Friday, October 23, 2009

வானவில்

வணக்கம்.. வந்தனம்.வார இறுதி வந்தாச்சு.இந்த வாரம் இனிய வாரமாய்க் கழிந்திருக்கும் அப்படின்னு நம்பறேன். வார இறுதி வந்தாலே வேலை கொஞ்சம் குறையும்ன்னு நினைக்கிறேன். அதனால நம்க்கு கொஞ்சம் ஃப்ரீடைம் கிடைக்கும்.அப்போ நம்ம வலைப்பூவில மராமத்து வேலை எல்லாம் பார்க்கலாம்.அதுக்கான சில வழிகள் சொல்றேன்.படிங்க‌
இப்போ வலைப்பூவை எப்படில்லாம் அழகுபடுத்தலாம்ன்னு சில வழிகள் பார்ப்போமா?(எனக்குத் தெரிஞ்சதைத் சொல்றேன்.அது உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்தும் இருக்கலாம்.டென்சனாகக் கூடாது)
அழ‌குப‌டுத்த‌ற‌துல‌ முத‌ல் வ‌ழி டெம்ப்ளெட் மாத்த‌ற‌து.ஆயிர‌க்க‌ண‌க்கான‌ டெம்ப்ளெட்ஸ் இருக்குங்க‌.அதெல்லாம் எங்க‌ தேட‌றதுன்னு பார்ர்க்றீங்க‌ளா..இதோ கீழே இருக்க‌ லிங்க்ல‌ கிளிக் ப‌ண்ணுங்க‌
http://freetemplates.blogspot.com/
http://www.finalsense.com/services/blog_templates/
http://www.bloggertemplatesfree.com/
http://blogger-templates.blogspot.com/
http://btemplates.com/
http://www.ourblogtemplates.com/#
http://www.pyzam.com/bloggertemplates
http://freeblogger-templates.blogspot.com/

இப்பொ டெம்ப்ளெட் மாத்தியாச்சி.அடுத்து லேஅவுட்ல‌ என்ன‌ அல‌ங்கார‌ம் ப‌ண்ண சில‌ கேட்ஜெட் இணைக்க‌லாம்.அது என்ன‌ன்னா
1,ப‌ல ஓடும் மீன்க‌ளை கொண்ட‌ மீன் தொட்டி
2.ஒரு பெரிய‌ மீன்
3.ஏதேனும் ஒரு நிக‌ழ்ச்சிக்கான‌ க‌வுண்ட்ட‌வுன் கிளாக்
4.அல்லது பென்குயின் வ‌ள‌ர்க்க‌லாம்.
5.ப‌ல மொழி சேன‌ல்க‌ளைக் கொண்ட‌ இணைய‌ ரேடியோ கூட‌ இருக்கு. (http://www.gmodules.com/ig/creator?synd=open&hl=en&url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml)
லேஅவுட்ல add gadget கிளிக் ப‌ண்ணினீங்க‌ன்னா இது மாதிரி ப‌ல‌ மாட‌ல்க‌ள் இருக்கு.

மேலும் உங்க பிளாக்ல‌ டி.வி, ரேடியோ போன்ற‌வ‌ற்றையும் இணைக்க‌லாம்.

உங்க பிளாக்ல ஒரு சினிமா ஓடிட்டே இருக்கணும்ன்னு நெனச்சீங்கன்னா அதுக்கு கூட இலவச கேட்ஜெட் இருக்கு


டி.வி,ரேடியோ எல்லாம் இணைக்கும்போது,அதில இருக்க autoplay mode ல இணைக்காதீங்க. ஆபிஸ்ல உங்க வலைப்பூவைத் திறந்தா, அது சத்தமா பாடி, ஊருக்கே காட்டிக் கொடுத்துடும். அப்புறம் இல்ல‌ன்னா உங்க பிளாக்கைத் திறக்கவே எல்லாரும் பயப்படுவாங்க‌.
இதையெல்லாம் இணைப்பதால் உங்கள் வலைப்பூ திறக்க எடுக்கும் நேரம் அதிகரிக்கலாம்.ஆனால் சில குறிப்பிட்ட டெம்ப்ளெட்டுகளில் இந்த நேர அதிகரிப்பும் இருப்பதில்லை. அது எந்த டெம்ப்ளெட்டுன்னு கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம்.

வ‌லையுல‌க‌த்தில‌ முக்கிய விஷ‌ய‌ம் விருதுக‌ள். நிறைய‌ விருதுக‌ள் வாங்கினா எல்லாத்தையும் பிளாக்ல‌ போட‌ இட‌ம் போதாது. போட‌லைன்னா அதைத் த‌ந்த‌வ‌ங்க‌ளுக்கு ம‌ரியாதையா இருக்காது. அதுக்கான‌ ஒரு வ‌ழி.

http://www.slide.com/arrange?bc=17612&fx=3&tt=11&sk=4&cy=bb&th=23&sc=17இந்த‌ ஸ்லைட் ஷோ. விருதுக‌ள் எல்லாத்தையும் இதுல இணைச்சி பிளாக்ல‌ போட்டுட‌லாம்.

என‌க்குத் தெரிஞ்ச‌ சில‌ சில‌ டிப்ஸ் சொல்லியிருக்கேன். தேவையானப்போ ப‌ய‌ன்படுத்திக்கோங்க‌. ஆனால் ஒரு முக்கிய‌ விஷ‌ய‌ம்.வெளி லிங்க்ல இருந்து எதை உங்க பிளாக்ல போட்டாலும் அதோட copyright form நல்லா படிச்சிகோங்க‌

சரி.. இப்போ வலைப்பூ அறிமுகத்துக்குப் போவோமா
இன்னிக்கு பல துறை வலைப்பூக்களையும் கலந்து தரப்போறேன்.
அதெல்லாம் என்னன்னு பாருங்க‌

கல்வி

பல நாடுகளிலும் பல்வேறு துறைக் கல்வி வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் தரும் வலைப்பூ இது
http://enippadigal.blogspot.com/

MBA படிப்பைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய இங்கே கிளிக்கலாம்
http://biriyaani.blogspot.com/2009/10/mba-3.html

நகைச்சுவை

சிரிக்கணுமா..இங்கே படியுங்க. நல்லாவே சிரிக்கலாம்
http://error007.blogspot.com/2009/10/blog-post_558.html

பழமொழி

பழமொழி சொல்ல பெரியவங்க யாரும் இல்லையேன்னு கவலையா..இதோ இங்கே தெரிஞ்சிகோங்க எல்லா வகைப் பழமொழியும்
http://eegaraikumar.blogspot.com

அறிவியல்
அறிவியல் அறிய‌
http://ariviyalpoo.blogspot.com/
http://puthumaitech.blogspot.com
http://pinnalnagaran.blogspot.com/2009/09/blog-post.html

சினிமா

திரைத்துறை செய்திகளுக்கு இங்கேயும் போகலாம்
http://puthumaicine.blogspot.com/

வைத்தியம்
திடீர் திடீர்ன்னு வர்ற உடல் நலக்குறைவுக்கு கைவைத்தியம் வேணுமா..
இதோ இருக்கு சில வலைப்பூக்கள்


இதில் கைவைத்தியம் சொல்லாத நோய்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லையோ?
http://maruththuvam.blogspot.com/

இந்த‌ வ‌லைப்பூவின் பெய‌ரே பாட்டிவைத்திய‌ம் தான்..பாருங்க‌.எப்ப‌டி உப‌யோக‌ப்ப‌டுதுன்னு
http://paadivaittiyam.blogspot.com/2009/10/blog-post_07.html


சமையல்

நல்ல உணவைச் சாப்பிட்டா வைத்தியம் பண்ற தேவையே வராதுங்க.அப்படியான நல்ல உணவை சுவையா சமைப்பது எப்படி?
லேகியத்திலிருந்து மைக்ரோவேவ் சமையல் வரை அனைத்தும் உண்டு.வாருங்கள்.
http://annaimira.blogspot.com/

பப்பாளி அல்வா செஞ்சிருக்கீங்களா?
http://geetha.wordpress.com/2008/05/02/papaya-halwa/

பேச்சிலர் சமையலுக்கும் சமையல் குறிப்பு வந்தாச்சே..
http://samaiyalsamaiyal.blogspot.com/

எல்லார் சமையலும் கலந்த சமையல் வலைப்பூ திரட்டி வேண்டுமா? இதோ இங்கே
http://thamizhcooking.blogspot.com/

சமையல் பதிவுகளைப் பார்த்தே வயிறு நிறைஞ்டிடுச்சா..சரி..போய் ஓய்வு எடுங்க:‍))


பதிவு கொஞ்சம் பெரிசாத்தான் போச்சோ?
ம்ம்ம்ம்..என்ன பண்றது? வானவில்ன்னா பெரிசாத்தான் இருக்கும்..
ஒ.கே மக்கள்ஸ்.என்சாய் த வார இறுதி.. மீண்டும் சந்திக்கிறேன்

54 comments:

  1. blog la tv ya vacha, padikira rendu moonu perum, padam mattum paarthutu odida mattangala...

    urupadiya idea kodunga ammani.

    ReplyDelete
  2. கன்பார்மு..

    நீ ..உனா.தனா.தங்கச்சியேதான்..

    //சரி.. இப்போ வலைப்பூ அறிமுகத்துக்குப் போவோமா//

    இனிமேதான் ஆரம்பமா? அவ்வ்வ்

    ReplyDelete
  3. நல்ல கலெக்‌ஷன் இயற்கைமகள்..!!

    டெம்ப்ளேட் மாத்துறதுக்கு இவ்ளோ சைட் இருக்குனு இன்னிக்கு தான் தெரிஞ்சிக்கிட்டேன்..

    சமையல் & மருத்துவம் குறித்த பதிவுகள் வெகு உபயோகமாய் இருக்கு.

    இந்த வாரம் முழுமையும் பயன் உள்ளதா ஆக்கிட்டீங்க..ரொம்ப நன்றி..!!

    ReplyDelete
  4. //டென்சனாகக் கூடாது//

    மாட்டோம் டீச்சர்....

    ReplyDelete
  5. மன்னிக்கவும் நாலு நாளா உங்க மெயிலை பார்த்தும் படிக்க நேரமில்லாததால், விடுபட்டுவிட்டது. அருமையான அறிமுகங்கள், இயற்கைமகள். தொடருங்கள். :-)

    ReplyDelete
  6. இதை எல்லாம் போட்ட வலைப்பூ மெதுவாத்தான் போவும்...

    ReplyDelete
  7. வார இறுதி அறிமுகங்களா?

    டெம்ப்லேட்அறிமுகத்துக்கு நன்றி ரீச்சர்..

    பண்ணையார் இன்னும் வரலியா?

    வரப்புக்கு போயிட்டாரா?

    ReplyDelete
  8. அவ்வ்வ்வ்

    ஒரு வாரம் அதுகுள்ள முடிஞ்சிடுச்சா..???




    அப்பாடா :)

    ReplyDelete
  9. சமையல் பதிவுகளைப் பார்த்தே வயிறு நிறைஞ்டிடுச்சா..சரி..போய் ஓய்வு எடுங்க:‍))
    //


    இதை முன்னாடியே சொல்லியிருந்தால் பின்னுட்டம் போடாமல் ஒய்வு எடுத்து இருப்போமில :)

    ReplyDelete
  10. இம்புட்டு அறிவா உனக்கு? முடியலைப்பா ...

    ReplyDelete
  11. //வானவில்ன்னா பெரிசாத்தான் இருக்கும்..//


    அட! நான் இதுநாள் வரைக்கும் கலர் கலரா இருக்கும்ன்னுல்ல நினைச்சேன் :))

    பை தி பை சமையல் குறிப்பு பற்றியும் படிப்பு பற்றியும் கொடுத்த லிங்க்ஸ் ரொம்ப யூஸ்புல் நன்றி !

    ReplyDelete
  12. சூப்பர் கலக்‌ஷென்ஸ் இயற்கை :)

    ReplyDelete
  13. //டி.வி,ரேடியோ எல்லாம் இணைக்கும்போது,அதில இருக்க autoplay mode ல இணைக்காதீங்க. ஆபிஸ்ல உங்க வலைப்பூவைத் திறந்தா, அது சத்தமா பாடி, ஊருக்கே காட்டிக் கொடுத்துடும்.//

    ஆமாங்க, நம்ம வலையுல நண்பர்கள் ரெண்டு பேர் அப்படித்தான் ஆரம்பத்தில் என்னை டரியலாக்குனாங்க!
    நல்லவேளையாக இப்ப எடுத்துட்டாங்க!

    ReplyDelete
  14. 友達の前では少し強がって彼氏なんかいらないって言ってしまうけど、やっぱ本音では欲しいです、夜は寒いし寂しいし私の本音に気付いてください。メアド乗せておくので優しい方連絡くださいtoward.the-future@docomo.ne.jp

    ReplyDelete
  15. டெம்ப்ளேட்ஸ் பற்றி ஒரு தொகுப்பா - மிக்க நன்றிங்கோ ...

    ReplyDelete
  16. அன்பின் இயற்கை மகளே !

    அருமையான அரிதான இடுகைகளைப் பற்றிய அறிமுக்ங்கள் கலக்கல் போங்க

    ரெண்டு பகுதியுமே ச்ச்ச்சூப்பர்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  17. டீச்சர் நீங்க கொடுக்கிற லெக்க்ச்சர் சூப்பர் போங்க...! உங்க சிக்ஷயபிள்ளைங்க எப்டி உங்கள சமாளிக்கிறாங்க...? பிளீஸ் கொஞ்சம் கேட்டுச்சொல்றீங்களா...?

    ReplyDelete
  18. என் வலைப்பூவைப் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி ராஜி

    ReplyDelete
  19. சமையல் வலைப்பக்கங்கள்ல
    பிரபல சமையல்கலை நிபுணியும், என் அன்பு தங்கையுமாகிய தூயாவிண்ட சமையல் கட்ட பத்தி சொல்லாம விட்டத நான் வன்மையா கண்டிக்கிறேன்

    ReplyDelete
  20. / இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
    me the first :)
    /

    வாம்மா மின்னல்

    ReplyDelete
  21. Anonymous said...
    blog la tv ya vacha, padikira rendu moonu perum, padam mattum paarthutu odida mattangala...

    urupadiya idea kodunga ammani./

    ராஜி.. என்கிட்ட‌ ப‌ய‌ந்திட்டு தானே அனானி க‌மெண்ட் போட்டே:-))))

    ReplyDelete
  22. /
    ரங்கன் said...
    கன்பார்மு..

    நீ ..உனா.தனா.தங்கச்சியேதான்..

    //சரி.. இப்போ வலைப்பூ அறிமுகத்துக்குப் போவோமா//

    இனிமேதான் ஆரம்பமா? அவ்வ்வ்/


    ம்ம்ம்..

    ReplyDelete
  23. /ரங்கன் said...
    நல்ல கலெக்‌ஷன் இயற்கைமகள்..!!

    டெம்ப்ளேட் மாத்துறதுக்கு இவ்ளோ சைட் இருக்குனு இன்னிக்கு தான் தெரிஞ்சிக்கிட்டேன்..

    சமையல் & மருத்துவம் குறித்த பதிவுகள் வெகு உபயோகமாய் இருக்கு.

    இந்த வாரம் முழுமையும் பயன் உள்ளதா ஆக்கிட்டீங்க..ரொம்ப நன்றி..!!/


    ந‌ன்றி

    ReplyDelete
  24. / குறை ஒன்றும் இல்லை !!! said...
    //டென்சனாகக் கூடாது//

    மாட்டோம் டீச்சர்..../


    ஆனாலும் விட‌மாட்டேன் ஆபீச‌ர்

    ReplyDelete
  25. /முரளிகுமார் பத்மநாபன் said...
    மன்னிக்கவும் நாலு நாளா உங்க மெயிலை பார்த்தும் படிக்க நேரமில்லாததால், விடுபட்டுவிட்டது. அருமையான அறிமுகங்கள், இயற்கைமகள். தொடருங்கள். :-)
    /

    ந‌ன்றி

    ReplyDelete
  26. / புலவன் புலிகேசி said...
    இதை எல்லாம் போட்ட வலைப்பூ மெதுவாத்தான் போவும்.../

    சில‌ டெம்ப்ளெட்டுக‌ளுக்கு அந்த‌ப் பிர‌ச்சினை இல்லைங்க‌

    ReplyDelete
  27. /பிரியமுடன்...வசந்த் said...
    வார இறுதி அறிமுகங்களா?

    டெம்ப்லேட்அறிமுகத்துக்கு நன்றி ரீச்சர்..

    பண்ணையார் இன்னும் வரலியா?

    வரப்புக்கு போயிட்டாரா?/


    ந‌ன்றிக்கு ந‌ன்றி

    ப‌ண்ணையார் வ‌ர‌ப்புல‌தான் இருக்கார்.. எப்போவும்

    ReplyDelete
  28. /மின்னுது மின்னல் said...
    அவ்வ்வ்வ்

    ஒரு வாரம் அதுகுள்ள முடிஞ்சிடுச்சா..???




    அப்பாடா :)/


    அவ்வ்வ்வ்

    ReplyDelete
  29. / மின்னுது மின்னல் said...
    சமையல் பதிவுகளைப் பார்த்தே வயிறு நிறைஞ்டிடுச்சா..சரி..போய் ஓய்வு எடுங்க:‍))
    //


    இதை முன்னாடியே சொல்லியிருந்தால் பின்னுட்டம் போடாமல் ஒய்வு எடுத்து இருப்போமில :)/


    உங்க‌ளையேல்லாம் ப‌த்தி தெரிஞ்ச‌தால‌தான் சொல்ல‌ல‌

    ReplyDelete
  30. /mayil said...
    இம்புட்டு அறிவா உனக்கு? முடியலைப்பா .../


    ஹி..ஹி..

    ReplyDelete
  31. /ஆயில்யன் said...
    //வானவில்ன்னா பெரிசாத்தான் இருக்கும்..//


    அட! நான் இதுநாள் வரைக்கும் கலர் கலரா இருக்கும்ன்னுல்ல நினைச்சேன் :))

    பை தி பை சமையல் குறிப்பு பற்றியும் படிப்பு பற்றியும் கொடுத்த லிங்க்ஸ் ரொம்ப யூஸ்புல் நன்றி !/


    ரெண்டும்தான் பாஸ்

    ந‌ன்றி

    ReplyDelete
  32. /☀நான் ஆதவன்☀ said...
    சூப்பர் கலக்‌ஷென்ஸ் இயற்கை :)/


    ந‌ன்றி

    ReplyDelete
  33. /வால்பையன் said...
    //டி.வி,ரேடியோ எல்லாம் இணைக்கும்போது,அதில இருக்க autoplay mode ல இணைக்காதீங்க. ஆபிஸ்ல உங்க வலைப்பூவைத் திறந்தா, அது சத்தமா பாடி, ஊருக்கே காட்டிக் கொடுத்துடும்.//

    ஆமாங்க, நம்ம வலையுல நண்பர்கள் ரெண்டு பேர் அப்படித்தான் ஆரம்பத்தில் என்னை டரியலாக்குனாங்க!
    நல்லவேளையாக இப்ப எடுத்துட்டாங்க!/

    :‍)ம்ம்.. அதாங்க‌ சொன்னேன்

    ReplyDelete
  34. / 彼氏募集 said...
    友達の前では少し強がって彼氏なんかいらないって言ってしまうけど、やっぱ本音では欲しいです、夜は寒いし寂しいし私の本音に気付いてください。メアド乗せておくので優しい方連絡くださいtoward.the-future@docomo.ne.jப்/

    ????

    ReplyDelete
  35. /நட்புடன் ஜமால் said...
    டெம்ப்ளேட்ஸ் பற்றி ஒரு தொகுப்பா - மிக்க நன்றிங்கோ .../


    நன்றிங்கோ

    ReplyDelete
  36. /cheena (சீனா) said...
    அன்பின் இயற்கை மகளே !

    அருமையான அரிதான இடுகைகளைப் பற்றிய அறிமுக்ங்கள் கலக்கல் போங்க

    ரெண்டு பகுதியுமே ச்ச்ச்சூப்பர்

    நல்வாழ்த்துகள்
    /


    ந‌ன்றிங்க‌ ஐயா

    ReplyDelete
  37. / சிவனேசு said...
    டீச்சர் நீங்க கொடுக்கிற லெக்க்ச்சர் சூப்பர் போங்க...! உங்க சிக்ஷயபிள்ளைங்க எப்டி உங்கள சமாளிக்கிறாங்க...? பிளீஸ் கொஞ்சம் கேட்டுச்சொல்றீங்களா...?/


    ஹி..ஹி..அதெல்லாம் ர‌க‌ஸ்ய‌ம்:-)

    ReplyDelete
  38. /kanchana Radhakrishnan said...
    என் வலைப்பூவைப் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி ராஜி/



    ந‌ன்றி

    ReplyDelete
  39. /ஜோசப் பால்ராஜ் said...
    சமையல் வலைப்பக்கங்கள்ல
    பிரபல சமையல்கலை நிபுணியும், என் அன்பு தங்கையுமாகிய தூயாவிண்ட சமையல் கட்ட பத்தி சொல்லாம விட்டத நான் வன்மையா கண்டிக்கிறேன்/


    சொல்லியிருந்தா சூரிய‌னுக்கே டார்ச்சான்னு கேப்பீங்க‌.. என‌க்கு எதுக்கு வ‌ம்பு
    ?:-))

    ReplyDelete
  40. / நிஜமா நல்லவன் said...
    :)/


    விவ‌சாயீ...விவ‌சாயீ

    ReplyDelete
  41. இயற்கை மகளென்(று) இனிதாயோர் பெயரவர்க்கு
    இயன்றவரை இன்தமிழில் இயற்றுவிக்க இச்சை
    இயல்பாய் தமிழிலே இயம்பிடவே சொற்களுண்டு
    இயைந்த இத்தளத்தில் இனியேனும் தமிழ்வருமோ?


    'இயன்றவரை' என்பதை 'முடிந்தவரை' என்றும், 'இயன்று' + 'அவரை' என்று பிரித்து 'முயற்சி செய்து ராஜியை' என்றும் கொள்ளலாம்.

    நடைமுறை பேச்சுத் தமிழை நிறைய வேற்றுமொழிச் (அதுவும் இந்திய மொழி அல்லாத வெளிநாட்டு மொழிச்) சொற்களைச் சேர்த்து மிகவும் கொச்சைப் படுத்திவிட்டோம்.

    எழுத்துத் தமிழையும் அப்படி செய்து கொண்டிருக்கிறோமே என்ற வருத்தத்தில் வந்த 'பா'தான் மேலே கொடுத்துள்ளது.

    யாரையும் புண்படுத்தவோ, சர்ச்சையை கிளப்பவோ இட்ட மறுமொழி இல்லை.

    பயனுள்ள பதிவுகள்; மிக்க நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. என்னுடைய பதிவை இணைச்சதுக்கு, இன்னும் பல நல்ல பதிவுகளை அறிமுகம் செஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை!

    ReplyDelete
  43. நன்றி இயற்கை.

    ReplyDelete
  44. நன்றி இயற்கை !!!! :)

    ReplyDelete
  45. @அவனடிமை


    ஐயா..
    நான் எழுதிய கணினி சார்ந்த அறிமுகங்களையும், நடந்த நிகழ்வுகளையும் தூய‌ தமிழில் எழுதினால் பயனுள்ளதாக‌ இராது என்பது என் எண்ணம்..
    பண்டைய த‌மிழ் இல‌க்கிய‌த்திலும் ந‌டைமுறை மொழி சார்ந்த‌ இல‌க்கிய‌ங்கள் அறிய‌ப்ப‌டுகின்ற‌ன‌வே..

    த‌ங்க‌ள் பா ந‌ன்று.. இத்த‌கைய‌ த‌மிழ் ஆர்வ‌த்தையும், பாக்க‌ளையும் த‌ங்க‌ள் வ‌லைப்பூவிலும் காண்பித்தால் த‌மிழ் இன்னும் வ‌ள‌ரும் என நினைக்கிறேன்..

    வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

    ReplyDelete
  46. நன்றிங்க‌ நாஸியா

    ReplyDelete
  47. நன்றிங்க‌ பொன்வண்டு

    ReplyDelete
  48. நம்மளோடதையும் அறிமுகம் செஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

    அடிக்கடி எழுத முடியாமைதான் - கொஞ்சம் வருத்தம். அதை மாற்ற முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  49. //நடந்த நிகழ்வுகளையும் தூய‌ தமிழில் எழுதினால் பயனுள்ளதாக‌ இராது என்பது என் எண்ணம்..
    பண்டைய த‌மிழ் இல‌க்கிய‌த்திலும் ந‌டைமுறை மொழி சார்ந்த‌ இல‌க்கிய‌ங்கள் அறிய‌ப்ப‌டுகின்ற‌ன‌வே..//
    இயற்கை அவர்களே:
    ஆமாம், நவீன வாழ்க்கையில் உடனே நேரடியாக பழங்கால தூய தமிழ் உபயோகித்தால் பயனுள்ளதாக இராது என்ற உங்கள் எண்ணம் சரிதான். ஆனால் ஒரேயடியாக (விஞ்ஞான வளர்ச்சியில் வந்துள்ள பல சொற்களைத் தவிர) வேற்றுமொழி சொற்களைக் கையாளாமல் இருந்தால் எழுத எழுத, படிக்க படிக்க கலப்படமில்லாத நடைமுறைத் தமிழ் பழகிவிடும்.

    எல்லோரும் அப்படியே பேசி, எழுதி பழகிவிட்டால் தமிழின் அருமை புரியும். அது மட்டும் இல்லாமல், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் தமிழ்ச் சொற்களை உபயோகிக்கலாமே. தமிழனுக்கு ஒரு மொழி இல்லையா என்ன ? அதில் உள்ள வளமை நமக்கு போதுமானதாக இல்லையா ? புதுப்புது விஞ்ஞான, தொழில்நுட்ப சொற்கள் வேண்டுமானால் வந்துகொள்ளட்டும். தமிழன் கண்டுபிடிக்காத விஞ்ஞான புதுப் பொருட்களை பெயரில் மட்டும் ஏன் தமிழ்ப்படுத்தவேண்டும் ?

    தமிழ் விருப்பம், ஆர்வம் இவற்றை வேற்றுமொழி மேல் வெறுப்பு என்று கொள்ளவேண்டாம், கூடாது என்பது என் எண்ணம். என்ன சொல்கிறீர்கள்.

    தங்கள் பதிவுகள் எல்லாமே நன்றாக உள்ளன. நன்றி.

    ReplyDelete
  50. @அவனடிமை


    தங்களின் தமிழ்மீதான ஆர்வம் புரிகிறது. நேரமின்மையால் விவாத்தை வளர்க்க இயலாத நிலையில் இருக்கிறேன்.
    நன்றி..வணக்கம்

    ReplyDelete