Monday, November 2, 2009

வலைச்சரம்- நிகழ்காலம் சிவா சுயஅறிமுகம்

வாழ்விலும் வலையுலகிலும் மாணவனாக இருக்கும் என்னை இந்த வார பொறுப்பு ஆசிரியராக அறிமுகம் செய்த நண்பர் சீனா அவர்களுக்கு முதலில் நன்றி கலந்த வணக்கங்கள்..

தொடர்ந்து வலைச்சரத்தில் பலதரப்பட்ட நண்பர்களை ஆசிரியர்களாக பார்த்து, படித்து கலந்துரையாடி மகிழ்ந்த வலைச்சர தொடர்வாசக நண்பர்களுக்கும் வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைப்பதிவின் பெயர் நிகழ்காலத்தில்...

முதலில் என்னைப் பற்றி சுய அறிமுகம் :)

என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். திருப்பூரில் பிறந்து வளர்ந்தேன்.
பனியன் சம்பந்தமான தொழில், சுய தொழில்

கணினி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இணையத்தில் தேட,முதலில் பி.கே.பி அண்ணன் அவர்களின் வலைப்பதிவுகள்தான் முதலில் எனக்கு அறிமுகம்.

அதன் பின்னர் தமிழ்மணம், தமிழிஷ் திரட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இருப்பதை அறிந்து படிக்க ஆரம்பித்தேன்.

நட்பை பெரிதும் விரும்பும் நான், நண்பர்களை பெறும் வாய்ப்பாக எண்ணி
எனக்கென வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்தேன்

இப்போது இதோ உங்கள் முன்னால் :))


முதலில் அறிவே தெய்வம் என்ற பெயருடன் வலையுலகில் அறிமுகம் ஆனேன், இறைநிலை குறித்து நண்பர்களிடையே என்னால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியும் இப்பெயர் வைத்தேன்.

பின்னர் ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக் கொண்டு நம்மை துன்பப் படுத்திக் கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் , குறிப்பாக கவலை மேலோங்கி, நடப்பதை உணர்ந்து கொள்ளாமல், வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல், அவர்களோடு முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக நிகழ்காலத்தில் அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ என மாற்றம் செய்தேன்.

என்னுடைய இடுகைகளில் சில அதிமுக்கியமான (?!:) என நான் கருதும் சில இடுகைகளின் சுட்டி தந்துள்ளேன். இவை நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டே தீரும்.


உடலைப்பற்றி


 மனதைப்பற்றி..

சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்....... 

நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே

வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்

 அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்

கடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்


அவுங்களும் நானும்

கடவுள் நல்லவரா கெட்டவரா

குழந்தையும், சுதந்திர தின அனுபவமும்
 
ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

படித்துப்பாருங்கள்...:)) 

உங்களின் கருத்துக்களை வலைச்சரம் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள், மீண்டும் சந்திப்போம்

21 comments:

  1. வாழ்த்துக்கள்.! கலக்குங்க ..!!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எழுதுங்கள்; படிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. பங்காளி அடிச்சு ஆடுங்க, வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. அருகில் இருந்து நான் சந்தித்த முதல் நபராக இருந்தாலும், உரையாடல் மூலம் தெரிந்து கொள்ள முடியாத விசயங்களையும், பெயர் காரணமும், காரணத்திற்கான விளக்கமும், ஆழ்ந்த சமூக அக்கறையும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.

    கல் போல் மனம் இருந்தாலும் சிறு துரும்பு கூட நகர்த்த முயற்சிக்க மாட்டோம் என்று வாழ்பவர்களின் மத்தியில் நீங்கள் எறும்பு போல் ஊர்ந்து ஊர்ந்து வந்து இன்று ஆசிரியர் பணி ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து உள்ளீர்கள் என்றால் வாய்ப்பு வரும். அமைதியுடன் அக்கறை வைத்து பயணித்தால் என்று சீனா கண்டுபிடித்த இந்த சிவாக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அன்பின் சிவசு

    அருமையான சுய அறிமுகம் - எழுதிய இடுகைகள் படித்தேன் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சிவசு

    ReplyDelete
  8. \\ஜீவன் said...

    வாழ்த்துக்கள்.! கலக்குங்க ..!!\\

    முடிந்தவரை கலக்கி விடுவோம் ஜீவன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சிவா சார்.

    ReplyDelete
  10. \\வானம்பாடிகள் said...

    வாழ்த்துகள்.\\

    \\அத்திரி said...

    வாழ்த்துக்கள் சிவசு\\

    நன்றிகள் நண்பர் அத்திரி, நண்பர் வானம்பாடி

    ReplyDelete
  11. \\பழமைபேசி said...

    பங்காளி அடிச்சு ஆடுங்க, வாழ்த்துகள்!\\

    நீங்கள் கொடுக்கிற ஊக்கம்தான் பங்காளி அவர்களே :))

    ReplyDelete
  12. \\அ. நம்பி said...

    எழுதுங்கள்; படிக்கக் காத்திருக்கிறோம்.\\

    வருகைக்கு நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  13. \\நான் சந்தித்த நபராக இருந்தாலும், உரையாடல் மூலம் தெரிந்து கொள்ள முடியாத விசயங்களையும்,\\

    ஜோதிஜி, தங்களை நேரில் பார்த்தால், பேசினால் இப்படி ஆழமாகவும், எழுதும் விசயத்தோடு ஒன்றியும் எழுதுபவரா இவர் என ஆச்சிரியப்படுத்துவர் நீங்கள்தான் நண்பரே:))

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  14. \\ஸ்வாமி ஓம்கார் said...

    :)\\

    சுயத்தை அறியாத என் போன்றவர்களின் சுயஅறிமுகம் இப்படித்தான் இருக்கும் :))

    சுயத்தை அறிந்தவர், அறிமுகம் என்று ஒன்று இல்லாத, சிவனே இங்கு வந்து சிரிப்பதாகவே உணர்கிறேன்.

    சிவசு, சிவா, சிவம் ஆக வேண்டும்:)

    ReplyDelete
  15. \\ cheena (சீனா) said...

    அன்பின் சிவசு

    அருமையான சுய அறிமுகம் - எழுதிய இடுகைகள் படித்தேன் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள்\\

    விருந்தோம்பலில் திளைக்கிறேன் அன்பின் சீனா அவர்களே...

    தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  16. \\ விஷ்ணு. said...

    வாழ்த்துக்கள் சிவா சார்.\\

    நன்றி விஷ்ணு

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ஆசிரியரே!

    ReplyDelete
  18. \\வால்பையன்..

    வாழ்த்துக்கள் ஆசிரியரே!\\

    வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி குருவே !!!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் வாத்தியாரே! :)

    ReplyDelete
  20. :)

    சூரியன் தன்னைத்தானே அறிமுகப் படுத்திக் கொள்வது போல் இருக்கு.

    ReplyDelete