தா என்ன செய்யுறது!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல தொகுப்பு
ReplyDeleteநல்ல பகிர்வுகள் நன்றி இயற்கை
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி இயற்கை
ReplyDeleteஎனது கதையை தங்கள் வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி... மகிழ்ச்சியாய் உணர்கிறேன்!!!
ReplyDeleteமாட்டேன்னு யாரும் சொல்லப்படாது //
ReplyDeleteசொன்னாலும் விட்டுடுவீங்களா... கண்டினியூ.
பயபுள்ள இத்தனைக்கும் கத்தறத மட்டும் விடல.. இதைப்போட்டு சாத்தினா தப்பே இல்ல //
ஹாஹாஹா...
இப்போ உங்களுக்கு எல்லார்கிட்டேயுமிருந்து மொத்து வரப் போகுது. :)
நல்ல பதிவுகளின் சுட்டிகள். Well done Raji.
வலைச்சரத்தில் கவிஞர்களுக்குத்தனி மவுசுதான்!
ReplyDeleteஇப்பிடித்தாங்க சில பேர் எந்த நேரத்துல எதைப்பேசறதுன்னு தெரியாம..என்னை மாதிரி வம்புல மாட்டிகறாங்க.. அது எப்படின்னு நான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)///
ReplyDeleteசொல்லுங்க வாத்தியாரம்மா...என்ன வம்பு...
இப்படியெல்லாம் நேரம் காலம் தெரியாம உளராம சொல்ல வர்ற கருத்தை அனைவரும் ஈர்க்கும் சொற்களோடு,எளிதில் புரியும் வகையிலும்,விரும்பப்படும் வகையிலும் சொல்வதே கதையும்,கவிதையும்.///
ReplyDeleteஇப்படி வேற இருக்கா! சரிதான்!
நல்லா இருக்கு ஆசிரியரே..
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஏங்க உங்க கதை அருமைங்க. ஏதோ பக்கத்துலே நின்னு பார்த்தது போலவே அந்த பையனோட அவல நிலையை சொல்லி இருக்கீங்களே.
ReplyDeleteநீங்க அசத்திட்டீங்க போங்க :))
புதிய கவிஞர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்! நன்றாக உள்ளது.
ReplyDeleteநிறைய கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருக்கீங்க!
ReplyDeleteஉங்கள் ஆணை படிக்கரோமுங்கோ:-)
//
ReplyDeleteஇப்பிடித்தாங்க சில பேர் எந்த நேரத்துல எதைப்பேசறதுன்னு தெரியாம..என்னை மாதிரி வம்புல மாட்டிகறாங்க.. அது எப்படின்னு நான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)
//
இதெல்லாம் போய் கேப்பாங்களா:-)
என்ன ரொம்ப சின்னப் பிள்ளையா இருக்கீங்களே சும்மா எடுத்து விட வேண்டியதுதான்!
//
ReplyDeleteஇப்படியெல்லாம் நேரம் காலம் தெரியாம உளராம சொல்ல வர்ற கருத்தை அனைவரும் ஈர்க்கும் சொற்களோடு,எளிதில் புரியும் வகையிலும்,விரும்பப்படும் வகையிலும் சொல்வதே கதையும்,கவிதையும்.
//
உங்கள் எழுத்திற்கு முத்தாய்ப்பா இந்த வரிகள் அமைந்துள்ளது. ரொம்ப ரசிச்சேன்!
வாழ்த்துக்கள் ஆசிரியரே!!
//
ReplyDeleteஇராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
பயபுள்ள நம்ம இயற்கை மாதிரி இருந்தா இப்பிடி தான்.. எல்லோரும் தூக்கி போட்டு மிதிப்பாங்க.
//
அப்படியா இது சூப்பர்:-)
அட..ஏன் கோபப்படறீங்க .. தீபாவளி லீவெல்லாம் முடிஞ்சி ஆபீஸ்ல வந்து சோகமா உக்கார்ந்து இருக்கற நாள்ல வந்து வாழ்த்து சொல்றேனேன்னு தானே கோபம்.ம்ம்.///
ReplyDeleteஆமா! நான் இன்னும் யாருக்கும் வாழ்த்துச்சொல்லலியே!!
தீபாவளி வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்தாம எப்படி விடறது..அதனாலதான் வாழ்த்திட்டேன்...//
ReplyDeleteஓகேயா!!
ஒரு பெரியவர் ஒரு சின்ன கிராமத்துக்குப் போக வேண்டி இருந்துச்சாம்//
ReplyDeleteபெரிய கிராமத்துக்கு சின்னவர் போயிட்டாரா? ஹி ஹி ஹி
Present Boss:)
ReplyDeleteஎன்னையும் ஒரு கவிஞனா மதிச்சு..
ReplyDeleteஓ..காட்.. ஸாரி.. ராங் நம்பர்!!
இயற்கை.. கலெக்ஷன் எல்லாம் அருமை..அதும் அந்த கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு..!!
ஆனா ..உனா.தானா ஐயா பதிவுகளை படிச்ச பாதிப்பு.. உங்க பதிவின் நீஈஈஈளத்தின் தெரியுது..!!
கிக்கிக்கி...!!
//குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteஅருமை.. சூப்பர்.. அற்புதம்... விவரிக்க வார்த்தைகளே இல்லை...
அய்யோ.. என்ன இது பக்கம் மாறி பின்னூட்டம் போட்டுட்டேனே!!!!//
எனக்கும் அதே தான் தோணுது..உ.தா அண்ணாச்சி ப்ளாக்கோனு இன்னும் சந்தேகமா இருக்கு..!!
//ரெண்டு நாளா எதை எதையோ பத்தி எழுதிட்டு, தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்லாமயே விட்டுட்டேன்..
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் மக்களே..//
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றாங்களாம்..முடியல..!!
ook! good night!!
ReplyDeleteகிகிகி
ReplyDeleteஅட கதை நல்லா இருக்கே
ReplyDeleteஎனது கவிதைத் தலைப்பையும் சேர்த்துள்ளீர்கள் நன்றி
ReplyDeleteஎன் பிளாக்கை அறுமுகப்படுதியதற்கு மிக்க நன்றி
ReplyDeleteபிளாக்குகள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது
ReplyDeleteஇறைவன் எல்லா நலனையும் அளிப்பாராக
ReplyDeleteஇப்படிக்கு கிருஷ்ணா
ReplyDeleteநல்ல தொகுப்பு
ReplyDelete//
ReplyDeleteநான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)
//
மாட்டேனு சொன்னாமட்டும் விடவா போறீங்க.. ம்ம்.. நடத்துங்க..
//
ReplyDeleteஒரு பெரியவர் ஒரு சின்ன கிராமத்துக்குப் போக வேண்டி இருந்துச்சாம்.
//
இதுல குத்தம் ஏதும் இல்லையே..
பெரியவர் பெரிய கிராமத்துக்கு மட்டும்தான் போகனுமா என்ன.. அதான் சின்ன கிராமத்துக்கும் போயிருக்கார்போல.. :-))
கதை நால்லா இருக்கு..
ReplyDelete//
தேவையில்லாத நேரத்துல.. தேவையில்லாததப் பேசினா இப்பிடித்தாங்க ஏடாகூடமா ஏதாச்சும் நடக்கும்
//
இது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிரிங்களா..
இல்ல.. இங்க கமெண்ட்ட வர்ற அப்பாவிங்களுக்கு தர்ற வார்னிங்'ஆ..
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பூக்களை சீக்கிரம் வாசிக்கிறேன்.. நன்றி மகளே..நன்றி..
ReplyDeleteஎன்னையும் மதிச்சு இணைப்பு கொடுத்ததுக்கு நன்றி :)
ReplyDeleteஇராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
ReplyDeleteme the first :) :) :)
//
வாம்மா மின்னல்
/இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
ReplyDeleteபயபுள்ள நம்ம இயற்கை மாதிரி இருந்தா இப்பிடி தான்.. எல்லோரும் தூக்கி போட்டு மிதிப்பாங்க./
ஓய்.. அடங்கு... ஆரம்பமே கும்மியா
/ ☀நான் ஆதவன்☀ said...
ReplyDeleteஇன்னைக்கு கவிஞர்களா... அசத்துங்க :)
நாளைக்கு என்ன... சமையலா?
/
இல்லியே.. கண்டுபிடியுங்க ( போஸ்ட்லயே இருக்கு நாளைக்கு என்னன்னு..)
/கவிதை(கள்) said...
ReplyDeleteஎன்னையும் ஒரு கவியாய் மதித்து தங்கள் வலைப்பதிவில் என்னை கௌரவித்தமைக்கு மிக மிக நன்றி
விஜய்/
உங்கள் கவிதை நன்றாக இருக்குறது.
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteஅருமை.. சூப்பர்.. அற்புதம்... விவரிக்க வார்த்தைகளே இல்லை...
அய்யோ.. என்ன இது பக்கம் மாறி பின்னூட்டம் போட்டுட்டேனே!!!!
/
நீங்க போஸ்ட் எழுதாமயா போவீங்க.. அப்போ இதுக்கு பதில் மரியாதை செய்யறேன்
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteநன்றிங்க.. நல்ல பல பதிவர்களை அறிமுகப்படுத்துவதற்கு!!!/
வருகைக்கு நன்றிங்க
/ குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteஅப்புரம், அந்த கதையில வர பையன் நீங்க தானே? ஆள மாத்தினா நாங்க கண்டு பிடிக்க முடியாதா? உங்க முதல் வலைசர பதிவிலிருந்து இன்னும் மீண்டு வரல போல!!!/
அது நான் இல்லீங்க.. நீங்க தான்ன்னு கேள்விப்பட்டேன்.. உணமைதானே
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//ரெண்டு நாளா எதை எதையோ பத்தி எழுதிட்டு, தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்லாமயே விட்டுட்டேன்.. /
பாத்தீங்களா மக்களே!! இவங்க எதை எதையோ எழுதுவாங்களாம் ஆனா படிக்கிரது மட்டும் நாமளாம் :(((((9/
ஒய் ஆபீசர்... ஒய் ..இப்பிடி கொழுத்திப் போடறீங்க
/ வால்பையன் said...
ReplyDeleteமுன்னால சொன்ன கதை நல்லாயிருக்கு!
நல்லாயிருக்கு, நல்லாயிருக்குன்னு சொல்லிகிட்டே ரோட்ல போகும் போது எதுதாப்புல ஒரு பொண்ணு வந்தா என்ன செய்யுறது!?/
என்ன செஞ்சா என்ன நடக்கும்ன்னுதான் கதைலயே சொல்லிடேனே
:-)
/Suresh Kumar said...
ReplyDeleteநல்ல தொகுப்பு/
நன்றி
/மங்களூர் சிவா said...
ReplyDeleteஇன்னைக்கு கவிஞர்களா... அசத்துங்க :)
நாளைக்கு என்ன... சமையலா?/
சிவாண்ணா.. காபி பேஸ்ட் பண்றதும் பண்றீங்க... ஆதவன் கமெண்டைப் பேஸ்ட் பண்ணி ஏன் சிக்கிகறீங்க.. அவரே போஸ்டப் படிக்காம கமெண்ட் போடுவார்
:-))
/ Anonymous said...
ReplyDeleteGood Collections/
Thanks
/gayathri said...
ReplyDeletekavinjarkal arimugam azaku/
நன்றி கவிதாயினி
/துளசி said...
ReplyDeleteஇயற்கையின் பதிவில் துளசியின் வாசமா???
'ஆழ்மன அலைகள்' வலைப்பூவை தங்களின் வலைபதிவில் அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி./
நன்றி
/ Vidhoosh said...
ReplyDeleteநேற்று என் வலைப் பூவை அறிமுகம் செய்ததற்கு நன்றி. கொஞ்சம் வலைப்பக்கம் வரமுடியாதளவுக்கு சூழ்நிலை இறுக்கமாக இருக்கிறது.
தாமத நன்றிக்கு மன்னிக்க.
--வித்யா/
நன்றி
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteவால்பையன் said...
முன்னால சொன்ன கதை நல்லாயிருக்கு!
நல்லாயிருக்கு, நல்லாயிருக்குன்னு சொல்லிகிட்டே ரோட்ல போகும் போது எதுதாப்புல ஒரு பொண்ணு வந்தா என்ன செய்யுறது!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/
பதிலுக்கு ஒரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/T.V.Radhakrishnan said...
ReplyDeleteநல்ல தொகுப்பு/
நன்றி அண்ணா
/தாரணி பிரியா said...
ReplyDeleteநல்ல பகிர்வுகள் நன்றி இயற்கை/
வாங்க.. நன்றி
/மயாதி said...
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி இயற்கை/
நன்றி
/அன்புடன்-மணிகண்டன் said...
ReplyDeleteஎனது கதையை தங்கள் வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி... மகிழ்ச்சியாய் உணர்கிறேன்!!!/
அருமையான கதைக்கு நன்றிங்க
@விக்னேஷ்வரி
ReplyDelete/இப்போ உங்களுக்கு எல்லார்கிட்டேயுமிருந்து மொத்து வரப் போகுது./
மறந்தவங்களுக்கு நியாபகப்படுத்தி விடாதீங்க:))))
வருகைக்கு நன்றி
/தேவன் மாயம் said...
ReplyDeleteவலைச்சரத்தில் கவிஞர்களுக்குத்தனி மவுசுதான்!/
ம்ம்..ஆமாம் Dr
/ தேவன் மாயம் said...
ReplyDeleteஇப்பிடித்தாங்க சில பேர் எந்த நேரத்துல எதைப்பேசறதுன்னு தெரியாம..என்னை மாதிரி வம்புல மாட்டிகறாங்க.. அது எப்படின்னு நான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)///
சொல்லுங்க வாத்தியாரம்மா...என்ன வம்பு.../
சொல்லிட்டேன்..சொல்லிட்டேன்:-))
/ தேவன் மாயம் said...
ReplyDeleteஇப்படியெல்லாம் நேரம் காலம் தெரியாம உளராம சொல்ல வர்ற கருத்தை அனைவரும் ஈர்க்கும் சொற்களோடு,எளிதில் புரியும் வகையிலும்,விரும்பப்படும் வகையிலும் சொல்வதே கதையும்,கவிதையும்.//
இப்படி வேற இருக்கா! சரிதான்!//
பின்ன ? இல்லாமையா சொல்வேன்?
/Anbu said...
ReplyDeleteநல்லா இருக்கு ஆசிரியரே../
நன்றி முன்னாள் ஆசிரியரே:-))
/RAMYA said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!/
நன்றி
/RAMYA said...
ReplyDeleteஏங்க உங்க கதை அருமைங்க. ஏதோ பக்கத்துலே நின்னு பார்த்தது போலவே அந்த பையனோட அவல நிலையை சொல்லி இருக்கீங்களே.
நீங்க அசத்திட்டீங்க போங்க :))/
ஹி..ஹி.. எல்லாம் சொல்லகேட்டதுதாங்க:-)
/தேவன் மாயம் said...
ReplyDeleteபுதிய கவிஞர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்! நன்றாக உள்ளது./
ம்ம்.. நல்ல கவிஞர்கள். அவர்களின் வலைப்பூவையும் படியுங்கள்
/RAMYA said...
ReplyDeleteநிறைய கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருக்கீங்க!
உங்கள் ஆணை படிக்கரோமுங்கோ:-)/
நல்லதுங்க
/RAMYA said...
ReplyDelete//
இப்பிடித்தாங்க சில பேர் எந்த நேரத்துல எதைப்பேசறதுன்னு தெரியாம..என்னை மாதிரி வம்புல மாட்டிகறாங்க.. அது எப்படின்னு நான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)
//
இதெல்லாம் போய் கேப்பாங்களா:-)
என்ன ரொம்ப சின்னப் பிள்ளையா இருக்கீங்களே சும்மா எடுத்து விட வேண்டியதுதான்!/
சும்மா பார்மாலிட்டிக்குங்க.. வேணாம்ன்னு சொன்னா மட்டும் விடவா போறேன்:-))
/RAMYA said...
ReplyDelete//
இப்படியெல்லாம் நேரம் காலம் தெரியாம உளராம சொல்ல வர்ற கருத்தை அனைவரும் ஈர்க்கும் சொற்களோடு,எளிதில் புரியும் வகையிலும்,விரும்பப்படும் வகையிலும் சொல்வதே கதையும்,கவிதையும்.
//
உங்கள் எழுத்திற்கு முத்தாய்ப்பா இந்த வரிகள் அமைந்துள்ளது. ரொம்ப ரசிச்சேன்!
வாழ்த்துக்கள் ஆசிரியரே!!/
நன்றிங்க
/RAMYA said...
ReplyDelete//
இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
பயபுள்ள நம்ம இயற்கை மாதிரி இருந்தா இப்பிடி தான்.. எல்லோரும் தூக்கி போட்டு மிதிப்பாங்க.
//
அப்படியா இது சூப்பர்:-)/
அவ்வ்வ்வ்
/தேவன் மாயம் said...
ReplyDeleteஅட..ஏன் கோபப்படறீங்க .. தீபாவளி லீவெல்லாம் முடிஞ்சி ஆபீஸ்ல வந்து சோகமா உக்கார்ந்து இருக்கற நாள்ல வந்து வாழ்த்து சொல்றேனேன்னு தானே கோபம்.ம்ம்.///
ஆமா! நான் இன்னும் யாருக்கும் வாழ்த்துச்சொல்லலியே!!/
இன்னுமா சொல்லல..டூ பேட்..டூ பேட்..
நானெல்லாம் 2010 தீபாவளிக்கே சொல்லிட்டேன்:-))
/தேவன் மாயம் said...
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் !/
தீபாவளி வாழ்த்துக்கள்
/தேவன் மாயம் said...
ReplyDeleteவாழ்த்தாம எப்படி விடறது..அதனாலதான் வாழ்த்திட்டேன்...//
ஓகேயா!!/
ம்ம்..
/தேவன் மாயம் said...
ReplyDeleteஒரு பெரியவர் ஒரு சின்ன கிராமத்துக்குப் போக வேண்டி இருந்துச்சாம்//
பெரிய கிராமத்துக்கு சின்னவர் போயிட்டாரா? ஹி ஹி ஹி/
ஓ..இப்பிடியும் சொல்லி இருக்கலாமோ
/நிஜமா நல்லவன் said...
ReplyDeletePresent Boss:)/
noted boss
ரங்கன் said...
ReplyDeleteஎன்னையும் ஒரு கவிஞனா மதிச்சு..
ஓ..காட்.. ஸாரி.. ராங் நம்பர்!!
இயற்கை.. கலெக்ஷன் எல்லாம் அருமை..அதும் அந்த கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு..!!
ஆனா ..உனா.தானா ஐயா பதிவுகளை படிச்ச பாதிப்பு.. உங்க பதிவின் நீஈஈஈளத்தின் தெரியுது..!!
கிக்கிக்கி...!!/
ரங்கா... ம்ம்ம்ம்ம்
/ ரங்கன் said...
ReplyDelete//குறை ஒன்றும் இல்லை !!! said...
அருமை.. சூப்பர்.. அற்புதம்... விவரிக்க வார்த்தைகளே இல்லை...
அய்யோ.. என்ன இது பக்கம் மாறி பின்னூட்டம் போட்டுட்டேனே!!!!//
எனக்கும் அதே தான் தோணுது..உ.தா அண்ணாச்சி ப்ளாக்கோனு இன்னும் சந்தேகமா இருக்கு..!!/
அடங்கமாட்டிங்களா
/ரங்கன் said...
ReplyDelete//ரெண்டு நாளா எதை எதையோ பத்தி எழுதிட்டு, தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொல்லாமயே விட்டுட்டேன்..
தீபாவளி வாழ்த்துக்கள் மக்களே..//
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றாங்களாம்..முடியல..!!/
எப்படியோ சொல்றோம் இல்ல?
/தேவன் மாயம் said...
ReplyDeleteook! good night!!/
தூக்கம் வர்றவரைக்கும் கும்மியா டாக்டர்.. ம்ம்ம்ம்:(
Good Night
/ Anonymous said...
ReplyDeleteகிகிகி/
ஹி..ஹி..ஹி
/சந்துரு said...
ReplyDeleteஅட கதை நல்லா இருக்கே/
நன்றி
/தியாவின் பேனா said...
ReplyDeleteஎனது கவிதைத் தலைப்பையும் சேர்த்துள்ளீர்கள் நன்றி/
நன்றி
/Anonymous said...
ReplyDeleteஎன் பிளாக்கை அறுமுகப்படுதியதற்கு மிக்க நன்றி/
நன்றி
/Anonymous said...
ReplyDeleteபிளாக்குகள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது/
நன்றி
/Anonymous said...
ReplyDeleteஇறைவன் எல்லா நலனையும் அளிப்பாராக/
மிக்க நன்றி
/Anonymous said...
ReplyDeleteஇப்படிக்கு கிருஷ்ணா/
வாங்க கிருஷ்ணா
/ butterfly Surya said...
ReplyDeleteநல்ல தொகுப்பு/
நன்றி
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
நான் ஒரு கதை சொல்றேன் கேட்கறீங்களா?(மாட்டேன்னு யாரும் சொல்லப்படாது)
//
மாட்டேனு சொன்னாமட்டும் விடவா போறீங்க.. ம்ம்.. நடத்துங்க../
தெரிஞ்சா சரி
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
ஒரு பெரியவர் ஒரு சின்ன கிராமத்துக்குப் போக வேண்டி இருந்துச்சாம்.
//
இதுல குத்தம் ஏதும் இல்லையே..
பெரியவர் பெரிய கிராமத்துக்கு மட்டும்தான் போகனுமா என்ன.. அதான் சின்ன கிராமத்துக்கும் போயிருக்கார்போல.. :-))/
என்ன குத்தம்ன்னு பின்னாடி சொல்றேன்.இப்போ ஏன் அவசரப்படறீங்க
/सुREஷ் कुMAர் said...
ReplyDeleteகதை நால்லா இருக்கு..
//
தேவையில்லாத நேரத்துல.. தேவையில்லாததப் பேசினா இப்பிடித்தாங்க ஏடாகூடமா ஏதாச்சும் நடக்கும்
//
இது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிரிங்களா..
இல்ல.. இங்க கமெண்ட்ட வர்ற அப்பாவிங்களுக்கு தர்ற வார்னிங்'ஆ../
எப்படி வசதியோ அப்படி எடுத்துக்கோங்க
/सुREஷ் कुMAர் said...
ReplyDeleteஇன்று அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பூக்களை சீக்கிரம் வாசிக்கிறேன்.. நன்றி மகளே..நன்றி../
வாசிங்க நன்றி
/ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteஎன்னையும் மதிச்சு இணைப்பு கொடுத்ததுக்கு நன்றி :)/
உங்களுக்கு இணைப்பு கொடுத்து நானும் கொஞ்சம் பெரிய ஆள் ஆகிக்கலாம்ன்னு பார்க்கிறேன் ஸ்வாமிஜி
வலைச்சரத்தை அலங்கரித்திருக்கும் இயற்கைக்கு ஏன் இனிய வாழ்த்துக்கள். சாரி என் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDelete"\\இப்படியெல்லாம் நேரம் காலம் தெரியாம உளராம சொல்ல வர்ற கருத்தை அனைவரும் ஈர்க்கும் சொற்களோடு,எளிதில் புரியும் வகையிலும்,விரும்பப்படும் வகையிலும் சொல்வதே கதையும்,கவிதையும். இதைப் போன்ற சிறந்த கதாசிரியர்களும்,கவிஞர்களும் வலையுலகில் மிக அதிகம்.அவர்களில் சிலரின் வலைப்பூவை இங்கே காணலாம்."//
ReplyDeleteஇந்த லிஸ்ட்ல என்னையும் சேர்த்து இருக்கீங்க. அது தெரியாம முதல் பின்னூட்டத்திலயே என்னை நானே டேமேஜ் பண்ணிட்டேனே
"\\முன்னால சொன்ன கதை நல்லாயிருக்கு!
ReplyDeleteநல்லாயிருக்கு, நல்லாயிருக்குன்னு சொல்லிகிட்டே ரோட்ல போகும் போது எதுதாப்புல ஒரு பொண்ணு வந்தா என்ன செய்யுறது!?"//
அண்ணா வேற என்ன ஸ்டார்ட் மியூசிக் தான்
thanks raji..
ReplyDeleteஉண்மைலயே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ராஜி
ReplyDelete